கணவனுக்கு பாதபூஜை செய்வது கணணகி-தனமா எதிர்-நாத்திகத் தனமா? பெண்ணியமா-பெரியாரிஸமா, திராவிட மாடலா இல்லையா?


கணவனுக்கு பாதபூஜை செய்வது கணணகி-தனமா எதிர்-நாத்திகத் தனமா? பெண்ணியமா-பெரியாரிஸமா, திராவிட மாடலா இல்லையா?

தமிழக நடிகைய பல கணவன்மார், பல தார மண, விவாகரத்து என்றெல்லாம் இருக்கும் பொழுது பெண்ணியம் எங்கிருந்து வருகிறது: கணவன்மார்களை விவாகரத்து செய்வதும், கல்யாணம் செய்து கொள்ளாமலேயே குழந்தை பெற்றுக் கொள்வ்துமாக இருக்கும் நடிகைகளுக்கு மத்தியில்[1], கணவனுக்கு பாதபூஜை செய்து, பரபரப்பு ஏற்படுத்தியிருக்கிறார் நடிகை பிரணிதா[2]. இதெற்கெல்லாம் உதாரணம் சொல்ல தமிழகத்திலேயே பல முன்னணி நடிகைகள் இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாது, ஒன்றிற்கு மேலாக ஐந்து கணவர் வரை மணம் செய்து விவாகரத்து செய்த நவீன பெண்ணுத்துவ வீராங்கனைகளும் இருக்கிறார்கள். பிறக்கும் குழந்தைகள் அப்பா யார் என்றால் என்ன பதில் கொடுப்பார்கள் என்றெல்லாம் அவர்கள் தான் கவலைப் படவேண்டும். ஆனால், கண்ணகி பிற்ந்த மண், நாங்கள் தான் கண்ணகிக்கே சிலை வைத்தே என்றும் தப்பட்டம் அடிப்பார்கள். மனைவி-துணைவி என்று புது தாம்பத்தைய விளக்கத்தையும் உண்டாக்குவார்கள். இப்படியெல்லாம் இருப்பவர்கள், பகுத்தறிவு, பெண்ணியம் என்றெல்லாமும் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. சினிமா-அரசியல் போர்வையில், எத்தனையோ நடிகைகளின் வாழ்க்கைகளும் சீரழிந்துள்ளன, தற்கொலைகளும் நடந்துள்ளன. பிறகு, இவர்கள் எப்படி விமர்சிக்க முடியும்?

17-07-2023 ஆடி அமாவாசை முன்னிட்டு கணவனுக்கு பாத பூஜை செய்தது: இந்து மதத்தை தீவிரமாக பின்பற்றி வரும் நடிகை பிரணிதா அடிக்கடி கோயில்களுக்கு செல்வது, தனது வீட்டில் இந்து பண்டிகைகளை கொண்டாடும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது என டிரெண்டாகி வருகிறார் என்று ஒரு ஊடகம் ஆரமொஇக்கிறது. அப்படியென்றால், சினிமாவில் செக்யூலரிஸம் இல்லையா, எப்பொழுது இவ்வாறு, மதம் பார்த்து விமர்சிக்கும் போக்கு வந்தது? இது செக்யூலரிஸமா, பெரியாரிஸமா, பகுத்தறிவா, எது? . தமிழில் ‘உதயன்’, கார்த்தி நடித்த ‘சகுனி’, சூர்யா நடித்த ‘மாசு என்ற மாசிலாமணி’, ஜெய் நடித்த ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’ உட்பட சில திரைப்படங்களில் நடித்தவர், பிரணிதா சுபாஷ்[3]. இவர் தொழிலதிபர் நிதின் ராஜு என்பவரை திருமணம் செய்து கொண்டார்[4]. இந்த தம்பதிக்கு அர்னா என்ற மகள் இருக்கிறார்[5]. இந்நிலையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பிரணிதா நேற்று முன் தினம் 17-07-2023 தனது கணவருக்கு பாத பூஜை செய்யும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்[6].

பிரணிதா நடிகை புகைப் படத்தை வெளியிட்டது: அதில், ‘ஆடி அமாவாசையை முன்னிட்டு பாத பூஜை செய்கிறேன். இது ஆணாதிக்கத்தின் ஒன்றாக இருக்கலாம். ஆனால் எனக்கு இது முக்கியத்துவம் வாய்ந்தது. சனாதன தர்மத்தில் பெரும்பாலான சடங்குகள் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதற்கு ஒரு கதை இருக்கிறது. இந்து சடங்குகள் ஆணாதிக்கம் கொண்டது என்று வாதிடுவது முற்றிலும் ஆதாரமற்றது. பெண் தெய்வங்களை சமமாக வழிபடும் சில நம்பிக்கைகளில் இதுவும் ஒன்று’ என்று தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு 2022லும் இதே போல கணவருக்குப் பாத பூஜை செய்த புகைப்படத்தை பிரணிதா பதிவு செய்திருந்தார். அப்போது இது ஆணாதிக்கம் கொண்டது என்று பலர் விமர்சித்து இருந்தனர்[7]. அதை இந்தப் பதிவில் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்[8]. கடந்த ஆண்டு தனது கணவருக்கு இவர் பாத பூஜை செய்தபடி போட்டோ வெளியிட்ட நிலையில், ஆணாதிக்கம் என்று ஏகப்பட்ட ட்ரோல்களும் மீம்களும் பறந்த நிலையில், தற்போது அதற்கு பதிலடி கொடுத்திருக்கிறார் நடிகை பிரணிதா[9]. சமூக ஊடகங்களில் வெளிப்படையாக பதிவிட்டுள்ள நிலையில், அவருக்குள்ள உரிமையை அவர் எடுத்துக் காட்டியுள்ளார். அதே நிலையில், அதற்கு பதிலும் கொடுத்துள்ளார். தவிர, இது இரண்டாம் ஆண்டாக செய்துள்ளார். எனவே, இதை ஏதோ புதியது மாதிரி விமர்சனம் செய்வதில் எந்த பிரயோஜனமும் இல்லை.

சமூக வளைதளத்தில் ட்ரோல் செய்தது, திர்மறையாக விமர்சித்தது: அதாவது இந்நிலையில் இதையும் சமூக வலைதளங்களில் பலர் விமர்சித்து சர்ச்சையாக்கி உள்ளனர்[10]. பிரணிதா செயலை பலர் விமர்சித்தும், கேலி செய்தும் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள். இது ஆணாதிக்க செயல் என்றும் கண்டித்துள்ள நிலையில், சிலர் பிரணிதா செயலை பாராட்டி வரவேற்பு தெரிவித்து உள்ளனர்[11]. இதற்கு நிறைய லைக்ஸ் குவிந்து, நடிகையா இப்படியெல்லாம் பண்றாங்க என ஆச்சர்யத்துடன் கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்[12]. நீங்க உங்க கணவருக்கு பாத பூஜை செய்வதெல்லாம் ஓகே தான். ஆனால், உங்களுக்கு மட்டும் பப்ளிசிட்டி வேண்டும் உங்கள் புருஷனுக்கு பப்ளிசிட்டி இருக்கக் கூடாது என அவரது முகத்தைக் கூட காட்டாமல் கிராப் பண்ணிட்டீங்களே ஏன்? என இந்த ஆண்டு வேற விதமாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். எந்த இந்து மதத்தில் பிகினி அணிந்துக் கொண்டு வலம் வரலாம் எனக் கூறுகின்றனர்[13]. நீங்கள் ஏன் குழந்தை பெற்றும் பிகினி போட்டோக்களை பதிவிடுறீங்க என்றும் ட்ரோல் செய்து வருகின்றனர்[14].

தமிழகத்தில் பெண்ணியத்தின் நிலை: தமிழகத்தைப் பொறுத்த வரையில், இத்தகைய முரண்பாட்டை பலவிசயங்களில் கவனிக்கலாம். பெரும்பாலும், நாத்திகம், பெரியாரிஸம், பகுத்தறிவு என்று பேசும், எழுதும், தம்பட்டம் அடிக்கும் திராவிடத்துவ சித்தாந்திகளிடம் அதிகமாகவே காணலாம். ஏனெனில் அவர்களது தலைவர்களே அத்தகைய முரண்பாடுகளைக் கொண்டவர்கள் தான். இரண்டு தாரம், மூன்று தாரம் என்பது சகஜமான விசயம். பல கணவர் அதாவது விவாக ரத்து செய்து மறுபடியும் கணவர் கொள்ளும் முறையும் இயல்பாக உள்ளது. “ஒருவனுக்கு ஒருத்தி” என்பதற்கும் அவர்கள் புது விளக்கம் அளிக்கக் கூடும். அந்நிலையில், தமிழ் பெண்களின் ஐந்து குணங்களை (அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, கற்பு) இங்கு தேடிப் பாத்தாலும் கிடைக்காது. அவற்றை சொன்னால், என்னது என்று கேட்கும் நிலையில் “நவீன கண்ணகிகள்” உள்ளார்கள். பிறகு, எந்த பெண்ணாவது, பதிவிரதை, பதிபக்தி, கணவனே கண்கண்ட தெய்வம் என்றெல்லாம் பேசினால் ஏளனம் தான் செய்வார்கள்.

உரிமை எல்லோருக்கும் தானே இருக்க வேண்டும்? சினிமா நடிகைகளில் எதிர்பார்ப்பது என்பது நடக்குமா என்று தெரியவில்லை. அந்நிலையில், ஒரு நடிகை தனது கணவனுக்கு பாத பூஜை செய்கிறாள் எனும்பொழுது, இவர்களுக்கு பிரச்சினையாகிறது. என்னது, “திராவிட மாடலுக்கு” ஒவ்வாததாக இருக்கிறதே, இதற்கு நல்ல விளம்பரமு கிடைக்கிறதே என்ற கொதிப்பும் ஏற்படுகிறது. ஏலும், தொடர்ந்து இரண்டாம் ஆண்டும் செய்யு பொழுது, படம் போடும் பொழுது, கொதிப்பு கொஞ்சம் அதிகமாகிறது. இத்தகைய கேள்விகளை தங்களது “ரோல் மாடல்களாக,” தலைவர்களாக இருப்பவரைப் பார்த்து கேட்பார்களா அல்லது அவர்களது சமூக ஊடக பதிவுகளில் சென்று ட்ரால் செய்வார்களா? என்ன கடவுள் இல்லை என்று சொல்கிறீரே, உமது மனைவி கோவில்-கோவிலாக சுற்றுகிறாரே என்று கேட்க முடியுமா. கேட்டால் அது அவரது உரிமை, நான் அதில் தலையிட மாட்டேன் என்பாரோ? பிறகு, யாருடைய உரிமையில், யார் நுழைவது, கேள்வி கேட்பது?

© வேதபிரகாஷ்

20-07-2023


[1] தினமலர், கணவருக்கு பாத பூஜை செய்த பிரணிதா, ஜூலை 18, 2023. 12:47.IST.

[2] https://cinema.dinamalar.com/tamil-news/114841/cinema/Kollywood/Pranitha-performed-foot-pooja-for-her-husband.htm

[3] தமிழ்.இந்து,  கணவருக்கு பாத பூஜை: சர்ச்சையில் பிரணிதா, செய்திப்பிரிவு, Published : 19 Jul 2023 05:23 AM; Last Updated : 19 Jul 2023 05:23 AM.

[4] https://www.hindutamil.in/news/cinema/south-cinema/1057900-pranitha-subhash-touches-husband-feet-on-bheemana-amavasya.html

[5] தினத்தந்தி, கணவருக்கு பாத பூஜை செய்துசர்ச்சையில் சிக்கிய நடிகை பிரணிதா, ஜூலை 19, 1:12 pm.

[6] https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/actress-pranita-who-got-involved-in-controversy-after-doing-foot-puja-for-her-husband-1011216

[7] தமிழ்.பிஹைன்ட்.டாக்கீஸ், போன வருஷம் மாதிரி Troll செய்தால்கணவருக்கு பாத பூஜை செய்த புகைப்படத்தை வெளியிட்டு சூர்யா பட நடிகை விளாசல்., By Arun Kumar, ஜூலை 18, 2023.

[8] https://tamil.behindtalkies.com/pranitha-subhash-touches-husbands-feet-on-bheemana-amavasya/

[9] சினி.உலகம், கணவருக்கு பாத பூஜை செய்த சூர்யா படநடிகை! ட்ரோல் பண்ணா கவலையில்லை, Pranitha Subhash, By Parthiban.A, 18-07-2023.

[10] https://cineulagam.com/article/pranitha-pooja-to-husband-foot-1689607191

[11] அப்டேட்.நியூஸ்.360, இப்படியும் ஒரு நடிகையா…? கணவருக்கு பாத பூஜை செய்த பிரணிதாகிண்டலுக்கு பளார் பதில்!, Author: Shree, 17 July 2023, 11:19 pm

[12]  https://www.updatenews360.com/cinema-tv/pranitha-performed-foot-puja-for-her-husband/

[13]  தமிழ்.பிளிம்.பீட்ஸ், கணவர் பாதங்களுக்கு பூஜை பண்ண பிரபல நடிகை.. நீங்க என்ன வேணா ட்ரோல் பண்ணுங்க என கேப்ஷன் வேற!, By Mari S| Updated: Monday, July 17, 2023, 18:20 [IST]

[14] https://tamil.filmibeat.com/news/actress-pranitha-done-patha-pooja-for-her-husband-on-bheemana-amavasya-110861.html

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

பின்னூட்டமொன்றை இடுக