Archive for the ‘தரகர்’ Category

தமிழகத்தில் திருமணப் பதிவு சட்டம் கட்டாயமாக்கப் பட்ட நிலை, போலி திருமணங்கள் அதிகமாக நடப்பது, பின்னணி என்ன? (1)

செப்ரெம்பர்29, 2022

தமிழகத்தில் திருமணப்பதிவு சட்டம் கட்டாயமாக்கப்பட்ட நிலை, போலி திருமணங்கள் அதிகமாக நடப்பது, பின்னணி என்ன? (1)

தமிழகத்தில் திருமணப்பதிவு சட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது: 2009ஆம் வருடம் நவம்பர் மாதம் 24ஆம் தேதி கொண்டு வரப்பட் டது. அந்தத் தேதிக்குப் பிறகு, மாநிலத் தில் நடக்கிற அனைத்து திருமணங்களும், திருமணத் தேதியிலிருந்து 90 நாட்களுக்குள் கட்டாயமாகப் பதிவு செய்யப்பட வேண்டும், என இந்தச் சட் டம் சொல்கிறது. அதன்படி திருமணம் நடந்த 90 நாட்களுக்குள் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் குற்ற வழக்கு தொடரப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு தமிழ்நாடு திருமணங்கள் பதிவுச்சட்டம் 2009ன்படி பல மதங்களைச் சார்ந்த இந்திய குடிமக்களின், 24.11.2009 முதல் தமிழகத்தில் நடைபெறும் அனைத்து திருமணங்களையும் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்.இந்திய இந்து திருமணங்கள் சட்டம் 1955, இந்திய கிறிஸ்துவ திருமணச் சட்டம் 1872, சிறப்புத் திருமணச் சட்டம் 1954, முகம்மதியர்கள் ஷரியத் திருமணச் சட்டம் மற்றும் வேறு எந்த தனிப்பட்ட சட்டங்களின் கீழ் திருமணம் பதிவு செய்திருந்தாலும் இச்சட்டத்தின் பிரிவு 3ன் கீழும் கட்டாயமாக பதிவு செய்யப்படவேண்டும்.

திருமணம் ஆன 90 நாட்கள் முதல் 150 நாட்களுக்குள் தங்கள் திருமணத்தை பதிவுசெய்ய வேண்டும்: “தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம் 2009-ன் படி திருமணப்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தின்படி திருமணம் முடிந்த தம்பதிகள் 90 நாட்கள் முதல் 150 நாட்களுக்குள் தங்கள் திருமணத்தை பதிவுசெய்ய வேண்டும். திருமணத்தைப் பதிவு செய்யாதவர்கள் அரசின் திருமண உதவித் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கமுடியாது. 150 நாட்களுக்குள் பதிவு செய்யாதவர்கள் பின் எப்போதுமே தங்கள் திருமணத்தைப் பதிவுசெய்ய இயலாது. திருமணத்தை பதிவு செய்யாதவர்கள் மீது சட்டப்படி நடிவடிக்கை எடுக்கவும் இந்த சட்டம் வழிவகுத்துள்ளது. 90 நாள்களுக்குள் பதிவு செய்தால் 100 ரூபாய் கட்டணமாகச் செலுத்தவேண்டும். 91 முதல் 150 நாள்களுக்குள் பதிவு செய்தால் அபராதக் கட்டணம் 50 ரூபாயுடன் 150 ரூபாய் செலுத்தவேண்டும். திருமணத்தைப் பதிவு செய்து தருவதாக உங்களை அணுகும் இடைத்தரகர்களை நம்பாதீர்கள். ஆயிரக்கணக்கான ரூபாய்களை பறித்துவிடுவார்கள். இப்படி குறிப்பிட்டாலும் தரகர்களின் ராஜ்ஜியம் தான் வழக்கம் போல கொடிக் கட்டிப் பறக்கிறது.

சார்பதிவாளர்கள் திருமண பதிவாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளது: இச்சட்டத்தின்படி,

  1. பதிவுத் துறைத் தலைவர்,
  2. மாவட்டப் பதிவாளர்கள் அனைவரும் மற்றும்
  3. சார் பதிவாளர்கள் அனைவரும்

திருமணப் பதிவாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இத்தகு திருமணப் பதிவிற்கான குறிப்பாணை படிவம் ‘ஒ’ மற்றும் இதனுடன் இணைக்கப்படவேண்டிய விண்ணப்பபடிவம் ஆகியவை இலவசமாக அனைத்து பதிவு அலுவலகங்களிலும் வழங்கப்படும். கட்டாய திருமணப்பதிவிற்கான விவரங்கள் மற்றும் படிவங்கள் துறையின் இணையதளத்தில் http://www.tnreginet.net வெளியிடப்பட்டுள்ளன. இதிலிருந்தும் படிவங்களை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். திருமணப்பதிவிற்கான குறிப்பாணை படிவம் மற்றும் விண்ணப்பத்தினை எவ்வித விடல்களோ அல்லது பிழைகளோ இன்றி பூர்த்தி செய்து, மணமக்கள், திருமணம் நடத்தி வைத்தவர் மற்றும் இரு சாட்சிகளின் கையொப்பத்துடன், திருமணம் நடைபெற்றதற்கான ஆதாரம், இருப்பிட மற்றும் வயது தொடர்பான ஆதார ஆவணங்களுடன், திருமணம் நடைபெற்ற 90 நாட்களுக்குள் ரூ.100/ கட்டணத்துடன் (90 நாட்களுக்கு மேற்படின், ரூ.150/-) திருமணம் நடைபெற்ற இடம் அமைந்துள்ள எல்லைக்குட்பட்ட திருமணப் பதிவாளரிடம் (சார் பதிவாளர்) அளிக்கப்பட அல்லது அஞ்சல் வழி அனுப்பப்பட வேண்டும். மேலும், திருமணத்திற்கான சாட்சிகளின் முகவரி மற்றும் ஆளறியும் அடையாள சான்று நகல்கள் இணைக்கவேண்டும். இந்த விண்ணப்பம் மற்றும் இணைக்கப்பட்ட ஆதாரங்கள் முறையாக இருப்பின், சம்பந்தப்பட்ட திருமணப்பதிவாளர் மனுதாரருக்கு ஒப்புதல் அளிப்பார். எந்த சாதி மற்றும் மதமாயிருப்பினும், மேற்குறிப்பிட்டவாறு உரிய நாளில் பதிவு செய்யாவிடில் அல்லது தவறான தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்தால் அல்லது விதி மீறல் இருப்பதாகத் தெரிந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்றவழக்கு தொடரப்பட்டு, நிரூபிக்கப்படின், அபராதம் விதிக்கப்படும்.

உண்மையான மணமக்கள் தொல்லைக்குள்ளாகிறார்கள்: உண்மையாக திருமணம் செய்து கொண்டு, பதிவு செய்ய வருபவர்களிடம் ஆதார் கார்டு, வீட்டு முகவரிக்காக ரேஷன் கார்ட், டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட் என்று பலவித ஆவணங்கள் கேட்கிறார்கள். இவை மணப்பெண், மாப்பிள்ளை, மற்றும் இவர்களின் பெற்றோர் என்று அனைவரின் ஆவணங்களையும் கேட்டுப் பெற்று, சரிபார்க்கிறார்கள். நேரில் வரசொல்கிறார்கள். மணமகன், மணமகள், அவர்களின் பெற்றோர்கள் சகிதம் தாலுகா ஆபிசில் ஆஜராகி, மணிக்கணக்கில் உட்கார வேண்டும். கூப்பிடும் போது, இரண்டு-மூன்று முறை உள்ளே செல்ல வேண்டும், கேட்ட கேள்விகலுக்கு பதில் சொல்லி கையெழுத்துப் போட வேண்டும். அத்தகைய செயல்களில் கமா, புள்ளி, பெயர்கள் இடைவெளி இருந்தால் கூட தப்பு கண்டு பிடிப்பார்கள், கேள்வி கேட்பார்கள். ஆனால், கடைசியில், எல்லாம் சரியாக இருந்தால் கூட காசு வாங்காமல் வேலை செய்வதில்லை. தரகர் மூலமாக கவனிக்கப் படுகிறது. பீஸ் என்று தாகர் பல-ஆயிரங்களை வாங்கிக் கொள்வது தான் நிதர்சனம். பிறகு இவையெல்லாம் மற்றவர்களுக்கும் அமூல் படுத்த வேண்டும் இல்லையா?

வழக்கறிஞர்கள் மற்றும் தரகர்களின் வேலை என்ன?: வழக்கறிஞர்கள் இன்றைக்கு, திருமணப் பதிவில் இறங்கி நன்றாக சம்பாதிக்க ஆரம்பித்துள்ளனர். தினமும், குறிப்பிட்டப் பகுதிகளில் திருமணங்கள் நடக்கின்றன, என்பதனை வைத்துக் கொண்டு, அது வியாபாரமயமாக்கப் பட்டு விட்டது. சாதி, மதம் மறுப்பு திருமணம் என்று கூட்டங்கள் வேலை செய்து கொண்டிருக்கின்றன. தாலிக்குத் தங்கம், உதவித் தொகை, என திட்டங்கள்…..எஸ்.சி சான்றிதழ் வைத்துக் கொண்டு சலுகை, சர்ச்சில் திருமணம்….., ஜாதி மறுப்பு எனல், அதற்கும் சலுகை-பணம் பெறல்…..இப்படி அரசியல், அரசாங்கம் என்றால், கல்யாண மன்னன்கள், ராணிகள் தனிப்பட்ட முறையில் கொள்ளையடிக்க கிளம்பி விட்டார்கள்[1]. பலதார திருமணங்கள் எப்படி நடக்கின்றன என்பதும் திகைப்பாக இருக்கிறது. இத்தகைய பாலியல் சட்டமீறல்கள், உண்மையில், குற்றங்கள் என்றே கொள்ளலாம். ஏனெனில், இவற்றில் ஆயிரக்கணக்கான பெண்கள் பாதிக்கப் படுகின்றனர். ஒரு  பெண் தானாகவே செய்கிறாள் அல்லது, யாறரோ வற்புருத்தி செய்ய வைக்கிறார்கள், கும்பலாக சேர்ந்து அத்தகைய மோசடிகளை செய்கிறார்கள் என்று கொண்டால், அத்தகைய கும்பல்கள் ஊக்குவிக்கப் படக் கூடாது.

விபச்சாரம் போல நடப்பதை தடுக்கவேண்டும்: ஒருவிதத்தில் விபச்சாரம் என்றாலும், அதனை திருமணம் செய்து கொண்டு செய்கிறார்கள்[2]. விபச்சாரம் என்று செய்தால் அது சட்டவிரோதம்[3]. இப்படி செய்தால், அதுவும் கிடைக்கும், இதுவும் கிடைக்கும்[4]. திருமண சான்றிதழ் வேறு! இதனால் தான், வகை-வகையாக செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன[5]. அவற்றில் உண்மை எது, பொய் செய்து, திட்டம் போட்டு செய்தது எது என்றெல்லாம் ஆராய்ச்சியும் செய்ய முடியாது. ஆக, திருமண தரகர்கள், கல்யாண புரோகர்கள், தாம்பத்திய இடைதரகர்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒரு வேளை வழக்கறிஞர்கள் மற்றும் இவர்களுக்கு தொடர்புகள் இருக்குமோ என்றும் யோசிக்க வேண்டியுள்ளது. உண்மையான பதிவுக்குச் செல்லும் போது, ஆதார் கார்டு, வீட்டு முகவரிக்காக ரேஷன் கார்ட், டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட் என்று பலவித ஆவணங்கள் கேட்கிறார்கள். சரிபார்க்கிறார்கள். கமா, புள்ளி, பெயர்கள் இடைவெளி இருந்தால் கூட தப்பு கண்டு பிடிக்கிறார்கள். பிறகு, இப்படி ஒரே ஆணுக்கு, அல்லது பெண்ணுக்கு எப்படி பலமுறை திருமணம் செய்ய முடியும், சான்றிதழ் கொடுக்க முடியும்?

© வேதபிரகாஷ்

29-09-2022


[1] இ.டிவி.பாரத், பண மோசடியில் ஈடுபட்ட மனைவி: நடவடிக்கை எடுக்க கோரி கணவர் புகார், Published on April 22, 2021, 1;55 AM IST.

[2] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/erode/erode-sp-office-wage-worker-complains-seeking-action-against-to-wife/tamil-nadu20210422015545648

[3] செய்திபுனல், திருமண புரோக்கரில் இருந்து, அந்த புரோக்கராக மாறி கொள்ளை சம்பாத்தியம் பார்க்கும் கும்பல்……திருமணம் ஆகாதவர்கள் உஷார்…!, Sriramkannan.P, 21-04-2021 02;22;43 AM.

[4] https://www.seithipunal.com/tamilnadu/erode-marriage-brokers-promote-prostitution-brokers-tra

[5] தினமலர், திருமண ஆசைகாட்டி பணம் பறிப்பு; எஸ்.பி.,யிடம் வாலிபர் புகார் , பதிவு செய்த நாள்: ஏப் 21,2021 13:46; https://m.dinamalar.com/district_detail.php?id=2754059