சோதனைக் குழாய்க் குழந்தை முதல் “வாடகைத் தாய்” வரை: தானம், வியாபாரம், கொள்ளை, பெண்மை சீரழிவு (1)


சோதனைக் குழாய்க் குழந்தை முதல்வாடகைத் தாய்வரை: தானம், வியாபாரம், கொள்ளை, பெண்மை சீரழிவு (1)

சோதனைக் குழாய்க் குழந்தை முதல்வாடகைத் தாய்வரை: செயற்கை முறையில் கருதரித்தல் முறை அறிமுகமானதிலிருந்து, சில தம்பதியர் அதனை உபயோகப் படுத்த ஆரம்பித்தனர். குழந்தை இல்லாதோர், முதலில் தயக்கத்தைக் காட்டி வந்தாலும், பிறகு, அதனை பயன்படுத்தி வந்தனர். அந்நிலையில், “வாடகைத் தாய்” பொன்ற முறையும் ஆரம்பிக்கப் பட்டது. இதில் அயல்நாட்டு தம்பத்தியர் இருப்பதால், நிறைய பணம் கிடைக்கும் என்ற நிலையில், சில பெண்களதற்கு உட்பட்டு, “வாடகைத் தாயாக” மாறினர். இவ்வாறு, எந்த நிலையிலும் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்’ என்கிற கவர்ச்சி வாசகங்களோடு, கருத்தரித்தல் மையங்களின் விளம்பரங்கள் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே செல்கின்றன[1]. குழந்தையின்மை பிரச்னை இன்றைய இளைய தலைமுறையினரிடையே ஓர் உளவியல் பிரச்னையாக மாறியிருக்கும் நிலையில், சில தனியார் கருத்தரித்தல் மையங்களின் வியாபார நோக்கத்தால், கருமுட்டைக்கான சந்தை பூதாகரமாகியிருக்கிறது[2]. அதையொட்டி, சட்டவிரோதச் செயல்களும் விஸ்வரூபம் எடுத்திருக்கின்றன. 

செயற்கை முறையில் கருதரித்தல் முறைகள்: செயற்கை கருவூட்டல் (Artificial insemination) என்பது உடலுறவு தவிர வேறு வழிகளில் vivo  கருத்தரித்தல் மூலம் கர்ப்பத்தை அடைவதற்காக ஒரு பெண்ணின் கருப்பை வாய் அல்லது கருப்பை குழிக்குள் விந்தணுவை வேண்டுமென்றே அறிமுகப்படுத்துவதாகும். இன் விட்ரோ கருத்தரித்தல் (IVF) / சோதனைக் குழாய்க் குழந்தை, என்பது கருத்தரித்தல் செயல்முறையாகும், அங்கு ஒரு முட்டையானது விட்ரோவில் உள்ள விந்துடன் (“கண்ணாடியில்”) இணைக்கப்படுகிறது. ஒரு நபரின் அண்டவிடுப்பின் செயல்முறையை கண்காணித்தல் மற்றும் தூண்டுதல், அவர்களின் கருப்பையில் இருந்து கருமுட்டை அல்லது கருமுட்டை (முட்டை அல்லது முட்டை) அகற்றுதல் மற்றும் ஆய்வகத்தில் ஒரு கலாச்சார ஊடகத்தில் விந்தணுக்களை கருவுற அனுமதிப்பது ஆகியவை இந்த செயல்முறையை உள்ளடக்கியது. கருவுற்ற முட்டை (ஜைகோட்) 2-6 நாட்களுக்கு கரு வளர்ப்பிற்கு உட்பட்ட பிறகு, அது வெற்றிகரமான கர்ப்பத்தை நிறுவும் நோக்கத்துடன் கருப்பையில் வடிகுழாய் மூலம் மாற்றப்படுகிறது.

பெண்களிடமிருந்து கருமுட்டைகள் உருவாக்கி எடுத்து விற்றல்: இத்தகைய செயற்கை முறையில் கருதரித்தல் முறைகளுக்கு, கருமுட்டைகள் தேவைப் படுவதால், அவற்றை தானமாகக் கொடுக்கும் செயல்பாடு, விற்கும் முறையாகி, வியாபாரமாகி விட்டது. பெண்களுக்கு 10 நாட்களுக்கு உயர்திறன் ஹார்மோன் ஊசிகள் போடப்பட்டு முட்டை உற்பத்தி செயற்கையாக அதிகரிக்கப்படும். பிறகு மூன்று நாட்கள்கழித்து, மயக்க மருந்து தரப்பட்டு, உடலுக்குள் ஊசி செலுத்தப்பட்டு அந்த ஊசி மூலமாகவே அந்த முட்டைகள் வெளியே எடுக்கப்படும். ஒரு பெண் எத்தனை முட்டைகள் உருவாக்க முடியும் என்பது பிறப்பிலேயே நிர்ணயிக்கப்பட்டுவிடுகிறது. கூடுதல் கருமுட்டைகள் எடுக்க பயன்படுத்தப்படும் மருந்துகள் பின்விளைவுகளை உருவாக்கும். அந்தப் பெண்களுக்கு தலைவலி, உடல் பருமன், அசதி முதல், கைகால் செயல் இழத்தல், சிறுநீரகக் கோளாறு, மரணம் என பலவிதமான பாதிப்புகள் ஏற்படும்.

குழந்தையின்மை, கருமுட்டை தானம்: விதிமுறைகளை பின்பற்றாமல் கருமுட்டை தானம் பெறும் கருத்தரிப்பு மையங்கள், அப்பாவி  பெண்களின் உயிருக்கு உலைவைக்கும் நிலையை உருவாக்கி வருவதாக புகார் எழுந்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை 2.75 கோடி பேர் குழந்தையின்மை பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக நகர்ப்புறங்களில் 6 தம்பதிகளில் ஒருவருக்கு குழந்தையின்மை பிரச்னை உள்ளது. இந்தியாவில் திருமணமானவர்களில் 46 சதவீதம் பேருக்கு இந்த பிரச்னை உள்ளது. 31-40வயதுக்கு உட்பட்ட 63 சதவீதம் தம்பதிகளுக்கும், 21-30வயதுக்கு உட்பட்ட 34 சதவீதம் தம்பதிகளுக்கும் இந்த பிரச்னை உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் நம்நாட்டில் பெண்கள் கருத்தரிக்கும் விகிதம் 17சதவீதம் குறைந்துள்ளது.

இந்தியா, குழந்தையின்மை பிரச்னை: மக்கள் தொகையில் இரண்டாமிடத்தில் உள்ள இந்தியா, குழந்தையின்மை பிரச்னையில் முதலிடத்தில் உள்ளது என்றும் ஆய்வுகள் தெரிவித்துள்ளது. இது ஒருபுறமிருக்க, ஹார்மோன் குறைபாடுகளால் திருமணத்திற்கு பிறகு குழந்தை பெற்றெடுக்க முடியாத பெண்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் நேரத்தில் அவர்களுக்கு கருமுட்டைகள் உற்பத்தியாகின்றன. அவை கருவாக மாறாத நிலையில் வெளியேறுகின்றன. இதனால் உயிரோட்டமுள்ள கருமுட்டைகளை பிற பெண்களிடம் தானமாக பெற்று கணவரின் விந்தணுவுடன் இணைத்து செயற்கை முறையில் கருவை உருவாக்குகின்றனர். இதனை மனைவியின் கர்ப்பப்பையில் வைத்து சிசுவை வளர்க்கின்றனர்.

கருமுட்டை தானம் பெற்று குழந்தை பெற்றெடுக்கும் பெண்களின் எண்ணிக்கை  அதிகரித்து வருகிறது: இந்தவகையில் நவீன மருத்துவத்தின் உச்சமாக விளங்கும் கருமுட்டை தானம் என்பது குழந்தையில்லாத பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம். பெரும்பாலும் ஒரு குழந்தையை தத்தெடுப்பதை விட, ஏதோ ஒருவகையில் தன்னுடைய ரத்தம் என்று சொல்லிக் கொள்வதையே பெற்றோர் விரும்புகிறார்கள். இதற்கு அடித்தளமாய் இருப்பது தான் கருமுட்டை தானம். குடும்பத்தில் ஒருவரோ, நெருங்கிய தோழியோ தனக்கு மிகவும் பிடித்தமானவராக இருந்தால் அவர்களிடம் கருமுட்டை தானம் கேட்டு குழந்தை பெற்றுக்கொள்வதை பெரும்பாலான பெண்கள் விரும்புகிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளது. இந்தவகையில் கடந்த சில ஆண்டுகளாக கருமுட்டை தானம் பெற்று குழந்தை பெற்றெடுக்கும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

செயற்கை கருத்தரிப்பு மையங்கள், புரோக்கர்கள், வியாபாரம்: இந்த கருமுட்டை தானத்திற்கு சொந்தங்களும், தோழிகளும் உதவ முன்வராத நிலையில் நேரடியாக செயற்கை கருத்தரிப்பு மையங்களை அணுகுகின்றனர். அவர்களும் இதற்கான புரோக்கர்களை வைத்து காரியம் சாதித்து வருகின்றனர். இந்த புரோக்கர்கள் பெரும்பாலும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் குடும்பங்களை குறி வைத்து பணத்தாசை காட்டி பெண்களுக்கு  வலை விரிக்கின்றனர். முதலில் தானம் கொடுக்கும் பெண்களை கடவுளை போல் இவர்கள் அணுகுகின்றனர். அவர்கள் ஒப்புக் கொண்டவுடன் தானம் பெற்றுவிட்டு கருவேப்பிலையை போல் வீசிச் செல்கின்றனர் என்பதும் கொடுமை. அதேபோல் அபாயம் உணராமல் பல பெண்கள் புரோக்கர்களிடம் சிக்கிக் கொள்கின்றனர். கருமுட்டை ஒரு பெண் உடலில் இருந்து எடுக்கப்படும் போது 37 டிகிரி சென்டிகிரேட் வெப்பத்தில் இருக்கும். அதனை மைனஸ் 194 சென்டி கிரேடுக்கு மாற்றி லிக்விட் நைட்ரஜனில் உறைய வைக்கின்றனர். இதனை க்ரையோலாஜிக் என்று அழைக்கின்றனர். இதனை எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் பாதுகாக்கலாம். இந்தவகையில் பல செயற்கை கருத்தரிப்பு மையங்கள் தானம் கொடுக்க வரும் பெண்களிடம் இருந்து எடுக்கப்படும் அளவுக்கதிகமான கருமுட்டைகளை சேமித்து வைத்து, கொள்ளை லாபம் பார்த்து வருவதாகவும் பரபரப்பு புகார் எழுந்துள்ளது.

2021ல் அறிமுகப் படுத்தப் பட்ட மத்திய அரசு சட்டமும், உடனடியாக நடைமுறைக்கு எடுத்து வராத தமிழக மாநிலாரசும்: நாட்டில் செயற்கை கருத்தரித்தலை முறைப்படுத்தும் வகையில், இனப்பெருக்க தொழில்நுட்ப முறைப்படுத்துதல் சட்டத்தை மத்திய அரசு, 2021ஆம் ஆண்டு கொண்டு வந்தது[3].  இதில் உள்ள சட்டப்பிரிவுகளை எதிர்த்து காஞ்சீபுரம், சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த, கருமுட்டைகளை தானமாக பெற விரும்பும் 143 பெண்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்[4]. ஆனால், தமிழ்நாடு உள்பட குறிப்பிட்ட சில மாநிலங்களில் இதற்கான அதிகாரிகள் நியமிக்கப்படாமல் இருந்தனர். இந்நிலையில், ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டை தனியார் மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்யப்பட்டது தொடா்பாக சிறுமியின் தாய் உள்பட நான்கு போ் கடந்த 2 ஆம் தேதி கைது செய்யப்பட்டனா்.

© வேதபிரகாஷ்

17-12-2022


[1] விகடன், அச்சுறுத்தும் கருமுட்டைச் சந்தை! – அலட்சியம் காட்டும் அரசு!, துரைராஜ் குணசேகரன், Published:10 Aug 2022 5 AMUpdated:10 Aug 2022 5 AM

[2] https://www.vikatan.com/news/general-news/special-story-about-ovum-market

[3] இ.டிவி.பாரத், ஒரு பெண் வாழ்நாளில் எத்தனை முறை கருமுட்டை தானம் செய்யலாம்? உயர்நீதிமன்றம் கேள்வி, டிசம்பர் 17, 4:35 am.

[4] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/chennai/oocyte-donors-file-restrain-petition-of-central-new-enactment-of-donation/tamil-nadu20221216193951262262039

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , ,

பின்னூட்டமொன்றை இடுக