Posts Tagged ‘விபச்சாரி’

கொரோனா-கோவிட்-19 ஊரடங்கு நேரத்தில் பாலியல் தொழிலாளர்களின் நிலைமை, அவர்கள் படும் பாடு! தீர்வு என்ன? [2]  

மே19, 2020

கொரோனாகோவிட்-19 ஊரடங்கு நேரத்தில் பாலியல் தொழிலாளர்களின் நிலைமை, அவர்கள் படும் பாடு! தீர்வு என்ன? [2]

Sex workers,and corona control-4

பாலியல் தொழிலாளர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கினால் என்ன ஆகும்: இந்த நிலையில், இவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கினால் என்ன ஆகும் என்பது குறித்து மருத்துவ நிபுணரும், கொல்கத்தாவில் உள்ள சுகாதார அறிவியல் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி சிறப்பு பேராசிரியருமான டாக்டர் நரேஷ் புரோகித் கூறியதாவது[1]: “பாலியல் தொழிலாளர்களைப் பொறுத்தமட்டில் அவர்களுக்கு ஏற்கனவே நோய்கள் இருந்தால், கொரோனா வைரஸ் தொற்றுநோயும் தாக்குகிறபோது நிலைமை மோசமாகி விடும். கொரோனா வைரஸ் தாக்குகிறபோது 80 சதவீதம் பேருக்கு லேசான அறிகுறிகள் தோன்றும். அவர்கள் உடலில் உள்ள ஆன்டிபாடி (நோய் எதிர்ப்பு பொருள்), நோயை எதிர்க்கத் தொடங்கி விடும். அதே நேரத்தில் ஏற்கனவே பால்வினை நோய்களோ, எய்ட்ஸ் நோயோ, காசநோயோ இருந்திருந்தால், அவர்களை கொரோனா வைரஸ் தாக்குகிறபோது அது ஆபத்தானது. கடுமையான அறிகுறிகள் தோன்றும். மரணமும் நிகழும். கொரோனா வைரஸ் ஏற்கனவே மேற்கு வங்காளத்தில் கொல்கத்தா சோனாகச்சி பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள 5 லட்சம் பாலியல் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதித்துள்ளது. மேற்கு வங்காளத்தில் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கியதுமே பெண் பாலியல் தொழிலாளர்களைத் தேடி வாடிக்கையாளர்கள் வருவது நின்று போய்விட்டது.

Sex workers - demanding their rights

பாலியல் தொழிலாளர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கினால்பாதுகாப்பு இல்லை: டாக்டர் நரேஷ் புரோகித் தொடர்ந்து கூறியதாவது, “தங்களது அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கே அவர்கள் சிரமப்படுகிற நிலை வந்துள்ளது. சோனாகச்சி பகுதியில் மட்டுமே தினமும் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வாடிக்கையாளர்கள் வருவார்கள். அது இப்போது நின்று போய் இருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பாலியல் தொழிலாளர்களில் பாதிபேர் விபசார தொழிலையே நம்பி உள்ளனர். காப்பீடு கூட செய்து கொள்வதில்லை. தமிழ்நாட்டில் 5-ல் 2 பேரும், கர்நாடகத்தில் 5-ல் ஒருவரும் இந்த நிலையில்தான் உள்ளனர். தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடக மாநிலங்களில் 31 சதவீத பாலியல் தொழிலாளர்கள் நிதி பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறார்கள். அவர்கள் வறுமையில் உள்ளனர். நோயுற்றால் சிகிச்சை கூட பெறுவதில்லை. ஊரடங்கை இப்போது அரசு முடிவுக்கு கொண்டுவந்தாலும், பாலியல் தொழிலாளர்கள் தங்கள் தொழிலை உடனே தொடங்கி விட முடியாது. குறைந்தபட்சம் 1 மாதம் காத்திருக்க வேண்டியது வரும். கொரோனா பரவுவது நின்று விட்டது என்ற நிலை வர வேண்டும். அவர்கள் வாழ்வாதாரத்துக்கு அரசு நிதி உதவி வழங்க வேண்டும்,” இவ்வாறு அவர் கூறினார்[2].

Sex workers - HIV awareness campaign

பாலியல் தொழில் விடுதிகளை மூடுவதால், கொரோனா தொற்றால் எதிர்ப்பார்க்கப்படும் 63 சதவீத இறப்புகளின் எண்ணிக்கை குறைய கூடும்: அமெரிக்காவின் யேல் மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில், ஊரடங்கை தளர்த்திய பின்னரும், பாலியல் தொழில் விடுதிகளை மூடுவதால், இந்தியாவில் கொரோனா தொற்றால் எதிர்ப்பார்க்கப்படும் 63 சதவீத இறப்புகளின் எண்ணிக்கை குறைய கூடும்[3]. ஊரடங்கிற்கு பின் கொரோனா தடுப்பூசி கண்டறியும் வரை விடுதிகள் மூடப்பட்டிருந்தால், இந்தியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் அபாயம் குறைவாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்[4]. மேலும் ஆய்வு முடிவுகளை மத்திய மற்றும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் பகிர்ந்துள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்[5]. நாடு முழுவதும் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும், பாலியல் தொழில் விடுதிகளை தொடர்ந்து மூடியிருக்க வேண்டுமென ஆய்வாளர்கள் பரிந்துரை செய்துள்ளனர்[6]. இதனால் 45 நாட்களில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் 72 சதவீதம் குறையும் மற்றும் கொரோனா உச்சக்கட்டத்தை அடைய 17 நாட்கள் வரை தாமதம் ஆகும். இந்த தாமதம் அரசுக்கு மக்களின் ஆரோக்கியம் மற்றும் பொருளாதாரத்தை காக்க கூடுதல் அவகாசம் அளிக்குமெனவும் கூறியுள்ளனர். ஊரடங்கிற்கு பின் முதல் 60 நாட்களில் விடுதிகள் மூடப்பட்டிருந்தால், கொரோனா உயிரிழப்பு 63 சதவீதம் அளவுக்கு குறையுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sex workers - training, meeting

அகில இதிய பாலியல் தொழிலாளர் கூட்டமைப்பு[7]: அகில இதிய பாலியல் தொழிலாளர் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் 16 மாநிலங்களில் உள்ளனர். தலைமை செயலகம் தில்ல்யில் உள்ளது[8].  AINSW பாலியல் தொழிலாளர்களின் உரிமைகள், HIV தடுப்பு, சமூக பாதுகாப்பு, குடும்ப மேன்பாடு, குழந்தைகள் படிப்பு என்று பலவிதங்களில் உதவி வருகின்றது. தங்களது தொழிலில் அவர்கள் எவ்வாறு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும், சமூக மறுப்பு போன்ற பிரச்சினைகளிலிருந்து மீண்டு, அவர்களின் வாழ்க்கை சிறக்க வேண்டும் போன்றவற்றிற்கு பயிற்சி, மனநல ஆலோசனை, மருத்துவ வசதிகள் முதலியனக் கொடுக்கப் படுகின்றன. இந்தியாவில் அதர்மவழி பெண்களை ஈடுபடுத்துதல் தடுப்புச் சட்டம் [The Immoral Traffic (Prevention) Act, 1956 -“ITPA”] இவர்களின் தொழிலைக் கட்டுப் படுத்தி வருகின்றது. வேறு வழி ./ வேலை இல்லை என்ற பட்சத்தில் தான் சூழ்நிலை காரணங்களுக்காக, அவர்கள் இத்தொழிலில் தள்ளப் பட்டுள்ளார்கள்.அப்படி பார்த்தால், இந்திய சமூகமே இதற்கு காரணம் என்று குற்றம் சாட்டலாம். அவர்கள் இந்துக்கள் எனும் போது, மற்ற இந்துக்களும் பொறுப்பாகிறார்கள். அந்நிலையில் அவர்களும் பதில் சொல்லியாக வேண்டும். இன்றைக்கு, இந்துமதத்தை வைத்து பல கட்சிகள், அமைப்புகள், குழுக்கள் அரசியல், வியாபாரம் செய்து வருகின்றன. ஆக, அவவை இதை எதிர்கொள்ளாமல் தத்துவம் பேசினால், ஒன்றுக்கும் பிரயோஜனம் இல்லை.

Sex workers - training

முடிவுரை: இப்பிரச்சினையை முறையாக எதிர்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.

  1. ஒவ்வொரு இந்துவும் வெட்கப் படவேண்டிய விசயம் என்னவென்றால், இந்தியாவில் 50,00,000 முதல் ஒரு கோடி பாலியல் தொழிலாளர்கள் இருப்பதாகத் தெரிகிறது.
  2. இவர்கள் எல்லோருமே அகில இந்திய பாலியல் தொழிலாளர் கூட்டமைப்பு என்றதில் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள்!
  3. இந்திய பாலியல் தொழிலாளர் கூட்டமைப்பு – All India Network of Sex Workers (AINSW) இருப்பது நிதர்சனம்!
  4. இப்பொழுதைய கொரோனா நோய், தொற்று, மற்றும் ஊரடங்கு விவகாரங்களால், அவர்களது தொழில் பாதித்துள்ளது.
  5. சம்பளம் இல்லாததால், சாப்பாடிற்கே வழியில்லாத நிலையில், வாடும் இவர்களில் 60% தத்தம் ஊர்களுக்குச் செல்ல ஆரம்பித்து விட்டார்கள்!
  6. குழந்தைகளுடன் இருக்கும் இவர்களில், சிலர் இரண்டு மாதமாக, சரியான உணவு உண்ணாமல் தவிக்கின்றனர்.
  7. ஆக, பெண்மை, பெண்ணியம், பெண்ணியத் தூய்மை, கற்பு…இவற்றைப் பற்றியெல்லாம் இந்துத்துவ வாதிகள் ஏன் அலசுவதில்லை?
  8. பூர்ணகும்பம், பிரசாதம் போன்றவற்றிற்கு அளந்து தள்ளுகிறார்களே, அரை கோடி பாரதிய நாரிமணிகளின் நிலை தெரியவில்லையா?
  9. “பாரத் மாதா கி ஜே” கோஷம் போடுபவர்கள், இத்தகைய நிதர்சனங்களுக்கு, உண்மைகளுக்கு என்ன பதில் சொல்வார்கள்?
  10. கோடிகணக்கில் நிவாரணம், உதவி பற்றி பிரமாதமாக வாத-விவாதம் புரிபவர்கள், இவர்களின் குழந்தைகள் கதி பற்றி யோசித்தது உண்டா?

© வேதபிரகாஷ்

18-05-2020

Hindutva, sex and adventure-novel

[1] மாலைமலர், பாலியல் தொழிலாளர்களுக்கு கொரோனா தாக்கினால் ஆபத்துமருத்துவ நிபுணர் எச்சரிக்கை, பதிவு: ஏப்ரல் 20, 2020 11:38 IST

[2] https://www.maalaimalar.com/news/national/2020/04/20113817/1436390/COVID-19-Medical-expert-Warns-Risk-if-corona-attacks.vpf

[3] தினமலர், பாலியல் விடுதிகளை மூடுவதால் 72 % கொரோனா பாதிப்பை தவிர்க்கலாம், Updated : மே 17, 2020 14:27 | Added : மே 17, 2020 14:25.

[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=2541050

[5] தினமலர், சிவப்பு விளக்கு பகுதிகளால் வைரஸ் பரவல் அதிகரிக்கும், Added : மே 16, 2020 23:43.

[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=2540619

[7] https://www.nswp.org/featured/all-india-network-sex-workers-ainsw

[8] NSWP, The Matrix,62 Newhaven Road, Edinburgh, EH6 5QB, Scotland UK;  For more information contact:+44 (0)131 553 2555; secretariat@nswp.org

புவனேஸ்வரி கைது, தினமலர் செய்தி, நடிகர்-நடிகையர் பேச்சு, பத்திரிக்கையாளர்கள் வழக்கு தொடுத்தல், பத்திரிக்கையாளர் கைது, ஆனால், நடிகர்-நடிகையர் தப்பித்து வருகின்றனர் 2009 முதல் 2017 வரை!

மே25, 2017

புவனேஸ்வரி கைது, தினமலர் செய்தி, நடிகர்நடிகையர் பேச்சு, பத்திரிக்கையாளர்கள் வழக்கு தொடுத்தல், பத்திரிக்கையாளர் கைது, ஆனால், நடிகர்நடிகையர் தப்பித்து வருகின்றனர் 2009 முதல் 2017 வரை!

Dinamalar news editor arrested October 2009- Bhuvaneswari case

தினமலர்செய்தி ஆசிரியர் லெனினை போலீசார் கைது[1]: நடிகைகள் குறித்து வெளியான செய்தி தொடர்பாக, கடந்த 7ம் தேதி, அக்டோபர் 2009, “தினமலர்’ செய்தி ஆசிரியர் லெனினை போலீசார் கைது செய்தனர். பின், நிபந்தனையற்ற ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார். முன்னதாக செய்திக்கு எதிர்ப்பு தெரிவித்து, 7ம் தேதி நடிகர் சங்கத்தில் கூட்டப்பட்ட கண்டனக் கூட்டத்தில், பத்திரிகையாளர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் பல நடிகர், நடிகையர் இழித்தும், பழித்தும் பேசியது வீடியோ ஆதாரம் மூலம் தெரியவந்தது. பத்திரிகையாளர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் இழிவாக பேசிய நடிகர், நடிகையர் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, ஏற்கனவே பல்வேறு பத்திரிகையாளர் சங்கங்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்நிலையில், நடிகர்களுக்கு எதிராக, சைதாப்பேட்டை 18வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் 15-10-2009 அன்று எட்டு பேர் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.

What the actors spoke - 2009 Nakkeeran- news and photo

பத்திரிகையாளர் அன்பழகனின் மனைவி கிருஷ்ணவேணி தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது[2]: “தினமலர்’ நாளிதழில் வந்த செய்திக்கு எதிர்ப்பு தெரிவித்து, நடிகர் சங்கத்தின் சார்பில், சங்க வளாகத்தில், கடந்த 7ம் தேதி கண்டனக் கூட்டம் நடத்தப் பட்டது. அதில், நடிகர்கள் சரத்குமார், ராதாரவி, விஜயகுமார், விவேக், சத்யராஜ், சூர்யா, அருண்குமார் மற்றும் நடிகை ஸ்ரீபிரியா ஆகியோர், பத்திரிகையாளர்களுக்கு எதிராகவும், அவர்களின் குடும்பத் தினருக்கு எதிராகவும், மிகவும் அருவருப்பான முறையிலும், கீழ்த்தரமாகவும், மிரட்டும் வகையிலும் பேசியுள்ளனர். நடிகர் விஜயகுமார், “தினமலர் அலுவலகத்திற்குச் சென்று நான்கு பேரை வெட்டி கூறு போடுவேன்’ என பேசியிருக்கிறார். பத்திரிகையாளர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் இழிவுபடுத்தி பேசிய நடிகர்களை சட்டத்தின் முன் நிறுத்தவும், அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கவும் தேவையான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இதேபோல், அசதுல்லாவின் மனைவி நூர்ஜான், முருகநாதன், நிலாவேந்தன், வேலாயுதம், சென்மான், ஜெயவீரன், சரவணன் ஆகியோரும், தனித்தனியே வழக்கு தொடர்ந்துள்ளனர். ஏற்கனவே, சென்னை பத்திரிகையாளர் சங்கம் சார்பில், அன்பழகன், இந்திய உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் அசதுல்லா, அனைத்து ஊடக பத்திரிகையாளர் சங்கம் சார்பில், சத்யாலயா ராமகிருஷ்ணன் ஆகியோர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

What the actors spoke - 2009 Dinamalar- photo

தொடர்ந்து நடந்த வழக்கில் நடிகர்நடிகையர் நீதிமன்றத்திற்கு வரமால் இருந்தது: இதைத்தொடர்ந்து ஊட்டியை சேர்ந்த பத்திரிகையாளர் ரோசாரியோ மரியசூசை என்பவர்  தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் பத்திரிகையாளர்களுக்கு எதிரான கருத்துகள் என்றும், “தினமலர்’ இதழுக்கு எதிராகவும்[3], பத்திரிகையாளர்களின் சமூக தகுதியை குறைக்கும் வகையிலும், பத்திரிகையாளர்கள் குடும்பத்தாரை கேவலப்படுத்தும் வகையிலும்[4], மற்றும் பத்திரிகையாளர்களை நடிகர்கள் தரக்குறைவாக பேசியதால், தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டதாக கூறி ஊட்டியில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கடந்த 13.11.2009 அன்று அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்[5]. இந்த மனு, விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு, சமூக ஆர்வலர்கள் வீரமதிவாணன் மற்றும் தவ முதல்வன் ஆகியோரிடம் விசாரணை நடந்தது.  இந்த வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வந்தது[6]. வழக்கு விசாரணைக்கு ஆஜராக சரத்குமார், சூர்யா உள்ளிட்ட 8 பேருக்கும் பலமுறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர்கள் ஆஜராகவில்லை. அதனால், வழக்குப் போட்டவரும் விடுவதாக இல்லை போலும்.

The Eight actors to be arrested

சம்பந்தப்பட்ட 8 பேரும் இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க கோரி03.01.2012-ல் மனு தாக்கல் செய்தது: இந்த நிலையில் சம்பந்தப்பட்ட 8 பேரும் இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க கோரியும், வழக்கை ரத்து செய்யக்கோரியும் சென்னை ஐகோர்ட்டில் கடந்த 3.1.2012-ல் மனு தாக்கல் செய்தனர். தாங்கள் பேசியதையெல்லாம் மறந்து விட்டனரா அல்லது “வழக்கை ரத்து செய்யக்கோரும்” அளவிற்கு யாதாவது செய்துள்ளனரா, சமரசத்திற்கு சென்றுள்ளனரா என்றெல்லாம் தெரியவில்லை. இதனை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட ஐகோர்ட்டு, ஊட்டி கோர்ட்டில் வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதித்தது. பின்னர் இடைக்கால தடையை நீக்கி ஐகோர்ட்டு உத்தரவிட்டது[7]. அதன்படி ஊட்டி கோர்ட்டில் இந்த வழக்கு 23-05-2017 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது[8]. அப்போது விசாரணைக்கு ஆஜராகாத நடிகர்கள் சரத் குமார், சத்யராஜ், சூர்யா, விஜயகுமார், விவேக், அருண்விஜய், இயக்குனர் சேரன், நடிகை ஸ்ரீபிரியா ஆகிய 8 பேருக்கும் பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி செந்தில்குமார் ராஜவேலு உத்தரவு பிறப்பித்தார். தங்கள் மீதான பிடிவாரண்டை ரத்து செய்யக்கோரி நடிகர்கள் சூர்யா, சரத்குமார் உள்ளிட்டோர் மனுதாக்கல் செய்துள்ளனர்[9]. உதகை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடிகர்களின் வழக்கறிஞர் விஸ்வநாத் மனு தாக்கல் செய்துள்ளார்[10].

Dinamani editorial - Bhuvameswari issue

சமுதாய பொறுப்பு [Social Responsibility]-லிருந்து நடிக-நடிகையர் தப்பித்துக் கொள்ள முடியாது: இவ்வழக்கு பத்திரிக்கையாளர்களுக்கும், நடிகர்-நடிகைகளுக்கும் இடையேயுள்ள பிரச்சினையா, நடிகர்-நடிகைகளுக்கு இடையேயுள்ள தொழில் போட்டியா, அவதூறா, இதனை 2009லிருந்து இழுத்தடிக்க வேண்டிய அவசியம் என்ன, இடையில் இவர்கள் எல்லோருமே, தமிழக சமூகத்தின் மாண்பு, மேன்பு, கலாச்சாரம், பண்பாடு, முதலியவற்றைக் காப்பது போல, பட இடங்களில், மேடைகளில், நிகழ்ச்சிகளில் பேசியிருப்பதும், அறிவுரை கூறியதும், போன்றவற்றை எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லை. தமிழகத்தைப் பொறுத்த வரையிலும், அரசியலையும், சினிமாவையும் பிரிக்க முடியாது. அதே போல கடந்த 60 வருடங்களாக, சமூதாயம், குறிப்பாக பெண்கள் நிலை சீரழிந்து வருகின்றன என்பதையும் மறுக்க முடியாது. இன்றைக்கு சமுதாய பொறுப்பு [Social Responsibility] என்றேல்லாம் பேசப்பட்டு வருகின்றது.  அந்நிலையிலஆ நூற்றுக்கணக்கில் காசு கொடுத்து சினிமா பார்க்கும் போது, படம் நன்றாக இருக்கின்றதா இல்லையா என்பதை விட, அவர்கள் சமூகப் பிரச்சினைகள் பற்றி பேச வந்துவிடுவதாலும், கருத்துகள் கூறூவதாலும், குறிப்பிட்ட விளம்பரங்களில், இந்த பொருள், சேவை … முதலியவற்றை வாங்குங்கள் என்று தூண்டும் நிலைக்கும் வந்து விட்டதால், அவர்கள் பேசுவது, நடந்து கொள்வது முதலியவஏற்றைப் பற்றி மற்றவர்களும் கண்காணிப்பது, விமர்சிப்பது என்பது இயல்பாகி விடுகின்ற நிலை ஏற்பட்டு விட்டது.

© வேதபிரகாஷ்

25-05-2017

Dinamani editorial - Bhuvameswari issue-3

[1] தினமலர், நடிகர், நடிகையர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மேலும் 8 பேர் வழக்கு, அக்டோபர் 16,2009,00:00 IST.

[2] http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=5301

[3] தினமலர், பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய வழக்கு:ஊட்டியில் டிச.,19ல் ஆஜராக நடிகர்களுக்கு சம்மன், பதிவு செய்த நாள் : நவம்பர் 23,2011,00:22 IST.

[4] http://www.dinamalar.com/News_Detail.asp?Id=354198

[5] தினமணி, பிடியாணைரத்து செய்ய நடிகர்கள் மனு!, மே.24, 2017. 03.33 pm

[6] http://www.dinamani.com/cinema/cinema-news/2017/may/24/arrest-warrants-against-popular-tamil-stars-2707960.html

[7] மாலைமுரசு, பத்திகையாளர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கு !,  May 24, 2017.

[8] http://www.malaimurasu.in/index.php/actors-speech/

[9] தினத்தந்தி, பிடிவாரண்டை ரத்து செய்யக்கோரி சூர்யா, சரத்குமார் மனு, மே 24, 2017, 03:43 PM.

[10] http://www.dailythanthi.com/News/TopNews/2017/05/24154344/Seek-to-cancel-the-watchman-Surya-Sarath-Kumar-petition.vpf

புவனேஸ்வரி கைது, தினமலர் செய்தி, நடிகர்-நடிகையர் பேச்சு, பத்திரிக்கையாளர்கள் வழக்கு தொடுத்தல், பத்திரிக்கையாளர் கைது, ஆனால், நடிகர்-நடிகையர் தப்பித்து வருகின்றனர்!

மே25, 2017

புவனேஸ்வரி கைது, தினமலர் செய்தி, நடிகர்நடிகையர் பேச்சு, பத்திரிக்கையாளர்கள் வழக்கு தொடுத்தல், பத்திரிக்கையாளர் கைது, ஆனால், நடிகர்நடிகையர் தப்பித்து வருகின்றனர்!

Bhuwaneswari arrested 2009

விபசார வழக்கில் நடிகை புவனேஸ்வரி கைது (அக்டோபர் 2009): சென்னையில் கடந்த 2009-ம் அக்டோபர்.2 அன்று ஆண்டு விபசார வழக்கில் நடிகை புவனேஸ்வரி கைது செய்யப்பட்டார்[1]. அப்பொழுது தன்னை மற்றும் கைது செய்து, சிறையில் அடைத்து என்று நடவடிக்கைகள் எடுத்த போது, மற்ற நடிகைகளின் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது போல பேசினார். சில நடிகைகளின் பெயர்களையும் குறிப்பிட்டார். விபசார வழக்கில் பிடிபட்ட நடிகை புவனேஸ்வரி, திரையுலகில் விபசாரத்தில் ஈடுபட்டுள்ள மொத்த நடிகைகள் மற்றும் அவர்களுக்கு துணையாக உள்ள முக்கியமான புரோக்கர்களின் பெயர் உள்ளிட்ட ஒட்டுமொத்தப் பட்டியலையும் போலீஸாரிடம் தூக்கிக் கொடுத்து விட்டாராம். போலீஸாரும் இந்தப் பட்டியலிலிருந்து சிலரை தேர்வு செய்து வளைத்துப் பிடிக்க திட்டம் போட்டுள்ளனராம். இது தெரிந்தது முதல் சம்பந்தப்பட்ட நடிகைகள் பெரும் பீதியில் உள்ளனராம். கொஞ்ச நாளைககு அடக்கம் ஒடுக்கமாக இருக்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளனராம்.

Dinamalar-Bhuvaneswari04_10_2009

போலீசாரிடம் லிஸ்ட் கொடுத்தார் என்ற செய்தி: தன்னைக் கைது செய்த போலீசாரிடம், விபச்சாரத்தில் ஈடுபடும் மொத்த நடிகைகளின் பட்டியலும் என்னிடம் உள்ளது. மணிக்கு 2 லட்சம் வாங்கும் டாப் நடிகைகள் பட்டியலைக்கூட வைத்துள்ளேன். அவர்களிடம் போகும் கஸ்டமர்களைக் கூட எனக்குத் தெரியும். அவர்களையெல்லாம் உங்களால் கைது செய்ய முடியுமா? என்று கடுப்பாகக் கேட்டுள்ளார். உடனே போலீசாரும் அந்த லிஸ்டைத் தரச்சொல்ல, ‘தான் சொன்னது சும்மா இல்லை… நிஜம்தான்’ எனும் வகையில் உடனே பட்டியலைக் கொடுத்து விட்டாராம் புவனேஸ்வரி. வெறுமனே பெயரை மட்டும் கொடுக்காமல், எந்தெந்த நடிகை எங்கெங்கு விபச்சாரத்தில் ஈடுபடுகிறார். என்னென்ன ரேட் என்பது உள்பட துல்லியமான ‘டேட்டா பேஸை’யே கொடுத்து முன்னணி நடிகைகளின் ‘பொருளாதார பேஸில்’ கை வைத்து விட்டார் புவனேஸ்வரி. அதில் விபசாரத்தில் ஈடுபடும் 25 முன்னணி நடிகைகள் ஒவ்வொருவருக்கும் என்னென்ன ‘ரேட்’ என்பதையும், எங்கெங்கு வாடிக்கையாளர்களை சந்திக்கிறார்கள் என்ற விவரங்களையும் கொடுத்துள்ளார். ஒரு மணி நேரத்துக்கு ரூ.2 லட்சம் வாங்கும் நடிகைகள், ரூ.1 லட்சம் வாங்கும் நடிகைகள், ரூ.50 ஆயிரம், ரூ.25 ஆயிரம் என்று ‘ரேட்’ வாரியாக பட்டியலை கொடுத்துள்ளார். அவரது பட்டியல்படி, பிரபல நடிகைகள் சிலரது குறைந்தபட்ச ரேட் ரூ.25000 (ஒரு மணி நேரத்துக்கு). இந்தக் கணக்கில்தான் அவர்கள் நகைக்கடை திறப்பு விழா, ஜவுளிக்கடைத் திறப்பு விழா போன்றவற்றுக்கு ரேட் நிர்ணயிப்பார்களாம். இந்தப் பட்டியலில் உள்ள நடிகைகளில் முதல்கட்டமாக 4 பேரை குறிவைத்துள்ளது போலீஸ். இவர்கள் அழகிகளை வைத்து விபசார தொழில் செய்யும் முக்கிய நடிகைகள். ஆனால் இவர்கள் அனைவரும் ரூ.25 ஆயிரம் ‘ரேட்’டில் உள்ளவர்கள். நடிகைகளை பிடிப்பதற்கு தரவேண்டிய பணத்தை போலீசார்தான் தயார் செய்ய வேண்டும். ரூ.25 ஆயிரம் அளவில்தான் தயார் செய்ய முடியும் என்பதால் முதல்கட்டமாக இந்த நடிகைகளை குறி வைத்துள்ளனர்.

Bhuvaneswari statement -- 2009 - Dinamalar

இதுதொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர் ராதாரவி, முதல்அமைச்சர் கருணாநிதிக்கு அனுப்பிய கடிதம் (2009): “கடந்த 1-ந் தேதி அன்று நடிகை புவனேஸ்வரியை காவல்துறையினர் விபசார வழக்கில் கைது செய்துள்ளனர். அவர் போலீசாரிடம் தெரிவித்ததாக, தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகள் பற்றிய அவதூறு செய்திகள்   வெளிவந்ததைக் கண்டு நாங்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தோம். இந்த செய்திகளால் சம்பந்தப்பட்ட நடிகைகளும், அவர்களின் குடும்பத்தினரும், ஒட்டுமொத்த தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களும் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம். கலை உலகின் மூத்தவரும், தமிழ் திரையுலகினர் மீதும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மீதும் என்றும் மரியாதை வைத்திருக்கும் தாங்கள் முதல்வராக இருக்கும்போது இப்படி ஒரு செய்தியை ஊடகங்கள் வெளியிடுவது எங்களுக்கு மிகவும் வருத்தமாக உள்ளது.

What the actors spoke - 2009 photo

கருணாநிதி தலையிட வேண்டும்!: “எனவே, இதுகுறித்து தாங்கள் தகுந்த நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்று தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் அனைவர் சார்பாக உங்களை அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் அனுமதியுடன் தமிழக காவல்துறை தலைவரிடமும் சென்னை போலீஸ் கமிஷனருக்கு தகுந்த நடவடிக்கை எடுப்பதற்காக இந்த மனுவின் நகலை அளிக்கிறோம்”, என்று கேட்டுக் கொண்டுள்ளனர். இவ்விசயம் முதலமைச்சர் வரை போக வேண்டிய அவசியம், அவசரம், முக்கியத்துவம் இருந்ததா? எத்தையோ பிரச்சினைகள் இருக்கும் போது, அவற்றையெல்லாம் விட்டு விட்டு, கருணாநிதி, இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பார்? நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் ஊரில் இல்லாததால் அவர் வந்தவுடன் இந்த விவகாரம் குறித்து நடிகர் சங்கம் ஆலோசனை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வந்தன. இதில் அரசியல், பெருந்தலைவர்கள், அதிகாரிகள் முதலியோர் சம்பந்தப்பட்டிருப்பது, கொடுக்கப் படும் விளம்பரமும், செய்திக் கட்டுப்பாடுகளும் நன்றாகவே எடுத்துக் காட்டுகின்றன.

complain_bhuwa

இப்பொழுது 2017ல் அடக்கி வாசிக்கு ஊடகங்கள்: இதனால், பெருத்த பிரச்சினை ஆகியது. இது குறித்தும், மற்ற நடிகைகள் குறித்தும் ஒரு பத்திரிகையில் 3.9.2009 தினத்தந்தி] / அக்டோபர் 3-ஆம் தேதி  [தினமணி] அன்று செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. தினமலரில் அச்செய்தி வெளியானது[2]. இதற்கு சினிமா நடிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக 07-10-2009ல் நடத்தப்பட்ட சென்னை தென்னிந்திய திரைப்பட சங்க கூட்டத்தில் நடிகர்கள் –

1.        சரத்குமார்,

2.       சத்யராஜ்,

3.       சூர்யா,

4.       விஜயகுமார்,

5.        விவேக்,

6.       அருண்விஜய் மற்றும்

7.        இயக்குனர் சேரன்,

8.       நடிகை ஸ்ரீபிரியா

ஆகியோர் பத்திரிகையாளர்களை மிக தரக்குறைவாகவும், அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்த செய்தியும் சம்பந்தப்பட்ட பத்திரிகையில் வெளியிடப்பட்டு இருந்தது.

விபசாரம் பற்றி நடிகையர்நடிகர்கள் ஏன் கோபமடைகின்றனர்?[3]: நடிகையர் மற்றும் நடிகர்களின் பேச்சுகளை, கீழ்கண்ட தளங்களில் வெளியிடப்பட்டன[4]: அவர்களின் பேச்சோடு, அவர்களது கண்கள், கை-கால்கள், மற்றும் முகபாவங்களை உன்னிப்பாகக் கவனித்தேன். வாய்-அசைவுகள், வார்த்தை பிரயோகங்கள், உச்சரிப்புகள், வயற்றிலிருந்து ஆக்ரோஷமாக வரும் விதம், உண்மையிலேயே எனக்கு ஆச்சரியம்தான்.

  1. ரஜினிகாந்த் பேசியவிதம், அவரைப் பற்றிய மதிப்பே மாறிவிட்டது. ஆன்மீகம் என்றதெல்லாம் போலி என்று நன்றாகத் தெரிந்து விட்டது. மக்களை ஏமாற்றுவதில் இவருக்கும், கருணாநிதிக்கும் எந்த வேறுபாடும் இல்லை.

ரஜினிகாந்த்: தமிழச்சிகள்……கற்பு……………….நிச்சயமாக அவர்கள் விபசாரிகள்தாம்………வயற்றுப் பிழைப்பிற்காக நடத்துகிறார்கள்…………. அவர்கள் போட்டோவை போடவேண்டாம்.

  1. சூர்யா: ……………………..பின்னால் ஓடுதல்……………ஈனப்பிறவி…………
  2. விவேக்: ………………..சொறிநாய்…………………….வொங்கம்மா……………….படம் போட்டு ஒட்டுவேன்………..
  3. ஸ்ரீபிரியா: பாஸ்டர்ட். ஆங்கிலத்தில் கெட்ட வார்த்தையில் பேசியதோடு, “ஈனப்பிறவிகள்’
  4. சத்யராஜ்: …………..ஸ்ரீபிரியா சொன்னதை தமிழில் மொழிபெயர்த்து சொல்லி அதனை நாம் எல்லோரும் ஆமோதிக்கவேண்டும்……………….உள் காயம் தெரியாமல் அவர்களை அடிக்க வேண்டும்’.
  5. அருண் விஜய், “பத்திரிகை அலுவலகத்தில் புகுந்து அடித்து நொறுக்கி, எழுதியவரை அடித்து இழுத்து வந்து இவுங்க (மஞ்சுளா) காலில் விழ வைப்பேன்’ என்று கூறியுள்ளார்.
  6. நடிகர் சரத்குமார், “என்னைப் பற்றி எழுதியபோது, அந்தப் பத்திரிக்கை ஆபீசை 200 பேரோட போய் “அட்டாக்’ பண்ணினேன்’ என்று பேசியுள்ளார்.
  7. நடிகர் சேரன் பேசுகையில், “ராஸ்கல்ஸ், உன் வீட்டுப்பிள்ளை ஓடிப்போகும் போது தெரியும்டா வலி’ என்று கூறியுள்ளார்.

ஆச்சரியம்தான், 90% நிர்வாணமாக நடிக்கும்போது, ஐந்தில் நான்கை என்றோ மறந்த போது, பாக்கி ஒன்றைப் பற்றிக் கேள்வி எழும்போது, வருகிறது, கோபம், ஆக்ரோஷம், கொதிப்பு, வெறி……………..எல்லாம். முலைகளைக் காட்டிக் கொண்டு, குலுக்கிக் கொண்டு ஆபாசநடனங்கள், கேவலமான இரட்டை-பொருள் கொண்ட வேசித்தன வசனங்கள், பரத்தைத்தனத்தை வெளிகாட்டும் பாலல்கள் இனற்றையெல்லாம் நாடு முழுவதும் சுவர்களில், தியேட்டர்களில், தொலைகாட்சிகளில், …………….வெளிவரும்போது, பெருமையாகவா உள்ளனா?[5].

 

© வேதபிரகாஷ்

25-05-2017

actors_permission

[1] தினமலர், நடிகர்கள் டிவாரன்ட், மே.24, 2017. 03.33 pm

[2] http://cinema.dinamalar.com/tamil-news/59530/cinema/Kollywood/Warrent-against-8-actors-including-Suriya-and-Sarathkumar.htm

[3] http://www.indiaglitz.com/channels/tamil/gallery/events/19677.html

[4] http://indiainteracts.in/movies/tamil/gallery_new/events/1/nadigar_sangam_dinamalar.html

[5]https://womanissues.wordpress.com/2009/10/14/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/

காமக்குரூரர்களா அமெரிக்காவை விஞ்சுகின்றவர்களா – சமூக சீரழிவின் விளிம்பில் தமிழகம், இந்தியா

பிப்ரவரி19, 2012

காமக்குரூரர்களா அமெரிக்காவை விஞ்சுகின்றவர்களா – சமூக சீரழிவின் விளிம்பில் தமிழகம், இந்தியா

பாலியல்பலாத்காரம்செய்து 4 வயதுபெண்குழந்தைகொலை[1]: திருச்சி, சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் அருகே, தனியார் இடத்தில் இறந்து கிடந்த நான்கு வயது பெண் குழந்தை, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது[2]. திருச்சி, சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் பின்புறம், ரோஷன் திருமண மண்டபம் அருகே, பி.எல்.ஏ., நிறுவனத்துக்குச் சொந்தமான காலி நிலம் உள்ளது. இந்த இடம் பயன்படுத்தப்படாமல், பாழடைந்த நிலையில் உள்ளது. கடந்த மாதம் 31ம் தேதி, காலை எட்டு மணிக்கு, அந்த இடத்தில், நான்கு வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை, இறந்த நிலையில் படுக்க வைக்கப்பட்டிருப்பதை, அப்பகுதி மக்கள் கண்டனர். இது குறித்து, பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு கண்டோன்மென்ட் எஸ்.ஐ.,க்கள் பால்ராஜ், ராஜ்குமார் உள்ளிட்ட போலீசார் வந்து, குழந்தையின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.  இறந்து கிடந்த குழந்தையை காணோம் என்று யாரும் வராததால்[3], நான்கு நாட்கள் கழித்து, போலீசார் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்து, புதைத்து விட்டனர்.

பிரேதபரிசோதனையில்பகீர்தகவல்[4]: பிரேத பரிசோதனையில், அந்த நான்கு வயது பெண் குழந்தை, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதும், அதன் விலா எலும்புகள் நொறுங்கியிருந்ததும் தெரிய வந்துள்ளது. முதலில், “அனாதை குழந்தை” என்று மெத்தனமாக இருந்த கண்டோன்மென்ட் போலீசார், கொடூரமான கொலை என்றதும், பெண் குழந்தை யார் என்பதை அறிய, போட்டோவுடன், பள்ளிகளிலும், ரோட்டோரத்தில் தங்கியிருக்கும் குடும்பங்களிடமும், விசாரணை நடத்தி வருகின்றனர் ஆகவே இதில் கூட அத்தகைய மனப்பாங்கு, பாரபட்சம் முதலியவை இருப்பது தெரிகிறது.

சங்கத்தமிழர்களின் திரிபா, மேனாட்டு சீரழிவின் விபரீதமா? சில தமிழ்  விரும்பிகள் சங்க காலத்தில் பிணத்தைத் தழுவும் பழக்கம் இருந்தது என்று மேடைகளில் பெருமையாகப் பேசுவார்கள். ஆனால், திருவள்ளுவர் அதனை எதிர்மறை உதாரணமாகத்தான் உபயோகப் படுத்தி எடுத்துக் காட்டினார்.

பொருட் பெண்டிர் பொய்மை முயக்கம இருட்டறையில்

ஏதில் பிணந்தழீ இயற்று (913)

அதாவது காசு கொடுத்து முன்பின் தெரியாத ஒரு விபச்சாரியின் / விலைமாதின் / பொது மகளிரின் உடலை தழுவுவது, அதனால் இன்பம் காண்பது முதலியன, இருட்டறையில் ஒரு பிணத்தைத் தழுவுவதற்கு ஒப்பாகும் என்று சாடியுள்ளார். போதாகுறைக்கு, மலைநாட்டில் நம்பூதிரிகளிடம் அத்தகைய வழக்கம் இருந்தது என்றும் எடுத்துக் காட்டுகிறார்கள். அதாவது, ஏதாவது ஒரு கன்னிப்பெண் இறந்து விட்டால், அந்த பிணத்தின் மிது சந்தனத்தை பூசி, இருட்டறையில் வைத்து, ஒரு இளைஞனை உள்ளே அனுப்பி அதனை தழுவ / புணர சொல்வார்களாம். அவ்வாறு அவன் செய்தானா இல்லையா என்பதனை அவன் உடலில் சந்தனம் ஒட்டியிருக்கிறாதா[5] என்று சோதித்தறிவார்களாம்! ஆக அவ்வாறான ஈனச்செயலில் ஈடுபட்டார்களா அல்லது மேனாட்டு காமக்குரூரத்தில் ஈடுபட்டு அந்த பச்சிளம் குழந்தையை பலாத்காரம் செய்து கொன்றார்களா? எப்படி இருப்பினும் அத்தகைய காமக்குரூரர்களை விட்டு வைக்கக் கூடாது. கண்டு பிடித்து கழுவேற்ற வேண்டும். அதாவது இக்கால முறைப்படி தூக்கில் போட வேண்டும்.

வழக்கம்போல பெண்ணியப்புலிகள், வேங்கைகள், சிறுத்தைகள் ஒளிந்து கொண்டு விட்டன: தமிழ் பெண்ணியம், தமிழ் பெண்களின் ஐங்குணங்கள், பென் உரிமைகள் என்றெல்லாம் பேசும் வழக்கம்போல பெண்ணியப்புலிகள், வேங்கைகள், சிறுத்தைகள் எல்லாம் எங்கே உள்ளன என்று தெரியவில்லை. ரஞ்சிதாவிற்காக போராடுவோம் என்று அப்பொழுது குரல் கொடுத்த கம்யூனிஸ பெண்மணியைக்கூட இப்பொழுது காணோம். எல்லாமே ஒளிந்து கொண்டு விட்டன போலும்! முதலில் பெண்கள் சினிமாவில் கேவலமாக வரும் ஆபாசத்தைத் தடுக்க வேண்டும்; அத்தகைய ஆபாசத்தை “வாய் விபச்சாரமாக்கி” தொழில் நடத்தும் விவேக் போன்ற கூத்தாடிகளையும் கண்டிக்க வேண்டும், ஒதுக்க வேண்டும், அத்தகைய ஆபாச நடிகைகள், சினிமா தயாரிப்பாளர்கள், ஊடகக் காரர்களையும் பொது மக்கள் கண்டிக்க வேண்டும், ஏன் தண்டிக்கவும் வேண்டும், இல்லையென்றால், அவர்கள் மாறமாட்டார்கள்.

வேதபிரகாஷ்

19-02-2012


[1] தினமலர், பாலியல்பலாத்காரம்செய்து 4 வயதுபெண்குழந்தைகொலை : பிரேதபரிசோதனையில்பகீர்தகவல், http://www.dinamalar.com/News_Detail.asp?Id=404671

[2] சமீம காலத்தில் திருச்சியில் விபச்சாரம், பாலியல் பலாத்காரம், கற்ப்பழிப்பு முதலியன அதிகரித்துள்ளதையும் கவனிக்க வேண்டும்.

[3] எத்தகையப் பெற்றோர் அவர்கள் என்று தெரியவில்லை. இன்றைய நிலையில், குழந்தைகளையே விற்கின்றனர் என்று செய்திகள் வருகின்றன. பொருட்களை விற்பது போல, குழந்தைகளைத் திருடி விற்கின்றனர். பிறகு, இக்குழந்தையின் நிலை என்ன என்று அதிகாரிகள் தான் கண்டு பிடிக்க வேண்டும்.

[4] தினமலர், பாலியல்பலாத்காரம்செய்து 4 வயதுபெண்குழந்தைகொலை : பிரேதபரிசோதனையில்பகீர்தகவல், http://www.dinamalar.com/News_Detail.asp?Id=404671

[5] தேவநேயப்பாவாணர் இதை மிகைப்படுத்தி விவரமாகவே எழுதியுள்ளார். அத்தகைய இளைஞனை “வெங்கப்பயல்” என்றும் குறிப்பிடுகிறார். அவர் கிறுத்துவர் என்பதனால், இந்தியப் பழக்கங்களை இழிவு படுத்தி எழுத வேண்டும் என்ற நோக்கத்தில் அவ்வாறு இழிவுபடுத்தி எழுதியுள்ளார். எல்.டி. சுவாமிக்கண்ணுப் பிள்ளை என்ற மதமாறி கிருத்துவரும் அவ்வாறே இந்திய சரித்திரத்தைக் குறைப்படுத்தி எழுதியுள்ளார்.