Archive for the ‘ஸ்வேதா’ Category

பேஸ்புக் வக்கிரனை மாட்ட வைத்த தைரியசாலிகளான தாயும், மகளும் – மற்றவர்களுக்குப் படிப்பினையாக இருக்கட்டும்!

செப்ரெம்பர்13, 2015

பேஸ்புக் வக்கிரனை மாட்ட வைத்த தைரியசாலிகளான தாயும், மகளும் – மற்றவர்களுக்குப் படிப்பினையாக இருக்கட்டும்!

Addul Majid arrested - HYDERABAD, masked and unmasked

Addul Majid arrested – HYDERABAD, masked and unmasked

ஆர்குட்டைத் தொடர்ந்து பேஸ்புக்: ஆர்குட்டைத் தொடர்ந்து பேஸ்புக்கும் பெண்களை சீரழிப்பதி்ல் இந்தியாவில் முக்கிய பங்கு வகிக்க ஆரம்பித்து விட்டது. பேஸ்புக் மூலம் நட்பு ஏற்படுத்தி, பணக்கார மாணவிகளின் நிர்வாண படங்களை பெற்றதுடன், அவற்றை இணையதளத்தில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டி பணம் பறித்த இன்ஜினியரிங் மாணவனை ஹைதராபாதில் போலீசார் கைது செய்தனர்.  இந்தியமுறைகள் மறைந்து, இப்பொழுது இன்றைய இளைஞர்கள் தங்களது எண்ணங்களை பகிர்ந்து கொள்ள இணைய தளங்களை போன் / கணினி போன்ற உபகரணங்கள் மூலம் பயன்படுத்தி வருகின்றனர். முதலில் இ-மெயிலில் ஆரம்பித்து தற்போது பல்வேறு வகையான சமூக வலைதளங்கள் உருவாகியுள்ளன. இவற்றில் பல்வேறு கருத்துக்கள் குறித்து அனல்பறக்கும் விவாதங்களும் நடைபெறுவது உண்டு. சாதாரண மனிதன் முதல் அரசியல்வாதிகள் என அனைவரையும் சகட்டுமேனிக்கு விமர்சனம் செய்து வருகின்றனர்[1].

Addul Majid arrested - HYDERABAD, September 12, 2015- Indian express photo

Addul Majid arrested – HYDERABAD, September 12, 2015- Indian express photo

பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப்  என்று பெண்களுக்கு அவைவீசும் கயவர்கள்: பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் என பல்வேறு சமூக இணைய தளங்களுக்கு இளைய தலைமுறையிடையே பெருத்த வரவேற்பு உள்ளன. இதிலும் பேஸ்புக்குக்கு மட்டும் அதிக எண்ணிக்கையில் ரசிகர்கள் உள்ளனர்.  இளைய தலைமுறையினர் பலர் சமூக வலைதளங்கள் மூலம் நல்லது செய்துவருகின்றனர். அறுவை சிகிச்சைக்கு தேவைப்படும் ரத்த வகைகள், வழிதவறி தடுமாறும் சிறுவர், சிறுமியர்கள் குறித்த தகவல்களை காவல்துறைக்கு  தெரிவிப்பது என இதன் பயன்கள் நீண்டு கொண்டே செல்லும். ஆனாலும், இதிலும் சில ஆபத்துக்கள் இருக்கத்தான் செய்கின்றன. அது குறித்த செய்திகளும் அடிக்கடி வந்துகொண்டு இருக்கின்றன. முக்கியமாக மாணவ, மாணவியர்கள் இணைய தளங்களை பயன்படுத்தும்போது பெற்றோருடன் கலந்தாலோசனை செய்வது பயன்தரும்[2]. மாணவ, மாணவியர் பெற்றோருக்கு தெரியாமல் இணையதளங்களை பயன்படுத்தி வந்தால், அது ஆபத்தில் கொண்டு போய்விடும் என்பதையே  கீழ்க்காணும் சம்பவம் விவரிக்கிறது.

Addul Majid arrested - HYDERABAD, September 12, 2015

Addul Majid arrested – HYDERABAD, September 12, 2015

அப்துல் மஜீதின் இணைத்தள வலைவீசும் விதம்: ஐதராபாத் பஞ்சார ஹில்ஸ் பெரிய பணக்காரர்கள், அரசு அதிகாரிகள், வி.ஐ.பிக்கள் வாழ்கின்ற இடம். இப்பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் மஜீத் (21). மலக்பேட்டை என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக் கம்ப்யூட்டர் சயின்ஸ் 3–ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 1½ வருடங்களுக்கும் மேலாக ‘பேஸ் புக்’கில் பெண்கள் பெயரில் போலி பக்கங்களை தொடங்கினார்[3]. வேதிகா சோப்ரா, ஜான்வி பாட்டியா, கீர்த்தி வர்மா, தன்வீர் வைத்யம், சிஷிகா லோடானி, ஷிரியா சித்தூரி, ஆகிய பெண்கள் பெயரில் போலியாக  பேஸ் புக் கணக்குகள் வைத்து உள்ளார்[4]. இ.மெயில் ஐடிகள் வைத்துக் கொண்டு[5], ஒரு இளம்பெண்ணை போன்று, மற்ற இளம்பெண்களுடன் பழக ஆரம்பித்தான். பின்னர் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் பணக்கார மாணவிகளை குறிவைத்து பழகினார்[6]. இவர்கள் எல்லோருமே பிரசித்தி பெற்ற கல்வியகங்களில் படிக்கும் மாணவிகள் என்று குறிப்பிடத்தக்கது. எனவே, அவர்கள் இந்த அளவுக்கு மடத்தனமாக நடந்து கொண்டிருப்பது விசித்திரமாக உள்ளது. பலர் இவர் ஆண் என்பது தெரியாமல் பழகினார்கள். பெண்கள் தாங்கள் மற்றொரு பெண்ணிடம் பேசுவதாக நினைத்து தங்கள் சொந்த விஷயங்களை இவரிடம் பகிர்ந்து உள்ளனர்[7]. இதை அவர் தனக்கு சாதகமாக பயன்படுத்தி உள்ளார்[8]. என கூறினார்.அப்துல் மஜீத் பெண்களை கவரும் வகையில் பேசி அவர்களின் புகைப்படத்தை கேட்டு பெறுவார்[9]. நன்கு பழகிய பெண்களிடம் காதல் மற்றும் காம உணர்வுகளை தூண்டும் வகையில் பேசி அவர்களது நிர்வாண படங்களை அனுப்பும்படி கேட்பார்.

Addul Majid arrested - HYDERABAD- police meet

Addul Majid arrested – HYDERABAD- police meet

வலையில் சிக்கிக் கொண்ட நிர்வாண மீன்கள்: பல பெண்கள் அவர் கேட்டபடி தங்களது நிர்வாண படங்களை செல்போனில் படம் எடுத்து அனுப்பி உள்ளனர். இங்கு தான் புதிராக உள்ளது. ஒரு பெண், மற்ற பெண்ணிடம் உன்னுடைய நிர்வாண படத்தை அனுப்பு என்றால், அனுப்பி விடுவாளா, அந்த அளவுக்கு எந்த பெண்ணாவது மடச்சியாக இருப்பாளா என்று தெரியவில்லை. நிர்வாண படங்களை அனுப்பிய மாணவிகளிடம் அந்த படங்களை காட்டி, இணைய தளத்தில் வெளியிடுவதாக கூறியும், பெற்றோருக்கு அனுப்பி விடுவதாக கூறியும் அப்துல் மஜீத் பணம் பறித்து உள்ளார்[10]. பாதிக்கபட்டவர்களிடம் இருந்து அவருக்கு மெயில்கள் வந்துள்ளன. பாதிக்கப்பட்ட பெண்கள் சிலர் அவருக்கு பணம் கொடுத்து உள்ளனர். இந்த நிலையில் அப்துல் மஜீத்தால் பாதிக்கப்பட்ட ஜனனி என்ற மாணவி தனது தாயிடம் கூறினார்.

Addul Majid arrest - the mother and daughter complained and exposed

Addul Majid arrest – the mother and daughter complained and exposed

ஸ்வேதா பிரபு என்ற தாயார் வீராங்கனையாக இறங்கியது: பாதிக்கப்பட்ட ஜனனி என்ற மாணவி தனது தாயாரிடம் விசயத்தை கூறியவுடன், தைரியமான அவரின் தாய் ஸ்வேதா பிரபு, தனது மகள் மூலமாகவே அப்துல் மஜீத் பற்றிய விவரங்களை பேஸ்புக் உரையாடல், சாட்டிங் மூலம் சேகரித்தார். உரையாடலை வளர்த்து, அவன் பாணியிலேயே சென்று விவரங்களை தெரிந்து கொண்டார். ஒரு நிலையில் மறுத்தபோது, மிரட்ட ஆரம்பித்தான். அப்பொழுது, சாமர்த்தியமாஜ்க அவனது மிரட்டல்களை பதிவு செய்தார். இவ்வாறு தான் சேகரித்த அனைத்து ஆதாரங்களுடன், தனது மகள் ஜனனியுடன் ஐதராபாத் போலீஸ் நிலையத்துக்கு சென்று நேரில் புகார் மனு அளித்தார். பொலீஸ் செய்தியாளர்கள் கூட்டத்திலும் கலந்து கொண்டு உண்மைகளை வெளிப்படுத்தி, அப்துல் மஜீதின் வக்கிரத்தை தோலுருத்திக் காட்டினர்[11]. போலீசார் தீவிர விசாரணை நடத்தி அப்துல் மஜீத்தை நேற்று கைது செய்தனர்[12].

போலீஸ் விசாரணையில் தெரிய வந்த விவரங்கள்: விசாரணையில் அப்துல் மஜீத் பல்வேறு பெண்கள் பெயரில் 6 போலி பேஸ்புக் தொடங்கி 200 பெண்களை மிரட்டி பணம் பறித்து உள்ளது தெரிய வந்தது. ஒரு பெண்ணிடம் இருந்து ரூ.1 லட்சமும், இன்னொரு பெண்ணிடம் இருந்து ரூ.86 ஆயிரமும் பறித்து உள்ளார். அவரது செல்போனில் இருந்து பல்வேறு மாணவிகளின் 80 நிர்வாண படங்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர். மேலும் 100–க்கும் மேற்பட்ட நிர்வாண படங்கள் பேஸ்புக்கில் பதிவு செய்து உள்ளார். அந்த படங்களை அப்துல் மஜீத் இணையதளத்தில் வெளியிடப் போவதாக மிரட்டி இருந்தாலும் அவை வெளியாகவில்லை என்று போலீஸ் கமிஷனர் ஆனந்த் கூறினார்[13]. அப்துல் மஜீத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் போலீசில் தயங்காமல் புகார் செய்யலாம் என்று கூறிய போலீசார் அதற்கான செல்போன் எண்களை வெளியிட்டு உள்ளனர். இதுவரை 80 புகார்கள் வந்துள்ளது. கைதான அப்துல் மஜீத்திடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

© வேதபிரகாஷ்

13-09-2015

[1] தினகரன், பேஸ்புக்கில் நட்பு இப்படியும் பாதிப்பை ஏற்படுத்தும்: மாணவிகளை மிரட்டி நிர்வாணப்படம்பணம் பறித்த இஞ்சி.மாணவன், செப்டம்பர்.13, 2015: 03.23.41, ஞாயிற்றுக்கிழமை.

[2] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=166849

[3] http://www.business-standard.com/article/pti-stories/blackmailer-who-made-teenagers-share-their-nude-pictures-held-115091101489_1.html

[4] http://www.maalaimalar.com/2015/09/12114444/200-women-photo-used-to-be-a-f.html

http://www.dailythanthi.com/News/India/2015/09/12110615/Hyderabad-Engineering-student-held-for-blackmailing.vpf

[5] http://indianexpress.com/article/india/india-others/hyderabad-engineering-student-lures-school-girls-on-facebook-to-share-nude-photos-gets-arrested/

[6] Business Standard, Blackmailer who made teenagers share their nude pictures held, Press Trust of India, Hyderabad September 11, 2015 Last Updated at 22:07 IST.

[7] http://www.thehindu.com/news/national/andhra-pradesh/student-blackmailing-girls-on-facebook-arrested/article7643654.ece

[8] தினத்தந்தி, நிர்வாண படங்கள் அனுப்ப பள்ளிகல்லூரி மாணவிகளுக்கு மிரட்டல் விடுத்த கல்லூரி மாணவர் கைது, பதிவு செய்த நாள்: சனி, செப்டம்பர் 12,2015, 11:06 AM IST; மாற்றம் செய்த நாள்: சனி, செப்டம்பர் 12,2015, 11:06 AM IST

[9] Marri Ramu, Student ‘blackmailing’ girls on Facebook arrested, The Hindu, Hyderabad, September 12, 2015.

[10] மாலைமலர், பேஸ்புக்கில் நண்பராக பழகி 200 பெண்களின் நிர்வாண படங்களை சேகரித்து பணம் பறித்த கல்லூரி மாணவர், மாற்றம் செய்த நாள் : சனிக்கிழமை, செப்டம்பர் 12, 3:01 PM IST; பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, செப்டம்பர் 12, 11:44 AM IST.

[11] https://www.youtube.com/watch?v=VfwmI9EiAP0

[12] http://www.maalaimalar.com/2015/09/12114444/200-women-photo-used-to-be-a-f.html

[13] He used photos of teenaged girls collected from Internet for these accounts, Cyberabad Police Commissioner C.V. Anand said at a press conference. By browsing Internet, he identified FB accounts of students from top schools and began sending ‘friend requests’ to them. Since the requests came from accounts having names and photos of girls, most unsuspecting receivers readily accepted. “After chatting formally for a few days, Majid (seen as a girl to the viewers) would start asking them intimate questions and request them to send their private photos,” the Commissioner said.

http://www.thehindu.com/news/national/andhra-pradesh/student-blackmailing-girls-on-facebook-arrested/article7643654.ece