Posts Tagged ‘திருமணமாகி விவாகரத்தில் முடிந்து தனியாக இருக்கும் பெண்’

கணவனுக்கு பாதபூஜை செய்வது கணணகி-தனமா எதிர்-நாத்திகத் தனமா? பெண்ணியமா-பெரியாரிஸமா, திராவிட மாடலா இல்லையா?

ஜூலை20, 2023

கணவனுக்கு பாதபூஜை செய்வது கணணகி-தனமா எதிர்-நாத்திகத் தனமா? பெண்ணியமா-பெரியாரிஸமா, திராவிட மாடலா இல்லையா?

தமிழக நடிகைய பல கணவன்மார், பல தார மண, விவாகரத்து என்றெல்லாம் இருக்கும் பொழுது பெண்ணியம் எங்கிருந்து வருகிறது: கணவன்மார்களை விவாகரத்து செய்வதும், கல்யாணம் செய்து கொள்ளாமலேயே குழந்தை பெற்றுக் கொள்வ்துமாக இருக்கும் நடிகைகளுக்கு மத்தியில்[1], கணவனுக்கு பாதபூஜை செய்து, பரபரப்பு ஏற்படுத்தியிருக்கிறார் நடிகை பிரணிதா[2]. இதெற்கெல்லாம் உதாரணம் சொல்ல தமிழகத்திலேயே பல முன்னணி நடிகைகள் இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாது, ஒன்றிற்கு மேலாக ஐந்து கணவர் வரை மணம் செய்து விவாகரத்து செய்த நவீன பெண்ணுத்துவ வீராங்கனைகளும் இருக்கிறார்கள். பிறக்கும் குழந்தைகள் அப்பா யார் என்றால் என்ன பதில் கொடுப்பார்கள் என்றெல்லாம் அவர்கள் தான் கவலைப் படவேண்டும். ஆனால், கண்ணகி பிற்ந்த மண், நாங்கள் தான் கண்ணகிக்கே சிலை வைத்தே என்றும் தப்பட்டம் அடிப்பார்கள். மனைவி-துணைவி என்று புது தாம்பத்தைய விளக்கத்தையும் உண்டாக்குவார்கள். இப்படியெல்லாம் இருப்பவர்கள், பகுத்தறிவு, பெண்ணியம் என்றெல்லாமும் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. சினிமா-அரசியல் போர்வையில், எத்தனையோ நடிகைகளின் வாழ்க்கைகளும் சீரழிந்துள்ளன, தற்கொலைகளும் நடந்துள்ளன. பிறகு, இவர்கள் எப்படி விமர்சிக்க முடியும்?

17-07-2023 ஆடி அமாவாசை முன்னிட்டு கணவனுக்கு பாத பூஜை செய்தது: இந்து மதத்தை தீவிரமாக பின்பற்றி வரும் நடிகை பிரணிதா அடிக்கடி கோயில்களுக்கு செல்வது, தனது வீட்டில் இந்து பண்டிகைகளை கொண்டாடும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது என டிரெண்டாகி வருகிறார் என்று ஒரு ஊடகம் ஆரமொஇக்கிறது. அப்படியென்றால், சினிமாவில் செக்யூலரிஸம் இல்லையா, எப்பொழுது இவ்வாறு, மதம் பார்த்து விமர்சிக்கும் போக்கு வந்தது? இது செக்யூலரிஸமா, பெரியாரிஸமா, பகுத்தறிவா, எது? . தமிழில் ‘உதயன்’, கார்த்தி நடித்த ‘சகுனி’, சூர்யா நடித்த ‘மாசு என்ற மாசிலாமணி’, ஜெய் நடித்த ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’ உட்பட சில திரைப்படங்களில் நடித்தவர், பிரணிதா சுபாஷ்[3]. இவர் தொழிலதிபர் நிதின் ராஜு என்பவரை திருமணம் செய்து கொண்டார்[4]. இந்த தம்பதிக்கு அர்னா என்ற மகள் இருக்கிறார்[5]. இந்நிலையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பிரணிதா நேற்று முன் தினம் 17-07-2023 தனது கணவருக்கு பாத பூஜை செய்யும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்[6].

பிரணிதா நடிகை புகைப் படத்தை வெளியிட்டது: அதில், ‘ஆடி அமாவாசையை முன்னிட்டு பாத பூஜை செய்கிறேன். இது ஆணாதிக்கத்தின் ஒன்றாக இருக்கலாம். ஆனால் எனக்கு இது முக்கியத்துவம் வாய்ந்தது. சனாதன தர்மத்தில் பெரும்பாலான சடங்குகள் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதற்கு ஒரு கதை இருக்கிறது. இந்து சடங்குகள் ஆணாதிக்கம் கொண்டது என்று வாதிடுவது முற்றிலும் ஆதாரமற்றது. பெண் தெய்வங்களை சமமாக வழிபடும் சில நம்பிக்கைகளில் இதுவும் ஒன்று’ என்று தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு 2022லும் இதே போல கணவருக்குப் பாத பூஜை செய்த புகைப்படத்தை பிரணிதா பதிவு செய்திருந்தார். அப்போது இது ஆணாதிக்கம் கொண்டது என்று பலர் விமர்சித்து இருந்தனர்[7]. அதை இந்தப் பதிவில் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்[8]. கடந்த ஆண்டு தனது கணவருக்கு இவர் பாத பூஜை செய்தபடி போட்டோ வெளியிட்ட நிலையில், ஆணாதிக்கம் என்று ஏகப்பட்ட ட்ரோல்களும் மீம்களும் பறந்த நிலையில், தற்போது அதற்கு பதிலடி கொடுத்திருக்கிறார் நடிகை பிரணிதா[9]. சமூக ஊடகங்களில் வெளிப்படையாக பதிவிட்டுள்ள நிலையில், அவருக்குள்ள உரிமையை அவர் எடுத்துக் காட்டியுள்ளார். அதே நிலையில், அதற்கு பதிலும் கொடுத்துள்ளார். தவிர, இது இரண்டாம் ஆண்டாக செய்துள்ளார். எனவே, இதை ஏதோ புதியது மாதிரி விமர்சனம் செய்வதில் எந்த பிரயோஜனமும் இல்லை.

சமூக வளைதளத்தில் ட்ரோல் செய்தது, திர்மறையாக விமர்சித்தது: அதாவது இந்நிலையில் இதையும் சமூக வலைதளங்களில் பலர் விமர்சித்து சர்ச்சையாக்கி உள்ளனர்[10]. பிரணிதா செயலை பலர் விமர்சித்தும், கேலி செய்தும் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள். இது ஆணாதிக்க செயல் என்றும் கண்டித்துள்ள நிலையில், சிலர் பிரணிதா செயலை பாராட்டி வரவேற்பு தெரிவித்து உள்ளனர்[11]. இதற்கு நிறைய லைக்ஸ் குவிந்து, நடிகையா இப்படியெல்லாம் பண்றாங்க என ஆச்சர்யத்துடன் கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்[12]. நீங்க உங்க கணவருக்கு பாத பூஜை செய்வதெல்லாம் ஓகே தான். ஆனால், உங்களுக்கு மட்டும் பப்ளிசிட்டி வேண்டும் உங்கள் புருஷனுக்கு பப்ளிசிட்டி இருக்கக் கூடாது என அவரது முகத்தைக் கூட காட்டாமல் கிராப் பண்ணிட்டீங்களே ஏன்? என இந்த ஆண்டு வேற விதமாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். எந்த இந்து மதத்தில் பிகினி அணிந்துக் கொண்டு வலம் வரலாம் எனக் கூறுகின்றனர்[13]. நீங்கள் ஏன் குழந்தை பெற்றும் பிகினி போட்டோக்களை பதிவிடுறீங்க என்றும் ட்ரோல் செய்து வருகின்றனர்[14].

தமிழகத்தில் பெண்ணியத்தின் நிலை: தமிழகத்தைப் பொறுத்த வரையில், இத்தகைய முரண்பாட்டை பலவிசயங்களில் கவனிக்கலாம். பெரும்பாலும், நாத்திகம், பெரியாரிஸம், பகுத்தறிவு என்று பேசும், எழுதும், தம்பட்டம் அடிக்கும் திராவிடத்துவ சித்தாந்திகளிடம் அதிகமாகவே காணலாம். ஏனெனில் அவர்களது தலைவர்களே அத்தகைய முரண்பாடுகளைக் கொண்டவர்கள் தான். இரண்டு தாரம், மூன்று தாரம் என்பது சகஜமான விசயம். பல கணவர் அதாவது விவாக ரத்து செய்து மறுபடியும் கணவர் கொள்ளும் முறையும் இயல்பாக உள்ளது. “ஒருவனுக்கு ஒருத்தி” என்பதற்கும் அவர்கள் புது விளக்கம் அளிக்கக் கூடும். அந்நிலையில், தமிழ் பெண்களின் ஐந்து குணங்களை (அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, கற்பு) இங்கு தேடிப் பாத்தாலும் கிடைக்காது. அவற்றை சொன்னால், என்னது என்று கேட்கும் நிலையில் “நவீன கண்ணகிகள்” உள்ளார்கள். பிறகு, எந்த பெண்ணாவது, பதிவிரதை, பதிபக்தி, கணவனே கண்கண்ட தெய்வம் என்றெல்லாம் பேசினால் ஏளனம் தான் செய்வார்கள்.

உரிமை எல்லோருக்கும் தானே இருக்க வேண்டும்? சினிமா நடிகைகளில் எதிர்பார்ப்பது என்பது நடக்குமா என்று தெரியவில்லை. அந்நிலையில், ஒரு நடிகை தனது கணவனுக்கு பாத பூஜை செய்கிறாள் எனும்பொழுது, இவர்களுக்கு பிரச்சினையாகிறது. என்னது, “திராவிட மாடலுக்கு” ஒவ்வாததாக இருக்கிறதே, இதற்கு நல்ல விளம்பரமு கிடைக்கிறதே என்ற கொதிப்பும் ஏற்படுகிறது. ஏலும், தொடர்ந்து இரண்டாம் ஆண்டும் செய்யு பொழுது, படம் போடும் பொழுது, கொதிப்பு கொஞ்சம் அதிகமாகிறது. இத்தகைய கேள்விகளை தங்களது “ரோல் மாடல்களாக,” தலைவர்களாக இருப்பவரைப் பார்த்து கேட்பார்களா அல்லது அவர்களது சமூக ஊடக பதிவுகளில் சென்று ட்ரால் செய்வார்களா? என்ன கடவுள் இல்லை என்று சொல்கிறீரே, உமது மனைவி கோவில்-கோவிலாக சுற்றுகிறாரே என்று கேட்க முடியுமா. கேட்டால் அது அவரது உரிமை, நான் அதில் தலையிட மாட்டேன் என்பாரோ? பிறகு, யாருடைய உரிமையில், யார் நுழைவது, கேள்வி கேட்பது?

© வேதபிரகாஷ்

20-07-2023


[1] தினமலர், கணவருக்கு பாத பூஜை செய்த பிரணிதா, ஜூலை 18, 2023. 12:47.IST.

[2] https://cinema.dinamalar.com/tamil-news/114841/cinema/Kollywood/Pranitha-performed-foot-pooja-for-her-husband.htm

[3] தமிழ்.இந்து,  கணவருக்கு பாத பூஜை: சர்ச்சையில் பிரணிதா, செய்திப்பிரிவு, Published : 19 Jul 2023 05:23 AM; Last Updated : 19 Jul 2023 05:23 AM.

[4] https://www.hindutamil.in/news/cinema/south-cinema/1057900-pranitha-subhash-touches-husband-feet-on-bheemana-amavasya.html

[5] தினத்தந்தி, கணவருக்கு பாத பூஜை செய்துசர்ச்சையில் சிக்கிய நடிகை பிரணிதா, ஜூலை 19, 1:12 pm.

[6] https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/actress-pranita-who-got-involved-in-controversy-after-doing-foot-puja-for-her-husband-1011216

[7] தமிழ்.பிஹைன்ட்.டாக்கீஸ், போன வருஷம் மாதிரி Troll செய்தால்கணவருக்கு பாத பூஜை செய்த புகைப்படத்தை வெளியிட்டு சூர்யா பட நடிகை விளாசல்., By Arun Kumar, ஜூலை 18, 2023.

[8] https://tamil.behindtalkies.com/pranitha-subhash-touches-husbands-feet-on-bheemana-amavasya/

[9] சினி.உலகம், கணவருக்கு பாத பூஜை செய்த சூர்யா படநடிகை! ட்ரோல் பண்ணா கவலையில்லை, Pranitha Subhash, By Parthiban.A, 18-07-2023.

[10] https://cineulagam.com/article/pranitha-pooja-to-husband-foot-1689607191

[11] அப்டேட்.நியூஸ்.360, இப்படியும் ஒரு நடிகையா…? கணவருக்கு பாத பூஜை செய்த பிரணிதாகிண்டலுக்கு பளார் பதில்!, Author: Shree, 17 July 2023, 11:19 pm

[12]  https://www.updatenews360.com/cinema-tv/pranitha-performed-foot-puja-for-her-husband/

[13]  தமிழ்.பிளிம்.பீட்ஸ், கணவர் பாதங்களுக்கு பூஜை பண்ண பிரபல நடிகை.. நீங்க என்ன வேணா ட்ரோல் பண்ணுங்க என கேப்ஷன் வேற!, By Mari S| Updated: Monday, July 17, 2023, 18:20 [IST]

[14] https://tamil.filmibeat.com/news/actress-pranitha-done-patha-pooja-for-her-husband-on-bheemana-amavasya-110861.html

குடும்ப விபசாரம் போன்ற மிகக்கொடூர சமூக சீரழிவுகளைத் தடுத்தாக வேண்டும், குடும்பங்கள், பெண்கள் காக்கப் படவேண்டும்.

ஜூன்23, 2023

குடும்ப விபசாரம் போன்ற மிகக்கொடூர சமூக சீரழிவுகளைத் தடுத்தாக வேண்டும், குடும்பங்கள், பெண்கள் காக்கப் பட வேண்டும்.

குடும்பங்கள் கட்டுப்பாடுகளை மீறுவது ஏன்?: சமூகத்தில் ஒழுக்கம், கட்டுப்பாடு, பெரியவர் சொன்னதை கேட்காமல் இருப்பது போன்ற நிலைகளில் குடும்பங்கள் சிதறுகின்றன. குடும்பத் தலைவரின் கட்டுப்பாட்டிலிருந்து விலகும் குடும்ப அங்கத்தினர் மற்றவர்களுக்கு தவறான முன்னுதாரணமாகிறார். இதனால், ஆண்கள் உறவுகளை மீறினால், பிரச்சினைகள் குறைவாக இருக்கலாம், அனால், பெண்கள் முயலும் போது, தீராத பழி, பெற்றோர், உற்றோர், மற்றோர் அதிகமாக பாதிக்கும் நிலை உண்டாகிறது. பெண்களை கவனிக்காமல் வளர்க்கும் அல்லது வளர்க்கப் படும் பெண்களும் தங்கள் இச்சைக்கு ஏற்றப் படி செயல்படும் சந்தர்ப்பங்களும் ஏற்படுகின்றன. இப்பொழுது பணம் தான் பிராதானம் என்ற நிலை உருவானப் பிறகு, பணத்தை சம்பாதிக்க வேண்டும், எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் போன்ற வெறி வரும் பொழுது, நியாயம், தர்மம் போன்றவையும் மறக்கப் படுகின்றன. தமிழகத்தில் கடந்த 70 ஆண்டுகளில் தொடர்ச்சியாக நிகழ்வுகளை கவனித்து வந்தால் எவ்வாறு தனிதனிபர் ஒழுக்கம், குடும்பக் கட்டுப்பாடு, சமூக நெறிமுறை முதலியவை பின்பற்றாமல் சீரழிகின்றன என்பதையும் கவனிக்கலாம்.

பாலியல் குற்றங்கள் அதிகமாவது: நாளுக்கு நாள் பாலியல் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. சினிமாவின் சீரழிக்கும் போக்கைக் கண்டுகொள்ளாமல் இருப்பது வேடிக்கையாக இருக்கிறது. இன்றைக்கு, சினிமா தொழில் தான் விபசாரத்தை அதிக அளவில் ஊக்குவிக்கிறது, உருவாக்கி வருகிறது எனலாம். இதைப் பற்றி சமூக ஆராய்ச்சியாளர்கள் சரிவர கண்டுகொள்வதில்லை. குறிப்பாகச் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதிலும் கிருத்துவ-இஸ்லாமிய குற்றங்கள் மறைக்கப் படுகின்றன. இதுவும் செக்யூலரிஸ ரீதியில் தான் நடந்து வருகின்றன. செய்திகள் வெளி வந்தாலும், பிறகு என்னவாயிற்று என்று சொல்லப் படுவதில்லை. கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. அந்தவகையில் தற்போது தீவிர கண்காணிப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் பாலியல் தொழில்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க பாலியல் தொழில் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.

குடும்ப விபசாரம் என்று புதிய பிபசாரம்: சென்னை நகரில் ‘குடும்ப விபசாரம்’ என்ற கலாசாரம் மீண்டும் தலை தூக்கி உள்ளது[1]. ரூ.5 ஆயிரம் கொடுத்தால் ஒரு நாள் முழுக்க வீட்டில் தங்கி காலை டிபன், மதியம் பிரியாணி விருந்துடன் வாடிக்கையாளர்களை உல்லாசப்படுத்தி இன்ப வெள்ளத்தில் மிதக்க வைப்பதுதான் ‘குடும்ப விபசாரம்’ ஆகும் என்று தினத்தந்தி[2] விளக்கமும் கொடுக்கிறது. சென்னையில் மீண்டும் ‘குடும்ப விபசாரம்’ தலை தூக்கியது[3]. அப்படியென்றால், இது ஏதோ ஏற்கெனவே இருந்தது போலவும், இப்பொழுது, திடீரென்று நடப்பது போலவும் தெரிகிறது. ரூ.5 ஆயிரம் கொடுத்தால் விருந்து, உல்லாசத்துடன் நாள் முழுவதும் உபசரிப்பார்கள், என்று ஒரு வரியில் முடிக்கிறது. பிறகு, இதற்கும் வாடிக்கையாளர்கள் இருக்கத் தானே செய்வர். இந்த விபசார கும்பலை சேர்ந்த 3 பெண்கள் மீட்கப்பட்டனர்[4]. குடும்ப பெண்களாக இருக்கும் சிலர் இதுபோன்ற விபசாரத்தில் ஈடுபடுவது வழக்கம்[5]. இவர்கள் குடும்பம் வெளிமாநிலங்களில் இருக்கும். இவர்கள் சென்னைக்கு வேலை தேடி வருவது போன்று வந்து விபசார தொழிலை ஓசையில்லாமல் செய்வார்கள்[6]. கை நிறைய பணத்தை சம்பாதித்துக் கொண்டு மீண்டும் சொந்த ஊருக்கு செல்வார்கள். அதாவது, இதையே தொழிலாக வைத்துக் கொண்டுள்ளார்கள் என்றும் தெரிகிறது.

தொடர்ந்து தொடர்ச்சியாக செய்து வரும் முறை: போலீசில் பிடிப்பட்டாலும் சம்பாதித்த பணத்தை குடும்பத்துக்கு அனுப்பி வைத்துவிட்டு அரசு காப்பகத்தில் தங்கி இருப்பார்கள். இதில் பல கேள்விகள் எழுகின்றன. அதாவது, நீதிமன்றத்திற்குச் சென்று, ஏதாவது தண்டனை என்று கொடுக்கும் பட்சத்தில் இவ்வாறு செய்யப் படுகிறதா அல்லது போலீசாறே நேராக அவ்வாறு செய்கிறார்களா என்று தெரியவில்லை. பின்னர் கோர்ட்டு மூலம் விடுதலை பெற்று சொந்த ஊர்களுக்கு போவார்கள். இதிலும் புதிர்கள் பலவுள்ளன. அப்பெண்களுக்கு வாதிடும் வக்கீல்கள் யார், எவ்வாறு அவர்கள் விடுதலை பெறுகின்றனர் என்பதும் புரியவில்லை. ஒரு மாதம் கழித்து மீண்டும் வேலைக்கு வருவது போல் வந்து சென்னையில் மறுபடியும் தொழிலை தொடங்குவார்கள். பிறகு செய்த குற்றத்தையே திரும்ப செய்வது போலாகிறது. சென்னை வளசரவாக்கம் மற்றும் மடிப்பாக்கம் பகுதிகளில் இதுபோன்ற குடும்ப விபசார தொழில் நடப்பதாக விபசார தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் வளசரவாக்கம் அம்பேத்கர் சாலையில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தினார்கள். அங்கு விபசாரத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் மீட்கப்பட்டனர். தலைமறைவான மற்றொருவரை தேடி வருகின்றனர்.

புரோக்கர்கள் எல்லாம் இருப்பது, இது ஒரு திட்டமிட்டு செய்யப் படும் வேலை என்றாகிறது: அவர்களை இந்த தொழிலில் தள்ளிய ரவி (வயது 54) என்ற தரகர் கைது செய்யப்பட்டார். இதேபோன்று மடிப்பாக்கம் ராமலிங்க நகர் பகுதியில் உள்ள வீட்டில் சோதனை நடத்தி பெண் ஒருவரை மீட்டனர். பிரசாந்த் (30) என்ற தரகர் கைது செய்யப்பட்டார். மீட்கப்பட்ட பெண்களில் ஒருவர் திரிபுரா மாநிலத்தை சேர்ந்தவர். கடந்த மே மாதத்தில் இருந்து இவர்கள் வீடுகளை வாடகைக்கு எடுத்து ‘குடும்ப விபசார’த்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. மீட்கப்பட்ட 3 பெண்களும் அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். கைதான  ஆமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ரவி (54), பிரசாந்த் (30) ஆகியோர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்[7]. இவர்கள் புரோக்கர்களாக செயல்பட்டு வருவதும் தெரிகிறது[8]. தொடர்ந்து அதிகரித்து வரும் பாலியல் தொழில்களுக்கு எதிராக காவல்துறை எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவிக்கின்றனர்.

தொடர்ந்து நடக்கும் சமூக சீரழிவைத் தடுத்தாக வேண்டும்: அப்படி எல்லாமே சொல்லி வைத்தது போல சக்கரம் சுழல்வது போல, இந்நிகழ்வுகள் திரும்ப-திரும்ப நடப்பது அசாதாரணமாக உள்ளது. மற்ற தொழில்கள் போல இதுவும் திட்டப்படி, முறையாக, செயல்பட்டு வருகிறது என்றாகிறது. இதில் வக்கீல்கள், புரோக்கர்கள், வீட்டு சொந்தக்காரர்கள் அல்லது வாடகைக்கு விடுபவர், போலீஸார், வாடிக்கையாளர்கள் என்று எல்லோருக்கும் ஏதோ ஒரு வழியில், இது நடப்பது தெரிந்துள்ளது. செய்வது, கைதாவது, பிறகு சட்டப் படி அல்லது ஏதோ ஒரு நுணுக்கத்தில் வெளியே வருவது எல்லாம் யாரும் ஓசியில் செய்ய் மாட்டார்கள். அப்படியென்றால் அவர்களுக்கும் உரிய காசு கிடைக்கிறது. இத்தகைய விபசாரிகளுக்கு ஆஜராகும் வாதிடும் வக்கீல்களும் இருக்கிறார்கள் என்று தெரிகிரது. ஆமாம், அதுவும் அவர்கள் தொழில் தான்! யாராக இருந்தாலும், வாங்கிய காசுக்காக அவர்கள் ஆஜராக வேண்டியது தான்! பிறகு, இதில் எதுவோ இடிக்கிறதே? அப்பெண்களின் நிலைமையைப் பற்றி யாரும் கவலைப் படுவதில்லையே. நுகர்வோர் பண்டங்கள் போல அவர்களைச் சுற்றியுள்ளவர்கள் ஏதோ ஒரு வழியில் உபயோகப் படுத்திக் கொண்டு தூக்கியெறிந்து விடுகின்றனர். சமூகம் அவர்களை விபசாரிகள் என்றாலும், வேறு வழியில் ஆதரிக்கின்றது.

  1. குடும்ப விபசாரம் என்று செய்தி வருகிறது, அந்த அபசாரத்திற்கு ஒரு வரையறை, விளக்கமும், வியாக்யானமும் கொடுக்கப் படுகிறது.
  2. ரூ.5000 கொடுத்தால் ஒரு நாள் முழுக்க வீட்டில் தங்கி காலை டிபன், மதியம் பிரியாணி விருந்துடன் வாடிக்கையாளர்களுக்கு உல்லாசம் கிடைக்கும்!
  3. இவ்வாறு வாடிக்கையாளர்களை உல்லாசப்படுத்தி இன்ப வெள்ளத்தில் மிதக்க வைப்பதுதான் ‘குடும்ப விபசாரம்’ ஆகும் – தினத்தந்தி.
  4. குடும்பம் வெளிமாநிலங்களில் இருக்கும். சென்னைக்கு வேலை தேடி வருவது போன்று வந்து விபசார தொழிலை ஓசையில்லாமல் செய்வார்கள்.
  5. கை நிறைய பணத்தை சம்பாதித்துக் கொண்டு சொந்த ஊருக்கு செல்வார்கள். ஒரு மாதம் கழித்து மீண்டும் வந்து மறுபடியும் தொழிலை தொடங்குவார்கள்
  6. போலீசில் பிடிப்பட்டாலும் சம்பாதித்த பணத்தை குடும்பத்துக்கு அனுப்பி வைத்துவிட்டு அரசு காப்பகத்தில் தங்கி இருப்பார்கள்.
  7. பின்னர் கோர்ட்டு மூலம் விடுதலை பெற்று சொந்த ஊர்களுக்கு போவார்கள்.. இப்படியாக இவ்வேலை சுழற்சியாக நடைபெற்று வருகிறது!
  8. இதில் பல புதிர்களும், கேள்விகளும் எழுகின்றன. எப்படி, ஏன், எவ்வாறு இதில் சம்பந்தப் பட்டவர்கள் வேலை செய்து வருகிறார்கள்?
  9. ஒற்றுமையாக சொல்லி வைத்தால் போல சம்பந்தப் பட்டவர்கள் இச்சுழற்சியை வெட்டெறியாமல் தொடர்ந்து நடத்த விடுகின்றனர்?
  10. தாய்மை, பெண்மை, குடும்பம், ஒழுக்கம், கற்பு,..…முதலியவற்றைப் போற்றுவோர் ஏன் அமைதியாக இருக்கின்றனர்? இச்சமூக ஊனத்தை என்னென்பது?

© வேதபிரகாஷ்

23-06-2023


[1] தினத்தந்தி, ரூ.5 ஆயிரம் கொடுத்தால் விருந்துடன் உல்லாச உபசரிப்பு சென்னையில் மீண்டும்குடும்ப விபசாரம், தினத்தந்தி Jun 23, 3:49 pm

[2] https://www.dailythanthi.com/News/State/if-you-pay-rs-5000-you-will-be-treated-with-a-party-and-family-prostitution-again-in-chennai-992672

[3] தமிழ்.ஹிந்துஸ்தான்டைம்ஸ், Chennai: 5000 ரூபாய் கொடுத்தால் போதும்;காலை டிபன்; மதியம் பிரியாணி; நாள் முழுக்க பெண் உல்லாசம்; சென்னையில் 5 பேர் கைது!, Kalyani Pandiyan S, Jun 23, 2023, 09:47 AM IST

[4] https://tamil.hindustantimes.com/amp/entertainment/3-women-involved-in-domestic-prostitution-business-in-chennai-have-been-arrested-131687492971595.html

[5] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், சென்னையில் மஜாவாக நடந்த விபச்சாரம்.. அரைகுறை ஆடைகளுடன் சிக்கிய பெண்கள், First Published Jun 23, 2023, 11:55 AM IST

[6] https://tamil.asianetnews.com/gallery/crime/prostitution-that-took-place-in-chennai-women-caught-half-dressed-rwp0ic

[7] தினமலர், பாலியல் தொழில் புரோக்கர் இருவர் கைது, பதிவு செய்த நாள்: ஜூன் 23,2023 00:29.; https://m.dinamalar.com/detail.php?id=3355385

[8] https://m.dinamalar.com/detail.php?id=3355385

தமிழகத்தில் திருமணப் பதிவு சட்டம் கட்டாயமாக்கப்பட்ட நிலை, போலி திருமணங்கள் அதிகமாக நடப்பது, பின்னணி என்ன? அவை பதிவான திருமணங்களா – இல்லையா? (2)

செப்ரெம்பர்29, 2022

தமிழகத்தில் திருமணப்பதிவு சட்டம் கட்டாயமாக்கப்பட்ட நிலை, போலி திருமணங்கள் அதிகமாக நடப்பது, பின்னணி என்ன? அவை பதிவான திருமணங்களா – இல்லையா? (2)

ஒரு ஆண் பல திருமணங்கள் செய்தது: சென்னையில் பெண் மருத்துவ அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவண்ணாமலையைச் சேர்ந்த வித்யூத் என்ற சக்கரவர்த்தியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்[1]. பெண் கொடுத்த புகாரில், திருமண தகவல் இணையதளம் மூலமாக அறிமுகமாகி பழகியதாகவும், வாஷிங்டனில் மருத்துவராக இருப்பதாகக் கூறி மோசடி செய்ததாக, திருவண்ணாமலையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்யப் போவதாகவும் அதற்காக பண உதவி வேண்டும் எனக் கேட்டு சுமார் 7 கோடி ரூபாய் அளவிற்கு பணத்தை ஏமாற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது[2]. பாதிக்கப்பட்ட பெண்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றையும் தொடர்ந்திருந்தனர்[3]. உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் தனிப்படை அமைத்து சக்கரவர்த்தியை போலீசார் தேடி வந்தநிலையில், லால்குடியில் வைத்து கைது செய்தனர்[4]. தமிழகம் முழுவதும் 9-க்கும் மேற்பட்ட பெண்களை திருமண தகவல் இணையதளம் மூலமாக ஏமாற்றி சுமார் 9 கோடி ரூபாய் அளவில் மோசடி செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது. மேலும்  திருமணமாகாத மருத்துவம், பொறியியல் பட்டதாரி பெண்களையும் பணக்கார விதவை பெண்களையும் குறிவைத்து பண மோசடி செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

கோடீஸ்வரர் போல நடித்து 9 பெண்களை ஏமாற்றிய நபர் கைது: கோவையில் 9 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து, அவர்களிடமிருந்து பண மோசடி செய்த பலே நபர் கைது செய்யப்பட்டார்[5]. இவருக்கு உடந்தையாக இருந்த திருமண தகவல் மையத்தை சேர்ந்த இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்[6]. திருமண தகவல் மையம் உதவியோடு நடைபெற்ற இந்த மோசடி கோவை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதிய நடைமுறைகளையும் பயன்படுத்தி இவ்வாறு ஏமாற்று வேலைகள் நடப்பது இதனால் அம்பலமாகியுள்ளது. கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்தவர் புருஷோத்தமன். தன்னை தொழிலதிபர் என கூறி ஒருவருக்கு தெரியாமல் மற்றொருவர் என சுமார் 9 பெண்களை மணந்து அவர்களிடம் இருந்து பணம் பறித்து பிறகு எஸ்கேப் ஆகியுள்ளார்.  கோவையில் உள்ள திருமண தகவல் மையத்தில்தான் இவர் தனது பெயரை பதிவு செய்திருந்தார். அதன் வழியாகவே பெண் தேடி வந்துள்ளார். இதேபோலத்தான், கோவை பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த வசதி வாய்ப்புள்ள ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார் புருஷோத்தமன். பல தொழில்கள் இருப்பதாக ஏமாற்றியதன் விளைவாக அந்த பெண்ணை அவரது பெற்றோர் இவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். ஆனால் திருமணமாகி சில மாதங்களில், தொழிலில் நஷ்டம் என்று கூறி 3 கோடி ருபாயை மாமனார் வீட்டிலிருந்து பெற்ற புருஷோத்தமன் பிறகு தலைமறைவாகிவிட்டாராம்.

ஓரு பெண் பல திருமணங்கள் செய்தது  கோர்ட்டுக்குச் சென்ற மோசடி திருமண வழக்கு: ஹைகோர்ட்டை நாடிய பெண் பாதிக்கப்பட்ட அந்த பெண், புருஷோத்தமன் மீதும் திருமண தகவல் மையத்தை சேர்ந்த இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் கோவை போத்தனூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த ஹைகோர்ட் உத்தரவிட்டது. சிக்கினர் புருஷோத்தமன் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. திருமண தகவல் மையம் மீது கூட்டுசதி வழக்கு பதிவு செய்யப்பட்டது. மொத்தம் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கோவை, ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு வழக்கு மாற்றப்பட்ட நிலையில், புருஷோத்தமன் மற்றும் திருமண தகவல் மையத்தை சேர்ந்த கணவன் மற்றும் மனைவி ஆகிய மூவரையும் போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.

ஆறு திருமணங்கள் செய்து வைத்த திருமண புரோகர்[7]: ஏற்கெனவே கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சௌமியா என்கிற சபரி, மூன்று ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்துவிட்டு, நான்காவதாக ஓர் ஆட்டோ டிரைவரைத் திருமணம் செய்ய முயன்றபோது கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரால் கைதுசெய்யப்பட்டார். அந்தப் பரபர சம்பவத்தின் சூடு தணிவதற்குள், அதே பாணியில் பலரைத் திருமணம் செய்து, அவர்களிடம் பணம் பறித்த சந்தியா என்ற பெண் ஒருவர் கைதுசெய்யப் பட்டிருக்கிறார்[8]. சந்தியா தனபாலை கல்யாணம் செய்து கொண்டார்[9]. திருமணத்தை முடித்துவிட்டு சந்தியாவுடன் வந்தவர்கள், பெண் புரோக்கர் பாலமுருகன் ஆகியோர் திருமண கமிஷன் தொகையாக ரூ.1,50,000-ஐ வாங்கிக்கொண்டு சென்றுவிட்டனர்[10].  ஆனால், முதல் இரவிலேயே அப்பெண் மாயமாகி விட்டாள். இன்னொரு திருமணத்திற்கு தயாரானாள், விசயம் அறிந்த, அந்த நபர் மூலமாக திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவிக்க வைத்து, மதுரையைச் சேர்ந்த பெண் புரோக்கர் தனலட்சுமியிடம் (45) பேசி, மணமகனின் போட்டோவை புரோக்கரிடம் கொடுத்திருக்கின்றனர்[11]. அதற்கு மணமகளுக்கு மாப்பிள்ளையைப் பிடித்திருக்கிறது எனப் பேசி, போன் மூலமே முடிவு செய்திருக்கிறார் அந்தப் பெண் புரோக்கர். விசாரணையில், மதுரையைச் சேர்ந்த இவர்கள் இதுவரை சந்தியாவுக்கு ஆறு திருமணம் செய்துவைத்திருக்கின்றனர்[12].

போலி கல்யாணமா, புதுவித விபச்சாரமா, செக்ஸ் ரீதியிலான கொள்ளையா?: கைதான சந்தியா போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது[13]:- எனக்கு 5 வயதில் ஒரு மகளும், 4 வயதில் ஒரு மகனும் உள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த திருமண புரோக்கர் பாலமுருகன்தான் என்னை அடித்து மிரட்டி திருமணம் செய்து வைக்க அழைத்து வந்தார்[14]. 6-க்கும் மேற்பட்ட திருமணம் செய்துள்ளேன். திருமணம் முடிந்ததும் என்னை அங்கிருந்து தப்பித்து வருமாறு கூறி காரில் அழைத்து வந்துவிடுவார்[15]. பின்னர் கொண்டு வந்த பொருட்களை பிடுங்கி கொண்டு சிறிய‌ தொகையை மட்டும் தருவார். பின்னர் அதையும் மிரட்டி வாங்கி கொள்வார்[16]. அவரது கூட்டாளிகளான ரோஷினி, மாரிமுத்து ஆகியோர் என்னை நிர்வாணப்படுத்தி போட்டோ, ஆபாச வீடியோக்களை எடுத்து வைத்து கொண்டு மோசடி திருமணங்களுக்கு சம்மதிக்காவிட்டால், அவற்றை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என மிரட்டினர்[17]. அதனால்தான் நான் இந்த மோசடி திருமணங்களுக்கு சம்மதித்தேன். என்னை போல, மேலும் 4 பெண்கள் இவர்களிடம் சிக்கி உள்ளனர். மோசடி திருமணத்தில் எவ்வளவு பணம் கிடைத்தாலும் அந்த பணம் முழுவதையும், அவர்களே எடுத்து கொள்வார்கள். எங்களுக்கு கொஞ்சம் பணம் மட்டுமே தருவார்கள்.

ஏமாற்ற, கொள்ளையடிக்க பின்பற்றப் பட்டு வரும் செயல்முறை: மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் ஏதாவது ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தருவார்கள். என்னுடைய அக்காள், மாமாவாக ரோஷினி, மாரிமுத்து 2 பேரும் நடிப்பார்கள். ஒரு கல்யாணம் பேசி முடிப்பதற்கு முன்பே அக்காள், மாமாவாக நடிக்க, என்னுடைய வீட்டிற்கு வந்துவிடுவார்கள். பெண் பார்க்க திருமண ஆசையில் வரும் இளைஞர்களிடம் நான் நெருங்கி பழக வேண்டும். அப்படி பேசும்போது செல்போன், பட்டுசேலை, பணம், நகை என ஆசையாக கேட்டு, சாமர்த்தியமாக அவர்களிடம் வாங்கி கொள்ள வேண்டும். திருமணம் முடிந்ததும், இந்த வீட்டை காலி செய்து விட வேண்டும். முதல் இரவு முடிந்ததுமே தப்பி செல்வதற்கான வாய்ப்பு கிடைத்தால், கிளம்பி விட வேண்டும். ஒருவேளை மாப்பிள்ளையை அறையில் விட்டுவிட்டு அங்கிருந்து கிளம்ப முடியாத சூழல் ஏற்பட்டால், பாலில் தூக்க மாத்திரை கொடுத்து விட்டு, பொருட்களை வாரி சுருட்டிக்கொண்டு கிளம்ப வேண்டும். இதுவரை ஏமாந்த மாப்பிள்ளை வீட்டார் அவமானங்களுக்கு பயந்து பெரும்பாலும் புகார் கொடுக்கவில்லை. இதை புரோக்கர்கள் சாதகமாக பயன்படுத்தி கொண்டனர். நாமக்கல், கரூர், திருப்பூர், காங்கேயம் பகுதிகளில் நாங்கள் திருமண மோசடிகளை செய்துள்ளோம். இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

இப்பிரச்சினைகளில், விவகாரங்களில், வழக்குகளில் எழும் விசயங்கள்:

  1. தமிழகத்தில் திருமணப்பதிவு சட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது 2009ஆம் வருடம் நவம்பர் மாதம் 24ஆம் தேதி கொண்டு வரப்பட் டது.
  • திராவிடத்துவ அரசு இந்து திருமண சட்டம் இருந்தாலும், இந்த சட்டம் உருவாக்கப் பட்டு, தமிழக இந்துக்களைக் கட்டுக்குள் கொண்டு வந்தது.
  • சார்பதிவாளர்களை திருமணப் பதிவாளர்களாகவும் நியமிக்கப்பட்டு, திமணம் ஆன தம்பதியர் அங்கு செல்ல வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது.
  • ஆனால், இந்துத்துவவாதிகள் வழக்கம் போல, ஈவேரா, பெரியார், அண்ணா, தம்பி என்று அவர்களது தாம்பத்தியத்தைப் பற்றி ஆராய்ச்சியை ஆரம்பித்துள்ளனர்!
  • திராவிடத்துவத்தில், சுயமரியாதை திருமணத்தில் அதெல்லாம் சகஜமாக இருந்தது. பிறகு, அது சட்டப் படி செல்லாது என்றாகியது!
  • அப்பொழுது தான், இந்து திருமண சட்டததில் அந்த சுயமரியாதை திருமண ஐக்கியம் ஆகி, சட்டப் படி மரியாதைப் பெற்றது.
  • அதுவரை, ஈவேரா பாடை, பெரியாரிச பாசை, ராசாவின் பாஷையாகத் தான் இருந்தது. எந்த மனுவும், சோழனும் கண்டுகொள்ளவில்லை.
  • இப்பொழுது, தாலுகா ஆபிசுக்குச் சென்றவுடன், ஆன்-லைன் பதிவு இருந்தாலும், ஆப்-லைனில் தரகர்களின் கொண்டாட்டம் உள்ளது!
  • வழக்கறிஞர்கள் இன்றைக்கு, திருமணப் பதிவில் இறங்கி நன்றாக சம்பாதிக்க ஆரம்பித்துள்ளனர். அவர்களைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை.
  1. தினமும், குறிப்பிட்டப் பகுதிகளில் திருமணங்கள் நடக்கின்றன, என்பதனை வைத்துக் கொண்டு, அது வியாபாரமயமாக்கப் பட்டு விட்டது.

 © வேதபிரகாஷ்

29-09-2022


[1] NEWS18, திருமண தகவல் இணையதளம் மூலம் பல பெண்களை ஏமாற்றிய மோசடி மன்னன் கைது!, LAST UPDATED : JUNE 22, 2019, 10:45 IST

[2] https://tamil.news18.com/news/tamil-nadu/man-arrested-for-defrauding-women-through-marriage-information-website-in-chennai-vaij-171055.html

[3] தமிழ்.இந்து, பெண் மருத்துவரிடம் ரூ.7 கோடி மோசடி செய்தவர் கைது, செய்திப்பிரிவு, Published : 22 Jun 2019 07:52 AM; Last Updated : 22 Jun 2019 07:52 AM

[4] https://www.hindutamil.in/news/tamilnadu/172084-7.html

[5] தமிழ்.ஒன்.இந்தியா, திருமண தகவல் மையம் உடந்தை.. கோடீஸ்வரர் போல நடித்து 9 பெண்களை திருமணம் செய்த கோவை நபர் கைது!, By Veera Kumar Updated: Monday, January 8, 2018, 14:22 [IST]

[6] https://tamil.oneindia.com/news/tamilnadu/man-arrested-coimbatore-cheating-9-women-getting-money-from/articlecontent-pf287243-307803.html

[7] பாலிமர் செய்தி, 7வதாக திருமணம் செய்யவிருந்த மோசடி, பெண், தரகர் உள்ளிட்ட 4 பேருடன் கைது, செப்டம்பர் 23, 2022, 01:57:33 PM.

[8] https://www.polimernews.com/dnews/188110

[9] விகடன், 6-வது திருமணம் ஓவர்… 7-வது திருமணத்துக்கு ரெடி!- சந்தியா போலீஸில் சிக்கியது எப்படி?, துரை.வேம்பையன், Published:24 Sep 2022 10 AM; Updated: 24 Sep 2022 10 AM

[10] https://www.vikatan.com/news/tamilnadu/police-arrested-a-woman-who-defrauded-6-men-in-the-name-of-marriage-and-getting-ready-for-7th-marriage

[11] தினத்தந்தி, திருமணம் செய்து பண மோசடியில் ஈடுபட்ட மனைவி, உறவினர்கள் மீது நடவடிக்கை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தொழிலாளி மனு, ஏப்ரல் 21, 2:25 am (Updated: ஏப்ரல் 21, 2:25 am).

[12] https://www.dailythanthi.com/News/Districts/2021/04/21022506/panam.vpf

[13] தினத்தந்தி, மோசடி திருமணங்களுக்கு சம்மதிக்காவிட்டால் எனது ஆபாச வீடியோக்களை வெளியிடுவேன் என மிரட்டினர் கைதானகல்யாண ராணிபரபரப்பு வாக்குமூலம், Sep 27, 12:15 am (Updated: Sep 27, 12:16 am)

[14] https://www.dailythanthi.com/News/State/raani-801720

[15] தினமலர், 8வது திருமணத்துக்கு தயாரானகல்யாண அழகிசந்தியா, Added : செப் 25, 2022  04:05

https://www.dinamalar.com/news_detail.asp?id=3130710

[16] காமதேனு, 6 பேருடன் கல்யாணம்; இரவோடு இரவாக நகையுடன் எஸ்கேப்: 7-வது நபரை திருமணம் செய்ய முயன்ற மனைவியை பிடித்த கணவர், Updated on : 23 Sep, 2022, 10:19 am

[17] https://kamadenu.hindutamil.in/national/the-young-woman-who-cheated-and-married-six-men-and-her-immediate-family-were-arrested

பலதார போலீஸிடம் சிக்கும் பெண்கள்: விந்தையிலும் விந்தைதான்!

ஜூன்1, 2010

பலதார போலீஸிடம் சிக்கும் பெண்கள்: விந்தையிலும் விந்தைதான்!

போலீஸ் ஏட்டு கணவர் மீது பெண் போலீஸ் ஏட்டு புகார்

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=10069

பட்டுக்கோட்டை : போலீஸ் ஏட்டு கணவர் மீது, மூன்றாவது மனைவியான போலீஸ் பெண் ஏட்டு நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு வழங்கியதுடன், பட்டுக்கோட்டை மகளிர் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் கிரேடு ஒன் ஏட்டாக பணி புரிபவர் இளங்கோவன் (39). இவர் மன்னார்குடி அந்தோணியார் கோவில் தெருவைச் சேர்ந்தவர். இவர் ஏற்கனவே பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் வேலை செய்யும் மஞ்சுளா (39) என்ற நர்சை திருமணம் செய்து அவருக்கு வஸ்திகரோலின் (6) என்ற பெண் குழந்தை உள்ளது. வக்கீல் முன்னிலையில் எழுதி வாங்கிக் கொண்டு அவரை விவாகரத்து செய்து விட்டார். பின், திருவாருர் மாவட்டம் வேல்குடியைச் சேர்ந்த சுதா (25) என்ற பெண்ணை இளங்கோவன் திருமணம் செய்தார். அவருக்கும் கார்த்திகா (4) என்ற பெண் குழந்தை உள்ளது. தற்போது அவரிடம் விவாகரத்து கேட்டு தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது.

திருமணமாகி விவாகரத்தில் முடிந்து தனியாக இருக்கும் பெண்: இதற்கிடையில், சுதாவை திருமணம் செய்ததை மறைத்து தன்னோடு போலீஸ் பயிற்சியின் போது பழகிய தொழுதூர் புதுத்தெருவைச் சேர்ந்த தெட்சணாமூர்த்தி மகள் வனிதாவை (32) (திருச்சியில் ஏட்டாக பணிபுரிபவர்), மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். வனிதாவுக்கும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தில் முடிந்து தனியாளாய் இருந்ததால் அவரும் விசாரிக்காமல் இளங்கோவனை திருமணம் செய்துள்ளார்.

ஏட்டு வனிதா கூறியதாவது: கடந்த 2007 ஜன., 29ம் தேதி எங்கள் திருமணம் நடந்தது. அதன் பின் சண்முகப்பிரியா (3) இளமதி (10 மாதம்) ஆகிய இரண்டு குழந்தைகள் பிறந்தனர். நாளடைவில் எங்களை சந்திக்க இளங்கோவன் வராததால் அவர் மீது சந்தேகப்பட்டு விசாரித்த போது, சுதாவுடன் மீண்டும் தொடர்பு ஏற்பட்டுள்ளது தெரிந்தது. என்னுடன் வாழ மறுத்து, தன் முதல் குழந்தை மட்டும் அவருக்கு பிறந்ததாகவும், இரண்டாவது குழந்தை என் உயர் அதிகாரிக்கு பிறந்ததாகவும் கூறுகிறார். அதனால், டி.என்.ஏ., சோதனை செய்து உண்மை கண்டறிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து, சோதனை செய்யவும், இளங்கோவன் மற்றும் தன்னை மிரட்டும் இளங்கோவனின் இரண்டாவது மனைவி சுதா மீது நடவடிக்கை எடுக்கவும் புகார் அளித்துள்ளேன்.

பலதார விஷயம் போலீஸ் விஷயமாகி விட்டது: திருவாரூர் மாவட்டத்தில் இளங்கோவன் வேலை செய்கிறார். திருச்சியில் வனிதா வேலை செய்கிறார். இளங்கோவனின் இரண்டாவது மனைவி சுதா, பட்டுக்கோட்டையில் வசிப்பதால், அவர் அங்கிருந்து வனிதாவுக்கு மொபைல்போனில் எஸ்.எம்.எஸ்., அனுப்பி மிரட்டி வந்துள்ளார். இதுபற்றி தஞ்சாவூர் எஸ்.பி., செந்தில்வேலனிடம் வனிதா புகார் தெரிவித்துள்ளார். இதில், தான் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்றும், பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசாரை விசாரிக்க சொல்லியுள்ளதாக, எஸ்.பி., கூறியுள்ளார். இதனால், பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புராணியிடம் இளங்கோவன் மற்றும் அவரது இரண்டாவது மனைவி சுதா மீது வனிதா புகார் செய்தார். ஆனால், புகார் குறித்து விசாரணை செய்த இன்ஸ்பெக்டர் அன்புராணி, வனிதாவிடம் சாதாரணமாக எழுதி வாங்கிக் கொண்டு வழக்கு ஏதும் பதிவு செய்ய மறுத்துவிட்டார். ஆத்திரம் அடைந்த வனிதா மற்றும் அவரது உறவினர்கள் நேற்று பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் வந்தனர். உரிய நடவடிக்கை எடுக்காததால், போலீஸ் ஸ்டேஷனை வனிதா மற்றும் உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

துறை ரீதியாக உரிய நடவடிக்கை: தகவலறிந்த பட்டுக்கோட்டை டி.எஸ்.பி., நாராயணசாமி, வனிதா மற்றும் இளங்கோவனை நேரில் அழைத்து விசாரணை செய்தார். இளங்கோவன் மீது துறை ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரைப்பதாக அவர் உறுதி கூறினார். நேற்று காலை முதல் இவ்வழக்கை விசாரிக்க மறுத்த இன்ஸ்பெக்டர் அன்புராணி, “”இது தங்கள் துறையில் பணி புரிபவர்களின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயமாக இருப்பதால், பத்திரிகையாளர்கள் இது பற்றி எழுதக் கூடாது,” என, எச்சரித்தது மட்டுமின்றி, போலீஸ் ஏட்டு இளங்கோவனை போட்டோ எடுக்கவிடாமல் பல மணி நேரம் போலீஸ் ஸ்டேஷனுக்குள் மறைத்து வைத்து, மக்கள் நடமாட்டம் குறைந்த பின் அவரை வெளியே அனுப்பி வைத்தார்.

இது தங்கள் துறையில் பணி புரிபவர்களின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயமாக இருப்பதால், பத்திரிகையாளர்கள் இது பற்றி எழுதக் கூடாது: இதுதான் இருப்பதிலேயே கவலைக்குரிய விஷயமாக உள்ளது. உன்மைகள் இப்படி, பல நிலைகளில், பல காரணங்களுக்காக மறைக்கப் பட்டால், குற்றவாளிகளும், தொடர்ந்து அதே குற்றங்களை செய்வதற்கு ஏதுவாகிறது. பொது மக்கள், சாதாரண ஜனங்கள், குடிமகன்கள்………..என்ற நிலையிலுள்ளவர்கள் அறிந்து கொண்டால்தான், அத்தகைய குற்றங்களை செய்யாமல் இருப்பார்கள். மேலும் தாக்கம் ஏற்படுத்தும் ஊடகங்கள், சினிமா முதலியவைகளும் இத்தகைய பிறழ்ச்சிகளை தவிர்க்கவேண்டும்.

Women-duped-by-cheat

Women-duped-by-cheat

பெண்களை ஏமாற்றும் பேர்வழிகள் அதிகமாகவும் இது காரணமாகிறது.