Archive for the ‘வினுப்பிரியா’ Category

வினுபிரியா தற்கொலை: பேஸ் புக் – வாட்ஸ்-அப் குற்றங்கள் பெருகி வருவதும், இளம்பெண்கள் பலிகடா ஆகும் நிலையும் – தடுக்க ஒழுக்கம், கட்டுப்பாடு எங்கிருந்து துவக்க வேண்டும்?

ஜூன்29, 2016

வினுபிரியா தற்கொலை: பேஸ் புக் – வாட்ஸ்-அப் குற்றங்கள் பெருகி வருவதும், இளம்பெண்கள் பலிகடா ஆகும் நிலையும் – தடுக்க ஒழுக்கம், கட்டுப்பாடு எங்கிருந்து துவக்க வேண்டும்?

Vinupriya photos - lamenting parents-Dinakaran

மைதிலி வினுபிரியா ஐடியில் மெஸேஜ் அனுப்பியது யார்?: இதற்கிடையே நாமக்கல்லில் கல்லூரியில் படித்த போது வினுபிரியாவும், அதே கல்லூரியில் படித்த மைதிலியும் தோழியாகி உள்ளனர். இதில் மைதிலி அதே கல்லூரியில் படித்த ஒரு வாலிபரை காதலித்ததாகவும், அந்த வாலிபர் ஒரு தலையாக வினுபிரியாவை காதலித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மைதிலி தன் காதலரை தன் வசப்படுத்த வினுபிரியாவுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் மைதிலி வினுபிரியா என்ற பெயரில் பேஸ்புக் ஐ.டி.யை போலியாக உருவாக்கி வினுபிரியாவின் ஆபாச படங்களை வெளியிட்டிருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் தற்போது சென்னையில் பணிபுரிந்து வரும் மைதிலியை போலீசார் சேலத்திற்கு விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளனர். அவரிடம் விசாரித்தால் இந்த வழக்கில் முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்பதால் தற்போது இதில் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. படிக்கும் இடத்தில், படிப்பைத் தவிர இந்த மாணவிகள் இவ்வாறு ஈடுபடுவதால் தான் பிரச்சினை ஏற்படுகிறது. அதேபோல, அந்த மாணவர்களையும் கட்டுப்படுத்தி வைக்க வேண்டும்.

Vindupriya parents cryபோலீசாரின் மெத்தன போக்கு: இதற்கிடையே முன்கூட்டியே அந்த பேஸ்-புக் ஐ.டி.யை போலீசார் முடக்கியிருந்தால் தன் மகள் இறந்திருக்க மாட்டாள் என்றும், வினுபிரியாவின் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்தால் தான் அவரது உடலை வாங்குவோம், இல்லையென்றால் அவரது உடலை வாங்க மாட்டோம் என்று அண்ணாதுரை மற்றும் அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்[1]. இதனால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில பதட்டமான சூழல் நிலவுவதால் அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர்[2]. அவரது உடல் சேலம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்கப்போவதில்லை என வினுப்பிரியாவின் உறவினர்கள் இரண்டாவவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்[3]. இந்நிலையில், மருத்துவமனையிலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பேரணியாகச் சென்ற உறவினர்கள், மாவட்ட ஆட்சியர் சம்பத்திடம், குற்றவாளியை விரைந்து கைது செய்யக் கோரி மனு அளித்தனர். காவல்துறை துணைத் தலைவர் அலுவலகத்திற்குச் செல்லுமாறு மாவட்ட ஆட்சியர் பரிந்துரைத்தார். பின்னர், வெளியே வந்த பெற்றோர், அதிகாரிகள் தங்களை அலைக்கழிப்பதாக புகார் தெரிவித்தனர். காவல்துறை துணைத்தலைவர் அலுவலகத்திற்குச் செல்லாமல், அரசு மருத்துவமனைக்குச் சென்ற உறவினர்கள் அங்கு தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்[4]. வினுப்பிரியா தற்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளி மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் சம்பத் தெரிவித்துள்ளார்[5]. இதனிடையே போலீஸார் வருத்தம் தெரிவித்ததை அடுத்து வினுப்பிரியாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தங்கள் போராட்டத்தை விலக்கி கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன[6]. சேலம் எஸ்.பி., அளித்த உறுதிமொழியை தொர்ந்து, வினுபிரியாவின் உடலை பெற்றுக் கொள்ள, பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். பிரேத பரிசோதனைக்கு பின், நேற்று மாலை, அவரது உடல் ஒப்படைக்கப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன், மோட்டூரில், உடல் தகனம் செய்யப்பட்டது[7].

Salem SP Amit Kumar Singh apologises to the family of the deceased - NIE photoஇன்டர்நெட் புராட்டகால் நெட்வொர்க் முகவரியில் (.பி.எண்) சோதனை: ஆசிரியை வினுப்பிரியாவின் பேஸ்புக் படத்தை எடுத்து மார்பிங் செய்து ஆபாசமாக வெளியிட்ட ஆசாமி, எந்த இன்டர்நெட் புராட்டகால் நெட்வொர்க் முகவரியில் (ஐ.பி.எண்) இருந்து அனுப்பி இருக்கிறான் என்பதை சம்பந்தப்பட்ட நெட்வொர்க் நிறுவனத்திடம் பேசி அலசி ஆராயும் பணியை தொடங்கினர்[8]. அவர்களின் தேடுதல் வேட்டைக்கு பலனாக வினுப்பிரியா புகைப்படத்தை மார்பிங் செய்யப்பட்டதாக சொல்லப்படும் முகவரி (ஐ.பி. எண்) ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதனுள் புகுந்து சைபர்கிரைம் போலீசார் பார்க்கையில், அதில் ஒரே ஐ.பி. எண்ணைபோல 100-க்கும் மேற்பட்ட எண்கள் இருப்பதை குற்றவாளியை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது[9]. அதுமட்டுமல்லாது, புகைப்படத்தை மார்ஃபிங் செய்து பரவவிட்ட நபருக்கு எப்படி தற்கொலை செய்து கொண்ட வினுப்பிரியாவின் மாமா மற்றும் தந்தையின் செல்போன் எண் தெரிந்தது என்றும், தொடர்புக்கு என்று தந்தை அண்ணாதுரையின் செல்போன் எண்ணை எப்படி பதிவு செய்தான்? என்பதும் சந்தேகத்திற்கிடமாகியது. இதுதொடர்பாக போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தினர்[10].

Parents refused to take the body - Vinupriyaமார்பிங் செய்த சுரேஷ் கைது (29-06-2016): இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கல்பாரைப்பட்டியை சேர்ந்த சுரேஷ் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். அவர் அளித்த தகவலின் பேரில் இளம்பிள்ளை பகுதியை சேர்ந்த தனுஷ் என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இருவரை பிடித்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். சுரேஷ் தறி நெய்யும் தொழிற்சாலையில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த இரண்டு வருடத்திற்கு முன் வினுப்பிரியாவை சுரேஷ் ஒரு தலையாக காதலித்ததாக கூறப்படுகிறது[11]. இதை வினுப்பிரியா ஏற்கவில்லை. இருப்பினும் வினுப்பிரியா பெற்றோரிடம் சென்று பெண் கேட்டார். ஆனால் பெண் கொடுக்க மறுத்து விட்டனர். அதே நேரத்தில் முகமது சித்திக் என்பவனும் வந்து பெண் கேட்டான், அவர் வேறு மதம் என்பதால் பெண் கொடுக்க அண்ணாதுரை மறுத்தார் என்று முன்னர் செய்திகள் வந்தன. அப்படியென்றால், இந்த விவகாரங்கள் பெற்றோர்களுக்குத் தெரியும் என்றாகிறது. இருப்பினும், இக்கால பையன்கள் இம்மாதிரி, தாங்களே, ஒருதலைபட்சமாக முடிவெடுத்துக் கொண்டு, மற்றவர்களையும், தங்களது விருப்பங்களுக்கு ஒப்புக் கொள்ளவேண்டும், இல்லையென்றால், தான் என்னவேண்டுமானாலும் செய்வேன் என்ற குரூர-வக்கிர புத்தியுடன் செயல்படுவது தான் அதிர்ச்சியாக இருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ் தனது நண்பர் தனுஷ் உதவியுடன் வினுப்பிரியா உடலை மார்பிங் செய்து வெளியிட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன[12].

Vinupriyas பரென்ட்ச் அப்பெஅல் டொ தெ சொல்லெச்டொர்பிடிபட்டவர்கள் எத்தனை பேர், எல்லோரும் மார்பிங் செய்தனரா?: மேலும் அவர் அளித்த தகவலின் பேரில் இளம்பிள்ளை பகுதியை சேர்ந்த தனசேகரன் என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்[13]. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது[14]. சுரேஷ் அளித்த தகவலின் பேரில் மேலும் இருவரை பிடித்து விசாரிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர் என்கிறாது தினகரன்[15]. இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய சங்ககிரி டிஎஸ்பி கந்தசாமி, ஒருதலைக் காதலால் வினுப்பிரியா படத்தை ஆபாசமாக சித்தரித்து சுரேஷ் வெளியிட்டுள்ளார். வினுப்பிரியா தற்கொலை வழக்கில் சுரேஷை தவிர வேறு யாருக்கும் தொடர்பில்லை. கைதான சுரேஷிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்தார் என்கிறது விகடன்[16], ஆனால் தனசேகர் பற்றி ஒன்றும் குறிப்பிடவில்லை[17]. எனவே, இவ்விசயத்திலும் முரண்பட்ட செய்திகள் விசித்திரமாக இருக்கின்றன, உண்மையில் மார்பிங் செய்தது யார், அல்லது அவனுக்கு உதவி செய்தது யார், இதில் ஈடுபட்டது, ஒருவரா, ஒருவருக்கு மேல் உள்ளனரா என்ற கேள்விகள் எழுகின்றன.

 

© வேதபிரகாஷ்

29-06-2016

[1] மாலைமலர், பேஸ்புக்கில் ஆபாச படம் வெளியானதால் ஆசிரியை தற்கொலை: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம், பதிவு: ஜூன் 28, 2016 10:43

[2] http://www.maalaimalar.com/News/District/2016/06/28104306/1021908/salem-teacher-suicide-case-relatives-struggle.vpf

[3] நியூஸ்7.டிவி, மார்ஃபிங் காரணமாக தற்கொலை செய்துகொண்ட வினுப்பிரியாவின் உடலை வாங்க மறுப்பு, June 28, 2016

[4] http://ns7.tv/ta/parents-refused-take-vinupriyas-body.html

[5] தினபூமி, வினுப்பிரியா தற்கொலை: விரைவில் குற்றவாளி கைது செய்யப்படுவார் சேலம் கலெக்டர் உறுதி, June 28, 2016

[6] http://www.thinaboomi.com/2016/06/28/57532.html

[7] http://www.dinamalar.com/news_detail.asp?id=1553212

[8] தினத்தந்தி, வினுப்பிரியா தற்கொலை வழக்கில் இளைஞர் கைது; செல்போன், சிம்கார்டை பறிமுதல் செய்து விசாரணை, பதிவு செய்த நாள்: புதன், ஜூன் 29,2016, 10:31 AM IST; மாற்றம் செய்த நாள்: புதன், ஜூன் 29,2016, 10:31 AM IST.

[9] http://www.dailythanthi.com/News/India/2016/06/29103132/Morphed-Facebook-images-drive-woman-to-suicide-youth.vpf

[10] http://tamil.oneindia.com/news/tamilnadu/one-arrest-salem-vinupiriya-suicide-case-257036.html

[11] விகடன், ஒருதலைக்காதலன் செய்த விபரீதமா? வினுப்பிரியா வழக்கில் திருப்பம், Posted Date : 11:32 (29/06/2016)

[12] தினமலர், வினுப்பிரியா படத்தை மார்பிங் செய்து வெளியிட்டவர் கைது, ஜூன்.29, 2016:13:41.

[13] தமிழ்.ஒன்.இந்தியா, வினுப்பிரியா தற்கொலை: ஒருவரை கைது செய்தது சேலம் போலீஸ், By: Mayura Akilan, Published: Wednesday, June 29, 2016, 10:34 [IST]

[14] http://www.dinamalar.com/news_detail.asp?id=1553571

[15] http://www.dinakaran.com/latest_detail.asp?Nid=227665

[16] http://www.vikatan.com/news/tamilnadu/65654-new-twist-in-vinu-priya-suicide-case.art

[17] விகடன், ஒருதலைக்காதலன் செய்த விபரீதமா? வினுப்பிரியா வழக்கில் திருப்பம், Posted Date : 11:32 (29/06/2016)