Archive for செப்ரெம்பர், 2016

ஏழு ஆண்களை திருமணம் செய்த நவநாகரிக பெங்களூரு பெண் – கல்யாண ராணியா, சமூக தீவிரவாதமா – யார் தீர்மானிப்பது?

செப்ரெம்பர்24, 2016

ஏழு ஆண்களை திருமணம் செய்த நவநாகரிக பெங்களூரு பெண் – கல்யாண ராணியா, சமூக தீவிரவாதமா – யார் தீர்மானிப்பது?

afsal-yasmin-imran-20-09-2016

ஆண்களை ஏமாற்ற யாஸ்மின் கடைபிடித்த திட்டம் [modus operandi]: இம்ரானைப் பிரிந்த பிறாகு, யாஸ்மின் பானு, 6 பேரை திருமணம் செய்துகொண்டது தெரியவந்துள்ளது. அதாவது, யாஸ்மின் பானு, தனது அழகில் மயங்கி விழும் ஆண்களை காதலிப்பது போல நடித்து அவர்களை திருமணம் செய்வார். பின்னர், திருமணம் முடிந்து 2 நாட்கள் கணவருடன் குடும்பம் நடத்துவதுபோல நடித்து, அவர்களின் வீட்டில் இருந்து நகை-பணத்தை திருடுவதை தொழிலாக வைத்திருந்ததும் தெரியவந்தது[1]. அவர்கள் அனைவரிடமும் சில ஆபாச புகைப்பட ஆதாரங்களை காட்டி மிரட்டி பணம் பறித்துள்ளார்[2]. இதெல்லாம் அவளது “வரைமுறை திட்டமாக” இருந்து வந்துள்ளது. “கல்யாணம் பண்ணு, ஏமாற்று, தூக்கிப் போடு” என்று தான் யாஸ்மின் செய்து வந்ததாக, நியூஸ்-எக்ஸ் தலைப்பிட்டுக் கூறுகிறது[3]. மேலும் ஏழாவது கணவன் யார் என்று தெரியவில்லை என்றும் கூறுகிறது[4]. பெண்கள் இனி பணம் சம்பாதிக்க இவ்வழியையும் பின்பற்றலாம் என்று மற்றவர்கள் பின்பற்ற ஆரம்பித்தாலும் ஆச்சரியமில்லை[5]. இதுகுறித்து கே.ஜி.ஹள்ளி போலீசார் தலைமறைவாக உள்ள கல்யாண ராணியை வலைவீசி தேடி வருகிறார்கள்.

afsal-imran-and-others-20-09-2016கைது செய்யப்பட்ட யாஸ்மின்: “மருதமலை” படத்தில் வடிவேலு போலீஸாக நடித்திருப்பார். அவரிடம் ஒவ்வொரு கணவராக வந்து தங்களது மனைவி குறித்து புகார் தருவார்கள். அந்தக் கதையாக இருக்கிறது இந்த பெங்களூர்ப் பெண்ணின் கதை”, என்று விமர்சிக்கிறது தமிழ்.ஒன்.இந்தியா[6]. தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பின்னர் யாஸ்மின் மீது பணம் கேட்டு மிரட்டல், மோசடி செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, தேட ஆரம்பித்தனர். உகைப்படங்கள் முதலியவை இருந்ததால், போலீஸார் அவளைக் கண்டு பிடித்து, கைது செய்தனர். கடைசியில் நீங்களும் அழகாத்தான் இருக்கீங்க என்று போலீசிடம் சொல்லாமல் இருந்தால் சரிதான், என்று முடித்திருக்கிறது[7] என்று நக்கல் அடிக்கிறது தமிழ்.ஒன்.இந்தியா. இப்படி தமிழ் ஊடகங்கள் இருக்கும் போது, ஆங்கில ஊடகங்கள், தமக்கேயுரிய பாணியில் செய்தியை வெளியிட்டுள்ளன.

my-wife-married-7-others-toi-20-09-2016வழக்கம் போல ஊடகங்களின் குசும்புத்தனம்: இந்தியா.டுடே, இதனை “ஷாதி ஸ்காம்” என்றே குறிப்பிட்டுள்ளது[8], அதாவது, மோசடி திருமணம், திருமண ஊழல் என்றே குறிப்பிட்டுள்ளது[9]. இஸ்லாத்தில் பலதார திருமணம் சாதாரணமான விசயம், அதாவது ஒரு ஆண் ஒரே நேரத்தில் 4 பெண்டாடிகளை வைத்திருப்பதும், ஒரு பெண், பல ஆண்களை திருமணம் செய்து கொள்வதும், அவர்களது சட்டப்படி சரி என்று தான் முஸ்லிம்கள் செய்து வருகின்றனர். இதெல்லாம் எங்களுடைய சமாச்சாரங்கள், எந்த கோர்ட்டோ, யாரும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்று கூப்பாடு போடுவதும், கலாட்டா செய்வதும், கலவரங்களில் ஈடுபடுவதும் என்றிருப்பதால், மற்றவர்களும், இதைப்பற்றியெல்லாம் யாரும் கண்டுகொள்வதில்லை. “டைம்ஸ் ஆப் இந்தியா”, ஒரு இந்து பெண் இருப்பது போல சித்தரித்துள்ளது, விசமத்தனமாக உள்ளது[10]. அதாவது, உதாரணத்திற்கான படம் என்று போட்டு, அப்பெண்ணின் நெற்றியில், குங்குமம் இருப்பது போலக் காட்டியுள்ளது[11].

yasmin-banu-who-married-7-men-20-09-2016இஸ்லாத்தில் பலதார திருமணம், தலாக் முதலியன: இந்தியன் எக்ஸ்பிரஸ் “ஜீவனாம்சம்” என்ற வார்த்தை உபயோகித்துள்ளது[12]. அப்படியென்றால், அவள் விவாக ரத்து பெற்றுள்ளாள் என்று தெரிகிறது[13]. அதாவது, இதில் சம்பந்தப்பட்டுள்ள ஆண்கள் பணக்காரர்கள் என்பதால், அவர்களுக்கு விசயம் தெரிந்திருக்கும். இவ்விசயம் இங்கிலாந்திற்கும் சென்றிருக்கிறது[14]. தன் மனைவிக்கு ஏழு கணவன்கள் இருப்பதை அறிந்ததும், யாரை நம்பித்தான் வாழ்வது என்ற கேள்வியை எழுப்பியுள்ளது[15]. இஸ்லாத்தைப் பொறுத்த வரையில் பலதார திருமணம் ஏற்றுக்கொள்ளப் பட்டிருப்பதால், பெண் கற்புள்ளவளாக அதாவது முன்னர் எந்த ஆணுடனும் உடலுறவு கொண்டிருக்கக் கூடாது என்று சொல்ல முடியாது, எதிர்பார்க்க முடியாது. ஒரு இஸ்லாமிய பெண் தானே, “ஒருவனுக்கு ஒருத்தி” என்ற் ரீதியில் திடமாக, உறுதியாக வாழ்ந்தால் தான் அந்த நிலையை எதிர்பார்க்க முடியும். ஆனால், ஆண்கள், பலமுறை நிக்காஹ் செய்து கொள்ள வேண்டும் என்றதால் தான் தலாக் பற்றிய பிரச்சினை வருகிறது. அது இப்பொழுது முஸ்லிம் பெண்களிடம் பெரிய பிரச்சினை ஆகியுள்ளது. இருப்பினும், இஸ்லாமிய சட்ட போர்ட், தங்களுடைய விசயங்களில், எந்த நீதி மன்றமும் தலையிட முடியாது என்று உறுதியாகக் கூறியுள்ளது.

nikkah-marriageஆண்களுக்கு நிகராக, பெண்கள் எல்லா துறைகளிலும் முன்னேறி விட்டார்கள்: அடுப்பங்கறையில், பெண்கள் இருந்த காலம் போய் விட்டது, பெண்கள் படித்து விட்டார்கள், வேலைக்கு செல்கிறார்கள், சம்பாதிக்கிறார்கள், குடும்பத்தைக் காப்பாற்றுகிறர்கள், இப்படி, நிறையவே சொல்லி, சந்தோஷப்படக் கூடிய விசயங்கள் உள்ளன. ஆண்களுக்கு நிகராக, பெண்கள் எல்லா துறைகளிலும் முன்னேறி விட்டார்கள் என்று பெருமைப் படக் கூடிய விசயங்களும் உள்ளன. ஆனால், இது போன்ற “கல்யாண ராணி” விவகாரங்கள், சமூகத்தையே சீரழிப்பதாக உள்ளது. இதனால், உறவுகள் உடையுமா, குடும்பங்கள் பிரியுமா, சமூகம் அழிந்து போகுமா என்று கவலைப்பட வேண்டியதாகிறது. இதை பொதுப்பிரச்சினையாக எடுத்துக் கொண்டால், இந்தியாவிற்கு பேராபத்தான விசயம் என்றே சொல்லலாம். இது ஒரு தீவிரவாதச் எயலைவிட படுபயங்கரமானது எனலாம். ஆண்கள்-பெண்கள் இருபாலரையும் பாதிக்கும் விசயமாக இருப்பதால், நிச்சயம் அவர்கள் ஒழுங்காக இருக்க வேண்டும் என்று வலியுருத்த வேண்டியுள்ளது. தனிமனித ஒழுக்கம் இல்லையென்றால், தாம்பத்தியம், குடும்பம், சமூகம் ஏன் நாடே சீர் கெட்டு போகும் என்றதால், இவற்றைத் தடுக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

24-09-2016

yasmin-banu-who-married-7-men-20-09-2016

[1] மாலைமலர், பெங்களூரில் 7 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண்: போலீசாரிடம் கண்ணீர் விட்டு கதறிய கணவர்கள், பதிவு: செப்டம்பர் 21, 2016 11:59

[2] http://www.maalaimalar.com/News/TopNews/2016/09/21115941/1040301/Complaint-against-woman-for-marrying-7-men-and-extorting.vpf

[3] NewsX Bureau, Marry, dupe, dump — This woman did this with 7 men, First Published |Thursday, September 22, 2016 – 13:57| Thursday, September 22, 2016 – 16:56.

[4] http://www.newsx.com/national/41800-marry-dupe-dump-this-woman-did-this-with-7-men

[5] இதைப் போன்ற கல்யாண ராணிகள் பற்றிய பதிவுகளை நிறையவே பதிவு செய்துள்ளேன்.

[6] தமிழ்.ஒன்.இந்தியா,8 வருடத்தில் 7 கல்யாணம்.. மிரட்டிய பெங்களூரு பெண்: புகார்களுடன் கிளம்பி வந்த 3 கணவர்கள்.., By: Mayura Akilan, Updated: Wednesday, September 21, 2016, 9:18 [IST]

http://tamil.oneindia.com/news/india/bengaluru-woman-marries-7-persons-8-years-263301.html

[7] http://tamil.oneindia.com/news/india/bengaluru-woman-marries-7-persons-8-years-263301.html

[8] IndiaToday.in,  Shaadi.scam: Man files complaint against wife for marrying 7 other men,  Posted by Vivek Surendran, Bengaluru, September 20, 2016 | UPDATED 15:57 IST

[9] http://indiatoday.intoday.in/story/bengaluru-wife-marry-seven-men-cheating/1/768587.html

https://www.youtube.com/watch?v=ds0xi4qMPMQ

[10] The Times of India, My wife has married 7 others, man tells cops, TNN | Updated: Sep 20, 2016, 11.10 AM IST.

[11] http://timesofindia.indiatimes.com/city/bengaluru/My-wife-has-married-7-others-man-tells-cops/articleshow/54418138.cms

[12] Express News Service, Complaint against woman for marrying seven men and extorting lakhs in alimony, Published: 20th September 2016 03:56 AM; Last Updated: 20th September 2016 11:08 AM.

[13] http://www.newindianexpress.com/cities/bengaluru/Complaint-against-woman-for-marrying-seven-men-and-extorting-lakhs-in-alimony/2016/09/20/article3625085.ece

[14] Dailymail.co.uk/, But who’s the breadwinner? Bengaluru man finds out wife has SEVEN other husbands, PUBLISHED: 21:45 GMT, 20 September 2016 | UPDATED: 21:54 GMT, 20 September 2016

[15] http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-3799058/NewHusband-com-Bengaluru-man-finds-wife-SEVEN-husbands.html

ஏழு ஆண்களை திருமணம் செய்த நவநாகரிக பெங்களூரு பெண் – ஜாலியாக இருக்க செய்த யுக்தியாம்!

செப்ரெம்பர்24, 2016

ஏழு ஆண்களை திருமணம் செய்த நவநாகரிக பெங்களூரு பெண் – ஜாலியாக இருக்க செய்த யுக்தியாம்!

yasmin-banu-married-7-men-20-09-2016பெங்களூரு எப்பொழுதோ அதிநவீன நகரமாகி, மேனாட்டவர்களுக்கு ஏற்றமுறையில் மாறிவிட்டது. அவர்களுக்கு என்ன வேண்டுமோ அது அங்குக் கிடைக்கிறது. மது, மாது என்று எது கேட்டாலும் ஓகே என்று அரசு விரித்து விட்டது. அவர்கள் ஜாலியாக இருக்கிறார்கள். கேட்டால், நமக்குத்தானே, இத்தனை ஐடி கம்பெனிகள் நடத்துகிறார்கள், பதிலுக்கு, அவர்களது தேவைகளையும் பூத்தி செய்ய வேண்டிய நிலையாகி விட்டது என்று அதிகாரிகள் கூறுகிறார்கள். முன்பு, பப்பில் பள்ளி-கல்லூரி மாணவிகள் சென்று குடித்து-ஆட்டம் போட்டு கலாட்டா செய்தபோது, ஶ்ரீராம்சேனா எதிர்த்தார்கள், ஆனால், அவர்கள் தாம், “இந்திய தலிபான்கள்” என்ற பெயரைப் பெற்றார்கள். இப்பொழுது, ஒரு பெண் இப்படி பல ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றியிருக்கிறாள். இதனை என்னவென்று சொல்வார்கள்? இதையும், அப்பெண்ணின் உரிமை என்பார்களா? இல்லை, முஸ்லிம்கள் சம்பந்தப்பட்டிருப்பதால், “செக்யூலரிஸ” பாணியில் ஒதுங்கி விடுவார்களா, அமைதியாக இத்துடன், மூடி மறைத்து விடுவார்களா?

imran-yasmin-20-09-2016யாஸ்மின் பானுவுடன், இம்ரானின் அனுபவம்: பெங்களூரு கே.ஜி.ஹள்ளி பகுதியை சேர்ந்தவர் இம்ரான். இவர் கே.ஜி.ஹள்ளி போலீசில் 19-09-2016 அன்று ஒரு புகார் கொடுத்தார்[1]. அதில், கே. ஜி. ஹள்ளியை சேர்ந்த யாஸ்மின் பானு (வயது 30) என்பவரை நான் காதலித்து திருமணம் செய்துகொண்டேன். திருமணம் முடிந்த 2 நாட்கள் அவர் என்னுடன் வாழ்ந்தார். அதன்பிறகு யாஸ்மின் பானு திடீரென்று மாயமாகிவிட்டார். அதே சமயத்தில் எங்கள் வீட்டில் இருந்து நகை-பணத்தை யாஸ்மின் பானு திருடி சென்றுவிட்டார். என்னை திருமணம் செய்வதுபோல நடித்து எங்கள் வீட்டில் இருந்த நகை-பணத்தை அவர் திருடி சென்றுவிட்டார்[2]. தன்னை தொடர்ந்து அடித்து தாக்கி வருவதாகவும், ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றுவதை அவர் வழக்கமாக வைத்துள்ளதாகவும், இதுவரை ஏழு பேரை அவர் திருமணம் செய்துள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசில் புகார் கொடுத்தார்[3]. பணத்தைப் பற்றிக் கவலையில்லை, ஆனால், இப்படி பலபேரை மணந்திருப்பது தான் ஒருமாதிரியாக இருக்கிறது என்கிறார். இதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில், ஷோயப் மற்றும் அஃப்சல் எனும் இரண்டு பேர் தாமாக முன்வந்து தங்களும் யாஸ்மின் பானுவால் ஏமாற்றப்பட்டவர்கள் என்று புகார் அளித்துள்ளனர்[4].

yasmin-yasmin-20-09-2016ரியல் எஸ்டேட் அதிபர் அப்சலின் அனுபவம்: இந்த நிலையில் இம்ரானை பிரிந்து சென்ற யாஸ்மின் பல தொழிலதிபர்களை தனது வலையில் விழ வைத்து ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது[5]. இது தவிர எனக்கு அடுத்ததாக அப்சல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவரையும் மிரட்டி பணம் பெற்றவுடன் அவரை விட்டு பிரிந்து 3வதாக சையத் சோயப் என்பவரையும், 4வதாக ஈராஜ், 5வதாக ஆசிப், 6வதாக சோயப் என அடுத்தடுத்து 7 பேரை திருமணம் செய்துள்ளார். அவர்களிடமும் என்னை போன்று சில ஆதாரங்களை காட்டி மிரட்டி பணம் பெற்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இவ்வாறு கல்யாண ராணியாக பலபேரை ஏமாற்றி வரும் எனது மனைவியை கைது செய்ய வேண்டும் என அதில் கூறியுள்ளார்[6]. அபசலின் கதை இவ்வாறுள்ளது[7]. அப்சல் ரியல் எஸ்டேட் தொழுல் செய்து வருகிறார், ஒரு முறை யாஸ்மின் தன்னிடம் வேலை கேட்டு வந்தபோது, ரிசப்சனிஸ்ட் வேலை போட்டுக் கொடுத்தார். நாளடைவில், தானே, அவளிடம் மயங்கி திருமணம் செய்து கொண்டார். பிறகு தான் தெரிந்தது, அவள் ஏற்கெனவே திருமணம் ஆனவள், அதிலும் ஏமாற்றுகாரி போன்ற விசயங்கள் தெரிய வந்தன[8].

afsal-yasmin-20-09-20162007லிருந்து 2016 வரை ஒன்பது ஆண்டுகளில் ஏழு திருமணம்[9]: வருடத்திற்கு ஒரு ஆண் என்ற வீதத்தில் திட்டமிட்டு, ஒவ்வொரு ஆணாக திருமணம் செய்து கொண்டு ஏமாற்றியுள்ளது தெரிகிறது[10].

  1. இம்ரான்.
  2. அப்சல் பாஷா
  3. சையத் சோயப்
  4. ஈராஜ்.
  5. ஆசிப்.
  6. சோயப்.
  7. ……… [அடையாளம் தெரியவில்லை என்று சொல்லப்படுகிறது]

அவ்விதத்தில் – உடல்-மனம் ரீதியில் இருப்பதற்கு அப்பெண் தயாராக இருந்தது தெரிகிறது. இல்லையென்றால், அப்படி ஈடு கொடுத்து வாழ்ந்திருக்க மாட்டாள். மேலும், “தன்னை தொடர்ந்து அடித்து தாக்கி வருவதாக” இம்ரான் கூறியுள்ளதால், அந்த அளவுக்கு பலசாலியாக, தைரியசாலியாக, ஆண்களுக்கு ஈடுகொடுக்கும் நிலையில் உள்ளாள் என்றும் தெரிகிறது. இருப்பினும், இங்கும், எப்படி, ஓவொரு ஆண் திருமணம் செய்யும் போது, முந்தைய விவரங்களை அறியாமல், அறிந்து கொள்ளாமல் திருமணம் செய்து கொண்டார்கள் என்பது விசித்திரமாக இருக்கிறது. காஜியிடம் நீக்காஹ் நாமா பதிவு, தலாக் என்ற விவாகரத்து முதலியவை இல்லாமல். அவள் எப்படி திருமணம் செய்து கொண்டாள் என்பதும் வேடிக்கையாக இருக்கிறது. முஸ்லிம் ஆண்கள் அந்த அளவுக்கு ஏமாறும் ஆட்களா என்றும் திகைப்பாக இருக்கிறது. இப்பொழுது “லவ்-ஜிஹாத்” என்றெல்லாம் விவாதிக்கப் படுகிறது. பிறகு, இதனை எந்த வகையில் சேர்ப்பது? இது உள்ளுக்குள் நடக்கும் “லவ்-ஜிஹாத்” என்று கூறலாமா?

 bengaluru-woman-marriages

போலீஸ் விசாரணையில் பல ஆண்களை திருமணாம் செய்து கொண்டது தெரிய வந்தது: அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். போலீசார் விசாரணையில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கே. ஜி. ஹள்ளியை சேர்ந்த யாஸ்மின் பானுவுக்கும், சாராய் பாளையா பகுதியை சேர்ந்த இம்ரான் என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு 2007ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக யாஸ்மின் பானுவும், இம்ரானும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு 2014ல் பிரிந்து விட்டனர். அப்போது யாஸ்மின் பானு, இம்ரானிடம் இருந்து ரூ.10 லட்சம் ஜீவனாம்சமாக பெற்றுக் கொண்டார்.  இருப்பினும், அவ்வப்போது, போன் செய்து, இருவரும் இருக்கும் ஆபாசப்படங்கள் இருப்பதாகவும், கேட்டப் படத்தைக் கொடுக்கவில்லை என்றால், வெளியிடுவேன் என்றும் மிரட்ட ஆரம்பித்தாள். இதனால், பொறுமை இழந்த இம்ரான் போலீஸாரிடம் புகார் கொடுத்தார்.

© வேதபிரகாஷ்

24-09-2016

yasmin-banu-married-seven-men-20-09-2016

[1] தினத்தந்தி, பெங்களூருவில் 7 பேரை திருமணம் செய்து நகைபணத்தை திருடி சென்றார் கல்யாண ராணிக்கு போலீஸ் வலைவீச்சு, பதிவு செய்த நாள்: புதன், செப்டம்பர் 21,2016, 12:33 PM IST; மாற்றம் செய்த நாள்: புதன், செப்டம்பர் 21,2016, 12:33 PM IST

[2] http://www.dailythanthi.com/News/India/2016/09/21123333/In-Bangalore7-personsMarriedJewelrymoneyStealing-marriage.vpf

[3] சென்னை.ஆன்லைன், 8 ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய பெங்களூர் பெண் : போலீஸில் சிக்கினார், September 20, 2016, Chennai

[4] http://chennaionline.com/article/8-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D

[5] லைவ்டே, 7ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த கால்யாண ராணி..! 3 கணவர்கள் போலீசில் புகார்..!!, Sep 21, 2016 at 12:26 PM : By Liveday.

[6] http://liveday.in/general/7-marriage-woman-arrest/

[7] Deccan Herald, Woman held for marrying, cheating seven me,  Sep 20, 2016, DHNS

[8] http://www.deccanherald.com/content/571387/woman-held-marrying-cheating-seven.html

[9] தினகரன், எங்க பொண்டாட்டிக்கு 7 புருஷன்க சார்…’ போலீசில் 1, 2, 7 கணவர்கள் புகார், Date: 2016-09-21@ 01:05:26.

[10] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=247053

 

கோவையில் கூடா நட்பு, இன்னொரு ஒருதலை காதல், பள்ளி மாணவி தற்கொலையில் முடிந்துள்ளது!

செப்ரெம்பர்20, 2016

கோவையில் கூடா நட்பு, இன்னொரு ஒருதலை காதல், பள்ளி மாணவி தற்கொலையில் முடிந்துள்ளது!

 coimbatore-auto-driver-made-girl-student-commit-suicide-18-09-2016-dinathanthi

 மறுபடியும் கோவையில் பள்ளிமாணவி காதல், கலாட்டா, கொலை: தன்னை காதலிக்காவிட்டால் குடும்பத்தையே கொலை செய்துவிடுவேன் என்று ஆட்டோ டிரைவர் மிரட்டியதால் 10ம் வகுப்பு மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஒருதலைக்காதல் பலி நீடிப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவை புதுசித்தாபுதூர் அருகேயுள்ள ஜவகர் நகரை சேர்ந்தவர் ஶ்ரீதர், ஒரு ஒர்க்‌ஷாப் தொழிலாளி. இவரது மகள் அட்சயா (15). இவர், கோவையில் சாய்பாபா காலனியில் உள்ள அளகேசன் சாலையில் உள்ள ஒரு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்[1]. புது சித்தாபுதூரில் உள்ள அண்ணாநகரை சேர்ந்தவர் தேவராஜ் (வயது-55). இவருடைய மகன் பிரபு சாம்ராஜ் (வயது-22). இவர் அட்சயாவிடம் நட்பாக பழகியுள்ளார்[2]. அட்சயாவும் அவருடன் பேசியுள்ளதாக தெரிகிறது. பிறகு காதலித்தும் உள்ளது தெரிகிறது.  பள்ளியில் படிக்கும் போதே, இத்தகைய காதல்-கத்தரிக்காய் தான் விபரீதத்தில் முடிகிறது.

coimbatore-auto-driver-made-girl-student-commit-suicide-18-09-2016

திருமண ஆசை காட்டி அந்த மாணவியை கடத்திச்சென்றது (ஏப்ரல்.2016): இதற்கிடையே, கடந்த ஏப்ரல் மாதத்தில் அவர்கள் இருவரும் திடீரென்று மாயமானார்கள்[3]. இதுவே தவறான போக்கு மட்டுமல்ல, பிஞ்சியிலே பழுத்து, காதலுக்கும், காமத்திற்கும் இத்தியாசம் தெரியாமல் தறிகெட்ட நிலையும் தெரிகிறது. இதுகுறித்து அந்த மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பந்தையச் சாலை காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி, அவர்கள் இருவரையும் பிடித்தனர்[4]. அப்போது பிரபு சாம்ராஜ் திருமண ஆசை காட்டி அந்த மாணவியை கடத்திச்சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, இருவருக்கும், உளவியல் நிபுணர்கள் மூலம் ஆலோசனைகள் வழங்கப்பட்டது[5]. பின்னர், இருதரப்பு பெற்றோரும் பேசி பிரச்சினையை தீர்த்துக்கொள்கிறோம் என்று கூறியதை தொடர்ந்து போலீசார் பிரபு சாம்ராஜை எச்சரிக்கை செய்து அனுப்பிவைத்தனர்[6]. அந்த மாணவியும், பிரபு சாம்ராஜை இனிமேல் காதலிக்கமாட்டேன் என்றும், படிப்புதான் முக்கியம் என்பதால் தொடர்ந்து படிக்க உள்ளதாகவும் தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.

kovai-auto-driver-made-girl-student-commit-suicide-18-09-2016-dt-vp

மறுபடியும் காதல் தொல்லை, பேச்சு வார்த்தை, சமரசம்: ஆரம்பத்தில் கோட்டை விட்ட பெற்றோர் பிறகு, பின்னால் சென்று பெண்ணை பாதுகாத்துள்ளனர். அதைத் தொடர்ந்து அந்த மாணவி பள்ளிக்கு செல்லும்போதும், பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பும்போதும் மாணவியின் பெற்றோர் உடன் சென்று வந்தனர். எப்படி செய்வதை விட முன்னரே, பெண்ணுக்கு, எது நல்லது, எது கெட்டது என்று சொல்லிக் கொடுத்திருக்கலாம். இருந்தபோதிலும் அடிக்கடி பிரபு சாம்ராஜ், அந்த மாணவியிடம் சென்று தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறி அழுதார். இதையடுத்து இருதரப்பு பெற்றோரும் கூடி பேசினார்கள். அப்போது இனிமேல் எங்கள் மகன் உங்கள் மகளை தொந்தரவு செய்ய மாட்டார் என்று பிரபு சாம்ராஜின் பெற்றோர் உறுதியளித்ததை தொடர்ந்து மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் செய்யாமல் விட்டுவிட்டனர். அந்த மாணவியும் வழக்கம்போல பள்ளிக்கு சென்று படித்து வந்தார்.

kovai-auto-driver-made-girl-student-commit-suicide-18-09-2016-dt-vedaprakash

மறுபடியும் காதல் தொல்லை, கொலை மிரட்டல்: இந்நிலையில், மறுபடியும் பிரபு அவரை காதலிப்பதாக கூறியுள்ளார். இதை அட்சயா ஏற்கவில்லை. நான் படிக்கவேண்டும், காதலிக்க விருப்பமில்லை, இனி என்னுடன் பேசவேண்டாம், இனி நான் உங்களிடம் பேசமாட்டேன்,எனக்கூறி விட்டார். ஆனால், பிரபு அவரை விடுவதாக இல்லை. அட்சயா பள்ளிக்கு செல்லும்போது அடிக்கடி பின்தொடர்ந்து சென்று, பேச்சு கொடுத்து தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அட்சயா தனது தெரிவித்துள்ளார். பெற்றோர், பிரபுவை அழைத்து கண்டித்துள்ளனர். ஆனால், பிரபு இதைப்பற்றி கவலைப்படாமல், 18-09-2016 ஞாயிறு அன்று மற்றும் முன்தினம் பள்ளிக்கு சென்ற அட்சயாவை வழி மறித்து, “என்னை காதலிக்காவிட்டால் நிம்மதியாக வாழவிடமாட்டேன், என்னை ஏமாற்றினால் உன்னையும், உன் குடும்பத்தினரையும் கொலைசெய்து விடுவேன், நான் யாருக்கும் பயப்படமாட்டேன்,” என மிரட்டியுள்ளார்[7].  இதெல்லாமே, ராம்குமார் பாணியில் செல்வது போலுள்ளது. ஊடகங்களில் செய்திகள் வந்தாலும், நல்வழியில் செல்வதற்கு விரும்பாத இளைஞர்கள் உருவாகியிருப்பது கவலையளிப்பதாக உள்ளது.

coimbatore-auto-driver-made-girl-student-commit-suicide-18-09-2016-dt-vp

உடனடியாக தற்கொலை செய்து கொண்டதும் திகைப்பாக இருக்கிறது: “என்னை காதலிக்காவிட்டால் நிம்மதியாக வாழவிடமாட்டேன், என்னை ஏமாற்றினால் உன்னையும், உன் குடும்பத்தினரையும் கொலைசெய்து விடுவேன், நான் யாருக்கும் பயப்படமாட்டேன்,” என மிரட்டியதும்[8], மனம் உடைந்த அட்சயா, தனது வீட்டிற்கு சென்று, தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்[9] என்பதும் திகைப்பாக உள்ளது. கடைக்கு காய்கறி வாங்கச் சென்ற தங்கை, இறந்து கிடக்கும் அட்சயாவைப் பார்த்து கத்தியுள்ளாள்[10]. இதிலிருந்தே தந்தை-தாய் வீட்டில் இருப்பதில்லை என்பது தெரிகிறது. வந்து பார்த்த அண்டை வீட்டார், விசயம் அறிந்து போலீசாரிடம் புகார் கொடுத்தனர்[11]. இதையடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக ரேஸ்கோர்ஸ் போலீசார் இந்திய குற்றவியல் சட்டம் பிரிவு 306 – தற்கொலை செய்யத் தூண்டுதல் வழக்கு பதிந்து ஆட்டோ டிரைவர் பிரபுவை கைது செய்தனர்[12].  பின்னர் அவரை போலீசார் கோவை நான்காம் எண் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை நடுவன் சிறையில் அடைத்தனர். 19-09-2016, திங்கட்கிழமை கோயம்புத்தூர் மருத்துவமனை தடவியல் நிபுணர்கள் உடலை போஸ்ட்மார்ட்டம் செய்து சோதித்தனர். ஒருதலைக்காதல் பலி நீடிப்பது பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

girl-student-commit-suicide-18-09-2016-dt-vedaprakash

girl-student-commit-suicide-18-09-2016-dt-vedaprakash

  1. பெண்ணின் பெற்றோர் இருவரும் வீட்டில் இல்லாத நிலை.
  2. மாணவி பள்ளிக்குச் சென்று வரும் வேளையில் வலைவீசிய ஆட்டோ டிரைவர்.
  3. மாட்டிக் கொண்ட வயது கோளாறு 15-வயது மாணவி.
  4. மிரட்டி சாதிக்க நினைக்கும் வக்கிர மனிதன்.
  5. அளவு மீறிய உறவு, சாவில் முடிந்துள்ள நிலை.
  6. பெற்றோர் கவனம் இல்லையெனில், மகள்கள் சீரழியும் நிலை.
  7. காத்துக் கிடக்கும் காமக்கொலை வெறியர்கள்.
  8. மாறுவார்களா, மாற்றப்படுவார்களா, யார் மாற்றப் போகிறார்கள்?
  9. நல்ல வேளை, இதில் ஜாதி-மதம் பிரச்சினை இல்லை போலும்!
  10. இருப்பினும், போன உயிர், திரும்பியா வரும்???

© வேதபிரகாஷ்

20-09-2016

[1] தினமலர், காதல்டார்ச்சரில்மாணவி தற்கொலை, பதிவு செய்த நாள். செப்டம்பர்.9, 2016.

[2] http://www.dinamalar.com/news_detail.asp?id=1610325

[3] பெற்ேறாரிடம் நக்கீரன், காதல் தொல்லை; 10–ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை; ஆட்டோ ஓட்டுனர் கைது, பதிவு செய்த நாள் : 20, செப்டம்பர் 2016 (10:27 IST);மாற்றம் செய்த நாள் :20, செப்டம்பர் 2016 (10:34 IST)

[4] http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=173575

[5] தினத்தந்தி, கோவையில் பரிதாபம்: காதலிக்க வற்புறுத்தியதால் பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை; ஆட்டோ டிரைவர் கைது, பதிவு செய்த நாள்: செவ்வாய், செப்டம்பர் 20,2016, 1:45 AM IST; மாற்றம் செய்த நாள்: செவ்வாய், செப்டம்பர் 20,2016, 1:45 AM IST

[6] http://www.dailythanthi.com/News/State/2016/09/20014557/Coimbatore-awful-love-tukkuppottu-school-student-forced.vpf

[7] தினகரன், ஒருதலைக்காதலுக்கு அடுத்த பலி காதலிக்கும்படி மிரட்டல் மாணவி தற்கொலை, Date: 2016-09-20@ 00:21:06

[8] தினகரன், ஒருதலைக்காதலுக்கு அடுத்த பலி காதலிக்கும்படி மிரட்டல் மாணவி தற்கொலை, Date: 2016-09-20@ 00:21:06

[9] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=246690

[10] The Times of India, Tortured by stalker, teenage girl hangs herself at home, TNN | Sep 20, 2016, 08.33 AM IST.

[11] http://timesofindia.indiatimes.com/city/coimbatore/Tortured-by-stalker-teenage-girl-hangs-herself-at-home/articleshow/54419079.cms

[12] After the preliminary investigation, police arrested Prabhu and booked him under Section 306 (abetment of suicide) of the Indian Penal Code (IPC). Later, Prabhu was remanded in to judicial custody. The forensic experts of the Coimbatore Medical College and Hospital (CMCH) conducted postmortem on Monday afternoon.