Archive for மே, 2017

புவனேஸ்வரி கைது, தினமலர் செய்தி, நடிகர்-நடிகையர் பேச்சு, பத்திரிக்கையாளர்கள் வழக்கு தொடுத்தல், பத்திரிக்கையாளர் கைது, ஆனால், நடிகர்-நடிகையர் தப்பித்து வருகின்றனர் 2009 முதல் 2017 வரை!

மே25, 2017

புவனேஸ்வரி கைது, தினமலர் செய்தி, நடிகர்நடிகையர் பேச்சு, பத்திரிக்கையாளர்கள் வழக்கு தொடுத்தல், பத்திரிக்கையாளர் கைது, ஆனால், நடிகர்நடிகையர் தப்பித்து வருகின்றனர் 2009 முதல் 2017 வரை!

Dinamalar news editor arrested October 2009- Bhuvaneswari case

தினமலர்செய்தி ஆசிரியர் லெனினை போலீசார் கைது[1]: நடிகைகள் குறித்து வெளியான செய்தி தொடர்பாக, கடந்த 7ம் தேதி, அக்டோபர் 2009, “தினமலர்’ செய்தி ஆசிரியர் லெனினை போலீசார் கைது செய்தனர். பின், நிபந்தனையற்ற ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார். முன்னதாக செய்திக்கு எதிர்ப்பு தெரிவித்து, 7ம் தேதி நடிகர் சங்கத்தில் கூட்டப்பட்ட கண்டனக் கூட்டத்தில், பத்திரிகையாளர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் பல நடிகர், நடிகையர் இழித்தும், பழித்தும் பேசியது வீடியோ ஆதாரம் மூலம் தெரியவந்தது. பத்திரிகையாளர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் இழிவாக பேசிய நடிகர், நடிகையர் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, ஏற்கனவே பல்வேறு பத்திரிகையாளர் சங்கங்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்நிலையில், நடிகர்களுக்கு எதிராக, சைதாப்பேட்டை 18வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் 15-10-2009 அன்று எட்டு பேர் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.

What the actors spoke - 2009 Nakkeeran- news and photo

பத்திரிகையாளர் அன்பழகனின் மனைவி கிருஷ்ணவேணி தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது[2]: “தினமலர்’ நாளிதழில் வந்த செய்திக்கு எதிர்ப்பு தெரிவித்து, நடிகர் சங்கத்தின் சார்பில், சங்க வளாகத்தில், கடந்த 7ம் தேதி கண்டனக் கூட்டம் நடத்தப் பட்டது. அதில், நடிகர்கள் சரத்குமார், ராதாரவி, விஜயகுமார், விவேக், சத்யராஜ், சூர்யா, அருண்குமார் மற்றும் நடிகை ஸ்ரீபிரியா ஆகியோர், பத்திரிகையாளர்களுக்கு எதிராகவும், அவர்களின் குடும்பத் தினருக்கு எதிராகவும், மிகவும் அருவருப்பான முறையிலும், கீழ்த்தரமாகவும், மிரட்டும் வகையிலும் பேசியுள்ளனர். நடிகர் விஜயகுமார், “தினமலர் அலுவலகத்திற்குச் சென்று நான்கு பேரை வெட்டி கூறு போடுவேன்’ என பேசியிருக்கிறார். பத்திரிகையாளர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் இழிவுபடுத்தி பேசிய நடிகர்களை சட்டத்தின் முன் நிறுத்தவும், அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கவும் தேவையான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இதேபோல், அசதுல்லாவின் மனைவி நூர்ஜான், முருகநாதன், நிலாவேந்தன், வேலாயுதம், சென்மான், ஜெயவீரன், சரவணன் ஆகியோரும், தனித்தனியே வழக்கு தொடர்ந்துள்ளனர். ஏற்கனவே, சென்னை பத்திரிகையாளர் சங்கம் சார்பில், அன்பழகன், இந்திய உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் அசதுல்லா, அனைத்து ஊடக பத்திரிகையாளர் சங்கம் சார்பில், சத்யாலயா ராமகிருஷ்ணன் ஆகியோர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

What the actors spoke - 2009 Dinamalar- photo

தொடர்ந்து நடந்த வழக்கில் நடிகர்நடிகையர் நீதிமன்றத்திற்கு வரமால் இருந்தது: இதைத்தொடர்ந்து ஊட்டியை சேர்ந்த பத்திரிகையாளர் ரோசாரியோ மரியசூசை என்பவர்  தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் பத்திரிகையாளர்களுக்கு எதிரான கருத்துகள் என்றும், “தினமலர்’ இதழுக்கு எதிராகவும்[3], பத்திரிகையாளர்களின் சமூக தகுதியை குறைக்கும் வகையிலும், பத்திரிகையாளர்கள் குடும்பத்தாரை கேவலப்படுத்தும் வகையிலும்[4], மற்றும் பத்திரிகையாளர்களை நடிகர்கள் தரக்குறைவாக பேசியதால், தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டதாக கூறி ஊட்டியில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கடந்த 13.11.2009 அன்று அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்[5]. இந்த மனு, விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு, சமூக ஆர்வலர்கள் வீரமதிவாணன் மற்றும் தவ முதல்வன் ஆகியோரிடம் விசாரணை நடந்தது.  இந்த வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வந்தது[6]. வழக்கு விசாரணைக்கு ஆஜராக சரத்குமார், சூர்யா உள்ளிட்ட 8 பேருக்கும் பலமுறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர்கள் ஆஜராகவில்லை. அதனால், வழக்குப் போட்டவரும் விடுவதாக இல்லை போலும்.

The Eight actors to be arrested

சம்பந்தப்பட்ட 8 பேரும் இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க கோரி03.01.2012-ல் மனு தாக்கல் செய்தது: இந்த நிலையில் சம்பந்தப்பட்ட 8 பேரும் இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க கோரியும், வழக்கை ரத்து செய்யக்கோரியும் சென்னை ஐகோர்ட்டில் கடந்த 3.1.2012-ல் மனு தாக்கல் செய்தனர். தாங்கள் பேசியதையெல்லாம் மறந்து விட்டனரா அல்லது “வழக்கை ரத்து செய்யக்கோரும்” அளவிற்கு யாதாவது செய்துள்ளனரா, சமரசத்திற்கு சென்றுள்ளனரா என்றெல்லாம் தெரியவில்லை. இதனை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட ஐகோர்ட்டு, ஊட்டி கோர்ட்டில் வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதித்தது. பின்னர் இடைக்கால தடையை நீக்கி ஐகோர்ட்டு உத்தரவிட்டது[7]. அதன்படி ஊட்டி கோர்ட்டில் இந்த வழக்கு 23-05-2017 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது[8]. அப்போது விசாரணைக்கு ஆஜராகாத நடிகர்கள் சரத் குமார், சத்யராஜ், சூர்யா, விஜயகுமார், விவேக், அருண்விஜய், இயக்குனர் சேரன், நடிகை ஸ்ரீபிரியா ஆகிய 8 பேருக்கும் பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி செந்தில்குமார் ராஜவேலு உத்தரவு பிறப்பித்தார். தங்கள் மீதான பிடிவாரண்டை ரத்து செய்யக்கோரி நடிகர்கள் சூர்யா, சரத்குமார் உள்ளிட்டோர் மனுதாக்கல் செய்துள்ளனர்[9]. உதகை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடிகர்களின் வழக்கறிஞர் விஸ்வநாத் மனு தாக்கல் செய்துள்ளார்[10].

Dinamani editorial - Bhuvameswari issue

சமுதாய பொறுப்பு [Social Responsibility]-லிருந்து நடிக-நடிகையர் தப்பித்துக் கொள்ள முடியாது: இவ்வழக்கு பத்திரிக்கையாளர்களுக்கும், நடிகர்-நடிகைகளுக்கும் இடையேயுள்ள பிரச்சினையா, நடிகர்-நடிகைகளுக்கு இடையேயுள்ள தொழில் போட்டியா, அவதூறா, இதனை 2009லிருந்து இழுத்தடிக்க வேண்டிய அவசியம் என்ன, இடையில் இவர்கள் எல்லோருமே, தமிழக சமூகத்தின் மாண்பு, மேன்பு, கலாச்சாரம், பண்பாடு, முதலியவற்றைக் காப்பது போல, பட இடங்களில், மேடைகளில், நிகழ்ச்சிகளில் பேசியிருப்பதும், அறிவுரை கூறியதும், போன்றவற்றை எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லை. தமிழகத்தைப் பொறுத்த வரையிலும், அரசியலையும், சினிமாவையும் பிரிக்க முடியாது. அதே போல கடந்த 60 வருடங்களாக, சமூதாயம், குறிப்பாக பெண்கள் நிலை சீரழிந்து வருகின்றன என்பதையும் மறுக்க முடியாது. இன்றைக்கு சமுதாய பொறுப்பு [Social Responsibility] என்றேல்லாம் பேசப்பட்டு வருகின்றது.  அந்நிலையிலஆ நூற்றுக்கணக்கில் காசு கொடுத்து சினிமா பார்க்கும் போது, படம் நன்றாக இருக்கின்றதா இல்லையா என்பதை விட, அவர்கள் சமூகப் பிரச்சினைகள் பற்றி பேச வந்துவிடுவதாலும், கருத்துகள் கூறூவதாலும், குறிப்பிட்ட விளம்பரங்களில், இந்த பொருள், சேவை … முதலியவற்றை வாங்குங்கள் என்று தூண்டும் நிலைக்கும் வந்து விட்டதால், அவர்கள் பேசுவது, நடந்து கொள்வது முதலியவஏற்றைப் பற்றி மற்றவர்களும் கண்காணிப்பது, விமர்சிப்பது என்பது இயல்பாகி விடுகின்ற நிலை ஏற்பட்டு விட்டது.

© வேதபிரகாஷ்

25-05-2017

Dinamani editorial - Bhuvameswari issue-3

[1] தினமலர், நடிகர், நடிகையர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மேலும் 8 பேர் வழக்கு, அக்டோபர் 16,2009,00:00 IST.

[2] http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=5301

[3] தினமலர், பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய வழக்கு:ஊட்டியில் டிச.,19ல் ஆஜராக நடிகர்களுக்கு சம்மன், பதிவு செய்த நாள் : நவம்பர் 23,2011,00:22 IST.

[4] http://www.dinamalar.com/News_Detail.asp?Id=354198

[5] தினமணி, பிடியாணைரத்து செய்ய நடிகர்கள் மனு!, மே.24, 2017. 03.33 pm

[6] http://www.dinamani.com/cinema/cinema-news/2017/may/24/arrest-warrants-against-popular-tamil-stars-2707960.html

[7] மாலைமுரசு, பத்திகையாளர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கு !,  May 24, 2017.

[8] http://www.malaimurasu.in/index.php/actors-speech/

[9] தினத்தந்தி, பிடிவாரண்டை ரத்து செய்யக்கோரி சூர்யா, சரத்குமார் மனு, மே 24, 2017, 03:43 PM.

[10] http://www.dailythanthi.com/News/TopNews/2017/05/24154344/Seek-to-cancel-the-watchman-Surya-Sarath-Kumar-petition.vpf

புவனேஸ்வரி கைது, தினமலர் செய்தி, நடிகர்-நடிகையர் பேச்சு, பத்திரிக்கையாளர்கள் வழக்கு தொடுத்தல், பத்திரிக்கையாளர் கைது, ஆனால், நடிகர்-நடிகையர் தப்பித்து வருகின்றனர்!

மே25, 2017

புவனேஸ்வரி கைது, தினமலர் செய்தி, நடிகர்நடிகையர் பேச்சு, பத்திரிக்கையாளர்கள் வழக்கு தொடுத்தல், பத்திரிக்கையாளர் கைது, ஆனால், நடிகர்நடிகையர் தப்பித்து வருகின்றனர்!

Bhuwaneswari arrested 2009

விபசார வழக்கில் நடிகை புவனேஸ்வரி கைது (அக்டோபர் 2009): சென்னையில் கடந்த 2009-ம் அக்டோபர்.2 அன்று ஆண்டு விபசார வழக்கில் நடிகை புவனேஸ்வரி கைது செய்யப்பட்டார்[1]. அப்பொழுது தன்னை மற்றும் கைது செய்து, சிறையில் அடைத்து என்று நடவடிக்கைகள் எடுத்த போது, மற்ற நடிகைகளின் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது போல பேசினார். சில நடிகைகளின் பெயர்களையும் குறிப்பிட்டார். விபசார வழக்கில் பிடிபட்ட நடிகை புவனேஸ்வரி, திரையுலகில் விபசாரத்தில் ஈடுபட்டுள்ள மொத்த நடிகைகள் மற்றும் அவர்களுக்கு துணையாக உள்ள முக்கியமான புரோக்கர்களின் பெயர் உள்ளிட்ட ஒட்டுமொத்தப் பட்டியலையும் போலீஸாரிடம் தூக்கிக் கொடுத்து விட்டாராம். போலீஸாரும் இந்தப் பட்டியலிலிருந்து சிலரை தேர்வு செய்து வளைத்துப் பிடிக்க திட்டம் போட்டுள்ளனராம். இது தெரிந்தது முதல் சம்பந்தப்பட்ட நடிகைகள் பெரும் பீதியில் உள்ளனராம். கொஞ்ச நாளைககு அடக்கம் ஒடுக்கமாக இருக்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளனராம்.

Dinamalar-Bhuvaneswari04_10_2009

போலீசாரிடம் லிஸ்ட் கொடுத்தார் என்ற செய்தி: தன்னைக் கைது செய்த போலீசாரிடம், விபச்சாரத்தில் ஈடுபடும் மொத்த நடிகைகளின் பட்டியலும் என்னிடம் உள்ளது. மணிக்கு 2 லட்சம் வாங்கும் டாப் நடிகைகள் பட்டியலைக்கூட வைத்துள்ளேன். அவர்களிடம் போகும் கஸ்டமர்களைக் கூட எனக்குத் தெரியும். அவர்களையெல்லாம் உங்களால் கைது செய்ய முடியுமா? என்று கடுப்பாகக் கேட்டுள்ளார். உடனே போலீசாரும் அந்த லிஸ்டைத் தரச்சொல்ல, ‘தான் சொன்னது சும்மா இல்லை… நிஜம்தான்’ எனும் வகையில் உடனே பட்டியலைக் கொடுத்து விட்டாராம் புவனேஸ்வரி. வெறுமனே பெயரை மட்டும் கொடுக்காமல், எந்தெந்த நடிகை எங்கெங்கு விபச்சாரத்தில் ஈடுபடுகிறார். என்னென்ன ரேட் என்பது உள்பட துல்லியமான ‘டேட்டா பேஸை’யே கொடுத்து முன்னணி நடிகைகளின் ‘பொருளாதார பேஸில்’ கை வைத்து விட்டார் புவனேஸ்வரி. அதில் விபசாரத்தில் ஈடுபடும் 25 முன்னணி நடிகைகள் ஒவ்வொருவருக்கும் என்னென்ன ‘ரேட்’ என்பதையும், எங்கெங்கு வாடிக்கையாளர்களை சந்திக்கிறார்கள் என்ற விவரங்களையும் கொடுத்துள்ளார். ஒரு மணி நேரத்துக்கு ரூ.2 லட்சம் வாங்கும் நடிகைகள், ரூ.1 லட்சம் வாங்கும் நடிகைகள், ரூ.50 ஆயிரம், ரூ.25 ஆயிரம் என்று ‘ரேட்’ வாரியாக பட்டியலை கொடுத்துள்ளார். அவரது பட்டியல்படி, பிரபல நடிகைகள் சிலரது குறைந்தபட்ச ரேட் ரூ.25000 (ஒரு மணி நேரத்துக்கு). இந்தக் கணக்கில்தான் அவர்கள் நகைக்கடை திறப்பு விழா, ஜவுளிக்கடைத் திறப்பு விழா போன்றவற்றுக்கு ரேட் நிர்ணயிப்பார்களாம். இந்தப் பட்டியலில் உள்ள நடிகைகளில் முதல்கட்டமாக 4 பேரை குறிவைத்துள்ளது போலீஸ். இவர்கள் அழகிகளை வைத்து விபசார தொழில் செய்யும் முக்கிய நடிகைகள். ஆனால் இவர்கள் அனைவரும் ரூ.25 ஆயிரம் ‘ரேட்’டில் உள்ளவர்கள். நடிகைகளை பிடிப்பதற்கு தரவேண்டிய பணத்தை போலீசார்தான் தயார் செய்ய வேண்டும். ரூ.25 ஆயிரம் அளவில்தான் தயார் செய்ய முடியும் என்பதால் முதல்கட்டமாக இந்த நடிகைகளை குறி வைத்துள்ளனர்.

Bhuvaneswari statement -- 2009 - Dinamalar

இதுதொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர் ராதாரவி, முதல்அமைச்சர் கருணாநிதிக்கு அனுப்பிய கடிதம் (2009): “கடந்த 1-ந் தேதி அன்று நடிகை புவனேஸ்வரியை காவல்துறையினர் விபசார வழக்கில் கைது செய்துள்ளனர். அவர் போலீசாரிடம் தெரிவித்ததாக, தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகள் பற்றிய அவதூறு செய்திகள்   வெளிவந்ததைக் கண்டு நாங்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தோம். இந்த செய்திகளால் சம்பந்தப்பட்ட நடிகைகளும், அவர்களின் குடும்பத்தினரும், ஒட்டுமொத்த தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களும் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம். கலை உலகின் மூத்தவரும், தமிழ் திரையுலகினர் மீதும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மீதும் என்றும் மரியாதை வைத்திருக்கும் தாங்கள் முதல்வராக இருக்கும்போது இப்படி ஒரு செய்தியை ஊடகங்கள் வெளியிடுவது எங்களுக்கு மிகவும் வருத்தமாக உள்ளது.

What the actors spoke - 2009 photo

கருணாநிதி தலையிட வேண்டும்!: “எனவே, இதுகுறித்து தாங்கள் தகுந்த நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்று தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் அனைவர் சார்பாக உங்களை அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் அனுமதியுடன் தமிழக காவல்துறை தலைவரிடமும் சென்னை போலீஸ் கமிஷனருக்கு தகுந்த நடவடிக்கை எடுப்பதற்காக இந்த மனுவின் நகலை அளிக்கிறோம்”, என்று கேட்டுக் கொண்டுள்ளனர். இவ்விசயம் முதலமைச்சர் வரை போக வேண்டிய அவசியம், அவசரம், முக்கியத்துவம் இருந்ததா? எத்தையோ பிரச்சினைகள் இருக்கும் போது, அவற்றையெல்லாம் விட்டு விட்டு, கருணாநிதி, இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பார்? நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் ஊரில் இல்லாததால் அவர் வந்தவுடன் இந்த விவகாரம் குறித்து நடிகர் சங்கம் ஆலோசனை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வந்தன. இதில் அரசியல், பெருந்தலைவர்கள், அதிகாரிகள் முதலியோர் சம்பந்தப்பட்டிருப்பது, கொடுக்கப் படும் விளம்பரமும், செய்திக் கட்டுப்பாடுகளும் நன்றாகவே எடுத்துக் காட்டுகின்றன.

complain_bhuwa

இப்பொழுது 2017ல் அடக்கி வாசிக்கு ஊடகங்கள்: இதனால், பெருத்த பிரச்சினை ஆகியது. இது குறித்தும், மற்ற நடிகைகள் குறித்தும் ஒரு பத்திரிகையில் 3.9.2009 தினத்தந்தி] / அக்டோபர் 3-ஆம் தேதி  [தினமணி] அன்று செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. தினமலரில் அச்செய்தி வெளியானது[2]. இதற்கு சினிமா நடிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக 07-10-2009ல் நடத்தப்பட்ட சென்னை தென்னிந்திய திரைப்பட சங்க கூட்டத்தில் நடிகர்கள் –

1.        சரத்குமார்,

2.       சத்யராஜ்,

3.       சூர்யா,

4.       விஜயகுமார்,

5.        விவேக்,

6.       அருண்விஜய் மற்றும்

7.        இயக்குனர் சேரன்,

8.       நடிகை ஸ்ரீபிரியா

ஆகியோர் பத்திரிகையாளர்களை மிக தரக்குறைவாகவும், அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்த செய்தியும் சம்பந்தப்பட்ட பத்திரிகையில் வெளியிடப்பட்டு இருந்தது.

விபசாரம் பற்றி நடிகையர்நடிகர்கள் ஏன் கோபமடைகின்றனர்?[3]: நடிகையர் மற்றும் நடிகர்களின் பேச்சுகளை, கீழ்கண்ட தளங்களில் வெளியிடப்பட்டன[4]: அவர்களின் பேச்சோடு, அவர்களது கண்கள், கை-கால்கள், மற்றும் முகபாவங்களை உன்னிப்பாகக் கவனித்தேன். வாய்-அசைவுகள், வார்த்தை பிரயோகங்கள், உச்சரிப்புகள், வயற்றிலிருந்து ஆக்ரோஷமாக வரும் விதம், உண்மையிலேயே எனக்கு ஆச்சரியம்தான்.

  1. ரஜினிகாந்த் பேசியவிதம், அவரைப் பற்றிய மதிப்பே மாறிவிட்டது. ஆன்மீகம் என்றதெல்லாம் போலி என்று நன்றாகத் தெரிந்து விட்டது. மக்களை ஏமாற்றுவதில் இவருக்கும், கருணாநிதிக்கும் எந்த வேறுபாடும் இல்லை.

ரஜினிகாந்த்: தமிழச்சிகள்……கற்பு……………….நிச்சயமாக அவர்கள் விபசாரிகள்தாம்………வயற்றுப் பிழைப்பிற்காக நடத்துகிறார்கள்…………. அவர்கள் போட்டோவை போடவேண்டாம்.

  1. சூர்யா: ……………………..பின்னால் ஓடுதல்……………ஈனப்பிறவி…………
  2. விவேக்: ………………..சொறிநாய்…………………….வொங்கம்மா……………….படம் போட்டு ஒட்டுவேன்………..
  3. ஸ்ரீபிரியா: பாஸ்டர்ட். ஆங்கிலத்தில் கெட்ட வார்த்தையில் பேசியதோடு, “ஈனப்பிறவிகள்’
  4. சத்யராஜ்: …………..ஸ்ரீபிரியா சொன்னதை தமிழில் மொழிபெயர்த்து சொல்லி அதனை நாம் எல்லோரும் ஆமோதிக்கவேண்டும்……………….உள் காயம் தெரியாமல் அவர்களை அடிக்க வேண்டும்’.
  5. அருண் விஜய், “பத்திரிகை அலுவலகத்தில் புகுந்து அடித்து நொறுக்கி, எழுதியவரை அடித்து இழுத்து வந்து இவுங்க (மஞ்சுளா) காலில் விழ வைப்பேன்’ என்று கூறியுள்ளார்.
  6. நடிகர் சரத்குமார், “என்னைப் பற்றி எழுதியபோது, அந்தப் பத்திரிக்கை ஆபீசை 200 பேரோட போய் “அட்டாக்’ பண்ணினேன்’ என்று பேசியுள்ளார்.
  7. நடிகர் சேரன் பேசுகையில், “ராஸ்கல்ஸ், உன் வீட்டுப்பிள்ளை ஓடிப்போகும் போது தெரியும்டா வலி’ என்று கூறியுள்ளார்.

ஆச்சரியம்தான், 90% நிர்வாணமாக நடிக்கும்போது, ஐந்தில் நான்கை என்றோ மறந்த போது, பாக்கி ஒன்றைப் பற்றிக் கேள்வி எழும்போது, வருகிறது, கோபம், ஆக்ரோஷம், கொதிப்பு, வெறி……………..எல்லாம். முலைகளைக் காட்டிக் கொண்டு, குலுக்கிக் கொண்டு ஆபாசநடனங்கள், கேவலமான இரட்டை-பொருள் கொண்ட வேசித்தன வசனங்கள், பரத்தைத்தனத்தை வெளிகாட்டும் பாலல்கள் இனற்றையெல்லாம் நாடு முழுவதும் சுவர்களில், தியேட்டர்களில், தொலைகாட்சிகளில், …………….வெளிவரும்போது, பெருமையாகவா உள்ளனா?[5].

 

© வேதபிரகாஷ்

25-05-2017

actors_permission

[1] தினமலர், நடிகர்கள் டிவாரன்ட், மே.24, 2017. 03.33 pm

[2] http://cinema.dinamalar.com/tamil-news/59530/cinema/Kollywood/Warrent-against-8-actors-including-Suriya-and-Sarathkumar.htm

[3] http://www.indiaglitz.com/channels/tamil/gallery/events/19677.html

[4] http://indiainteracts.in/movies/tamil/gallery_new/events/1/nadigar_sangam_dinamalar.html

[5]https://womanissues.wordpress.com/2009/10/14/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/

மறுபடியும் பேஸ்புக் நட்பு, இன்–பாக்ஸ் சேட்டிங் இத்யாதிகள் 13 வயது டீன்-ஏஜ் பெண்ணின் கற்பைப் பரித்துள்ளது!

மே18, 2017

மறுபடியும் பேஸ்புக்  நட்பு, இன்–பாக்ஸ் சேட்டிங் இத்யாதிகள் 13 வயது டீன்ஏஜ் பெண்ணின் கற்பைப் பரித்துள்ளது!

Facebook-love-rape Tirupr 02-05-2017- Dinamalar

பேஸ்புக்  நட்பு, 13 வயது டீன்ஏஜ் பெண்ணின் கற்பைப் பரித்துள்ளது: திருப்பூரில், ‘பேஸ்புக்’ அறிமுகத்தால், 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  13 வயது சிறுமிக்கு இக்காலத்தில், இத்தகைய விவகாரங்கள் தெரிந்து, ஈடுபடும் அளவுக்கு துணிச்சல் வருகிறதா என்ன? பிஞ்சிலே பழுக்கும் கனிகள் இப்படித்தான் இருக்குமோ? திருப்பூரை சேர்ந்த, எட்டாம் வகுப்பு படிக்கும், 13 வயது சிறுமி, ஏப்., 27ல் மாயமானாள். பெற்றோர் புகாரின்படி, திருப்பூர் வடக்கு போலீசார் தேடி வந்தனர். ஏப்ரல் 29ம் தேதி இரவு, சிறுமி வீடு திரும்பினாள். ஆனால், விவகாரம் அவ்வளவு சாதாரணமாக இல்லை. இத்தகைய செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தாலும், வயது வந்த சிறுமிகள், பாடம் கற்பதாக இல்லை, மாறாக வயது கோளாறினால், காமத்தினால் மோகவலையில் வீழ்ந்து, கற்பை கெடுத்து-கொடுத்து வருகின்றனர்[1]. வலைவீசி கற்பழிக்கும் இளைஞர்களும் மனசாட்சி இல்லாமல், தாய், சகோதரிகளுகளுடன்  பிறந்தும் அத்தகைய வேலைகளை செய்து வருகின்றனர்.

Facebook-love-rape Tirupr 02-05-2017- chennai online

போலீஸ் விசாரணையில் வெளியான தகவல்: சில மாதங்களுக்கு முன், ‘பேஸ்புக்’கில், திருப்பூரை சேர்ந்த சிவா என்ற பெயரில் அறிமுகமான, 21 வயது வாலிபனுடன், சிறுமிக்கு தொடர்பு ஏற்பட்டது[2]. தனியாக ஒரு பையனுடம் செல்ல சில மாதங்கள்  ‘பேஸ்புக்’கே போதுமா என்ன? அக்குறுகிய காலத்திலேயே, எல்லா விவரங்களையும் அறிந்து கொண்டு விடுவார்கள் போலிருக்கிறது. மொபைல் போனில் பேசி பழகிய நிலையில், ஏப்ரல் 27ம் தேதி, சிறுமியை, சென்னை மற்றும் புதுச்சேரிக்கு கடத்தி சென்றுள்ளான்[3]. கடத்திச் சென்றுள்ளான் என்றால் எப்படி, அவள் தெரிந்துதான் சென்றாள் என்பது போல உள்ளதே? 13-வயது சிறுமிக்கு அந்த அளவுக்கு துணிச்சலா, தைரியமா ……..புரியவில்லையே?? மேலும், லாட்ஜில் தங்கும் அளவுக்கு, அச்சிறுமிக்கு எப்படி புத்தி வந்தது? பெண்ணிற்கு உள்ளுணர்வு எச்சரிக்கும் என்பார்களே, அதெல்லாம் வேலை செய்யவில்லையா? புதுச்சேரி லாட்ஜில் தங்குவதற்கு, சிறுமியின், ஒரு சவரன் செயினை அடகு வைத்து, 19,000/- பெற்று, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்[4].  தன்னை கற்பழிக்கப் போகின்றவனுக்கே, நகையை எடுத்து கொடுத்துள்ளாள் என்பதே விசித்திரமாக உள்ளது.

internet-sexual-grooming-love-jihad-too

சிவா அல்ல; இப்ராஹீம் என்றதால் வாக்குவாதம் ஏன் வந்தது?: மறுநாள், ஏப்ரல்.28, 2017 அன்று, அவனது பெயர் சிவா அல்ல; இப்ராஹீம், 22, என்பது, சிறுமிக்கு தெரியவந்தது[5]. இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால், அவன் தப்பினான்[6].  அப்படி அப்பையனைப் பற்றிய எந்த விவரங்களும் தெரியாமலா லாட்ஜ் வரைக்கும் சென்றிருக்கிறாள்? எதற்காக விவாதம் வந்தது என்பதை ஊடகங்கள் விளக்கவில்லை. ஆக, இது லவ்-ஜிஹாத் வகையறாவில் வருமோ என்னமோ? அழுது கொண்டிருந்த சிறுமியிடம், ‘உன் பெற்றோரிடம் கொண்டு சேர்க்கிறேன்’ என தெரிவித்த லாட்ஜ் உரிமையாளர் பிரபாகரன், 27, என்பவனும், சிறுமியிடம் தவறாக நடந்துள்ளான்[7]. அவனிடம் இருந்து தப்பிய சிறுமி, 29-04-2017 அன்று ஒருவழியாக திருப்பூர் வந்தாள். திருப்பூரில் பதுங்கியிருந்த இப்ராஹீம் கைது செய்யப்பட்டு, பொள்ளாச்சி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டான். பிரபாகரனை பிடிக்க, போலீசார், புதுச்சேரி விரைந்தனர். குயிலம்பாளையம் பகுதியில் இருந்த பிரபாகரனை, போலீசார் நேற்று கைது செய்து, திருப்பூர் அழைத்து வந்தனர்[8]. அவன் மீது, ‘போஸ்கோ’ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்[9]. இந்த சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

facebook-harassment-of-girls-women

பாலிமர் நியூஸ் தரும் தகவல்[10]: சிறுமி 8-ம் வகுப்பு தேர்வு முடித்தவுடன், மணிகண்டன் என்ற பெயரில் போலியாக ஃபேஸ்புக் கணக்கு ஆரம்பித்து உலா வந்துள்ளார். இது அப்பெண்ணீன் வக்கிரத்தைக் காட்டுகிறது. அந்நிலையிலேயே, கவுன்சிலிங்கிற்கு அனுப்பப்பட்டிருந்தால், பிழைத்திருப்பாள். வகுப்பு நண்பர்கள் மற்றவர்கள் அவளது விசித்திரமான போக்கை அறிந்தால், கண்டு பிடித்திருக்கலாம். அப்போது, சிவா இடியட் என்ற பெயரில் திருப்பூர் இளைஞர் ஒருவர் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டிருப்பதை கண்ட சிறுமி, அவருக்கு இன்பாக்ஸில் ஹாய் மெசேஜ் அனுப்பியுள்ளார். ஆண் பெயரில் வந்த அழைப்பை அந்த இளைஞர் ஏற்க மறுத்ததால், தான் ஆண் இல்லை எனவும் பெண் எனவும் கூறிய சிறுமி, தனது செல்போன் எண்ணை வழங்கியுள்ளார். சிவா இடியட் என்ற அந்த நபர், தன் உண்மையான பெயர் சிவ கார்த்திகேயன் என கூறியுள்ளார். இதன் பிறகு இருவரும் chat செய்வதையே வழக்கமாக கொண்டிருந்துள்ளனர்.facebook-useless-love

ஃபேஸ்புக்கிலேயே மூழ்கி கிடந்த  மகளை, தாய் கண்டித்தது: மகள் ஃபேஸ்புக்கிலேயே மூழ்கி கிடப்பதை கண்டு ஆத்திரமடைந்த தாய், அவரை கண்டித்துள்ளார்[11]. இதனால், மனவேதனை அடைந்த சிறுமி, சிவா இடியட்டை செல்போனில் அழைத்து புலம்பியுள்ளார். அப்போது, சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தால் எல்லாம் சரியாகிவிடும் எனக்கூறிய இடியட் சிவா, அப்படியே ஜன்னலை திறந்து வெளியே பார்க்குமாறு சிறுமியுடன் கூறியுள்ளார். ஜன்னலை திறந்து பார்த்த சிறுமி, சினிமா ஹீரோவைப்போல் யமஹா பைக்கில் நின்ற இடியட் சிவாவை பார்த்து பரவசமடைந்துள்ளார். இதையடுத்து இடியட் சிவாவின் அழைப்பின் பேரில் வீட்டைவிட்டு வெளியே வந்த சிறுமி, மன ஆறுதல் தேடி அவனுடன் சென்றுள்ளார். அப்போது, தங்களது தெய்வீக காதலை ஆண்டவனாலும் பிரிக்க முடியாது என கூறிய இடியட் சிவா, சிறுமியை அழைத்துக்கொண்டு பேருந்து மூலம் சென்னைக்கு சென்றுள்ளார். ஆனால், சென்னையில் இருந்தால் பிடிபட்டுவிடுவோம் என்று என கருதி, இருவரும் புதுச்சேரி சென்றுள்ளனர். பிறகு ஆளறவமற்ற ஆரோவில் பகுதியில், கட்டி முடிக்கப்படாத ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.

பல கேள்விகளுக்கு பதில் தேவைப்படுகிறது: எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுமி, 13-வயதிலேயே, இத்தகைய காரியத்தில் ஈடுபட்டாள் என்ப்தே திகைப்பாக இருக்கிறது:

  1. தனியாக ஒரு பையனுடம் செல்ல சில மாதங்கள் ‘பேஸ்புக்’கே போதுமா என்ன?
  2. அக்குறுகிய காலத்திலேயே, எல்லா விவரங்களையும் அறிந்து கொண்டு விடுவார்கள் போலிருக்கிறது
  3. 13 வயது சிறுமிக்கு இக்காலத்தில், இத்தகைய விவகாரங்கள் தெரிந்து, ஈடுபடும் அளவுக்கு துணிச்சல் வருகிறதா என்ன?
  4. மேலும், லாட்ஜில்தங்கும்அளவுக்கு, அச்சிறுமிக்கு எப்படி புத்தி வந்தது?
  5. தன்னை கற்பழிக்கப்போகின்றவனுக்கே, நகையை எடுத்து கொடுத்துள்ளாள்  என்பதே விசித்திரமாக உள்ளது.
  6. பெண்ணிற்குஉள்ளுணர்வுஎச்சரிக்கும்என்பார்களே, அதெல்லாம்வேலைசெய்யவில்லையா?
  7. அப்படி அப்பையனைப்பற்றிய எந்த விவரங்களும்தெரியாமலா லாட்ஜ்        வரைக்கும் சென்றிருக்கிறாளா?

Facebook-love-rape Trupr 02-05-2017- One India

இதை எதிர்ப்பது தடுப்பது, கண்காணிப்பது எப்படி?[12]: இப்பிரச்சினை எவ்வாறு அணுகப்பட வேண்டும், என்பதற்கு கீழ்கண்டவை கொடுக்கப்படுகின்றன. இக்காலத்தவர், இதெல்லாம், அடக்குமுறை என்றேல்லாம் விமர்சிக்கலாம். ஆனால், வியாதியை முற்ற வைத்தால், சமூகமே சீரழிந்து விடும்:

  1. தார்மீகக் கல்வி பள்ளிகளில் அறிமுகப்படுத்த வேண்டும். பெற்றோர், உற்றோர், மற்றோர், பெரியோர் முதலியவருக்கு எப்படி மரியாதைக் கொடுத்து, நல்லதை அறிந்து-புரிந்து கொள்ளவேண்டும் என்பது பற்றி போதனை அளித்தல்.
  2. நிச்சயமாக இக்காலகட்டத்தில், அவர்களும், முன்னோடியாக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. அதாவது, போதிப்பவர், முதலில் ஒழுக்கமாக இருக்க வேண்டும்.
  3. பள்ளி-கல்லூரி மாணவர்கள் படிப்பில் தான் கவன் செல்லுத்த வேண்டும். காதல், காமம், ஜாலி போன்றவற்றில் கவனம் செல்லுத்தக் கூடாது.
  4. சினிமா, சின்னத்திரை, அச்சு மற்றும் ஊடகத்துறையினர் சமூக பொற்றுப்புடன் விளம்பரம், கதைகள் சினிமாக்கள் முதலியவற்றில் நடந்து கொள்ள வேண்டும்.
  5. இதை செய்யாதே என்று அவற்றையெல்லாம் காண்பித்து, எதிர்மறையாக அவர்களது மனங்களை கெடுக்காமல், நல்லதையே எடுத்துக் காட்டலாம்.
  6. நிச்சயமாக பெற்றோர், உற்றோர், மற்றோர், அவர்களது நடவடிக்கைகளைக் கண்காணிக்க வேண்டும்.
  7. வழக்கத்திற்கு மாறான செயல்பாடுகள், மறைவான அடவடிக்கைகள், கூடாநட்பு, ……முதலியவை கண்காணிக்கப்பட வேண்டும்.
  8. சினிமா பாணி காதல் நிஜமாகாது. ஆட்டோகாரனுக்கு பெரிய பணக்காரரின் பெண் வேண்டும் போன்ற போலியான எண்ணங்களை வளர்க்கக் கூடாது, நியாயப்படுத்த முடியாது.
  9. சினிமா பாடல்கள், வசனங்கள், நடனங்கள், .. முதலியவை ஆபாசமாக, அசிங்கமாக இருக்கக் கூடாது. நடிகைகள் கேவலமாக காட்டக் கூடாது. ஏதோ செக்ஸ் தூண்டும் பொருளாகக் காண்பிக்கக் கூடாது.
  10. சட்டகளை அமூல் படுத்துவோர், இத்தகைய வேலைகளை கண்காணித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

18-05-2017

pda-in-theatres

[1] https://womanissues.wordpress.com/2016/08/12/facebook-love-led-to-roaming-love-making-and-finally-raping/

[2] வெப்துனியா, பேஸ்புக் காதல்: சிறுமியை லாட்ஜில் வைத்து பலாத்காரம் செய்த வாலிபர்!, வியாழன், 4 மே 2017 (15:15 IST).

[3] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/youth-raped-a-13-years-old-girl-117050400038_1.html

[4] தினமலர்,  ‘பேஸ்புக்நட்பால் வந்தது வினை 13 வயது சிறுமிக்கு நேர்ந்த அவலம் , பதிவு செய்த நாள். மே.2, 2017. 01.53.

[5] http://www.dinamalar.com/news_detail.asp?id=1762680

[6] தமிழ்.ஒன்.இந்தியா, பேஸ்புக் நட்பால் பலரிடம் சீரழிந்த திருப்பூர் பள்ளி மாணவிபதற வைக்கும் தகவல்கள், By: Devarajan, Published: Wednesday, May 3, 2017, 17:16 [IST].

[7] http://tamil.oneindia.com/news/tamilnadu/two-held-sexually-abusing-tirupur-minor-girl-281645.html

[8] தினமலர்,  ‘பேஸ்புக்நட்பால் சீரழிந்த சிறுமி, பதிவு செய்த நாள். மே.3, 2017. 05.28.

[9] http://www.dinamalar.com/news_detail.asp?id=1763278

[10] பாலிமர் நியூஸ், பேஸ்புக் மூலம் 8-ம் வகுப்பு மாணவிக்கு ஏற்பட்ட கொடூரம், 04-மே-2017 21:43

[11]https://www.polimernews.com/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-8-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/

[12] https://vedaprakash.wordpress.com/2017/05/18/online-sexual-grooming-luring-girls-with-modus-operandi-cyber-sexual-crimes-should-be-taken-serious-and-monitored/