Archive for the ‘சின்மயி’ Category

தூஷணம் செய்யப்பட்டவர், அவமதிக்கப்பட்டவர் சமரசத்திற்கு அழைக்கப்படும் ரகசியம், பின்னணி என்ன?

ஒக்ரோபர்24, 2012

தூஷணம் செய்யப்பட்டவர், அவமதிக்கப்பட்டவர் சமரசத்திற்கு அழைக்கப்படும் ரகசியம், பின்னணி என்ன?

இணையதளத்தில் அவதூறு பரப்பியதாக புகார்! கைது செய்யப் பட்டோருடன் சமரசம் செய்ய பாடகி சின்மயி மறுப்பு!

டிவிசெனலுக்கு முன்பு வீரநடைபோட்டு, எதையோ சாதித்து விட்டது போலத் தோன்றி, சிறைக்குச் சென்ற பிறகு, குற்றத்தால் தண்டனை பெற நேரிடும் என்று அறிந்து, பிறகு, பாதிக்கப்பட்டவரையே, மிரட்டுவது என்ன வகையில் கருதப்பட்ட வேண்டும் என்று தெரியவில்லை. நாங்கள் என்னவேண்டுமானாலும் செய்வோம்,

முன்பு வெடிகுண்டு வழக்கில் கைதாகி, சிறைவாசம் பெற்றவர்கள் கூட, அப்பட்த்தான் தோன்றினார்கள், சிரித்துக் கொண்டே கைகளை ஆட்டினார்கள். எங்கோ ஜாலியாக செல்வது போல, போலீஸ் வண்டிகளில் ஏறும் போது, நடந்து கொண்டார்கள்!

ஆனால், ஒன்றும் செய்யக்கூடாது. சட்டங்கள், நீதிகள், நீதிமன்றங்கள் எதைப் பற்றியும் கவலையில்லை. மிரட்டி, உருட்டி, பயமுறுத்தியே சாதித்து விடுவோம் என்ற மனப்பாங்கு எப்படி உருவாகிறது? தீவிரவாதத்தால், அப்பாவி மக்கள்

கொல்லப்பட்டார்கள், குரூரமாக சிதறி பலியானார்கள், ரத்தம் பாய்ந்தது, கை-கால்கள் சிதறின என்றாலும், தீவிரவாதிகள் அத்தகைய செயல்களில் ஈடுபட்டுக் கொண்டேதான் இருக்கிறார்கள். அதேபோலத்தான். இவர்களும், நாங்கள் சட்டங்களை மீரிக்கொண்டே இருப்போம், ஆனால் எங்களைக் காட்டிக் கொடுக்கக் கூடாது என்ற மனப்பாங்கு ஏன் வருகிறது?

தமது சகோதரி-தாயார்களுக்கு அத்தகைய தூஷணம் நடந்திருந்தால் என்ன செய்திருப்பர்?: கைது செய்யப்பட்டோரின் வழக்கறிஞர்களுக்கு சட்டம் பற்றி நன்றகத் தெரியும் தானே? அவர்களே சின்மயிக்கு வக்காலத்து வாங்கியிருந்தால், என்ன செய்திருப்பார்கள்? ஒரு பெண்ணை, பெண் என்றுகூட பாராமல், தாயுடன் சேர்த்து தூஷித்து, வெளிப்படையாக, இணைதளத்தில் அவமதித்தப் பிறகு, அத்தகைய எண்ணம் எப்படி வருகிறது? அந்த கைது செய்யப்பட்டோரின் வழக்கறிஞர்கள், யாராவது அவர்களுடைய சகோதரி, தாயார்களை இவ்வாறு அவமதித்திருந்தால்,

பிராண வகுப்பைச் சார்ந்தவர் என்ற காரணத்திற்காக தூஷிக்கபட்டு, அவமானப்படுத்தப்பட்டவரை ஏன் மிரட்டி சமரத்திற்கு பேச முற்படவேண்டும்?

சும்மா விட்டிருப்பார்களா? அந்த மெத்தப் படித்த புரொபசர் சரவண பெருமாள், ராதாமணாளன் முதலியோர் என்ன செய்திருப்பர்? அப்படியென்றால், பிராமணப்பெண் மட்டும், எல்லா தூஷணங்களையும், அவமானங்களையும் சகித்துக் கொண்டு, அடங்கியொடுன்கி பயந்து போக வேண்டுமா? இணையதளத்தில் அவதூறு பரப்பிய புகாரில் கைதாகி சிறையில் உள்ளோருடன் சமரசம் செய்துகொள்ள பின்னணி பாடகி சின்மயி மறுத்துவிட்டார்[1].

சமரசப் பேச்சின் பின்னணி, காரணம் என்ன?: பாடகி சின்மயி தனக்கு டிவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் ஆபாசமாகக் கருத்துக்கள் எழுதி மன உளைச்சல் ஏற்படுத்துவதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருந்தார். புகார் குறித்து விசாரணை நடத்திய போலீசார், கல்லூரி துணை பேராசிரியர் சரணவன பெருமாள் மற்றும் திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் ராதாமணாளன் என்பவரையும் கைது செய்தனர்.  சரவணபெருமாள் ஏற்கனவே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ராதாமணாளன் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்துவரப்பட்டு, பின்னர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் சிலரை இந்த புகாரில் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.  இந்த நிலையில் கைது செய்யப்பட்டோரின் வழக்கறிஞர்கள், பாடகி சினிமயிடன் சமரசம் செய்து கொள்வதற்காக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், சமரசத்தை ஏற்க மறுத்த சின்மயி, நீதிமன்றத்தின் மூலமே தீர்வு காண விரும்புவதாக கூறிவிட்டு வெளியேறினார்.

 

சமூகத்தில் நற்பெயர் கெடும் என்றால் அத்தகைய ஈனத்தனமான செயல்களைச் செய்திருக்க மாட்டார்கள்: சமூகத்தில் நற்பெயர் கெடும் என்றால் அத்தகைய ஈனத்தனமான செயல்களைச் செய்திருக்க மாட்டார்கள். படித்துப் பட்டம் பெற்றவர்கள், இணைதளத்தில் பதிவு செய்யக்கூடிய அளவில் வல்லவர்கள், பொறுப்பான உத்தியோகத்தில் இருப்பவர்கள், நாகரிகமான கனவான்கள் என்பவர்கள் அவ்வாறு எப்படி செய்தன்சர்? அதன் பின்னணி என்ன? தூண்டுகோள் என்ன? இவற்றையும் பொது மக்கள் அறியவேண்டும், அறிந்து கொள்ளவேண்டும்..

வேதபிரகாஷ்

24-10-2012