Archive for the ‘கன்னியாஸ்திரி’ Category

கேரள சிறுமியர்-சிறுமிகள் கடத்தல் ஒரு மனிதத்தன்மையற்ற வியாபாரமே – அவர்கள் வாங்கி விற்கப்படுவது, அனாதை இல்லங்களில் வைக்கப்படுவது பணத்தைப் பெறுவதற்காகவே, சேவை போர்வையில் நடக்கும் வியாபாரம் (2)

ஓகஸ்ட்3, 2014

கேரள சிறுமியர்-சிறுமிகள் கடத்தல் ஒரு மனிதத்தன்மையற்ற வியாபாரமே – அவர்கள் வாங்கி விற்கப்படுவது, அனாதை இல்லங்களில் வைக்கப்படுவது பணத்தைப் பெறுவதற்காகவே, சேவை போர்வையில் நடக்கும் வியாபாரம் (2)

Forced marriage from orphanage

Forced marriage from orphanage

வளைகுடா நாடுகளிலிருந்து தானமாக வரும் கோடிக்கணக்கான பணம்: முஸ்லிம் அனாதை இல்லங்கள் ஆயிரக்கணக்கில் நடத்தப் பட்டு வருகின்றன. இவற்றை நடத்துவதற்கு வளைகுடா நாடுகளிலிருந்து தானம் என்ற பெயரில் பணம் வசூலிக்கப் படுகிறது.  சுமார் 1,400 அனாதை இல்லங்களுக்கு கோடி கணக்கில் பணம் வசூலிக்கப் படுகிறது. இப்பணத்தை வசூலிக்கு ஏஜென்டுகள் 40% எடுத்துக் கொண்டு மீதம் 60%-த்தை கொடுத்து விடுகின்றனர்[1]. இப்படியாக இது ஒரு திட்டமிட்ட செயலாகவே நடந்து வருகிறது. ஆசிரியர் வேலைக்கு சுமார் ரூ.25-30 லட்சங்கள் தானமாகக் கிடைக்கிறது[2]. ஆக தானம் என்று இருந்தாலும், பணம் முக்கியமான விசயமாக இருக்கிறது என்று தெரிகிறது. சேவை என்ற போர்வையில், ஏழ்மையை பயன்படுத்திக் கொண்டு, இவ்வில்லங்கள் நடத்தப் படுகின்றன என்றாகிறது. எனவே மற்ற ஊழகளைப் போல இது ஒரு பெரிய சமூக ஊழல் என்றே சொல்லலாம். ஆனால் 40% எடுத்துக் கொள்ளும் ஏஜென்டுகள் யார், அவர்கள் அப்பணத்தை எதற்கு உபயோகப்  படுத்துகிறார்கள், என்ற விவரங்கள் சொல்லப்படவில்லை. வளைகுடா நாடுகளிலிருந்து தானமாக பணம் வருகிறது என்றால், அவ்வப்போது, ஷேக்குகள் வந்து, முஸ்லிம் அனாதை இல்லங்களில் உள்ள சிறுமிகளை-இளம்பெண்களை “அரேபிய கல்யாணம்” செய்து கொண்டு, அனுபவித்து விட்டு சென்று விடுகிறனர்[3]. எனவே அந்த தானத்திற்கும், இந்த காமத்திற்கும் சம்பந்தம் உண்டா என்றும் கவனிக்க வேண்டியுள்ளது.

Kerala orphanage nikah  with Sheik Aug.2013

Kerala orphanage nikah with Sheik Aug.2013

விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவரத்தொடங்கின[4]: அந்நிய பணம் மற்றும் அரசு நிதியுதவிப் பணம் என்று இரண்டுவகைகளில் பெறப்படும் பணத்தை இவ்வாறு போலித்தனமான “அனாதை இல்லங்கள்” என்ற பெயரில் வியாபாரம் நடத்துவது தான் வெளிப்படையாகத் தெரிகிறது.

  1. கேரளாவில் கோழிக்கோடு, மலப்புரம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் 200க்கும் மேற்பட்ட அனாதை இல்லங்கள் இயங்கி வருகின்றன. இதில் 99 சதவீதம் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ அமைப்புகளால் நடத்தப்படுகின்றன. இவற்றுக்கு கேரள அரசும் லட்சக்கணக்கில் மானியம் தருகிறது.
  2. அரசின் மானியத்தை வாங்கி பீகார், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்காளம் உட்பட பல மாநிலங்களிலிருந்து ரூ1000 முதல் ரூ3000 வரை பணம் கொடுத்து குழந்தைகளை கேரளாவுக்கு ஏஜன்ட்கள் கொண்டு வருகின்றனர்.
  3. இப்படி சலுகையை தவறாக பயன்படுத்தி குழந்தைகள் கடத்தல் நடக்க ஆரம்பித்துள்ளது. அதன் விபரீதம் தான் இந்த 450 குழந்தைகள்.
  4. ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து தான் அதிக அளவில் 257 குழந்தைகள் கொண்டு வரப்பட்டனர். இவர்கள் அனைவரும் இம்மாநிலத்திலுள்ள கோடா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
  5. கேரளாவுக்கு குழந்தைகளை அழைத்து வந்த பின்னர் அவர்களது பெயர் மற்றும் முகவரியை மாற்றி விடுவார்கள். அவர்கள் அனைவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என கூறி அரசை ஏமாற்றி நிதியுதவி பெற இந்த ஏற்பாடு.
  6. கடந்த வருடம் கோழிக்கோட்டிலுள்ள ஒரு அனாதை இல்லம் இதுபோல ஏமாற்றி அரசிடமிருந்து ரூ35 லட்சம் நிதியுதவி பெற்றுள்ளது.
  7. கடந்த வருடம் மட்டும் கேரளாவிலுள்ள சில அனாதை இல்லங்களுக்கு வெளிநாடுகளிலிருந்து ரூ.19 கோடி வரை உதவி கிடைத்துள்ளது.
Kerala orphanage sex May.2014

Kerala orphanage sex May.2014

சேவைக்காக அனாதை இல்லங்களா அல்லது தேவைக்கு, பணத்திற்கா?: முஸ்லிம் பள்ளிகள் / மதரஸாக்கள் நிரம்பி இருக்க வேண்டும் என்பதற்காகவே, இவர்கள் இப்படி அழைத்து வரப்படுகின்றன[5], அனாதை இல்லங்களில் அனாதைகள் இல்லை என்பதற்காகவே அழைத்து வரப் படுகிறார்கள் என்றும் விளக்கம் அளிக்கின்றனர்[6]. இதனை விசாரித்த கேரளா போலீஸாரே விசயம் இவ்வளவுதான், இதில் பாலியல் தொல்லை முதலிய விவகாரங்கள் எல்லாம் இல்லை என்று நீதிமன்றத்திற்கு அறிக்கைக் கொடுத்துள்ளனர். இருப்பினும் மற்ற விவகாரங்கள் இதில் அத்தகைய விசயமும் உள்ளது என்றுதான் காட்டுகிறது என்று சமூக இயக்கங்கள் கூறுகின்றன. கேரளா ஏற்கெனவே செக்ஸ்-ரூரிஸத்தின் / பாலியல் சுற்றுலா இடமாக உள்ளது. ஆந்திரா மற்றும் கேரளாவில் அதிகமாகிக் கொண்டிருக்கிறது என்றும் சோதனைகள், விசாரணைகள், கைதுகள் முதலியவை எடுத்துக் காட்டுகின்றன[7]. சமீபத்தைய அறிக்கை கேரளாவைச் சுட்டிக் காட்டுகிறது[8]. இதனால் தான் சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் கோரிக்கை எழுப்பப் பட்டுள்ளது.

church sex pedophile etc caricature

church sex pedophile etc caricature

பெற்றோர்களுக்கு கூட தெரியாமல் கொண்டு வந்தது வெட்கக்கேடான சம்பவம்[9]:  எர்ணாகுளத்தைச் சேர்ந்த ‘தம்பு‘ என்ற சமூக நல அமைப்பு சார்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு தொடரப்பட்டது. இதை தலைமை நீதிபதி மஞ்சுளா செல்லூர் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது. 5 வயது கூட ஆகாத குழந்தைகளை அவர்களது பெற்றோர்களுக்கு கூட தெரியாமல் எப்படி இங்கு கொண்டு வந்தார்கள்?   பெற்றோர்கள் உயிரோடு இருக்கும் போது அவர்கள் எப்படி அனாதைகள் ஆவார்கள்? கேரளாவில் இது போன்ற சம்பவம் நடப்பது வெட்கக்கேடானது  என்று டிவிஷன் பெஞ்ச் கூறியது.   கடத்திக் கொண்டு வருபவர்கள் பெற்றோர்களிடம் சொல்லிவிட்டா, கடத்தி வருவார்கள்? ஆனால், பிறகு எல்லோரும் அமைதியாகி விட்டதுதான் வினோதமான விசயம்!

Coimbatore campaigning against crime against children

Coimbatore campaigning against crime against children

மத்திய அரசுக்கு விவரங்கள் தர மறுப்பு, மறைப்பு[10]:  மத்திய குழந்தைகள் நலத்துறை பல முறை கேட்டும் இந்த குழந்தைகள் பற்றிய  எந்த தகவலையும் அளிக்க கேரளா மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.  இதன் பின்னணியில் பல மர்மங்கள் இருப்பதாக கேரள பா.ஜ தலைவர்கள் கூறுகின்றனர்.  இது குறித்து கேரள மாநில பா.ஜ. தலைவர் முரளீதரன் கூறியது: “குழந்தைகளை கடத்தலின் பின்னணியில் மர்மங்கள் இருப்பதாக சந்தேகிக்கிறோம். அவர்களை தீவிரவாத குழுக்களுக்கு அனுப்பி வைக்கவும், பெண் குழந்தைகளை விபசாரத்தில் ஈடுபடுத்தவும், உடல் உறுப்புகளுக்காக கடத்தவும் வாய்ப்புள்ளது”, என்று கூறினார். குழந்தைகள் கடத்தப்பட்ட விவகாரத்தில் கேரள உயர்நீதிமன்றமும் தலையிட்டிருப்பதால் விரைவில் மேலும் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிச்சத்துக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், கேரளாவில் அரசியல்வாதிகளின் ஆதிக்கத்தில் எல்லாமே இருப்பதாலும், இஸ்லாமிய-கிருத்துவர்கள் அதிக அளவில் வலுவுள்ளவர்களாக, அதிகாரம் கொண்டவர்களாக இருப்பதால், இவ்விசயங்களில் மற்றவர்கள் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறார்கள். இக்குழந்தைகள் எங்கோ ஏலத்திலேயோ, விலை கொடுத்து வாங்கப் பட்டு, கொண்டுவரப்பட்டு, இங்கு “அனாதை”களாக்கப் பட்டுள்ளார்கள்! ஏனெனில் அவர்களுக்கு பெற்றோர்கள் உள்ளனர்[11].

குற்றம் செய்து மரத்துப் போனவர்கள், திரும்ப குற்றம் செய்கிறார்கள்

குற்றம் செய்து மரத்துப் போனவர்கள், திரும்ப குற்றம் செய்கிறார்கள்

அனாதை ஆஸ்ரமங்களில் செக்ஸ்குற்றங்கள் நடந்துள்ளது மற்றும் சம்பந்தப் பட்டுள்ளவிவகாரங்கள்: கேரளாவில் செக்ஸ் சம்பந்தப்பட்ட குற்றங்கள் அதிகமாகவே உள்ளன. கேரளாவில் அனாதை இல்லங்களில் பலவிதமான அநியாயங்கள் நடைப் பெற்று வருகின்றன. பாலியல் ரீதியிலான வன்மங்கள் அதிகமாகவே ஏற்பட்டுள்ளன. இதனால், பல இல்லங்கள் அரசாங்கத்தால் நடவடிக்கை எடுக்கப் பட்டு மூடப்பட்டுள்ளன[12]. சுமார் 2,200 அனாதை இல்லங்கள் பதிவு செய்யப் பட்டு செயல்பட்டு வருகின்றன. அயல்நாட்டு பணம் தாராளமாக வருவதால், இது வியாபாரம் போலவே நடத்தப் பட்டு வருகின்றது[13]. ஆகஸ்ட் 28, 2013 அன்று ஒரு 17 வயது சிறுமி ஜஸிம் முஹம்மது அப்துல் கரீம் [UAE national Jasim Mohammed Abdul Kareem ] என்றவனுக்கு ஜூன் 13ம, 2013ல் திருமணம் செய்து வைக்கப் பட்டு, இரண்டு மாதங்களுக்குப் பிறகு தலாக் செய்யப்பட்டாள். இதனால் வழக்குப் பதிவு செய்யப் பட்டது[14]. இப்பெண் தான் பாதிக்கப் பட்ட விசயத்தை அப்பொழுதைய முதல் மந்திரி ஒமன் சாண்டி மற்றும் உள்துரை அமைச்சர் திருவாஞ்சூர் ராதாகிருஷ்ணனிடம் புகாராக கொடுத்துள்ளாள். இ. அஹமது என்ற மத்திய வெளித்துறை அமைச்சரிடத்திலும் புகார் கொடுத்தாள். ஆனால், என்னவாயிற்று என்று தெரியவில்லை. “அரபி கல்யாணம்” எனப்படுகின்ற இந்த சமூக இழிவைத் தடுக்க சட்டம் எடுத்து வரவேண்டும் என்றும் பெண்ணிய போராளிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்[15].

© வேதபிரகாஷ்

02-08-2014

[1] Orphanage sources said there are agents in Gulf to collect donations for the charity homes in Kerala. The agents would take 40 per cent of the gross collection as their commission and the rest would be delivered to the concerned institutes.

http://indianexpress.com/article/india/india-others/children-from-bengal-bihar-being-trafficked-to-keep-kerala-charity-homes-running-police-to-hc/

[2] http://indianexpress.com/article/india/india-others/children-from-bengal-bihar-being-trafficked-to-keep-kerala-charity-homes-running-police-to-hc/2/

[3] http://www.mangalorean.com/news.php?newstype=broadcast&broadcastid=419388

[4] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=95560

[5] The Crime Branch today informed the High Court that the main purpose children were brought from other states toKerala was to overcome shortage of orphans and destitutechildren in the orphanage at Mukkam at Kozhikode.  The case pertains to the recent trafficking of 588 children from Jharkhand, Bihar and West Bengal to the state. In the statement filed by R Sudhakaran Pillai, CB-CID, Deputy Superintendent of Police, it was also pointed out that the main reason behind transportation of children to the state was to prevent the ‘division fall’ due to shortage of students in the school run by orphanage. Police also said shortage of inmates in the orphanage had adversely affected collection of funds as contributions are government grants aids, from local sources and outside.

[6] http://www.business-standard.com/article/pti-stories/children-brought-to-offset-shortage-of-orphans-in-orphanage-114073101708_1.html

[7] http://www.deccanchronicle.com/140726/nation-current-affairs/article/kerala-andhra-pradesh-dock-over-sex-tourism

[8] http://www.humanrights.asia/news/ahrc-news/AHRC-ANM-031-2014

[9] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=95560

[10] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=95560

[11] http://www.openthemagazine.com/article/nation/auctioned-elsewhere-orphaned-in-kerala

[12] http://www.pangeatoday.com/orphanages-accused-of-child-trafficking/

[13] A generous inflow of funds from abroad led to the burgeoning of orphanages in the state – of which there are currently 2,200 registered. Kerala’s private orphanages have incited much controversy due to allegations of being involved in misdeeds from sexual abuse to child marriage. Last year 2013, the state government ordered closure of 60 orphanages in the state.

[14] The girl had also sent her complaint to Chief Minister Oommen Chandy, Kerala Home Minister Thiruvanchoor Radhakrishnan, Union Minister of State for Home Mullappally Ramachandran and Union Minister of State for External Affairs E Ahamed, on Wednesday. The girl filed a complaint before the Child Welfare Committee, alleging that the orphanage authorities forced her to marry the UAE national who deserted her after spending 17 days with her. http://asianetindia.com/92029/

[15] Women activists, political leaders and NGOs in Kerala, who expressed outrage over the girl’s plight, demanded a legislation to check the social menace of ‘Arabi Kalyanam’ (Arab wedding), in which minor Muslim girls are forced into marriage with Arab nationals.

கேரள சிறுமியர்-சிறுமிகள் கடத்தல் ஒரு மனிதத்தன்மையற்ற வியாபாரமே – அவர்கள் வாங்கி விற்கப்படுவது, அனாதை இல்லங்களில் வைக்கப்படுவது பணத்தைப் பெறுவதற்காகவே, சேவை போர்வையில் நடக்கும் வியாபாரம் (1)

ஓகஸ்ட்3, 2014

கேரள சிறுமியர்-சிறுமிகள் கடத்தல் ஒரு மனிதத்தன்மையற்ற வியாபாரமே – அவர்கள் வாங்கி விற்கப்படுவது, அனாதை இல்லங்களில் வைக்கப்படுவது பணத்தைப் பெறுவதற்காகவே, சேவை போர்வையில் நடக்கும் வியாபாரம் (1)

கைது செய்யப் பட்ட 8 பேரும் முஸ்லிம்கள் மே 26.2014

கைது செய்யப் பட்ட 8 பேரும் முஸ்லிம்கள் மே 26.2014

மே.25-26, 2014- பாலக்காடுவெறும் சிறுவர்சிறுமியர் கொண்டுவரும் / கடத்தப் படும் செயல்தான்: கோஸ் முஹம்மது மற்றும் ஜஹீர் [Ghosh Muhammed and Jahir of West Bengal] என்ற இருவர் மீது 120 குழந்தைகளை மேற்கு வங்காளத்திலிருந்து, பாலக்காடு ரெயில் நிலையத்திற்கு கொண்டு வந்தபோது மே 24-25, 2014 தேதிகளில் கடத்தி வந்த குற்றத்திற்காக மற்ற அறுவரையும் சேர்த்து கைது செய்யப் பட்டனர்[1].

  1. அப்துல்கரி அன்சாரி (32) – பீஹார்
  2. முஹம்மது ஆலம்கீர் (24)- பீஹார்
  3. மௌலானா பௌஜுலுல்லா (26) – பீஹார்.
  4. முஹம்மது பிரிஷ் ஆலம் (31) – ஜார்கென்ட்
  5. கே. மன்சூர் (42) – மேற்கு வங்காளம்.
  6. வி. பி. ஜாஹிர் (56) – மேற்கு வங்காளம்.
  7. எம். பாக்கர் (49) – மேற்கு வங்காளம்.
  8. பெயர் குறிப்பிடப் படவில்லை.

கைது செய்யப் பட்டபோது, அவர்கள் கவலைப் பட்டதாகவே தெரியவில்லை. ஏதோ ஒரு சாதாரணமான தொழிலை செய்வது போல பேசிக் கொண்டிருந்தார்கள். போட்டோ எடுத்தபோதும் அப்படியே காட்டிக் கொண்டார்கள். மற்றவர்கள் நினைப்பது பொல எந்த உணர்வையும் காட்டவில்லை. மொத்தம் 600ற்கும் மேற்பட்ட சிறுவர்-சிறுமிகள் கடத்தப் பட்டு வந்திறங்கப் பட்டனர். கேரளாவில் உள்ள அனாதை ஆஸ்ரமங்களில் (orphanage) சேர்க்கப்படுவதற்கு கொண்டு வரப்பட்டதாகச் சொல்லப்பட்டது. இதற்குள் இதைப் பற்றிய செய்திகளும் குறைந்தன.

Child-trafficking-kerala

Child-trafficking-kerala

ஜூலை.4, 2014- ஜாமீனில் விடுவிக்கப் பட்ட குற்றவாளிகள்: ஜூலை 4, 2014 அன்று இவ்விருவர் – கோஸ் முஹம்மது மற்றும் ஜஹீர் – பெயிலில் வெளிவர கேரள உயர்நீதி மன்றம் அனுமதி அளித்தது[2]. இது வெறும் சிறுவர்-சிறுமியர் கொண்டுவரும் / கடத்தப் படும் செயல்தான் (human trafficking), வேறு விவகாரம் எதுவும் தென்படவில்லை என்றும் அறிவிக்கப் பட்டது. கேரளாவில் இத்தகைய விவகாரங்களில் ஏற்கெனவே முன்மாதிரியாக (precedance) பல சட்டமீறல்கள் ஏற்பட்டுள்ளன. அனாதை சிறுமிய பலவித பாலியல் வன்மங்களுக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர். ஆனால், நீதிமன்றம் அத்தகைய முன்மாதிரிகளை (established law), ஏற்படுத்தப் பட்டுள்ள சட்டநிலைகளை (precedence of law) மற்றும் பரவலாக நடக்கும் பாலியல் குற்றங்கள் (widespread sexual crimes) முதலியவற்றைக் கண்டுகொள்ளவில்லை என்ற ரீதியில் அவர்கள் பிணையில் விடுவிக்கப் பட்டனர். இருப்பினும், இவ்விசயத்தில் இவ்வாறான “நற்சாட்சி பத்திரம்” கொடுப்பது போல போலீஸார் அறிக்கைக் கொடுத்துள்ளது வியப்பாக இருக்கிறது. முதலில் கடுமையாக விமர்சனம் செய்து வந்த இயக்கங்கள், இதைப் பற்றி எதுவும் பேசவில்லை. ஒரே மாதத்தில் அவ்வாறான மாற்றம் எப்படி ஏற்பட்டது என்று தெரியவில்லை. குழந்தை கடத்தல் கேரளாவில் சாதாரண விசயம் போலாகி விட்டது.

Kerala child traffiking May 2014

Kerala child traffiking May 2014

டிக்கெட் இல்லாமல் கடத்திவரப்பட்ட சிறுமியர்சிறுமிகள்: பாட்னாவிலிருந்து எர்ணாகுளம் செல்லும் ரயிலில் சிறுவர், சிறுமிகள் கடத்திவரப்படுவதாக பாலக்காடு ரயில்வே பாதுகாப்புப் படை போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. வழக்கம் போல  சாதாரணமாக எடுத்துக் கொண்ட போலீஸ், ரயிலில்  சோதனை நடத்தியபோது அதிர்ச்சி அடைந்தனர். ஆடு, மாடுகளை போல 2 பெட்டிகளிலும் 450க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகள்.  அனைவரும் 15 வயதுக்கு உட்பட்டவர்கள்; மூன்று கோச்சுகளில் 466 பேர் இருந்தனர்[3]. முகத்தில் களைப்பு; பேச்சே இல்லை; மொழியும் புரியவில்லை. அவர்களை அழைத்து வந்த ஜார்கண்ட் மாநில நபர்கள்  2 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். சிறுவர், சிறுமிகளை ஜார்கண்ட். பீகார் மற்றும் மேற்கு வங்கத்திலிருந்து அழைத்து வருகிறோம்; அனாதைகளான அவர்களை கேரளாவில் மலப்புரம், கோழிக்கோடு ஆகிய இடங்களிலுள்ள அனாதை இல்லங்களுக்கு அழைத்துச் செல்வதாக கூறினர். ஆனால் குழந்தைகள் தொடர்பான எந்த ஆவணங்களும் அவர்களிடம் இல்லை. பெரும்பாலானோருக்கு டிக்கெட்டும் எடுக்கவில்லை. இதையடுத்து ரயில்வே போலீசார் அனைவரையும் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் இது குறித்து பாலக்காட்டிலுள்ள அரசு குழந்தைகள் நல அமைப்பினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

குழந்தை வியாபாரம் கேரளா

குழந்தை வியாபாரம் கேரளா

இது வெறும் மனித கடத்தல் அல்ல[4]:  அம்மாநில சிறுபான்மை நல கமிஷன் தலைவர் வீரான் குட்டி, ”இது, மனித கடத்தல் அல்ல; ஆதரவற்றோர் விடுதியில், தரமான உணவு, தங்குமிடம், நல்ல கல்வி போதிக்கப்படுகிறது,” எனக் கூறினார். ”இது, மனித கடத்தல் அல்ல” என்று சொல்லும் போது, ஏதோ சட்டமீறல்கள் என்றெல்லாம் சொல்லுவார் என்று பார்த்தால், அச்செயலைப் பாராட்டிப் பேசியுள்ளது வேடிக்கையாக இருந்தது.  இங்கு “நல்ல கல்வி” என்பது இஸ்லாமிய மதக்கல்வி என்று பொருள்படும். இச்சம்பவம், கேரள மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எப்படி தூரத்திலிருக்கும் வட மாநிலங்களிலிருந்து, தெற்குக் கோடியில் உள்ள கேரளாவுக்கு இப்படி வயதுக்கு வந்த 16-18 வயதுகளில் இருக்கும் இளம் பெண்கள் உட்பட கொண்டு வரப்படுவது சட்டமீறல் இல்லை என்று அவர் நினைத்துப் பார்த்ததாகத் தெரியவில்லை.

Mukkam Muslim Orphanage in Kozhikode where the children were being taken to

Mukkam Muslim Orphanage in Kozhikode where the children were being taken to

பொதுநல வழக்கும், நீதிமன்ற ஆணையும்: குழந்தைகள் கடத்தல் சம்பவம் தொடர்பாக, பொது அமைப்பு ஒன்று, கொச்சி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதற்கு, கேரள அரசு, கோர்ட்டில் விளக்கம் அளித்தது. தலைமை நீதிபதி மஞ்சுளா செல்லூர், நீதிபதி ராமசந்திர மேனன் ஆகியோர், அம்மாநில அரசுக்கு சரமாரி கேள்வி எழுப்பியுள்ளனர். கேரள மாநிலத்தில், ஆதரவற்றோர் இல்லத்திற்கு குழந்தைகள் அழைத்து வந்ததாக கூறப்படும் நிலையில்,

  1. அக்குழந்தைகளுக்கு தாய், தந்தை உள்ள நிலையில், எப்படி ஆதரவற்றவர்களாக கூற முடியும்.
  2. படிக்க வைப்பதற்காக, எதற்காக, ஆதரவற்றோர் விடுதிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
  3. இக்குழந்தைகளை ரயிலில் அழைத்து வருவதற்கு டிக்கெட் தேவையில்லையா?
  4. விடுமுறையை கொண்டாட, சொந்த ஊருக்கு சென்ற குழந்தைகளுடன் சேர்ந்து, பிற குழந்தைகள் வந்திருப்பதாக, கேரள அரசு கூறும் கருத்தை ஏற்கமுடியாது.

இவ்வாறு, நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய, மாநிலங்களைச் சேர்ந்த, ரயில்வே நிர்வாகம் மற்றும் அரசு அதிகாரிகள் வரும், 19ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும். மே 24.2014ல், குழந்தைகள் யாருடைய பாதுகாப்பில் இருந்தனர்; குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்பினர் நடத்திய ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என, தலைமை நீதிபதி மஞ்சுளா செல்லூர், நீதிபதி ராமசந்திரன் மேனன் ஆகியோர், உத்தரவிட்டுள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து, கடத்தி வரப்பட்ட, 123 குழந்தைகளை, ஜூன் 9ம் தேதி, திருப்பி அனுப்ப, கேரள அரசு முடிவு செய்தது. எவ்வாறு அவர்கள் கொண்டு வரப்பட்டனர் என்பதும் ஆராயப்பட வேண்டும் என்றனர்[5].

Kerala child traffiking May 2014.Malappuram nexus

Kerala child traffiking May 2014.Malappuram nexus

மௌவ்லிகள், மதரஸாக்களின் பங்கு: தேசிய புலனாய்வு ஏஜென்சி (National Investigation Agency) ஜூலை 26, 2014 அன்று தனது விசாரணையை மேற்கொண்டது. 58 முஸ்லிம் குழந்தைகள் மால்டா என்ற இடத்திலிருந்து வேட்டத்தூர், மல்லப்புரத்தில் உள்ள அன்வர் ஹூடா அனதை இல்லத்திற்கு [Anwarul Huda Orphanage at Vettathur in Malappuram] கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிகிறது. முக்கம் முஸ்லிம் அனாதை இல்லம் [ Mukkam Muslim Orphanage] என்ற இன்னொன்றும் இதில் உள்ளது. ஏழைக் குழந்தைகளுக்கு படிப்பு சொல்லிக் கொடுக்கிறோம் என்றெல்லாம் சொல்லி மௌல்விகள் ஏமாற்றி அனுப்பி வைத்ததாக தெரிகிறது[6]. மால்டாவிலிருந்து இதை ஆயும் குழு வேட்டத்தூருக்கு பார்வையிட வந்தபோது, சிறுவர்கள் மட்டுமல்லாது, சிறுமியர்களும் இருந்தது கண்டு திகைத்தது[7]. ஆனால் அக்குழுவின் திகைப்பிற்கு காரணம் என்ன என்று கூறப்படவில்லை. இது தவிர பிஹார், ஜார்கென்ட் மற்றும் மேற்கு வங்காளப் பகுதிகளினின்று இவ்வாறு சிறுவர்-சிறுமிகள் கொண்டு வரப்படுவது தெரிகிறது. ஆக இதில் மௌல்விகள் மற்றும் மதரஸாக்களின் பங்கு வெளிப்படுகிறது. ஜார்கென்டில் கொட்டா என்ற இடத்திலிருந்து மலப்புரத்திற்கு கடத்தி வந்த சிறார்கள் நிச்சயமாக பெற்றோர்கள் அனுமதி இல்லாமல் வந்திருக்கின்றனர். சஞ்சய் மிஸ்ரா என்ற சிறுவர்களின் உடரிமை பாதுகாப்பு கமிஷனின் உறுப்பினர், “இது நிச்சயமாக சிறார் கடத்தல் தான். பெற்றோர்களே விரும்பினாலும், அவர்களது மகன்-மகள்களை இவ்வாறு பலவந்தப் படுத்த முடியாது”, என்று எடுத்துக் காட்டினார். பெற்றோர்கள் இருக்கும் போது, அவர்கள் “அனாதைகள்” ஆக மாட்டார்கள்!

ஜூலை.12-13, 2014 – கேரள அரசின் வித்தியாசமான போக்கு: ஜூலை 12-13 2014 தேதிகளில் கொச்சியில் “மனித கடத்தல் – உண்மையும், பொய்யும்” என்ற தலைப்பில். இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையம் (National Human Rights Commission) சார்பில் நடைப் பெற்ற கருத்தரங்கத்தில், கேரளாவுக்கு கொண்டு வரப்படும் குழந்தைகளுக்கு அடையாளமாக போலி ஆதார் அட்டைகளை பயன்படுத்தப்பட்டதாக எடுத்துக் ஶ்ரீஜித் என்ற துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் காட்டினார்[8]. இந்தியாவில் ஒரு வருடத்திற்கு சுமார் 33,000 சிறுவர்-சிறுமியர் காணாமல் போவதாக அறிவிக்கப்பட்டது. அதாவது, இப்படி ஆயிரக் கணக்கில் சிறுவர்-சிறுமிகளைக் கொண்டு வந்து விற்பனை செய்வது, வெறும் போலி அட்டைகள் பயன்படுத்தப் பட்டது தான் என்று முடித்து விட முடியுமா என்று ஆச்சரியமாக உள்ளது[9]. பிறகு குழந்தைகள், சிறுவர்-சிறுமியர், வயதுக்கு வந்தவர்கள் என்ற வித்தியாசமும் எடுத்துக் காட்டப்படவில்லை. ஏனெனில், கடத்தி வரப்பட்டவர்களில் பெரும்பாலோர் வயதுக்கு வந்த பெண்கள் மற்றும் 16-18 வயதுகளில் இருந்தனர் என்று குறிப்பிடத் தக்கது. தலைப்பே “மனித கடத்தல் – உண்மையும், பொய்யும்” என்றிருக்கும் போது, “மனித கடத்தல்” பொய் என்ற ரீதியில் பேசியவர்கள் அதனை சட்டரீதியாக நியாயப்படுத்துவது போன்றிருந்தது. ஆக, தலைப்பே குற்றம் புரிந்தவர்களுக்கு சாதகமான கருத்தை உருவாக்க  வேண்டி வலிந்து வைத்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. மேலிம் முக்கிய குற்றாஞ்சாட்டப் பட்டவர்கள் ஜூலை 4ல் ஜாமீனில் விடுவிக்கப் பட்டு, ஒரே வாரத்தில் இக்கருத்தரங்கம் நடத்தப் படுவதும், அத்தகைய திட்டமிட்ட செயலோ என்று எண்ணத்தோன்றுகிறது.

© வேதபிரகாஷ்

01-08-2014

[1] The arrested were identified as Abdulhari Ansari, 32, Mohammed Alamgheer, 24, and Moulana Fojoululla, 26, from Bihar, Muhammed Brish Aalam, 31, from Jharkhand, and K. Manzoor, 42, V.B. Jahir, 56, and M. Backer, 49, from West Bengal.

http://www.thehindu.com/news/national/kerala/trafficking-of-children-8-arrested-in-kerala/article6051228.ece

[2] http://timesofindia.indiatimes.com/city/kochi/HC-grants-bail-to-two-accused-of-child-trafficking/articleshow/37820229.cms

[3] http://www.telegraphindia.com/1140526/jsp/nation/story_18382416.jsp#.U9uRf_mSwfM

[4] http://www.dinamalar.com/news_detail.asp?id=993279

[5] http://www.kerala9.com/news-category/news/kerala-news/child-trafficking-in-kerala-high-level-team-from-jharkhand-reaches-kerala

[6] http://www.newindianexpress.com/nation/NIA-Begins-Probe-in-Bengal-on-Child-Trafficking-to-Kerala/2014/07/27/article2350648.ece

[7] A district child protection team from West Bengal, which visited Anwarul Huda orphanage, wasshocked to find that not only boys, but also girls had been taken to the orphanage.

[8] http://www.thehindu.com/news/cities/Kochi/children-trafficked-to-kerala-being-furnished-with-fake-ids/article6206102.ece

[9] http://eastcoastdaily.com/new/component/k2/item/14580-editorilal-blind-violation-of-juvenile-acts

கற்பழிப்பு எனும்போது, குழந்தைக் கற்பழிப்பாளிகளை ஏன் இந்தியர்கள் மற்றும் இத்தாலியர்கள் மறந்து விட்டார்கள்?

மார்ச்3, 2013

கற்பழிப்பு எனும்போது, குழந்தைக் கற்பழிப்பாளிகளை ஏன் இந்தியர்கள் மற்றும் இத்தாலியர்கள் மறந்து விட்டார்கள்?

வாடிகன்தில்லி கற்பழிப்புப் பற்றி கவலை: இன்று உலகத்திலேயே இரண்டே இரண்டு நாடுகளின் தலைநகரங்களினின்று டிவி-செனல்களில் மிகவும் அதிகமான நேரத்தை கற்பழிப்பு, குழந்தை கற்பழிப்பு, பாலியல் வன்முறை, பெண்-கொடுமை என்றெல்லாம் செய்திகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றன. வியப்பாக இந்த இரண்டு நாடுகள் – வாடிகன், இத்தாலி மற்றும் இந்தியா தான். இரண்டு நாடுகளின் தலைநகரங்கள் – வாடிகன் நகரம் மற்றும் டில்லிதான்! அப்படி என்னத்தான் ஒற்றுமையோ தெரியவில்லை!

வாடிகன்க ற்பழிப்பும், போப் தேர்தலும்: வாடிகனின் குழந்தை கற்பழிப்பு, பாலியல் வன்முறை முதலியவை இங்கு அலசப்பட்டுள்ளன[1]. இப்பொழுது போப் தேர்தலில் 11 குழந்தை கற்பழிப்பு கார்டினெல்கள் ஓட்டுப்போட உள்ளார்களாம்[2]. இதைப்பற்றி ஏராளமான விஷயங்கள் வெளிவந்துள்ளன[3].

வாடிகன் வங்கியும், பெண்களின் வங்கியும்: வாடிகன் வங்கி ஊழல், செக்ஸ் போன்ற விவகாரங்களில் சம்பந்தப்பட்டிருப்பது தெரிந்த விஷயமே. இப்பொழுது தில்லி கற்பழிப்பு விவகாரத்திற்குப் பிறகு, பெண்களுக்குத் தனியாக ஒரு வங்கி என்று அறிவித்திருக்கிறார்கள்! ஒன்றும் புரியவில்லை. கற்பழிப்பு இருந்தால் பெண்களுக்குத் தனியாக வங்கி திறப்பார்களா என்று தெரியவில்லை.

இந்தியர்கள்ஏன்வித்தியாசத்தைகண்டுபிடிக்கவில்லை?: டில்லியில் கற்பழிப்பு என்று ஆர்பாட்டம், பஸ்கள் உடைப்பு முதலியவற்றை பார்க்கிறோம். மக்கள் கொந்தளித்து தெருக்களில் ஆர்பாட்டம் செய்வதையும் கவனிக்கிறோம். டிவிக்களில் தினமும் இதைப்பற்றி செய்திகள், விவாதங்கள், பேட்டிகள் என்று ஆக்கிரமியத்துக் கொண்டுள்ளன. ஆனால், குழந்தைக் கற்பழிப்பாளிகளை ஏன் இந்தியர்கள் மறந்து விட்டார்கள்? குறிப்பாக கிருத்துவ / கிறிஸ்தவ பாதிரிகள், பாஸ்டர்கள், மதகுருமார்கள் என வரிசையாக பலர் குழந்தைகளை (19 வயது வரையுள்ள சிறுமிகளையும் குழந்தைகள் என்று தான் குறிப்பிட்டுள்ளனர்) கற்பழித்துள்ளனர்.

http://christianityindia.wordpress.com/2012/08/04/another-pedophile-in-icmc-salem/

http://christianityindia.wordpress.com/2012/07/18/continuous-christian-sexploitation-pedophile-crimes/

http://christianityindia.wordpress.com/2012/04/07/what-is-wrong-with-telc-crime-sex-money-power/

http://christianityindia.wordpress.com/2012/03/25/rapist-of-teens-can-be-considered-as-pedophile/

வாடிகனும் செக்ஸ்-புருனோகிராப்-கற்பழிப்பு முதலிய விவகாரங்களில் இரட்டை வேடங்கள் போடுகின்றன[4]. சில பாதிரிகளை மறைத்து வைத்தால் வாடிகனே போற்றிப் புகழ்கிறது[5]. உள்ளூர் பாதிரியார்களின் செக்ஸ் தொல்லைகள், சில்மிஷங்கள், நடுராத்திரி விஷயங்கள்[6] அதிகமாகத்தான் உள்ளன. மதுரையைச் சேர்ந்த பாதிரி டேவிட் இத்தாலியில் சிறுமிகளைக் கற்பழித்ததற்காக தேடப் பட்ட்டான். பிடிக்கப் பட்டு, 16 வருடம் ஜெயில் தண்டனை கொடுக்கப்பட்டது[7]. ஊட்டியில் உல்லாசப் பாதிரி என்றால், கொடைக்கானல் பாதிரி அவனையும் முந்தி விட்டான்[8]. ஏனெனில், அவன் ஒரு பள்ளிக்கூடம் வைத்து நடத்துகிறான். முக்திப் படையினரின் செக்ஸ் விளையாட்டுகள் அதிகமாயின[9]. இவர்கள் வெள்ளைக் காரர்கள் என்பதால், போலீஸ் அமுக்கி வாசித்தது. ஆண்டவனின் திட்டமா, சொர்க்கத்தின் திறப்பா என்று உள்ளூர் மக்கள் (ஒசுர்) திகைத்தனர். பெங்களூர் பிஷப்பும் களைத்தவன் அல்ல. பல இளம்பெண்களை தனது காமத்திற்கு உபயோகித்துக் கொண்டான்[10]. பி.பி.ஜாப்பின் குழந்தைகள் / சிறுமிகள் காப்பகத்தைப் பற்றிய விவரங்கள் முன்பு இரண்டு[11]இடுகைகளில் கொடுக்கப்பட்டுள்ளன[12]. பள்ளிகளில் நடக்கும் செக்ஸ்-தொல்லைகளைப் பற்றி சென்னை உயர்நீதி மன்றம் விசாரிக்க ஆணையிட்டுள்ளது[13]. ஏனெனில், கிருத்துவ அனாதை இல்லங்கள், குழந்தைகள் –சிறுவர்-சிறுமியர், இளம்பெண்கள் காப்பகங்கள் செக்ஸ்-கூடாரங்களாக[14], கிருத்துவ பாதிரிகள், கத்தோலிக்க சாமியார்கள் முதலியோர் காமக்களியாட்டங்கள்[15] நடத்துகின்ற இடங்கள் ஆயின[16]. அக்டோபர் 2010ல் கந்தர்புரி சர்ச் தலைவர் சென்னைக்கு வந்திருந்த போது, கிருத்துவ சாமியார்களின் செக்ஸ்-திருவிலையாடல்களைப் பற்றி தனது கவலையை தெரிவித்தார்[17]. உலக அளவில் இப்படி அழுத்தம் வர செக்ஸ் தொந்தரவுகளுக்கு மன்னிப்பு கேட்டார்[18]. பல இடங்களில் இவர்களது செக்ஸ்-தொல்லைகளை தாங்காமல், காப்பகங்களையே மூடிவிட்டனர்[19]. கிருத்துவர்களிடம் பாலியல் குற்றங்கள் பெருகுவது பற்றியும் விளக்கப்பட்டுள்ளது[20].

ஒற்றுமையில் மயங்கித் திளைத்து விட்டார்களா?: ஒருவேளை, மேலே குறிப்பிட்ட வாடிகன்-டில்லி ஒற்றுமைகளைக் கண்டு மயங்கி விட்டார்களா? இல்லை, எல்லாவற்றையும் சோனியா அம்மையார் பார்த்துக் கொள்வார் என்றிருக்கிறார்களா?

© வேதபிரகாஷ்

03-03-2013


[2] Ten Pedophiles Cardinals will going to Pope Vote  – Vatican Crimes

www.vaticancrimes.us/…/ten-pedophiles-cardinals-will-going-to.html

16 hours ago – (Pope John Paul II famously dubbed the New York post as “archbishop of the capital of the world.”) In the wake of Benedict’s abdication, Dolan 

www.­vaticancrimes.­us/­2013/­03/­ten-­pedophiles-­cardinals-­will-­going-­to.­html

400 குழந்தைகளைக் கொன்றுள்ள அதிநவீன ஆங்கில பெண்மணி – ஆங்கிலேய பூதனை!

பிப்ரவரி24, 2013

400 குழந்தைகளைக் கொன்றுள்ள அதிநவீன ஆங்கில பெண்மணி – ஆங்கிலேய பூதனை!

Amelia_dyer1893

இந்தியர்கள் ஏன் ஆங்கிலேயர்களை அறிந்து-புரிந்து கொள்ளவில்லை: ஆங்கிலேயர்கள் என்றாலே அடிவருடும் இந்தியர்கள் இன்றும் உள்ளார்கள், ஆனால், அவர்கள் ஆங்கிலேயர்கள் எப்படி நாகரிகம் அடைந்தார்கள், செல்வம் கொழித்து இன்றுள்ள நிலையை அடைந்தார்கள் என்பதைப் பற்றியெல்லாம் சிந்திப்பதும் இல்லை, கேள்விகள் கேட்பதும் இல்லை. ஏனெனில் அவர்கள் அம்மாதிரியாக மூளைசலவை செய்யப்பட்டு, உருவாக்கப்பட்டுள்ளார்கள். அத்தகைய கூலிமனப்பாங்கிலிருந்து விடுபட இன்னும் ஒரு நூற்றாண்டு ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

Amelia-dyer-1893-when arrested

இந்தியர்களை ஆங்கிலேயர்கள் நடத்தும் விதம்: இன்றும் இங்கிலாந்திற்குச் சென்றால், அதிலும் இந்திய வல்லுனர்கள் வேலைவிஷயமாக, அவர்கள் அரசே வரவழைத்திருந்தாலும், நம்மவர்கள் சரியாக நடத்தப்படுவதில்லை என்பதுதான் உண்மை. ஏதோ பணம் வருகிறது, இந்தியாவில் தம்மைப் பற்றி கௌரமாக நினைப்பார்கள், மதிப்பார்கள் என்ற எண்ணத்தில் அங்கு தாம் இனவெறி ரீதியில் பேசப்பட்டதை, நடத்தப் பட்டதை சொல்வதில்லை. சில நேரங்களில் தமது வேண்டிய நண்பர்களில் சில விஷயங்களை சொல்வதுண்டு. அதிலிருந்தே ஆங்கிலேயர் இன்றும் இந்தியர்களை தங்களது அடிமைகளாக, தமது அதிகாரத்தின் கீழ் வேலை செய்பவர்களாகத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Ameila dyer - the baby killer

அமிலா எலிசபெத் டயர் – ஆங்கிலேய பூதனை: இந்நேரத்தில் தான் அமிலா எலிசபெத் டயர் (Amelia Elizabeth Dyer (1837 – 10 June 1896) என்ற ஆங்கிலப் பெண்மணி 400 குழந்தைகளை கழுத்து நெறித்து கொன்றுள்ளதாக விவரங்களை வெளியிட்டுள்ளார்கள். இவள் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலைப் பார்த்து வந்தாள். 1770லிருந்து, 1934 வரை உள்ள தேசிய ஆவணக் காப்பகத்திலிருக்கும் தஸ்ஜாவேஜுகளை ஆய்ந்த போது, இந்த கோரமான, குரூரமான, பயங்கரமான விச்ஜ்ஹயம் வெளிவந்துள்ளது . இங்கிலாந்தில் முறைதவறிப் பிறக்கும் குழந்தைகள் 18-19வது நூற்றாண்டுகளில் அதிகமாகவே இருந்துள்ளது. அத்தகைய குழந்தைகளை வேறொருவருக்குக் கொடுத்துவிடவோ, தத்து கொடுக்கவோ அல்லது எப்படியாவது மறைக்கவோதான் தாய்மார்கள் நினைத்தார்கள். அத்தகைய சோரம் போன பெண்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஆண்கள் பணக்காரர்களாக, வசதி படைத்தவர்களாக இருந்தால் £80 வரை விஷயத்தை காக்க வசூலிக்கப்பட்டது. £50 கெடுத்த ஆணினிடமிருந்து பெறப்பட்டது. இத்தகைய குழந்தைகள் தாம் இந்த அம்மையாரிடம் சிக்கின, அவை ஒப்பியம் கொடுக்கப்பட்டு அமைதியாகக் கொல்லப்பட்டன. பிறகு பிணங்களை தேம்ஸ் நதியில் தூக்கியெறிந்தாள்.

Amelia-Dyer- details

நர்சாக வேலைப் பார்த்தவள் சரியான வேலையைத்தான் செய்துள்ளாள்: நிறைய பேர்களுக்கு “நர்ஸ்” (Nurse) என்ற வார்த்தைக்கே அர்த்தம் தெரியாமல் இருக்கிறார்கள். ஆரம்பத்தில் “நர்ஸ்” என்றால் குழந்தைகளை / மனிதர்களைக் கொல்பவள் என்றுதான் அர்த்தம். ஆங்கிலேயருக்கு, மேனாட்டவருக்கு, எப்பொழுதுமே தமக்கு பாதகமாக இருக்கும் விஷயங்களை மறைக்க, உண்மைகளை தலைகீழாக்கி சொல்வார்கள். அவ்விதமாகத்தான் இத்தகைய சொற்கள் உருவாகி அகராதியில் இடம் பிடித்தன.

Amelia-Dyer- details-newscutting

கிருத்துவ / யூதமத நம்பிக்கையின் படி தவறாகப் பிறந்த குழந்தை கொல்லப்படவேண்டும்: மத்தியத்தரைக் கடல் நாடுகளில் வளர்ந்த நாகரிகங்களில், குழந்தையை பலி கொடுப்பது என்பது சாதாரணமான விஷயம். அதிலும் தலைப்பிள்ளையை, ஆண்பிள்ளையை பலி கொடுப்பது (sacrifice), ஒரு சிறப்பான சடங்காகக் கொண்டிருந்தார்கள். இந்நம்பிக்கை பிறகு யூத / கிருத்துவ மதங்களிலும் காணப்பட்டது. இருப்பினும், ஏசுகிருஸ்து பிறந்ததை ஏற்றுக் கொள்ளப்பட்டதால், அபார்ஷண் (abortion) செய்து கொள்ளக் கூடாது என்று விதிக்கப்பட்டது. அதாவது, முறைதவறி கர்ப்பமுற்றாலும், குழந்தை வளர்க்கப்படவேண்டும், கொல்லப்படக்கூடாது என்ற எதிர்சித்தாந்தம் ஏற்படுத்தப்பட்டது. இதனால் தான் “கான்வென்ட்” (Convent) என்ற குழந்தைகள் வளர்க்கும், பாதுகாக்கும் மையங்கள், கிருத்துவ மடாலயங்கள் (Monastaries / abbots) அருகில் ஏற்படுத்தப்பட்டன. இத்தகைய மதநம்பிக்கைகளில் வளர்ந்தவர்கள்தாம் ஆங்கிலேயர்கள். இதனைப் பயன்படுத்திக் கொண்டுதான், அம்மையார் இப்படி குழந்தைகளை பலி கொடுத்துள்ளாள்!

Southall-Riots

Southall riots carried out by the British racists against Asians / Indians in particular

இந்தியர்கள் புரிந்து கொள்ள வேண்டும்: இன்றளவும் பொதுவாக இந்தியாவில் நடக்கும் எந்த ஒரு சமூகப்பிறழ்ச்சியும், மிகப்பெரிய அநாகரிகமான, காட்டுமிராண்டித்தனமான நிகழ்ச்சியாகச் சித்தரிக்கப்படுவதாக உள்ளது. ஊடகங்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். சிசுக்கொலை / சிசு வதை / பெண்கொலை என்றேல்லாம் எழுதி, பேசி, ஆராய்ச்சி செய்து ஆவணங்களை உருவாக்கிக் கொண்டிருப்பார்கள். ஆனால், ஆழமாக சென்று அலசமாட்டார்கள். ஒருவர் சொன்னதை அப்படியே திரும்பச் சொல்லி அல்லது இன்றும் அதிகமாக மாற்றிச் சொல்லி பிரபலம் தேடும் விதத்தில் இருக்கிறார்கள். இங்கு ஸ்டவ் வெடிப்பதும், அங்கு துப்பாக்கி வெடிப்பது ஒன்று என்பதைக் கூட அறிந்து கொள்ள மாட்டார்கள். இப்பொழுதாவது புரிந்து கொண்டால் சரி!

வேதபிரகாஷ்
24-02-2013

கன்னியாஸ்திரிக்களின் ஆரோக்யம் பேண-காக்க கர்ப்பத்தடை மாத்திரைகள் சாப்பிட வேண்டுமாம்!

திசெம்பர்19, 2011

கன்னியாஸ்திரிக்களின் ஆரோக்யம் பேண-காக்க கர்ப்பத்தடை மாத்திரைகள் சாப்பிட வேண்டுமாம்!

கிருத்துவத்தில் பெண்களின் நிலை: கத்தோலிக்கக் கிருத்துவத்தில் பெண்கள் அதிகமாகவே அடக்கியாளப்பட்டார்கள். ஆண்டவனால் படைக்கப் பட்ட ஆதாம்-ஏவாள் அண்ணன்-தங்கை அல்லது அக்காள்-தம்பி என்ற உறவில் இருந்தும் எப்படி புணைந்து குழந்தைகள் பெற்றெடுத்து மனிதகுலத்தை விருத்தியடையச் செய்தார்கள் என்ற முரண்பாட்டைப் பற்றி கிருத்துவர்கள் கவலைப்படுவதில்லை. பகுத்தறிவாளிகளும் அதனைப் பற்றி விவாதிப்பதில்லை. “ஆதாம்-ஏவாள்” கருத்துருவாக்கம், பெண்ணின் தோற்றம் அத்தகைய அடக்கியாளும் தமைக்கு வழிவகுத்தது.

மேரியின் புனிதமான குழந்தை பெற்றெடுப்பை ஏற்றுக் கொள்ளவேண்டும்: ஏசுகிருஸ்து மேரிக்கு ஒரு ஆண்தொடர்பு இல்லாமல் குழந்தை பிறந்தது என்று மத்ததின் அடிப்படை கொள்கையாக இருந்து, அதனை கிருத்துவர்கள் எல்லோருமே நம்பியாக / ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. ஜோஸப் என்ற கணவன் இருந்தான், அவன் ஏசுகிருஸ்துவின் தகப்பன் என்று ஏற்றுகொள்ள மறுத்தனர் அல்லது மறுக்க / மறக்கப் பட்டது. அதனால், பெண்கள் பூட்டியே வைக்கப் பட்டார்கள். இது அடுத்த பெண்ணடிமையின் நிலை. முதலாம் ஆதாமின் பாவ,ம், இவ்வாறு இரண்டாவது ஆதாமின் மூலமுன் தொடர்கிறது போலும்!

தேவரடியார்களான கன்னியாஸ்திரிக்கள் – ஏசுவின் மனைவிகள்; கத்தோலிக்கக் கிருத்துவத்தைப் பொறுத்த வரைக்கும் பெண்கள் அனைவருமே ஆண்டவனுக்கு சொந்தம். அவர்கள் கர்த்தருக்காக/ கர்த்தருக்குப் படைக்க / அர்பணிக்கப் பட்டவர்கள்[1]. கன்னியாஸ்திரிக்களாகும் பெண்களுக்கு ஏசுவுடன் திருமணம் செய்விக்கப் படுகிறது[2]. விரல்களில் மோதிரம் அணிவிக்கப் படுகிறது[3]. அதனால் அவர்கள் “கன்னியாஸ்திரிக்கள்” என்ற நிலையில் இருந்து தங்களது கற்பைக் காத்துப் பேணி சேவைசெய்து கொண்டு வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து மடிய வேண்டும். அவர்கள் “தேவரடியார்கள்” என்று சொல்லப்பட்டவர்களை விட மிகவும் மோசமாக நடத்தப் பட்டார்கள் / படுகிறார்கள். இந்த கன்னியாஸ்திரிக்களாகும் விழாவைப் பற்றி / சடங்குகளைப் பற்றி / மந்திரங்களைப் பற்றி, எந்த ஆராய்ச்சியாளனும், சரித்திர ஆசிரியனும், பகுத்தறிவுவாதியும் விவாதித்ததில்லை!

கிருத்துவ வார்த்தைகளிலேயே பொருள் பொறுந்தியுள்ளதை கவனிக்க வேண்டும்: சர்ச், ஆபெட், அப்பே, செமினரி, கான்வென்ட், ஆஸ்பத்திரி என்று சேர்ந்துதான் இருக்கும்.

சர்ச் = மாதாகோவில், கிருத்துவர்களின் வழிபடும் இடம்,

ஆபெட் = மதகுமார்கள் வசிக்குமிடம்,

செமினரி = மாணவர்கள் தங்கி படிக்குமிடம்,

கான்வென்ட் = குழந்தைகள் படிக்குமிடம், தங்கி படிக்குமிடம்,

நன்னெரி = கன்னியாஸ்திரிக்கள் வசிக்குமிடம்

ஆஸ்பத்திரி = குழந்தைகள் பிறக்குமிடம், கிருத்துவர்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பிடம்.

கன்னித்தன்மை / கற்பைக் காக்கும் இடைக்கச்சை: போப்புகள், பிஷப்புகள், பாதிரிகள், பாஸ்டர்கள், மற்ற குருமார்கள் பிரமச்சரியத்தைக் காத்து வாழ வேண்டும். கன்னியாஸ்திரிக்களும் கற்போடு வாழ வேண்டும். ஆனால் முன்னவர்கள் பின்னவர்களிடம் உறவுகொண்டு பிரச்சினைகள் வர ஆரம்பித்தபோது, கன்னியாஸ்திரிக்களுக்கு “கர்டில்” என்ற “பெல்ட்” அணிவிக்க ஆரம்பித்தார்கள்[4]. அது இக்கால ஜட்டி / பேன்டி / நேப்கின் போன்றது. இடுப்பைச் சுற்றி பெண்குறியை மறைக்கும் உடையாகும்[5]. அதற்கு பூட்டு-சாவி இருந்தன[6]. மதகுருமார்கள் இடுப்புக்கச்சையை அணிவித்து சாவிகளை பத்திரமாக வைத்துக் கொள்வார்கள்[7]. இடைக்காலத்திற்குப் பிறகு இக்கட்டுப்பாடுகள் தளர்த்தப் பட்டன, குறைய ஆரம்பித்தன. பொரடஸ்டென்ட் (கத்தோலிக்க எதிர்ப்பு) கிருத்துவம் பிரமச்சரியத்தை கட்டாயமாக்கவில்லை, அதாவது மதகுருமார்கள் கல்யாணம் செய்து கொள்ளலாம். அதனால், கன்னியாஸ்திரிக்கள் ஓரளவிற்குத் தப்பித்தார்கள்!

கருத்தடை மாத்திரிகைகள் / சாதனங்கள்: இருப்பினும் கன்னியாஸ்திரிக்களுடன் உறவு ஏற்படும்போது, கன்னியாஸ்திரிக்கள் கர்ப்பமுற்று குழந்தைகளைப் பெற்றெடுப்பதுண்டு. கத்தோலிக்கக் கிருத்துவத்தைப் பொறுத்த வரைக்கும் “அபார்ஷன்” செய்யக் கூடாது. அப்படி செய்திருந்தால் “ஏசுகிருஸ்துவே” பிறந்திருக்க முடியாது. அதனால் தான் கிருத்துவம் ஒரு பக்கத்தில் கருக்கலைப்பு, கருத்தடை சாதனங்கள் முதலியவற்றை எதிர்த்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், மறுபுறம் கன்னியாஸ்திரிக்கள் கர்ப்பமாகாமல் இருக்க இப்பொழுது கருத்தடை மாத்திரிகைகளை சாப்பிடலாம் என்று பரிந்துரை செய்கிறது. “எய்ட்ஸ்” விழிப்புணர்வு போன்று “பிங்க்” நிறத்தில், “பிங்க் பைபிளையும்”[8] வெளியிட்டாகிவிட்டது! கத்தோலிக்கப் பத்திரிக்கைகளும் அதைப் பற்றி விவாதிக்க ஆரம்பித்தாகிவிட்டது[9]. உலகமுழுவதும் ஒரு லட்சம் கன்னியாஸ்திரிக்கள் இருக்கிறர்களாம். அவர்கள், பிரம்மச்சரியத்தைக் காப்பதால், மார்பு மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய்களுக்கு உள்ளாகிறர்களாம். அதனால், அவற்றிலிருந்து தப்பிக்க கர்ப்பத்தடை மாத்திரிகைகள் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்திருக்கிறார்கள்[10]. கத்தோலிக்க சர்ச் இதற்கு அனுமதியளித்துள்ளதாம்[11]. ஒருவேளை இவ்வாறு செயற்கை முறை தேவையில்லை என்றால், உண்மையாகவே உடலுறவு கொண்டால் அப்பிரச்சினை தீர்ந்து விடுமே, அதாவது, பெண்களை அடக்காமல், இயற்கை ரீதியில் திருமணம் செய்து வைத்தால் அத்தகைய பாதிப்புகள் ஏற்படாமல் இருக்குமே?

வேதபிரகாஷ்

19-12-2011


[5] A priestly vestment generally made of white linen, but sometimes of silk, wool, or cotton and of the color of the day, tied around the waist to confine the alb, worn at Mass. It symbolizes chastity. Wrapping it about the alb the priest prays: “Bind me, O Lord, with the cincture of purity and chastity.” As a cord, or often as a broad sash, it is included in almost every form of religious or ecclesiastical costume.

[6]chastity belt is a locking item of clothing designed to prevent sexual intercourse. They may be used to protect the wearer from rape or temptation. Some devices have been designed with additional features to prevent masturbation. Chastity belts have been created for males and females, ostensibly for the purpose of chastity.

[7] Chastity Belts - Also known as a "girdle of purity", chastity belts peaked in popularity during the twelfth century, when crusaders and warring knights were away from their homes for long periods of time.  Forged out of metal by blacksmiths, a husband could lock his wife in one of two forms of girdles-- a partial chastity belt covering only the front region of the vagina (with a narrow vertical slit which allowed for urination), or a full chastity belt which also covered the back regions of a woman's anatomy (with a second opening to allow for defecation.) Physicians of the time claimed that a women could wear either the full or partial chastity belts for months without any harmful effects--as long as the woman washed the area frequently.