Archive for the ‘ரவிச்சந்திரன்’ Category

தமிழகத்தில் மறுபடியும் குழந்தை விற்பனை, கடத்தல், தத்தெடுப்பு, ஏற்றுமதி முதலியன! தொழில் தர்மம் திசை மாறி குரூர குற்றங்களாவது [3]

மே5, 2019

தமிழகத்தில் மறுபடியும் குழந்தை விற்பனை, கடத்தல், தத்தெடுப்பு, ஏற்றுமதி முதலியன! தொழில் தர்மம் திசை மாறி குரூர குற்றங்களாவது [3]

Dark or Amul baby baby sale in Tamilnadu-those arrested-2

முட்டை வியாபார தொடர்பு குழந்தை விற்கும் வியாபாரமாக மாறியது: முட்டை விற்பனையில் உண்டான தொடர்பு, நாளடைவில் இத்தகைய பெரிய வியாபாரமாக மாறியது[1]. குழந்தை இல்லை என்று வரும் தம்பதியர் இலக்காயினர். லட்சங்களை செலவழித்து குழந்தை பெற்றுக் கொள்வதை விட, ஆயிரங்களில் குழந்தையையே வாங்கி விடலாம் என்ற குறுக்கு வழியைக் காட்டுகின்றனர். ஹிந்து தத்தெடுப்பு மற்றும் பரிபாலன சட்டம் [Hindu Adoption and Maintenance Act] கீழ் தான், இத்தனை மோசடிகள், குற்றங்கள் நடந்துள்ளன[2]. குழந்தை தத்தெடுப்பவர் நேராக குழந்தையை பெறலாம் என்றிருந்தாலும், திருமணம் ஆகாத ஆண்கள், பெண்கள், விதவைகள் முதலியோரும் தத்தெடுக்கலாம் என்பதால், இடைத் தரகர்கள் மூலம், குழந்தைகள் விற்கப்படுகின்றன[3]. அரசு அதிகாரிகள் ஊழலில் திளைத்துள்ளதால், காசு கிடைத்தால், அதையும் செய்ய தயாராக இருக்கின்றனர். அதனால் தான், 30 ஆண்டுகளாக, அமோகமாக, இவ்வியாபாரம் நடந்துள்ளது. இதற்கு இந்து சட்டம் உபயோகப் படுத்துவது நோக்கத் தக்கது. ஏனெனில், வாங்கியவர்களில் கிருத்துவர், முகமதியர் உள்ளனர். இதில் ஈடுபட்டுள்ளதிலும், முகமதிய பெண்கள் உள்ளனர்.

Rasipuram babies sale gag - Dinakaran

சமூகநல ஆர்வலர்கள் எடுத்துக் காட்டுவது (2010 முதல் 2015 வரை): முன்னர் இதே போன்ற குழந்தை விற்பனை விவகாரத்தில், கோமல் கன்டோரா என்ற சிறுவர் உரிமைகள் இயக்கத்தின் இயக்குனர், “இரண்டு முதல் நான்கு வயது வரையில் உள்ள குழந்தைகள் தாம் இவர்களின் குறியாக இருக்கின்றன. இதெல்லாம் குழந்தை கடத்தலா அல்லது இவ்வாறு குழந்தைகளைக் கடத்தி நிதி பெறுகிறார்களா என்று தெரியவில்லை. இத்தலைய மீறல்கள் இருக்கும் வரையில் அரசின் கண்காணிப்பு, சோதனைகள் முதலியவை இருக்க வேண்டும்”, என்று கருத்துத் தெரிவித்தார்[4]. அப்பொழுது, ஏற்கெனவே சிக்கிய ஒரு ஆள் மறுபடியும் அதே வேலையில் ஈடுபடுகிறான். இதே ரஸ்ஸல் ராஜ் ஜூலை.2015ல் மனைவி, மாமியார்களுடன் கைது செய்யப்படுகிறார், மாமனார் தப்பித்துக் கொண்டார் போலும். பிரபுதாஸ் விசயத்தில், ஏ. நாராயணன் கூறியுள்ளதாவது[5], “சட்டத்திற்குப் புறம்பாக நடத்தப் படும் இல்லங்களினின்று சிறுமிகளை காப்பாற்றிய பிறகு எல்லா விதிமுறைகளையும் போலீஸார் மீறுகின்றனர். குழந்தை கர்ப்பமாக இருந்தது இரண்டு மாதங்கள் வரையும் கண்டுகொள்ளாமல் விடுப்பது ஆச்சரியமாக உள்ளது. சிறுமிகள் மீட்டவுடன் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பியிருக்க வேண்டும். ஆனால், போலீஸார் அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைகின்றனர். இது சிறார் நீதி சட்டத்திற்கு [Juvenile Justice Act] புறம்பானது.” டி.ஜிபிக்கு கொடுத்துள்ள மனுவில் 9ல், 8 குழந்தைகள் அவ்வாறு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். முதலில் குழந்தைநல கமிட்டியின் முன்பு உரிய விசாரணைக்குட்படுத்திய பிறகு, அவர்களை எவ்வாறு காப்பாற்றலாம் போன்றவற்றை செய்திருக்க வேண்டும். இவையெல்லாம் Juvenile Justice Act, 2000 and Tamil Nadu Juvenile Justice Rules, 2001 சட்டங்களின் கீழ் செய்யவேண்டியவை[6]. இவையெல்லம் 2010-2015களில் நடந்தவை என்றால், 2019லும், அதேநிலை உள்ளதை கவனிக்கலாம்.

Baby sale - CBCID- handed over.2

உசிலம்பட்டி விவகாரமும், மிஷனரிகளும்: பெண்சிசுவைக் காப்போம் என்ற பிரச்சாரத்தை வைத்து, கிறிஸ்தவ மிஷனரிகள் ஒரு சோதனையை செய்துள்ளாதா என்று கவனிக்க வேண்டியுள்ளது. போர்ச்சுகீசியர் தமது வீரர்களை உள்ளூர் பெண்களுடன் உறவு வைத்துக் கொண்டு, குழந்தைகளைப் பெற்றெடுத்து, அவர்கள் எப்படி தமக்கு விசுவாசிகளாக வைத்திருக்க முடியும் என்று பரிசோதித்துப் பார்த்தனர். அத்தகைய கலப்பின உருவாக்கத்தையும் ஆதரித்தது. இங்கு உசிலம்பட்டியில் பெண்குழந்தைகளை காப்போம் என்று வாங்கி, தமது காப்பகங்களில் வைத்து வளர்த்து, அவர்களை விசுவாசிகளாக்கி, தமக்கு மட்டும் ஊழியம் செய்யும் அளவுக்கு சேவகிகளாக அப்பெண்களை கடந்த 25 ஆண்டுகளில் மாற்றி விட்டனரா என்று எண்ணத் தோன்றுகிறது.

Baby sale, periyar blessing-1

யாரும், எந்த சித்தாந்தவாதியும் கவலைப் படாமல் இருப்பது, திகைப்படையச் செய்கிறது: ஈவேரா பிறந்த மண்ணில் குழந்தைகள் திருட்டு, வியாபாரம் எல்லாம் நடந்துள்ளதே எப்படி? எல்லாம் பெரியார் செயலா? என்று எந்த பகுத்தறிவுவாதியும் கண்டுகொள்ளவில்லை. ஆண்டவன் புண்ணியத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் பிறந்த குழந்தைகளை விற்பனை செய்து வருவதாக கூறிய அமுதவள்ளி விசித்திரத்தின் முழு வடிவம் தான். இங்கு “ஆண்டவன்” என்றால் யார் என்று தெரியவில்லை. இன்று தமிழகத்தை ஆண்டு வரும் திராவிட அரசியல்வாதிகளா வேறொருவரா? என்றெல்லாம் கேள்வி கேட்கத் தோன்றுகிறது. ஈரோட்டில், இந்த ரோட்டில், ஈவேரா மண்ணில், பெரியார் பூமியில் இப்படி நடக்கலாமா, அவரது கொம்பு என்னவாயிற்று,  ஓடிவிட்டதா? பள்ளிப்பாளையம், பரமத்தி வேலூர், திருச்ச்செங்கோடு, ராசிபுரம், சேலம் எல்லாம் அருகில் தானே உள்ளது. ஈவேராவுக்கு, அண்ணாவுக்கு எல்லாம் குழந்தை இல்லை என்பதால், பெரியார் ஆசியுடன், அம்மணி இச்சேவையில் இறங்கினார் போலும்!

Baby sale, periyar blessing-2

குழந்தை விற்பனைக்காக, வழக்கறிஞர் மூலம் போலி ஆவணம்  தயாரித்ததாக வாக்குமூலத்தில் ஒப்புதலும் உள்ளது. வழக்கறிஞர், குழந்தை விற்பனைக்காக, அப்படியென்ன போலி ஆவணம் தயாரிக்க்க முடியும்? இப்படியெல்லாம் வியாபாரம் உள்ளதா? வேறு விவகாரங்கள், பலரின் சம்பந்தங்கள், தொடர்புகள் முதலியவை இருப்பதால், சிபி-சிஐடி பிரிவுக்கு வழக்கு மற்றப்பட்டுள்ளது தத்தெடுப்பு போர்வையில் அரசு அதிகாரிகள் பலநிலைகளில் ஒத்துழைத்து நடந்துள்ள  குழந்தை விற்பனை வியாபாரம். ஹிந்து தத்தெடுப்பு மற்றும் பரிபாலன சட்டம் [Hindu Adoption and Maintenance Act] கீழ் தான், இத்தனை மோசடிகள், குற்றங்கள் நடந்துள்ளன.இனி என்னாகும் என்று பார்ப்போம். சில நாட்களில் செய்திகள் அடங்கி விடும், மக்கள் மறந்து விடுவர், மற்றவர்களும் தங்களது வேலையை, தொழிலை ஆரம்பித்து விடுவரோ?

© வேதபிரகாஷ்

05-05-2019

Baby sale - CBCIS takes over

[1] Through the connection built through sale of the eggs, they were able to allegedly find childless couples for whom fertility treatments hadn’t worked and offered to sell them babies instead. Through contacts with health officials, they were able to know which babies had been born at which government hospital to what kind of families and thereby narrow in on vulnerable families that they would allegedly convince to give up their babies.

http://www.newindianexpress.com/states/tamil-nadu/2019/may/05/namakkal-child-adoption-racket-baby-products-1972804.html

[2] Indian Express, Namakkal child adoption racket: Baby ‘products’, Published: 05th May 2019 04:49 AM | Last Updated: 05th May 2019 04:49

http://www.newindianexpress.com/states/tamil-nadu/2019/may/05/namakkal-child-adoption-racket-baby-products-1972804.html

[3] Vishwaraj alleges that the gang, in this case, exploited loopholes in the Hindu Adoption and Maintenance Act. “Through this, the two parties (donating and adopting parents) may meet directly and adopt children. Not only couples but bachelors, spinsters, widows also can adopt children. Although there are many norms to be followed, no one follows them. Middlemen and brokers have used loopholes here for illegal adoption. Registration of the child has to be made mandatory for adoption under this Act,” he said.

http://www.newindianexpress.com/states/tamil-nadu/2019/may/05/namakkal-child-adoption-racket-baby-products-1972804.html

[4] “Children between the ages of 2 and 4 are most vulnerable,” said Komal Ganotra, Delhi-based director for policy, research and advocacy for CRY (Child Rights and You).”We don’t know whether there is an adoption racket, or they are trafficked to raise money from donations,” he said.  Activists say monitoring systems need to be strengthened even for government registered homes. “Inspections must be continuous as these children are under someone else’s custody and they are tutored to speak only certain things,” said Ganotra. “If they are abused, children will open up to people who continuously visit them. So it is important they have an external interface. We find lesser instances of abuse among children who stay in child care homes and go out to a public school.”

http://timesofindia.indiatimes.com/city/chennai/Child-rescued-from-unlicensed-home-in-Chennai-fourth-in-three-days/articleshow/47797478.cms

[5] Indian Express, Police Flout All Norms After Rescuing Children From Illegal Homes: Activist, By Express News Service, Published: 06th September 2015 04:08 AM; Last Updated: 06th September 2015 04:14 AM.

[6] http://www.newindianexpress.com/cities/chennai/Police-Flout-All-Norms-After-Rescuing-Children-From-Illegal-Homes-Activist/2015/09/06/article3013001.ece2

தமிழகத்தில் மறுபடியும் குழந்தை விற்பனை, கடத்தல், தத்தெடுப்பு, ஏற்றுமதி முதலியன! தொழில் தர்மம் திசை மாறி குரூர குற்றங்களாவது [2]

மே5, 2019

தமிழகத்தில் மறுபடியும் குழந்தை விற்பனை, கடத்தல், தத்தெடுப்பு, ஏற்றுமதி முதலியன! தொழில் தர்மம் திசை மாறி குரூர குற்றங்களாவது [2]

30 years business, Rasipuram Govt hospital

டெஸ்ட் டியூப் பேபிகுழந்தை வியாபாரம் தொடர்பு உள்ளதா?: இன்று இந்தியாவில் 100 தம்பதிகளில் 15 தம்பதிகளுக்கு குழந்தை இல்லை என்பது தற்போதைய நிலை. அது பெரிய சதவீதம். இந்தியாவில் இவ்வளவு ஜனத்தொகை இருந்தாலும்கூட 15 சதவீதத்தினருக்கு குழந்தை இல்லை என்பது சீரியசான விஷயம்[1]. இதில் 11 சதவீதம் பேருக்கு சாதாரண மாத்திரை, மருந்து சிகிச்சையில் சரியாகிவிடும். மீதியுள்ள 4 சதவீதத்தினருக்குத்தான் உயர் சிகிச்சை தேவைப்படும். உயர் சிகிச்சை என்றால் டெஸ்ட் டியூப் பேபி மற்ற சிகிச்சைகளுக்கு போகவேண்டி இருக்கும். தற்போதுள்ள காலக்கட்டத்தில் மத்திய தரவர்க்கத்தினர் இதுபோன்ற சிகிச்சைக்கு எளிதாக செல்கின்றனர். காரணம் பேங்க் லோன், சிகிச்சைக்கு பணம் மாத தவணையில் கட்டிவிடலாம் என்பதால் சிகிச்சைக்கு செல்கின்றனர்[2]. இவ்வாறான போர்வையில், குழந்தை வியாபாரம் நடக்கிறதா, என்று கவனிக்க வேண்டும். வாடகைத் தாய் போன்ற எல்லைகளை மீறிய வியாபாரம் பெருகி விட்ட வில்லை, இத்தகைய குழந்தை விற்பனை, அமோகமான லாபத்தைக் கொடுப்பதால், டெஸ்ட் டியூப் பேபி ஆராய்ச்சி கூடங்களும், இம்முறையை கையாள்கிறார்களா என்று கவனிக்க வேண்டும்.

Adoption Act misused in baby sale

தி,இந்துவில் டாக்டர் காமராஜ் கொடுக்கும் விளக்கம்: “செலவுதான் முக்கிய காரணம், சாதாரண தம்பதிகள்  ஒரு லட்ச ரூபாய் செலவு செய்யணும் என்றால் கஷ்டம்தான். அதிலும் வெற்றிகரமாக சிகிச்சைமுடியுமா? என்றால் அது குறைவுதான். அது வெளிநாட்டிலும் உண்டு. அதனால் ஒரு லட்சம், 2 லட்சம் செலவு செய்து சிகிச்சை பலனளிக்காவிட்டால் நம்பிக்கை இழந்துவிடுவார்கள். மீண்டும் சிகிச்சைக்கு வர விரும்ப மாட்டார்கள். அதற்கு பதில் ஏதாவது குழந்தை எதுவும் கிடைக்குமா? என தேட ஆரம்பித்து விடுவார்கள்.இரண்டாவது காரணம் ஆண் குழந்தைகள் மீதுள்ள மோகம், எனக்கு 2 பெண் குழந்தை உள்ளது ஆண் குழந்தை இல்லை என கேட்டு சிகிச்சைக்கு வருகிறார்கள். இந்தியாவில் அப்படி செய்ய தடை உள்ளது என்று திருப்பி அனுப்பி விடுகிறோம். அவர்களும் இதுபோன்று முறைகேடான வழியில் குழந்தைகளை வாங்குகிறார்கள்”.

Baby sale, checking in hospitals

வக்கீல் மூலம் போலி ஆவணம் தயாரிப்பு[3]: குழந்தைகள் விற்பனை விவகாரத்தில், கைது செய்யப்பட்ட சேலத்தை சேர்ந்த வெல்டர் அருள்சாமி அளித்துள்ள வாக்குமூலத்தில், இதுவரை அமுதவள்ளி உள்ளிட்டோருடன் சேர்ந்து கூட்டாக 13 குழந்தைகளை விற்றுள்ளதாகவும்,  கடந்த 20ம் தேதி கூட, கொல்லிமலையில் இருந்து வாங்கிய ஒரு குழந்தையை பெங்களூருவில் விற்பனை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் குழந்தை விற்பனைக்காக, வழக்கறிஞர் மூலம் போலி ஆவணம்  தயாரித்ததாகவும் அருள்சாமி தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இந்த ஆவணங்களை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்[4]. வக்கில்கள் தமிழகத்தில் இந்நிலையில் இருப்பது திகைக்க வைக்கிறது. சட்டத்திற்குப் புறம்பாக நிகழும் இச்செயல்களுக்கு, அவர்கள் துணை போனது / போவது பல கேள்விகளை எழுப்புகின்றன.

Dark or Amul baby baby sale in Tamilnadu-those arrested

ஐபிசி சட்டப் பிரிவுகள்சிறார்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு: குழந்தை கடத்தல், ஏமாற்றுதல் [Sections 370 (2) (4)] மற்றும் 420 – மோசடி செய்து சொத்தை கொடுக்க முயற்சித்தல், 471 – போலி ஆவணங்களைத் தயாரித்தல்-உபயோகப்படுத்துதல், 109 – குற்றத்திற்குத் துணி போனது என்று பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது[5]. சிறார்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது[6]. இதற்குள், இதில் வேறு விவகாரங்கள் மற்றும் பலரின் சம்பந்தங்கள், தொடர்புகள் முதலியவை இருப்பதால், சிபி-சிஐடி பிரிவுக்கு வழக்கு மற்றப்பட்டுள்ளது[7]. டிஜிபியின் ஆணையின் படி, இதற்காக பெண் போலீஸார் உட்பட தனிப்பட அமைக்கப் பட்டுள்ளது[8]. இப்படி, ஏதோ சாதாரண குற்றங்களை செய்தது போலத் தான் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. பெற்றோர்களிடமிருந்து, குழந்தைகளைப் பிறிப்பது, பறிப்பது, விற்பது முதலியன, அத்தகையக் குற்றங்களா அல்லது சமூதாய குரூர தீவிரவாதச் செயல்களா என்று கவனிக்க வேண்டும். பகுத்தறிவுவாதிகள், பெரியாரிஸ்டுகள், மனித உரிமை, குழந்தை உரிமைவாதிகள் என்றெல்லாம் கூப்பாடு போடுகிறவர்களும், இதைப் பற்றியெல்லாம் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை.

Ashiya Mariam, Salem collector - everythig OK- baby adoption

மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் எல்லாமே சரியாக நடக்கின்றன என்கிறார்:  இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம், திங்கள்கிழமை (ஏப்ரல் 29) செய்தியாளர்களிடம் கூறியது[9]: “குழந்தைகள் விற்பனை வழக்கை பொருத்தவரை மூன்று தனிப்படைகள் அமைத்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பெற்றோர்களே முழு சம்மதத்துடன்தான் குழந்தைகளை பிறருக்கு கொடுத்துள்ளனர். என்றாலும், அவை சட்டப்பூர்வமாக இல்லாதது குற்றம்தான். ஆதரவற்ற குழந்தைகள் இல்லங்களில் இருந்து ஏதாவது குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளதா என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆதரவற்ற குழந்தைகள் இல்லங்களும் ரொம்பவே ஸ்டிரிக்டாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. விதிகளை மீறி செயல்பட்டு வந்த நாலைந்து இல்லங்கள், சமூக பாதுகாப்புத்துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டு, மூடப்பட்டு விட்டன. அதனால் ஆதரவற்ற இல்லங்கள் மூலமாக குழந்தைகள் விற்பனை செய்யப்படுவதற்கு வாய்ப்பே இல்லைஇதுவரை கிடைத்த தகவல்களின்படி, எல்லா குழந்தைகளுமே தனியார் இடத்தில் இருந்துதான் விற்கப்பட்டு உள்ளன. பெண் குழந்தைகளோ, ஆண் குழந்தைகளோ அவற்றை வளர்க்க முடியாத பெற்றோர்கள் தமிழக அரசின் தொட்டில் குழந்தைகள் திட்டத்தில் சேர்க்கலாம்குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க விரும்புவோர் நேரடியாக அரசை அணுகலாம். இதற்கென தத்து மையங்கள் உள்ளன. முறையாக விண்ணப்பம் செய்ய வேண்டும். குழந்தைகளை வளர்க்கும் வசதி வாய்ப்புகள் இருக்கின்றதா என்பதை எல்லாம் ஆராய்ந்து குழந்தைகள் சட்டப்பூர்வமாக தத்து கொடுக்கப்படும். வெளிநாட்டு தம்பதிகளும்கூட இங்கே வந்து குழந்தைகளை தத்தெடுக்கலாம்,”. இவ்வாறு ஆட்சியர் ஆசியா மரியம் கூறினார்[10].

Dark or Amul baby baby sale in Tamilnadu

30 வருடங்களாக, ஆண்டவன் புண்ணியத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் பிறந்த குழந்தைகளை விற்பனை செய்து வருவதாக கூறிய அமுதவள்ளி: இங்கு “ஆண்டவன்” என்றால் யார் என்று தெரியவில்லை. இன்று தமிழகத்தை ஆண்டு வரும் திராவிட அரசியல்வாதிகளா அல்லது ஆண்டவனாகிய ஏசுகிருஸ்துவா, ஜேஹோவாவா, வேறொருவரா? “தொட்டில் திட்டம்” பெயரில் முன்னர், இதே போன்ற குழந்தை கடத்தல் வியாபாரம் எல்லாம் 2015ல் நடந்தது. உசிலம்பட்டி பகுதியில் நடந்த அந்த குற்றத்தில் கைதானவர் நிலை என்ன என்று தெரியவில்லை. அதில் சில குழந்தைகள் மோசே மினிஸ்ட்ரியில் விற்கப் பட்டது, ஜேகப் கைதானதும் தெரிந்த விசயமே. ஆனால், பிறகு வழக்கு எனவாயிற்று என்று தெரியவில்லை. ஈவேரா மண், அதற்கு ஈவேரா தான் தெய்வம் என்றால், பெரியார் மண்ணில், இத்தகைய குற்றங்கள் எப்படி நடந்தது என்று தெரியவில்லை. அவரது தடி உபயோகம் செய்தது போல, அதனால் தான்னரசு ஊழியர்கள் இதில் அவரது ஆசியுடன் ஈடுபட்டார்கள் போலும். ஆக, 30 வருடமாக ஆண்டவன் புண்ணியத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் பிறந்த குழந்தைகளை விற்பனை செய்து வருவதாக கூறியுள்ளார்!

© வேதபிரகாஷ்

05-05-2019

Baby sale, checking in hospitals-3

[1] தி.இந்து, குழந்தைகள் கடத்தலும் குழந்தையின்மை காரணங்களும்: டாக்டர் காமராஜ் பேட்டி, Published: 22:20 IST; Updated : 26 Apr 2019 22:20 IST.

[2] https://tamil.thehindu.com/tamilnadu/article26958910.ece

[3] தினகரன், விஸ்வரூபம் எடுக்கும் குழந்தைகள் விற்பனை விவகாரம் கொல்லிமலையில் 50 குழந்தைகள் மாயம்: பகீர் தகவல்கள், 2019-04-29@ 04:02:07

[4] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=491433

[5] The police registered a case under Sections 370 (2) (4) (trafficking of minor), 420 (cheating and dishonestly inducing delivery of property), 471 (using as genuine a forged document), 109 (abetment if the act abetted is committed in consequence) of IPC and Sections 80 (person receives a child without following the procedures) and 81 (person who sells or buys a child for any purpose) of Juvenile Justice (Care and Protection) Act, 2015. Amuthavalli and Ravichandran were produced in the court and lodged in prison.

The Hindu, Child sale racket: driver held for playing ‘middleman’, STAFF REPORTER NAMAKKAL, APRIL 27, 2019 01:28 IST; UPDATED: APRIL 27, 2019 01:28 IST

[6] https://www.thehindu.com/news/national/tamil-nadu/child-sale-racket-driver-held-for-playing-middleman/article26960556.ece

[7] However, with the Tamil Nadu DGP, Thiru Rajendran passing orders transferring the case to the State CB-CID police, in view of its complexity, the case papers so far, which runs into some 250-pages, were formally handed over today to the CB-CID team in the presence of Thiru Arularasu. Following the DGP’s order, the Salem zone CB-CID DSP, Thiru Krishnan, has designated a four-member team including two women police officials to conduct the probe.

DECCAN CHRONICLE. Baby sale case: CB-CID takes over investigation,ZAKEER HUSSAIN

Published May 4, 2019, 5:55 am ISTUpdated May 4, 2019, 5:55 am IST

[8] https://www.deccanchronicle.com/nation/current-affairs/040519/baby-sale-case-cb-cid-takes-over-investigation.html

[9] நக்கீரன், நாமக்கல்லில் எல்லாமே ஸ்டிரிக்ட்தான்! சொல்கிறார் கலெக்டர் ஆசியா மரியம்!!, இளையராஜா, Published on 30/04/2019 (08:06) | Edited on 30/04/2019 (08:14)

[10] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/namakkal-district-rasipuram-amutha-0

தமிழகத்தில் மறுபடியும் குழந்தை விற்பனை, கடத்தல், தத்தெடுப்பு, ஏற்றுமதி முதலியன! [1]

மே5, 2019

தமிழகத்தில் மறுபடியும் குழந்தை விற்பனை, கடத்தல், தத்தெடுப்பு, ஏற்றுமதி முதலியன! [1]

Baby sale arrested-Amudavalli and Ravichandran

தமிழகத்தில் குழந்தை விற்பனை, கடத்தல், தத்தெடுப்பு, ஏற்றுமதி முதலியன!:  தமிழகத்தில் குழந்தை திருட்டு, கடத்தல், தத்தெடுப்பு போன்ற விவகாரங்கள் புதியவை அல்ல. தொட்டில் திட்டம் செயல்படுத்தியதிலேயே, அத்தகையவை நிகழ்ந்துள்ளன. கிருத்துவ மிஷினரிகளைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அனாதை இல்லங்களில் குழந்தைகளை வைத்து பற்பல விதங்களில் வியாபாரம் செய்து வருவது, கிருத்துவர்களுக்கு கைவந்த  கலை. முகமதியர்களும் செய்து வருகின்றனர். ஆனால், மதரஸாக்களில் அவை அமுக்கப் படுகின்றன. அனாதை குழந்தைகள் வளர்ந்ததும், அவை, அடிமைகள் போலத்தான் நடத்தப் படுகிறார்கள். பிடோபைல்களாக வரும் அயல்நாட்டினருக்கு, விருந்தாக்கப் படுகின்றனர். “செக்ஸ் டூரிஸம்” போன்ற நிலைகளிலும் உபயோகப் படுத்தப் படுகின்றனர். எம்.என்.சி கம்பெனிகள் வந்த பிறகு, அக்கம்பெனிகளின் டைரக்டர்கள், இஞ்சினியர்கள், கன்செல்டென்டுகள் என்று வரும் நபர்களைத் திருப்தி படுத்தவும், இளம் பெண்கள் தேவைப் படுகின்றனர். பிறகு, தத்தெடுப்புப் போர்வையில், குழந்தைகள் ஏற்றுமதி செய்யப் படுகின்றன. வெளிநாடுகளில் அவை வளர்க்கப் படும் போது, அவர்களது தேவைக்களுக்கு ஏற்றப்படி வளர்க்கப் படுகிறார்கள்.

30 years business, baby sale

1989லிருந்து குழந்தை விற்பனை செய்த செவிலி: 30 வருடங்களாக பிறந்த குழந்தையை விற்பனை செய்து வருவதாக பெண் செவிலியர் ஒருவர் அமுதவள்ளி (50) பேசும் ஆடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. இதுதொடர்பாக சம்பந்தபட்ட அந்த செவிலியரை கைது செய்து போலீசார் விசாரணை செய்தனர். அமுதவள்ளி பள்ளிப்பாளையம், பரமத்தி வேலூர், திருச்ச்செங்கோடு, ராசிபுரம், சேலம் போன்ற அரசு மருத்துவமனைகளில் வேலை செய்துள்ளாள். செவிலியிரின்  ‘வாட்ஸ்-அப் ஆடியோ’ வைரலானதை தொடரந்து, சுகாரதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், அந்தப் பெண் கூறுவது குறித்து புகார் அளிக்க சுகாதார மற்றும் கிராமப்புற நலத்துறை துறையின் இயக்குனருக்கு உத்தரவிட்டார்.

Baby sale - CBCID-audio

ஆடியோவில் வெளியான விவரங்கள்: இதுகுறித்து வெளியாகியுள்ள அந்த ஆடியோவில்[1],

  • குழந்தை இல்லாத ஒருவர் அந்த செவிலியரிடம் பேசுகிறார். செவிலியராக பணியாற்றிய தான், 10 ஆண்டுகளுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றுள்ளதாகவும், 30 வருடமாக ஆண்டவன் புண்ணியத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் பிறந்த குழந்தைகளை விற்பனை செய்து வருவதாகவும் கூறுகிறார்[2].
  • பிறந்த பெண் குழந்தைகள் ரூ.2.75 லட்சத்திற்கு விற்பனை செய்வதாகவும், குழந்தைகள் நிறமாகவும், அழகாகவும் இருக்கும்பட்சத்தில் ரூ.3 லட்சம் வரை விற்பனை செய்வதாக கூறுகிறார்[3].
  • கருப்பாக்க இருந்தால் 3, அமுல் பேபி கணக்கில் அழகாக இருந்தால் 4 அதுக்கு மேல்…….[4]
  • இதேபோல், புதிதாக பிறந்த ஆண்குந்தைகளுக்கு 3 லட்சத்திற்கு விற்பனை செய்வதாகவும், அழகாக இருந்தால், 3.75 முதல் 4 லட்சம் வரை விற்பனை செய்து வருவதாகவும் கூறுகிறார்.
  • மேலும், அந்த பெண் ரூ.70 ஆயிரத்தில் பிறப்புச் சான்றிதழ் தயார் செய்து தருவதாகவும் கூறுகிறார்.
  • தாராளமாக வெளிநாட்டிற்கும் எடுத்துச் செல்லலாம்.

இதற்கு பின்னணியில் பெரும் கும்பல் உள்ளதாக போலீசார் சந்தேகப்பட்டு வருகின்றனர்.

Baby sale - 999

ஆடியோவில் பேசும் அந்த பெண் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் பணியாற்றியுள்ளார். இவர் மருத்துவமனை ஊழியர்களுடன் சேர்ந்து கொண்டு புதிதாக பிறக்கும் குழந்தைகளை விற்பனை செய்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. விசாரணையில், பள்ளிபாளையம், சேலம், பரமத்திவேலூர், ராசிபுரம் பகுதிகளில் நர்சாக பணியாற்றிய அமுதவள்ளி 2012-ம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றதும், அதன் பிறகு வறுமையில் வாடும் குடும்ப பெண்களிடம் இருந்து குழந்தைகளை வாங்கி, குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. ராசிபுரத்தில் குழந்தை விற்பனை தொடர்பாக ஈரோடு தனியார் மருத்துவமனையை சேர்ந்த செவிலியர் பர்வினிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது[5]. குழந்தைகளை விற்று வந்த ராசிபுரத்தைச் சேர்ந்த செவிலியர் அமுதா தகவலை அடுத்து பர்வினிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்[6].

Baby sale -brokers held

புரோக்கர்  பர்வீன், ஹசீனா, நிஷா, அருள்சாமி என்று புரோக்கர் பட்டியல் நீள்கிறது: கொல்லிமலையை சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவரிடம் இருந்து 2 பெண் குழந்தைகளை வாங்கி, அந்த குழந்தைகளின் பெற்றோருக்கு தலா ரூ.1½ லட்சம், ரூ.2 லட்சம் கொடுத்ததும், அந்த குழந்தைகளை ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தை சேர்ந்த பெண் ஒருவரிடம் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு லட்சக்கணக்கில் பேரம் பேசி விற்பனை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது[7]. சேலம் அன்னதானப்பட்டியை சேர்ந்த உறவினர் ஒருவரிடம் இருந்து குழந்தையை வாங்கி, ஓமலூரில் பதிவு செய்து மேட்டூரை சேர்ந்த ஒருவரிடம் விற்றுள்ளார். இதையடுத்து அமுதவள்ளி, ரவிச்சந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்[8].  இவர்களுக்கு உடந்தையாக செயல்பட்ட கொல்லிமலை அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன், ஈரோட்டை சேர்ந்த புரோக்கர்  பர்வீன், ஹசீனா, நிஷா, லீலா, செல்வி  அருள்சாமி ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டனர். முகமதிய பெண்கள் இதில் ஏன் ஈடுபட வேண்டும் அல்லது ஈடுபடுத்தப் படவேண்டும் என்பது திகைப்படைய செய்கிறது.

Baby sale - two suspended

 நாமக்கலில் குழந்தை விற்பனை மோசடி: குழந்தைகள் விற்பனை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், கொல்லிமலையில் 50 குழந்தைகள் மாயமாகியுள்ளது தெரியவந்துள்ளது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார், ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த பெற்றோர்களிடம் குழந்தைகளை வாங்கி  தமிழகம் முழுவதும் விற்பனை செய்து வந்தது தெரிகிறது. ஏழைகளாக இருந்தாலும், குழந்தைகளை விற்கும் அளவில் இருக்க மாட்டார்கள் என்பது உண்மை. ஆகவே, அதற்கும் மேலாக, ஆசைக் கட்டித் தான் இந்த வியாபாரம் நடந்துள்ளது என்றாகிறது. வெளிநாட்டு தத்தெடுப்பு எனும்போது, லட்சக்கணக்கில் காசு கிடைக்கிறது. ஆனால், குழந்தையை அடியோடு மறந்து விட வேண்டியது தான். முதல், ஒன்று-இரண்டு ஆண்டுகளுக்கு புகைப்படம் காட்டுவார்கள், பரிசுகள் அனுப்பி வைப்பார்கள். பிறகு ஆள்-அட்ரெஸ் தெரியாமல் மறைந்து விடுவர்.

© வேதபிரகாஷ்

05-05-2019

30 years business, baby sale-22

[1] என்டிடிவி.தமிழ், ‘30 வருடங்களாக பிறந்த குழந்தையை விற்று வருகிறேன்’.. செவிலியரின் அதிர்ச்சி ஆடியோ!, Press Trust of India | Updated: April 27, 2019 08:52 IST

[2] https://www.ndtv.com/tamil/selling-newborns-for-30-years-audio-of-woman-goes-viral-tamil-nadu-cops-probe-2028840

[3] India Today, Dark or Amul baby? Horrifying audio of woman selling newborns surfaces in Tamil Nadu, Web Desk, Chennai, April 25, 2019UPDATED: April 25, 2019 21:49 IST.

[4] https://www.indiatoday.in/crime/story/namakkal-rasipuram-shocking-audio-nurse-sells-babies-tamil-nadu-1510082-2019-04-25

[5] தினகரன், குழந்தை விற்பனை தொடர்பாக ஈரோடு செவிலியரிடம் விசாரணை, 2019-04-26@ 07:51:40

[6] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=490806

[7] தினத்தந்தி, குழந்தைகளை லட்சக்கணக்கில் பேரம் பேசி விற்ற நர்சுவாட்ஸ்அப் ஆடியோவெளியானதால் சிக்கினார், பதிவு: ஏப்ரல் 26, 2019 04:15 AM

[8] https://www.dailythanthi.com/News/State/2019/04/26012640/Nurse-who-sold-billions-of-dollars-for-children.vpf