Archive for the ‘காந்தார்’ Category

மலாலாவின் பிரதமர் ஆசை, தலிபானின் மிரட்டல், மேற்கத்தைய நாடுகளின் பிரச்சாரம், இவையெல்லாம் எதற்காக?

ஒக்ரோபர்12, 2013

மலாலாவின் பிரதமர் ஆசை, தலிபானின் மிரட்டல், மேற்கத்தைய நாடுகளின் பிரச்சாரம், இவையெல்லாம் எதற்காக?

மலாலாவை வைத்து பிரச்சாரம் செய்து வரும் மேற்கத்தைய நாடுகள்: பாகிஸ்தானில் பெண் கல்வியை ஊக்குவிப்பதற்காக பிரசாரம் செய்த மலாலா என்ற 15 வயது மாணவியை தலிபான்கள் சுட்டனர். இதில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய அவருக்கு இங்கிலாந்து அரசு இலவச சிகிச்சை அளித்தது. தற்போது பூரண குணமடைந்துள்ள அவர் இங்கிலாந்து பிர்மிங்காமில் உள்ள எட்க்பாஸ்டன் என்ற பள்ளியில் சேர்ந்து படித்து வருகிறார். இதையே ஏதோ பெரிய விசயமாக ஆங்கில ஊடகங்கள் ஆர்பாட்டம் செய்தன[1]. பல்வேறு சர்வதேச விருதுகளை பெற்றுள்ள மலாலாவின் பெயர் உலகின் உயரிய பரிசாக கருதப்படும் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட பெயர்களில் மலாலாவின் பெயரும் இறுதி பட்டியலில் இடம் பெற்றது. ஆனால், கிடைக்கவில்லை. நோபெல் பரிசு கொடுப்பது என்பது, ஐரோப்பிய-அமெரிக்க நாடுகளின் பரிந்துரைகளில், ஆதிக்கக் கட்டுப்பாடுகளில் மற்றும் பாரபட்சங்களில் இருக்கிறது.

கிழக்கு நாடுகளின் ஏழ்மையை,  கஷ்டங்களை காசாக்கும் மேற்கத்தைய நாடுகள்: இந்நிலையில், தலிபான்களிடம் சிக்கி அனுபவித்த வேதனைகளை ‘நான் மலாலா’ என்ற பெயரில் புத்தகமாக வெளியிட மலாலா விரும்பினார். இதற்கான உரிமையைப் பெற இங்கிலாந்தை சேர்ந்த வெயிடென்பெல்ட் அண்ட் நிகோல்சன் பதிப்பகம் மலாலாவிடம் 15 கோடி ரூபாய்க்கு கடந்த மார்ச் மாதம் ஒப்பந்தம் செய்தது. இங்கிலாந்து நூலாசிரியர் கிரிஸ்டினா லாம்ப் எழுதியுள்ள ‘நான் மலாலா’ என்ற 276 பக்க புத்தகம் உலக நாடுகளில் கடந்த 8-ம் தேதி விற்பனைக்கு வந்தது. பாகிஸ்தானில் கூட இந்த புத்தகம் ரூ.595க்கு விற்பனை செய்யப்படுகிறது.  இது இடைக்காலத்திலிருந்தே, மேற்கத்தைய நாடுகள் செய்து வரும் வியாபார யுக்திதான். இந்தியாவின் யோகாவை எப்படி அமெரிக்கர்கள் இப்பொழுது விற்ரு வருகின்றனரோ அதுபோலத்தான் இதுவும். 1960களில் இந்தியாவின் ஏழ்மையை பாராட்டிய சத்யஜித் ரே அதிகமாக பாராட்டப் பட்டதை கவனத்தில் கொள்ளவேண்டும். ஒரிசாவின் தலைசிறந்த கணிதமேதையைக் கடத்திச் சென்று, பிறகு பைத்தியமாக்கி, ஒரிசாவிலேயே கொண்டு சேர்த்த மேற்கத்தைய சதிகளையும் நினைவு கூர வேண்டும்.

மலாலாவின் புத்தகத்தை விற்பவர்களையும் கொல்வோம்: பாகிஸ்தான்தலிபான்கள்மிரட்டல்[2]: இந்நிலையில், பாகிஸ்தானில் இந்த புத்தகத்தை விற்பவர்களையும் கொல்வோம் என தலிபான்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். தலிபான் மிரட்டல்: சமீபத்தில் மலாலா எழுதி வெளியிட்ட “ஐ ஆம் மலாலா’ என்ற புத்தகத்தை விற்பனை செய்யக்கூடாது என பாகிஸ்தானின் தெஹ்ரிக்-இ-தலிபான் பயங்கரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது. இதுதொடர்பாக பாகிஸ்தானின் “டான்’ பத்திரிகைக்கு நேற்று பேட்டியளித்த தெஹ்ரிக்-இ-தலிபான் இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் ஷஹிதுல்லா ஷஹித் கூறியுள்ளதாவது: “இஸ்லாமை கைவிட்டதற்காக மேலை நாட்டு ஊடகங்களும் சர்வதேச சமுதாயமும் மலாலாவை தலையின் மீது தாக்கி வைத்துக்கொண்டு ஆடுகிறது. மலாலாவை கொல்ல மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் அதை நாங்கள் இழந்துவிட மாட்டோம்.  அவர் எழுதிய புத்தகத்தை பாகிஸ்தானில் யாராவது விற்பனை செய்வது தெரிய வந்தால் அவர்களையும் கொல்லாமல் விட மாட்டோம்”, இவ்வாறு அவர் கூறியுள்ளார்[3]. இது மறைமுகமாக பணம் கேட்கும் முறையாகும் பதிப்பாளர்களுக்கு ஜாலிதான், இதனால், வியாபாரம் இன்னும் பெருகும்! மலாலாவிற்கு நோபெல் பரிசு கிடைக்கவில்லை என்பதற்கும் தலிபான் மகிழ்சியடைந்துள்ளதாகக் கூறியுள்ளது[4].

பிரதமராக விரும்பும் பாக்.,  சிறுமி மலாலா[5]: சமீபத்தில், தன், 16வது பிறந்த நாளைக் கொண்டாடிய மலாலா, ஐ.நா., சபையில் உரையாற்றி, உலகத் தலைவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். சிறு வயதிலேயே சமூக அக்கறையுடன் செயல்படும் மலாலாவுக்கு, அமைதிக்கான நோபல் பரிசு வழங்க பரிந்துரைக்கப்பட்டது என்பது முன்னமே குறிப்பிடப்பட்டது. இதற்கு தனது இணைதளத்தில் கூட ஆதரவு தேடினார்[6]. இந்நிலையில், மலாலா, “டிவி’ பேட்டியில் கூறியதாவது: “நான், தலிபான்களின் மிரட்டல்களை கண்டு அஞ்சவில்லை. முதன் முதலில் பயங்கரவாதிகள் என்னை சுட்ட போது, சாவைக் கண்டு அஞ்சினேன்; தற்போது அந்தபயம் எனக்கு இல்லை. நான் உயிர் வாழ விரும்புகிறேன். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர், பெனாசிரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவரை முன் உதாரணமாகக் கொண்டு, நானும் பாக்., பிரதமராக வேண்டும் என, விரும்புகிறேன். நான் முதலில், டாக்டர் ஆக வேண்டும் என, கனவு கண்டேன். தற்போது, பாகிஸ்தானில் நிலவும் சூழ்நிலைகளை காணும் போது, அரசியலில் ஈடுபடுவதே சிறந்ததாகக் கருதுகிறேன். நாட்டின் பிரதமர் ஆவதின் மூலம், பல்வேறு தரப்பு மக்களுக்கு நன்மை புரிய முடியும். நான் பிரதமராகி, பட்ஜெட் தாக்கல் செய்யும் போது, கல்விக்கு அதிகமுக்கியத்துவம் கொடுப்பேன். என் கனவு நிறைவேறும் போது, அனைவரும் கல்வி அறிவு பெற்றவர்களாக இருப்பர்”, இவ்வாறு மலாலா கூறினார்[7].

தலிபான் குறித்து எனக்கு பயம்கிடையாது[8]: தலிபான் அமைப்பினரால் என் உடலைத்தான் சுட முடிந்ததே தவிர, என் கனவுகளை சுட முடியாது. அவர்கள் மிகப்பெரிய தவறு செய்துவிட்டார்கள். முன்பு, எனக்கு இறப்பு குறித்து பயம் இருந்தது. ஆனால், இப்போது அதுகுறித்து சிறுதுளி பயம்கூட இல்லை[9]. கறுப்போ, வெள்ளையோ, கிறிஸ்தவரோ, முஸ்லிமோ அனைத்து குழந்தைகளும் பள்ளிக்கு செல்லும் நிலையை ஏற்படுத்த வேண்டும். எனக்கு சிறியவயதுதான் ஆகிறது. கல்விக்காக இன்னும் ஏராளமான பணிகள் உள்ளன. வருங்காலத்தில் ஒரு பள்ளியை தொடங்கி அதில் பல குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என்ற நம்பிக்கையும், தைரியமும் எனக்கு உள்ளது. அமைதிக்கான நோபல் பரிசு பெறும் தகுதி அனைவருக்கும் உள்ளது. அதுகுறித்து பள்ளிப் பாடப்புத்தகங்களில் படித்திருக்கிறேன். எனினும், எனக்கு இந்த விருதை வழங்கினால் அதில் கிடைக்கும் பரிசுத் தொகையை பெண் குழந்தைக் கல்வி விழிப்புணர்வுக்காக பயன்படுத்துவேன்[10]. எல்லா குழந்தைகளும் பள்ளிக்கு செல்வதைக் காண வேண்டும் என்பதே என் ஒரே குறிக்கோள். அதையேதான் அமைதிக்கும், கல்விக்கும், நல்லிணக்கத்துக்கும் கிடைக்கக்கூடிய மிகப்பெரிய விருதாகக் கருதுகிறேன்.

மலாலாவை பிராண்ட் இமேஜாக பயன்படுத்தும் மேற்கத்தைய நாடுகள்: மலாலாவை கொல்ல முயன்ற தலிபான் தீவிரவாதத்தை நிச்சயமாகக் கண்டிக்கவேண்டும், ஒழிக்கப்படவேண்டும். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், மலாலாவை பிராண்ட் இமேஜாக பயன்படுத்தும் மேற்கத்தைய நாடுகள் போக்கை கிழகத்தைய நாடுகள் கண்டு கொள்ளவேண்டும். ஏதோ இவர்கள் தங்களது பெண்களை சரியாக-நன்றாக நடத்துவதைப் போலவும், கிழகத்தைய நாட்டவர் பெண்களை அடிமையாக வைத்துள்ளது போலவும் சித்தரிப்பதை எதிர்க்கவேண்டும். மலாலாவைக் காப்பாற்றியது, படிக்க வைத்தது எல்லாமே சரிதான், ஆனால், அவர்கள் அதேபோல எல்லா பெண்களுக்கும் செய்ய மாட்டார்கள்.

நெதர்லாந்தில் ஒரு இந்து பெண் மதவாதிகளால் சாகக் கிடந்தபோது இதே ஆங்கிலேயர்கள் பாதுகாக்கவில்லை: நெதர்லாந்தில் ஒரு பெண்மணியை மருத்துவ சிகிச்சைக் கொடுக்காமல் கொன்றதை (டிசம்பர் 2012) மறைக்க இவ்விதமான பிரச்சாரங்களை செய்வார்கள்[11]. அதாவது அக்டோபர் 2012ல் சுடப்பட்ட முஸ்லிம் பெண்ணிற்கு ஆங்கிலேயர்கள் இப்படி சிகிச்சை செய்து, சீராட்டி-பாராட்டி வைத்துக் கொண்டுள்ளனர். ஆனால், டிசம்பர் 2012ல், அவர்களுக்கு மிக அருகில் இருந்த அயர்லாந்தில், ஒரு இந்து பெண் கொடுமைப் படுத்தப் பட்டபோது, அதிலும் தலிபானைப் போலவே, கத்தோலிக்க மதம் மீதாக, அபார்ஷன் செய்ய மாட்டோம் என்று படித்த மருத்துவர்களே மறுத்து அப்பெண்மணியை சாக செய்த அல்லது கொன்ற மதவாதிகளை கண்டுகொள்ளவில்லை. அந்த பெண்மணியைப் பற்றி யாரும் புத்தகம் எழுதவில்லையே ஏன்? ஏனெனில், இங்கிலாந்து-அயர்லாந்து ஏற்கெனவே மதரீதியிலான சண்டையில் ஈடுபட்டு வந்துள்ளன. அதாவது புருடெஸ்ட்யென்ட்-இங்கிலாந்து, கத்தோலிக்க அயர்லாந்து, இடைக் காலத்திலிருந்தே பகமை பாராட்டி வருகின்றன. ஆகவே, ஒருவேளை இரண்டு நாடுகளும் சந்தோஷப்பட்டிருக்கக் கூடும். ஆகவே, இத்தகைய இரட்டை வேடங்களை, கிழக்கதைய நாடுகள் அறிந்து கொள்ளவேண்டும்.

© வேதபிரகாஷ்

12-10-2013


[2] மாலைமலர், சென்னை 12-10-2013 (சனிக்கிழமை)

[5] தினமலர், பதிவு செய்த நாள் : அக்டோபர் 11,2013,23:27 IST; மாற்றம் செய்த நாள் : அக்டோபர் 11,2013,23:48 IST