Archive for the ‘சரத்குமார்’ Category

புவனேஸ்வரி கைது, தினமலர் செய்தி, நடிகர்-நடிகையர் பேச்சு, பத்திரிக்கையாளர்கள் வழக்கு தொடுத்தல், பத்திரிக்கையாளர் கைது, ஆனால், நடிகர்-நடிகையர் தப்பித்து வருகின்றனர்!

மே25, 2017

புவனேஸ்வரி கைது, தினமலர் செய்தி, நடிகர்நடிகையர் பேச்சு, பத்திரிக்கையாளர்கள் வழக்கு தொடுத்தல், பத்திரிக்கையாளர் கைது, ஆனால், நடிகர்நடிகையர் தப்பித்து வருகின்றனர்!

Bhuwaneswari arrested 2009

விபசார வழக்கில் நடிகை புவனேஸ்வரி கைது (அக்டோபர் 2009): சென்னையில் கடந்த 2009-ம் அக்டோபர்.2 அன்று ஆண்டு விபசார வழக்கில் நடிகை புவனேஸ்வரி கைது செய்யப்பட்டார்[1]. அப்பொழுது தன்னை மற்றும் கைது செய்து, சிறையில் அடைத்து என்று நடவடிக்கைகள் எடுத்த போது, மற்ற நடிகைகளின் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது போல பேசினார். சில நடிகைகளின் பெயர்களையும் குறிப்பிட்டார். விபசார வழக்கில் பிடிபட்ட நடிகை புவனேஸ்வரி, திரையுலகில் விபசாரத்தில் ஈடுபட்டுள்ள மொத்த நடிகைகள் மற்றும் அவர்களுக்கு துணையாக உள்ள முக்கியமான புரோக்கர்களின் பெயர் உள்ளிட்ட ஒட்டுமொத்தப் பட்டியலையும் போலீஸாரிடம் தூக்கிக் கொடுத்து விட்டாராம். போலீஸாரும் இந்தப் பட்டியலிலிருந்து சிலரை தேர்வு செய்து வளைத்துப் பிடிக்க திட்டம் போட்டுள்ளனராம். இது தெரிந்தது முதல் சம்பந்தப்பட்ட நடிகைகள் பெரும் பீதியில் உள்ளனராம். கொஞ்ச நாளைககு அடக்கம் ஒடுக்கமாக இருக்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளனராம்.

Dinamalar-Bhuvaneswari04_10_2009

போலீசாரிடம் லிஸ்ட் கொடுத்தார் என்ற செய்தி: தன்னைக் கைது செய்த போலீசாரிடம், விபச்சாரத்தில் ஈடுபடும் மொத்த நடிகைகளின் பட்டியலும் என்னிடம் உள்ளது. மணிக்கு 2 லட்சம் வாங்கும் டாப் நடிகைகள் பட்டியலைக்கூட வைத்துள்ளேன். அவர்களிடம் போகும் கஸ்டமர்களைக் கூட எனக்குத் தெரியும். அவர்களையெல்லாம் உங்களால் கைது செய்ய முடியுமா? என்று கடுப்பாகக் கேட்டுள்ளார். உடனே போலீசாரும் அந்த லிஸ்டைத் தரச்சொல்ல, ‘தான் சொன்னது சும்மா இல்லை… நிஜம்தான்’ எனும் வகையில் உடனே பட்டியலைக் கொடுத்து விட்டாராம் புவனேஸ்வரி. வெறுமனே பெயரை மட்டும் கொடுக்காமல், எந்தெந்த நடிகை எங்கெங்கு விபச்சாரத்தில் ஈடுபடுகிறார். என்னென்ன ரேட் என்பது உள்பட துல்லியமான ‘டேட்டா பேஸை’யே கொடுத்து முன்னணி நடிகைகளின் ‘பொருளாதார பேஸில்’ கை வைத்து விட்டார் புவனேஸ்வரி. அதில் விபசாரத்தில் ஈடுபடும் 25 முன்னணி நடிகைகள் ஒவ்வொருவருக்கும் என்னென்ன ‘ரேட்’ என்பதையும், எங்கெங்கு வாடிக்கையாளர்களை சந்திக்கிறார்கள் என்ற விவரங்களையும் கொடுத்துள்ளார். ஒரு மணி நேரத்துக்கு ரூ.2 லட்சம் வாங்கும் நடிகைகள், ரூ.1 லட்சம் வாங்கும் நடிகைகள், ரூ.50 ஆயிரம், ரூ.25 ஆயிரம் என்று ‘ரேட்’ வாரியாக பட்டியலை கொடுத்துள்ளார். அவரது பட்டியல்படி, பிரபல நடிகைகள் சிலரது குறைந்தபட்ச ரேட் ரூ.25000 (ஒரு மணி நேரத்துக்கு). இந்தக் கணக்கில்தான் அவர்கள் நகைக்கடை திறப்பு விழா, ஜவுளிக்கடைத் திறப்பு விழா போன்றவற்றுக்கு ரேட் நிர்ணயிப்பார்களாம். இந்தப் பட்டியலில் உள்ள நடிகைகளில் முதல்கட்டமாக 4 பேரை குறிவைத்துள்ளது போலீஸ். இவர்கள் அழகிகளை வைத்து விபசார தொழில் செய்யும் முக்கிய நடிகைகள். ஆனால் இவர்கள் அனைவரும் ரூ.25 ஆயிரம் ‘ரேட்’டில் உள்ளவர்கள். நடிகைகளை பிடிப்பதற்கு தரவேண்டிய பணத்தை போலீசார்தான் தயார் செய்ய வேண்டும். ரூ.25 ஆயிரம் அளவில்தான் தயார் செய்ய முடியும் என்பதால் முதல்கட்டமாக இந்த நடிகைகளை குறி வைத்துள்ளனர்.

Bhuvaneswari statement -- 2009 - Dinamalar

இதுதொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர் ராதாரவி, முதல்அமைச்சர் கருணாநிதிக்கு அனுப்பிய கடிதம் (2009): “கடந்த 1-ந் தேதி அன்று நடிகை புவனேஸ்வரியை காவல்துறையினர் விபசார வழக்கில் கைது செய்துள்ளனர். அவர் போலீசாரிடம் தெரிவித்ததாக, தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகள் பற்றிய அவதூறு செய்திகள்   வெளிவந்ததைக் கண்டு நாங்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தோம். இந்த செய்திகளால் சம்பந்தப்பட்ட நடிகைகளும், அவர்களின் குடும்பத்தினரும், ஒட்டுமொத்த தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களும் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம். கலை உலகின் மூத்தவரும், தமிழ் திரையுலகினர் மீதும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மீதும் என்றும் மரியாதை வைத்திருக்கும் தாங்கள் முதல்வராக இருக்கும்போது இப்படி ஒரு செய்தியை ஊடகங்கள் வெளியிடுவது எங்களுக்கு மிகவும் வருத்தமாக உள்ளது.

What the actors spoke - 2009 photo

கருணாநிதி தலையிட வேண்டும்!: “எனவே, இதுகுறித்து தாங்கள் தகுந்த நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்று தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் அனைவர் சார்பாக உங்களை அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் அனுமதியுடன் தமிழக காவல்துறை தலைவரிடமும் சென்னை போலீஸ் கமிஷனருக்கு தகுந்த நடவடிக்கை எடுப்பதற்காக இந்த மனுவின் நகலை அளிக்கிறோம்”, என்று கேட்டுக் கொண்டுள்ளனர். இவ்விசயம் முதலமைச்சர் வரை போக வேண்டிய அவசியம், அவசரம், முக்கியத்துவம் இருந்ததா? எத்தையோ பிரச்சினைகள் இருக்கும் போது, அவற்றையெல்லாம் விட்டு விட்டு, கருணாநிதி, இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பார்? நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் ஊரில் இல்லாததால் அவர் வந்தவுடன் இந்த விவகாரம் குறித்து நடிகர் சங்கம் ஆலோசனை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வந்தன. இதில் அரசியல், பெருந்தலைவர்கள், அதிகாரிகள் முதலியோர் சம்பந்தப்பட்டிருப்பது, கொடுக்கப் படும் விளம்பரமும், செய்திக் கட்டுப்பாடுகளும் நன்றாகவே எடுத்துக் காட்டுகின்றன.

complain_bhuwa

இப்பொழுது 2017ல் அடக்கி வாசிக்கு ஊடகங்கள்: இதனால், பெருத்த பிரச்சினை ஆகியது. இது குறித்தும், மற்ற நடிகைகள் குறித்தும் ஒரு பத்திரிகையில் 3.9.2009 தினத்தந்தி] / அக்டோபர் 3-ஆம் தேதி  [தினமணி] அன்று செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. தினமலரில் அச்செய்தி வெளியானது[2]. இதற்கு சினிமா நடிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக 07-10-2009ல் நடத்தப்பட்ட சென்னை தென்னிந்திய திரைப்பட சங்க கூட்டத்தில் நடிகர்கள் –

1.        சரத்குமார்,

2.       சத்யராஜ்,

3.       சூர்யா,

4.       விஜயகுமார்,

5.        விவேக்,

6.       அருண்விஜய் மற்றும்

7.        இயக்குனர் சேரன்,

8.       நடிகை ஸ்ரீபிரியா

ஆகியோர் பத்திரிகையாளர்களை மிக தரக்குறைவாகவும், அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்த செய்தியும் சம்பந்தப்பட்ட பத்திரிகையில் வெளியிடப்பட்டு இருந்தது.

விபசாரம் பற்றி நடிகையர்நடிகர்கள் ஏன் கோபமடைகின்றனர்?[3]: நடிகையர் மற்றும் நடிகர்களின் பேச்சுகளை, கீழ்கண்ட தளங்களில் வெளியிடப்பட்டன[4]: அவர்களின் பேச்சோடு, அவர்களது கண்கள், கை-கால்கள், மற்றும் முகபாவங்களை உன்னிப்பாகக் கவனித்தேன். வாய்-அசைவுகள், வார்த்தை பிரயோகங்கள், உச்சரிப்புகள், வயற்றிலிருந்து ஆக்ரோஷமாக வரும் விதம், உண்மையிலேயே எனக்கு ஆச்சரியம்தான்.

  1. ரஜினிகாந்த் பேசியவிதம், அவரைப் பற்றிய மதிப்பே மாறிவிட்டது. ஆன்மீகம் என்றதெல்லாம் போலி என்று நன்றாகத் தெரிந்து விட்டது. மக்களை ஏமாற்றுவதில் இவருக்கும், கருணாநிதிக்கும் எந்த வேறுபாடும் இல்லை.

ரஜினிகாந்த்: தமிழச்சிகள்……கற்பு……………….நிச்சயமாக அவர்கள் விபசாரிகள்தாம்………வயற்றுப் பிழைப்பிற்காக நடத்துகிறார்கள்…………. அவர்கள் போட்டோவை போடவேண்டாம்.

  1. சூர்யா: ……………………..பின்னால் ஓடுதல்……………ஈனப்பிறவி…………
  2. விவேக்: ………………..சொறிநாய்…………………….வொங்கம்மா……………….படம் போட்டு ஒட்டுவேன்………..
  3. ஸ்ரீபிரியா: பாஸ்டர்ட். ஆங்கிலத்தில் கெட்ட வார்த்தையில் பேசியதோடு, “ஈனப்பிறவிகள்’
  4. சத்யராஜ்: …………..ஸ்ரீபிரியா சொன்னதை தமிழில் மொழிபெயர்த்து சொல்லி அதனை நாம் எல்லோரும் ஆமோதிக்கவேண்டும்……………….உள் காயம் தெரியாமல் அவர்களை அடிக்க வேண்டும்’.
  5. அருண் விஜய், “பத்திரிகை அலுவலகத்தில் புகுந்து அடித்து நொறுக்கி, எழுதியவரை அடித்து இழுத்து வந்து இவுங்க (மஞ்சுளா) காலில் விழ வைப்பேன்’ என்று கூறியுள்ளார்.
  6. நடிகர் சரத்குமார், “என்னைப் பற்றி எழுதியபோது, அந்தப் பத்திரிக்கை ஆபீசை 200 பேரோட போய் “அட்டாக்’ பண்ணினேன்’ என்று பேசியுள்ளார்.
  7. நடிகர் சேரன் பேசுகையில், “ராஸ்கல்ஸ், உன் வீட்டுப்பிள்ளை ஓடிப்போகும் போது தெரியும்டா வலி’ என்று கூறியுள்ளார்.

ஆச்சரியம்தான், 90% நிர்வாணமாக நடிக்கும்போது, ஐந்தில் நான்கை என்றோ மறந்த போது, பாக்கி ஒன்றைப் பற்றிக் கேள்வி எழும்போது, வருகிறது, கோபம், ஆக்ரோஷம், கொதிப்பு, வெறி……………..எல்லாம். முலைகளைக் காட்டிக் கொண்டு, குலுக்கிக் கொண்டு ஆபாசநடனங்கள், கேவலமான இரட்டை-பொருள் கொண்ட வேசித்தன வசனங்கள், பரத்தைத்தனத்தை வெளிகாட்டும் பாலல்கள் இனற்றையெல்லாம் நாடு முழுவதும் சுவர்களில், தியேட்டர்களில், தொலைகாட்சிகளில், …………….வெளிவரும்போது, பெருமையாகவா உள்ளனா?[5].

 

© வேதபிரகாஷ்

25-05-2017

actors_permission

[1] தினமலர், நடிகர்கள் டிவாரன்ட், மே.24, 2017. 03.33 pm

[2] http://cinema.dinamalar.com/tamil-news/59530/cinema/Kollywood/Warrent-against-8-actors-including-Suriya-and-Sarathkumar.htm

[3] http://www.indiaglitz.com/channels/tamil/gallery/events/19677.html

[4] http://indiainteracts.in/movies/tamil/gallery_new/events/1/nadigar_sangam_dinamalar.html

[5]https://womanissues.wordpress.com/2009/10/14/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/