Archive for the ‘பிடதி ஆசிரமம்’ Category

நித்யானந்தாவுடன் செக்ஸ் தொடர்பில்லை, டிவியில் காட்டப்பட்டுள்ள காட்சிகள் கம்ப்யூட்டர் மூலம் சித்தரிக்கப்பட்டவை, அந்த பெண் நான் அல்ல: நடிகை ரஞ்சிதா வாக்குமூலம்!

ஜூலை24, 2010

நித்யானந்தாவுடன் செக்ஸ் தொடர்பில்லை, டிவியில் காட்டப்பட்டுள்ள காட்சிகள் கம்ப்யூட்டர் மூலம் சித்தரிக்கப்பட்டவை, அந்த பெண் நான் அல்ல: நடிகை ரஞ்சிதா வாக்குமூலம்!

நித்யானந்தாவின் பக்தை என்ற அடிப்படையில் அவரது படுக்கை அறைக்கு ஒரு முறையோ அல்லது 2 முறையோ மட்டும் சென்றிருப்பேன்.

அவருடன் உடல் ரீதியில் எந்த வகையான உறவும் நான் வைத்துக்கொண்டதில்லை.

நித்யானந்தாவுடன் என்னை இணைத்து வெளியிடப்பட்ட விடியோ டேப்  போலியானது.

அதில் இருப்பது நான் அல்ல என்று அந்த வாக்குமூலத்தில்  கூறப்பட்டுள்ளது.

படுக்கை அறையில் இருக்கும் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன: பெங்களூரூ (17-07-2010): நித்யானந்தாவுடன் எனக்கு எந்தவிதமான செக்ஸ் தொடர்பும் இல்லை, என நடிகை ரஞ்சிதா தெரிவித்துள்ளார்[1]. கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே பிடதி என்ற இடத்தில் ஆசிரமம் அமைத்து யோகா கலையை போதித்து வருபவர் நித்யானந்தா. கடந்த மார்ச் மாதம் சில “டிவி’ சேனல்களில், இவரும் நடிகை ரஞ்சிதாவும் படுக்கை அறையில் இருக்கும் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன. தமிழகத்தில் இவர் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின், இந்த வழக்கு கர்நாடகாவுக்கு மாற்றப்பட்டு விட்டது.தலைமறைவாக இருந்த நித்யானந்தா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார். தற்போது அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு, தனது ஆசிரமத்தில் பக்தர்கள் மத்தியில் சொற்பொழிவாற்றி வருகிறார்.

ரஞ்சிதாவின் வாக்குமூலம்: இதற்கிடையே, தலைமறைவாக இருந்த நடிகை ரஞ்சிதா, கர்நாடகா சி.ஐ.டி.,போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் குறிப்பிடுகையில், “நித்யானந்தாவின் அறைக்கு ஓரிரு முறை சென்றுள்ளேன். அவருக்கும் எனக்கும் எந்த விதமான செக்ஸ் தொடர்பும் கிடையாது. “டிவியில் காட்டப் பட்டுள்ள காட்சிகள் கம்ப்யூட்டர் மூலம் சித்தரிக்கப்பட்டவை. “டிவியில் காட்டப்பட்ட பெண் நான் அல்ல. நித்யானந்தா எனக்கு எந்த செக்ஸ் தொல்லையும் கொடுக்கவில்லை”, என்றார். ரஞ்சிதாவின் வாக்குமூலத்தை சி.ஐ.டி., போலீசார் கர்நாடகா ஐகோர்ட்டில் நேற்று பதிவு செய்தனர்[2]. தடய அறிவியல் நிபுணர்கள் வீடியோ உண்மை என்று சொல்லியுள்ள நிலையில் ரஞ்சிதா இப்படி கூறியிருப்பது, போலீஸாருக்குப் பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது[3]. நக்கீரன் சொல்வது[4], “……………….நித்யானந்தா வழக்கை விசாரித்து வந்த கர்நாடகா சிஐடி போலீசார் பெங்களூர் உயர்நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்தனர். அதில், நித்யானந்தா பற்றி நடிகை ரஞ்சிதாவும் வாக்குமூலம் அளித்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளனர்.”! அவர் நித்யானந்தாவிற்கு எதிராக எந்த புகாரையும் கூறவில்லை[5]. அமெரிக்க ஆசிரமத்தில் உள்ள நித்யானந்தரின் சீடர்கள் விமலானந்தாவையும், நித்ய கோபிகாவையும் கைது செய்து பெங்களூரு அழைத்து வர, அவர்கள் மத்திய அரசின் அனுமதியை கோரியுள்ளனர்.

நித்தி வழக்கு:  90 சதவிகித விசாரணை[6]: நக்கீரன் குறிப்பிடுவது, “பெங்களூர் அருகே பிடதியில் ஆசிரமம் நடத்தி வந்த நித்யானந்தா, நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருந்த காட்சிகள் வெளியானது. இதனால் கைது செய்யப்பட்ட அவர், பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.நித்யானந்தாவின் வழக்கு பற்றி கர்நாடகா சிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.இன்று பெங்களூர் உயர்நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தனர்.  அந்த அறிக்கையில்,  ‘நித்யானந்தா வழக்கில் சாட்சிகளிடம் 90 சதவிகித விசாரணை முடிந்துவிட்டது’’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.சிஐடி போலீசாரின் அறிக்கையை படித்த நீதிபதி,   வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 20ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.   நித்யானந்தா வழக்கில் ஆகஸ்ட் 20ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவும் அறிவுறுத்தப்பட்டது”.

சென்னை :””நடிகை ரஞ்சிதா நல்ல பக்தை; அவர் பிடதி ஆசிரமத்திற்கு வந்தால் அனுமதிப்போம்,” என்று அகில இந்திய தியான முகாம்களின் மகா ஆச்சாரியார் நித்யஞானானந்தா கூறினார்.

தமிழ்நாடு நித்யானந்த தியான பீடத்தின் சார்பில் சென்னையில் நேற்று நடத்தப்பட்ட நிருபர்கள் சந்திப்பில் நித்யஞானானந்தா கூறியதாவது:கடந்த நான்கு மாதங்களாக பலரால் பல வகைகளில் எங்கள் நித்யானந்த தியான பீடமும், நித்யானந்தாவும் உண்மைக்குப் புறம்பான முறையில் விமர்சிக்கப்பட்டுள்ளனர். நேற்று தனியார் “டிவி’யில் பக்தர்கள் புண்படும் படியாக எங்கள் குருநாதரை போலிச் சாமியார் என்று வர்ணித்து செய்தி வெளியிடப்பட்டது. இது எங்களது ஆன்மிக உணர்வை நேரடியாக புண்படுத்தியது. பெங்களூரில் நடிகை மாளவிகா அவரது கணவர் அவிநாஷுடன் கலந்து கொண்ட குருபூர்ணிமா நிகழ்ச்சியை கொச்சைப் படுத்தியதையும் வன்மையாகக் கண்டிக்கிறோம். எங்களின் சமூக சுதந்திரத்தையும், தனிமனித சுதந்திரத்தையும் பாதிக்கிற வகையில் செயல்படுபவர்கள் மீது தமிழ்நாடு நித்யானந்த தியான பீடத்தின் சார்பில் சட்டப்படி வழக்கு தொடர்வோம். இவ்வாறு நித்யஞானானந்தா கூறினார்.

“நித்யானந்தாவும் நடிகையும் இடம் பெறும் வீடியோ பதிவு குறித்தும், ஆண்மையற்றவர் என்று போலீஸ் விசாரணையில் நித்யானந்தா பதில் சொன்னதாகவும் செய்திகள் வந்ததே உண்மையா?’ என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை நிருபர்கள் கேட்டனர்.

இதற்கு நித்யஞானானந்தா அளித்த பதில்: நித்யானந்தாவும், நடிகையும் இடம் பெற்றதாக வந்த வீடியோ போலியானது. போலீஸ் விசாரணையில் நித்யானந்தா ஆண்மையற்றவர் என்று கூறவில்லை. யாரோ தவறாக இப்படி  சொல்லியுள்ளனர். நடிகை ரஞ்சிதா நல்ல பக்தை. அவர் தற்போது ஆசிரமத்தில் இல்லை. வெளியே எங்கு இருக்கிறார் என்று எங்களுக்கு தெரியாது. ரஞ்சிதா ஆசிரமத்திற்கு வந்தால், நான் வாயில் காவலனாக இருந்தால் உள்ளே அனுமதிப்பேன். ரஞ்சிதாவை நித்யானந்தா அனுமதிப்பாரா என்பதை அவரிடம் தான் கேட்க வேண்டும். நித்யானந்தா பிரச்னைக்கு காரணமானவர்கள் யார் என்றும், யார், யார் மீது வழக்கு தொடரப் போகிறோம் என்றும் விரைவில் தெரிவிப்போம். இவ்வாறு நித்யஞானானந்தா கூறினார்.

நடிகை ரஞ்சிதா வந்தால் அனுமதிப்போம் : நித்யானந்தாவின் சீடர்

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=48659

சென்னை – ஜூலை 27,2010 :””நடிகை ரஞ்சிதா நல்ல பக்தை; அவர் பிடதி ஆசிரமத்திற்கு வந்தால் அனுமதிப்போம்,” என்று அகில இந்திய தியான முகாம்களின் மகா ஆச்சாரியார் நித்யஞானானந்தா கூறினார்.

தமிழ்நாடு நித்யானந்த தியான பீடத்தின் சார்பில் சென்னையில் நேற்று நடத்தப்பட்ட நிருபர்கள் சந்திப்பில் நித்யஞானானந்தா கூறியதாவது:கடந்த நான்கு மாதங்களாக பலரால் பல வகைகளில் எங்கள் நித்யானந்த தியான பீடமும், நித்யானந்தாவும் உண்மைக்குப் புறம்பான முறையில் விமர்சிக்கப்பட்டுள்ளனர். நேற்று தனியார் “டிவி’யில் பக்தர்கள் புண்படும் படியாக எங்கள் குருநாதரை போலிச் சாமியார் என்று வர்ணித்து செய்தி வெளியிடப்பட்டது. இது எங்களது ஆன்மிக உணர்வை நேரடியாக புண்படுத்தியது. பெங்களூரில் நடிகை மாளவிகா அவரது கணவர் அவிநாஷுடன் கலந்து கொண்ட குருபூர்ணிமா நிகழ்ச்சியை கொச்சைப் படுத்தியதையும் வன்மையாகக் கண்டிக்கிறோம். எங்களின் சமூக சுதந்திரத்தையும், தனிமனித சுதந்திரத்தையும் பாதிக்கிற வகையில் செயல்படுபவர்கள் மீது தமிழ்நாடு நித்யானந்த தியான பீடத்தின் சார்பில் சட்டப்படி வழக்கு தொடர்வோம். இவ்வாறு நித்யஞானானந்தா கூறினார்.

“நித்யானந்தாவும் நடிகையும் இடம் பெறும் வீடியோ பதிவு குறித்தும், ஆண்மையற்றவர் என்று போலீஸ் விசாரணையில் நித்யானந்தா பதில் சொன்னதாகவும் செய்திகள் வந்ததே உண்மையா?’ என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை நிருபர்கள் கேட்டனர்.

இதற்கு நித்யஞானானந்தா அளித்த பதில்: நித்யானந்தாவும், நடிகையும் இடம் பெற்றதாக வந்த வீடியோ போலியானது. போலீஸ் விசாரணையில் நித்யானந்தா ஆண்மையற்றவர் என்று கூறவில்லை. யாரோ தவறாக இப்படி  சொல்லியுள்ளனர். நடிகை ரஞ்சிதா நல்ல பக்தை. அவர் தற்போது ஆசிரமத்தில் இல்லை. வெளியே எங்கு இருக்கிறார் என்று எங்களுக்கு தெரியாது. ரஞ்சிதா ஆசிரமத்திற்கு வந்தால், நான் வாயில் காவலனாக இருந்தால் உள்ளே அனுமதிப்பேன். ரஞ்சிதாவை நித்யானந்தா அனுமதிப்பாரா என்பதை அவரிடம் தான் கேட்க வேண்டும். நித்யானந்தா பிரச்னைக்கு காரணமானவர்கள் யார் என்றும், யார், யார் மீது வழக்கு தொடரப் போகிறோம் என்றும் விரைவில் தெரிவிப்போம். இவ்வாறு நித்யஞானானந்தா கூறினார்.

[1] தினமலர், நித்யானந்தாவுடன் செக்ஸ் தொடர்பில்லை : நடிகை ரஞ்சிதா வாக்குமூலம், ஜூலை 23,2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=45896

[2] தினமணி, நித்யானந்தா விவகாரம்: டி.வி.யில் ஒளிபரப்பான டேப் போலியானது: ரஞ்சிதா, http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=India&artid=276843&SectionID=130&MainSectionID……….E%BE

[3] தினத்தந்தி, Œ†VÖ]‹RÖ°PÁ ÙS£eLUÖL ÚRÖÁ¿• ÙNeÍ ®zÚVÖ LÖypL· EÛUV¥X SzÛL WtpRÖ WLpV YÖeh™X•,  மேலும் விவரங்களிக்கு, http://www.dailythanthi.com/article.asp?NewsID=582357&disdate=7/24/2010&advt=1

[4] நக்கீரன், நித்தி பற்றி ரஞ்சிதா-ரஞ்சிதா பற்றி நித்தி, http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=36307

[5] தினகரன், முக்கிய சாட்சி நடிகை ரஞ்சிதா வாக்குமூலம் அளித்து விட்டார், மேலும் விவரங்களிக்கு, http://www.dinakaran.com/indiadetail.aspx?id=11189&id1=1

[6] http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=36321

ரஞ்சிதா பட்ட வேதனை : நித்யானந்தா மன உருக்கம்!

ஜூலை23, 2010

ரஞ்சிதா பட்ட வேதனை : நித்யானந்தா மன உருக்கம்!

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=45158

நடிகை ரஞ்சிதா நேர்மையான அடக்கமான பெண்: பெங்களூரு ஜூலை 22,2010: நடிகை ரஞ்சிதா நேர்மையான அடக்கமான பெண் என, சாமியார் நித்யானந்தா தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் பெங்களூரு அருகே பிடதியில் ஆசிரமம் அமைத்து யோகக் கலையை போதித்து வருகிறார் நித்யானந்தா, சர்ச்சைக்குரிய வீடியோ காட்சியில் சிக்கி, சிறை சென்றார் இவரது சீடர் ரஞ்சிதா தலைமறைவானார். ஜாமீனில் வெளிவந்துள்ள நித்யானந்தா, ஆன்மிக போதனைகளை செய்ய கோர்ட் அனுமதியளித்துள்ளது.

தவறான பிரசாரத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்: பிடதி ஆசிரமத்தில் நேற்று நித்யானந்தா குறிப்பிடுகையில், “என் மீது செக்ஸ் புகார்கள் கூறப்பட்ட போது, அதைப் பற்றி நான் கவலைப்படவேயில்லை. ஆனால், எனது சீடர்கள் இதனால் பாதிக்கப்பட்டது குறித்து தான் வேதனைப்பட்டேன். குறிப்பாக, ரஞ்சிதா போன்றவர்கள் இந்த புகாரினால் வெகுவாக பாதிக்கப்பட்டார்கள். ரஞ்சிதா நேர்மையானவர், அடக்கமானவர். ஆசிரமத்தில் தலைசிறந்த சேவகியாக இருந்தவர். என்னை தாக்க நினைப்பவர்கள், என்னை பழிதீர்க்க நினைப்பவர்கள் நேரடியாக மோதட்டும். ரஞ்சிதாவுடன் நான் சல்லாபம் செய்வதாக “டிவி’யில் பல மணி நேரம் படம் போட்டு காட்டினார்கள். என் மீது சுமத்தப்பட்டுள்ள கற்பழிப்பு புகார் காரணமாக, 50 நாட்கள் சிறையில் இருந்தேன். அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்து விட்டு போகட்டும். ஆனால், எனது பக்தர்களின் வாழ்வை, தவறான பிரசாரத்தால் பாழாக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். ரஞ்சிதா எனது ஆசிரமத்துக்கு நிறைய பொதுத் தொண்டுகளை செய்துள்ளார். தவறான பிரசாரத்தால் அவரும், அவரது குடும்பத்தாரும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்காக நான் எனது பிராத்தனையையும், வாழ்த்தையும் வழங்குகிறேன். இவ்வாறு நித்யானந்தா கூறினார்.

புலன்களை அடக்குபவர்கள் தவறு செய்யமாட்டார்கள்: புலன்களை அடக்க நினைப்பவர்கள், ஆமைப் போலக் குறுகிவிடுவார்கள். மனத்தை அடக்குபவர்கள், உடலை அடக்கிக் கட்டிப் போட்டுவிடுவார்கள். வயதானாலும், மனத்தில் நல்லெண்ணங்களே இருக்கும். வாழ்நாள் நீட்டிக்க, உடலை நன்றாகக் காத்துவரவேண்டும் என்ற நிலையில், உடலை தன்னிச்சைக்கேற்றபடி விடமாட்டார்கள் துறந்தவர்கள். ஆன்மீகம் என்ற போர்வையில் நாத்திகர்களும், தவறிய ஆத்திகர்களும், எந்த காரணங்களுக்காகவும், தவறன செய்கைகளை நியாயப்படுத்தமுடியாது. பிறகு இந்த நித்யானந்தாவிற்கும், கருணநிதிக்கும் என்ன வித்தியாசம்?