Archive for the ‘பள்ளி மாணவிகள் மாயம்’ Category

மலாலா பிரித்தானியப் பள்ளிக்குச் செல்வது என்ன பிரமாதமான விஷயமா?

மார்ச்21, 2013
மலாலா பிரித்தானியப் பள்ளிக்குச் செல்வது என்ன பிரமாதமான விஷயமா?  மலாலா பிரித்தானியப்பள்ளிக்குச் செல்வது என்ன பிரமாதமான விஷயமா?: மலாலா மறுபடியும் பள்ளிக்க்குச் செல்ல ஆரம்பித்து விட்டாள், என்று ஆங்கிலேய ஊடகங்கள் ஓலமிட[1], அதனை இந்திய ஆங்கில ஊடகங்களே வடிக்கட்டி அமுக்கி வாசித்துள்ள போது, தமிழ் ஊடலங்கள் ஏதோ இந்த செய்தியையும் போடலாமே என்று போட்டிருக்கிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் “இன்டிபென்டென்ட்” என்ற ஆங்கிலேய நாளிதழில் வந்ததை அப்படியே “தி ஹிந்து” போட்டிருக்கிறது. ஆமாம், வழக்கம் போல ஏகப்பட்ட விஷயங்களை மறைத்திருக்கிறார்கள்.

மலாலா பிரிட்டன் பள்ளியில் சேர்ப்பு

தினமலர்  – ‎5 மணிநேரம் முன்பு‎
       

லண்டன்: தலிபான்களால் சுடப்பட்ட, பாகிஸ்தான் சிறுமி மலாலா, பிரிட்டனில் உள்ள பள்ளியில், தன் படிப்பை தொடர்கிறாள். பெண்கள் கல்வி உரிமை குறித்து இணையதளத்தில் எழுதியதால், …

மீண்டும் பள்ளிக்கு செல்லத் துவங்கினாள் தாலிபான்களால் …தினகரன்

பள்ளி சென்ற சிறுமி மலாலா

 தலிபான்கள் மட்டுமல்ல,  ஆங்கிலேயர்களும் பெண்களை பள்ளிக்கு அனுப்பாமல்தான் தடுத்திருக்கிறார்கள்: இதுதான் உண்மை. பெண்களை அடக்கி வைத்திருப்பதில், இஸ்லாம் மட்டுமல்ல கிருத்துவமும் பெருத்த பங்கு வகித்துள்ளது. ஆனால், இந்தியாவில் பள்ளிகள் மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வந்துள்ளது. அவற்றிலும் பெண்களும் படித்துள்ளார்கள். பள்ளிகள் மட்டுமல்ல, பல்கலைக்கழகங்களும் இருந்து வந்துள்ளன. தர்மபால் என்பவர், மிகவும் அற்புதமாக விவரங்களை “அழகான மரம்” என்ற தலைப்பில், இந்திய கல்வி பற்றி புத்தகத்தை எழுதியுள்ளார். ஆனால், இவர்கள் தாம், இந்தியர்களை குறைகூறி வருகிறார்கள். விஷயம் தெரியாத, சரித்திரம் அறியாத இக்கால மேனாட்டு அடிவருடிகளும், அப்பொய்யை உண்மையாக பேசி-எழுதி வருகின்றனர்.

 தலிபான்களால் ஏன் பெண்கள் படிப்புத் தடுக்கப் பட்டது?: தலிபான்களால் சுடப்பட்ட, பாகிஸ்தான் சிறுமி மலாலா, பிரிட்டனில் உள்ள பள்ளியில், தன் படிப்பை தொடர்கிறாள். மிகவும் அருமை, ஆனால், மற்ற சிறுமிகளின் கதி என்ன? அவர்களை யார் படிக்க வைப்பார்கள்? ஆப்கானிஸ்தானில் மட்டுமல்லாது, மற்ற இஸ்லாமிய நாடுகளில் ஏன் சிறுமிகள் இவ்வாறான நிலையில் இருக்க வேண்டும். “இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்றால், வட இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் ஏன்”, என்று பகுத்தறிவுவாதிகள் கேள்விகள் கேட்பது உண்டு. இஸ்லாம் பெண்களுக்கு மற்ர எல்லா மதங்களையும் விட மிக அதிகமாக சுதந்திரம், உரிமை எல்லாமே கொடுக்கிறது என்றால், ஏன் இப்படியான நிலை உருவாக்க வேண்டும்? பெண்கள் கல்வி உரிமை குறித்து இணையதளத்தில் எழுதியதால், கடந்த ஆண்டு, தலிபான்களால் சுடப்பட்ட, பாகிஸ்தான் பள்ளி மாணவி, மலாலா யூசுப், 15, சிகிச்சைக்காக, பிரிட்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். அங்கு, தலை மற்றும் முகத்தில் ஏற்பட்ட காயங்களுக்காக, அவருக்கு சிசிச்சையளிக்கப்பட்டது. உடல் நலம் தேறிய மலாலா, கடந்த மாதம் “டிஸ்சார்ஜ்’ ஆனாள். தற்போது, பிரிட்டனின், பர்மிங்ஹாம் நகரில் உள்ள “எட்க்பாஸ்டன்’ பெண்கள் உயர்நிலைப்பள்ளியில்[2]‘, சேர்க்கப்பட்டுள்ளாள்[3].

 மலாலா பெருமையாகச் சொல்லிக் கொண்டது[4]: “நான் மறுபடியும் பள்ளிக்கு செல்லவேண்டும் என்ற கனவு பூர்த்தியானது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். உலகிலுள்ள எல்லா சிறுமிகளும் இந்த அடிப்படை சந்தர்ப்பத்தை அடைய வேண்டும் என்று விரும்புகிறேன். மக்களின் நம்பிக்கையால், நான் இப்பொழுது நடக்க முடிகிறது – என்னால் இப்பொழுது ஓடவும் முடியும். பாகிஸ்தானில் உள்ள தோழிகளை பிரிந்தாலும், பிரிட்டனில் புதிய தோழிகள் கிடைப்பர் என நம்புகிறேன்,” என, அவர் தெரிவித்துள்ளாள். பிரிட்டனில் புதிய தோழிகள் கிடைக்கலாம், ஆனால், பாகிஸ்தானில் வாடும் தோழிகளையும் அவள் நினைவில் வைத்திருப்பாள் என்று நம்பலாம். பிரிட்டன் பள்ளியில், மலாலா கல்வியை தொடர்வது குறித்து, முன்னாள் பிரதமரும், ஐ.நா., கல்வி பிரிவின் தூதருமான, கார்டன் பிரவுன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்[5].

 இங்கிலாந்தில் பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்ட கதையே வேறுவிதமாக இருக்கிறது: 1876ல் துவங்கப்பட்ட இப்பள்ளிதான் பிர்மிங்ஹாமில் உள்ள பெண்களுக்கான பள்ளியாம்[6]. அப்படியென்றால், அதற்கு முன்பாக ஏன் சிறுமிகளுக்கு / பெண்களுக்கு தனியான பள்ளி இல்லை என்ற கேள்வி எழுகிறதே? ஆமாம், ஜூலை 1757ல் பள்ளி இயக்கம் ஆரம்பித்தபோது, சேரிகளில் இருந்த பைன்கள் தாம் படிக்க வந்தார்களாம். அதுவும் “ஞாயிற்றுக் கிழமைப் பள்ளி” என்பதில் பைபிள் தான் பாடப்புத்தகமாம். 19ம் நூற்றாண்டிற்கு முன்பு மிகக்குறைந்த பள்ளிக்கூடங்களே இங்கிலாந்தில் இருந்தனவாம். அதுவும் பெரும்பாலும் கிருத்துவமத போதனைப் பள்லிகளாக இருந்தனவாம். 1814ம் வருடம் தாம் அத்தகைய முறை குறைக்கப்பட்டது. 1931ல் கூட 12,50,000 பிள்ளைகள் “ஞாயிற்றுக் கிழமைப் பள்ளி”களில் படித்து வந்தனர். இவர்கள் ஜனத்தொகையில் 25% ஆகும், அதாவது 75% பிரித்தானியர்கள் படிப்பறிவு இல்லாதவர்களாக இருந்தனர்! 1820ல் தான் சாமுவேல் ஒயில்ட்ஸ்பின் என்பவர் சிறார்பள்ளியை முதலில் ஆரம்பித்தார். இதுதான் ஆங்கில பள்ளியின் முன்னோடி என்றும் சொல்லப்படுகிறது. 1833ல் பாராளுமன்றத்தில் நிதியுதிக்கீடு செய்யப்பட்டு, 1837ல் பொதுப்படிப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. 1848ல் முதல் “குவீன்ஸ் காலேஜ்” என்ற பெண்கள் கல்லூரி லண்டனில் ஆரம்பிக்கப்பட்டது.

© வேதபிரகாஷ்

21-03-2013


[3] The 15-year-old began her first day at Edgbaston High School in Birmingham yesterday –  the city’s oldest independent school for girls – where she will study the full curriculum before selecting her GCSE options next year.

[6] Founded in 1876, Edgbaston High School is Birmingham’s oldest independent school for girls.

http://www.edgbastonhigh.co.uk/about-ehs

 

காதலர்களுடன் வீட்டை விட்டு வெளியேறி இன்ப சுற்றுலா போய் சீரழிந்து நிற்கும் நெல்லை மாணவிகள்!

மார்ச்14, 2013

காதலர்களுடன் வீட்டை விட்டு வெளியேறி இன்ப சுற்றுலா போய் சீரழிந்து நிற்கும் நெல்லை மாணவிகள்!

சைவம், ஒழுக்கம், கட்டுப்பாடு, பாரம்பரியம்எங்கே?: திருநெல்வேலி என்றாலே சைவம், ஒழுக்கம், கட்டுப்பாடு, பாரம்பரியம் என்றேல்லாம் தான் நினைவிற்கு வரும். ஆனால், இன்றோ, அனைத்தும் போய், ஏதோ அமெரிக்காவில் நடக்கும் நிகழ்சிகளைப் போல நடப்பது, என்னவென்று சொல்லக்கூட முடியவில்லை. ஆனால், கிருத்துவர் மிஷினரிகள் 150 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு வந்து கலாச்சாரத்தை சீரழிக்க ஆரம்பித்த பொழுதே[1], சீரழிவுகள் ஆரம்பித்து விட்டன என்றுதான் தோன்றுகிறது. கால்டுவெல் நடத்திய வாழ்க்கையே இதற்குச் சான்றாக உள்ளது[2].

கிருத்துவமிஷினரிகளின்ஒழுக்கமின்மையின்தாக்கம்[3]:  சாணார்கள் என்ற நாடார்களின் மீது குறிவைத்து, ராபர்ட் கால்டுவெல் பாதிரி, தனது விஷத்தைக் கக்கிவிட்டுச் சென்றான்[4]. சாணர்களை இழிவு படுத்தி புத்தகம் எழுதி பிரிவினை ஏற்படுத்தினான். முன்னர், கள்ளர்களை ராமநாதபுரம் சேதுபதி அரசர்களுக்கு எதிராக மாற கிருத்துவ மிஷினரிகள் சதி செய்தன. குடும்பங்களைப் பிரித்தன. இப்படி ஆரம்பித்த சீரழிவு, தென் மாவட்டங்களில் பலவிதமாக வெளிப்பட்டன. முன்பு ஐரோப்பிய கிருத்துவர்கள் என்றால், இப்பொழுது, அமெரிக்கக் கிருத்துவர்களும் சேர்ந்து கொண்டுள்ளார்கள்[5]. கற்பழிப்படு டீ குடிப்பது போன்றது என்ற கொள்கைக் கொண்ட கம்யூனிஸ்டுகள் வழும் கேரளா வேறு மிக அருகில் உள்ளது. போப்பே வெட்கப்பட்டாலும்[6], போக கற்பு திரும்ப வராது!

கோக்கோ கோலா, பிட்ஸா, கென்டக்கி சிக்கன், குடி, கூத்து, இன சுற்றுலா: இன்றைய பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகளில் பார்புலாவே இப்படித்தான் இருக்கிறது. இதற்கு செல்போன், பேஸ்புக் முதலியவை இடையில் தூபம் போட்டுக் கொண்டிருக்கின்றன[7]. போதாகுறைக்கு, ஆபாசமான செக்ஸ் ஜோக்குகள், சினிமா தொகுப்புகள், வீடியோக்கள், சிடி-விற்பனை, புழக்கம் முதலியவை. பெற்றோர்கள் கஷ்டப்பட்டு, சம்பாதித்து, தங்களது மகள்-மகன்களை படிக்க வைத்தால், கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல், அவர்கள் இப்படி கெட்டு சீரழிகிறார்கள். பெரியவர்களுக்கு மதிப்பு, மரியாதை கொடுக்கக் கூடாது என்று ஊடகங்கள் மூலம், தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்யப்படுவது தான் இதற்கு காரணம். பெற்றோர்கள் கஷ்டப்பட்டு, சம்பாதித்து, படிக்க வைக்கின்றனர் என்றால், அது அவர்கள் கடமை, எங்களது லட்சியம் ஜாலியாக இருக்க வேண்டும், என்றுதான், சிலர் மற்றவர்களை கெடுக்கிறார்கள்.

திருநெல்வேலி மாவட்டத்தை சீரழிக்கும் கிருத்துவ மிஷினரிகள்: ஏற்கெனவே, கிருத்துவ மிஷினரிகள் அனாதை இல்லம், குழந்தைகள் காப்பகம் என்ற பெயரில், இளம் பெண்கள், சிறுமிகள் முதலியோரை வைத்து செக்ஸ்-டூரிஸம், விபச்சாரம் செய்து வந்தனர் என்று சிலர் சிக்கியுள்ளனர், பலர் சிக்காமல் இருக்கின்றனர். இவர்களுக்கும் கேரளாவில் உள்ளவர்களுக்கும் தொடர்புள்ளது. இந்நிலையில் தான் மாணவர்கள் ஆசை வார்த்தையில் மயங்கி மும்பை வரை சென்று 10 நாட்கள் கழித்து நெல்லை மாணவிகள் 4 பேரை போலீசார் பிடித்தனர். மாணவிகள் மும்பையில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுத்தப்பட்டார்களா என்பது குறித்து போலீசார் இவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு மருத்துவ பரிசோதனையும் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள் கற்பழிக்கப்பட்டுள்ளார்கள் என்ற செய்திகள் எல்லாம் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

 

படிக்கும் மாணவி எப்படி 50 பவுன்நகைகள்.டி.எம்.,கார்டு எடுத்துச் செல்கிறாள்?: படிக்கும் போது, படிப்பைத் தவிர்த்து எப்படி காதல், செக்ஸ் என்று அலைகின்றனர்? இதற்கு காரணம் என்ன? திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவி குஷ்பு 15. (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது தந்தை பாளை பெருமாள்புரம் அன்புநகரை சேர்ந்தவர் ஜெயமணி சென்னையில்  கிண்டியில் உள்ள சுகாதாரத்துறை அரசு பணிமனையில்  பணிபுரிந்து வருகிறார்[8].  நேற்று குஷ்புவை அவரது அண்ணன் பள்ளிக்கு பைக்கில் கூட்டிச் சென்று பள்ளியில் விட்டார்[9], பிறகு லலிதாவை காணவில்லை என்று தெரியவந்துள்ளது. பள்ளிக்கும் செல்லாமல், வீட்டிற்கும் திரும்பி வராமல்[10] என்று தெரியாமல் இருந்தது. தாய் வளர்ப்பில் உள்ள மாணவி, கடந்த மாதத்தில் ஒரு நாள் பள்ளியில் இருந்து வந்தவள், வீட்டின் பீரோவில் இருந்த 50 பவுன் நகைகள், பாங்க் ஏ.டி.எம்.கார்டு ஆகியவற்றை எடுத்துக்கொண்டு தலைமறைவாகி விட்டாள் என்று தெரியவந்துள்ளது. இரவோடு இரவாக அவளது தந்தை, நெல்லை வந்து, பெருமாள்புரம் போலீசில் புகார் செய்தார். ஏ.டி.எம்.கார்டை பயன்படுத்தி 25 ஆயிரம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டதை தெரிந்த பெற்றோர்கள் தமது மகள் விபரீதமாக எங்கோ சிக்கிக்கொண்டதை உணர்ந்தனர்.

மாணவர்கள்-மாணவிகளுக்கு காதல் செய்வது தான் வேலையா?: இன்று சினிமா தாக்கத்தினால், பள்ளி மாணவ-மாணவிகள் காதல் செய்வது, ஓட்டல்களுக்குச் செல்வது, சுற்றுலா போவர்து என்று ஆரம்பித்துள்ளனர். இதே மாதிரித்தான் இம்மாணவிகளும் செய்துள்ளனர். குஷ்பு பயிலும் அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்பில் பயிலும் அக்காள், தங்கையையும் காணவில்லை என தெரியவந்தது. அதே பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் ரம்யா 16, (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரையும் காணவில்லை என தெரியவந்தது. ஒரே பள்ளியில் பயிலும் நான்கு மாணவிகள், அதுவும் அனைவருமே 16 வயதுக்குட்பட்டவர்கள் காணாமல் போனதால் பள்ளி வட்டாரத்திலும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் ஒரு மாணவியின் தம்பியும், தனியார் டுட்டோரியலில் பிளஸ் டூ பயிலும் இரு மாணவர்களும் இந்த மாணவிகளுடன் வெளியூர் சென்றிருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

பல இடங்களுக்கு சென்றுள்ளது அவர்களின் வக்கிரபுத்தியைக் காட்டுகிறது: பணம்-நகைகளை எதுத்துக் கொண்டு, இஎத வயதிலேயே செக்ஸில் ஈடுபட வேண்டும் என்ற வக்கிரபுத்தியில் தன், இவர்கள் சென்றுள்னர் என்று தெரிகிறது. இல்லையென்றால், அவர்கள் “இந்த தூரத்திற்கு” சென்றிருக்க முடியாது. ஏ.டி.எம்.,கார்டு பயன்படுத்தப்பட்ட இடங்களை கொண்டு விசாரித்தபோது நான்கு மாணவிகள், மூன்று மாணவர்கள் மும்பையில் தங்கியிருப்பது தெரியவந்தது. பெருமாள்புரம் போலீஸ் தனிப்படையினர் மும்பை சென்றனர். அங்கு சென்று ஏழு பேரையும்  அடையாளம் கண்டுகொண்டு நெல்லைக்கு அழைத்துவந்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மாணவர்களின் தவறான வழிகாட்டுதலில் மாணவிகள் கடத்தப்பட்டிருந்தாலும் போலீசார் கடத்தல் வழக்கு பதிவு செய்யாமல் “காணாமல் போனதாக’ மிஸ்சிங் என வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

பாலியல்ரீதியாகபழக்கம் ?: இருப்பினும் மாணவிகள் பாலியல் பலத்காரத்தில் ஈடுபடுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது. எனவே மாணவிகளுக்கு நெல்லை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. மாணவிகளை அழைத்துச்சென்ற மாணவர்கள், அவர்களுடன் பாலியல் ரீதியாக பழகியிருந்தால் அவர்கள் மீது கடத்தல், கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்ய உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதனால் சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகளை வழக்குச் சிக்கலில் இருந்து காப்பாற்ற சிலர் முயற்சிக்கின்றனர்[11].

தமிழ்நாளிதழ்களின்வர்ணனைகள்: நெல்லையில் மாயமான பள்ளி மாணவிகள் 4 பேர் திருவனந்தபுரம், மும்பையில் ரவுடி கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. நெல்லையை சேர்ந்த 4 மாணவிகள் அங்குள்ள பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ் 1 படித்து வந்தனர். அவர்கள் 4 பேரும் கடந்த 23ஆம் தேதி பள்ளியில் சிறப்பு வகுப்பு உள்ளதாக கூறிவிட்டு சென்றனர். ஆனால் அவர்கள் மாலையில் வீடு திரும்பவில்லை. உறவினர் வீடு மற்றும் பல இடங்களில் தேடியும் மாணவிகள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பெருமாள்புரம் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரித்து வந்த நிலையில் காணாமல் போன மாணவிகளுடன் பிளஸ்1 படிக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு மாணவன்  மற்றும் டூட்டோரியலில் படிக்கும் 2 மாணவர்களும் உடன் சென்றது தெரியவந்தது. இவர்களில் ஒரு மாணவி வீட்டில் இருந்த 25 பவுன் நகை மற்றும் 40 ஆயிரத்தை எடுத்து சென்றார். இவர்கள் அனைவரும் கன்னியாகுமரி, திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து ரயிலில் மும்பை சென்றுள்ளனர். பின்னர் புனே சென்றனர். தகவல் அறிந்து தனிப்படை போலீசார் புனே சென்று அவர்களை மீட்டு, நெல்லை குற்றவியல் முதலாம் எண் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் ராமலிங்கம் மாணவ, மாணவிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய உத்தரவிட்டார். அதன்படி 4 மாணவிகள் மற்றும் மாணவர்களுக்கு நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை நடந்தது. இதில் 4 மாணவிகளும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

திருவனந்தபுரத்திலிருந்து மும்பைவரை – விவரமானவர்கள் தாம்!: திருவனந்தபுரத்திற்கு சென்ற மாணவ, மாணவிகள் அங்கு லாட்ஜ் எடுத்து தங்கியுள்ளனர். இதையறிந்த ரவுடி கும்பல் மாணவிகளை மிரட்டி அவர்களை பலாத்காரம் செய்துள்ளனர்[12]. பின்னர் அவர்கள் மும்பை சென்றபோது அங்கும் ஒரு கும்பல் அவர்களை பலாத்காரம் செய்துள்ளது[13]. இதற்கு அவர்களுடன் சென்ற மாணவர்கள் உடந்தையாக இருந்துள்ளனர்[14]. இதில் 2 மாணவிகள் தங்களுக்கு நடந்த கொடுமைகள் குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக லாட்ஜ் மேலாளரை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் புனேயில் உள்ள உறவினர் வீட்டுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. மாணவ, மாணவிகள் 7 பேரும் கோர்ட்டில் மீண்டும் ஆஜர்படுத்தப் படுகின்றனர். மாணவிகள் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிப்ரவரில் நடந்தது மார்ச்சிலும் நடக்கிறது: கடந்த மாதம் பிப்ரவரியில் கூட, இதே மாதிரி, ராஜேஸ் என்பவன் தூத்துக்க்குடியைச் சேர்ந்த 15 வயது பெண்ணை ஜாலியாக இருக்க காரில் கன்னியாக்குமரிக்கு அழைத்து சென்றான். போகும் வழியில், அவனது நண்பர்கள் என்று இருவர் ஏறிக்கொண்டனர். பிறகு, கன்னியாக்குமரி லாட்ஜில் தூக்கமருந்து கொடுத்து, மூவரும் கற்பழித்துள்ளனர். பிறகு, கேரளாவில் கொத்தார்கரா என்ற இடத்தில் விட்டுவிட்டு மறைந்து விட்டனர்[15]. உதாரணத்திற்கு இது கொடுக்கப்படுகிறது.

பிரியானி சாப்பிட விட்டை விட்டு ஓடிய மாணவிகள்[16].

காதலிக்கிறேன் என்று சொல்லி நண்பர்களுடன் போதை மருந்து கொடுத்து கற்பழித்த மாணவர்கள்[17].

மாணவியை ஆபாச வீடியோ எடுத்த மாணவர்கள்[18]. இப்படி தொடற்கின்றன.

வேதபிரகாஷ்

14-03-2013


[4] இதைப்பற்றிய விவரமாக இடுகைகளை இட்டுள்ளேன். அந்த ஆளை வைத்துக் கொண்டுதான், திமுக அரசியல் வியாபாரம் செய்து கொண்டுள்ளது.

http://dravidianatheism.wordpress.com/2010/01/30/house-of-caldwell-converted-to-memorial/

பக்ரீத் பண்டிகையை கொண்டாடுவதற்காக வீட்டிற்கு சொல்லாமல் மறைந்த மாணவியர்!

நவம்பர்18, 2010

பக்ரீத் பண்டிகையை கொண்டாடுவதற்காக வீட்டிற்கு சொல்லாமல் மறைந்த மாணவியர்:

பக்ரீத் பண்டிகையை கொண்டாடுவதற்காக வீட்டிற்கு சொல்லாமல் மறைந்த மாணவியர்: இந்த காலத்தில் சினிமா, சின்னத்திரை என்றேல்லாம் பார்த்துவிட்டு, மாணவிகள் எடுத்ததற்கு எல்லாம் பார்ட்டிக் கொடு என்று ஆரம்பித்து விடுகின்றனர். இதுபோலத்தான், விஜயா, தேவி, ஜீவிதா பேகம் என்ற மூன்று மாணவியரும் நண்பர்கள். 17-11-2010 அன்று பக்ரீத் பண்டிகை உள்ளதால், அதனை கொண்டாட வேண்டும் என்று தீர்மானித்ததாகத் தெரிகிறது. ஜீவிதா பேகம் தன்னுடைய சித்தியின் வீட்டிற்கு சென்று ஜாலியாக கொண்டாடலாம் என்று சொன்னாள் போலிருக்கிறது. 16-11-2010 அன்று பரீட்சை எழுதி முடித்தனர். பிறகு திட்டமிட்டபடியே மூவரும் பக்ரீத் பண்டிகையை கொண்டாடுவதற்காக வீட்டில் சொல்லிக்கொள்ளாமலேயே திருவல்லிக்கேணிக்குச் சென்றனர். அங்கு ஜீவிதா பேகத்தின் சித்தி வீடு உள்ளது. ஆனால், வீட்டிற்கு சொல்லாமல் வந்ததால், மாணவியரை வீட்டில் அனுமதிக்க ஜீவிதா பேகத்தின் சித்தி மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

திருவல்லிக்கேணியிலிருந்து திருவள்ளூருக்குச் சென்றது: ஜீவிதா பேகத்தின் சித்தி மாணவியரை விரட்டியடிப்பதற்கு பதிலாக, பக்குவமாக சொல்லி அவர்களது வீடுகளுக்குச் செல்லுமாறு பணித்திருக்கலாம். இல்லை ராத்திரிக்கு அங்கேயே இருக்கச் சொல்லி, அடுத்த நாள் பெற்றொர்களுக்கு அறிவித்து, அனுப்பி வைத்திருக்கலாம். இதனால், என்ன செய்வது என்று திகைத்தவர்கள், அருகில் உள்ள தொலைபேசியில் திருவள்ளூரில் உள்ள தோழி ஒருவளுக்கு போன் செய்து தெரிவித்தபோது, எங்கள் வீட்டில் வேண்டுமானால், வந்து தங்கிக் கொள்ளலாம் என்று சொன்னதால் அவள் வீட்டிற்கு மாணவியர் மூவரும் சென்றனர்.

மாணவியர் காணாததால் போலீஸிடம் பெற்றோர் புகார்; இதற்கிடையே காலை பள்ளிக்கு சென்ற மாணவியர் இரவு வரை வீடு திரும்பாததால், அதிர்ச்சியடைந்த பெற்றோர், இதுகுறித்து குரோம்பேட்டை போலீசில் புகார் கொடுத்தனர். ஒரு பெண்ணின் தாத்தா ராத்திரி முழுவதும் போலீஸ் ஸ்டேஷனிலேயே கதியென்று உட்கார்ந்திருந்தார்.

போலீஸ் விசாரணை: இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் நடத்திய விசாரணையில், மாணவியர் திருவள்ளூர் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் திருவள்ளூர் சென்று மூன்று மாணவியரையும் பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதே மாதிரி சென்ற மாதம், நான்கு மாணவிகள் ஓடிப்போயுள்ளனர்.

மாயமான மூன்று மாணவியர் மீட்பு[1]: குரோம்பேட்டை, அன்னை இந்திரா நகரைச் சேர்ந்தவர் விஜயா (14), தேவி (14). அதே பகுதி, தண்டுமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜீவிதா பேகம் (14) (பெயர்கள் மாற்றப்பட் டுள்ளன). இவர்கள் மூவரும் குரோம்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் பள்ளியில் இடைபருவத் தேர்வை முடித்த மூவரும், சென்னை ஜீவிதா பேகத்தின் சித்தி வீட்டிற்கு பக்ரீத் பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்றனர். வீட்டிற்கு சொல்லாமல் வந்ததால், மாணவியரை வீட்டில் அனுமதிக்க ஜீவிதா பேகத்தின் சித்தி மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, திருவள்ளூரில் உள்ள தோழி வீட்டிற்கு மாணவியர் மூவரும் சென்றனர்.

சென்ற மாதம் மேட்டூரில் காணாமல் போன நான்கு மாணவிகள்: மேட்டூரில் செயின்ட்மேரீஸ் பெண்கள் மேல்நிலைபள்ளி உள்ளது. பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும்  காயத்ரி (13), சுபலட்சுமி (13), பியூலா ஜெனிபர் (13) ஆகிய மூன்று மாணவியரும் கடந்த 8ம் தேதி பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பவில்லை. அதே பள்ளியில் படிக்கும் ப்ளஸ் 2 மாணவி ஜோதி (17) கடந்த 10ம்  தேதி பள்ளி ஹாஸ்டலில் இருந்து மாயமாகி விட்டார். அடுத்தடுத்து நான்கு மாணவியர் மாயமானதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் நேற்று முன்தினம் செயின்ட்மேரீஸ் பள்ளியை முற்றுகையிட்டனர். மேட்டூர் போலீஸார் மாயமான மாணவியரை வலைவீசி தேடி வந்தனர். எட்டாம் வகுப்பு மாணவியர் மூவரும் வேளாங்கண்ணியில் மீட்கப்பட்டனர். ப்ளஸ் 2 மாணவி ஜோதி, ஈரோடு மாவட்டம், சின்னபள்ளத்தில் உள்ள ஹாஸ்டலில் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து நேற்று காலை மேட்டூர் போலீஸார் சின்னபள்ளம் சென்று மாணவி ஜோதியை மீட்டு வந்தனர்.

பாடத்தில் பெயில் என்று ஓடி மறைந்த மாணவிகள்: விசாரணையில், மாணவி காயத்ரி காலாண்டு தேர்வில் நான்கு பாடத்திலும், மற்ற இரு மாணவியர் தலா ஒரு பாடத்திலும் பெயில் ஆகியுள்ளனர். அதனால், ஆசிரியர்கள், பெற்றோர் திட்டியதால் விரக்தியடைந்த மாணவியர் சேலம் சென்று, அங்கிருந்து வேளாங்கண்ணி கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு ஸ்கூல் பேக்குகளை தனியாக ஒரு இடத்தில் வைத்து விட்டு சர்ச் வளாகத்தில் மூன்று மாணவியரும் தூங்கியுள்ளனர். மூன்று ஸ்கூல் பேக் மட்டும் தனியாக இருப்பதை கண்டு சந்தேகம் அடைந்த போலீஸார், பேக்கை சோதனை செய்தபோது, அதில் பள்ளி அடையாள அட்டை மற்றும் ஃபோன் நம்பர் இருந்துள்ளது. ஃபோன் நம்பரை தொடர்பு கொண்டு போலீஸார் பேசிய பின்னர் தான் மூன்று மாணவியரும் வேளாங்கண்ணியில் இருப்பது மேட்டூர் போலீஸாருக்கு தெரியவந்தது. நேற்று காலை மூன்று மாணவியரையும் மேட்டூர் அழைத்து வந்த போலீஸார், அறிவுரை கூறி பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

ஹாஸ்டலில் தங்கி படிக்க விருப்பம் இல்லை என்ரு ஓடி மறைந்த மாணவி: மாயமான ப்ளஸ் 2 மாணவி ஜோதி ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை ஈரோடு மாவட்டம், சின்னபள்ளத்தில் உள்ள பள்ளி ஹாஸ்டலில் தங்கி படித்துள்ளார். அதன் பின் மேட்டூர் செயின்ட்மேரீஸ் பள்ளியில் மாணவி சேர்க்கப்பட்டுள்ளார். ஜோதிக்கு ஹாஸ்டலில் தங்கி படிக்க விருப்பம் இல்லை. வீட்டில் இருந்து தினமும் பள்ளிக்கு செல்வாக பெற்றோரிடம் கூறியுள்ளார். ஆனால், பெற்றோர் அதை ஏற்று கொள்ளாமல் திட்டியுள்ளனர். முன்கோபம் அதிகமுள்ள மாணவி ஜோதியும் மற்ற மாணவர்களும் அதிகம் பேசுவதில்லை. யாருடனும் கலகலப்பாக பேசாத ஜோதி, தனக்கு தானே அறிவுரை கூறுவது போலவும், விரக்தியிலும் நோட், புக்கில் ஏராளமான கவிதைகளை எழுதியுள்ளார். பெற்றோர் அரவணைப்பும் இல்லாமல், ஹாஸ்டல் மாணவியருடன் சகஜமாக பேச முடியாத மாணவி ஜோதி, கடந்த 10ம் தேதி ஹாஸ்டலை விட்டு மாயமாகி விட்டார். “பெற்றோர் தன்னை திட்டுவதால் அவர்களுடன் செல்ல மாட்டேன்’ என, ஜோதி பிடிவாதம் செய்ததால் கவுன்சிலிங் கொடுக்க போலீஸார் முடிவு செய்துள்ளார்.

.மாயமான மேட்டூர் பள்ளி மாணவியர் 4 பேர் மீட்பு[2]: மேட்டூர் செயின்ட் மேரீஸ் பள்ளியில் இருந்து அடுத்தடுத்து மாயமான நான்கு மாணவியரையும்  நேற்று போலீஸார் மீட்டனர். பள்ளியில் இருந்து மாயமான நான்கு மாணவியரும் நேற்று ஒரே நாளில் போலீஸாரால் மீட்கப்பட்டதால் பெற்றோர் மகிழ்ச்சியடைந்தனர்.

பெற்றோர்கள், மாணவிகள் செய்யவேண்டியது என்ன? இப்படி மாணவியர் இளம் வயதில் பொறுப்பில்லாமல் சிறிய-சிறிய விஷயங்களுக்கு எல்லாம், விட்டைவிட்டு ஓடிப்போய் விடுவது முதலிய காரியங்களைக் கவனிக்கும் போது, அவர்களுக்கு அளவிற்கு அதிகமாக பெற்றொர்கள் செல்லம் கொடுக்கிறார்கள் அல்லது கவனிக்காமலேயே இருந்து வருகிறார்கள் என்ற நிலை வெளிப்படுகிறது. மேலும், அவர்களுக்கு பணம் கொடுப்பதும் தெரிகிறது. அதனால், தைரியமாக, ஒரு இடத்திலிருந்து வேறு இடத்திற்கு செல்கின்றனர். பெற்றோர்களுக்கு அடங்காமல் இருப்பது, சொல்லிக் கொள்ளாமல் வீட்டைவிட்டுச் செல்வது போன்ற காரியங்கள் பெண்களுக்கு நல்லதல்ல. மேலும் படிக்கும் வயதிலேயே, இத்தகைய மனப்பாங்கு வருவது சமூகப்பிறழ்ச்சிகைக் காட்டுகிறது. பெற்றோர்கள் தங்களது பெண்களை மிகவும் ஜாக்கிரதையாக கவனிக்கவேண்டும் என்ற நிலையும் வெளிப்படுகிறது.

வேதபிரகாஷ்

© 18-11-2010


[1] தினமலர், மாயமான மூன்று மாணவியர் மீட்பு, நவம்பர் 18, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=128899

[2] தினமலர், மாயமான மேட்டூர் பள்ளி மாணவியர் 4 பேர் மீட்பு, அக்டோபர் 13, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=105724