Archive for the ‘ஶ்ரீமந்துடு’ Category

“கேரளா லுங்கி கார்ல்ஸ்”, மற்றும் “டிரஸ் கோட்” : உடைக்கட்டுப்பாடு – வேண்டுமா, வேண்டாமா வாத-விவாதங்கள்!

ஜூன்8, 2016

கேரளா லுங்கி கார்ல்ஸ்”, மற்றும் டிரஸ் கோட்” : உடைக்கட்டுப்பாடு – வேண்டுமா, வேண்டாமா வாத-விவாதங்கள்!

female fan group from USA posed in Lungis -maheash

தங்களது தாய், சகோதரி, மனைவி, மகள் முதலியோர் எப்படி ஆடை அணிய வேண்டும், அணியக் கூடாது என்று பரிந்துரை முயற்சிகளில் ஈடுபடவில்லை: பிரபல நடிகைகள் முதல், பெண்ணியவாதிகள் வரை அப்படித்தான் நடந்து கொண்டனர். சிலர் கடவுளர்களே அப்படித்தானே உடையுத்திக் கொண்டுள்ளதாக சித்தரிக்கப் பட்டுள்ளன, நிர்வாணமாகக் கூட சிலைகள், விக்கிரங்கள் உள்ளனவே, அவற்றிற்கெல்லாம் உடை கட்டுப்பாடு ஒன்றுமில்லையா என்பது போன்ற கேள்விகள் எழுப்பி எழுதித்தள்ளினர். நல்லவேளை அவர்கள் தங்களது தாய், சகோதரி, மனைவி, மகள் முதலியோர் எப்படி ஆடை அணிய வேண்டும், அணியக் கூடாது என்று பரிந்துரை முயற்சிகளில் ஈடுபடவில்லை. ஒருவேளை அவர்களும் இதெல்லாம் எங்களது உரிமை என்று பேன்ட், லெக்கிங்ஸ், ஸ்லீவ்லெஸ், டி – ஷர்ட், மினி ஸ்கர்ட் மற்றும் டாப்ஸ் போன்ற உடைகளுடன் தெருவில் இறங்கியிருந்தால் என்ன செய்திருப்பார்கள் என்று தெரியவில்லை. முற்றும் துறந்த நடிகைகள் போன்றோ, முனி-ரிஷிக்கள் போன்றோ, சாதாரண மக்கள் இல்லை. நடிகையர், நாகரிக பெண்மணியர் குற்ப்பிட்ட இடங்களில் அவ்வாறு அரைகுறை ஆடைகள் அணிந்து உலா வரலாம், மற்ற இடங்களில் வந்தால் என்னாகும் என்பது அவர்களுக்கே தெரிந்தது தான். நடிகையர்கள் வாழ்க்கையை சாதாரண பெண்ணோடு ஒப்பிட முடியாது. இருப்பினும், இவர்கள் எல்லோரும் போதிக்க வந்து விடுவதே வேடிக்கையாக இருக்கிறது.

Kim Kardashian shows off her bump in a clinging black dress as she leaves lunch at La Scala in Beverly Hills

நட்சத்திர ஹோட்டல்கள், கிளப்புகளில் பின்பற்றப்படும்டிரஸ் கோட்: இந்திய ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் இந்த “டிரஸ் கோட்” பற்றி எழுதப்படாத விதிமுறைகள் தாம் பின்ப்பற்றப்படுகின்றன[1]. இதெல்லாம் ஹோட்டலுக்கு ஹோடல், ரெஸ்டேரென்டுக்கு ரெஸ்டாரென்ட், சாப்பிடும் இடம், உணவு முதலியவற்றிற்கு ஏற்றபடி மாறும் என்று கூறியும் “இதுதான் ஏற்புடைய உடை” என்று குறிப்பிட்டு சொல்லாமல் தப்பித்துக் கொள்கிறார்கள். பொதுவாக நவீன, மேற்கத்தைய உடைகளை அணிந்து கொண்டு வந்தால் ஒன்றும் கேட்பதில்லை. கோட்-சூட் போட்டுக் கொண்டு வரும் “பிசனஸ் கிளாஸ்” வகையும் உண்டு, அரைகுறை ஆடைகளுடன் வரும் நவநாகரிக வகைகளும் உண்டு[2]. பெண்கள் உடல் பாகங்கள், மார்பங்கள் தெரியும் படி எல்லாம் ஆடை அணிந்து கொண்டு வருகிறார்கள். அத்தகைய முறைகேடுகளை மேனாட்டு ஊடகங்களே எடுத்துக் காட்டியுள்ளன. அதாவது, அங்கேயே அத்தகைய கட்டுப்பாட்டு சிந்தனை இருக்கும் போது, இந்தியாவில் வேறு மாதிரி சிந்திப்பது சரியா-தவறா என்று அவர்களே புரிந்து கொள்ளலாம். ஆனால், வேடிக்கையென்னவென்றால், வேட்டிக் கட்டிக் கொண்டு சென்றாலோ, ஷூ போடாமல் சென்றாலோ உள்ளே அனுமதி கிடையாது.

female lawyers

நீதி மன்றங்களில் உடை கட்டுப்பாடு: உச்சநீதி மன்றம், உயர்நீதி மன்ற, மாஜிஸ்ட்ரேட் கோர்ட், டிரைபூனல் போன்ற நீதிமன்றங்களுக்கு நீதிபதிகள், வழக்கறிஞர்கள் கருப்பு கௌன் அணிந்து கொண்டு செல்கிறார்கள், வருகிறார்கள். ஆண் வழக்கறிஞர்கள்[3] மற்றும் பெண் வழக்கறிஞர்கள்[4] இப்படித்தான் உடையணிந்து வர வேண்டும் என்று “பார் கவுன்சில்” விதிமுறைகளில் சொல்லப்பட்டுள்ளன[5]. ஆங்கிலேயர் காலம் வரை நீதிபதி தலையில் கூட விக் எல்லாம் வைத்திருந்தால், பிறகு விட்டு விட்டார்கள். ஏன் வேறு நிறத்தில் இருக்கக் கூடாது அல்லது அது இல்லாமல் ஏன் நீதிமன்றத்தில் நுழையக் கூடாது என்று யாரும் கேட்பதில்லை.  ஆங்கிலேயர் காலத்தில் ஆரம்பித்த இந்த உடைமுறையை மாற்ற வேண்டும் என்று அவ்வப்போது, வழக்கறிஞர்களே கேட்டுப் பார்த்தாலும்[6], இதுவரை ஒன்றும் நடக்கவில்லை. 1685ல் இங்கிலாந்து அரசன் சார்லஸ் II இறந்தபோது, துக்கம் அனுஷ்டிக்க இத்தகைய உடை உபயோகித்ததாகவும், அதனையே வழக்கறிஞர்கள் பின்பற்றுவதாகவும் கூறப்படுகிறது[7]. எது எப்படியாகிலும் கருப்பு துக்கத்துடன் சம்பந்தப்பட்டது என்பது தெரிந்த விசயம்.

Kim Kardashian going to 5 star hotel for lunch

ஆபாசப்படங்கள், விளம்பரங்களின் நிலை என்ன? பெண்களின் மீது ஏன் அதிகமான குற்றங்கள் நடக்கின்றன என்று, அரசு வெளியிட்டிருந்த அறிக்கையின்[8] மீதான கட்டுரையை நான் ஏற்கெனெவே பதிவு செய்துள்ளேன்[9]. பெண்களை வைத்துக் கொண்டு சினிமா, கொச்சையான விளம்பரங்கள், ஆபாசப் படங்கள், புளூ பிளிம்கள் / ஊதா சினிமாக்கள், நடனங்கள், விபச்சாரம்,  என பல நிகழ்ச்சிகள், செயல்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இவையெல்லாம் கூடாது, பெண்களை கேவலப்படுத்துவது, அசிங்கப்படுத்துவது, செக்ஸ்-பொருள்களாக மதிக்கிறது என்றால், அவற்றை ஏன் பெரிய கம்பெனிகளே ஊக்குவிக்கிறது? கோடிக்கணக்கில் பணத்தை செலவிட்டு, பதிலுக்கு பொருட்களை விற்று பணத்தை அள்ளுகிறது? அதில் பெண்களின் பங்கு இல்லாமல், ஒன்றும் நடக்காது. அத்தகைய விஷயங்களில் பெண்கள் ஈடுபடுகிறர்கள் எனும்போது, அதற்கு என்ன காரணம் என்று பெண்கள் கூற வேண்டும். ஆண்கள் தாம் காரணம் என்று கூறி தப்பித்துக் கொள்ள முடியாது. இல்லை வறுமை என்று பொருளாதார காரணத்தைச் சொல்ல முடியாது, ஏனென்றால், இன்று பணத்திற்காக மட்டுமல்லாது புகழிற்காக பணக்காரப் பெண்களே அத்தகைய விஷயங்களில் ஈடுபடுகிறார்கள். சும்மா இருக்கும் எந்த ஆணும் எந்த பெண்ணிடமும் சென்று செக்ஸ் வைத்துக் கொள் என்று கூறிக் கொண்டு செல்ல மாட்டான். பெண்ணும் அப்படியே ஒப்புக் கொள்ள மாட்டாள். ஆகவே மனோதத்துவ ரீதியில் ஆராய்ந்தால், அதன்படி விளக்கம் கொடுக்க வேண்டும், தீர்வு காண வேண்டும். குற்றவியல் என்று பார்க்கும் போது, மனோதத்துவ ரீதியில் எல்லா காரணங்களும் எடுத்துக் கொள்ளப் படும். பிறகு தான், முக்கியமான காரணம் எது என்று ஆராயப் படும். காலக்கட்டங்களில், குறிப்பிட்ட காரணி தான் காரணம் என்றால், அதனை அவர்கள் எடுத்துக் காட்டுவார்கள். அத்தகைய நிதர்சனத்தை, யதார்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். குற்றங்கள் ஏற்படாத முறையில் ஆடை அணிவது எப்படி என்பதனை பெண்கள் தான் வரையறுக்க வேண்டும். அவர்களே கூறிவிட்டால் பிரச்சினை இருக்காது.

actress-shriya-sivaji-function-09_720_southdreamz

முலைகளை / மார்பகங்களை, இடுப்பை, பெண்குறியைக் காட்டக் கூடாது என்று யாராவது சட்டத்தையா கொண்டு வர முடியும்?[10]: சமூகத்தில் ஏற்கெனவே ஏற்புடைது என்பதை வைத்துதான் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. ஒருசிலர், நூறு-ஆயிரம் பேர் மற்றவர்களை விட மாறுபடுகின்றனர் என்பதற்காக இருக்கின்ற சட்ட-திட்டங்களை மாற்றி, அதுதான் எல்லோருக்கும் பொறுந்து என்று திணிக்க முடியாது. “நாகரிகம்” என்றால் என்ன, “நாகரிகமாக உடை அணிவது என்றல் என்ன”  என்றெல்லாம் சொல்லிக் கொடுக்கவா வேண்டும்? இல்லை, முலைகளை / மார்பகங்களை, இடுப்பை, பெண்குறியைக் காட்டக் கூடாது என்று யாராவது சட்டத்தையா கொண்டு வர முடியும்? அப்படியும் எடுத்து வந்தால், எந்த அளவிற்கு காட்டலாம், காட்டக் கூடாது எனெல்லாம் வரையறுத்துக் கொண்டிருக்க முடியுமா? பிறகு, அதற்கும் நியாயம் கற்பித்து பேச ஆரம்பித்து விடுவார்கள். “நிர்வாணம்” என்றால் என்ன என்று பேசவந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. இன்று பொதுவாக, ஷாப்பிங் மால், பார்லர், நட்சத்திர ஹோட்டல்கள், ஏன் கல்லூரிகள்-பள்ளிகள் முதலிய இடங்களில் பெண்கள் எப்படி ஆடையுடுத்திக் கொண்டு வருகிறார்கள் என்பது தெரிந்த விசயமே.

© வேதபிரகாஷ்

08-06-2016

[1] DNA India, Fitting into a 5 star, Saadia Dhailey, Sat. 1 June 2013, 11.00 am IST.

[2] http://www.dnaindia.com/lifestyle/report-fitting-into-a-5-star-1842279

[3] Advocates appearing in the Supreme Court, high court, subordinate courts, tribunals or authorities must wear the dress prescribed, which must be sober and dignified. Male advocates must wear a black buttoned-up coat, chapkan, achkan or a black sherwani, and white bands with advocate’s gown or a black open-breasted coat, white shirt, white collar, stiff or soft, and white bands with advocate’s gown. In either case long trousers (white, black striped or grey) or dhoti must be worn.

http://www.lawyersclubindia.com/forum/DRESS-CODE-FOR-AN-ADVOCATE-1271.asp

[4] Women advocates must wear black and full or half sleeve jackets or blouses, a white collar, stiff or soft, with white bands with advocate’s gown. They may wear saris or long skirts (white, or black or any mellow or subdued colour without any print or design) or flare, or Punjabi dress (churidar kurta or salwar kurta, with or without dupatta), white or black.

http://www.lawyersclubindia.com/forum/DRESS-CODE-FOR-AN-ADVOCATE-1271.asp

[5] http://www.barcouncilofindia.org/about/professional-standards/rules-on-professional-standards/

[6]Black clothes absorb more heat causing immense inconvenience to advocates in the state, the petitioner said. The present dress code blindly follows the British colonial heritage, despite six decades of independence. The difficulties during the rainy season are equally tough. Even in Britain, the dress is not accepted in all courts, since 2008. http://www.newindianexpress.com/nation/article1494022.ece

[7] England when robes adopted in 1685 were the symbolic of mourning for King Charles II.

[8] http://ncrb.nic.in/; http://ncrb.nic.in/; http://ncrb.nic.in/CII2010/cii-2010/Table%20Contents.htm;

http://ncrb.nic.in/CII2010/cii-2010/table6.htm

[9] வேதபிரகாஷ், குழந்தைகள் / சிறுவர்சிறுமியர் இளம்பெண்கள் முதலியோர்கள் மீதான குற்றங்கள் – 2010: புள்ளி விவரங்கள், விளக்கம், விவாதம்,http://atrocitiesonindians.wordpress.com/2011/10/31/crimes-against-children-girls-women-2010/

[10] https://liberalizationprivatizationglobalization.wordpress.com/2012/01/06/dress-code-crime-women-rape-correlation/

“கேரளா லுங்கி கார்ல்ஸ்”, மற்றும் “டிரஸ் கோட்” என்று உசுப்பி விடும் சமூக வலைதளங்கள்!

ஜூன்8, 2016

கேரளா லுங்கி கார்ல்ஸ்”, மற்றும் டிரஸ் கோட்என்று உசுப்பி விடும் சமூக வலைதளங்கள்!

Srimanthudu-Lungi-Effect on USA Ladies

கேரளா லுங்கி கார்ல்ஸ்”, மற்றும் டிரஸ் கோட்: ஜூன் 5, 2016 அன்றிலிருந்து இணைதளங்களில் சுற்றிக் கொண்டிருக்கும் “கேரளா லுங்கி கார்ல்ஸ்” படம் பொய் தெரிய வந்துள்ளது[1]. கடந்த 2015-ல் வெளிவந்த மகேஷ் பாபு படம் ஒன்றில் லுங்கி அணிந்து அவர் வருவது போல காட்சி அமைக்கப்பட்டிருக்கும், இதைக்கொண்டாடும் வகையில் மகேஷ் பாபுவின் அமெரிக்க ரசிகைகள் லுங்கி அணிந்து கொண்டாடியதாக அப்போது வெளிவந்த புகைப்படம் காட்டப்படுகிறது[2] என்றும் எடுத்துக் காட்டியது. இவ்விசயம் ஆந்திராவில் தெரிந்ததாகவே இருக்கிறது[3]. வெப்துனியா, “ஜீன்ஸ் தற்போது பெண்கள், அதிலும் கல்லூரி மாணவிகளுக்கு தவிற்க முடியாத ஒரு ஆடையாக மாறிவிட்டது. இதற்கு கல்லூரி நிர்வாகம் தடை விதித்ததால் மாணவிகள் லுங்கி கட்டிக்கொண்டு வந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்”, என்று செய்தியாக போட்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது[4]. “தாங்கள் லுங்கி கட்டிக்கொண்டு வந்து, அந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளனர். இந்த புகைப்படத்தை மாணவர்களும் அதிகமாக பரப்பி விட்டு அதனை தற்போது வைரலாக்கி உள்ளனர்”, என்று சரக்கை சேர்த்துள்ளது[5]. ஆனால், இது உண்மையான செய்தியாக இருக்க முடியாது, ஏனெனில், அவர்கள் ஒரு நடனத்திற்கு பயிற்சி மேற்கொண்டிருக்கலாம்என்று “சக்ஷி போஸ்ட்” எடுத்துக் காட்டுகிறது[6].

St Theresa 1

புகைப்படம் வதந்தியைப் பரப்பும் வகையில் விஷமிகளால் பரப்பட்டது: இதையெடுத்து, தினமலரும் இப்படி சொல்கிறது[7] – இப்படி ஆரம்பித்து, “அதைத் தொடர்ந்து, சமூகவலைதளத்தில், மக்கள் கொந்தளித்து தங்களுடைய எதிர்ப்புகளை பதிவு செய்யத் துவங்கினர். ஆனால், இது உண்மை இல்லை என்று ஒருவர் பதிவு செய்தார். லுங்கியுடன் மாணவியர் இருக்கும் படம் உண்மை தான். ஆனால் செய்தி தான் தவறு. தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, ஸ்ரீமந்துடு என்ற படத்தில் லுங்கியுடன் நடித்தார். அதைப்பார்த்து, கடந்த ஆண்டு, ஆகஸ்ட் மாதம், அவரைப் போலவே, அமெரிக்காவில் உள்ள இந்திய மாணவியரும், லுங்கி அணிந்தபடி வெளியிட்டது தான் இந்த படம் என்று அந்த நபர் கூறியுள்ளார்.ஆனால், அதுவும் உண்மையில்லை என்று”, இப்படி முடித்துள்ளது[8]! புதிய தலைமுறை[9], “ஜீன்ஸ் தடைக்கு எதிராக கேரள கல்லூரி மாணவிகள் போராடுவதாக வெளிவந்துள்ள புகைப்படமாக, அந்தப் புகைப்படமே காட்டப்படுகிறது. மேலும், கேரள மாநிலம் தழுவிய அளவில் கல்லூரிகளில் ஜீன்ஸ் அணியத் தடை விதிக்கப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது. ஆகவே, இந்த புகைப்படம் வதந்தியைப் பரப்பும் வகையில் விஷமிகளால் பரப்பட்டது என்றே கூறப்படுகிறது,” இவ்வாறு உண்மை நிலையினை எடுத்துக் காட்டியது[10].

St Theresa 2

ஶ்ரீமந்துடுவை தொடர்ந்த பிரேமம்: நிவின் பாலி [Nivin Pauly] என்பவர் எடுத்த “பிரேமம்” என்ற படத்தில் வந்த “நவீன் பாலி” போன்று லுங்கி கட்டிக் கொண்டு, போட்டோ எடுத்து சமூகவலைதளங்களில் பரப்பி வருவது கேரளாவில் வாடிக்கையாக உள்ளது. அதாவது, வேட்டி-லுங்கி கட்டுவது கூட நடிகர்கள் கட்டுவதால் பிரபலமடைகிறது போலும். இதனால், சென்ற வருடம், செயின்ட் தெரசா கல்லூரி மாணவிகள் ஓணம் விழாவின் போது லுங்கி கட்டிக் கொண்டு கல்லூரி விழாவில் பங்கு கொள்ள சென்றனர்[11]. இதனை “பிரேமம்-மேனியா” என்று குறிப்பிட்டு, அந்த புகைப்படங்களை பேஸ்புக்கில் பரப்பினர். ஆக இந்த வருடமும், அத்தகைய ஒரு போட்டோவைப் போட்டு, பேஸ்புக்கில் பரப்ப ஆரம்பித்துள்ளனர்.  ஷாருக் கானின் லுங்லி டேன்ஸையும் மக்கள் ஞாபகத்தில் வைத்திருப்பர். இதெல்லாம் லுங்கிகள் விற்பனைக்கு மறைமுக ஆதரவு மற்றும் விளம்பரமா என்று கூட யோசிக்க வேண்டியுள்ளது.

Nivin Pauly Facebook

வைரல், வைரலாக்கும் முறை என்றால் என்ன?: வைரஸ் என்பது ஒரு கிருமி, அதில் கெட்டது அதிகம், நல்லது குறைவு. பொதுவாக கிருகிகளால் வியாதி வருகிறது. அதுமட்டுமல்லாது, கிருமிகள் வேகமாக பரவு தன்மையினைக் கொண்டுள்ளன. அதனால், வைரஸ் போன்று மிகவேகமாக பரவுகிறது என்பதை “வைரல்” என்ற ஆங்கில பிரயோகத்தில் எழுத்தாளர்கள் உபயோகப்படுத்துகின்றனர். இதுவும் ஒரு கெட்டது, பொயானது, மக்களின் கவனத்தை தவறான திசைக்குத் திருப்புவது என்பதனால் ஒருவேளை, ஊடகக்காரர்களே “இந்த புகைப்படத்தை பரப்பி விட்டு அதனை தற்போது வைரலாக்கி உள்ளனர்”, என்று குறிப்பிட்டார்கள் போலும். நல்லதை விட, கெட்டது சுலபமாக மக்களைப் பிடித்துக் கொண்டு விடும் என்பதனையும் இது மெய்ப்பித்து விட்டது.

Lungi Keralas traditional dress

பொய் சொல்லி பேஸ் புக்கில் பிரபலம் அடைய தேவையில்லை: சமூக வலைதளங்களில் இப்படி தமாஷாகவும், விமத்தனமாவும், பல பொய்களை உண்மைகளைப் போன்று பரப்பி வருகின்றனர். ஏதாவது ஒரு படத்தைப் பார்த்து விட்டால் போதும், அது உண்மையா பொய்யா என்றெல்லாம் யோசிப்பதேயில்லை, உடனே ஷேர் செய்து பாப்பி விடுகிறார்கள். ஒரே ஆள் நிறைய ஐடிக்கள வைத்துக் கொண்டும் இந்த பரப்பு-பிரச்சார வேலைகள் செய்து கொண்டிருக்கிறார். சில நேரங்களில் கலவரம் ஏற்படக் கூடிய வகையில், படங்கள், வீடியோக்கள் பரப்பியதையும் நினைவில் கொள்ளலாம். பொதுவாக, சித்தாந்த ரீதியில் செயல்படுபவர்கள், இதைப் போன்று செய்து வருகிறார்கள். “போட்டோ-ஷாப்” என்றதை உபயோகப்படுத்தி, புகைப்படங்களை மாற்றி, உலவ விடுகின்றனர். அவை பார்ப்பதற்கு தத்ரூபமாக, உண்மை படம் போன்றே இருக்கும், ஆனால், கொஞ்சம் யோசித்துப் பார்த்தாலே, அவ்வாறு இருக்க முடியாது என்று எவரும் தீர்மானித்துக் கொள்ளலாம்.

Deepika and Sunny in lungi dress

உடைக் கட்டுப்பாடும், சமூகமும், தெய்வீகமும்: கற்பழிப்புகள் அதிகமாகிக் கொண்டிருக்கும் நிலையில் தான், பெண்கள் நாகரிகம் என்ற பெயரில் கண்டபடி ஆடைகள் உடுத்திக் கொண்டு வெளியில், பொது இடங்களில் வலம் வரக்கூடாது என்று வலியுருத்தப்பட்டது. ஆண்-பெண் கவர்ச்சி, ஈர்ப்பு மற்றும் இணைப்பு முதலியவை இயற்கையானவை என்றாலும், சமூகத்தில் அவற்றை கட்டுப் படுத்தி சடங்குகள் போன்றவற்றை வைத்து அங்கீகாரம் கொடுதுள்ளனர். அவற்றை எந்த சமூகமும், மதமும், சித்தாந்தமும் எதிர்ப்புத் தெர்விப்பதில்லை. ஆனால், அந்த கருத்தைக் கூட நவீன பெண்ணியத்துவ வீராங்கனைகள் உரிமை என்ற பெயரில் கடுமையாக சாடி எதிர்த்தனர். அக்கருத்தை வெளியிட்டவர்கள் இடைக்காலத்தவர், பிற்போக்குவாதிகள், பெண்களை அடிமைப்படுத்துகிறவர்கள், மனுவாதிகள் என்றெல்லாம் திட்டித் தீர்த்தனர். வரிந்து கொண்டு பேட்டிகள், வாத-விவாதங்கள், கட்டுரைகள் என்றெல்லாம் வெளிவந்தன. ஆனால், கற்பு, கற்பின் தன்மை, கற்பழிப்பக்கப்பட்ட பெண்கள், கற்பழித்த கொடூரர்கள் இவர்களைப் பற்றி குறைவாகவே பேட்டிகள், வாத-விவாதங்கள், கட்டுரைகள் என்றெல்லாம் வெளிவந்தன. இவர்களது ஆணவ, ஆக்ரோஷ, தீவிரவாத கருத்துரிமைகள், அவர்களது கருத்துரிமைகள் அடக்கப்பட்டு விட்டன.

© வேதபிரகாஷ்

08-06-2016

[1] http://www.ibtimes.co.in/reports-claiming-kerala-college-girls-wore-lungi-protest-against-jeans-ban-are-fake-681724

[2] http://www.telugupeople.com/news/article_00098921_Pic_TalkUSA_girls_Lungi_tribute_to_Srimanthudu.asp

[3] http://www.chitramala.in/maheshs-lungi-effect-on-usa-ladies-196731.html

[4] வெப்துனியா, லுங்கி கட்டிக்கொண்டு கல்லூரிக்கு வந்த மாணவிகள்: ஜீன்ஸ்க்கு தடை விதித்ததால் நூதன எதிர்ப்பு!, செவ்வாய், 7 ஜூன் 2016 (14:45 IST)

[5] http://www.tamil.webdunia.com/article/national-india-news-intamil/a-college-in-kerala-recently-banned-jeans-so-girls-wearing-lungi-116060700032_1.html

[6] Sakshipost, Picture of Kerala college girls clad in ‘lungi’ goes viral, Tuesday, 07 JUNE 2016 09:50.

[7] தினமலர்,  கேரள லுங்கி கேர்ள்ஸ்பாடாய்படுத்தும் சமூகதளம், பதிவு செய்த நாள் : ஜூன் 07,2016,22:20 IST.

[8] http://www.dinamalar.com/news_detail.asp?id=1537727

[9] புதியதலைமுறை, ஜீன்ஸ் தடைக்கு எதிராக லுங்கி அணிந்து போராட்டம்: இணையத்தைக் கலக்கும் மாணவிகள் புகைப்படம், பதிவு செய்த நாள் : June 07, 2016 – 10:08 AM, மாற்றம் செய்த நாள் : June 07, 2016 – 10:12 AM

[10] http://tv.puthiyathalaimurai.com/detailpage/news/india/7/29764/girls-from-kerala-college-protesting-against-a-ban-on-jeans-is-fake

[11] But, questions are also being raised over whether the news was true. It could be that the girls were preparing for a dance performance or could be aping Mahesh Babu’s Srimanthudu act. It may be recalled that, during the last year’s Onam festivities, girls from St Teresa’s College, Ernakulam went to campus clad in ‘lungis’. The girls were dressed like ‘Premam’ Nivin Pauly.

http://www.sakshipost.com/index.php/news/national/82599-picture-of-kerala-college-girls-clad-in-lungi-goes-viral.html