கொரோனா-கோவிட்-19 ஊரடங்கு நேரத்தில் பாலியல் தொழிலாளர்களின் நிலைமை, அவர்கள் படும் பாடு! தீர்வு என்ன? [2]  


கொரோனாகோவிட்-19 ஊரடங்கு நேரத்தில் பாலியல் தொழிலாளர்களின் நிலைமை, அவர்கள் படும் பாடு! தீர்வு என்ன? [2]

Sex workers,and corona control-4

பாலியல் தொழிலாளர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கினால் என்ன ஆகும்: இந்த நிலையில், இவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கினால் என்ன ஆகும் என்பது குறித்து மருத்துவ நிபுணரும், கொல்கத்தாவில் உள்ள சுகாதார அறிவியல் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி சிறப்பு பேராசிரியருமான டாக்டர் நரேஷ் புரோகித் கூறியதாவது[1]: “பாலியல் தொழிலாளர்களைப் பொறுத்தமட்டில் அவர்களுக்கு ஏற்கனவே நோய்கள் இருந்தால், கொரோனா வைரஸ் தொற்றுநோயும் தாக்குகிறபோது நிலைமை மோசமாகி விடும். கொரோனா வைரஸ் தாக்குகிறபோது 80 சதவீதம் பேருக்கு லேசான அறிகுறிகள் தோன்றும். அவர்கள் உடலில் உள்ள ஆன்டிபாடி (நோய் எதிர்ப்பு பொருள்), நோயை எதிர்க்கத் தொடங்கி விடும். அதே நேரத்தில் ஏற்கனவே பால்வினை நோய்களோ, எய்ட்ஸ் நோயோ, காசநோயோ இருந்திருந்தால், அவர்களை கொரோனா வைரஸ் தாக்குகிறபோது அது ஆபத்தானது. கடுமையான அறிகுறிகள் தோன்றும். மரணமும் நிகழும். கொரோனா வைரஸ் ஏற்கனவே மேற்கு வங்காளத்தில் கொல்கத்தா சோனாகச்சி பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள 5 லட்சம் பாலியல் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதித்துள்ளது. மேற்கு வங்காளத்தில் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கியதுமே பெண் பாலியல் தொழிலாளர்களைத் தேடி வாடிக்கையாளர்கள் வருவது நின்று போய்விட்டது.

Sex workers - demanding their rights

பாலியல் தொழிலாளர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கினால்பாதுகாப்பு இல்லை: டாக்டர் நரேஷ் புரோகித் தொடர்ந்து கூறியதாவது, “தங்களது அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கே அவர்கள் சிரமப்படுகிற நிலை வந்துள்ளது. சோனாகச்சி பகுதியில் மட்டுமே தினமும் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வாடிக்கையாளர்கள் வருவார்கள். அது இப்போது நின்று போய் இருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பாலியல் தொழிலாளர்களில் பாதிபேர் விபசார தொழிலையே நம்பி உள்ளனர். காப்பீடு கூட செய்து கொள்வதில்லை. தமிழ்நாட்டில் 5-ல் 2 பேரும், கர்நாடகத்தில் 5-ல் ஒருவரும் இந்த நிலையில்தான் உள்ளனர். தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடக மாநிலங்களில் 31 சதவீத பாலியல் தொழிலாளர்கள் நிதி பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறார்கள். அவர்கள் வறுமையில் உள்ளனர். நோயுற்றால் சிகிச்சை கூட பெறுவதில்லை. ஊரடங்கை இப்போது அரசு முடிவுக்கு கொண்டுவந்தாலும், பாலியல் தொழிலாளர்கள் தங்கள் தொழிலை உடனே தொடங்கி விட முடியாது. குறைந்தபட்சம் 1 மாதம் காத்திருக்க வேண்டியது வரும். கொரோனா பரவுவது நின்று விட்டது என்ற நிலை வர வேண்டும். அவர்கள் வாழ்வாதாரத்துக்கு அரசு நிதி உதவி வழங்க வேண்டும்,” இவ்வாறு அவர் கூறினார்[2].

Sex workers - HIV awareness campaign

பாலியல் தொழில் விடுதிகளை மூடுவதால், கொரோனா தொற்றால் எதிர்ப்பார்க்கப்படும் 63 சதவீத இறப்புகளின் எண்ணிக்கை குறைய கூடும்: அமெரிக்காவின் யேல் மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில், ஊரடங்கை தளர்த்திய பின்னரும், பாலியல் தொழில் விடுதிகளை மூடுவதால், இந்தியாவில் கொரோனா தொற்றால் எதிர்ப்பார்க்கப்படும் 63 சதவீத இறப்புகளின் எண்ணிக்கை குறைய கூடும்[3]. ஊரடங்கிற்கு பின் கொரோனா தடுப்பூசி கண்டறியும் வரை விடுதிகள் மூடப்பட்டிருந்தால், இந்தியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் அபாயம் குறைவாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்[4]. மேலும் ஆய்வு முடிவுகளை மத்திய மற்றும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் பகிர்ந்துள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்[5]. நாடு முழுவதும் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும், பாலியல் தொழில் விடுதிகளை தொடர்ந்து மூடியிருக்க வேண்டுமென ஆய்வாளர்கள் பரிந்துரை செய்துள்ளனர்[6]. இதனால் 45 நாட்களில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் 72 சதவீதம் குறையும் மற்றும் கொரோனா உச்சக்கட்டத்தை அடைய 17 நாட்கள் வரை தாமதம் ஆகும். இந்த தாமதம் அரசுக்கு மக்களின் ஆரோக்கியம் மற்றும் பொருளாதாரத்தை காக்க கூடுதல் அவகாசம் அளிக்குமெனவும் கூறியுள்ளனர். ஊரடங்கிற்கு பின் முதல் 60 நாட்களில் விடுதிகள் மூடப்பட்டிருந்தால், கொரோனா உயிரிழப்பு 63 சதவீதம் அளவுக்கு குறையுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sex workers - training, meeting

அகில இதிய பாலியல் தொழிலாளர் கூட்டமைப்பு[7]: அகில இதிய பாலியல் தொழிலாளர் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் 16 மாநிலங்களில் உள்ளனர். தலைமை செயலகம் தில்ல்யில் உள்ளது[8].  AINSW பாலியல் தொழிலாளர்களின் உரிமைகள், HIV தடுப்பு, சமூக பாதுகாப்பு, குடும்ப மேன்பாடு, குழந்தைகள் படிப்பு என்று பலவிதங்களில் உதவி வருகின்றது. தங்களது தொழிலில் அவர்கள் எவ்வாறு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும், சமூக மறுப்பு போன்ற பிரச்சினைகளிலிருந்து மீண்டு, அவர்களின் வாழ்க்கை சிறக்க வேண்டும் போன்றவற்றிற்கு பயிற்சி, மனநல ஆலோசனை, மருத்துவ வசதிகள் முதலியனக் கொடுக்கப் படுகின்றன. இந்தியாவில் அதர்மவழி பெண்களை ஈடுபடுத்துதல் தடுப்புச் சட்டம் [The Immoral Traffic (Prevention) Act, 1956 -“ITPA”] இவர்களின் தொழிலைக் கட்டுப் படுத்தி வருகின்றது. வேறு வழி ./ வேலை இல்லை என்ற பட்சத்தில் தான் சூழ்நிலை காரணங்களுக்காக, அவர்கள் இத்தொழிலில் தள்ளப் பட்டுள்ளார்கள்.அப்படி பார்த்தால், இந்திய சமூகமே இதற்கு காரணம் என்று குற்றம் சாட்டலாம். அவர்கள் இந்துக்கள் எனும் போது, மற்ற இந்துக்களும் பொறுப்பாகிறார்கள். அந்நிலையில் அவர்களும் பதில் சொல்லியாக வேண்டும். இன்றைக்கு, இந்துமதத்தை வைத்து பல கட்சிகள், அமைப்புகள், குழுக்கள் அரசியல், வியாபாரம் செய்து வருகின்றன. ஆக, அவவை இதை எதிர்கொள்ளாமல் தத்துவம் பேசினால், ஒன்றுக்கும் பிரயோஜனம் இல்லை.

Sex workers - training

முடிவுரை: இப்பிரச்சினையை முறையாக எதிர்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.

  1. ஒவ்வொரு இந்துவும் வெட்கப் படவேண்டிய விசயம் என்னவென்றால், இந்தியாவில் 50,00,000 முதல் ஒரு கோடி பாலியல் தொழிலாளர்கள் இருப்பதாகத் தெரிகிறது.
  2. இவர்கள் எல்லோருமே அகில இந்திய பாலியல் தொழிலாளர் கூட்டமைப்பு என்றதில் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள்!
  3. இந்திய பாலியல் தொழிலாளர் கூட்டமைப்பு – All India Network of Sex Workers (AINSW) இருப்பது நிதர்சனம்!
  4. இப்பொழுதைய கொரோனா நோய், தொற்று, மற்றும் ஊரடங்கு விவகாரங்களால், அவர்களது தொழில் பாதித்துள்ளது.
  5. சம்பளம் இல்லாததால், சாப்பாடிற்கே வழியில்லாத நிலையில், வாடும் இவர்களில் 60% தத்தம் ஊர்களுக்குச் செல்ல ஆரம்பித்து விட்டார்கள்!
  6. குழந்தைகளுடன் இருக்கும் இவர்களில், சிலர் இரண்டு மாதமாக, சரியான உணவு உண்ணாமல் தவிக்கின்றனர்.
  7. ஆக, பெண்மை, பெண்ணியம், பெண்ணியத் தூய்மை, கற்பு…இவற்றைப் பற்றியெல்லாம் இந்துத்துவ வாதிகள் ஏன் அலசுவதில்லை?
  8. பூர்ணகும்பம், பிரசாதம் போன்றவற்றிற்கு அளந்து தள்ளுகிறார்களே, அரை கோடி பாரதிய நாரிமணிகளின் நிலை தெரியவில்லையா?
  9. “பாரத் மாதா கி ஜே” கோஷம் போடுபவர்கள், இத்தகைய நிதர்சனங்களுக்கு, உண்மைகளுக்கு என்ன பதில் சொல்வார்கள்?
  10. கோடிகணக்கில் நிவாரணம், உதவி பற்றி பிரமாதமாக வாத-விவாதம் புரிபவர்கள், இவர்களின் குழந்தைகள் கதி பற்றி யோசித்தது உண்டா?

© வேதபிரகாஷ்

18-05-2020

Hindutva, sex and adventure-novel

[1] மாலைமலர், பாலியல் தொழிலாளர்களுக்கு கொரோனா தாக்கினால் ஆபத்துமருத்துவ நிபுணர் எச்சரிக்கை, பதிவு: ஏப்ரல் 20, 2020 11:38 IST

[2] https://www.maalaimalar.com/news/national/2020/04/20113817/1436390/COVID-19-Medical-expert-Warns-Risk-if-corona-attacks.vpf

[3] தினமலர், பாலியல் விடுதிகளை மூடுவதால் 72 % கொரோனா பாதிப்பை தவிர்க்கலாம், Updated : மே 17, 2020 14:27 | Added : மே 17, 2020 14:25.

[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=2541050

[5] தினமலர், சிவப்பு விளக்கு பகுதிகளால் வைரஸ் பரவல் அதிகரிக்கும், Added : மே 16, 2020 23:43.

[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=2540619

[7] https://www.nswp.org/featured/all-india-network-sex-workers-ainsw

[8] NSWP, The Matrix,62 Newhaven Road, Edinburgh, EH6 5QB, Scotland UK;  For more information contact:+44 (0)131 553 2555; secretariat@nswp.org

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , ,

பின்னூட்டமொன்றை இடுக