Archive for the ‘பெண்களை மதம் மாற்றுவது’ Category

திராவிடத் தாய், கன்னித் தாய், தமிழ்த்தாய், சொந்தத்தாய் முதல் வாடகைத் தாய் வரை! தாய்மை வளர்கிறதா, தேய்கிறதா, தூஷிக்கப் படுகிறதா? (3)

ஏப்ரல்23, 2022

திராவிடத் தாய், கன்னித் தாய், தமிழ்த்தாய், சொந்தத்தாய் முதல் வாடகைத் தாய் வரை! தாய்மை வளர்கிறதா, தேய்கிறதா, தூஷிக்கப் படுகிறதா? (3)

வாடகைத் தாய்தாய் அல்ல: யார் யாரெல்லாம் வாடகைத் தாயாக இருக்க முடியும்? பேறு காலத்தில் வாடகைத்தாய் இறந்தால் அவரது குடும்பத்துக்கு யார் இழப்பீடு கொடுப்பது? குழந்தையை ஏற்கத் தம்பதி மறுத்தால் குழந்தையை யார் ஏற்றுக்கொள்வது? இவற்றையெல்லாம் நெறிமுறைப்படுத்த வேண்டும். எனவே சகல அம்சங்களையும் உள்ளடக்கிய சட்டம் உருவாக்கப்பட வேண்டும். எந்த ஒரு கண்டுபிடிப்பும் யார் கையில் போய்ச் சேருகிறதோ, அதைப் பொறுத்தே அதன் நன்மை தீமைகள் அமைகின்றன. அந்த வகையில் குழந்தையைப் பெற்றுக் கொள்ள வாய்ப்பில்லாத தம்பதியினருக்கு ஒரு நல்வரமாக அமைந்திருக்கும் இந்த மருத்துவ கண்டுபிடிப்பிலும் நன்மைகளும் தீமைகளும் சேர்ந்தே உள்ளன. தீமைகளை மனதில் கொண்டு இதை முற்றிலுமாகத் தடுக்க வேண்டும் என முயல்வதை விட, நன்மைகளை கருத்தில் கொண்டு வாடகைத் தாய் முறையினை சரியான சட்ட திட்டங்களுடன் முறைப்படுத்துவதே சரியான அணுகுமுறையாக இருக்கும். இந்த உலகத்தில் விலை கொடுத்து வாங்கவே முடியாதது ‘அம்மா’ என்ற உறவுதான் என்றுதான் நினைத்திருந்தோம். ஆனால் அம்மா என்ற தொப்புள் கொடி பந்தத்தைக் கூட வாங்கிவிடலாம் என்றநிலைக்கு காலம் மாறிவிட்டது.

வாடகைத் தாய் குழந்தை பெற்றெடுத்தல் சேவை ஆகுமா?: வாடகைத் தாய் விஷயம் ஒரு மருத்துவ முன்னேற்றம் என்றாலும் கூட ஆழமாக வேரூன்றி நிற்கும் கலாச்சார பண்பாட்டின் காரணமாக இம்முறைஇன்னும் அனைவராலும் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ரத்ததானம், உறுப்புதானம் செய்வதுபோல் வாடகைத் தாயாக செயல்படுவதும் ஒரு சேவைதான். குழந்தை பாக்கியம் இல்லாமல் பாதிக்கப்படும் லட்சக்கணக்கான தம்பதியரின் ஏக்கத்தை தீர்த்து, பாதிப்புடைய ஒரு பெண்ணுக்கு வாழ்வளக்கும் புனிதமான காரியத்தைத்தான் வாடகைத் தாய்மார்கள் செய்கிறார்கள் என்று எண்ண வேண்டும். ஆனால், நிச்சயமாக அது அத்தகைய காரியம் அல்ல. மருத்துவ ரீதியில், ஒரு கன்னிப்பெண்ணும், திருமணம் ஆகாத பெண்ணும் அவ்வாறு குழந்தையைப் பெற்றெடுத்தால், அது காட்டி விடும். பிறகு, எந்த ஆணும் அவளை திருமணம் செய்து கொள்ள யோசிப்பான், தயங்குவான், ஒரு வேளை செய்து கொண்டாலும், பிறகு பிரச்சினைகள் ஏற்படும்.

வாடகைத் தாய் ஒப்பந்தம் (Surrogacy Agreement): வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற விரும்புகிறவர்கள் அதற்கான ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்வது இன்று நடைமுறையில் உள்ளது. குழந்தை வேண்டுபவரின் பெயர் மற்றும் விவரங்கள், வாடகைத் தாயின் பெயர் மற்றும் விவரங்கள், எந்தக் காரணத்துக்காக இந்த முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகிறார்கள், எந்த வகையில் வாடகைத் தாய் பராமரிக்கப்படுவார், அதற்கான ஈட்டு ஊதியம், கருச்சிதைவு உள்பட ஏதேனும்  அசம்பாவிதம் சம்பவித்தால் அந்நிலையை சமாளிக்கும் விதம், ஏதேனும் சட்டப் பிரச்னை ஏற்படும் எனில் எந்த நீதிமன்றத்தை (Jurisdiction)  அணுகுவது போன்ற பல விஷயங்கள் குறித்து தெளிவான ஒப்பந்தம் இயற்றுவது அவசியம். பொதுவாக 18 வயது நிரம்பியவரே ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்த முடியும். இதிலும் அப்படியே. ஒப்பந்தத்தில் கையொப்பம்  இடுபவர்கள் சுயமான முடிவு எடுத்திருக்க வேண்டும். எந்தவித கட்டாயமும் இருக்கக் கூடாது. வாடகைத் தாயின் கணவரின் கையொப்பமும் தேவை. இதன் அடிப்படையிலேயே இன்று வாடகைத் தாய் முறை அமலில் உள்ளது. இதற்கான சட்டப் பரிந்துரையில், இன்றைய தேதியில் இருப்பது போல வெளிநாட்டவர்களின் அனுமதி தடை செய்யப்பட வாய்ப்புள்ளது.

பேபி மன்ஜி வழக்கு: (Manji Yamada Vs Union India) 2008 13 Scc 518 (Sc) – இந்த வழக்கு, வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற யத்தனிக்கும் வெளிநாட்டு தம்பதி, குழந்தைப்பேறு காலத்தில் பிரிந்துவிடும் ஒரு நிலையில், குழந்தைக் காப்பாளர் உரிமை யாருக்கு என்ற வினா எழுந்தது. பெரும் போராட்டத்துக்குப் பிறகு குழந்தையின் தந்தையிடம் காப்பாளர் உரிமை கொடுக்கப்பட்டது. அந்நாளில் ஊடகங்களில் பெரும் செய்தியாக இடம் பிடித்த வழக்கு இது. இது போல சில வழக்குகளில் குழந்தையின் குடியுரிமை பிரச்னை நீதிமன்ற கதவுகளைத் தட்டி தீர்வு பெற்றதை பார்த்துள்ளோம். குஜராத் உயர் நீதிமன்றத்தில், ஒரு ஜெர்மன் தம்பதியின் தாய்க்கு கருமுட்டை உற்பத்தியாகாததால், வேறொருவரின் கருமுட்டையுடன் தந்தையின் விந்தணுவுடன் இந்திய வாடகைத் தாய் மூலம் பிறக்கும் குழந்தையின் குடியுரிமை குறித்து வழக்கு வந்தது. தீவிர முயற்சிக்குப் பிறகு இந்திய பாஸ்போர்ட் பெறப்பட்டது.

புதிய சட்டம்: புதிய சட்ட பரிந்துரையில் வெளிநாட்டவர், தனிநபர், ஓரினச் சேர்க்கையாளர் ஆகியோர் வாடகைத் தாய் அமர்த்துவது தடை செய்யப்படலாம். இன்றைய நிலையில் 40 சதவிகிதம் வெளிநாட்டவரும் 30 சதவிகிதம் தனிநபர்களும் இந்தியாவில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுகிறார்கள் என்பது Centre for Social Research (CSR)  அமைப்பின் ஆய்வு முடிவு. புதிய சட்ட மசோதாவின் பரிந்துரையில் வாடகைத் தாயாக இருக்க விரும்பும் பெண் கணவரின் ஒப்புதல் பெற வேண்டும்  என்றுள்ளது. இந்தியாவில் பெரும்பாலும் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள பெண் – கணவனால் கைவிடப்பட்ட பெண் போன்றோர் தான் வறுமையின் காரணமாக வாடகைத் தாயாக செயலாற்ற ஒப்புக்கொள்கிறார்கள்.

வாடகைத் தாயும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்[1]: இதில் பலர் கணவரிடமிருந்து சட்டப்படி  விவாகரத்து பெறாமல் இருப்பவர்கள். இப்படி யிருக்கும் நிலையில் என்ன செய்வது என்கிற பதில் சொல்லப்படாத நிலை. வாடகைத் தாயாக செயல்பட சம்மதிக்கும் பெண்ணே அதற்கான ஊதியம் நிர்ணயிக்க வழிவகை செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கல்வி அறிவு இல்லாத அல்லது குறைந்த அளவே உலக அறிவுள்ள பெரும்பாலான பெண்கள் எவ்வாறு இதை சரிவர நிறைவேற்ற இயலும்? அதோடு, வாடகைத் தாயாகச் செயல்படும் பெண்ணின் உடல்நலம் பேண எவ்வித பரிந்துரையும் இல்லை. குழந்தை ஈன்றவுடன் பிரியும்   சூழலில் ஏற்படும் மன உளைச்சலுக்கான ஆலோசனை அல்லது கருச்சிதைவின்   மூலம் ஏற்படும் உடல், மனரீதியான விளைவுகள் குறித்தும் சரிவர விளக்கவில்லை. இவை தவிர, நிறைய பெண்கள் கருமுட்டை தானத்தில் ஈடுபடுவது குறித்தும் விளக்கப்பட வேண்டும். நம் நாட்டில் பெண்களுக்காக பல பாதுகாப்புச் சட்டங்கள் இயற்றப்பட்டு நடை முறையில் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. எனினும், இச்சட்டங்களால் பயன்பெறும் பெண்களின் பார்வையில் அவை இயற்றப்படாமல் போவதே பல்வேறு சிக்கல்களுக்குக் காரணமாகிறது. தாய்மையைப் போற்றும் இந்த தேசம், வாடகைத் தாய், சேய், குழந்தைக்காக ஏங்கும் அனைவருக்கும் ஒரு தெளிவான சட்டப்பாதுகாப்பு அளிப்பது அவசியம். அதுவரை  வாடகைத் தாய்களை பாதுகாப்பதில் கோட்டை விடாமல் இருந்தால் நலம்[2].

ஆண்-பெண் குழந்தைகள் வளர்ப்பு, இளமை காத்தல் முதலியன:

  1. குழந்தை பிறந்தது முதல் முறையாக வளர்க்கப் படாமல் இருத்தல், சம்ஸ்காரங்கள் போன்ற கிரியைகள் / சடங்குகள் செய்யாமல் இருத்தல் (சீமந்தநயனம், பும்ஸவனம், கர்ப்பதானம், சூடாகர்மம், கர்ணவேதம் முதலியன).
  2. முறையான உணவு உட்கொள்ளாமல் இருத்தல்
  3. வயது வந்த பிறகு, முறையாக பிராச்சரியத்தைக் காப்பாமல் இருப்பது.
  4. மனம்-உடல் இரண்டுமே இயைந்து சீராக வளர வேண்டும். திருமணத்திற்கு தயாராக வேண்டும்.
  5. ஆண்-பெண் ஒப்பீடு, முறைபார்த்தல், என பொருத்தம் பார்த்து கல்யாணம் செய்தல்  முதலியனவும் கவனிக்கப் படவேண்டிய விசயங்கள்.
  6. மனம்-உடல் ரீதியிலான மனோதத்துவ பாவங்களில் ஆயும் போது, இச்சடங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. அதனை, ஆராய்ச்சியாளர்கள் ஏற்றுள்ளனர். ஆனால், இன்று அவை, மூடநம்பிக்கை என்றெல்லாம் சொல்லி செய்யப் படாமல் இருக்கின்றன.
  7. குழந்தை இல்லாத தம்பதியர் ஆலோசனைக்குச் சென்றல், இவையே வேறு விதமாக வற்புருத்தப் படுகின்றன. கட்டடிலை மாற்றிப் போடுவது, கணவன் – மனைவி நன்றான புஷ்டியான உணவு உண்பது, புரிந்து கொண்டு நடப்பது-சேர்வது என்ற இத்யாதிகள் சொல்லிக் கொடுக்கப் படுகின்றன.
  8. எனவே உண்மை அறிய வேண்டும், செயல்படவேண்டும், எல்லாவற்றையும் வியாபாரமாக்க முடியாது.

© வேதபிரகாஷ்

03-04-2022


[1] விகாஷ் பிடியா, வாடகைத் தாய், ஆதாரம் : டாக்டர். மனோகரன்.

[2] https://ta.vikaspedia.in/health/bb5bbebb4bcdb95bcdb95bc8b95bcdb95bc1ba4bcd-ba4bc7bb5bc8bafbbeba9-b95bc1bb1bbfbaabcdbaabc1b95bb3bcd/bb5bbeb9fb95bc8ba4bcd-ba4bbebafbcd

திராவிடத் தாய், கன்னித் தாய், தமிழ்த்தாய், சொந்தத்தாய் முதல் வாடகைத் தாய் வரை! தாய்மை வளர்கிறதா, தேய்கிறதா, தூஷிக்கப் படுகிறதா? (2)

ஏப்ரல்23, 2022

திராவிடத் தாய், கன்னித் தாய், தமிழ்த்தாய், சொந்தத்தாய் முதல் வாடகைத் தாய் வரை! தாய்மை வளர்கிறதா, தேய்கிறதா, தூஷிக்கப் படுகிறதா? (2)

குழந்தையின்மை: தெருவோரம் வசித்தாலும் அரண்மனையில் வாழ்ந்தாலும் குடும்பத்திற்கு அழகு பிள்ளைச் செல்வம். மருத்துவத் தொழில்நுட்பம் வளராத காலத்தில் பிள்ளைப்பேறு இல்லாத தம்பதியினர் கோயில் குளங்களையும், அரச மரத்தையும் சுற்றி வந்து சாமியிடம் பிள்ளை வரம் கேட்டனர். இன்று நிலைமை மாறிவிட்டது. இவ்வாறு நினைப்பது, எழுதுவது தவறு, காலம் தாழ்ந்து குழந்தை பிறப்பதும் நிதர்சனமாகத் தான் உள்ளது. இன்றைக்கு, பணம் சம்பாதிக்க வேண்டும் என்றும் குழந்தைப் பெறுவதை தள்ளிப் போடுகிறார்கள். தத்து எடுப்பு என்ற சாதாரணமான முறையும் இருந்தது. முன்பெல்லாம் குடும்பத்தில், உறவினர்களில் அப்பழக்கம் இருந்தது. பிறகு மற்றவர்களிடமிருந்து தத்து எடுக்கும் போது பிரச்சினைகள் ஏற்பட்டது. உண்மை பெற்றோர் வந்து சொந்தம் கொண்டாடுவது பணம் கேட்பது போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டன. அனாதை இல்லங்கள்போன்றவை,, இதனை ஒரு வியாபாரமாக்கியது. அடிக்கடி மிரட்டி பணம் பறிக்க ஆரம்பித்தன. அதனால், படிப்படியாக தத்து எடுக்கும் முறை குறைந்த்து. குழந்தை இல்லை என்றால் உடனடியாக மகப்பேறு மருத்துவரை நாடுகின்றனர்.

விஞ்ஞான முறையில் கருத்தரித்தல், குழந்தை பெற்றல்: குழந்தைப் பேறு இல்லாமல் போவதற்கு பல காரணங்கள் உண்டு. கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ அல்லது இருவருக்குமோ உள்ள குறைகள் காரணமாக குழந்தைப் பேறு இல்லாத நிலை இருக்கலாம். மருத்துவ முன்னேற்றத்தின் காரணமாக அத்தகைய குறைகளைச் சரி செய்ய வியக்கத்தகு நவீன சிகிச்சை முறைகள் ஏற்பட்டுள்ளன. குழந்தை இல்லாத எண்ணற்ற தம்பதியரின் தலையெழுத்தை மாற்றும் விஞ்ஞான முயற்சியின் காரணமாக விளைந்ததுதான் ‘செயற்கை முறைகருத்தரித்தல்’ என்றழைக்கப்படும் ‘டெஸ்ட் டியூப் பேபி’ சிகிச்சை முறை. இந்த முறையில் கணவனின் விந்துவில் உள்ள வீரியமான உயிரணுவைத் தேர்ந்தெடுத்து மனைவியின் சினைமுட்டையோடு செயற்கையாக டெஸ்ட் டியூபில் சேர்த்துப் பின்னர் மனைவியின் கருப்பையில் வைக்கப்படும். ஆக மனைவியின் கருப்பை நன்றாக இருந்தால் மட்டுமே இந்த முறைசாத்தியப்படும். ஒருவேளை மனைவியின் கருப்பை கருவைத் தாங்கக் கூடிய அளவுக்கு வ|மையானதாக இல்லை என்கிறபட்சத்தில் என்ன செய்வது? இந்தக் கேள்விக்கு விடையாக வந்திருப்பதுதான் ‘வாடகைத்தாய்’ எனும் முறை. ஒரு பெண்ணுக்கு மகப்பேறை அளப்பதில் முக்கியப் பங்கு வகிப்பது கர்ப்பப் பை. கருவைத் தாங்கக்கூடிய அளவுக்கு கர்ப்பப் பை வ|மையானதாக இருத்தல் அவசியம். கர்ப்பப் பை பலவீனமாக இருந்தால் இயல்பான மகப்பேறுக்கு வாய்ப்பில்லாமல் போய் விடும். மேலும் கர்ப்பப் பையில் கட்டி, புற்றுநோய் தாக்கம், அதிக ரத்தப் போக்கு போன்றபல்வேறு காரணங்களால் கர்ப்பப் பை அகற்றப்படுவதாலும் பிள்ளைப்பேறு இல்லாத நிலை ஏற்படும்.

வாடகைத் தாய்: இத்தகைய பிரச்சனைகளுக்குத் தீர்வாக தோன்றியிருப்பதுதான் ‘வாடகைத் தாய்’ என்றபுதிய முறை, கருவைச் சுமக்க முடியாத அளவுக்கு கருப்பை பலவீனமாக உள்ள பெண்ணின் சினை முட்டையையும், அவரது கணவரின் விந்தணுவையும் சோதனைக் கூடத்தில் சேர்த்து, கருவை உருவாக்கி வேறொரு பெண்ணின் கர்ப்பப் பையில் வைத்து கருவை வளர்த்து குழந்தைப் பேறு அளக்க முடியும். இந்த முறையில் கருவை வளர்த்து குழந்தையாக பெற்றுத் தரும் பெண்மணியைத்தான் ‘வாடகைத் தாய்’ என்று அழைக்கிறார்கள். வாடகைத்தாய் விஷயத்தில் இரண்டு முறைகள் உள்ளன. ஒன்று ஜஸ்டேஷனல் வாடகைத்தாய். அதாவது தனக்கு சம்பந்தமில்லாத ஒரு கணவனின் உயிரணு மற்றும் அவரது மனைவியின் சினைமுட்டையோடு சேர்ந்த கருவை தன் கர்ப்பப் பையில் சுமக்கிறார் வாடகைத்தாய்.

இரண்டாவது டிரெடிஷனல் வாடகைத்தாய்: இந்த முறையில் வாடகைத் தாயாக வரும் பெண் ஏதாவது ஒரு விதத்தில் குழந்தைக்கு தொடர்பு உடையவராக இருப்பார். இந்த முறையில் ஆணின் விந்தணு வாடகைத்தாயின் கர்ப்பப் பைக்குள் செலுத்தப்படும். அதாவது தம்பதியரில் அந்த மனைவியின் கருமுட்டையைப் பயன்படுத்த முடியாமல் இருக்கும் சூழ|ல் வாடகைத் தாயாக இருக்கும் பெண்ணின் கருமுட்டையே குழந்தை உருவாக பயன்படுகிறது. மேலை நாடுகளல் மகளுக்காக குழந்தை பெற்றுத் தந்த அம்மாக்களும் உண்டு. அக்கா தங்கைகள் கூட தன் சகோதரிக்காக இந்த முறையில் குழந்தை பெற்றுத் தருவதுண்டு. நம் நாட்டில் இத்தகைய முறையினை ஏற்றுக் கொள்வது சற்று கடினம். வேறுவிதமாகச் சொல்வதாக இருந்தால் முதலாவது முறையில் வாடகைத்தாய் தன் கருப்பையை மட்டுமே கொடுக்கிறாள். உயிரணுவும் சினைமுட்டையும் தம்பதியினருடையது. இரண்டாவது முறையில் வாடகைத்தாய் கருப்பையோடு தன் சினைமுட்டையையும் கொடுக்கிறாள். அதாவது தம்பதியினரில் ஒருவரான கணவனின் உயிரணுவும், வாடகைத்தாயின் சினை முட்டையையும் கொண்டு கரு உண்டாகி குழந்தை பெறுவது.

இந்தியாவில் வாடகைத் தாய் தொழில் நடைபெறுகிறது: பிரபல இந்தி நடிகர் அமீர் கானுக்கு 48 வயது. இவரது மனைவி கிரண் ராவுக்கு 38 வயது. திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இதையடுத்து செயற்கை முறையில் கருவூட்டம் செய்து வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறமுடிவு செய்தனர். அதன்படி அந்த தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து அமீர்கான் அளத்துள்ள பேட்டியில் ‘கடவுளன் அருள், அறிவியன் அற்புதம், நண்பர்களன் அன்பு, ஆதரவு ஆகியவற்றுக்கு தலை வணங்குகிறோம்’ என்று கூறியுள்ளார். பிள்ளையைப் பெற்ற இளம் பெண்களே வாடகைத் தாயாக இருக்கத் தகுதியானவர்கள். பெரும்பாலும் 35 வயதுக்குள்ளாக இருப்பவர்களே விரும்பி ஏற்கப்படுகின்றனர். அவர்களன் உடல் மற்றும் மன ஆரோக்கியம் பரிசோதிக்கப்பட்டு, ரத்தசோகை, புற்றுநோய், காசநோய், பால்வினை நோய் மற்றும் தொற்று நோய் உள்ளட்ட பாதிப்பு இல்லாதவர்களே வாடகைத் தாயாக இருக்க முடியும். வாடகைத் தாய்களாக இருந்து பிள்ளை பெற்றுக் கொடுக்க சம்மதிக்கும் பெண்களும் அதிகரித்து வருகின்றனர். இந்தியாவுக்கு மருத்துவ உலா வருவோரில் பலர் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்தியாவில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவது மலிவானது: இங்கிலாந்து, அமெரிக்கா போன்றநாடுகளல் இந்த முறையில் வாடகைத் தாய்களை அமர்த்த அதிகளவு பணம் தேவைப்படுகிறது. குறைந்த பட்சம் சுமார் எட்டு லட்சம் ரூபாய் செலவிட்டாக வேண்டும். இந்தியாவில் இத்தொகையில் பாதி செலவிட்டாலே போதும் அவர்கள் இந்தியாவுக்கு வந்து, வாடகைத் தாய்க்குப் பணம் கொடுத்து மருத்துவமனைக்கும் கட்டணம் செலுத்திவிட முடியும். தமிழகத்தில் வாடகைத் தாய்மார்களுக்கு ஒரு குழந்தைக்கு 3 லட்சம் வரை கொடுக்கப்படுகிறது. இந்தியாவின் மருத்துவச் சுற்றுலா நகரமாகக் கருதப்படும் பெங்களூரில் கடந்த இரண்டாண்டுகளல் 75 பெண்கள் வாடகைத் தாயார்களாக செயற்பட்டுள்ளனராம். குழந்தையை விரும்பும் தம்பதியினரே, கர்ப்பம் முதல் பிரசவம் வரை வாடகைத்தாயின் பராமரிப்புச் செலவுகளை ஏற்றுக் கொள்வர். பிறக்கப்போகும் குழந்தைககு மனநலப் பிரச்சினை மற்றும் உடல் ஊன பிரச்சினை எதுவாக இருந்தாலும் வாடகைத்தாய் பொறுப்பாக மாட்டார். அதற்கும் குழந்தையை விரும்பும் தம்பதியினரே பொறுப்பேற்றுக் கொள்வார்கள்.

வாடகைத் தாய் உருவாகும் புதிய பிரச்சினைகள்: வாடகைத் தாய்மார்கள் கர்ப்பத்தை சுமக்கும் காலத்தில் அவர்களன் வாழ்வில் நிகழும் பல்வேறு சூழல்கள் அவர்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தலாம். தவறான முடிவெடுத்து குழந்தையை சுமந்து கொண்டிருக்கிறோமோ என்ற மனசஞ்சலம் ஏற்படலாம். அதன் பொருட்டு அவ்வப்போது வாடகைத் தாய்மார்களுக்கு கவுன்ச|ங் அளக்கப்படுகிறது. வாடகைத் தாய் முறையிலும் பல சிக்கல்கள் உள்ளன. சில வருடங்களுக்கு முன்பு ஜப்பானிய தம்பதியர் ஒரு இந்தியப் பெண்ணை வாடகைத் தாயாக்கினர். வாடகைத் தாயின் வயிற்றில் கரு வளர்ந்து கொண்டிருக்கும்போதே ஜப்பானிய தம்பதியர் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். அதன் பிறகு அவர்கள் அந்த குழந்தையை வாங்கிக் கொள்ள இந்தியாவுக்கு வரவில்லை. அது ஒரு பெரிய பிரச்சினையாக உருவெடுத்தது.

வாடகைத் தாய் சட்டச் சிக்கல்கள்: தற்போது வாடகைத்தாய் விவகாரங்கள் வெறும் புரிந்துணர்வு அடிப்படையில்தான் நடக்கிறது. பெரும்பாலோர் உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்களையே வாடகைத் தாயாக ஏற்றுக்கொள்ளத் துணிகிறார்கள். இந்திய மருத்துவத்தில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவது அனுமதிக்கப் பட்டுள்ளதே தவிர இதற்கான சட்டங்கள் இன்னும் உருவாக்கப்படவில்லை.திருமணம் புரியும் தம்பதிகளல் நூற்றுக்குப் பத்து பேர் கருவுறல் பிரச்சனைகளைச் சந்திக்கும் நிலைமை இருந்தும் கூட இன்னமும் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவது குறித்த தெளிவான சட்டமும் நெறிமுறையும் உருவாக்கப்படவில்லை. எதிர்காலத்தில் வாடகைத்தாய் விவகாரம் பல குழப்பங்களை ஏற்படுத்தும். உதாரணமாக ‘நான் தான் குழந்தையைப் பெற்றுக்கொடுத்தேன். எனவே உங்கள் சொத்தில் பங்கு வேண்டும்’ என்று வாடகைத் தாய் வழக்கு தொடரக் கூடும்.

© வேதபிரகாஷ்

03-04-2022

இன்னொரு லியாகத் அலி கான்!

பிப்ரவரி4, 2010

இன்னொரு லியாகத் அலி கான்!

முன்பு லியாகத் அலிகான் என்பவன் பல பெண்களை ஏமாற்றிக் கல்யாணம் செய்து அனைவரையும் கைவிட்டான். காமத்தைத் தவிர, வேறெதுவும் இருந்ததாகத் தெரியவில்லை. அந்நிலையில், இப்படி பெண்கள் தொடர்ந்து ஏமாறுவது ஆச்சரியமாக இருக்கிறது. இந்த குறிப்பிட்ட வழக்கில் முதல் மூன்று பெண்களுமே ஒருவரையொருவர் அறிந்தவர்களே. அதுவும் முஸ்லிம்களாக இருக்கிறார்கள். சட்டப்படி, 1997லேயே, முஸ்லீமாக மாறியவன், நாளைக்கு சட்டப்படி தான் நான்கு பெண்களை திருமணம் செய்து கொண்டது சரிதான் என்று வாதிட்டால், என்னாவது?

தாம்பரத்தில் மைமுன் ஹாசியா (1997), பல்லாவரத்தில் சம்சாத் பேகம்(2003), அஞ்சலி (2005?), அயனாவரத்தில் சரண்யா (2009)

மைமுன் ஹாசியாவின் தோழி சம்சாத் பேகம்: மைமுன் ஹாசியாவின் தோழி சம்சாத் பேகம், திருவேற்காட்டில் கோவிலில் திருமணம்!

சம்சாத் தோழி அஞ்சலி:  சம்சாத் பேகத்தை மணந்து கொண்ட சில மாதங்களிலேயே அவலது தோழி அஞ்சலியுடம்ன் ‘காதல்” என்பது வியப்பாகத் தோன்றுகிறது. “ஏற்கெனவே இரண்டு பெண்களுடன் வாழ்ந்த உன்னை நம்ப முடியாது “, என்று அடிகக்டி சண்டையிட்டு வந்தாளாம்.

அப்துல் ரஹ்மானும், சாந்தகுமாரும்: சென்னையில் 4 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த பெயின்டர் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. சென்னை அயனாவரம் புது நகரை சேர்ந்தர் முரளி. டெய்லராக உள்ளார். இவரது மகள் சரண்யா (21). பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்துள்ளார். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது வீட்டுக்கு சாந்த குமார்(23) என்ற வாலிபர் கடந்த ஆண்டு வந்து, வாடகைக்கு வீடு எடுத்தார்.  தனியார் வங்கியில் வேலைக்குச் செல்வதாக கூறி விட்டு, டிப்டாப்பாக கிளம்புவார். இரவுதான் திரும்புவார். அப்போது சரண்யாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் கடந்த ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி பதிவு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தை பெற்றோருக்கு தெரிவிக்க வேண்டாம் என்று சாந்த குமார் கூறிவிட்டார்.  இவர்கள் பழகுவதைப் பார்த்த முரளி, இருவரையும் கண்டித்துள்ளார். இதனால், இருவரும் கடந்த மாதம் 27ம் தேதி வீட்டை விட்டு வெளியேறினர். அதைத் தொடர்ந்து அயனாவரம் போலீசில் முரளி புகார் செய்தார். போலீசார் விசாரித்த போது, ‘தனக்கும் சரண்யாவுக்கும் பதிவு திருமணம் நடந்துள்ளது. இருவருமே மேஜர்’ என்று ஆதாரங்களை காட்டினார். இருவரும் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்ததால், அவர்களை போலீசார் அனுப்பி விட்டனர்.

1997ல் அப்துல் ரஹ்மான்: தனது மகளுக்கு முறைப்படி திருமணம் செய்து வரவேற்பு நிகழ்ச்சி நடத்த முரளி முடிவு செய்தார். அழைப்பிதழ் கொடுக்க சாந்த குமாரின் உறவினர்கள் முகவரியை முரளி கேட்டார். முன்னுக்குப் பின் முரணாக பேசினார் சாந்தகுமார். இதனால் முரளிக்கு சந்தேகம் ஏற்பட்டு சாந்தகுமாரின் முகவரியை விசாரித்தார். எழும்பூரில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் அவர் வசித்தது தெரியவந்தது. அங்கு அவரது அம்மா மட்டுமே வீட்டில் இருந்தார். அப்பா இறந்து விட்டார். ‘‘1997ம் ஆண்டு தாம்பரத்தில் ஒரு முஸ்லிம் பெண்ணை சாந்தகுமார் திருமணம் செய்ததாக கேள்விப்பட்டேன். அதன்பின் அவனை பார்க்கவில்லை’’ என்று அவரின் அம்மா கூறினார். தாம்பரம் ஜாமாத்தில் விசாரித்தபோது, கடந்த 1997ம் ஆண்டு தன் பெயர் அப்துல்ரகுமான் என்று கூறி மைமுன் ஆசியா என்ற பெண்ணை திருமணம் செய்ததும், அவருக்கு 2 மகன், ஒரு மகள் இருப்பதும் தெரியவந்தது. திருமணத்தின்போது 50 சவரன் நகைகளை வரதட்ச ணையாக வாங்கியுள்ளார். சில ஆண்டுகள் கழித்து துபாய் செல்வதாக கூறி விட்டு பல்லாவரத்தில் சம்சாத் பேகம் என்ற பெண்ணை 2வது திருமணம் செய்துள்ளார். இந்த தகவல் தாமதமாகத்தான் மைமுன் ஆசியாவுக்குத் தெரியவந்தது. சாந்தக்குமாரை தேட ஆரம்பித்தார். அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கிடையில் சரண்யாவை திருமணம் செய்துள்ளார் என்பது தெரியவந்தது.

அயனாவரத்தில் அவர் தங்கியிருந்த அறையை சோதனையிட்டபோது 4வதாக ஒரு திருமணமும் செய்திருக் கிறார் என்ற ஆதாரமும் கிடைத்தது. இது பற்றி போலீசுக்கு தெரிவித்தனர். உதவி கமிஷனர் மோகன்ராஜ், இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் சாந்தகுமாரை கைது செய்தனர். அப்போது தான் ஏற்கனவே 2 திருமணம் செய்ததாகவும், இருவரையும் விவாகரத்து செய்து விட்டதாகவும், அதனால்தான் சரண்யாவை திருமணம் செய்ததாகவும் தெரிவித்தார். வேறு ஒரு பெண்ணுடன் இருப்பதுபோன்ற போட்டோவைக் காட்டி விசாரித்தபோது, அவரை காதலித்ததாகவும், அவர்தன்னை ஏமாற்றி விட்டதாகவும் தெரிவித்தார். ஆனால் அவரது பெயரைக் கூற மறுத்து விட்டார்.  சாந்தகுமார் வங்கியில் வேலை செய்வதாக சரண்யாவிடம் கூறியிருந்தார். விசாரணையில், பெயின்டிங் கான்ட்ராக்ட் எடுத்து செய்து வந்தது தெரியவந்தது. அவர் இன்னும் பல திருமணங்களை செய்தாரா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ‘‘பெண்களை ஏமாற்றி நகை, பணம் பறிப்பதோடு அவர்களது வாழ்க்கையை சூறையாடும் இதுபோன்ற கயவர்களை சும்மா விடக் கூடாது’’ என்று போலீசாரிடம் சரண்யா கதறி அழுதார்.

தாயே மகளை அவ்வாறு துணையாக இருந்தாள் என்பதும் விந்தையே: குறிப்பாக சரண்யாவின் தாய் செல்வியிடம் துபாய் மிடுக்கு காட்டிய சாந்தகுமார், பலவிதமான கதைகளை சொல்லி, ‘உங்கள் மகளை நான் கண்கலங்காமல் பார்த்துக்கொள்கிறேன். துபாய்க்கு கூட்டிச் சென்று ராணி மாதிரி வாழவைக்கிறேன். எனக்கு கல்யாணம் செய்துவையுங்கள்’ என கேட்டார்.  சரண்யாவின் தந்தை இதற்கு சம்மதிக்காத நிலையில் செல்வி இவர்களின் காதலுக்கு ஒப்புதல் தந்துவிட்டார். நல்ல சமயம் பார்த்து யாருக்கும் தெரியாமல் சரண்யாவுடன் பதிவு திருமணம் செய்துவிட்டார் சாந்தகுமார்.  இதையறிந்த தாய் செல்வி, செங்கல்பட்டில் வாடகை வீடு எடுத்து அங்கு சில நாட்கள் தங்கலாம் என முடிவெடுத்தார். கொஞ்ச நாள் கழித்து கணவன் முரளி காதலுக்கு ஒப்புக்கொள்வார் என்றும் திட்டமிட்டுள்ளார். அதன்படி செங்கல்பட்டில் உள்ள மருத்துவமனையில் சில நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டும் என்று முரளியிடம் கூறிவிட்டு சரண்யாவை உடன் அழைத்துக்கொண்டு புறப்பட்டார் செல்வி. செங்கல்பட்டில் மூன்றுபேரும் ஒன்றாக தங்கியிருந்தார்கள். இதற்கிடையே, சந்தேகமடைந்த, செங்கல்பட்டு மருத்துவமனையில் தனது மனைவி மற்றும் மகளை தேடினார். அவர்கள் எங்கும் கிடைக்காததால், முரளி போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் செங்கல்பட்டில் தங்கியிருந்த சாந்தகுமார், சரண்யா மற்றும் செல்வியை கண்டுபிடித்து முரளியிடம் கடந்தவாரம் ஒப்படைத்தனர். அப்போது சாந்தகுமாரின் நடத்தையில் சந்தேகம் இருப்பதாகவும், தனது மகளை மயக்கி ஏமாற்றுவதாகவும் முரளி போலீசில் புகார் கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் தங்கள் பாணியில் விசாரணை நடத்தியபோது சாந்தகுமாரின் லீலைகள் அத்தனையும் அம்பலமானது. ஏற்கனவே மூன்று பெண்களை மணந்து ஏமாற்றியவனை நம்பி ஏமாந்தோமே என சரண்யாவும், தாய் செல்வியும் தலையில் அடித்து அழுதனர்.

திருந்தாத உள்ளங்கள்: இதையடுத்து சாந்தகுமார் மீது அயனாவரம் போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்தனர். மைமூன்ஆசியா, அஞ்சலி, சம்சாத்பேகம் ஆகியோரை திருமணம் செய்த புகைப்படங்கள் மற்றும் ஆதாரங்களையும் போலீசார் கைப்பற்றினார்கள். இந்த ஆதாரங்கள் அடிப்படையிலும், சாந்தகுமாரின் வாக்குமூல அடிப்படையிலும் அவரை அயனாவரம் போலீசார் நேற்று கைது செய்தனர். நேற்று மாலையில் சென்னை எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் புழல் ஜெயிலில் அவர் அடைக்கப்பட்டார். எனினும் வழக்கு விசாரணைக்காக சாந்தகுமார் கவலைப்பட்டதாக தெரியவில்லை. எவ்வித சலனமும் இன்றி அவர் சிறைக்கு சென்றார்.  முன்னதாக சாந்தகுமார் போலீசிடம் வாக்குமூலம் அளிக்கையில், ‘நான் எதையும் திட்டமிட்டு செய்யவில்லை. 4 பேரும் வலிய வந்து என்னை காதலித்தார்கள். திருமணமும் செய்துகொண்டார்கள். அவர்களே காதலித்தார்கள். பின்னர் அவர்களாகவே பிரிந்து சென்றுவிட்டார்கள். இதற்காக நான் கவலைப்படவில்லை. நான் யாரிடமும் பணம் மோசடி செய்யவில்லையே. இது இறைவன் எனக்கு கொடுத்த வாழ்க்கையாகவே கருதுகிறேன். எனது ஜாதகப்படி 5 பெண்களை மணக்க வேண்டும் என்று உள்ளது. இதுவரை அமைந்த மனைவிகள் சரியில்லை. இனிமேல் நல்ல மனைவி அமைவார்’ என்று கூறியுள்ளார்.

இந்துவாக அங்கீகரிக்கக்கோரி மலேசிய கோர்ட்டில் பெண் மனு!

திசெம்பர்25, 2009
இந்துவாக அங்கீகரிக்கக்கோரி மலேசிய கோர்ட்டில் பெண் மனு
டிசம்பர் 25,2009,00:00  IST

http://www.dinamalar.com/world_detail.asp?news_id=4473

கோலாலம்பூர்:மலேசியாவில் வசிக்கும் இந்திய வம்சாவழி பெண், தன்னை இந்துவாக அங்கீகரிக்க கோரி, கோர்ட்டில் மனு செய்தார்.மலேசியாவை சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவரது மனைவி சித்தி ஹாஸ்னா(27).இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மலேசிய கோர்ட்டில் ஹாஸ்னா ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், “நான் ஐந்து வயது சிறுமியாக இருந்த போது தெருவில் சுற்றித் திரிந்தேன்.

பங்காரம்மா என்ற பெயர் கொண்ட என்னை தத்தெடுத்த, சமூகத் தொண்டு அமைப்பினர், சில சடங்குகளை செய்து, என்னை முஸ்லிமாக அறிவித்தனர். சிறுவயதில் புரியாத மொழியில் அவர்கள் சொன்ன வாக்குறுதியை என்னால் பின்பற்ற இயலவில்லை. தற்போது, நான் இந்து மத முறைப்படி வாழ்ந்து வருகிறேன். எனவே, என்னை இந்துவாக அறிவிக்க வேண்டும். முஸ்லிம் மதத்திலிருந்து என்னை விடுவிக்க வேண்டும்’ என ஹாஸ்னா கூறிள்ளார். இந்த மனு குறித்து, இரண்டு வார காலத்திற்குள் பதில் அளிக்கும் படி முஸ்லிம் நல வாரியத்திற்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

———————————————————————————————————————————–இந்நிலையில் அந்நாட்டு மாஜி பிரதம மந்திரி இவ்வாறு கூரியிருப்பதும் நோக்கத்தக்கது!

———————————————————————————————————————————–

‘சொந்த நாட்டின் தொடர்பை விடுங்கள்’: மாஜி பிரதமர் வித்தியாசமான அட்வைஸ்
டிசம்பர் 25,2009,00:00  IST

http://www.dinamalar.com/world_detail.asp?news_id=4471

Top global news updateகோலாலம்பூர்: மலேசியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முஸ்லிம்கள், தங்களின் சொந்த நாட்டுடனான தொடர்பை விட்டுவிட வேண்டும் என, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் மகாதிர் முகமது கூறியுள்ளார்.மலேசியாவில் 22 ஆண்டுகளாக பிரதமராக இருந்தவர் மகாதிர் முகமது. இவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரே. இந்நிலையில், அவர் கூறியுள்ளதாவது:

மலேசியாவில் முஸ்லிமாக மதம் மாறிய பலர், சமூகத்தில் பல பிரச்னைகளைச் சந்திக்கின்றனர். அதற்கு காரணம் அவர்கள் மலாய் மொழி பேச மறுப்பதே. மலேசியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முஸ்லிம்கள் எல்லாம் தங்களின் தாய் மொழியான தமிழ்தான் பேசுகின்றனர். தமிழ் பேசுவதால், மலேசியாவில் உள்ள முஸ்லிம்கள் அவர்களை பாரபட்சமாக நடத்துகின்றனர்.

மேலும், மலேசியாவில் வசிக்கும் இந்திய முஸ்லிம்கள் முழுமையாக மலேசிய கலாசாரத்தை பின்பற்ற மறுக்கின்றனர். முழுமையாக மலாய் மொழி பேசவும் தயங்குகின்றனர். தாய் மொழியான தமிழ் பேசுவதிலேயே ஆர்வம் காட்டுகின்றனர். தமிழ் கலாசாரத்தையே பின்பற்றுகின்றனர். அதனால், இந்தியாவுடனான தங்களின் தொடர்பை மலேசியாவில் வசிக்கும் முஸ்லிம்கள் விட்டுவிட வேண்டும். அப்படிச் செய்வது அவர்களுக்கு நல்லது. இருப்பினும், இதைச் செய்ய வேண்டியது அவர்களே.இவ்வாறு மகாதிர் முகமது கூறினார்.

மதமாற்றத்தை ரத்துச் செய்ய பங்காரம்மா நடவடிக்கை

December 15, 2009, 6:25 pm மலேசியாஇன்று பிரிவு: செய்தி

http://www.malaysiaindru.com/?p=29347

குடும்ப மாதான எஸ் பங்காரம்மா, தாம் சமூக நல இல்லத்தில் இருந்த போது ஏழு வயதில் இஸ்லாத்துக்கு மதமாற்றம் செய்யப்பட்டதை ரத்துச் செய்யுமாறு நீதிமன்ற ஆணையைக் கோரும் விண்ணப்பம் ஒன்றை அடுத்த வாரம் சமர்பிக்கவிருக்கிறார்.

“அந்த நடவடிக்கை, கூட்டரசு அரசியலமைப்பின் 12.4 வது பிரிவு, 1993ம் ஆண்டுக்கான பினாங்கி இஸ்லாமிய விவகார சட்டத்தின் 80 வது பிரிவு ஆகியவற்றின் அடிப்படையில் அமைவதாக அவரது வழக்குரைஞர் கூய் சியாவ் லியூங் கூறினார்.

பெற்றோர்கள் அல்லது பாதுகாவலரின் ஒப்புதல் இல்லாமல் இளம் வயதினரை (மைனர்) எந்த மதத்திற்கும் மாற்றுவதை அரசியலமைப்பு தடை செய்கிறது”, என்று அவர் இன்று மலேசியாகினியிடம் கூறினார்.

“பெற்றோரின் இணக்கம் இல்லாமல் 18 வயதுக்கு உட்பட்ட யாரையும் இஸ்லாத்திற்கு மதமாற்றம் செய்யப்படக் கூடாது என்று பினாங்கு இஸ்லாமியச் சட்டங்கள் கூறுகின்றன.”

சித்தி ஹஸ்னா வங்காரம்மா அப்துல்லா என்னும் முஸ்லிம் பெயரைக் கொண்ட பங்காரம்மா, பேரா, தஞ்சோங் பியாண்டாங்கில் மீனவரான தமது கணவர் எஸ் சொக்கலிங்கம், எட்டு வயதான கனகராஜ், இரண்டு வயதான ஹிஸியாந்தினி ஆகிய இரண்டு பிள்ளைகளுடனும் வாழ்ந்து வருகிறார்.

ஆனால் இந்து முறைப்படி நடைபெற்ற தமது திருமணத்தை பதிவு செய்ய முடியாமல் அவர் தடுமாறுகிறார்.

பினாங்கு சமூக நலத் துறை, தமக்குத் தெரியாமல் 1989ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28 ம் தேதி மதமாற்றம் செய்து விட்டதாக கடந்த மாதம் அவர் கூறியிருந்தார்.

எனினும் 1983ம் ஆண்டு நவம்பர் மாதம் 30ம் தேதி பெற்றோரின் ஒப்புதலுடன் பங்காரம்மா மதமாற்றம் செய்யப்பட்டதாக சமூக நலத் துறை தலைமை இயக்குநர் மெமே ஜைனல் ரஷீட் அதற்கு பதில் அளித்திருந்தார். அப்போது பங்காரம்மாவுக்கு வயது ஒன்று ஆகும்.

அந்தக் கூற்றுக்கு பத்திரப் பூர்வமான ஆதாரத்தையும் கெப்பாளா பத்தாஸில் உள்ள தாமான் பக்தி குழந்தைகள் நல இல்லத்தில் அவரை சேர்ப்பதற்கு 1947ம் ஆண்டு இளம் குற்றவாளிகள் நீதிமன்றச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட நீதிமன்ற உத்தரவுக்கான ஆதாரத்தையும் கோரி கூய் அந்தத் துறைக்குக் கடிதம் எழுதினார்.

மெமே கூறிய நிகழ்வுகளை நிராகரித்த 27 வயதான பங்காரம்மா, தமது பெற்றோர்களான தோட்டத் தொழிலாளர் பி சுப்ரமணியமும் லட்சுமி ராமடுவும் -இருவரும் இந்துக்கள்- தம்மை இஸ்லாத்திற்கு மாற்றவில்லை என்று வலியுறுத்தினார்.

ஆனால் மெமே கூறுவதை ஆதரித்த பினாங்கு இஸ்லாமிய சமய மன்றத் தலைவர் ஷாபுடின் யாஹாயா, அந்த மன்றம் மேற்கொண்ட சோதனைகள் அதனை உறுதி செய்வதாகவும் சமூக நல இல்லத்தில் நடைபெற்ற மதமாற்றம் “பங்காரம்மாவின் மதமாற்றத்தை மறு உறுதி செய்வதற்காகும்” என்று தெரிவித்திருந்தார்.

‘பத்திரங்களில் குளறுபடிகள்’

அண்மையில் அந்தத் துறை தனது கூற்றுக்கு ஆதாரமாக பல பத்திரங்களை இணைத்து பதில் எழுதியிருப்பதாக கூய் கூறினார்.

“ஆனால் அந்தப் பத்திரங்களை அணுக்கமாக ஆராய்ந்த போது பல சட்டப் பிரச்னைகள் மீது குளறுபடிகளும் முரண்பாடுகளும் இருப்பது தெரிய வந்துள்ளது”, என்று அவர் மேல் விவரங்களை தராமல் குறிப்பிட்டார்.

அரசியலமைப்புக்கு முரணாக சட்ட விரோதமாக இளம் வயது நபர் ஒருவருவருடைய மதமாற்றம் சம்பந்தப்பட்டிருப்பதால் பங்காரம்மா விவகாரம் ஒரு சிவில் விஷயம் என்றும் கூய் சொன்னார்.

“இஸ்லாத்திற்கு ஒரு நபர் சுய விருப்பம் இல்லாமல், தெரியாமல்  மாற்றப்பட்ட விஷயம் இதுவாகும். இஸ்லாத்தை கைவிடுவதற்கு நீதிமன்ற ஆணையைக் கோரும் சுயவிருப்பத்தின் பேரில் மதம் மாறிய விவகாரம் அல்ல இது,” என்று அவர் குறிப்பிட்டார்.

நன்றி: “மலேசியா இன்று” தேதி 15-12-2009