Archive for the ‘உடுமலைப்பேட்டை’ Category

தமிழகத்தில் மறுபடியும் குழந்தை விற்பனை, கடத்தல், தத்தெடுப்பு, ஏற்றுமதி முதலியன! தொழில் தர்மம் திசை மாறி குரூர குற்றங்களாவது [2]

மே5, 2019

தமிழகத்தில் மறுபடியும் குழந்தை விற்பனை, கடத்தல், தத்தெடுப்பு, ஏற்றுமதி முதலியன! தொழில் தர்மம் திசை மாறி குரூர குற்றங்களாவது [2]

30 years business, Rasipuram Govt hospital

டெஸ்ட் டியூப் பேபிகுழந்தை வியாபாரம் தொடர்பு உள்ளதா?: இன்று இந்தியாவில் 100 தம்பதிகளில் 15 தம்பதிகளுக்கு குழந்தை இல்லை என்பது தற்போதைய நிலை. அது பெரிய சதவீதம். இந்தியாவில் இவ்வளவு ஜனத்தொகை இருந்தாலும்கூட 15 சதவீதத்தினருக்கு குழந்தை இல்லை என்பது சீரியசான விஷயம்[1]. இதில் 11 சதவீதம் பேருக்கு சாதாரண மாத்திரை, மருந்து சிகிச்சையில் சரியாகிவிடும். மீதியுள்ள 4 சதவீதத்தினருக்குத்தான் உயர் சிகிச்சை தேவைப்படும். உயர் சிகிச்சை என்றால் டெஸ்ட் டியூப் பேபி மற்ற சிகிச்சைகளுக்கு போகவேண்டி இருக்கும். தற்போதுள்ள காலக்கட்டத்தில் மத்திய தரவர்க்கத்தினர் இதுபோன்ற சிகிச்சைக்கு எளிதாக செல்கின்றனர். காரணம் பேங்க் லோன், சிகிச்சைக்கு பணம் மாத தவணையில் கட்டிவிடலாம் என்பதால் சிகிச்சைக்கு செல்கின்றனர்[2]. இவ்வாறான போர்வையில், குழந்தை வியாபாரம் நடக்கிறதா, என்று கவனிக்க வேண்டும். வாடகைத் தாய் போன்ற எல்லைகளை மீறிய வியாபாரம் பெருகி விட்ட வில்லை, இத்தகைய குழந்தை விற்பனை, அமோகமான லாபத்தைக் கொடுப்பதால், டெஸ்ட் டியூப் பேபி ஆராய்ச்சி கூடங்களும், இம்முறையை கையாள்கிறார்களா என்று கவனிக்க வேண்டும்.

Adoption Act misused in baby sale

தி,இந்துவில் டாக்டர் காமராஜ் கொடுக்கும் விளக்கம்: “செலவுதான் முக்கிய காரணம், சாதாரண தம்பதிகள்  ஒரு லட்ச ரூபாய் செலவு செய்யணும் என்றால் கஷ்டம்தான். அதிலும் வெற்றிகரமாக சிகிச்சைமுடியுமா? என்றால் அது குறைவுதான். அது வெளிநாட்டிலும் உண்டு. அதனால் ஒரு லட்சம், 2 லட்சம் செலவு செய்து சிகிச்சை பலனளிக்காவிட்டால் நம்பிக்கை இழந்துவிடுவார்கள். மீண்டும் சிகிச்சைக்கு வர விரும்ப மாட்டார்கள். அதற்கு பதில் ஏதாவது குழந்தை எதுவும் கிடைக்குமா? என தேட ஆரம்பித்து விடுவார்கள்.இரண்டாவது காரணம் ஆண் குழந்தைகள் மீதுள்ள மோகம், எனக்கு 2 பெண் குழந்தை உள்ளது ஆண் குழந்தை இல்லை என கேட்டு சிகிச்சைக்கு வருகிறார்கள். இந்தியாவில் அப்படி செய்ய தடை உள்ளது என்று திருப்பி அனுப்பி விடுகிறோம். அவர்களும் இதுபோன்று முறைகேடான வழியில் குழந்தைகளை வாங்குகிறார்கள்”.

Baby sale, checking in hospitals

வக்கீல் மூலம் போலி ஆவணம் தயாரிப்பு[3]: குழந்தைகள் விற்பனை விவகாரத்தில், கைது செய்யப்பட்ட சேலத்தை சேர்ந்த வெல்டர் அருள்சாமி அளித்துள்ள வாக்குமூலத்தில், இதுவரை அமுதவள்ளி உள்ளிட்டோருடன் சேர்ந்து கூட்டாக 13 குழந்தைகளை விற்றுள்ளதாகவும்,  கடந்த 20ம் தேதி கூட, கொல்லிமலையில் இருந்து வாங்கிய ஒரு குழந்தையை பெங்களூருவில் விற்பனை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் குழந்தை விற்பனைக்காக, வழக்கறிஞர் மூலம் போலி ஆவணம்  தயாரித்ததாகவும் அருள்சாமி தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இந்த ஆவணங்களை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்[4]. வக்கில்கள் தமிழகத்தில் இந்நிலையில் இருப்பது திகைக்க வைக்கிறது. சட்டத்திற்குப் புறம்பாக நிகழும் இச்செயல்களுக்கு, அவர்கள் துணை போனது / போவது பல கேள்விகளை எழுப்புகின்றன.

Dark or Amul baby baby sale in Tamilnadu-those arrested

ஐபிசி சட்டப் பிரிவுகள்சிறார்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு: குழந்தை கடத்தல், ஏமாற்றுதல் [Sections 370 (2) (4)] மற்றும் 420 – மோசடி செய்து சொத்தை கொடுக்க முயற்சித்தல், 471 – போலி ஆவணங்களைத் தயாரித்தல்-உபயோகப்படுத்துதல், 109 – குற்றத்திற்குத் துணி போனது என்று பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது[5]. சிறார்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது[6]. இதற்குள், இதில் வேறு விவகாரங்கள் மற்றும் பலரின் சம்பந்தங்கள், தொடர்புகள் முதலியவை இருப்பதால், சிபி-சிஐடி பிரிவுக்கு வழக்கு மற்றப்பட்டுள்ளது[7]. டிஜிபியின் ஆணையின் படி, இதற்காக பெண் போலீஸார் உட்பட தனிப்பட அமைக்கப் பட்டுள்ளது[8]. இப்படி, ஏதோ சாதாரண குற்றங்களை செய்தது போலத் தான் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. பெற்றோர்களிடமிருந்து, குழந்தைகளைப் பிறிப்பது, பறிப்பது, விற்பது முதலியன, அத்தகையக் குற்றங்களா அல்லது சமூதாய குரூர தீவிரவாதச் செயல்களா என்று கவனிக்க வேண்டும். பகுத்தறிவுவாதிகள், பெரியாரிஸ்டுகள், மனித உரிமை, குழந்தை உரிமைவாதிகள் என்றெல்லாம் கூப்பாடு போடுகிறவர்களும், இதைப் பற்றியெல்லாம் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை.

Ashiya Mariam, Salem collector - everythig OK- baby adoption

மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் எல்லாமே சரியாக நடக்கின்றன என்கிறார்:  இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம், திங்கள்கிழமை (ஏப்ரல் 29) செய்தியாளர்களிடம் கூறியது[9]: “குழந்தைகள் விற்பனை வழக்கை பொருத்தவரை மூன்று தனிப்படைகள் அமைத்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பெற்றோர்களே முழு சம்மதத்துடன்தான் குழந்தைகளை பிறருக்கு கொடுத்துள்ளனர். என்றாலும், அவை சட்டப்பூர்வமாக இல்லாதது குற்றம்தான். ஆதரவற்ற குழந்தைகள் இல்லங்களில் இருந்து ஏதாவது குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளதா என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆதரவற்ற குழந்தைகள் இல்லங்களும் ரொம்பவே ஸ்டிரிக்டாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. விதிகளை மீறி செயல்பட்டு வந்த நாலைந்து இல்லங்கள், சமூக பாதுகாப்புத்துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டு, மூடப்பட்டு விட்டன. அதனால் ஆதரவற்ற இல்லங்கள் மூலமாக குழந்தைகள் விற்பனை செய்யப்படுவதற்கு வாய்ப்பே இல்லைஇதுவரை கிடைத்த தகவல்களின்படி, எல்லா குழந்தைகளுமே தனியார் இடத்தில் இருந்துதான் விற்கப்பட்டு உள்ளன. பெண் குழந்தைகளோ, ஆண் குழந்தைகளோ அவற்றை வளர்க்க முடியாத பெற்றோர்கள் தமிழக அரசின் தொட்டில் குழந்தைகள் திட்டத்தில் சேர்க்கலாம்குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க விரும்புவோர் நேரடியாக அரசை அணுகலாம். இதற்கென தத்து மையங்கள் உள்ளன. முறையாக விண்ணப்பம் செய்ய வேண்டும். குழந்தைகளை வளர்க்கும் வசதி வாய்ப்புகள் இருக்கின்றதா என்பதை எல்லாம் ஆராய்ந்து குழந்தைகள் சட்டப்பூர்வமாக தத்து கொடுக்கப்படும். வெளிநாட்டு தம்பதிகளும்கூட இங்கே வந்து குழந்தைகளை தத்தெடுக்கலாம்,”. இவ்வாறு ஆட்சியர் ஆசியா மரியம் கூறினார்[10].

Dark or Amul baby baby sale in Tamilnadu

30 வருடங்களாக, ஆண்டவன் புண்ணியத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் பிறந்த குழந்தைகளை விற்பனை செய்து வருவதாக கூறிய அமுதவள்ளி: இங்கு “ஆண்டவன்” என்றால் யார் என்று தெரியவில்லை. இன்று தமிழகத்தை ஆண்டு வரும் திராவிட அரசியல்வாதிகளா அல்லது ஆண்டவனாகிய ஏசுகிருஸ்துவா, ஜேஹோவாவா, வேறொருவரா? “தொட்டில் திட்டம்” பெயரில் முன்னர், இதே போன்ற குழந்தை கடத்தல் வியாபாரம் எல்லாம் 2015ல் நடந்தது. உசிலம்பட்டி பகுதியில் நடந்த அந்த குற்றத்தில் கைதானவர் நிலை என்ன என்று தெரியவில்லை. அதில் சில குழந்தைகள் மோசே மினிஸ்ட்ரியில் விற்கப் பட்டது, ஜேகப் கைதானதும் தெரிந்த விசயமே. ஆனால், பிறகு வழக்கு எனவாயிற்று என்று தெரியவில்லை. ஈவேரா மண், அதற்கு ஈவேரா தான் தெய்வம் என்றால், பெரியார் மண்ணில், இத்தகைய குற்றங்கள் எப்படி நடந்தது என்று தெரியவில்லை. அவரது தடி உபயோகம் செய்தது போல, அதனால் தான்னரசு ஊழியர்கள் இதில் அவரது ஆசியுடன் ஈடுபட்டார்கள் போலும். ஆக, 30 வருடமாக ஆண்டவன் புண்ணியத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் பிறந்த குழந்தைகளை விற்பனை செய்து வருவதாக கூறியுள்ளார்!

© வேதபிரகாஷ்

05-05-2019

Baby sale, checking in hospitals-3

[1] தி.இந்து, குழந்தைகள் கடத்தலும் குழந்தையின்மை காரணங்களும்: டாக்டர் காமராஜ் பேட்டி, Published: 22:20 IST; Updated : 26 Apr 2019 22:20 IST.

[2] https://tamil.thehindu.com/tamilnadu/article26958910.ece

[3] தினகரன், விஸ்வரூபம் எடுக்கும் குழந்தைகள் விற்பனை விவகாரம் கொல்லிமலையில் 50 குழந்தைகள் மாயம்: பகீர் தகவல்கள், 2019-04-29@ 04:02:07

[4] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=491433

[5] The police registered a case under Sections 370 (2) (4) (trafficking of minor), 420 (cheating and dishonestly inducing delivery of property), 471 (using as genuine a forged document), 109 (abetment if the act abetted is committed in consequence) of IPC and Sections 80 (person receives a child without following the procedures) and 81 (person who sells or buys a child for any purpose) of Juvenile Justice (Care and Protection) Act, 2015. Amuthavalli and Ravichandran were produced in the court and lodged in prison.

The Hindu, Child sale racket: driver held for playing ‘middleman’, STAFF REPORTER NAMAKKAL, APRIL 27, 2019 01:28 IST; UPDATED: APRIL 27, 2019 01:28 IST

[6] https://www.thehindu.com/news/national/tamil-nadu/child-sale-racket-driver-held-for-playing-middleman/article26960556.ece

[7] However, with the Tamil Nadu DGP, Thiru Rajendran passing orders transferring the case to the State CB-CID police, in view of its complexity, the case papers so far, which runs into some 250-pages, were formally handed over today to the CB-CID team in the presence of Thiru Arularasu. Following the DGP’s order, the Salem zone CB-CID DSP, Thiru Krishnan, has designated a four-member team including two women police officials to conduct the probe.

DECCAN CHRONICLE. Baby sale case: CB-CID takes over investigation,ZAKEER HUSSAIN

Published May 4, 2019, 5:55 am ISTUpdated May 4, 2019, 5:55 am IST

[8] https://www.deccanchronicle.com/nation/current-affairs/040519/baby-sale-case-cb-cid-takes-over-investigation.html

[9] நக்கீரன், நாமக்கல்லில் எல்லாமே ஸ்டிரிக்ட்தான்! சொல்கிறார் கலெக்டர் ஆசியா மரியம்!!, இளையராஜா, Published on 30/04/2019 (08:06) | Edited on 30/04/2019 (08:14)

[10] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/namakkal-district-rasipuram-amutha-0

தமிழச்சி எட்டாவது திருமணம் செய்ய தீர்மானித்தது – திராவிடத்தின் சாதனையா, குடும்பங்களுக்கு வேதனையா, சமுதாயத்திற்கு சோதனையா?

ஜூன்15, 2016

தமிழச்சி எட்டாவது திருமணம் செய்ய தீர்மானித்தது – திராவிடத்தின் சாதனையா, குடும்பங்களுக்கு வேதனையா, சமுதாயத்திற்கு சோதனையா?

உளுந்தூர்பேட்டை மாரியம்மாள் - 7 திருமணம்ஏழு பேரை ஏமாற்றி திருமணம் செய்த மாரியம்மாள், திருப்பூர் மாவட்டம், பல்லடம் அறிவொளி நகரைச் சேர்ந்த செல்வராஜ்-பழனியம்மாள் தம்பதியின் ஒரே மகள்[1]. முதல் கணவர் கர்ணனிடம் தனது பெயர் மாலதி என்று கூறியும், 7வது கணவரான செல்வகுமாரிடம் பவித்ரா என்று கூறியும் திருமணம் செய்துள்ளார். இந்த திருமண மோசடிக்கு தாராபுரம், உடுமலை, பழனி, திருப்பூர் பகுதிகளைச் சேர்ந்த திருமண புரோக்கர்கள் 9 பேர் உதவி செய்துள்ளனர்[2]. எப்படியோ, இப்பேண் ஏழு பேரை ஏமாற்றியுள்ளாள்[3]. அப்படியென்றால், இத்திருமணங்கள் செய்யப்படுகின்ற அல்லது செய்து வைக்கப்படுகின்ற முறையே கேள்விக்குரியாகிறது. இவர்களது விவரம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்[4]. அவர்கள் திருமண புரோக்கரா அல்லது சமுதாய சீரப்பழிப்பாளர்களா என்று தெரியவில்லை. உண்மையில், இந்த தரகர்கள் அல்லது புரோக்கர்களையும் கைது செய்து தண்டிக்கப்பட வேண்டும்.

உளுந்தூர்பேட்டை மாரியம்மாள் - ஏழு திருமணம்ஜூன் 2016ல் எட்டாவது திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்யும் போது மாட்டிக் கொண்ட மணப்பெண்: அக்டோபர் 2015 முதல் மே 2016 வரை செல்வகுமாருக்கு மனைவியாக இருந்தார். 13-06-2016 அன்று எட்டாவதாக திருமணம் செய்து கொள்ள கனகராஜ் என்பவருடன் தயாரானாள். அதாவது ஒரே மாதத்தில், இன்னொரு கணவன் தயாரானது வினோதமே. மேலும், யாருமே, விவாக ரத்து குறித்து கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. கடைசியாக திருமணம் செய்த செல்வகுமாரையும் கை கழுவி விட்டு எட்டாவதாக இன்னொருவரை மணம் முடிக்க முயன்றபோது தான் போலீசாரிடம் சிக்கியுள்ளார்[5]. 8வது திருமணத்துக்காக பட்டுப் புடவை, நகை உள்ளிட்டவையும் வாங்கப்பட்டுள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், இந்த திருமண மோசடியில் ஏமாந்தவர்கள் யார், யார் என்பது குறித்தும், இதில் முதல் கணவர் கர்ணனுக்கு உள்ள தொடர்பு குறித்தும் மாரியம்மாளிடம் தீவிர விசாரணை நடக்கிறது.

Mariammal marrying many - 7அக்டோபர் 2015ல் திருமணம் செய்து கொண்ட ஏழாவது கணவன் கொடுத்த புகார்: தாராபுரம், கோனப்பன் சோலையை சேர்ந்தவர் செல்வக்குமார், 32; விவசாயி. இவருக்கு, 2015, அக்., மாதம், பழநி போதுப்பட்டியை சேர்ந்த பவித்ரா என்பவருடன் கடந்த திருமணம் நடந்தது. பவித்ரா-செல்வகுமாருக்கு திருமண ஏற்பாடுகளை செய்த புரோக்கர்கள் அவரிடம் இருந்து ரூ.3 லட்சம் பெற்றுள்ளனர்[6]. கடந்த மாதம், மே 27ல், 15 பவுன் நகையுடன், பெற்றோர் வீட்டுக்கு சென்று வருவதாக கூறிச் சென்றார், அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. பவித்ரா காணாமல் போனார்.  இதனால் அதிர்ச்சியடைந்த செல்வக்குமார் தாராபுரம் போலீசில் புகார் செய்தார். விசாரணையில், பவித்ராவின் உண்மையான பெயர் மாரியம்மாள் என்பதும், அவரது முதல் கணவர் பெயர் கர்ணன் என்பதும் தெரியவந்தது. அவர்களுக்கு, இரண்டு குழந்தைகள் உள்ளனர்[7]. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 7 பேரை மோசடியாக திருமணம் செய்து ஏமாற்றியதாக பெண் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பெண்ணின் பெயர் மாரியம்மாள். பல்லடத்தைச் சேர்ந்தவர்[8]. இவர் மீது செல்வக்குமார் என்பவர் போலீஸில் புகார் கொடுத்தார்[9]. அதில், தன்னையும் மேலும் 6 பேரையும் பொய்யான தகவல்களைக் கூறி மாரியம்மாள் திருமணம் செய்து ஏமாற்றியுள்ளார். “அவரிடம் நான் உள்பட 7 பேருமே, பணம், நகைகளை ஏமாந்துள்ளோம். மாரியம்மாளைக் கைது செய்து எங்களிடமிருந்து அவர் பறித்த நகை உள்ளிட்டவற்றைத் திரும்பப் பெற்றுத் தர வேண்டும்”, என்று கூறியிருந்தார்[10].

உளுந்தூர்பேட்டை மாரியம்மாள் - 7 திருமணம்- எட்டாவது தயார்முதல் கணவனும், மனைவியும் சேர்ந்து செய்த கல்யாண மோசடிகள்: பெண் தேடி நீண்ட நாள் திருமணமாகாமல் உள்ள நபர்களை தேடிப்பிடித்து, அவர்களை திருமணம் செய்து கொண்டு, சில நாள் குடும்பம் நடத்தி விட்டு, நகைகளை சுருட்டிக் கொண்டு, மீண்டும் முதல் கணவருடன் செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருப்பது, விசாரணையில் தெரியவந்தது[11]. அதாவது கணவனும் உடந்தை என்று தெரிகிறது. இதனை ஒரு திட்டமாகவே வைத்துக் கொண்டு வியாபாரமாக செய்து வந்துள்ளனர் என்று தெரிகிறது. இதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் மாரியம்மாளைத் தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் உடுமலைப்பேட்டையில் இருப்பதை அறிந்த தனிப்படை போலீஸார் அங்கு விரைந்து வந்தனர். உடுமலைப்பேட்டை பஸ் நிலையத்தில் வைத்து மாரியம்மாள் கைது செய்யப்பட்டார்[12]. ஒரே ஊரைச் சேர்ந்த 7 பேரைத் திருமணம் செய்து நகை, பணத்தை மோசடி செய்ததாக பெண் ஒருவர் கைதாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[13]. அவரிடம் விசாரணை நடத்திய பிறகுதான் உண்மை நிலைமை தெரிய வரும் என்று கூறப்படுகிறது.

முதல் கணவனுடன், எட்டாவது கணவன்– உடன் மனைவி – காட்டிக் கொடுத்த ஏழாவது கணவன்முதல் கணவனுடன், எட்டாவது கணவன் இருந்தது உடன் மனைவி – காட்டிக் கொடுத்த ஏழாவது கணவன்: 13-06-2016 அன்று உடுமலை பஸ் ஸ்டாண்டில் பல்லடம் செல்லும் பஸ்சில் பவித்ரா ஏறி அமர்ந்ததை செல்வகுமார் அடையாளம் காட்டினார். உடனே பஸ்சில் ஏறிய போலீசார், பவித்ராவை கீழே இறங்குமாறு கூறினர். அப்போது கடைசி சீட்டில் இருந்த ஒருவர், ‘என் மனைவிய எதுக்கு கூப்பிடுறிங்க?’ என போலீசிடம் கேட்டார். கூடவே, பவித்ராவின் பக்கத்து சீட்டில் இருந்த ஒருவர் ‘நான்தான் இந்த பொண்ணை கட்டிக்கப்போறேன், என்ன தவறு செய்தார்?’ என கேள்வி எழுப்பினார். இதைக்கேட்டு போலீசாரும், செல்வகுமாரும் அதிர்ச்சி அடைந்தனர். மூவரையும் தாராபுரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரித்தனர். பவித்ரா கூறிய தகவலை கேட்டு போலீசாருக்கு மயக்கம் வராத குறைதான். பஸ்சில் கடைசி சீட்டில் இருந்தவர் பவித்ராவின் முதல் கணவர் கர்ணன் (35) என்பதும், பக்கத்து சீட்டில் இருந்தவர் பவித்ராவுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட கனகராஜ்(42) என்பதும் தெரியவந்தது.

Mariammal marrying many - seven and going for eightமாரியம்மாளின் மாயாஜால மறுமணங்கள்[14]: மாலைமலர், இவ்விவகாரத்தைப் பற்றிய விவரங்களைக் கொடுத்துள்ளது[15]. “சில மாதங்கள் மட்டும் அவர்களுடன் குடும்பம் நடத்தும் பவித்ரா பின்னர் நகை, பணத்துடன் தலைமறைவாவதை தொழிலாக செய்து வந்துள்ளார். பவித்ரா, மாலதி, ஏஞ்சலின் என பல பெயர்களில் மோசடி ராணியாக வலம் வந்த இவர் காந்திநகரை சேர்ந்த கருணாகரன் உள்பட 7 பேரை மணந்து மோசடி செய்துள்ளார். இவரது மோசடிக்கு முதல் கணவர் கருணாகரன் உடந்தையாக இருந்துள்ளார். பவித்ராவின் இந்த மோசடிக்கு திருமண புரோக்கர்கள் சிலரும் உதவி செய்துள்ளனர். மோசடி பணத்தில் பவித்ரா தனது முதல் கணவர் கருணாகரனுடன் உல்லாசமாக வாழ்ந்து வந்துள்ளார். ஷாப்பிங் மால்களுக்கு சென்று விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவது, ஆடம்பரமாக செலவு செய்வது என ஜாலியாக வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது.வாலிபர்களை ஏமாற்றி கிடைக்கும் நகை, பணத்தில் புரோக்கர்களுக்கு குறிப்பிட்ட தொகையை பவித்ரா செலவு செய்ததால் அவர்களும் அடுத்தடுத்து வாலிபர்களின் முகவரியை கொடுத்துள்ளனர். சில புரோக்கர்கள் வாலிபர்களின் ஜாதகத்துக்கு தகுந்தாற்போல பவித்ராவின் ஜாதகத்தையும் போலியாக தயாரித்து கொடுத்து ஏமாற்றியதும் தெரிய வந்தது”.

© வேதபிரகாஷ்

15-06-2016

[1] தினகரன், மணப்பெண் தேடி அலைபவர்களுக்கு பொறி பெயரை மாற்றி 7 இளைஞர்களை மணந்த கில்லாடி பெண், Date: 2016-06-14@ 01:52:29.

[2] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=223918

[3] Hosuronlin.com, She married 7 men to cheat them all…, Posted By: Soosai Prakash A, on: June 14, 2016.

http://hosuronline.com/index.php/married-7-men-cheat/

[4] http://hosuronline.com/index.php/married-7-men-cheat/

[5] தினமணி, 7 பேரை ஏமாற்றி திருமணம் செய்த பெண் கைது, By DN, தாராபுரம், First Published : 14 June 2016 09:14 AM IST.

[6] மாலைமலர், 7 பேரை திருமணம் செய்து நகைபணத்துடன் தலைமறைவு: கல்யாண ராணியின் மோசடிக்கு உடந்தையாக இருந்த புரோக்கர்கள், பதிவு: ஜூன் 15, 2016 10:07

[7] தினமலர், 7 பேரை மணந்து மோசடி சிக்கினார்பலே பெண், ஜூன். 2016.01.12.

[8]  கொங்கு.நியூஸ், 7 பேரை மணந்து மோசடி செய்த பலே பெண்.. உடுமலைப் பேட்டையில் கைது!, பதிவு: ஜூன் 15, 2016.

[9] https://kongunews.in/7-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA/

[10] http://www.dinamani.com/edition_coimbatore/tirupur/2016/06/14/7-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95/article3481843.ece

[11] http://www.dinamalar.com/news_detail.asp?id=1542288

[12] தமிழ்.ஒன்.இந்தியா, 7 பேரை மணந்து மோசடி செய்த பலே பெண்.. உடுமலைப்பேட்டையில் கைது!, By: Sutha, Published: Monday, June 13, 2016, 16:01 [IST]

[13] http://tamil.oneindia.com/news/tamilnadu/woman-arrested-marrying-7-persons-255900.html

[14] மாலைமலர், 7 பேரை திருமணம் செய்து நகைபணத்துடன் தலைமறைவு: கல்யாண ராணியின் மோசடிக்கு உடந்தையாக இருந்த புரோக்கர்கள், பதிவு: ஜூன் 15, 2016 10:07

[15] http://www.maalaimalar.com/News/State/2016/06/15100706/1018960/7-person-marriage-jewelry-and-money-chetting-woman.vpf