Archive for the ‘கீதா லூத்ரா’ Category

தருண் தேஜ்பால் மகள், நண்பர்கள் இவர்களிடையே விசாரணை – சோமாவுடன் சனிக்கிழமை விசாரணை (30-11-2013 முதல் 06-12-2013 வரை)!

திசெம்பர்7, 2013

தருண் தேஜ்பால் மகள், நண்பர்கள் இவர்களிடையே விசாரணை – சோமாவுடன் சனிக்கிழமை விசாரணை (30-11-2013 முதல் 06-12-2013 வரை)!

டெல்லியைச் சேர்ந்த தெகல்கா செய்தி நிறுவன தலைவர் தருண் தேஜ்பால் மீது, அங்கு பணியாற்றும் பெண் நிருபர் பாலியல் புகார் செய்தார். கடந்த மாதம் நவம்பர் 7-8, 2013 தேதிகளில் கோவாவில் தெஹெல்கா இதழ் நிகழ்ச்சி ஒன்று நட்சத்திர விடுதியில் நடந்தது. அப்போது, விடுதியில் இருந்த லிஃப்டுக்குள் தேஜ்பால் பெண் நிருபரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார் என்பது அவர் மீதான புகார். இதையடுத்து தருண் தேஜ்பால் மீது கோவா போலீசார் பாலியல் பலாத்காரம், மானபங்கம் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தினர்.  பின்னர் அவர், 6 நாள் போலீஸ் காவலில் ஒப்படைக்கப்பட்டு விசாரணையை சந்தித்து வருகிறார். அவர் இரண்டு முறை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். துணை மாவட்ட கண்காணிப்பு போலீஸ் அதிகாரி தலைமையில் நடைபெற்று வரும் இந்த விசாரணை முழுமையாக பதிவு செய்யப்பட்டு வருகிறது.  இனி இவ்வார நிகழ்வுகளைப் பார்ப்போம்.

02-12-2013 (திங்கட்கிழமை): தருண் தேஜ்பால் கோவா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஆண்வீரிய பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டார். வீரியத்தன்மை உள்ளது என்று சோதனை முடிவில் உறுதியானது. மதியம், கோவா மனோதத்துவம் மற்றும் மனித குணாதசியவியல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பரீட்சைக்கு உட்படுத்தப் பட்டார்.

03-12-2013 (செவ்வாய் கிழமை): மறுபடியும் ஆண்மை பரிசோதனை செய்யப்பட்டது. தேஜ்பால் தனக்கு செல்போன், மின்விசிறி எல்லாம் வேண்டும் என்று கேட்க ஆரம்பித்தார். ஆனால், உணவு, உடை மட்டும் குடும்பத்தாரிடமிருந்து அவருக்கு அனுப்ப அனுமதி கொடுக்கப்பட்டது. கோவாவில் இவர்களுக்கு பங்களா உள்ளது என்று முன்னமே குறிப்பிடப்பட்டது.

04-12-2013 (புதன்கிழமை): ஏற்கனவே 2 முறை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட தேஜ்பாலுக்கு இன்று 3-வது முறையாக மருத்துவப் பரிசோதனை நடைபெறுகிறது.   முன்னர் தன்னுடைய லாக்கப் ரூமில் மின்விசிறி பொறுத்தப்படவேண்டும் என்ற தருண் தேஜ்பாலின் கோரிக்கையை இவர் நிராகரித்தார்[1]. இதுகுறித்து கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் இன்று டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது[2]: “தருண் தேஜ்பால் மீதான வழக்கு விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றப்படும். உச்ச நீதிமன்ற அறிவுறுத்தல்படி இந்த வழக்கானது பெண் நீதிபதி தலைமையில் விசாரிக்கப்படும்.  பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு விரைவில் நீதி கிடைக்கும். தேஜ்பால் தனது செல்வாக்கை வைத்து எந்த தவறான நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடும் என்று யாரும் கவலைப்பட தேவையில்லை. தேஜ்பாலின் முந்தைய நடவடிக்கையை கருத்தில் கொண்டு, அவர் மோசமாகவோ அல்லது வித்தியாசமான முறையிலோ நடத்தப்படுவார் என்று யாரும் கவலைப்படத் தேவையில்லை ”, இவ்வாறு அவர் கூறினார்[3]. பாரதிய ஜனதாவின் முன்னாள் தலைவராக பங்காரு லக்‌ஷ்மணன் இருந்தபோது, பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தத்திற்காக வெளிப்படையாக பணம் வாங்கும் காட்சிகளை மறைமுகமாக பதிவு செய்து வெளியிட்டு, முன்பு தருண் தேஜ்பால் ஹீரோவாக வலம் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது[4].

05-12-2013 (வியாழக்கிழமை): குற்றஞ்சாட்டிய பெண்ணின் மூன்று ஊடக நண்பர்கள் கோவா வந்தடைந்தனர். இவர்கள் தெஹல்காவில் வேலைப் பார்ப்பவர்கள். தேஜ்பாலின் மீது செக்ஸ் / கற்பழிப்பு முயற்சி விசயம் குறித்து முதல் பகுதி பதிவை இங்கே பார்க்கவும்[5]. பாதிக்கப்பட்ட பெண்ணின் இ-மெயில் கொடுக்கப்பட்டுள்ள விவகாரங்களைத் தெரிந்து கொள்ள இங்கே படிக்கவும்[6]. சோமா தொடர்ந்து தேஜ்பாலை மறைத்து, ஆதரித்து வருவது பற்றிய விவரங்களை இங்கே படிக்கவும்[7]. எப்.ஐ.ஆர் போடப்பட்டவுடன், சோமாவின் நிலைமாறியது, தேஜ்பால் தன்னை மாட்டப்பார்க்கிறார்கள் என்று கூறியது பற்றிய விவரங்களை இங்கே படிக்கவும்[8]. சோமாவிடமும் விசாரணை நடந்தது[9]. அரசியல் சம்பந்தப்பட்டுள்ள விவரங்களை இங்கே படிக்கவும்[10]. திங்கட்கிழமை, 30-11-2013 அன்று ஒருவழியாக கைது செய்யப்பட்டார்[11].

06-12-2013 (வெள்ளிக்கிழமை): தான் கற்பழிக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டிய பெண்ணின் மூன்று ஊடக நண்பர்கள் பனாஜியில் மேஜிஸ்ட்ரேட் – க்ஷமா ஜோஷி [Judicial Magistrate First Class Kshama Joshi ] முன்பாக தனித்தனியாக 11 மணியளவில் ஆஜராகினர். அவர்களிடமிருந்து தன்னிலை விளக்க பிரமாணங்கள் [statements] எழுதி வாங்கிக் கொள்ளப்பட்டன. சனிக்கிழமை சோமா சௌத்ரி வந்து  ஆஜராவார்[12].

பரஸ்பரம்சம்மதத்துடன்தான்நடந்தது[13]: தருண்தேஜ்பால்‘-போலீஸிடம்வாக்குமூலம்: இதனிடையே போலீஸ் காவலில் இருக்கும் தேஜ்பாலிடம், காவல்துறை துணை கண்காணிப்பாளர் சம்மி டவரஸ் முன்னிலையில் விசாரணை அதிகாரி சுனிதா சவந்த் தலைமையிலான குழுவினர் வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர். அப்போது, பெண் நிருபரை தாம் பாலியல் பலாத்காரம் செய்யவில்லை என்றும், அவரது சம்மதத்துடனே அனைத்தும் நடைபெற்றதென்றும் தேஜ்பால் தெரிவித்துள்ளார். அதாவது, இத்தனை நாகரிகம் மிக்கவர், மெத்தப் படித்தவர், அரசியல் ஆதரவு பெற்றவர், ஒரு மிருகத்தைப் போல லிப்டில் செக்ஸ் செய்வார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறது. பெண் நிருபர் மற்றும் தெஹல்கா முன்னாள் நிர்வாக ஆசிரியர் ஷோமா சௌத்ரி ஆகியோருக்கு தாம் மின்னஞ்சல்கள் அனுப்பியதையும் தேஜ்பால் போலீஸிடம் ஒப்புக்கொண்டுள்ளார்[14]. ஆனால், தேஜ்பால் வாக்குமூலம் குறித்து அவரது வழக்குரைஞரை தொடர்பு கொண்டு கேட்டபோது, அதற்கு பதில் அளிக்க அவர் மறுத்து விட்டார். இவ்விவகாரம் தொடர்பாக தேஜ்பாலின் மகளிடம் கோவா போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்[15]. தருண் தேஜ்பால் மகள் தியாவிடம் டோனா பவ்லா அருகே 2 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிகிறது. பாதிக்கப்பட்ட பெண் தேஜ்பால் குறித்து அவரது மகளுக்கு தகவல்கள் கொடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் குற்றச்சாட்டுகளை உறுதி படுத்த அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஊடக ஒத்துழைப்புகள் – பாலியல் தொல்லைகளுக்கா, கற்பழிப்பிற்கா?: சையத் நக்வி[16]இதெல்லாம் முக்கோண சகஜமான விசயங்களாக உருவெடுத்து வருகின்றன. தருணின் மனைவி மற்றும் மகள் மிக்க மனப்போராட்டங்களில், பாதிப்பில் இருப்பர். பதிக்கப்பட்டப் பெண்ணோ, என்ன தன்னுடையபாய் பிரென்ட்இப்படி செய்து விட்டானே என்று நினைக்கலாம். மனிதக்கதையின் உண்மை இத்தகைய எல்லைகளில் தான் கட்டுப்படுகின்றன”, என்று 07-12-2013 அன்று எழுதுகின்றார்[17].  என்னத்தான் கதையளந்தாலும், தான் ஒரு முஸ்லிம் என்பதைக் காட்டிக் கொள்ள, “தருண், ஊடகங்கள் ரேப்பின் மீதுதான் கவனம் செல்லுத்துகின்றன, ஆனால், அவை முசபர்நகர் மீதும் கவனத்தைத் திருப்ப வேண்டும்” [I messaged Tarun: A media so focused on rape, should be directed to Muzaffarnagar[18]]. முசபர்நகர் பிரச்சினையே முஸ்லிம் இளைஞர்கள், ஒரு இந்து பெண்ணை பாலியல் ரீதியில் தொடர்ந்து தொல்லை செய்து வந்து, அவளது சகோதரன் தட்டிக் கேல்கச் சென்றதால் தானே, பிறகு கலவரமாக மாறியது. இது பெரிய மனிதர்களின் செக்ஸ் விளையாட்டுகள் என்பதால், சில ஊடகங்கள் மறைமுகமாக வக்காலத்து வாங்குகின்றன[19].

வேதபிரகாஷ்

© 06-12-2013


[1] Meanwhile, Judicial Magistrate First Class Kshama Joshi rejected Tejpal’s application for a fan in the lock-up where he is in police custody since Saturday. On December 2, Tejpal’s lawyer had petitioned the court for a fan to be installed in the lock up on humanitarian grounds.

http://ibnlive.in.com/news/tejpal-sexual-assault-case-goa-police-records-statements-of-3-tehelka-journalists/438076-3-253.html

[3] மாலை மலர், தேஜ்பால்மீதானபாலியல்வழக்குவிரைவுநீதிமன்றத்தில்விசாரிக்கப்படும்: கோவாமுதல்வர், பதிவு செய்த நாள் : வியாழக்கிழமை, டிசம்பர் 05, 6:37 PM IST

[12] All the three witnesses, who had arrived in Goa on Thursday, came to the court at 11 AM on Friday. “All the three deposed separately before of the magistrate. Their statement was being recorded the entire day,” a senior crime branch officer told PTI. Meanwhile, Tehelka managing editor Shoma Chaudhury’s statement would be recorded by the magistrate on Saturday.

http://www.ndtv.com/article/india/tehelka-case-victim-s-three-colleagues-depose-before-court-455543

[16] 06.12.2013 – A senior commentator on political and diplomatic affairs, Saeed Naqvi can be reached at saeed.naqvi@hotmail.com, The views expressed are persona

[17] In such stories, a routine triangle emerges. There was, for instance, Tarun’s wife and family in a state of trauma. In the young lady’s case there is apparently a boyfriend in the bargain. The truth of any human story will always be conditioned by these extraneous factors.

http://www.firstpost.com/fwire/why-is-rape-in-goa-different-from-rape-in-muzaffarnagar-comment-special-to-ians-1272131.html

[18] I messaged Tarun: A media so focused on rape, should be directed to Muzaffarnagar. Why is rape in Goa different from rape in Muzaffarnagar? (Comment, Special to IANS) by F wire Dec 7, 2013, http://www.firstpost.com/fwire/why-is-rape-in-goa-different-from-rape-in-muzaffarnagar-comment-special-to-ians-1272131.html

கற்பழிப்பு வழக்கில் தருண் தேஜ்பால் கைது, ஜாமீன் மறுக்கப்பட்டது!

நவம்பர்30, 2013

கற்பழிப்பு வழக்கில் தருண் தேஜ்பால் கைது, ஜாமீன் மறுக்கப்பட்டது!

Tarun Tejpal, founder and editor-in-chief of Tehelka, speaks with the media at the airport on his way to Goa, in New Delhi -Reuters

30-11-2013 காலை 10 மணிக்கு கோவாவிற்கு குடும்பம் சகிதம் வந்து அதிரடியாக வீரநடை போட்டு வலம் வந்தார் தருண் தேஜ்பால்.

Tarun Tejpal being taken for medical tests after his arrest, in Panaji on Saturday night 30-11-2013

தேஜ்பாலின் வழக்கறிஞர் கீதா லூத்ரா [Geeta Luthra] வாதங்களை அரசு தரப்பு வக்கீல் லோட்லிகர் [public prosecutor Lotlikar] மறுத்து ஆதாரங்களை வைத்து வாதிட்டனர்[1].

tejpal-in-airport-2

11.30க்கு வீடியோ முதலிய ஆதாரங்களும் காட்டப்பட்டன.

Tejpal-in-airport-delhi

தேஜ்பாலின் வழக்கறிஞர் கீதா லூத்ரா புலன் விசாரணை பாரபசமானது, உள்நோக்கமுள்ளது என்றெல்லாம் குறைகூறியபோது, அரசு தரப்பு வக்கீல் லோட்லிகர்,

  • எப்படி எப்.ஐ.ஆர் சரியாக பதிவு செய்யப்பட்டுள்ளது,
  • நிறைய கால அவகாசம் கொடுக்கப்பட்டது,
  • போலீசார் தில்லிக்குச் சென்றபோது காணாமல் இருந்தது,
  • சொந்தக்காரர்கள் விசாரணைக்கு மறுத்து தகவல் சொல்லாமல் மறைத்தது,
  • தில்லி கோர்ட்டில் மனு போட்டு, பிறகு வாபஸ் வாங்கியது
  • கோவாவிற்கே காலந்தாழ்த்தி வந்தது

முதலியவற்றை எடுத்துக் காட்டி, எப்படி  காலந்தாழ்த்தி சதாய்த்தனர் என்று விளக்கினார்[2].

tejpal-in-flight-3

2.30 மதியம் நீதிபதி வழக்கில் சமர்ப்பிக்கப் பட்ட ஆதாரங்கள், வாதங்கள் முதலியவற்றை கவனமாக சோதனைக்குட்படுத்தினார்.

Tarun_Tejpal_with_wife_at_airport_650

4.30க்கு தீர்ர்பு வழங்கப்படும் என்றார்கள், ஆனால், தீர்ப்பு வெளியாகவில்லை.

Tejpal Lift sex cartoon

ஊடகங்கள் இவற்றையேக் காட்டி வந்தன, ஆனால், பிறகு அவற்றிற்கே அலுத்து விட்டது போலும், மோடிக்குத் திரும்பிவிட்டன.

Tarunpal elevator sex123

மாலை வரை தீர்ப்பு வெளியாகாததால், ஒன்றுமே தஎரியாதது போல, தேவையற்ற செய்திகள், விவாதங்கள், உரையாடல்கள் என்று நேரத்தை விரயமாக்கிக் கொண்டிருந்தன.

Tarunpal elevator sex11111

சுமார் 8.05 மணியளவில் நீதிபதி பைல் மனுவை நிராகரித்தார்.

சனிக்கிழமை இரவு ஜாமீன் மறுக்கப்பட்டது அடுத்து தருண் தேஜ்பால் 9.20 அளவில் கைது செய்யப்பட்டார்.

Women are far,far more interestimng than men-Tarun Tejpal-4

10.20க்கு கைதிற்குப் பிறகு கோவா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்[3].

கைது செய்யப்பட்ட சில நிமிடங்களில் தேஜ்பாலின் சகோதரர் மின்டி கிரைம் பேஞ்சிற்கு வெளியே மயங்கி விழுந்தாராம்[4].

Tarun Tejpal with Rita Bhimani

தேஜ்பால் குடும்பம் அவர் கைது செய்யப்பட்டால் தங்களது குடும்ப மானமே போய்விடும் என்று கூட வாதிட்டார்களாம்[5]. அதற்கு, “உங்களது அவர் கைது செய்யப்பட்டால் தங்களது குடும்ப மானமே போய்விடும் என்ற வாதம் செல்லுபடியாகாது, ஏனெனில் அது ஏற்கெனவே வெளியில் வந்து விட்டது. அதனால், அவர் கைது செய்யப்படுவதால் மேலும் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது”, என்று விளக்கம் அளிக்கப்பட்டதாம்!

Tarun Tejpal attending Rara Avis party in Delhi-Sashi Taroor also attended

வேதபிரகாஷ்

© 01-12-2013