நெல்லை மாலாவின் தகாத காமமும், கொலையும், கற்றுக் கொள்ளவேண்டிய பாடங்கள் – பள்ளி-கல்லூரிகளுக்கு செல்லும் இளம் பெண்கள் எப்படி இருக்க வேண்டும்?


நெல்லை மாலாவின் தகாத காமமும், கொலையும், கற்றுக் கொள்ளவேண்டிய பாடங்கள் – பள்ளிகல்லூரிகளுக்கு செல்லும் இளம் பெண்கள் எப்படி இருக்க வேண்டும்?

A girl participated in the anti-rape campaign Chennai - The Hindu photo

1960களிலிருந்து மாறிவரும் நிலை: மாலா இறந்து விட்டாள் என்று மக்கள் சும்மா இருந்துவிடக் கூடாது. மறுபடியும், இப்பொழுதுள்ள “நவநாகரிக” சமூகத்தில், உலகத்தில், எதனால்-ஏன்-எப்படி இத்தகைய சமூக குற்றங்கள், கொலைகள் முதலியவை நடக்கின்றன என்பதனை தெளிவாக அலச வேண்டியதுள்ளது. 1960களில் பெண் பள்ளி-கல்லூரி செல்கிறாள் என்றால், பள்ளி-கல்லூரிகளில் விட்டு மறுபடியும் கூட்டி வரும் நிலை இருந்தது. 1970களில் அதே பள்ளி-கல்லூரி நண்பவர்களுடன் அனுப்பி வைத்தனர் எனலாம். 1980களில் சைக்கிள், பைக்குகளில் செல்ல ஆரம்பித்தனர். 1990களில் தனியாக செல்ல அனுமதிக்கப்பட்டனர். 2000களில் அதைப் பற்றி பெற்றோர், உற்றோர், மற்றோர் கவலைப்படுவதில்லை எனலாம். 2010களில் எல்லாவற்றையும் செல்போனிலேயே கவனித்துக் கொள்ளலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தனிதனி பள்ளிகள், கல்லூரிகள், வகுப்புகள் என்பதெல்லாம் போய் “கோ-எடுகேஷன்”, இருபாலர்களும் சேர்ந்து படிக்கும் முறை வந்து விட்டது. இந்நிலையில் தான் மாணவ-மாணவியர், ஆண்-பெண் பேசிக்கொள்ளும், பழகிக்கொள்ளும் சந்தர்ப்பங்கள் அதிகமாகின.

Ethiral college girls - Film promotion fest

பாக்கெட் மணி விவகாரமும், எல்லை மீறல்களும்: அப்பொழுதெல்லாம், பெண்களுக்கு போய்-வர பேரூந்து கட்டணம் என்றுதான், ஒரு ரூபாய் / எட்டணா சிலறையாகக் கடுப்பார்கள். அதாவது, பெண்ணிற்கு அதிகமாக பணம் கொடுக்கக் கூடாது, கொடுத்தால், மற்ற விசயங்களுக்கு உபயோகப் படுத்துவாள் என்ற அக்கரை இருந்தது. அது பத்தாகி, நூறாகிவிட்டது. அக்கரை பயமாகி விட்டது, முன்பெல்லாம் வெளியில் சாப்பிட மாட்டார்கள், இப்பொழுது அதுவே பேஷனாகி விட்டது. லஞ்சு-பாக்ஸ் எடுத்துச் செல்வது கூட, அநாகரிகமாக உள்ளது என்ற நிலை வந்துவிட்டது. இதனால், பெண்கள் கான்டீன், ஹோட்டல் என்றெல்லாம் செல்லும் வழக்கம் ஏற்பட்டுவிட்டது. இதெல்லாம், ஆண்-பெண் சந்திப்புகளுக்கு ஏதுவாகின.

Chennai college girls

பொறியியல் கல்லூரி கலாச்சாரம்: பொறியியல் கல்லூரி கலாச்சாரம் வந்த பிறகு, மாணவர்-மாணவியர் சேர்ந்து செல்லும் வழக்கமும் வந்து விட்டது. இங்கு “பொறியியல்” என்பது உருவகமாகப் பயன்படுத்தப் பட்டுள்ளது. பேற்றோர், உற்றோர், மற்றோர்களுக்கு இவையெல்லாம் தெரிந்து, ஏற்றுக் கொண்ட கலாச்சாரமாகி விட்டன. அந்நிலையில், மாணவியர்-இளம்பெண்களை 24 மணி நேரமும் கண்காணித்து வர முடியாது. பெற்றோர்கள் வேண்டுமானால், “அம்மா, நாங்கள் உன்னை நம்பித்தான் இருக்கிறோம், ஜாக்கிரதையாக இரு”, என்று சொல்லத்தான் செய்கிறார்கள். பெரும்பாலான மாணவியர்-இளம்பெண்களும் அவ்வாறே கச்சிதமாக இருந்து வருகிறார்கள். இருப்பினும், சில நேரங்களில், சில மாணவியர்-இளம்பெண்கள் விசயங்களில் மாறுபட்ட விசயங்கள் நடந்து வருகின்றன. என்னத்தான் மாணவ-மாணவியர், இளம் பெண்-இளம் ஆண் நட்பு என்றேல்லாம் சொல்லிக் கொண்டாலும், இயற்கையான ஆண்-பெண் ஈர்ப்புகளில், போட்டி-பொறாமைகளில், ஊந்துதல்களினால், நட்பு என்ற வட்டத்தை மீறி “காதல்” என்பதை விட “காமம்” என்ற மாயையில் சிலர் சிக்கி விடுகிறார்கள். அது போதையாகி விடும் போது, விடுபட தவிக்கிறார்கள். அது குடும்பப் பிரச்சினையாகும் போது, குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன; உடைகின்றன; பெற்றோர்கள் மானம் பார்த்து, உற்வுகளை மறந்து, மறைத்து, எங்கேயோ வேறு ஊர்களுக்குக் கூட சென்று தங்கிவிடுகிறனர்.

The Leather Bar, Nungambakkam High Road, Chennai

பள்ளிகல்லூரிகளுக்கு செல்லும் இளம் பெண்கள் எப்படி இருக்க வேண்டும்?:  கீழ்கண்டவை, பல உண்மையான நிகழ்வுகள், அனுபவங்கள் முதலியற்றின் மீது ஆதாரமாகக் கொடுக்கப் படுகின்றன. இவற்றையெல்லாம், “இடைக்காலத் ததத்துவம்”, “பெண் அடக்குமுறை” என்றெல்லாம் சொல்லி ஒதுக்கி விடமுடியாது:

  1. படிக்க செல்லும் மாணவ-மாணவியர் படிப்பு விவாகரங்களுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். பெற்றோர் எவ்வளவோ கஷ்டப்பட்டு, உங்களை பள்ளியில்-கல்லூரியில் சேர்த்துள்ளனர் என்பதனை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும்.
  2. படிப்பது, படித்து முடிப்பது, நன்றாக தேர்ச்சி பெற்று அதிக மார்க்குகள், கிரேடுகள் எடுப்பதில் தான் உங்களது கவனம் இருக்க்க வேண்டும், அதுதான் உங்களது கடமையாகும்.
  3. பேசுவது, சந்தேகம் கேட்பது, வாத-விவாதங்கள், சமர்பிப்பு போன்ற விவசயங்களும் படிப்போடு நிறுத்திக் கொள்ளவேண்டும். (குறிப்பாக மாணவர்கள்-பையன்களுடன்)
  4. செல்போனில் பேசுவது, போன் நெம்பர்களை அடுத்தவர்களுக்கு கொடுப்பது, பகிர்ந்து கொள்வது முதலியவற்றில் கவனம் வேண்டும். தேவையில்லாமல், யாருடனும் பேச்சை வளர்க்க வேண்டாம். இதில் சிநேகிதிகள்-சிநேகிதர்கள் எல்லோருமே அடக்கம்.
  5. பேஸ்புக், வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைதளங்களிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். “இன்-பாக்ஸ்”, “சேட்டிங்” போன்றவற்றில் ஈடுபட வேண்டாம்.
  6. “குரூப் ஸ்டெடீஸ்”, எடுகேஷனல் டூர், இன்–ஹவுஸ் டிரைனிங், போன்ற சமாசாரங்களில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கூட வரும் குரூப்-ஹெட், மாஸ்டர், இவர்களிடமே எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
  7. கல்லூரி விழாக்கள், இலக்கியம்-இசை-பாட்டு, விளையாட்டு …..போன்ற விவகாரங்களில், எல்லைகளை வரையறுத்துக் கொண்டு, அதற்கு மீறி செல்லக் கூடாது.
  8. கண்ட இடங்களில் நின்று கொண்டு, பேசுவது, சிரித்து கும்மாளம் அடிப்பது போன்றவற்றை நிறுத்தி கொள்ள வேண்டும். இதில் உங்களுக்கு மாணவர்-பையன்களோடு போட்டி தேவையில்லை.
  9. கட் அடித்து எங்கேயாவது (சினிமா போன்றவை மட்டும்) சென்றாலும், திருமணம் போன்ற கொண்டாட்டங்களுக்கு சென்றாலும், ஒழுங்காக, நேரத்தோடு வீட்டிற்கு மாலை 6-7 மணிக்குள் வந்துவிட வேண்டும் என்ற முறையினை கடைபிடிக்க வேண்டும்.
  10. ஒரு மாதிரியாக இருக்கும் சிநேகிதிகள், பெண்கள், கெட்ட பெண்கள்…….முதலியோருடன் சகவாசம் வைத்துக் கொள்ளக் கூடாது. அவர்களை உங்களது நட்பு வட்டத்திலேயே இருக்கக் கூடாது. யாராவது தொடர்பு வைத்திருந்தால், அவளை நீக்கிவிடலாம்.

இவையெல்லாம் கொஞ்சம் தான், ஏனெனில், நடைமுறையில் பிரச்சினை, அடாவடித்தனம், பொறுக்கித்தனம், ஆபத்து….முதலியவை பலவழிகளில், பல உருவங்களில் வரலாம்.

Nellai Mala - Dinakaran

© வேதபிரகாஷ்

28-06-2016

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , ,

பின்னூட்டமொன்றை இடுக