ஆபாச வீடியோ ஆசிரியை 2022 வழக்கு 2023ல் விசாரணைக்கு வருவது, நீதிபதி முறையாக தீர்ப்பளித்துள்ளது (2)


ஆபாச வீடியோ ஆசிரியை 2022 வழக்கு 2023ல் விசாரணைக்கு வருவது, நீதிபதி முறையாக தீர்ப்பளித்துள்ளது (2)

பிப்ரவரி 2023ல் வழக்கு விசாரணைக்கு வருவது: மதுரை மாவட்டத்தில் ஒரு அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்தவர் ராதிகா, 45. இவர் சில மாணவர்களுடன் பாலியல் தொடர்பில் ஈடுபடும் ‘வீடியோ’ வெளியானது[1]. இது அவருடன் தகாத நட்பை தொடர்ந்த வீரமணி, 39, என்பவரால் எடுக்கப்பட்டது[2]. அந்த படங்கள், ராதிகா பார்த்து ரசிப்பதற்காக வீரமணியின் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்யப்பட்டிருந்தது. இந்த படங்கள் 2021ல் பலருக்கு பகிரப்பட்டன. போலீசார் வழக்கு பதிந்தனர். வீரமணி, ராதிகா 2022 ஏப்., 1ல் [01-04-2922] கைது செய்யப்பட்டனர். ராதிகாவிடம் இருந்து மொபைல் போன்கள் கைப்பற்றப்பட்டன. இருவரையும் காவலில் எடுத்து விசாரித்த போலீசார், வாக்குமூலம் பதிவு செய்தனர். இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய, 2022 ஜூன் 11ல் மதுரை போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். அந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி இருவர் தரப்பிலும் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுக்களை நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், சுந்தர்மோகன் அமர்வு விசாரித்தது. அரசு தரப்பில், ‘குண்டர் சட்டத்தின் கீழ் கைது உத்தரவில் எந்த தவறும் இல்லை. கைது உத்தரவை எதிர்த்து ராதிகா தரப்பில் அனுப்பிய மனு முறையாக பரிசீலித்து நிராகரிக்கப்பட்டது’ என தெரிவிக்கப்பட்டது.

ஆபாசவீடியோவிவகாரத்தில் ஆசிரியை மீதுகுண்டாஸ்சரியே: உயர் நீதிமன்றம் உத்தரவு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: “வீரமணியை சுதந்திரமாக நடமாட அனுமதித்தால் மக்கள் மனதில் பீதியை ஏற்படுத்தும்; குழந்தைகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும். கைது உத்தரவில் எவ்வித தவறையும் நாங்கள் காணவில்லை. ராதிகா மனு தகுதி அடிப்படையில் ஏற்புடையதல்ல. இரு மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன,” இவ்வாறு உத்தரவிட்டனர். ஆக, நீதிபதி உறுதியாகத்தான் தீர்ப்பு அளித்துள்ளார். இருப்பினும், நிர்மலா, காசி, பொள்ளாச்சி முதலிய வழக்குகள் என்னவாயிற்று என்று தெரியவில்லை. நுங்கம்பாக்கம் கிருத்துவப் பள்ளி வழக்கும் அமுக்கப் பட்டுள்ளது. இவ்வாறு, இத்தகைய சீரியசான விசயங்களில் கூட, சட்டம், நீதி முதலியவற்றை அமூல் படுத்தும் அதிகாரிகள், சம்பந்தப் பட்டவர்கள், ஏதோ காரணங்களுக்காக பாரபட்சமாக செயல்பட்டு வருவது தெரிகிறது. இதனால், சமூகம் மேன்மேலும் சீர்கெட்டுத்தான் போகும். ஆனால், இதைப் பற்றியெல்லாம் கவலைப் படாமல், அவ்வாறு இருப்பதே திகைப்பாக, அதிர்ச்சியாக, கவலையாக இருக்கிறது.

செல்போன் கலாச்சாரத்தில் கற்பு பறிபோகும் நிலையும், வியாபாரமும்: இப்பொழுதெல்லாம் செல்போன் எல்லோரிடத்திலும் உள்ளது எனலாம். சினிமாவை அடுத்து, செல்போன் அனைவரது வாழ்க்கையிலும்  புகுந்து விட்டது. எனெனில், அதில் சினிமாவே வந்து விட்டது. டிவிசெனல்கள், டெலிசீரியல்களும் சேர்ந்து விட்டது. ஆக, இனி ஒரே வீட்டில் ஒன்றிற்கு மேற்பட்ட டிவி என்ற நிலை தாண்டி, குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவரும் செல்போனை வைத்துக் கொண்டு காலம் தள்ளிக் கொன்டிருக்கிறார்கள். இதனால், செல்போன், இன்டர்நெட் வியாபாரிகளுக்குத் தான் வியாபாரம் பெருகி வருகிறதே தவிர, உபயோகிப்பவர்களுக்கு தீமை தான் வந்து சேர்கிறது. புதிய மீடியா தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதற்கும் பயன்படுத்துவதற்கும் காதல், செக்ஸ் மற்றும் காதல் ஆகியவை எப்போதும் முக்கியமானவை என்று அவை வியாபாரமயமாக்கப் படுகின்றன..

ஆபாசம், சமூக வலைப்பின்னல் மற்றும் டேட்டிங் தளங்கள் உலகம் முழுவதும் பிரபலமான இணைய தளங்கள் ஆகி, சமூக ஊடகங்கள் மூலம் பெருகி வருகின்றன. காதல், காமம், கொக்கோகம் என்று மேற்கு நாடுகளில் புதிய பொருளாதாரங்களை உருவாக்குகிறது – நாம் டிண்டர், கிரைண்டர், கீல், ஹிட்ச் மற்றும் ஓக்குப்பிட் யுகத்தில் இருந்து, மேற்கத்தைய கலாச்சாரம் இளைஞர்களைக் கெடுத்து வருகின்றது. வளரும் நாடுகளில் உள்ள ஏழைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தளங்களுக்கு இலவச அணுகலை வழங்கும் ஃபேஸ்புக்கின் இலவச அடிப்படை முயற்சியுடன், அது ஒருங்கிணைக்கப்பட்டது. காதல் உட்பட சமூக நடவடிக்கைகளுக்கான ஒரே இடத்தில் அதன் நிலை. உதாரணமாக, மியான்மரில், குடிமக்கள் இணையத்தைப் பயன்படுத்துகிறீர்களா என்று கேட்கப்பட்டது. பெரும்பாலானவர்கள் எதிர்மறையாகப் புகாரளித்தனர், ஆனால் அவர்கள் பேஸ்புக்கைப் பயன்படுத்துகிறார்களா என்று கேட்டபோது, பதில் மிகப்பெரியதாக இருந்தது. அதாவது, ராணுவ ஆட்சி நடந்தாலும், பொருளாதார நிலை மோசமாக இருந்தாலும், இத்தகைய தொழில்கள் நடந்து வருகின்றன. செக்ஸ், போதை மருந்து, ஆயுதங்கள், கள்ளக் கடத்தல், தீவிரவாதம் என்பவை சேர்ந்து தான் செயல்பட்டு வருகின்றன.

இன்டர்நெட் மூலம் சீரழியும் பெண்கள்: மத பாரம்பரியங்களில் ஈடுபாடு கொண்டுள்ள நாடுகளான, ஜோர்டானில் இருந்து இந்தியா வரை உள்ள ஏழை சமூகங்களில் உள்ள பெரும்பாலான இளைஞர்கள், தங்கள் குடும்ப வட்டத்திற்கு வெளியே ஒரு பெண்ணிடம் பேசவே இல்லை, என்பதில்லை. ஏனெனில், இப்பொழுது செல்போன் எல்லோருடைய கைகளிலும் உள்ளது. எதிர் பாலினத்தவர்களுடன் தொடர்பு கொள்வதற்கான ஒரே வழி ஆன்லைன் அரட்டை தான். அதன் மூலம், இவர்கள் எளிதில் செயல்பட ஆரம்பித்து விடுகிறார்கள். ஆணாதிக்க சமூகங்களில் உள்ள பெண்கள், அநாமதேயம், அணுவாக்கம் மற்றும் சுயாட்சி ஆகியவற்றைத் தேடுவதால், திறந்த சமூகங்களை ஆன்லைனில் எதிர்க்கிறார்கள், இல்லையெனில் இந்த பாலியல் ரீதியாக பிரிக்கப்பட்ட சமூகங்களில் வருவது கடினம்.

பலதார உறவு முதலியன பெண்மை, குடும்பங்களைக் கெடுக்கின்றன: இப்பொழுது, இந்தியாவில் உச்சநீதி மன்ற தீர்ப்புகள் கூட, தாம்பத்தியத்தைத் தாண்டிய உடலுறவு, சேர்ந்து வாழும் முறை, விருப்பத்துடன் செக்ஸ் போன்றவற்றிற்கு சட்டப்படி அனுமதி கொடுத்துள்ள நிலைப்பாடுள்ளதால், பெண்கள் அத்தகைய உடலுறவுகளை வைத்துக் கொள்ள தயாராகி விட்டார்கள். அந்நிலையில், விபச்சாரம் என்பதற்கும் எந்த வரையறையும் கொடுக்க முடியாது. பெண்களையும் அவ்வாறு கணிக்க முடியாது. திருமணம், திருமண முறிவு என்று பலமுறை நடக்கும் பொழுதும், பெண்கள் கற்பு பற்றியெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஒரு ஆணுக்கு மேல் உடலுறவு கொண்ட பிறகு, அது மறக்கப் படுகிறது என்றாகிறது. ஏனெனில், பெண்களும் அவ்விசயத்தில் விருப்பத்துடன் ஈடுபடுகிறார்கள் என்றே ஆகிறது. “கல்யாண மன்னன்” என்பது போல, “கல்யாண ராணி” என்றெல்லாம் கூட ஊடகங்களில் செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதாவது, பணம், சுகமான அல்லது ஆடம்பரமான வாழ்க்கை வாழ வேண்டும் போன்ற காரணங்களுக்கு பெண்களே அவ்வாறு தயாராகி விடுகிறார்கள்.

கேட்பாரற்ற நிலையும், புலம்பல்களும்: அந்நியர்களுடன் நட்பு கொள்வது, போலி அன்பு, ஏமாற்றத்தைக் கண்டறிதல் என்பதெல்லாம் சாதாரணமாகி விட்டது. பணம் சம்பாதிக்க செக்ஸ், செக்ஸ் மூலம் வியாபாரம், வியாபாரத்திற்கு ஆள் சேர்ப்பு, அத்தகைய நிறுவனமாக்கப் பட்ட தொழில்கள், அத்தொழில்களில் ஈடுபடும் ரௌடிகள், குற்றவாளிகள், கிரிமினல்கள், அரசியல் சார்பு கொண்டவர்கள், வேலியை மேய்க்கும் பயிர்கள் முதலியவை அதிகமாகியுள்ள நிலையில், அவையெல்லாமே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. ஊழல் என்பது, இதிலும் புரையோடி விட்டதால், கேட்பாரற்ற நிலையும் உருவாகி விட்டது. ஆக  ஒழுக்கம், நேர்மை, நியாயம், தர்மம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு புலம்புகிறவர்கள் புலம்பிக் கொண்டே இருக்கலாம்.

© வேதபிரகாஷ்

04-02-2023.


[1] Thinamalar, ஆபாசவீடியோவிவகாரத்தில் ஆசிரியை மீதுகுண்டாஸ்சரியே: உயர் நீதிமன்றம் உத்தரவு, Updated : பிப் 02, 2023  07:31 |  Added : பிப் 02, 2023  07:26.

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=3232195

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , ,

பின்னூட்டமொன்றை இடுக