Archive for the ‘எய்ம்ஸ்’ Category

சுனந்தா மர்ம மரணத்தில் தொடரும் மர்மங்கள் – பலதார திருமணம், சாவில் முடிந்தது ஏன் – இஸ்லாமிய தீவிரவாதிகளால் துரத்தியடிக்கப் பட்ட ஒரு இந்து பெண்ணின் சோகமான கதை (6)

ஜூலை4, 2014

சுனந்தா மர்ம மரணத்தில் தொடரும் மர்மங்கள் – பலதார திருமணம், சாவில் முடிந்தது ஏன்  – இஸ்லாமிய தீவிரவாதிகளால் துரத்தியடிக்கப் பட்ட ஒரு இந்து பெண்ணின் சோகமான கதை (6)

The twitter affairs breaking marriage sasi-tarar-sunanda

The twitter affairs breaking marriage sasi-tarar-sunanda

பாதிக்கப் பட ஒரு இந்து பெண்ணின் நிலை அலசப் படுகிறது: சசிதரூர் – சுனந்தா மூன்றாவது திருமண பந்தத்தில்,  ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்து பெற்ற முஸ்லிம் பெண் மெஹர் தரார் எப்படி தலையிட்டார் என்பது முன்னர் விளக்கப் பட்டது[1]. சுனந்தா-மெஹர் டுவிட்டர் உரையாடல் அவர்களுக்கு இடையே இருந்த கசப்பை வெளிப் படுத்தி காட்டியுள்ளது[2]. வரம்பிற்கு மீறி மெஹர் தலையிட்டுள்ளது, சசி அதனை ஊக்குவித்தது, இதனை சுனந்தா கண்டித்த பிறகு, சசி மெஹரை நிறுத்திக் கொள் என்றது, ஆனால், தொடர்ந்து இ-மெயில், போனில் பேசிக் கொண்டிருந்தது,  இதனால் துபாயில் சுனந்தா வெளிப்படையாகத் தட்டிக் கேட்டது முதலியனவும் விளக்கப்பட்டன[3].  காஷ்மீரத்தில் வாழ்ந்து வந்த சுனந்தா மற்றும் அவரது குடும்பம் ஜிஹாதி தீவிரவாதத்தால் சிதறுண்டது.  பயங்கரவாதத்தினால் பிளவுண்டது. குடும்பத்தினர் பிரிய, இவர் துபாய்-கனடா-துபாய் என்று அலைய வேண்டியதாயிற்று.  இப்படி இரண்டு கணவர்கள் இறந்த பிறகு, மூன்றாவதாக சசி தரூரை திருமணம் செய்து கொண்ட பிறகு,  ஆரம்பித்தது தான் அந்த பாகிஸ்தானிய பெண்மணி, முஸ்லிம் மெஹர் தராரின் தலையீடு[4]. ஏகப் பட்ட மருந்துகள் உட்கொண்டதால்,  அக்கலவையே விஷமாகி இருக்கக்கூடும் என்றும் சொல்லப் பட்டது[5]. இந்நிலையில்  ஐந்து மாதங்களுக்குப் பிறகு,  அச்சர்ச்சை மறுபடியும் வெளிப்பட்டுள்ளது.

Why paki-woman eye on Indians

Why paki-woman eye on Indians

சுனந்தா புஷ்கரின் மர்மமான மரணம்:சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பாக தேவைப் பட்டால், அவரது கணவரும்,  முன்னாள் மத்திய அமைச்சருமான சசி தரூர் மற்றும் அவரது உடலை சோதித்த டாக்டரிடம் விசாரணை நடத்துவோம் என டில்லி போலீசார் கூறியுள்ளனர்.பாகிஸ்தானை சேர்ந்த பத்திரிகையாளர் மெஹர் தராருக்கும், சசி தரூருக்கும்,  கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளதாகவும், மெர்தரார், சசிதரூரை, தன்னிடமிருந்து பிரிக்க முயற்சிப்பதாகவும், சுனந்தா,  “டுவிட்டரில்’ பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார். இந்த விவகாரத்தால்,  சசிதரூர் சுனந்தா இடையில் கருத்து வேறுபாடும், மோதலும் ஏற்பட்டுள்ளதாக, தகவல் வெளியானது.  இதனால் ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் சுனந்தா புஷ்கர், கடந்த ஜனவரி மாதம் 17ம் தேதி டில்லியில் உள்ள லீலா ஓட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.  அவரது உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்கு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு [All India Institute of Medical Sciences (AIIMS)] அனுப்பி வைத்திருந்தனர். அவரது உடலை 3 பேர் கொண்ட மருத்துவர் குழுவினர் பரிசோதனை நடத்தினர்.   டாக்டர் சுதிர் குப்தாவின் தலைமையில் பிரேத பரிசோதனை நடத்தப் பட்டது. அப்போது, சுனந்தாவின் இரு கைகளிலும்  12-க்கும் மேற்பட்ட இடங்களில் காயம் ஏற்பட்டதற்கான அடையாளங்கள் இருந்தது தெரிய வந்தது.  மேலும் அவரது கன்னத்தில் கீறல்களும் காணப்பட்டன. இதே போல், அவரது இடது உள்ளங்கையில் ஆழமாக பற்கள் பதிந்ததற்கான அடையாளங்களும் இருந்தன. எனினும்,  இவை மரணம் நேரிடக் காரணமாக அமையவில்லை என்றும் பிரேத பரிசோதனையில் கூறப்பட்டது[6]. இந்த சோதனையில், அதிகளவு மருந்தை உட்கொண்டதால் தான் சுனந்தா மரணமடைந்ததாக தெரிவிக்கப் பட்டது.

shashi_tharoortwitter0220141501(1)மரணம் இயற்கையா, மருந்துகளினால் தூண்டப் பட்டதா?: ஜனவரியிலேயே கொஞ்சம்-கொஞ்சமாக அவருக்கு நச்சுதன்மை கொண்ட மருந்து கொடுக்கப் பட்டு வந்துள்ளது என்று தெரிய வந்தது[7]. இதனால் தான்,  உள்ளுறுப்புப் பகுதிகள் சோதனைக்கு எடுத்து வைக்கப் பட்டது.  புஷ்கர் தங்கியிருந்த அறையில் மன அழுத்தத்திற்கான மாத்திரை கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து சுனந்தாவின் குடல் உறுப்புகள் ஆய்வக சோதனைக்காக அனுப்பி வைக்கப் பட்டது. அதில் அளவுக்கு மீறி மாத்திரைகள் தின்றதால் அது விஷமாக மாறியிருப்பது கண்டறியப் பட்டது.  இதிலும் தெளிவான முடிவுகள் கிடைக்காததால் இது பற்றி போலீசார் வழக்கு எதையும் பதிவு செய்யவில்லை.  மேலும் சுனந்தாவின் சகோதரர், மகன்,  சசி தரூர் மற்றும் அவரது ஊழியர்கள் ஆகியோர் அளித்த வாக்குமூலங்களை மாஜிஸ்திரேட்டு பதிவு செய்த போது,  இவர்களில் யாரும் சுனந்தாவின் மரணத்தில் எந்த தவறான நிகழ்வுகளும் ஏற்படவில்லை என்று தெரிவித்தனர்.  இதையடுத்து மனச்சோர்வுக்கான மாத்திரைகளை அதிக அளவில் தின்றதால் சுனந்தாவுக்கு இயற்கையாகவே மரணம் நேர்ந்தது என்று பிரேத பரிசோதனை அறிக்கை வெளியிடப் பட்டது.  இந்த சம்பவம் தொடர்பாக, சசி தரூரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்யப் பட்டது.

Christa Giles, Tharoor’s second wife

Christa Giles, Tharoor’s second wife

டாக்டர் சுதிர் குப்தாவினால் உண்டாகியுள்ள சர்ச்சை: இந்நிலையில் நேற்று,  சுனந்தா உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டர் குப்தா, சுனந்தாவுக்கு ஏற்பட்ட மன அழுத்தமே அவரது மரணத்திற்கு காரணம் எனவும், சிலர்,  இந்த மரணத்தை இயற்கையாக காட்ட வேண்டும் என விரும்பினர்[8] எனவும் என்னை புதிய அரசு பதவியேற்கும் 3 நாட்களுக்கு முன்னர் என்னை விலகி செல்ல முயற்சி நடந்தது என கூறியிருந்தார்[9]. அந்த புகாரில்,  ‘சுனந்தா இயற்கையாக மரணமடைந்தார் என்று அறிவிக்க வேண்டும் என அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 2 மந்திரிகள் எனக்கு நெருக்கடி கொடுத்தனர். மேலும்,  நாங்கள் கூறும் படி திட்டமிட்ட பிரேத பரிசோதனை அறிக்கையை தயாரிக்கும் படியும் என்னை அவர்கள் வற்புறுத்தினார்கள். அதற்கு நான் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தேன்’  என்று சுதிர் குப்தா குறிப்பிட்டு உள்ளதாக தெரிகிறது.  இதனையடுத்து இந்த விவகாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. டாக்டர் சுதிர் குப்தா கருத்துக்கு எய்ம்ஸ் நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது[10]. குப்தாவுக்கு யாரும் நெருக்கடி தரவில்லை எனவும்,  நெருக்கடி தந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என கூறியிருந்தது. குப்தா தனது பதவி உயர்வுக்காக மத்திய நிர்வாக ஆணையம் முன்னால் [Central Administrative Tribunal (CAT)] ஒரு வழக்குத் தொடுத்திருக்கிறார்.  அது நிலுவையில் உள்ளது. இப்பொழுது அதனையும் இணைத்து இப்புகாரைக் கொடுத்துள்ளார்[11].  அது முடியும் வரை எங்களால் கருத்துத் தெரிவிக்க முடியாது என்றும் எய்ம்ஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Tilothama - first wife of Sasi

Tilothama – first wife of Sasi

அரசியல் தலையீடு உள்ளதா?:  முந்தைய அனமைச்சர் குலாம் நபி ஆஜாதும் எந்தவித அழுதத்தையும் ஏற்படுத்த வில்லை என்று கூறி மறுத்துள்ளார்[12].  ஆகவே, எய்ம்ஸ் அல்லது டாக்டர் குப்தா யார் பொய் சொல்கிறார்கள் என்ற பிரச்சினையும் எழுந்துள்ளது[13] ஏனெனில் இது இயற்கையான மரணமா அல்லது சதியுள்ளதா என்ற சந்தேகம் ஆரம்பத்திலிருந்து இருந்து வந்துள்ளது. நன்றாக இருந்த சுனந்தா இறந்ததை அந்த பாகிஸ்தான் காதலியே நம்பவில்லை. நிச்சயமாக தற்கொலை செய்து கொள்ள மாட்டாள்,  ஏனெனில், சுனந்தா அந்த அளவிற்கு கோழையான பெண் இல்லை என்று அவளது குடும்பத்தார் உறுதியாக சொன்னார்கள். இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த,  முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர், இந்த விவகாரத்தில் விரைவாகவும் தெளிவாகவும் விசாரணை நடத்தி,  பிரச்னைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் எனவும், தெளிவான முடிவுக்கு வந்தால் தான் சர்ச்சைகளுக்கு முடிவு கிடைக்கும்.  எனவும் கூறியிருந்தார்[14]. சுனந்தா புஷ்கர் மரணம் குறித்து டில்லி போலீசாரும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் விளக்கமளித்தனர்.இந்நிலையில்,  சுனந்தா புஷ்கர் மரணம் குறித்து டில்லி போலீஸ் கமிஷனர் பஸ்சி கூறுகையில்,  சுனந்தா விவகாரம் குறித்து எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை இப்போது கூற முடியாது. தற்போது விசாரணை நடந்து வருகிறது என்பதை உங்களுக்கு தெரியப் படுத்தி கொள்கிறேன்.  இந்த விவகாரத்தில் தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப் பட்டு வருகிறது. தேவைப் பட்டால்,  முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர், மற்றும் டாக்டர் சுதிர் குப்தாவிடம் விசாரணை நடத்துவோம்.  ஆதாரங்கள் மற்றும் சட்டப்படி விசாரணை நடைபெறும்.  சுனந்தா மரணம் தொடர்பாக டில்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் அதுல் சூத் தலைமையில் சிறப்புபடை அமைக்கப் பட்டுள்ளது[15].

Sasi-Sunanda-third-marriage-with-each other

Sasi-Sunanda-third-marriage-with-each other

விரைவாக விசாரியுங்கள் என்று கேட்கும் சசி தரூர்[16]:  மனைவி சுனந்தாவின் மரணம் எனக்கு மிகப் பெரிய இழப்பாகும். இது தொடர்பான விசாரணையை விரைவாகவும்,  வெளிப்படையானதாகவும் முடிக்குமாறு புலன்விசாரணை நடத்தும் அதிகாரிகளை நான், ஆரம்பம் முதலே கேட்டுக் கொண்டு வந்திருக்கிறேன்.  இதே கருத்தைத் தான் சுனந்தாவின் குடும்பத்தினரும் கொண்டுள்ளனர். மேலும், நாங்கள் அனைவரும் இப்பிரச்சினையில்,  விசாரணை அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பையும் அளித்து வருகிறோம்.  எனவே, இந்த விஷயத்தில் காலத்தை கடத்தாமல் விசாரணையை நடத்தி முடித்து தெளிவான மற்றும் நிச்சயமானதொரு முடிவை வெகுவிரைவில் போலீசார் கொண்டு வரவேண்டும் என்று மீண்டும் கேட்டுக் கொள்கிறேன். அப்போது தான் இதில்,  நிலவும் அனைத்து வித ஊகங்களுக்கும் முற்றுப் புள்ளிவைக்ப்படும்[17], என்று சசிதரூர் தனது அறிக்கையில் கூறியுள்ளார். ஆனால், அவர் தனது பிளாக் பெர்ரி மொபைலில் உள்ள மெசேஜிகளையெல்லாம் அழித்து விட்டார் என்று செய்தி வந்துள்ளது[18].  நளினி சிங் என்ற பத்திரிக்கையாளர் ஜனவரி 17ந்தேதி காலையின் போனில் தொடர்பு கொண்ட போது கத்தினார்,  அழுதார் என்று குறிப்பிடுகின்றார்[19].

© வேதபிரகாஷ்

03-07-2014

[1] https://womanissues.wordpress.com/2014/01/18/sunanda-pushkar-sasi-tarur-polygamy-ended-with-death-the-story-of-a-hindu-woman-who-was-driven-away-by-the-islamic-terrorists/

[2] https://womanissues.wordpress.com/2014/01/18/sunanda-pushkar-mysterious-death-and-tragedy-of-a-hindu-woman/

[3] https://womanissues.wordpress.com/2014/01/19/twitter-brawl-between-ladies-ended-in-suicide-or-compelled-suicide/

[4] https://womanissues.wordpress.com/2014/01/20/mehr-tarar-explanation-about-denial-points-to-love-jihad/

[5] https://womanissues.wordpress.com/2014/01/23/unsolved-riddles-in-death-of-sunanda-pushkar/

[6] http://www.dailythanthi.com/News/India/2014/07/03023104/Former-Federal-MinisterShashi-Tharoor-and-wife-Sunanda.vpf

[7] http://www.hindustantimes.com/india-news/sunanda-case-police-also-looking-at-slow-poisoning/article1-1175792.aspx

[8]தினத்தந்தி,  முன்னாள்மத்தியமந்திரிசசிதரூர்மனைவிசுனந்தாமரணத்தில்புதியதிருப்பம்இயற்கைமரணம்என்றுஅறிவிக்கநெருக்கடிகொடுத்ததாகடாக்டர்குற்றச்சாட்டு, சென்னைப்பதிப்பு,03-07-2014.

[9]தினமலர், சுனந்தாமரணம்: தேவைப்பட்டால்சசிதரூரிடம்விசாரணை: டில்லிபோலீஸ்கமிஷனர், சென்னைப்பதிப்பு,03-07-2014.

[10]http://tamil.thehindu.com/india/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article6170356.ece?homepage=true

[11] http://timesofindia.indiatimes.com/city/delhi/AIIMS-says-forensic-head-faced-no-pressure/articleshow/37667255.cms

[12] http://www.dnaindia.com/india/report-sunanda-pushkar-death-now-aiims-denies-that-upa-minister-ghulam-nabi-azad-exerted-pressure-to-alter-autopsy-report-1999055

[13] http://www.hindustantimes.com/india-news/plot-thickens-the-unanswered-questions-in-the-death-of-sunanda-pushkar/article1-1235840.aspx

[14] http://www.puthiyathalaimurai.tv/sunanda-pushkar-death-case-there-was-no-pressure-on-dr-sudhir-gupta-says-aiims-153328.html

[15] http://www.dinamalar.com/news_detail.asp?id=1012357

[16] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=99153

[17] http://www.dailythanthi.com/News/India/2014/07/03023104/Former-Federal-MinisterShashi-Tharoor-and-wife-Sunanda.vpf

[18] http://zeenews.india.com/news/nation/shashi-tharoor-deleted-bbms-to-mehr-tarar-sunanda-pushkar-wanted-to-retrieve-them_944725.html

[19]‘Shashi Tharoor deleted BBMs to Mehr Tarar, Sunanda Pushkar wanted to retrieve them’
The phone messages are very relevant. Deleting them and asking the doctor to change postmortem report followed by hurried cremation definitely is suspicious.