Posts Tagged ‘கணவன்’

கணவனுக்கு பாதபூஜை செய்வது கணணகி-தனமா எதிர்-நாத்திகத் தனமா? பெண்ணியமா-பெரியாரிஸமா, திராவிட மாடலா இல்லையா?

ஜூலை20, 2023

கணவனுக்கு பாதபூஜை செய்வது கணணகி-தனமா எதிர்-நாத்திகத் தனமா? பெண்ணியமா-பெரியாரிஸமா, திராவிட மாடலா இல்லையா?

தமிழக நடிகைய பல கணவன்மார், பல தார மண, விவாகரத்து என்றெல்லாம் இருக்கும் பொழுது பெண்ணியம் எங்கிருந்து வருகிறது: கணவன்மார்களை விவாகரத்து செய்வதும், கல்யாணம் செய்து கொள்ளாமலேயே குழந்தை பெற்றுக் கொள்வ்துமாக இருக்கும் நடிகைகளுக்கு மத்தியில்[1], கணவனுக்கு பாதபூஜை செய்து, பரபரப்பு ஏற்படுத்தியிருக்கிறார் நடிகை பிரணிதா[2]. இதெற்கெல்லாம் உதாரணம் சொல்ல தமிழகத்திலேயே பல முன்னணி நடிகைகள் இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாது, ஒன்றிற்கு மேலாக ஐந்து கணவர் வரை மணம் செய்து விவாகரத்து செய்த நவீன பெண்ணுத்துவ வீராங்கனைகளும் இருக்கிறார்கள். பிறக்கும் குழந்தைகள் அப்பா யார் என்றால் என்ன பதில் கொடுப்பார்கள் என்றெல்லாம் அவர்கள் தான் கவலைப் படவேண்டும். ஆனால், கண்ணகி பிற்ந்த மண், நாங்கள் தான் கண்ணகிக்கே சிலை வைத்தே என்றும் தப்பட்டம் அடிப்பார்கள். மனைவி-துணைவி என்று புது தாம்பத்தைய விளக்கத்தையும் உண்டாக்குவார்கள். இப்படியெல்லாம் இருப்பவர்கள், பகுத்தறிவு, பெண்ணியம் என்றெல்லாமும் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. சினிமா-அரசியல் போர்வையில், எத்தனையோ நடிகைகளின் வாழ்க்கைகளும் சீரழிந்துள்ளன, தற்கொலைகளும் நடந்துள்ளன. பிறகு, இவர்கள் எப்படி விமர்சிக்க முடியும்?

17-07-2023 ஆடி அமாவாசை முன்னிட்டு கணவனுக்கு பாத பூஜை செய்தது: இந்து மதத்தை தீவிரமாக பின்பற்றி வரும் நடிகை பிரணிதா அடிக்கடி கோயில்களுக்கு செல்வது, தனது வீட்டில் இந்து பண்டிகைகளை கொண்டாடும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது என டிரெண்டாகி வருகிறார் என்று ஒரு ஊடகம் ஆரமொஇக்கிறது. அப்படியென்றால், சினிமாவில் செக்யூலரிஸம் இல்லையா, எப்பொழுது இவ்வாறு, மதம் பார்த்து விமர்சிக்கும் போக்கு வந்தது? இது செக்யூலரிஸமா, பெரியாரிஸமா, பகுத்தறிவா, எது? . தமிழில் ‘உதயன்’, கார்த்தி நடித்த ‘சகுனி’, சூர்யா நடித்த ‘மாசு என்ற மாசிலாமணி’, ஜெய் நடித்த ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’ உட்பட சில திரைப்படங்களில் நடித்தவர், பிரணிதா சுபாஷ்[3]. இவர் தொழிலதிபர் நிதின் ராஜு என்பவரை திருமணம் செய்து கொண்டார்[4]. இந்த தம்பதிக்கு அர்னா என்ற மகள் இருக்கிறார்[5]. இந்நிலையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பிரணிதா நேற்று முன் தினம் 17-07-2023 தனது கணவருக்கு பாத பூஜை செய்யும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்[6].

பிரணிதா நடிகை புகைப் படத்தை வெளியிட்டது: அதில், ‘ஆடி அமாவாசையை முன்னிட்டு பாத பூஜை செய்கிறேன். இது ஆணாதிக்கத்தின் ஒன்றாக இருக்கலாம். ஆனால் எனக்கு இது முக்கியத்துவம் வாய்ந்தது. சனாதன தர்மத்தில் பெரும்பாலான சடங்குகள் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதற்கு ஒரு கதை இருக்கிறது. இந்து சடங்குகள் ஆணாதிக்கம் கொண்டது என்று வாதிடுவது முற்றிலும் ஆதாரமற்றது. பெண் தெய்வங்களை சமமாக வழிபடும் சில நம்பிக்கைகளில் இதுவும் ஒன்று’ என்று தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு 2022லும் இதே போல கணவருக்குப் பாத பூஜை செய்த புகைப்படத்தை பிரணிதா பதிவு செய்திருந்தார். அப்போது இது ஆணாதிக்கம் கொண்டது என்று பலர் விமர்சித்து இருந்தனர்[7]. அதை இந்தப் பதிவில் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்[8]. கடந்த ஆண்டு தனது கணவருக்கு இவர் பாத பூஜை செய்தபடி போட்டோ வெளியிட்ட நிலையில், ஆணாதிக்கம் என்று ஏகப்பட்ட ட்ரோல்களும் மீம்களும் பறந்த நிலையில், தற்போது அதற்கு பதிலடி கொடுத்திருக்கிறார் நடிகை பிரணிதா[9]. சமூக ஊடகங்களில் வெளிப்படையாக பதிவிட்டுள்ள நிலையில், அவருக்குள்ள உரிமையை அவர் எடுத்துக் காட்டியுள்ளார். அதே நிலையில், அதற்கு பதிலும் கொடுத்துள்ளார். தவிர, இது இரண்டாம் ஆண்டாக செய்துள்ளார். எனவே, இதை ஏதோ புதியது மாதிரி விமர்சனம் செய்வதில் எந்த பிரயோஜனமும் இல்லை.

சமூக வளைதளத்தில் ட்ரோல் செய்தது, திர்மறையாக விமர்சித்தது: அதாவது இந்நிலையில் இதையும் சமூக வலைதளங்களில் பலர் விமர்சித்து சர்ச்சையாக்கி உள்ளனர்[10]. பிரணிதா செயலை பலர் விமர்சித்தும், கேலி செய்தும் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள். இது ஆணாதிக்க செயல் என்றும் கண்டித்துள்ள நிலையில், சிலர் பிரணிதா செயலை பாராட்டி வரவேற்பு தெரிவித்து உள்ளனர்[11]. இதற்கு நிறைய லைக்ஸ் குவிந்து, நடிகையா இப்படியெல்லாம் பண்றாங்க என ஆச்சர்யத்துடன் கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்[12]. நீங்க உங்க கணவருக்கு பாத பூஜை செய்வதெல்லாம் ஓகே தான். ஆனால், உங்களுக்கு மட்டும் பப்ளிசிட்டி வேண்டும் உங்கள் புருஷனுக்கு பப்ளிசிட்டி இருக்கக் கூடாது என அவரது முகத்தைக் கூட காட்டாமல் கிராப் பண்ணிட்டீங்களே ஏன்? என இந்த ஆண்டு வேற விதமாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். எந்த இந்து மதத்தில் பிகினி அணிந்துக் கொண்டு வலம் வரலாம் எனக் கூறுகின்றனர்[13]. நீங்கள் ஏன் குழந்தை பெற்றும் பிகினி போட்டோக்களை பதிவிடுறீங்க என்றும் ட்ரோல் செய்து வருகின்றனர்[14].

தமிழகத்தில் பெண்ணியத்தின் நிலை: தமிழகத்தைப் பொறுத்த வரையில், இத்தகைய முரண்பாட்டை பலவிசயங்களில் கவனிக்கலாம். பெரும்பாலும், நாத்திகம், பெரியாரிஸம், பகுத்தறிவு என்று பேசும், எழுதும், தம்பட்டம் அடிக்கும் திராவிடத்துவ சித்தாந்திகளிடம் அதிகமாகவே காணலாம். ஏனெனில் அவர்களது தலைவர்களே அத்தகைய முரண்பாடுகளைக் கொண்டவர்கள் தான். இரண்டு தாரம், மூன்று தாரம் என்பது சகஜமான விசயம். பல கணவர் அதாவது விவாக ரத்து செய்து மறுபடியும் கணவர் கொள்ளும் முறையும் இயல்பாக உள்ளது. “ஒருவனுக்கு ஒருத்தி” என்பதற்கும் அவர்கள் புது விளக்கம் அளிக்கக் கூடும். அந்நிலையில், தமிழ் பெண்களின் ஐந்து குணங்களை (அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, கற்பு) இங்கு தேடிப் பாத்தாலும் கிடைக்காது. அவற்றை சொன்னால், என்னது என்று கேட்கும் நிலையில் “நவீன கண்ணகிகள்” உள்ளார்கள். பிறகு, எந்த பெண்ணாவது, பதிவிரதை, பதிபக்தி, கணவனே கண்கண்ட தெய்வம் என்றெல்லாம் பேசினால் ஏளனம் தான் செய்வார்கள்.

உரிமை எல்லோருக்கும் தானே இருக்க வேண்டும்? சினிமா நடிகைகளில் எதிர்பார்ப்பது என்பது நடக்குமா என்று தெரியவில்லை. அந்நிலையில், ஒரு நடிகை தனது கணவனுக்கு பாத பூஜை செய்கிறாள் எனும்பொழுது, இவர்களுக்கு பிரச்சினையாகிறது. என்னது, “திராவிட மாடலுக்கு” ஒவ்வாததாக இருக்கிறதே, இதற்கு நல்ல விளம்பரமு கிடைக்கிறதே என்ற கொதிப்பும் ஏற்படுகிறது. ஏலும், தொடர்ந்து இரண்டாம் ஆண்டும் செய்யு பொழுது, படம் போடும் பொழுது, கொதிப்பு கொஞ்சம் அதிகமாகிறது. இத்தகைய கேள்விகளை தங்களது “ரோல் மாடல்களாக,” தலைவர்களாக இருப்பவரைப் பார்த்து கேட்பார்களா அல்லது அவர்களது சமூக ஊடக பதிவுகளில் சென்று ட்ரால் செய்வார்களா? என்ன கடவுள் இல்லை என்று சொல்கிறீரே, உமது மனைவி கோவில்-கோவிலாக சுற்றுகிறாரே என்று கேட்க முடியுமா. கேட்டால் அது அவரது உரிமை, நான் அதில் தலையிட மாட்டேன் என்பாரோ? பிறகு, யாருடைய உரிமையில், யார் நுழைவது, கேள்வி கேட்பது?

© வேதபிரகாஷ்

20-07-2023


[1] தினமலர், கணவருக்கு பாத பூஜை செய்த பிரணிதா, ஜூலை 18, 2023. 12:47.IST.

[2] https://cinema.dinamalar.com/tamil-news/114841/cinema/Kollywood/Pranitha-performed-foot-pooja-for-her-husband.htm

[3] தமிழ்.இந்து,  கணவருக்கு பாத பூஜை: சர்ச்சையில் பிரணிதா, செய்திப்பிரிவு, Published : 19 Jul 2023 05:23 AM; Last Updated : 19 Jul 2023 05:23 AM.

[4] https://www.hindutamil.in/news/cinema/south-cinema/1057900-pranitha-subhash-touches-husband-feet-on-bheemana-amavasya.html

[5] தினத்தந்தி, கணவருக்கு பாத பூஜை செய்துசர்ச்சையில் சிக்கிய நடிகை பிரணிதா, ஜூலை 19, 1:12 pm.

[6] https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/actress-pranita-who-got-involved-in-controversy-after-doing-foot-puja-for-her-husband-1011216

[7] தமிழ்.பிஹைன்ட்.டாக்கீஸ், போன வருஷம் மாதிரி Troll செய்தால்கணவருக்கு பாத பூஜை செய்த புகைப்படத்தை வெளியிட்டு சூர்யா பட நடிகை விளாசல்., By Arun Kumar, ஜூலை 18, 2023.

[8] https://tamil.behindtalkies.com/pranitha-subhash-touches-husbands-feet-on-bheemana-amavasya/

[9] சினி.உலகம், கணவருக்கு பாத பூஜை செய்த சூர்யா படநடிகை! ட்ரோல் பண்ணா கவலையில்லை, Pranitha Subhash, By Parthiban.A, 18-07-2023.

[10] https://cineulagam.com/article/pranitha-pooja-to-husband-foot-1689607191

[11] அப்டேட்.நியூஸ்.360, இப்படியும் ஒரு நடிகையா…? கணவருக்கு பாத பூஜை செய்த பிரணிதாகிண்டலுக்கு பளார் பதில்!, Author: Shree, 17 July 2023, 11:19 pm

[12]  https://www.updatenews360.com/cinema-tv/pranitha-performed-foot-puja-for-her-husband/

[13]  தமிழ்.பிளிம்.பீட்ஸ், கணவர் பாதங்களுக்கு பூஜை பண்ண பிரபல நடிகை.. நீங்க என்ன வேணா ட்ரோல் பண்ணுங்க என கேப்ஷன் வேற!, By Mari S| Updated: Monday, July 17, 2023, 18:20 [IST]

[14] https://tamil.filmibeat.com/news/actress-pranitha-done-patha-pooja-for-her-husband-on-bheemana-amavasya-110861.html

தகாத உறவால் பெண்-வழக்கறிஞர் கொலை – சமூக பிரஞையுடன் ஊடகங்கள் செய்திகளை வெளியிட வேண்டும் – கணவன் – மனைவிகளும் தாம்பத்தியத்தைப் போற்றி வளர்க்க வேண்டும்!

நவம்பர்6, 2016

தகாத உறவால் பெண்-வழக்கறிஞர் கொலை – சமூக பிரஞையுடன் ஊடகங்கள் செய்திகளை வெளியிட வேண்டும் – கணவன் – மனைவிகளும் தாம்பத்தியத்தைப் போற்றி வளர்க்க வேண்டும்!

honour-womanhood-position-of-women-hindu

தகாத உறவின் அலங்கோலம், அசிங்கம், வக்கிரம்: இதுகுறித்து கார்த்திகேயன் அளித்த பரபரப்பு வாக்குமூலம்[1]: “மசாஜ் பார்லரில் வைத்துதான் லட்சுமி எனக்கு பழக்கமானார். அதிக வயது வித்தியாசம் என்றபோதிலும் அவரது அழகில் மயங்கி காதலை சொன்னேன். அவரும் 30 வருடங்களுக்கும் மேலாக கணவனை பிரிந்து வாழ்ந்ததால், காதலை ஏற்றுக்கொண்டார். எங்களது காதல் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான், தனது மகனை பெங்களூர் அனுப்பி வைத்தார். எனக்கும் நல்ல நிறுவனத்தில் தனது பழக்கத்தை பயன்படுத்தி வேலை வாங்கி கொடுத்தார். தினமும் அவரோடு உல்லாசமாக இருப்பது வழக்கம். கணவனை பிரிந்து இருந்த ஏக்கம் முழுவதையும் நானே மொத்தமாக தீர்த்து வைக்க வேண்டியதாயிற்று[2]. உடல் களைத்தாலும் அவர் விடுவதில்லை[3]. நான் ஒரு செக்ஸ் அடிமை போல நடத்தப்பட்டேன். இதனால் வெறுப்பாகிப்போய், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். 8 மாத குழந்தை எங்களுக்கு உள்ளது. லட்சுமியுடனான உறவை நான் கட் செய்ததும், அவரால் விரக தாபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. என்னை உறவுக்கு அழைத்து தொல்லை செய்தார். சம்பவத்தன்றும், என்னை அழைத்து மீண்டும் மீண்டும் உறவு கொள்ள கட்டாயப்படுத்தினார். ஆபீசில் வேலை இருப்பதாக மனைவியிடம் கூறிவிட்டு இங்கேயே இருக்குமாறும், அப்படி செய்யாவிட்டால், கள்ளக்காதல் ஆதாரங்களை வெளியிட்டு அவமானப்படுத்திவிடுவேன் என்றும் லட்சுமி மிரட்டினார். கோபமடைந்த நான் அதை வெளிக்காட்டாமல் மீண்டும் அவரோடு உறவு கொண்டேன். அப்போது நைசாக கத்தியால் அவரை சரமாரியாக குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டேன். அக்கம்பக்கத்தினர் என்னை அவரது மகன் போன்ற நபர் என நினைத்திருந்தனர். ஆனால், வாட்டர் கேன் போட வரும் நபர்கள் சிலருக்கு எங்கள் மீது சந்தேகம் இருந்தது. இப்படித்தான் சிக்கிக்கொண்டேன்,” இவ்வாறு அவர் தெரிவித்தார்[4].

honour-womanhood-position-of-women

கார்த்திக்கின் வாக்குமூலம் சமூக சீரழிவைக் காட்டுகிறது: கார்த்திக்கின் வாக்குமூலம் கணவன்-மனைவி உறவைக் கொச்சைப் படுத்தும் தன்மை, கணவன் மனைவியை ஏமாற்றுவது, மனைவி கணவனை ஏமாற்றுவது, குடும்பநெறிகளை காப்பதை விடுத்தல், முதலிய சீரழிவுகளைக் காட்டுகிறது.

1.   மசாஜ் பார்லரில் வைத்துதான் லட்சுமி எனக்கு பழக்கமானார்.

 

மசாஜ் பார்லரில் இவர்கள் ஏன் செல்ல வேண்டும், அங்கு, இவர்களுக்கு என்ன பழக்கம் என்பது விளக்கப்படவில்லை.
2.   அதிக வயது வித்தியாசம் என்றபோதிலும் அவரது அழகில் மயங்கி காதலை சொன்னேன். இதில் கார்த்திக்கின் சபலம் தான் மிஞ்சியுள்ளது. தன்னைவிட 23 வயது அதிகமான பெண்ணிடம் எப்படி காதல் வரும்?
3.   அவரும் 30 வருடங்களுக்கும் மேலாக கணவனை பிரிந்து வாழ்ந்ததால், காதலை ஏற்றுக்கொண்டார். இப்படி இவர் சொல்வதே வேடிக்கையாக இருக்கிறது. இவர் காதலிக்கிறேன் என்பதும், அவர் காதலை ஏற்றுக் கொண்டார் என்பது, இதைவிட வேறு விசயம் உள்ளது என்றாகிறது.
4.   எங்களது காதல் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான், தனது மகனை பெங்களூர் அனுப்பி வைத்தார் படித்த அந்த பையன் என்ன முட்டாளா அல்லது தாய் அவ்வாறு சொல்வதை கேட்டு சென்று விட்டானா?
5.   எனக்கும் நல்ல நிறுவனத்தில் தனது பழக்கத்தை பயன்படுத்தி வேலை வாங்கி கொடுத்தார் வேலை வாங்கிக் கொடுத்தார் என்றால், வேலையில்லாமல், எப்படி மசாஜ் பார்லர் போகலாம், காதலிக்கலாம்?? இதெல்லாம் மர்மமாக இருக்கின்றனவே?
6.   தினமும் அவரோடு உல்லாசமாக இருப்பது வழக்கம். கணவனை பிரிந்து இருந்த ஏக்கம் முழுவதையும் நானே மொத்தமாக தீர்த்து வைக்க வேண்டியதாயிற்று[5]. இப்படி சொல்வது இவரது அயோக்கியத் தனத்தை மறைத்து, அப்பெண்ணின் மீது முழுவதுமாக பழிபோடுவதாக உள்ளது.
7.   உடல் களைத்தாலும் அவர் விடுவதில்லை[6]. நான் ஒரு செக்ஸ் அடிமை போல நடத்தப்பட்டேன். காத்ல் என்று ஆரம்பித்து, உறவு கொள்ள ஆரம்பித்ததே இவன் தானே? பிறகு என்ன இந்த பழம் புளிக்கிறது என்ற கதை?
8.   இதனால் வெறுப்பாகிப்போய், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். 8 மாத குழந்தை எங்களுக்கு உள்ளது. உண்மையில் உடலுறவு பிரச்சினை என்றால், திருமணம் செய்து கொண்டு தான் தவிர்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
9.   லட்சுமியுடனான உறவை நான் கட் செய்ததும், அவரால் விரக தாபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. என்னை உறவுக்கு அழைத்து தொல்லை செய்தார். ஒன்றரை வரிடத்திற்கும் மேலாக, இரண்டு பெண்களுடன் உறவு வைத்திருக்கும், இவனது பேச்சு நம்புவதாக இல்லை, இயற்கையாகவும் இல்லை.
10.  சம்பவத்தன்றும், என்னை அழைத்து மீண்டும் மீண்டும் உறவு கொள்ள கட்டாயப்படுத்தினார். ஆபீசில் வேலை இருப்பதாக மனைவியிடம் கூறிவிட்டு இங்கேயே இருக்குமாறும், அப்படி செய்யாவிட்டால், கள்ளக்காதல் ஆதாரங்களை வெளியிட்டு அவமானப்படுத்திவிடுவேன் என்றும் லட்சுமி மிரட்டினார். கோபமடைந்த நான் அதை வெளிக்காட்டாமல் மீண்டும் அவரோடு உறவு கொண்டேன். இதெல்லாம் பரஸ்பர உறவுகள் எல்லைகளை மீறிய விவகாரங்களே. சுற்றியுள்ளவர்களுக்கு, மற்றவர்களுக்குத் தெரிந்து விட்டது என்ற நிலையிலும், வீட்டிலேயே அடைப்பட்டுக் கிடக்கும் நிலையிலும், ஒரு பெண்ணை அளவுக்கு அதிகமாக உசுப்பேற்றி விட்டது, மற்றொரு பெண்ணுடன் ஒன்றரை வருடம் வாழ்ந்து வருவது, லக்ஷ்மிசுதா தன்னை ஏமாற்றுகிறான் என்று தான் கொள்வாள்.

honour-womanhood-tamil-book-wrappers

படித்த பெண்-வழக்கறிஞறின் பொறுப்பற்ற, தகாத உறவு: 1985-86ல் கணவனுடன் பிரிவு ஏற்பட்டது என்றால், ஒழுங்காக இருந்த படித்த வழக்கறிஞர் தீடீரென்று மசாஜ் பார்லருக்குச் செல்வது, ஆண்களுடன் தொடர்பு வைத்துக் கொள்வது, தன்னை விட 23 வயதான ஆணுடன் திருமணம் செய்து கொள்ளாமல் உடலுறை வைத்துக் கொள்வது முதலியவை மிகக் கேவலமான செயல்கள். சட்டம் தெரிந்த பெண் அவ்வாறு செய்தது, மிக அசிங்கமானதும் கூட. ஆகையால், அவரது பங்கை, தவறிய நிலையை, ஒழுக்கமற்ற செயல்களை மறுக்க முடியாது. என்னத்தான் பெண் மாட்டிக் கொள்வாள் என்ற உணர்வில்லாமல், உறுதியாக இருந்திருக்க வேண்டும். அவ்வாறில்லாததால், அவரும் தனது முடிவுக்கு உடந்தையாகிறார்.

honour-womanhood-tamilnadu-cm-and-governor-wishing

கணவன்மனைவி தாம்பத்திய உறவுகளை மேம்படுத்துவது, போற்றுவது வளர்ப்பது எப்படி?: கணவன் – மனைவி தாம்பத்திய உறவுகள் பிரிவது, கெடுவது, சீரழிவது முதலியவற்றை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. “கள்ளக்காதல் கசந்ததால் கொலை செய்தேன்…..செக்ஸ் அடிமை போல நடத்தினார்.. கோபத்தில் குத்தி கொன்றேன்..

58 வயது பெண் வக்கீல் கொலையில் 35 வயது கள்ளக்காதலன்”, என்றெல்லாம் ஊடகங்கள் கொச்சைப்படுத்தி, தலைப்பீட்டு செய்திகளை வெளியிட்டுள்ளன. ஆனால், –

  1. கணவன் – மனைவி உறவை மேம்படுத்தி வாழ்க்கை சிறக்க என்ன வழி,
  2. விவாக ரத்து, தனித்து வாழ்தல் போன்றவற்றைத் தடுப்பது எப்படி?
  3. பெற்றோர், உற்றோர், மற்றும் அவ்வுரவுகளை சரிசெய்வது எப்படி?
  4. சமூகத்தில்சாதிகமாகி வரும் அச்சீரழிவை தடுப்பது எப்படி,
  5. தகாத காமத்தைத் தடுக்க என்ன வழி? பெண்களுக்கு மாற்று வழி என்ன?
  6. தாம்பத்தியத்தைப் போற்றுவது எப்படி,
  7. மகன் அல்லது மகள் முதலியோருடன் வாழ்வது, பெற்றோருடன் வாழ்வது போன்றவற்றை விலக்காமல் இருப்பது எப்படி?
  8. அவர்கள் பெற்றோரின் மீது அக்கரைக் கொண்டிருப்பது எப்படி?
  9. கூட்டுக் குடும்பத்தை, பந்தத்தை வளர்ப்பது எப்படி?
  10. இதற்கு தியானம், யோகா, உபன்யாடங்கள்-சொற்பொழிகள் கேட்டல், போன்றவை உதவுமா?

என்பனவற்றைப் பற்றி அக்கரைக் கொண்டதாகத் தெரியவில்லை. ஊடகங்கள் வெறும் பொழுதுபோக்கு, உணர்ச்சிகளைத் தூண்டுதல், போன்ற நோக்கத்தை விட்டு, சமூக அக்கறையுடன் செய்திகளை வெளியிட வேண்டும்.

© வேதபிரகாஷ்

06-11-2016

when-irreligion-is-prominent-in-the-familythe-women-of-the-family-become-corrupt-and-from-the-degradation-of-womanhood-comes-unwanted-progeny

[1] தமிழ்.ஒன்.இந்தியா,செக்ஸ் அடிமை போல நடத்தினார்.. கோபத்தில் குத்தி கொன்றேன்.. பெண் வக்கீல் கள்ளக்காதலன் பரபர வாக்குமூலம், By: Veera Kumar, Published: Saturday, November 5, 2016, 10:15 [IST].

[2] தமிழ்.வெப்துனியா, கள்ளக்காதல் கசந்ததால் கொலை செய்தேன் – பெண் வழக்கறிஞர் கொலையில் அதிர்ச்சி, வெள்ளி, 4 நவம்பர் 2016 (16:12 IST).

[3] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/why-i-was-murder-murderer-confessions-in-the-female-lawyer-murder-case-116110400032_1.html

[4] http://tamil.oneindia.com/news/tamilnadu/insurance-company-staff-who-killed-woman-lawyer-gives-the-reason-266439.html

[5] தமிழ்.வெப்துனியா, கள்ளக்காதல் கசந்ததால் கொலை செய்தேன் – பெண் வழக்கறிஞர் கொலையில் அதிர்ச்சி, வெள்ளி, 4 நவம்பர் 2016 (16:12 IST).

[6] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/why-i-was-murder-murderer-confessions-in-the-female-lawyer-murder-case-116110400032_1.html

 

தகாத உறவால் கொலையுண்ட மெத்தப் படித்த பெண் வழக்கறிஞரும், பொறுப்பற்று தன்னை விட 23 வயது அதிகமான பெண்ணுடன் உறவுவைத்து கொலைசெய்த பாதகனும்!

நவம்பர்6, 2016

தகாத உறவால் கொலையுண்ட மெத்தப் படித்த பெண் வழக்கறிஞரும், பொறுப்பற்று தன்னை விட 23 வயது அதிகமான பெண்ணுடன் உறவுவைத்து கொலைசெய்த பாதகனும்!

lakhsmi-sudha-advocate-murder-02-11-2016

மகன் தனியாக குடித்தனம் நடத்தும் நிலையில், கணவனைப் பிரிந்து, வாழ்ந்த மனைவி: மேற்கு மாம்பலம் குமரன் நகரில் வசித்து வந்த லட்சுமி சுதா (58) உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்தார்[1]. கடந்த 30 ஆண்டுகளாக கணவர் பிரகாகரனைப் பிரிந்து தனியே வசித்து வந்தார்.  கணவன்-மனைவி உறவுமுறை தோல்வி என்று தெரிகிறது. வழக்கறிஞர் என்பதால் எல்லாம் முறைப்படி செய்திருப்பார். லட்சுமிசுதாவின் மகன் திருமணம் ஆகி பெங்களூரில் வேலை செய்து வருகிறார்.  வேலை மற்றும் திருமணம் ஆனால், மகன் இவ்வாறு தனியாகச் செல்வதும் இயல்பாகி விட்டது. இதனால் மேற்கு மாம்பலத்தில் லட்சுமிசுதா மட்டும் தனியாக இருந்தார். கடந்த ஐந்து ஆண்டுகளாக வேலை செய்யாமல் வீட்டிலேயே வசித்து வருகிறார். இவர் வசித்து வந்த வீட்டின் கீழ் தளத்தில் அவரது சித்தப்பா சுந்தரம் குடியிருந்தார்[2]. இவரது தங்கை வித்யா அருளின் வீடு குமரன் நகரில் உள்ளது. இங்கிருந்துதான் லட்சுமி சுதாவுக்கு அடிக்கடி உணவு கொடுத்தனுப்பப்பட்டு வந்தது[3]. வேலைக்காரி விமலா வீட்டை சுத்தம் செய்து விட்டு செல்வது வழக்கம்[4]. வசதி இருந்ததால், இவர் இப்படி வாழ்ந்தார், இல்லையென்றால், அதற்கும் வழியில்லாமல் போயிருக்கும்.

lakhsmi-sudha-advocate-murder-news7tamil-02-11-2016

தங்கை தொடர்பு கொண்டபோது பதில் இல்லாததால், நேரில் வந்து பார்த்த போது கொலௌண்ட நிலையில் கிடந்த அக்காள்: விமலா திங்கட்கிழமை 31-10-2016 அன்று வந்து வேலை செய்து விட்டுச் சென்றாள். மறுபடியும் 02-11-2016 உதன்கிழமை அன்று வேலைக்கு வந்த போது, கதவு சாத்தப்பட்டிருந்தது. இதனால், விமலா வித்யாவுக்கு அறிவித்தாள். லட்சுமி சுதாவை அவரது தங்கை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. நேற்று காலை போன் செய்தபோதும் லட்சுமி சுதா போனை எடுக்க வில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது தங்கை, நேற்று மாலையில் லட்சுமி சுதாவின் வீட்டுக்கு நேரில் வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டப்படாமல் லேசாக சாத்தப்பட்டு இருந்தது. கதவை திறந்து உள்ளே சென்றபோது, ஹாலில் ரத்த வெள்ளத்தில் லட்சுமி சுதா இறந்து கிடந்தார். அவரது உடலில் 13 இடங்களில் கத்திக் குத்து இருந்தது. தங்கையின் அலறல் சத்தத்தை கேட்டு அருகே இருந்தவர்கள் கூடினர், என்று தமிழ்.இந்து விவரித்துள்ளது[5]. லட்சுமி சுதாவின் வீட்டில் பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்துள்ளன. கொள்ளைக் காக இந்த கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காக கொலை செய்யப்பட்டாரா என்பதை விசா ரிக்க 3 தனிப்படைகள் அமைக் கப்பட்டுள்ளன.

 lakhsmi-sudha-advocate-murder-house-02-11-2016

மற்ற நாளிதழ்கள் இதே கதையை வேறுவிதமாகக் கூறுவது: இந்நிலையில் 02-11-2016 அன்று காலை அவரது உறவினர், லட்சுமி சுதாவை காண வீட்டிற்கு வந்தபோது துர்நாற்றம் வீசியதால், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்து இருக்கிறார்[6]. 2 நாட்களுக்கு முன்னரே அவர் கொலை செய்ய பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். லட்சுமிசுதாவுக்கு நன்கு அறிமுகமான தெரிந்த நபரே அவரை கொலை செய்திருக்க வேண்டும் என்றும் போலீசார் கருதினர். இதுதொடர்பாக அக்கம் பக்கத்தில் விசாரித்தனர். லட்சுமிசுதாவின் வீட்டிற்கு தண்ணீர் கேன் சப்ளை செய்யும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. 2 நாட்களுக்கு முன்பு லட்சுமி சுதாவை பார்ப்பதற்காக பெண் ஒருவர் வந்து சென்றதும் தெரியவந்தது. அவரிடமும் போலீசார் விசாரித்தனர். அப்போது கடந்த 31-ந்தேதி லட்சுமிசுதாவுடன் வாலிபர் ஒருவர் வீட்டில் அமர்ந்து நீண்ட நேரமாக பேசியது தெரிய வந்தது. அவர் யார் என்பது பற்றி போலீசார் விசாரித்தனர்[7]. அப்போது அவரது பெயர் கார்த்திக் (35) என்பது தெரிய வந்தது. அவர்தான் கொலையாளி யாக இருக்க வேண்டும் என்கிற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது[8]. இதில் துப்பு துலங்கியது. கடந்த 31-ந்தேதி அன்று லட்சுமிசுதாவின் வீட்டிற்கு வந்து சென்ற கார்த்திக் அவரை கொலை செய்து விட்டு தப்பி சென்றது தெரிய வந்தது. இது தொடர்பாக குமரன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.  இந்நிலையில், வழக்கறிஞர் லட்சுமியின் காதலன் என கூறப்படும், கார்த்திக் நொளம்பூரில் அவர் மனைவி, குழந்தையு டன் வசித்து வந்தார்.  தேடி சென்ற போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்[9].

lakhsmi-sudha-murder-02-11-2016

இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 23 வயது வித்தியாசம் பிறந்த தகாத காதல்: போலீஸ் விசாரணையில் வக்கீல் லட்சுமிசுதாவிற்கும் வாலிபர் கார்த்திக்குக்கும் கள்ளக்காதல் இருந்தது தெரியவந்தது[10]. தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் ஒன்றில் கார்த்திக் பணி புரிந்து வந்தார். அதே நிறுவனத்தில் லட்சுமிசுதா சட்ட ஆலோசகராக இருந்தார். அப்போதுதான் இருவரும் நெருங்கி பழகி உள்ளனர். 23 வயது வித்தியாசம் என்பதையும் மறந்து இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர்.  இந்த நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் கார்த்திக்கு திருமணம் நடைபெற்றது. தற்போது ஒரு குழந்தையும் உள்ளது. திருமணத்திற்கு பின்னர் கார்த்திக் வக்கீல் லட்சுமி சுதாவை சந்திப்பதை தவிர்த்து வந்துள்ளார். அவருடன் அதிகமாக பழகுவதையும் நிறுத்தி உள்ளார்.  இதனால் ஆத்திரம் அடைந்த லட்சுமி சுதா அடிக்கடி கார்த்திக்குடன் சண்டை போட்டுள்ளார்.
mambalam-woman-advocate-murder-05_11_2016_016_009
31-10-2016 அன்று நடந்த சண்டை கொலையில் முடிந்தது: இந்த தகராறு இருவருக்கும் இடையே  சமீப காலமாக முற்றியது. கடந்த 31-ந்தேதி அன்று இதுதொடர்பாக பேசுவதற்காகவே கார்த்திக் லட்சுமிசுதா வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது இருவருக்குமிடையே இது தொடர்பாக கடும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. திருமணத்திற்கு பின்னர் நீ விலகி செல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று லட்சுமிசுதா கூறி இருக்கிறார்[11]. இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறே கொலையில் முடிந்துள்ளது[12].  லட்சுமிசுதாவின் செயலால் ஆத்திரம் அடைந்த கார்த்திக் அவரை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்து விட்டு தப்பி சென்றார். அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் துப்பு துலக்கி கார்த்திக்கை கைது செய்தனர். இதுதொடர்பாக கார்த்திக் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித் துள்ளார். அதில் திருமண மான பின்னரும் லட்சுமி சுதா எப்போதும் போல பழகுமாறு கூறினார். ஆனால் என்னால் முடிய வில்லை. இதுதொடர்பாக எங்களுக்குள் ஏற்பட்ட தகராறே கொலையில் முடிந்தது என்றும் கார்த்திக் கூறியுள்ளார்.

 

© வேதபிரகாஷ்

06-11-2016

mambalam-woman-advocate-murder-05_11_2016_016_009-2

[1] தினகரன், சென்னை மேற்கு மாம்பலத்தில் பெண் வழக்கறிஞர் வெட்டிக் கொலை, Date: 2016-11-02 19:44:08

[2] Indian Express, Home-alone lawyer found dead at Mambalam, By Express News Service  |   Published: 03rd November 2016 04:23 AM  | Last Updated: 03rd November 2016 04:23 AM .

[3] தமிழ்.இந்து, சென்னை மேற்கு மாம்பலத்தில் தனியாக வசித்த பெண் வழக்கறிஞர் படுகொலை, Published: November 3, 2016 10:00 ISTUpdated: November 3, 2016 10:00 IST

[4] http://www.newindianexpress.com/cities/chennai/2016/nov/03/home-alone-lawyer-found-dead-at-mambalam-1534451.html

[5]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/article9298878.ece

[6] நியூஸ்7.தமிழ், மேற்கு மாம்பலம் பெண் வழக்கறிஞர் கொலை வழக்கில் அவரது காதலன் கைது!, November 04, 2016.

[7] http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=256100

[8] தமிழ்.ஒன்.இந்தியா, சென்னையில் பயங்கரம்.. வீட்டில் தனியாக இருந்த பெண் வக்கீல் வெட்டிக் கொலை, By: Karthikeyan, Updated: Wednesday, November 2, 2016, 21:14 [IST]

[9] http://ns7.tv/ta/lover-arrested-female-advocate-murder-case.html

[10] http://tamil.oneindia.com/news/tamilnadu/lawyor-murdered-chennai-266244.html

[11] தினத்தந்தி, 58 வயது பெண் வக்கீல் கொலையில் 35 வயது கள்ளக்காதலன் கைது, பதிவு செய்த நாள்: வெள்ளி, நவம்பர் 04,2016, 3:10 PM IST; மாற்றம் செய்த நாள்: வெள்ளி, நவம்பர் 04,2016, 3:10 PM IST.

[12] http://www.dailythanthi.com/News/State/2016/11/04151002/58year-old-women-Lawyer-murder–Arrested-35year-old.vpf

முத்தம் பெற்ற ராகுலும், முத்தம் கொடுத்த கமலும் – பாதிக்கப்படுவது, ஹிம்சைப்பட்டது, கொலைசெய்யப்பட்டது பெண்கள் தாம்!

மார்ச்4, 2014

முத்தம் பெற்ற ராகுலும், முத்தம் கொடுத்த கமலும் – பாதிக்கப்படுவது, ஹிம்சைப்பட்டது, கொலைசெய்யப்பட்டது பெண்கள் தாம்!

ராகுல் பெற்ற முத்தம்

ராகுல் பெற்ற முத்தம்

காங்கிரசின்   “தெருவோர  காட்சிகள்விபரீதமானது: அசாமிற்கு ராகுல் சென்றிருந்தபோது, காங்கிரஸ்காரர்கள் அவரை பெண்களுக்கேற்றவர், பிடித்தவர், அவர்களின் விசயங்களில் அக்கரைக்கொண்டவர் என்றெல்லாம் நிருவ தெருக்கூத்துப் போல, “தெருவோர காட்சிகள்” கூட்டங்கள் நடத்தி வருகிறார்கள். கடந்த புதன்கிழமை 26-02-2014 அன்று அவர் அசாம் மாநிலத்துக்கு சென்றிருந்தார். அங்கு அவர் ஜோர்கட் நகரில் நடந்த 600 பெண்கள் பங்கேற்ற கூட்டத்தில் கலந்து கொண்டார். பெண்களுக்கு மத்தியில் அமர்ந்து அவர் பேசிக் கொண்டிருந்தார். அப்போது 2 பெண்கள் ராகுலை நெருங்கி அவரைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டனர். அந்த காட்சி படத்துடன் பத்திரிகைகளில் வெளியாகி இருந்தது[1]. வழக்கம் போல ஊடகங்கள் பரபரப்பிற்காக முரண்பாடான செய்திகளை வெளியிட்டன.

Rahul_Gandhi-Assam

Rahul_Gandhi-Assam

முத்தமிட்டப்  பெண்  இந்தபெண்  இல்லை: இந்த நிலையில் பெகஜன் பஞ்சாயத்து காங்கிரஸ் வார்டு உறுப்பினரான  போன்டி சூடியா [Bonti Chutia, 35] நேற்று முன்தினம் இரவு அவரது கணவர் சோ மேஸ்வரால் தீ வைத்து எரித்து படுகொலை செய்யப்பட்டார். அவர் காங்கிரஸ் கட்சியில் மகளிர் அமைப்பில் தீவிரமாக செயல்பட்டவர் ஆவார். போன்டி சுடியா படுகொலை நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்தான் ராகுல் காந்திக்கு முத்தம் கொடுத்தவர் என்றும், அந்த கோபத்தில் தான் அவர் கணவர் சோமேஸ்வர், உயிரோடு தன் மனைவியை எரித்து கொன்று விட்டார் என்றும் தகவல்கள் வெளியானது. இவரது கணவர் சோமேஸ்வர் சூடியா [Someswar Chutia] க்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சில நிமிடங்களில் வீட்டிலிருந்து அலறல் குரல்கள் கேட்கவே அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். வீட்டுக்குள் கணவனும், மனைவியும் தீயில் கருகிய நிலையில் கிடந்ததைப் பார்த்து மக்கள் அவர்களை மீட்டு ஜோர்ஹட் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு [Jorhat Medical College Hospital ] அனுப்பினர். அங்கு போன்டி உயிரிழந்தார். அவரது கணவர் 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட காயத்துடன் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்[2]. கணவன்-மனைவி இருவரிடையே நெடுங்காலமாக கருத்து வேறுபாடு இருந்த நிலையில், சண்டை ஏற்பட்டதால் அவ்வாறு நிகழ்ந்தது என்று அமன்ஜித் கௌர் என்ற போலீஸ் சூப்பிரென்டென்ட் கூறியுள்ளார்[3].

ராகுல் பெற்ற முத்தம்.2

ராகுல் பெற்ற முத்தம்.2

முரண்பட்ட  தகவல்களைக்  கொடுத்த  போலீசார்: ராகுல்காந்தியுடன் பேசி விட்டு இரவு வீட்டுக்கு தாமதமாக வந்ததால் அவருக்கும், அவரது கணவர் சோமேஸ்வரருக்கும் தகராறு ஏற்பட்டதில், போன்டி கொல்லப்பட்டிருக்கலாம் என்று போலீசார் அறிவித்துள்ளனர். சிறிது நேரத்தில் இந்த பரபரப்பு தகவலை அசாம் மாநில போலீசார் மறுத்தனர். சோமேஸ்வரும் 60 சதவீத தீக்காயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பதால் அவரிடம் வாக்குமூலம் பெற்ற பிறகே உண்மையான தகவல்கள் தெரிய வரும் என்று கூறினார்கள். இந்த நிலையில் தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்ட போன்டி சுடியா ராகுல்காந்தியை முத்தமிட்டவர் அல்ல என்று தெரிய வந்துள்ளது. ராகுலுடன் உரையாட அரங்கில் அமர்ந்திருந்த 600 பெண்களில் அவரும் ஒருவராவார். இதற்கிடையே காங்கிரசின் புகழை கெடுக்கவே ராகுலுக்கு முத்தமிட்டவர் கொலை செய்யப்பட்டதாக சிலர் சதி திட்டம் தீட்டி செய்தி பரப்பி விட்டதாக அசாம் மாநில முதல்–மந்திரி தருண் கோகேய் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: “எரித்து கொலை செய்யப்பட்ட போன்டிக்கும், ராகுல் காந்தி பங்கேற்ற கூட்டத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. ராகுலுடன் அரங்கில் இருந்த 600 பெண்களில் கூட ஒருவராக போன்டி இருக்கவில்லை. ராகுல் கூட்ட அரங்குக்கு வெளியில் அவரைப் பார்ப்பதற்காக நூற்றுக்கணக்கான பெண்கள் திரண்டு நின்றனர். அவர்களில் ஒருவராகத்தான் போன்டி இருந்தார். மற்றபடி அவர் கொலைக்கும் ராகுல் நிகழ்ச்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை”, என்று அசாம் முதல்– மந்திரி தருண் கோகேய் கூறினார்[4].

கமல் முத்தம்

கமல் முத்தம்

காங்கிரசுக்கு  எதிர்விளைவை  ஏற்படுத்திய  முத்தங்கள்: இளைஞராக காட்ட வேண்டும் என்ற திட்டம் போட்ட காங்கிரசுக்கு இது அதிர்ச்சியாகிப் போய் விட்டது. மகளிர் அமைப்பினரிடையே உரையாற்றிய ராகுல் காந்திக்கு ஒரு பெண் முத்தம் கொடுத்து வரவேற்றபொழுது இரண்டு பெண்கள் ராகுலுக்கு முத்தம் கொடுத்தனர். முத்தம் பெற்ற ராகுல் படுகுஷியாக இருந்தது, அவரது முகத்திலேயே தெரிந்தது. பிறகு தான் பாதுகாப்பு போலீசார் பெண்களை அவர் அருகில் வர தடுக்க ஆரம்பித்தனர்[5]. ஆனால்……………அந்தப் பெண் எரித்துக் கொல்லப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அந்த பெண், இந்த பெண் இல்லை என்றதும், ஆங்கில ஊடகங்கள் தவறான செய்தியைக் கொடுத்ததற்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டன[6]. இருப்பினும், காங்கிரசுக்கு இந்நிகழ்ச்சி ஒரு எதிர்விளைவை ஏற்படுத்தியுள்ளது. இனி உலகநாயகனின் விசயத்தைப் பார்ப்போம்.

கமல் கட்டிப்பிடிப்பு முத்தம்

கமல் கட்டிப்பிடிப்பு முத்தம்

கமல்ஹஸனின் முத்தங்களு ம், கட்டிப்  பிடிப்புகளும்: கமலோ தானோ வலியக் கட்டியணைத்து முத்தம் கொடுத்ததாக, ஏற்கெனவே புகைப்படங்கள் வெளியாகின! கடந்த ஏப்ரல் 15,16,17ம் தேதிகளில் 2013 ஒளிப்பரப்பட்ட ராஜ்-டிவி நிகழ்ச்சியில் கமலஹாசன், அவருடன் சேர்ந்து வாழும் பத்தினி கவுதமி, மணமான நடிகை திவ்யதர்ஷினி மற்றும் குடும்ப பெண்களும் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், கலந்து கொண்ட குடும்ப பெண்களிடம் கமலஹாசன் பற்றி பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் நடிகர் பிரகாஷ்ராஜ், ஒரு நடுத்தர வயது பெண்மணியை பார்த்து, உங்களுக்கு நடிகர் கமலஹாசனை பிடிக்குமா என்று கேட்கிறார். அதற்கு அந்த நடுத்தர வயது பெண்மணி, எனக்கு வெறித்தனமாக பிடிக்கும் என்கிறார். மீண்டும் உங்களுக்கு நிறைவேறாத ஆசைகள் என்ற கேள்விக்கு பதிலளித்த அந்த பெண்மணி, கமலை கட்டிப்பிடித்து முத்தமிட வேண்டும் என்கிறார்.  “இதோ, இப்போதே உங்கள் ஆசையை நிறைவேற்றி கொள்ளுங்கள்’ என, பிரகாஷ்ராஜ் கூற, நடிகர் கமலை, அந்த பெண் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து, “என் வாழ்வின் லட்சியம் நிறைவேறியது; முத்தம் கொடுக்கும் போது, என் கணவரை வெளியே அனுப்பி விட்டேன்’ என்கிறார்[7]. அது கிடைத்தால் செய்வீர்களா என்றதும், லட்சக்கணக்கான மக்கள், குழந்தைகள் பார்த்துக் கொண்டிருக்கும் அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அப்பெண்மணி கமலஹாசனை கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்கிறார். அதுபோல் நடிகை திவ்யதர்ஷினியும், எனக்கும் அந்த ஆசை இருக்கிறது என தெரிவித்து, கமலை கட்டிப்பிடித்து முத்தமிடுகிறார். அந்த நிகழ்ச்சியில் திருமணம் செய்து கொள்ளாமல் குடும்பம் நடத்தினால் என்ன தவறு இருக்கிறது என்றெல்லாம் விவாதிக்கப்பட்டது.

கமல் கட்டிப்பிடிப்பு முத்தம்.குடும்பப்பழக்கமா

கமல் கட்டிப்பிடிப்பு முத்தம்.குடும்பப்பழக்கமா

கணவன்,   மனைவி  அல்ல; பார்ட்னர்; உடலுறவு   போன்ற   விஷயங்கள்  உண்டு: இந்த நிகழ்ச்சியில், “நடிகை கவுதமிக்கும், உங்களுக்கும் என்ன உறவு?’ என, பிரகாஷ் ராஜ் கேட்க, “நாங்கள் கணவன், மனைவி அல்ல; பார்ட்னர்; உடலுறவு போன்ற விஷயங்கள் உண்டு’ என்று கமல் கூறியுள்ளார்[8]. இப்படி அந்தரங்கத்தை அரங்கத்தில் பெருமையாக சொல்லிக் கொண்ட இந்த நடினகா, உலகநாயகன் என்று பிதற்றிக் கொண்டிருக்கிறான். எத்தனைப் பெண்களுடன் உறவு வைத்துக் கொண்டான் என்றாலும் இந்நடிகன் சொல்வான் போலிருக்கிறது. மணம் இல்லாமல் உடலுறவுகொண்ட இருபெண்களை உருவாக்கியிருக்கும் இவன் ஒரு தகப்பன் என்ற ஸ்தானத்தில் இருக்கலாம், ஆனால், பெற்ற தாயிடம் வளராமல், எப்படியோ வளர்ந்து, இப்பொழுது, இன்னொருத்தியை வீட்டில் வைத்திருக்கிறேன், மணம் இல்லை, ஆனால், உடலுறவு போன்ற விஷயங்கள் உண்டு என்றால், பென்களின் நிலை என்ன? இத்தகைய சீரழிப்பாளர்களுக்கு மாணவ-மாணவியர்கள் முன்பாக “டாக்டர்” பட்டம் கொடுத்து “கௌரவி”க்கப்பட்டால், அவர்கள் என்ன நினைப்பார்கள்? இந்த கருமாந்திரத்தின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்று செய்திகள் வந்தன[9], அவ்வளவுதான், வழக்கம் போல அது எந்தநிலையில் உள்ளது என்று தெரிவிக்கப்படவில்லை[10].

Kamal-gautami-neengalum-vellalam-oru-kodi

Kamal-gautami-neengalum-vellalam-oru-kodi

பொது  அறிவு  நிகழ்ச்சியில்  அரங்கேறிய  அசிங்கங்கள்: பொது அறிவு நிகழ்ச்சி என்று அறிவிக்கப்பட்டு ஒளிபரப்படும் நிகழ்ச்சியில் ஒரு ஆணை அடுத்தவர் வீட்டு மனைவி அல்லது பெண்கள் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது தான் இந்திய நாட்டு கலாச்சாரமா? நாட்டில் பெருகி வரும் பாலியல் பலாத்காரத்திற்கு இதுபோன்ற நிகழ்ச்சிகள் தூண்டுகோலாக இருந்து வருகின்றன[11]. எனவே அன்றைய நிகழ்ச்சிகளில் இந்திய நாட்டு கலாச்சாரத்தை சீரழித்த குற்றத்திற்காக நடிகர்கள் கமலஹாசன், பிரகாஷ்ராஜ், நடிகைகள் கவுதமி, திவ்யதர்ஷினி, மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கமலுக்கு முத்தமிட்ட நடுத்தர வயது பெண் மற்றும் இந்நிகழ்ச்சியை ஒளிபரப்பிய விஜய் டி.வி. நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  இந்து மக்கள் கட்சியின் சென்னை மண்டல தலைவர் முத்து ரமேஷ் குமார் போலிசுக்குக் கொடுத்த தனது புகாரில் தெரிவித்துள்ளார்[12].

முத்தக் கலாச்சாரம் அரங்கத்தில்

முத்தக் கலாச்சாரம் அரங்கத்தில்

குடும்ப  வாழ்க்கையில்  தோல்வி  கண்டராகுல் கமல்  சமூகத்திற்கு  உதாரணங்கள்  அல்லர்: ராகுல் கந்தி இவ்வளவு வயதாகியும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்ௐஇரார்கள். ஆனால், ஏற்கெனவே திருமணமாகி குழந்தையும் இருக்கிறது என்கிறார்கள். யாரோ காதலி என்று புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. உண்மை எப்படியிருந்தாலும், நடக்கவேண்டிய வயதில் ஒரு ஆணுக்கு நடக்கவில்லை எனும்போது, அதில் பிரச்சினையுள்ளது என்பது தெரிகிறது. ஆக, தனிப்பட்ட வாழ்க்கையில் தோல்வி என்ற நிலையில் தான் ராகுல் உள்ளநிலை. கமல் ஹஸன் என்ற சினிமா நடிகன் தனிப்பட்ட வாழ்க்கையில் படுதோல்வி அடைந்த ஒரு மனிதன். அதனால், தனது தோல்வியை மறைக்க நாத்திகம், சேர்ந்து வாழ்தல், சுதந்திரமான உடலுறவு போன்றவற்றை ஊக்குவித்து வருவது வழக்கமாகி விட்டது. முன்பு “மன்மத அன்பு” என்ற படத்தில் வரும் படலில், தன்னுடைய காமவெறி, பெண்களிடன் தான் கொண்ட உறவு முதலியவற்றை சேர்த்து விவகாரங்களை வைத்தான்[13]. பிறகு சொதப்பலான விளக்கமும் கொடுத்தான்[14] அதனால், இரண்டு பெண்கள் விசயங்களிலும் முத்தம் கொடுத்ததால், கொடுக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டது, ஹிம்சைப்பட்டது, கொலைசெய்யப்பட்டது பெண்கள் தாம்!

© வேதபிரகாஷ்

04-03-2014


[3] Superintendent of Police Amanjeet Kaur said a case of unnatural death had been registered. She said the victim, Bonti Chutia, died of burn injuries, while her husband, Someswar Chutia, had also sustained 35 percent burn injuries. Kaur clarified that the victim was not the who was shown on television kissing Congress vice president Rahul Gandhi. “We have talked to people and came to know that although she (the victim) came to the venue Wednesday to interact with the Congress leader, she stayed outside the programme for some reasons,” Kaur said. “We also came to know from the neighbours that both the husband and wife had a strained relationship for a long time and that could be one of the reasons for the incident,” she said.

http://m.indiatoday.in//story/rahul-kiss-assam-woman-dead-burnt-to-death/1/346259.html

[6] *An earlier version of the story had reported that the victim was one of those who had kissed Rahul Gandhi at a Congress event. The mix-up was clarified by others who attended the event who said the victim was at the event but was not among those who kissed Rahul. We regret the error.

http://m.indiatoday.in//story/rahul-kiss-assam-woman-dead-burnt-to-death/1/346259.html

[8] தினமலர், கலாசாரத்தைசீரழிக்கின்றனர் : நடிகர்கமல், கவுதமிமீதுபுகார், 25-04-2013, http://www.dinamalar.com/news_detail.asp?id=698629

முத்தம் பெற்ற ராகுலும், முத்தம் கொடுத்த கமலும் – பாதிக்கப்படுவது, ஹிம்சைப்பட்டது, கொலைசெய்யப்பட்டது பெண்கள் தாம்!

மார்ச்2, 2014

முத்தம் பெற்ற ராகுலும், முத்தம் கொடுத்த கமலும் – பாதிக்கப்படுவது, ஹிம்சைப்பட்டது, கொலைசெய்யப்பட்டது பெண்கள் தாம்!

அசாமிற்கு ராகுல் சென்றிருந்தபோது, காங்கிரஸ்காரர்கள் அவரை பெண்களுக்கேற்றவர், பிடித்தவர், அவர்களின் விசயங்களில் அக்கரைக்கொண்டவர் என்றெல்லாம் நிருவ தெருக்கூத்துப் போல, “தெருவோர காட்சிகள்” கூட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.

மகளிர் அமைப்பினரிடையே உரையாற்றிய ராகுல் காந்திக்கு ஒரு பெண் முத்தம் கொடுத்து வரவேற்றார். அப்பொழுது இரண்டு பெண்கள் ராகுலுக்கு முத்தம் கொடுத்தனர். முத்தம் பெற்ற ராகுல் படுகுஷியாக இருந்தார், ஆனால்……………

. அந்தப் பெண் எரித்துக் கொல்லப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அசாமில் சுற்றுப் பயணம் செய்தார். அப்போது, அசாமில் மகளிர் அமைப்பினரிடையே உரையாற்ற வந்த ராகுலை, போன்டி என்ற காங்கிரஸ் பெண் கவுன்சிலர் நெற்றியில் முத்தமிட்டு வரவேற்பு அளித்தார்.

ராகுலுக்கு முத்தம் கொடுத்து வரவேற்றதை விரும்பாத அவரது கணவர் இவரின் செயலால் பெரும் அதிர்ச்சி அடைந்தாராம். இதை அடுத்து இருவருக்கும் இடையே பெரும் வாக்குவாதம் மூண்டுள்ளது. கைகலப்பில் ஈடுபட்ட நிலையில் அவர் தனது மனைவியை தீவைத்து எரித்துள்ளார். தானும் தீவைத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அக்கம் பக்கத்தில் உள்ளவர்களால் மீட்கப்பட்ட இருவரும் மருத்துவமனையில் சிகிச்சக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் அந்தப் பெண் உயிரிழந்ததாகவும், கணவர் தீக்காயங்களுடன் போராடுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இருவரும் தற்கொலைக்கு முயன்றனரா அல்லது போன்டிக்கு தீவைத்த அவரது கணவர் தானும் தீவைத்துக்கொண்டாரா என்பது குறித்து குழப்பாமான நிலை நிலவுவதாகவும் இது குறித்து விசாரித்து வருவதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

கமலோ தானோ வலியக் கட்டியணைத்து முத்தம் கொடுத்ததாக, ஏற்கெனவே புகைப்படங்கள் வெளியாகியுள்ளன!

முத்தம் கொடுத்த கமலும் – பாதிக்கப்படுவது, ஹிம்சைப்பட்டது, கொலைசெய்யப்பட்டது பெண்கள் தாம்!