Archive for the ‘கொத்தனார்’ Category

கட்டிடத் தொழில் பெண்கள் – பாலியல் தொந்தரவுகள், பலாத்காரங்கள், வன்புணர்வுகள் முதலியவற்றிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு என்ன செய்ய வேண்டும்?

ஓகஸ்ட்22, 2016

கட்டிடத் தொழில் பெண்கள் – பாலியல் தொந்தரவுகள், பலாத்காரங்கள், வன்புணர்வுகள் முதலியவற்றிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு என்ன செய்ய வேண்டும்?

பள்ளி மாணவிக்கு கொத்தனார் செக்ஸ் தொல்லை

மதுரையில் ஜூலை 2016ல் கட்டிடத் தொழிலாளி பாலியல் குற்றத்தில் ஈடுபட்டது: மதுரையில் நடந்த இன்னொரு இதே போன்ற குற்றம் எடுத்துக் காட்டப்படுகிறது – மதுரை ஜெயலிங்கபுரத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 48), கட்டிட தொழிலாளி. இவருக்கு மனைவி, குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ரவிச்சந்திரன், மனைவி, குழந்தைகளையும் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார்[1]. இதற்கிடையே ரவிச்சந்திரனுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் பழக்கம் காரணமாக கள்ளத்தொடர்பு ஏற்படட்து. அந்த பெண், கணவரை பிரிந்து 17 வயது மகளுடன் வசித்து வந்தார். இதன்பின்னர் கள்ளக்காதலி மற்றும் அவரது மகளை அழைத்து கொண்டு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கோவை பாப்பநாயக்கன் பாளையத்துக்கு வந்தார். இங்கு ஒரு வாடகை வீட்டில் ரவிசந்திரன், கள்ளக்காதலி, மற்றும் வளர்ப்பு மகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் ரவிச்சந்திரனுக்கு வளர்ப்பு மகள் மீது காமம் ஏற்பட்டது. இதனால் வளர்ப்பு மகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் வளர்ப்பு மகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதைதொடர்ந்து ரவிசந்திரன் மீது கோவை மத்திய மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதைதொடர்ந்து வளர்ப்பு மகள் என்றும் பாராமல் பாலியல் பலாத்காரம் செய்த ரவிச்சந்திரனை போலீசார் கைது செய்தனர்[2]. இதே போல திருவள்ளூர் அருகே நடந்ததும் உண்டு[3]. ஆகவே, இப்பிரச்சினை தீர வழிகாணவேண்டும்.

வீடு கட்டுதல்.பெண்கள் வேலை செய்வது

சித்தாள், பெரியாள், கொத்தனார், மேஸ்திரி – இவர்களின் பலதார முறைகள், கொக்கோகங்கள்: பொதுவாக, கட்டிடம் கட்டும் தொழிலாளர்களிடம், இத்தகைய தாமத்தியம் மீறிய உறவுகள் பல்லாண்டுகளாகக் காணப்பட்டு வருகிறது. மண், செங்கல், கலவை முதலியவற்றை தூக்கி வருதல், சிமென்ட் மூட்டை தூக்குதல், போன்ற நிலைகளில் ஆண்-பெண் வேலையாட்கள் தொட்டுக் கொள்வது-பட்டுக் கொள்வது சகஜமான விசயம். மற்ற நிலைகளை விளக்க வேண்டிய அவசியம் இல்லை. இதனால், நெருக்கம் கொடுக்கும் மயக்கத்தில் சிக்கி மாட்டிக் கொண்டவர்களும் உண்டு. முன்னர், ஏழை, வசதியில்லாத நிலை, போன்ற காரணிகளால் அத்தகைய சீரழிவு நடந்து வந்தது. ஆனால், அவர்களிடையே, அது சகஜமாகி ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் கூட இருந்தது. அதாவது, ஒருவன், இரண்டு அல்லது மூன்று பெண்களை வைத்துக் காப்பாற்றுகிறான், செலவுக்கு பணம் கொடுக்கிறான், பிறந்த குழந்தைகளை கவனித்துக் கொள்கிறான், படிக்க வைக்கிறான் என்றால், பெண்கள் அமைதியாக இருந்து வந்தார்கள். அவ்வாறு இல்லை எனும்போதுதான், சண்டை, சச்சரவு, அடிதடி, கொலை என்றெல்லாம் நடந்து வந்தன-வருகின்றன.

வீடு கட்டுதல்.பென்கள் வேலை செய்வது

கட்டிட வேலை பெருகப்-பெருக அத்தகைய கொக்கோகமும் அதிகமானது: இப்பொழுது 20-30 ஆண்டுகள் காலமாக, அடுக்கு மாடி கட்டிடங்கள், நூற்றுக்கணக்காக கட்டப்பட்டு வரும் நிலையில், தனி மேஸ்திரியிடம் வேலை செய்வது போய், கம்பெனிக்கு வேலை செய்வது என்றாகி விட்டது. அதாவது, இடையில் ஒரு தரகர் போன்றவன், ஆட்களை பிடித்துக் கொண்டு போய் வேலைக்கு வைப்பது, கமிஷன் பெற்றுக் கொள்வது போன்ற நிலையும் வந்து விட்டது. இதை “அவுட்-ஸ்ரோசிங்” என்று பெருமையாக சொல்லப்படுகிறது. இதனால், இப்பணிகளில் ஈடுபடும் பெண்கள் முந்தைய குறிப்பிட்ட உறவுமுறைகளை மீறி விபச்சாரம் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அதாவது, கொத்தனர், மேஸ்திரி, ஏஜென்ட், சூபர்வைஸர், இஞ்சினியர், முதலாளி என்று இவர்களுக்கெல்லாம் “திருப்தி” படுத்தினால் தான், தொடர்ந்து வேலை-சம்பளம்-இதர வசதிகள், இல்லையென்றால், கல்தா-அதோகதிதான் என்று மிரட்டியே, அவ்வாறு செய்யப்பட்டு வருகிறது. அந்நிலையில் ஒன்று-இரண்டு-மூன்று என்று பல ஆண்களுடன் படுக்க வேண்டிய நிலை உருவாகிறது, விபச்சாரம் ஆகிறது.

சினிமாவில் தவறாகச் சித்தரிப்பு- திட்டக்குடி

போதைப் பழக்கமாகி விட்ட செக்ஸ் பழக்கம்: இதனால், செக்ஸ் என்பது, ஏதோ காசு கொடுத்து சினிமா பார்ப்பது, குடிப்பது, போதை மருந்து உட்கொள்வது போன்ற நிலையாகி விட்டது. காசுக்கு ஏற்ப பனியாரம் போல, பெண்கள் கிடைப்பதால், சாதாரண வேலை செய்பவன் கூட சபலத்தில் சிக்கி, காமத்தை அனுபவிக்க ஆரம்பிக்கிறன். கடுமையான வேலைக்குப் பிறகு, இத்தகைய களியாட்டங்களில் ஈடுபடுகிறான். காசில்லை எனும்போது, இவ்வாறு அருகில் இருக்கும் சிறுமிகள் மற்ற பென்கள் மீது கண்ணை வைக்கிறான். சுலபமாக ஏழை சிறுமிகள் மாட்டிக் கொள்வதால், அதையே பழக்கமாக்கிக் கொண்டு, வலைவீச ஆரம்பித்து விடுகிறான். இவ்வாறு தான் முருகன் மாறியுள்ளான்.  இதைப் போன்று பலர் இன்னும் மாட்டிக் கொள்ளாமல் இருக்கின்றனர். கொத்தனார், மேஸ்திரி, ஏஜென்ட், சூபர்வைஸர், இஞ்சினியர், முதலாளி என்பவர்கள் தாம் அவர்கள். தங்களது நிலை, பணம், அதிகாரம் போன்றவற்றால், தப்பித்து வருகின்றனர். ஐ.டி போன்ற வேலைகளில் இது மிகவும் நாகரிகமாக நடந்து வரும் நிலையில், இத்தகைய கீழ்நிலையில் அது மோசமாக வெளிப்படுகிறது.

சினிமாவில் தவறாகச் சித்தரிப்பு

கட்டிடத் தொழிலாளர்களுக்கு வசதி செய்து தரவேண்டும்: தமிழ்நாடு கட்டிடத் தொழிலாளர்கள் நலவாரியம் [Tamil Nadu Construction Workers Welfare Board] ஏற்ப்டுத்தப் பட்டு, தொழிலாலர்களின் பிரச்சினைகளைக் கவனிக்கிறது என்றாலும், இத்தகைய குற்றங்கள் பெருகி வருகின்றன. கட்டிடத் தொழிலில் கட்டுப்பாடுகள் அதிகமாக்கி, பெண்களின் நிலை கண்காணிக்கப்பட வேண்டும். அதற்கான வழிமுறைகள், வசதிகளை கட்டிடம் கட்டும் கம்பெனிகள் செய்து தரவேண்டும். பெண்கள், சிறுமிகள், குழந்தைகள் தங்க இடம், தூங்குவதற்கு தனியான இடம், கழிப்பறைகள் முதலிய வசதிகளும் செய்து தரவேண்டும். இப்பொழுது சில கம்பெனிகளே அவ்வாறு செய்து கொடுக்கின்றன. பெரும்பாலும், வேலை செய்வோர், அந்தந்த இடங்களையே தகவமைத்துக் கொண்டு, உபயோகப்படுத்திக் கொள்கின்றனர். ஆனால், கட்டிட வேலை ஆரம்பிக்கும் போது மற்றும் முடிந்த பிறகு, தெருவுக்குத்தான் வருகிறார்கள். அதனால், தான் அசோக் நகர் பில்லர், இ.எஸ்.ஐ, தாலுக்கா ஆபீஸ் பகுதிகளில் லட்சக்கணக்கில் கட்டிடத் தொழிலாளர்கள் தெருவோரங்களில், பிளாட்பாரங்களில் குடித்தனம் நடத்துகிறார்கள். இருப்பவர்கள் அங்கேயே வீடுகள் கட்டிக் கொண்டு வாழ்கிறார்கள், மற்றவர்களுக்கு வாடகையும் விடுகிறார்கள். அரசியல், ஓட்டுவங்கி மற்ற ஆதாயங்களுக்காக அவர்களுக்கு ரேசன் கார்ட், மின்சார இணைப்பு போன்றவையும் கொடுக்கப்படுகின்றன. அதாவது, அரசே அத்தகைய ஆக்கிரமிப்புகளை ஊக்குவிப்பதோடு, சட்டப்படி சரிசெய்கிறது. இப்படி, லட்சக்கணக்கில் ஆந்திரா முதல் வடமாநிலங்களிலிருந்து வேலை செய்ய குடும்பத்தோடு வருகிறார்கள், தங்கி விடுகிறார்கள்.

அஞ்சுக்கு ஒண்ணு- திரைப்படத்தில் சித்தாள்

இப்பிரச்சினையை தடுப்பற்கான வழிமுறைகள்: முன்னர் குறிப்பிட்ட பாதிக்கப்பட்ட பெண்கள், சீரழிந்த ஆண்கள் முதலியோர்களுக்கு ஆலோசனை வழங்கப் பட வேண்டும். ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என்று அறிவுருத்தப்பட வேண்டும். பெண்கள் கண்காணிக்கப்பட்டு, இத்தகைய அத்துமீறல்கள் நடக்கும் போது, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பணம், அதிகாரம், முதலியவற்றின் தாக்கத்தைக் குறைக்கும் வகையில் சமூக ஆர்வலர்கள் கண்காணிக்க வேண்டும். கட்டிடத் தொழிலில் ஈடுபடும் ஆண்கள்-பெண்கள் இருபாலருக்கும், விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும், சினிமாக்களில் இவர்களை அதுபோலவே சித்தரிக்கப்பட்டு இழிவுபடுத்துவதை தடுக்கப்படவேண்டும்[4]. சமூக ஆரவலர்கள், பெண்ணியப் போராளிகள் முதலியோர், இத்தகைய பிரச்சினைகளிலும் கவனம் கொள்ள வேண்டும். இல்லையெனில், பெரிய அளவில் குற்றங்கள் ஏற்பட ஏதுவாகும்.

அஞ்சுக்கு ஒண்ணு- திரைப்படத்தில் சித்தாள் சித்தரிப்பு

சினிமாக்களில் பெண் கட்டிட தொழிலாளர்கள் மோசமாகச் சித்திரிக்கப்படுதல்: சினிமாக்களில் நர்ஸுகளை அடுத்து, கட்டிட பெண் தொழிலாளர்கள் தான் மிகவும் மோசமாகச் சித்தரிக்கப்படுகின்றனர்[5]. ஏதாவது ஒரு “சப்ஜெக்டை” எடுத்துக் கொள்கிறோம் என்று சில தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் முதலியோர் இவ்வாறு இறங்குகிறார்கள்[6]. இதில் சமூக பிரஞை இல்லாமல் தனிமனித அகம்பாவன் தான் வெளிப்படுகிறது[7]. இன்றைய நிலையில், நிச்சயமாக சினிமாக்காரர்கள் சமூகத்திற்கு நல்லது செய்கிறார்கள் என்று சொல்லவே முடியாது[8]. கட்டிட தொழிலாளர்களை சித்தரிக்கும் இவர்கள், சினிமா தொழிலால் எத்தனை விபச்சாரிகளை உருவாக்கியிருக்கிறார்கள் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அதை விடுத்து பரஸ்பர குற்றச்சாட்டுகளில் ஈடுபடுவதால், பெண்களின் மீது இறைத்த சேற்றை அலம்பிவிட முடியாது[9].

kungumam_45சிறுமிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: சிறுமிகள், வயதுக்கு வந்த சிறுமிகள் மற்ற இளம் பெண்கள் முதலியோர் ஆண்களிடம் ஜாக்கிரதையாக இருப்பது எப்படி என்று சொல்லிக் கொடுக்க வேண்டும். சிறுமிகளை-இளம்பெண்களை ஆண்களுடன் பேச விடுவது கிடையாது போன்ற 1950களில் இருந்த கட்டுப்பாடுகள் இவற்றைத்தான் மறைமுகமாகக் காட்டுகின்றன. பேசக்கூடாது என்பதில்லை, இயற்கையான ஆண்-பெண்களிடையே இருக்கும் ஈர்ப்பு, பாலியல் ரீதியில் செயல்பட்டு, அறியாமையால் கூட பிரச்சினை ஏற்படகூடாது என்ற விழிப்புணர்வை கவனிக்க வேண்டும். ஒரு ஆண் தன்னிடம் தவறாக நடக்க முயற்சிக்கிறான், என்பதை பொதுவாக, ஆண்கள் பார்க்கும் பார்வையிலேயே பெண்கள் தெரிந்து கொள்ளும் உணர்வு உள்ளது. இருப்பினும், அறியாத வயதில், ஒரு உணர்ச்சியால், அத்தகைய நிலைகளை மறைமுகமாக விரும்பவும் செய்யும் குணாதிசயங்கள் சிறுமிகளுக்கும், இளம் பெண்களுக்கும் ஏற்படுகிறது. அது எல்லைகளை மீறாமல் இருக்க எச்சரிக்க வேண்டும். அடிக்கடி தேவையில்லாமல் பார்க்கிறான், பேச முற்சிக்கிறான், பேசுகிறான், என்பதை உணரும் போது, அறியும் போது தவிக்கவேண்டும், தடுக்கவேண்டும். மேன்மேலும், அவ்வாறு செய்ய இடம் கொடுக்கக் கூடாது. இதே முறைகள் பையன்கள்-ஆண்கள் வீடுகளிலும் இருக்க வேண்டும். அப்பொழுதுதான், இப்பிரசினையைப் போக்கமுடியும்.

© வேதபிரகாஷ்

21-08-2016

வீடு கட்டுதல்

[1] மாலைமலர், கோவையில் வளர்ப்பு மகளை பாலியல் பலாத்காரம் செய்த கட்டிட தொழிலாளி கைது,  பதிவு: ஜூலை 26, 2016 14:47

[2] http://www.maalaimalar.com/News/District/2016/07/26144737/1028407/Adopted-daughter-molestation-by-worker-arrest-near.vpf

[3] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-113080300027_1.htm

[4] தினமலர், அஞ்சுக்கு ஒண்ணு படத்துக்கு எதிர்ப்பு: பெண் கட்டிட தொழிலாளர்களை தவறாக சித்தரிப்பதாக புகார், செப்டம்பர்.11, 2015.13.49: IST.

[5] http://cinema.dinamalar.com/tamil-news/37280/cinema/Kollywood/Complaint-against-Anjuku-onnu-movie.htm

[6] தமிழ்.பிளிம்.பீட், அஞ்சுக்கு ஒண்ணு படத்துக்கு மிரட்டல்.. பொன் குமாருக்கு இயக்குநர் கடும் கண்டனம்!, Posted by: Shankar, Published: Saturday, September 12, 2015, 12:17 [IST]

http://www.vikatan.com/news/tamilnadu/51907.art

[7] http://tamil.filmibeat.com/news/anjukku-onnu-director-condemns-pon-kumar-036684.html

[8] கட்டட தொழிலாளர்களை இழிவுபடுத்துவதாகக் கூறி, விரைவில் வரவிருக்கும் ‘அஞ்சுக்கு ஒண்ணு’ படத்துக்கு எதிராக அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பு போர்க்கொடி உயர்த்தியுள்ளது. அதில் கட்டுமானத்தொழிலில் ஈடுபடும் ஆண்கள் மதுவுக்கு அடிமையானவர்களாகவும், பெண்களை பாலியல் ரீதியாக கேவலப்படுத்தியிருப்பதாகவும் தகவல் வந்துள்ளது.

விகடன், அஞ்சுக்கு ஒண்ணுபடத்துக்கு திடீர் சிக்கல்!, Posted Date : 18:01 (03/09/2015)

[9] http://www.vikatan.com/news/tamilnadu/51907.art