Archive for the ‘பிலிப்’ Category

ஜோசப், பிலிப் ஜோசப், திலிப் ஜோசப் என்ற பெயர்களில் நான்கு பெண்களை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றியவன் (2)

ஓகஸ்ட்17, 2013

ஜோசப், பிலிப் ஜோசப், திலிப் ஜோசப் என்ற பெயர்களில் நான்கு பெண்களை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றியவன் (2)

Mary-Joseph-Usha-involved

குடும்பமேசேர்ந்துஏமாற்றிவந்தது: செய்தித் தாள்களில் பொதுவான விஷயங்கள் இப்படி வந்துள்ளன. பிலிப்பை “கல்யாண மன்னன்” என்றெல்லாம் வர்ணித்துள்ளன – விவாகரத்து செய்த இவர், புஷ்பலதா, 25, ரம்யா, 24, பிரேமா, 33, ஆகியோரை, அடுத்தடுத்து, யாருக்கும் தெரியாமல், திருமணம் செய்து கொண்டார்[1]. இவர்களிடம், ராணுவத்தில் பெரிய அதிகாரியாக பணியாற்றுவதாகக் கூறி ஏமாற்றி, வாழ்க்கை நடத்தினார். இத்தகவல், மூன்றாவது மனைவி பிரேமாவுக்கு தெரிந்ததும், போலீசில் புகார் கொடுத்தார்.  இதில் அவரது தாயார் மேரி, சகோதரி உஷாவுக்குத் தொடர்புள்ளது. அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியிருந்தார்[2].

Joseph with Prema complaining

கைதுசெய்யப்பட்டு, விடிவிக்கப்பட்டாமாமியார்மகள்: மூன்று மனைவிகளும், தங்களின் கைக்குழந்தைகளுடன் பிலிப் ஜோசப்பை கைது செய்யக் கோரி, மே 27ல், உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி, கலெக்டரிடம் மனு அளித்தனர். தங்களை ஏமாற்றி திருமணம் செய்த பிலிப் ஜோசப், அவரது தாய் மேரி, சகோதரர் ஸ்டீபன், சகோதரி உஷா, அவரது கணவர் சந்திரன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு அளித்தனர். உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, முதல்வரின் தனிப் பிரிவிலிருந்து உத்தரவிடப்பட்டது. இது குறித்து பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த கோவை அனைத்து மகளிர் கிழக்கு போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில் புஷ்பலதா, ரம்யா ஆகியோர் பிலிப் ஜோசப் மீது திருமண மோசடி புகார் அளித்தனர்[3]. அவர்களது புகார்கள் ஏற்கனவே பிலிப் ஜோசப் மீது போடப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் கீழ் சேர்க்கப்பட்டன. பிறகு சில நாள்களுக்கு முன் கைது செய்யப்பட்ட பிலிப் ஜோசப்பின் தாயார் மேரி, சகோதரி உஷா ஆகியோர் உடனடியாக ஜாமீனில் விடப்பட்டனர்.  இதனால் அதிருப்தியடைந்த பாதிக்கப்பட்ட பெண்கள் மூவரும் தங்கள் கைக்குழந்தைகளுடன் சென்னை சென்று முதல்வரின் தனிப்பிரிவில் புகார் அளித்தனர்[4].

Pushpalatha, Ramya and Prema - dharna

டில்லியில்கைதுசெய்யப்பட்டபிலிப்: இதையடுத்து, அவர், டில்லியில் இருப்பதாக தகவல் கிடைத்ததும், டில்லி சென்ற கோவை போலீசார், ராணுவ உயர் அதிகாரிகளிடம், பிலிப் ஜோசப் குறித்த மோசடி புகார்களை தெரிவித்தனர். விசாரித்த ராணுவ அதிகாரிகள், பிலிப் ஜோசப்பை, நீலகிரி மாவட்டம், வெலிங்டனில் உள்ள ராணுவ முகாமிற்கு, இட மாற்றம் செய்தனர். அதன் பின், பிலிப் ஜோசப்பை, ராணுவ விதிமுறைகளின்படி, தனிப்படை போலீசாரிடம் ஒப்படைத்ததை தொடர்ந்து, பிலிப் ஜோசப்பை போலீசார் கைது செய்தனர்.

Pushpalatha, Ramya and Prema - dharna demanding justice

நான்குகணவர்களைக்கொண்டஉஷா: முதல் கணவனிடம் ரூ.5 லட்சம் வாங்கிக் கொண்டு விவாக ரத்துப் பெற்றுக் கொண்டாள். இரண்டாவது கணவன் இறந்து விட்டான் என்று சொல்லப்படுகிறது. மூன்றாவது கணவன் காணவில்லையாம். இப்பொழுதுள்ள சுந்தர் தான் நான்காவது கணவனாம். இவன் கூட, தன்னைக் கற்பழித்துவிட்டான், என்பதனால், வலுக்கட்டாயமாக இவளுக்கு திருமணம் செய்து வைத்தார்களாம். இவளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனவாம். ஒரு பெண் இப்படி நான்கு ஆண்களை திருமணம் செய்து கொள்வாளா, கணவர்களுடன் வாழ்வாளா என்றெல்லாம் கேட்டால், நமது சமூக-ஆர்வலர்கள், குடும்பநல-பண்டிதர்கள், தமிழ்ப் பண்பாடு வித்தகர்கள், திராவிடப் புரோகிதர்கள் உடனே இந்த நடிகை இப்படித்தான் இருக்கிறாள் என்று உதாரணம் கொடுப்பார்கள்.

Pushpalatha, Ramya and Prema - police complaingt

ஆரோக்யதாஸ்என்றதந்தை: ஆரோக்ய தாஸ் என்பவர், பிலிப்பின் தந்தை. பிரேமாவிடம் தனது தந்தை இறந்து விட்டதாகக் கூறியுள்ளான். புஷ்பலதா மற்றும் ரம்யாவிடம் காணவில்லை என்று சொல்லியிருக்கிறான். ஆனால், விசாரித்துப் பார்த்ததில், அவரும் ஒரு ரானுவத்திலிருந்து ஓடு வந்தவர். மேரியின் தொல்லை மற்றும் அவளது தொடர்புகளை சகியாமல், பெங்களூருக்குச் சென்று, அங்கு வேறொரு பெண்ணுடன் வாழ்ந்து வருகிறார்.  அவருக்கு மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

Pushpalatha, Ramya and Prema, three wives of Philip Joseph arriving at the Coimbatore Collectorate

மேரிஎன்றதாயார்: பிலிப்பின் தாயார் மேரி. குன்னூரில் மிலிடெரி பகுதிகளில் சுத்தம் செய்யும் தொழிலை செய்து வந்தாள். சிறுவயதிலிருந்தே ஒழுங்காக இருக்கவில்லை. அந்நேரத்தில் தான் தனது இரண்டு மகன்களுக்கும் எப்படியோ ராணுவத்தில் வேலை வாங்கிக் கொடுத்தாள். கணவனைப் பிரிந்து வாழ்ந்ததால், மகனை வைத்துக் கொண்டு ஏமாற்றி வாழலாம் என்று தீர்மானித்தாள் போலும். அதற்கு கிடைத்தது தான், இந்த போலி திருமணங்கள், மறுமகள் கொடுமைகள் இத்யாதி.

Joseph-Prema marriage at Church

சர்ச், பாஸ்டர்முதலியோர்மறைப்பதுஎன்ன, ஏன்?: விசாரணையில், மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு சர்ச்சின் பாஸ்டர், அவன் ஏற்கெனவே திருமணம் ஆனவன் மற்றும் அவன் மகனுக்கு அங்குதான் சடங்கு நடந்தது என்ற விவரங்களைச் சொன்னார். பிலிப்புதான் அங்கு கூட்டிவந்தான் என்ற விவரங்களை கூறினார். ஆனால், இவற்றையெல்லாம் சாட்சியாக சொல்ல ஏதோ காரணங்களுக்காக மறுத்து விட்டார். அது ஏன் என்று பிரேமாவுக்குப் புரியவில்லை[5]. இந்த விவரங்களினின்று அது ரம்யாதான் என்று தெரிகிறது. பிலிப் நான்கு பெண்களையும் சர்ச்சுகளில் தான் திருமணம் செய்து கொண்டிருக்கிறான். சர்ச் ஆவணங்களில் திருமணம், குழந்தை பிறப்பு, பாப்டிஸம் முதலியவை பதிவு செய்யப்படுகின்றன. மூன்று திருமணங்கள் கோயம்புத்தூரிலேயே நடந்துள்ளன. ஆகவே, சர்ச்சுகளுக்குத் தெரியாமல் இத்தகைய திருமணங்கள் நடந்திருக்க முடியாது. 10வது பாஸ், டிகிரி சர்டிபிகேட் போல, இந்த ஆவணங்களையும், பிலிப் போலியாக பெற்றுக் கொண்டிருப்பான் என்று சொன்னால், அத்தகைய போலி ஆவணங்களை யார் உருவாக்கினார்கள், எவ்வாறு உருவாக்கப்பட்டது என்ற கேள்விகள் எழுகின்றன.

Philip Joseph - Dilip Joseph - D. Joseph

மனைவிகளின்போராட்டங்கள்: இவ்விஷயத்தில் ஏமாற்றப் பட்ட மனைவியர் வெளியே வந்து போராட்டத்தில் இறங்கியுள்ளனர். பிரேமா என்பவர் தன்னைப் போல மற்ற பெண்கள் ஏமாறக்கூடாது என்று தனது அனுபவத்தை, புகைப்படங்களுடன், இணைதளத்தில் வெளியிட்டுள்ளார்[6]. தங்களைப் போல மற்ற பெண்கள் ஏமாறக் கூடாது என்று விவரங்களை வெளியிட்டுள்ளார். இளமையில் ஆசை, மோகம், வசதி, சுகவாழ்வு, என்று கனவு கண்டு ஆண்களிடம் மோசம் போகக் கூடாது என்று புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது. பெற்றோரும், தங்களது பெண்ணை திருமணம் செய்து கொடுக்கு போது, இக்காலத்தில் எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் தெரியப்படுத்துகிறது. இவர்களைப் பாராட்ட வேண்டும்.

Joseph married four women anf cheated

கற்றுக்கொள்ளவேண்டியபாடம், படிப்பினைஎன்ன?: ஏமாறுவோர்கள் இருக்கும் வரை, ஏமாற்றுவோர் ஏமாற்றிக் கொண்டே இருப்பர் என்று சொல்வதைவிட, நியாயப் படுத்துவதை விட, அவ்வாறு ஏமாந்துவிடக் கூடாது, மற்றும் ஆண்கள்-பெண்கள் கூட்டாகவும், தனித்தனியாகவும் இல்லறம் போன்ற விஷயங்களில் கூட இவ்வாறு செய்வார்கள் என்பதனை அறிந்து கொள்ள வேண்டும். நிச்சயமாக சினிமா-டிவி சீரியல்கள் போன்றவை, இக்கால இளம்பெண்களின் மனங்களை பாதித்துள்ளன, கலைத்துள்ளன, சஞ்சலப்பட வைத்துள்ளன என்று தெரிகிறது. இந்நிலையில் சமூகத்தை நல்வழிப்படுத்த வேண்டிய பொறுப்பை அனைவரும் ஏற்கவேண்டியதுள்ளது. கெட்டது இப்படி ஏற்பட்டுள்ளது என்று விவரிக்கும் அதே நேரத்தில், இனிமேல் நடக்கக் கூடாது என்று நல்லதையும் எடுத்துக் காட்ட வேண்டும். பணம், பணம் என்று அலையும் நிலையில் தான், இத்தகைய சமூக சீரழிவுகள் ஏற்படுகின்றன. ஆனால், பெண்கள் பாதிக்கப் படுவதை, எந்த சமூகமுன் ஏற்ருக் கொள்ள முடியாது. அத்தகைய சீரழிவிற்குக் காரணமான எந்த காரணி இருந்தாலும், அது கண்டறியப் பட வேண்டும், அது மாற்றப் படவேண்டும். இத்தகைய சமூக ஊழல்கள், மனிதத்தன்மையற்ற உழிங்கீன ஊழல்கள் மிகக் கொடுமையானது. அவற்றை எதிர்த்து போராட வேண்டும்.

 

வேதபிரகாஷ்

© 17-08-2013


[5] The family traced a misunderstanding between Philip and the pastor of a church in Mettupalayam. The Pastor told them that the man had been married before and had even brought his son for dedication to the church. (This pastor, for reasons unknown refused to confirm these incidents as a witness.) – http://bridaltears.blogspot.in/