திராவிடத் தாய், கன்னித் தாய், தமிழ்த்தாய், சொந்தத்தாய் முதல் வாடகைத் தாய் வரை! தாய்மை வளர்கிறதா, தேய்கிறதா, தூஷிக்கப் படுகிறதா? (3)


திராவிடத் தாய், கன்னித் தாய், தமிழ்த்தாய், சொந்தத்தாய் முதல் வாடகைத் தாய் வரை! தாய்மை வளர்கிறதா, தேய்கிறதா, தூஷிக்கப் படுகிறதா? (3)

வாடகைத் தாய்தாய் அல்ல: யார் யாரெல்லாம் வாடகைத் தாயாக இருக்க முடியும்? பேறு காலத்தில் வாடகைத்தாய் இறந்தால் அவரது குடும்பத்துக்கு யார் இழப்பீடு கொடுப்பது? குழந்தையை ஏற்கத் தம்பதி மறுத்தால் குழந்தையை யார் ஏற்றுக்கொள்வது? இவற்றையெல்லாம் நெறிமுறைப்படுத்த வேண்டும். எனவே சகல அம்சங்களையும் உள்ளடக்கிய சட்டம் உருவாக்கப்பட வேண்டும். எந்த ஒரு கண்டுபிடிப்பும் யார் கையில் போய்ச் சேருகிறதோ, அதைப் பொறுத்தே அதன் நன்மை தீமைகள் அமைகின்றன. அந்த வகையில் குழந்தையைப் பெற்றுக் கொள்ள வாய்ப்பில்லாத தம்பதியினருக்கு ஒரு நல்வரமாக அமைந்திருக்கும் இந்த மருத்துவ கண்டுபிடிப்பிலும் நன்மைகளும் தீமைகளும் சேர்ந்தே உள்ளன. தீமைகளை மனதில் கொண்டு இதை முற்றிலுமாகத் தடுக்க வேண்டும் என முயல்வதை விட, நன்மைகளை கருத்தில் கொண்டு வாடகைத் தாய் முறையினை சரியான சட்ட திட்டங்களுடன் முறைப்படுத்துவதே சரியான அணுகுமுறையாக இருக்கும். இந்த உலகத்தில் விலை கொடுத்து வாங்கவே முடியாதது ‘அம்மா’ என்ற உறவுதான் என்றுதான் நினைத்திருந்தோம். ஆனால் அம்மா என்ற தொப்புள் கொடி பந்தத்தைக் கூட வாங்கிவிடலாம் என்றநிலைக்கு காலம் மாறிவிட்டது.

வாடகைத் தாய் குழந்தை பெற்றெடுத்தல் சேவை ஆகுமா?: வாடகைத் தாய் விஷயம் ஒரு மருத்துவ முன்னேற்றம் என்றாலும் கூட ஆழமாக வேரூன்றி நிற்கும் கலாச்சார பண்பாட்டின் காரணமாக இம்முறைஇன்னும் அனைவராலும் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ரத்ததானம், உறுப்புதானம் செய்வதுபோல் வாடகைத் தாயாக செயல்படுவதும் ஒரு சேவைதான். குழந்தை பாக்கியம் இல்லாமல் பாதிக்கப்படும் லட்சக்கணக்கான தம்பதியரின் ஏக்கத்தை தீர்த்து, பாதிப்புடைய ஒரு பெண்ணுக்கு வாழ்வளக்கும் புனிதமான காரியத்தைத்தான் வாடகைத் தாய்மார்கள் செய்கிறார்கள் என்று எண்ண வேண்டும். ஆனால், நிச்சயமாக அது அத்தகைய காரியம் அல்ல. மருத்துவ ரீதியில், ஒரு கன்னிப்பெண்ணும், திருமணம் ஆகாத பெண்ணும் அவ்வாறு குழந்தையைப் பெற்றெடுத்தால், அது காட்டி விடும். பிறகு, எந்த ஆணும் அவளை திருமணம் செய்து கொள்ள யோசிப்பான், தயங்குவான், ஒரு வேளை செய்து கொண்டாலும், பிறகு பிரச்சினைகள் ஏற்படும்.

வாடகைத் தாய் ஒப்பந்தம் (Surrogacy Agreement): வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற விரும்புகிறவர்கள் அதற்கான ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்வது இன்று நடைமுறையில் உள்ளது. குழந்தை வேண்டுபவரின் பெயர் மற்றும் விவரங்கள், வாடகைத் தாயின் பெயர் மற்றும் விவரங்கள், எந்தக் காரணத்துக்காக இந்த முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகிறார்கள், எந்த வகையில் வாடகைத் தாய் பராமரிக்கப்படுவார், அதற்கான ஈட்டு ஊதியம், கருச்சிதைவு உள்பட ஏதேனும்  அசம்பாவிதம் சம்பவித்தால் அந்நிலையை சமாளிக்கும் விதம், ஏதேனும் சட்டப் பிரச்னை ஏற்படும் எனில் எந்த நீதிமன்றத்தை (Jurisdiction)  அணுகுவது போன்ற பல விஷயங்கள் குறித்து தெளிவான ஒப்பந்தம் இயற்றுவது அவசியம். பொதுவாக 18 வயது நிரம்பியவரே ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்த முடியும். இதிலும் அப்படியே. ஒப்பந்தத்தில் கையொப்பம்  இடுபவர்கள் சுயமான முடிவு எடுத்திருக்க வேண்டும். எந்தவித கட்டாயமும் இருக்கக் கூடாது. வாடகைத் தாயின் கணவரின் கையொப்பமும் தேவை. இதன் அடிப்படையிலேயே இன்று வாடகைத் தாய் முறை அமலில் உள்ளது. இதற்கான சட்டப் பரிந்துரையில், இன்றைய தேதியில் இருப்பது போல வெளிநாட்டவர்களின் அனுமதி தடை செய்யப்பட வாய்ப்புள்ளது.

பேபி மன்ஜி வழக்கு: (Manji Yamada Vs Union India) 2008 13 Scc 518 (Sc) – இந்த வழக்கு, வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற யத்தனிக்கும் வெளிநாட்டு தம்பதி, குழந்தைப்பேறு காலத்தில் பிரிந்துவிடும் ஒரு நிலையில், குழந்தைக் காப்பாளர் உரிமை யாருக்கு என்ற வினா எழுந்தது. பெரும் போராட்டத்துக்குப் பிறகு குழந்தையின் தந்தையிடம் காப்பாளர் உரிமை கொடுக்கப்பட்டது. அந்நாளில் ஊடகங்களில் பெரும் செய்தியாக இடம் பிடித்த வழக்கு இது. இது போல சில வழக்குகளில் குழந்தையின் குடியுரிமை பிரச்னை நீதிமன்ற கதவுகளைத் தட்டி தீர்வு பெற்றதை பார்த்துள்ளோம். குஜராத் உயர் நீதிமன்றத்தில், ஒரு ஜெர்மன் தம்பதியின் தாய்க்கு கருமுட்டை உற்பத்தியாகாததால், வேறொருவரின் கருமுட்டையுடன் தந்தையின் விந்தணுவுடன் இந்திய வாடகைத் தாய் மூலம் பிறக்கும் குழந்தையின் குடியுரிமை குறித்து வழக்கு வந்தது. தீவிர முயற்சிக்குப் பிறகு இந்திய பாஸ்போர்ட் பெறப்பட்டது.

புதிய சட்டம்: புதிய சட்ட பரிந்துரையில் வெளிநாட்டவர், தனிநபர், ஓரினச் சேர்க்கையாளர் ஆகியோர் வாடகைத் தாய் அமர்த்துவது தடை செய்யப்படலாம். இன்றைய நிலையில் 40 சதவிகிதம் வெளிநாட்டவரும் 30 சதவிகிதம் தனிநபர்களும் இந்தியாவில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுகிறார்கள் என்பது Centre for Social Research (CSR)  அமைப்பின் ஆய்வு முடிவு. புதிய சட்ட மசோதாவின் பரிந்துரையில் வாடகைத் தாயாக இருக்க விரும்பும் பெண் கணவரின் ஒப்புதல் பெற வேண்டும்  என்றுள்ளது. இந்தியாவில் பெரும்பாலும் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள பெண் – கணவனால் கைவிடப்பட்ட பெண் போன்றோர் தான் வறுமையின் காரணமாக வாடகைத் தாயாக செயலாற்ற ஒப்புக்கொள்கிறார்கள்.

வாடகைத் தாயும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்[1]: இதில் பலர் கணவரிடமிருந்து சட்டப்படி  விவாகரத்து பெறாமல் இருப்பவர்கள். இப்படி யிருக்கும் நிலையில் என்ன செய்வது என்கிற பதில் சொல்லப்படாத நிலை. வாடகைத் தாயாக செயல்பட சம்மதிக்கும் பெண்ணே அதற்கான ஊதியம் நிர்ணயிக்க வழிவகை செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கல்வி அறிவு இல்லாத அல்லது குறைந்த அளவே உலக அறிவுள்ள பெரும்பாலான பெண்கள் எவ்வாறு இதை சரிவர நிறைவேற்ற இயலும்? அதோடு, வாடகைத் தாயாகச் செயல்படும் பெண்ணின் உடல்நலம் பேண எவ்வித பரிந்துரையும் இல்லை. குழந்தை ஈன்றவுடன் பிரியும்   சூழலில் ஏற்படும் மன உளைச்சலுக்கான ஆலோசனை அல்லது கருச்சிதைவின்   மூலம் ஏற்படும் உடல், மனரீதியான விளைவுகள் குறித்தும் சரிவர விளக்கவில்லை. இவை தவிர, நிறைய பெண்கள் கருமுட்டை தானத்தில் ஈடுபடுவது குறித்தும் விளக்கப்பட வேண்டும். நம் நாட்டில் பெண்களுக்காக பல பாதுகாப்புச் சட்டங்கள் இயற்றப்பட்டு நடை முறையில் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. எனினும், இச்சட்டங்களால் பயன்பெறும் பெண்களின் பார்வையில் அவை இயற்றப்படாமல் போவதே பல்வேறு சிக்கல்களுக்குக் காரணமாகிறது. தாய்மையைப் போற்றும் இந்த தேசம், வாடகைத் தாய், சேய், குழந்தைக்காக ஏங்கும் அனைவருக்கும் ஒரு தெளிவான சட்டப்பாதுகாப்பு அளிப்பது அவசியம். அதுவரை  வாடகைத் தாய்களை பாதுகாப்பதில் கோட்டை விடாமல் இருந்தால் நலம்[2].

ஆண்-பெண் குழந்தைகள் வளர்ப்பு, இளமை காத்தல் முதலியன:

  1. குழந்தை பிறந்தது முதல் முறையாக வளர்க்கப் படாமல் இருத்தல், சம்ஸ்காரங்கள் போன்ற கிரியைகள் / சடங்குகள் செய்யாமல் இருத்தல் (சீமந்தநயனம், பும்ஸவனம், கர்ப்பதானம், சூடாகர்மம், கர்ணவேதம் முதலியன).
  2. முறையான உணவு உட்கொள்ளாமல் இருத்தல்
  3. வயது வந்த பிறகு, முறையாக பிராச்சரியத்தைக் காப்பாமல் இருப்பது.
  4. மனம்-உடல் இரண்டுமே இயைந்து சீராக வளர வேண்டும். திருமணத்திற்கு தயாராக வேண்டும்.
  5. ஆண்-பெண் ஒப்பீடு, முறைபார்த்தல், என பொருத்தம் பார்த்து கல்யாணம் செய்தல்  முதலியனவும் கவனிக்கப் படவேண்டிய விசயங்கள்.
  6. மனம்-உடல் ரீதியிலான மனோதத்துவ பாவங்களில் ஆயும் போது, இச்சடங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. அதனை, ஆராய்ச்சியாளர்கள் ஏற்றுள்ளனர். ஆனால், இன்று அவை, மூடநம்பிக்கை என்றெல்லாம் சொல்லி செய்யப் படாமல் இருக்கின்றன.
  7. குழந்தை இல்லாத தம்பதியர் ஆலோசனைக்குச் சென்றல், இவையே வேறு விதமாக வற்புருத்தப் படுகின்றன. கட்டடிலை மாற்றிப் போடுவது, கணவன் – மனைவி நன்றான புஷ்டியான உணவு உண்பது, புரிந்து கொண்டு நடப்பது-சேர்வது என்ற இத்யாதிகள் சொல்லிக் கொடுக்கப் படுகின்றன.
  8. எனவே உண்மை அறிய வேண்டும், செயல்படவேண்டும், எல்லாவற்றையும் வியாபாரமாக்க முடியாது.

© வேதபிரகாஷ்

03-04-2022


[1] விகாஷ் பிடியா, வாடகைத் தாய், ஆதாரம் : டாக்டர். மனோகரன்.

[2] https://ta.vikaspedia.in/health/bb5bbebb4bcdb95bcdb95bc8b95bcdb95bc1ba4bcd-ba4bc7bb5bc8bafbbeba9-b95bc1bb1bbfbaabcdbaabc1b95bb3bcd/bb5bbeb9fb95bc8ba4bcd-ba4bbebafbcd

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , ,

பின்னூட்டமொன்றை இடுக