Archive for the ‘பெண் கல்வி’ Category

திராவிடத் தாய், கன்னித் தாய், தமிழ்த்தாய், சொந்தத்தாய் முதல் வாடகைத் தாய் வரை! தாய்மை வளர்கிறதா, தேய்கிறதா, தூஷிக்கப் படுகிறதா? (3)

ஏப்ரல்23, 2022

திராவிடத் தாய், கன்னித் தாய், தமிழ்த்தாய், சொந்தத்தாய் முதல் வாடகைத் தாய் வரை! தாய்மை வளர்கிறதா, தேய்கிறதா, தூஷிக்கப் படுகிறதா? (3)

வாடகைத் தாய்தாய் அல்ல: யார் யாரெல்லாம் வாடகைத் தாயாக இருக்க முடியும்? பேறு காலத்தில் வாடகைத்தாய் இறந்தால் அவரது குடும்பத்துக்கு யார் இழப்பீடு கொடுப்பது? குழந்தையை ஏற்கத் தம்பதி மறுத்தால் குழந்தையை யார் ஏற்றுக்கொள்வது? இவற்றையெல்லாம் நெறிமுறைப்படுத்த வேண்டும். எனவே சகல அம்சங்களையும் உள்ளடக்கிய சட்டம் உருவாக்கப்பட வேண்டும். எந்த ஒரு கண்டுபிடிப்பும் யார் கையில் போய்ச் சேருகிறதோ, அதைப் பொறுத்தே அதன் நன்மை தீமைகள் அமைகின்றன. அந்த வகையில் குழந்தையைப் பெற்றுக் கொள்ள வாய்ப்பில்லாத தம்பதியினருக்கு ஒரு நல்வரமாக அமைந்திருக்கும் இந்த மருத்துவ கண்டுபிடிப்பிலும் நன்மைகளும் தீமைகளும் சேர்ந்தே உள்ளன. தீமைகளை மனதில் கொண்டு இதை முற்றிலுமாகத் தடுக்க வேண்டும் என முயல்வதை விட, நன்மைகளை கருத்தில் கொண்டு வாடகைத் தாய் முறையினை சரியான சட்ட திட்டங்களுடன் முறைப்படுத்துவதே சரியான அணுகுமுறையாக இருக்கும். இந்த உலகத்தில் விலை கொடுத்து வாங்கவே முடியாதது ‘அம்மா’ என்ற உறவுதான் என்றுதான் நினைத்திருந்தோம். ஆனால் அம்மா என்ற தொப்புள் கொடி பந்தத்தைக் கூட வாங்கிவிடலாம் என்றநிலைக்கு காலம் மாறிவிட்டது.

வாடகைத் தாய் குழந்தை பெற்றெடுத்தல் சேவை ஆகுமா?: வாடகைத் தாய் விஷயம் ஒரு மருத்துவ முன்னேற்றம் என்றாலும் கூட ஆழமாக வேரூன்றி நிற்கும் கலாச்சார பண்பாட்டின் காரணமாக இம்முறைஇன்னும் அனைவராலும் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ரத்ததானம், உறுப்புதானம் செய்வதுபோல் வாடகைத் தாயாக செயல்படுவதும் ஒரு சேவைதான். குழந்தை பாக்கியம் இல்லாமல் பாதிக்கப்படும் லட்சக்கணக்கான தம்பதியரின் ஏக்கத்தை தீர்த்து, பாதிப்புடைய ஒரு பெண்ணுக்கு வாழ்வளக்கும் புனிதமான காரியத்தைத்தான் வாடகைத் தாய்மார்கள் செய்கிறார்கள் என்று எண்ண வேண்டும். ஆனால், நிச்சயமாக அது அத்தகைய காரியம் அல்ல. மருத்துவ ரீதியில், ஒரு கன்னிப்பெண்ணும், திருமணம் ஆகாத பெண்ணும் அவ்வாறு குழந்தையைப் பெற்றெடுத்தால், அது காட்டி விடும். பிறகு, எந்த ஆணும் அவளை திருமணம் செய்து கொள்ள யோசிப்பான், தயங்குவான், ஒரு வேளை செய்து கொண்டாலும், பிறகு பிரச்சினைகள் ஏற்படும்.

வாடகைத் தாய் ஒப்பந்தம் (Surrogacy Agreement): வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற விரும்புகிறவர்கள் அதற்கான ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்வது இன்று நடைமுறையில் உள்ளது. குழந்தை வேண்டுபவரின் பெயர் மற்றும் விவரங்கள், வாடகைத் தாயின் பெயர் மற்றும் விவரங்கள், எந்தக் காரணத்துக்காக இந்த முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகிறார்கள், எந்த வகையில் வாடகைத் தாய் பராமரிக்கப்படுவார், அதற்கான ஈட்டு ஊதியம், கருச்சிதைவு உள்பட ஏதேனும்  அசம்பாவிதம் சம்பவித்தால் அந்நிலையை சமாளிக்கும் விதம், ஏதேனும் சட்டப் பிரச்னை ஏற்படும் எனில் எந்த நீதிமன்றத்தை (Jurisdiction)  அணுகுவது போன்ற பல விஷயங்கள் குறித்து தெளிவான ஒப்பந்தம் இயற்றுவது அவசியம். பொதுவாக 18 வயது நிரம்பியவரே ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்த முடியும். இதிலும் அப்படியே. ஒப்பந்தத்தில் கையொப்பம்  இடுபவர்கள் சுயமான முடிவு எடுத்திருக்க வேண்டும். எந்தவித கட்டாயமும் இருக்கக் கூடாது. வாடகைத் தாயின் கணவரின் கையொப்பமும் தேவை. இதன் அடிப்படையிலேயே இன்று வாடகைத் தாய் முறை அமலில் உள்ளது. இதற்கான சட்டப் பரிந்துரையில், இன்றைய தேதியில் இருப்பது போல வெளிநாட்டவர்களின் அனுமதி தடை செய்யப்பட வாய்ப்புள்ளது.

பேபி மன்ஜி வழக்கு: (Manji Yamada Vs Union India) 2008 13 Scc 518 (Sc) – இந்த வழக்கு, வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற யத்தனிக்கும் வெளிநாட்டு தம்பதி, குழந்தைப்பேறு காலத்தில் பிரிந்துவிடும் ஒரு நிலையில், குழந்தைக் காப்பாளர் உரிமை யாருக்கு என்ற வினா எழுந்தது. பெரும் போராட்டத்துக்குப் பிறகு குழந்தையின் தந்தையிடம் காப்பாளர் உரிமை கொடுக்கப்பட்டது. அந்நாளில் ஊடகங்களில் பெரும் செய்தியாக இடம் பிடித்த வழக்கு இது. இது போல சில வழக்குகளில் குழந்தையின் குடியுரிமை பிரச்னை நீதிமன்ற கதவுகளைத் தட்டி தீர்வு பெற்றதை பார்த்துள்ளோம். குஜராத் உயர் நீதிமன்றத்தில், ஒரு ஜெர்மன் தம்பதியின் தாய்க்கு கருமுட்டை உற்பத்தியாகாததால், வேறொருவரின் கருமுட்டையுடன் தந்தையின் விந்தணுவுடன் இந்திய வாடகைத் தாய் மூலம் பிறக்கும் குழந்தையின் குடியுரிமை குறித்து வழக்கு வந்தது. தீவிர முயற்சிக்குப் பிறகு இந்திய பாஸ்போர்ட் பெறப்பட்டது.

புதிய சட்டம்: புதிய சட்ட பரிந்துரையில் வெளிநாட்டவர், தனிநபர், ஓரினச் சேர்க்கையாளர் ஆகியோர் வாடகைத் தாய் அமர்த்துவது தடை செய்யப்படலாம். இன்றைய நிலையில் 40 சதவிகிதம் வெளிநாட்டவரும் 30 சதவிகிதம் தனிநபர்களும் இந்தியாவில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுகிறார்கள் என்பது Centre for Social Research (CSR)  அமைப்பின் ஆய்வு முடிவு. புதிய சட்ட மசோதாவின் பரிந்துரையில் வாடகைத் தாயாக இருக்க விரும்பும் பெண் கணவரின் ஒப்புதல் பெற வேண்டும்  என்றுள்ளது. இந்தியாவில் பெரும்பாலும் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள பெண் – கணவனால் கைவிடப்பட்ட பெண் போன்றோர் தான் வறுமையின் காரணமாக வாடகைத் தாயாக செயலாற்ற ஒப்புக்கொள்கிறார்கள்.

வாடகைத் தாயும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்[1]: இதில் பலர் கணவரிடமிருந்து சட்டப்படி  விவாகரத்து பெறாமல் இருப்பவர்கள். இப்படி யிருக்கும் நிலையில் என்ன செய்வது என்கிற பதில் சொல்லப்படாத நிலை. வாடகைத் தாயாக செயல்பட சம்மதிக்கும் பெண்ணே அதற்கான ஊதியம் நிர்ணயிக்க வழிவகை செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கல்வி அறிவு இல்லாத அல்லது குறைந்த அளவே உலக அறிவுள்ள பெரும்பாலான பெண்கள் எவ்வாறு இதை சரிவர நிறைவேற்ற இயலும்? அதோடு, வாடகைத் தாயாகச் செயல்படும் பெண்ணின் உடல்நலம் பேண எவ்வித பரிந்துரையும் இல்லை. குழந்தை ஈன்றவுடன் பிரியும்   சூழலில் ஏற்படும் மன உளைச்சலுக்கான ஆலோசனை அல்லது கருச்சிதைவின்   மூலம் ஏற்படும் உடல், மனரீதியான விளைவுகள் குறித்தும் சரிவர விளக்கவில்லை. இவை தவிர, நிறைய பெண்கள் கருமுட்டை தானத்தில் ஈடுபடுவது குறித்தும் விளக்கப்பட வேண்டும். நம் நாட்டில் பெண்களுக்காக பல பாதுகாப்புச் சட்டங்கள் இயற்றப்பட்டு நடை முறையில் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. எனினும், இச்சட்டங்களால் பயன்பெறும் பெண்களின் பார்வையில் அவை இயற்றப்படாமல் போவதே பல்வேறு சிக்கல்களுக்குக் காரணமாகிறது. தாய்மையைப் போற்றும் இந்த தேசம், வாடகைத் தாய், சேய், குழந்தைக்காக ஏங்கும் அனைவருக்கும் ஒரு தெளிவான சட்டப்பாதுகாப்பு அளிப்பது அவசியம். அதுவரை  வாடகைத் தாய்களை பாதுகாப்பதில் கோட்டை விடாமல் இருந்தால் நலம்[2].

ஆண்-பெண் குழந்தைகள் வளர்ப்பு, இளமை காத்தல் முதலியன:

  1. குழந்தை பிறந்தது முதல் முறையாக வளர்க்கப் படாமல் இருத்தல், சம்ஸ்காரங்கள் போன்ற கிரியைகள் / சடங்குகள் செய்யாமல் இருத்தல் (சீமந்தநயனம், பும்ஸவனம், கர்ப்பதானம், சூடாகர்மம், கர்ணவேதம் முதலியன).
  2. முறையான உணவு உட்கொள்ளாமல் இருத்தல்
  3. வயது வந்த பிறகு, முறையாக பிராச்சரியத்தைக் காப்பாமல் இருப்பது.
  4. மனம்-உடல் இரண்டுமே இயைந்து சீராக வளர வேண்டும். திருமணத்திற்கு தயாராக வேண்டும்.
  5. ஆண்-பெண் ஒப்பீடு, முறைபார்த்தல், என பொருத்தம் பார்த்து கல்யாணம் செய்தல்  முதலியனவும் கவனிக்கப் படவேண்டிய விசயங்கள்.
  6. மனம்-உடல் ரீதியிலான மனோதத்துவ பாவங்களில் ஆயும் போது, இச்சடங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. அதனை, ஆராய்ச்சியாளர்கள் ஏற்றுள்ளனர். ஆனால், இன்று அவை, மூடநம்பிக்கை என்றெல்லாம் சொல்லி செய்யப் படாமல் இருக்கின்றன.
  7. குழந்தை இல்லாத தம்பதியர் ஆலோசனைக்குச் சென்றல், இவையே வேறு விதமாக வற்புருத்தப் படுகின்றன. கட்டடிலை மாற்றிப் போடுவது, கணவன் – மனைவி நன்றான புஷ்டியான உணவு உண்பது, புரிந்து கொண்டு நடப்பது-சேர்வது என்ற இத்யாதிகள் சொல்லிக் கொடுக்கப் படுகின்றன.
  8. எனவே உண்மை அறிய வேண்டும், செயல்படவேண்டும், எல்லாவற்றையும் வியாபாரமாக்க முடியாது.

© வேதபிரகாஷ்

03-04-2022


[1] விகாஷ் பிடியா, வாடகைத் தாய், ஆதாரம் : டாக்டர். மனோகரன்.

[2] https://ta.vikaspedia.in/health/bb5bbebb4bcdb95bcdb95bc8b95bcdb95bc1ba4bcd-ba4bc7bb5bc8bafbbeba9-b95bc1bb1bbfbaabcdbaabc1b95bb3bcd/bb5bbeb9fb95bc8ba4bcd-ba4bbebafbcd

மலாலா பிரித்தானியப் பள்ளிக்குச் செல்வது என்ன பிரமாதமான விஷயமா?

மார்ச்21, 2013
மலாலா பிரித்தானியப் பள்ளிக்குச் செல்வது என்ன பிரமாதமான விஷயமா?  மலாலா பிரித்தானியப்பள்ளிக்குச் செல்வது என்ன பிரமாதமான விஷயமா?: மலாலா மறுபடியும் பள்ளிக்க்குச் செல்ல ஆரம்பித்து விட்டாள், என்று ஆங்கிலேய ஊடகங்கள் ஓலமிட[1], அதனை இந்திய ஆங்கில ஊடகங்களே வடிக்கட்டி அமுக்கி வாசித்துள்ள போது, தமிழ் ஊடலங்கள் ஏதோ இந்த செய்தியையும் போடலாமே என்று போட்டிருக்கிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் “இன்டிபென்டென்ட்” என்ற ஆங்கிலேய நாளிதழில் வந்ததை அப்படியே “தி ஹிந்து” போட்டிருக்கிறது. ஆமாம், வழக்கம் போல ஏகப்பட்ட விஷயங்களை மறைத்திருக்கிறார்கள்.

மலாலா பிரிட்டன் பள்ளியில் சேர்ப்பு

தினமலர்  – ‎5 மணிநேரம் முன்பு‎
       

லண்டன்: தலிபான்களால் சுடப்பட்ட, பாகிஸ்தான் சிறுமி மலாலா, பிரிட்டனில் உள்ள பள்ளியில், தன் படிப்பை தொடர்கிறாள். பெண்கள் கல்வி உரிமை குறித்து இணையதளத்தில் எழுதியதால், …

மீண்டும் பள்ளிக்கு செல்லத் துவங்கினாள் தாலிபான்களால் …தினகரன்

பள்ளி சென்ற சிறுமி மலாலா

 தலிபான்கள் மட்டுமல்ல,  ஆங்கிலேயர்களும் பெண்களை பள்ளிக்கு அனுப்பாமல்தான் தடுத்திருக்கிறார்கள்: இதுதான் உண்மை. பெண்களை அடக்கி வைத்திருப்பதில், இஸ்லாம் மட்டுமல்ல கிருத்துவமும் பெருத்த பங்கு வகித்துள்ளது. ஆனால், இந்தியாவில் பள்ளிகள் மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வந்துள்ளது. அவற்றிலும் பெண்களும் படித்துள்ளார்கள். பள்ளிகள் மட்டுமல்ல, பல்கலைக்கழகங்களும் இருந்து வந்துள்ளன. தர்மபால் என்பவர், மிகவும் அற்புதமாக விவரங்களை “அழகான மரம்” என்ற தலைப்பில், இந்திய கல்வி பற்றி புத்தகத்தை எழுதியுள்ளார். ஆனால், இவர்கள் தாம், இந்தியர்களை குறைகூறி வருகிறார்கள். விஷயம் தெரியாத, சரித்திரம் அறியாத இக்கால மேனாட்டு அடிவருடிகளும், அப்பொய்யை உண்மையாக பேசி-எழுதி வருகின்றனர்.

 தலிபான்களால் ஏன் பெண்கள் படிப்புத் தடுக்கப் பட்டது?: தலிபான்களால் சுடப்பட்ட, பாகிஸ்தான் சிறுமி மலாலா, பிரிட்டனில் உள்ள பள்ளியில், தன் படிப்பை தொடர்கிறாள். மிகவும் அருமை, ஆனால், மற்ற சிறுமிகளின் கதி என்ன? அவர்களை யார் படிக்க வைப்பார்கள்? ஆப்கானிஸ்தானில் மட்டுமல்லாது, மற்ற இஸ்லாமிய நாடுகளில் ஏன் சிறுமிகள் இவ்வாறான நிலையில் இருக்க வேண்டும். “இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்றால், வட இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் ஏன்”, என்று பகுத்தறிவுவாதிகள் கேள்விகள் கேட்பது உண்டு. இஸ்லாம் பெண்களுக்கு மற்ர எல்லா மதங்களையும் விட மிக அதிகமாக சுதந்திரம், உரிமை எல்லாமே கொடுக்கிறது என்றால், ஏன் இப்படியான நிலை உருவாக்க வேண்டும்? பெண்கள் கல்வி உரிமை குறித்து இணையதளத்தில் எழுதியதால், கடந்த ஆண்டு, தலிபான்களால் சுடப்பட்ட, பாகிஸ்தான் பள்ளி மாணவி, மலாலா யூசுப், 15, சிகிச்சைக்காக, பிரிட்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். அங்கு, தலை மற்றும் முகத்தில் ஏற்பட்ட காயங்களுக்காக, அவருக்கு சிசிச்சையளிக்கப்பட்டது. உடல் நலம் தேறிய மலாலா, கடந்த மாதம் “டிஸ்சார்ஜ்’ ஆனாள். தற்போது, பிரிட்டனின், பர்மிங்ஹாம் நகரில் உள்ள “எட்க்பாஸ்டன்’ பெண்கள் உயர்நிலைப்பள்ளியில்[2]‘, சேர்க்கப்பட்டுள்ளாள்[3].

 மலாலா பெருமையாகச் சொல்லிக் கொண்டது[4]: “நான் மறுபடியும் பள்ளிக்கு செல்லவேண்டும் என்ற கனவு பூர்த்தியானது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். உலகிலுள்ள எல்லா சிறுமிகளும் இந்த அடிப்படை சந்தர்ப்பத்தை அடைய வேண்டும் என்று விரும்புகிறேன். மக்களின் நம்பிக்கையால், நான் இப்பொழுது நடக்க முடிகிறது – என்னால் இப்பொழுது ஓடவும் முடியும். பாகிஸ்தானில் உள்ள தோழிகளை பிரிந்தாலும், பிரிட்டனில் புதிய தோழிகள் கிடைப்பர் என நம்புகிறேன்,” என, அவர் தெரிவித்துள்ளாள். பிரிட்டனில் புதிய தோழிகள் கிடைக்கலாம், ஆனால், பாகிஸ்தானில் வாடும் தோழிகளையும் அவள் நினைவில் வைத்திருப்பாள் என்று நம்பலாம். பிரிட்டன் பள்ளியில், மலாலா கல்வியை தொடர்வது குறித்து, முன்னாள் பிரதமரும், ஐ.நா., கல்வி பிரிவின் தூதருமான, கார்டன் பிரவுன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்[5].

 இங்கிலாந்தில் பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்ட கதையே வேறுவிதமாக இருக்கிறது: 1876ல் துவங்கப்பட்ட இப்பள்ளிதான் பிர்மிங்ஹாமில் உள்ள பெண்களுக்கான பள்ளியாம்[6]. அப்படியென்றால், அதற்கு முன்பாக ஏன் சிறுமிகளுக்கு / பெண்களுக்கு தனியான பள்ளி இல்லை என்ற கேள்வி எழுகிறதே? ஆமாம், ஜூலை 1757ல் பள்ளி இயக்கம் ஆரம்பித்தபோது, சேரிகளில் இருந்த பைன்கள் தாம் படிக்க வந்தார்களாம். அதுவும் “ஞாயிற்றுக் கிழமைப் பள்ளி” என்பதில் பைபிள் தான் பாடப்புத்தகமாம். 19ம் நூற்றாண்டிற்கு முன்பு மிகக்குறைந்த பள்ளிக்கூடங்களே இங்கிலாந்தில் இருந்தனவாம். அதுவும் பெரும்பாலும் கிருத்துவமத போதனைப் பள்லிகளாக இருந்தனவாம். 1814ம் வருடம் தாம் அத்தகைய முறை குறைக்கப்பட்டது. 1931ல் கூட 12,50,000 பிள்ளைகள் “ஞாயிற்றுக் கிழமைப் பள்ளி”களில் படித்து வந்தனர். இவர்கள் ஜனத்தொகையில் 25% ஆகும், அதாவது 75% பிரித்தானியர்கள் படிப்பறிவு இல்லாதவர்களாக இருந்தனர்! 1820ல் தான் சாமுவேல் ஒயில்ட்ஸ்பின் என்பவர் சிறார்பள்ளியை முதலில் ஆரம்பித்தார். இதுதான் ஆங்கில பள்ளியின் முன்னோடி என்றும் சொல்லப்படுகிறது. 1833ல் பாராளுமன்றத்தில் நிதியுதிக்கீடு செய்யப்பட்டு, 1837ல் பொதுப்படிப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. 1848ல் முதல் “குவீன்ஸ் காலேஜ்” என்ற பெண்கள் கல்லூரி லண்டனில் ஆரம்பிக்கப்பட்டது.

© வேதபிரகாஷ்

21-03-2013


[3] The 15-year-old began her first day at Edgbaston High School in Birmingham yesterday –  the city’s oldest independent school for girls – where she will study the full curriculum before selecting her GCSE options next year.

[6] Founded in 1876, Edgbaston High School is Birmingham’s oldest independent school for girls.

http://www.edgbastonhigh.co.uk/about-ehs