Archive for the ‘நகை’ Category

கள்ளக்காதல், கொலை, கைது – சீரழும் இல்லற வாழ்க்கை, சோரம் போகும் பெண்மை, துன்பத்தில் குடும்பங்கள்

ஜூன்17, 2013

கள்ளக்காதல், கொலை, கைது – சீரழும் இல்லற வாழ்க்கை, சோரம் போகும் பெண்மை, துன்பத்தில் குடும்பங்கள்

the married ones 2013கூடா ஒழுக்கங்கள் பேணப்படும் விதங்கள்: ஆண்கள் பெண்களை ஏமாற்றும் காலம் போய், இப்பொழுது பெண்களும் ஆண்களை ஏமாற்றி வருகிறார்கள். திருமணத்திற்கு முன் ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட ஆண்களுடன் காதல், தொடர்பு, திருமணத்திற்குப் பிறகும் அத்தகைய கூடா ஒழுக்கங்கள் தொடர்ச்சி, தெரியவரும்போது, பெண்கள் வெறியர்களாகி, கொலை செய்யத் துணிவது, அப்படியே நடப்பது, இப்படித்தான் தமிழகத்தில் பல செய்திகள் வருகின்றன என்பதைவிட, நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன.  மனங்கள் அந்த அளவிற்கு வக்கிரமாகி, மணங்களை முறிக்கும் அளவிற்குச் சென்று, இடையில் வரும், வந்துள்ள புருஷன்களை ஒழித்துக் கட்டும் அளவிற்கு பெண்மை முன்னேறியுள்ளது மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

the extra-marital ones 2013மேன்னாட்டுத் தாக்கமா, உள்ளூர் ஊக்குவிப்பு காரணிகளா?: ஒரு பெண், திருமணம் ஆனவருன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பது, அதற்கு திருமணம் ஆனவரின் மனைவி தெரிந்தும் கண்டிக்காமல் இருப்பது அல்லது ஆதரிப்பது, இவையெல்லாம் எந்தவிதத்தில் பெண்களுக்கு ஏற்புடையாக இருக்கிறது என்று தெரியவில்லை[1]. இல்லற வாழ்க்கை சீரழிவது மட்டுமல்லாது, சோரம் போகும் பெண்மைப்பற்றி கூட அவர்கள் கவலைப்படாதது வேடிக்கையே. அந்த அளவிற்கு வக்கிரத்தைத் தூண்டி, வளர்த்து, நிலப்படுத்தியிருப்பது எது என்பதுதான் ஆராய வேண்டியுள்ளது. மேன்னாட்டுத் தாக்கம் மட்டும்தானா, அல்லது உள்ளூர் ஊக்குவிப்பு காரணிகளும் சேர்ந்துள்ளனவா, அக்காரணிகள் யாவை[2], அவற்றை பரிந்துரைத்தது[3], அறிமுகப்படுத்தியது யார், என்ற கேள்விகள் எழுகின்றன. பள்ளிப்பருவத்திலேயே அத்தகைய மனசீரழிவு[4] ஆரம்பிக்கிறதா? ஆசிரியர்கள்[5] சரியில்லையா?

the trion in tangle leading to murder 2013சமூகம் மேலும் பாதிக்கப் படும்: இதில் சம்பந்தப்பட்ட ஆண்-பெண் கெடுவது மட்டுமல்லாது, அவர்களின் குடும்பங்கள் கெடுகின்றன அதாவது பாதிக்கப்படுகின்றன.  கள்ளக்காதலில் ஈடுபடும் ஆண்-பெண் தவிர அவர்களது மனைவி—கணவன், அவர்களது குழந்தைகள், உறவினர், பெற்றோர் என அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள்.  கூட்டுக்குடும்பங்கள் சிதறியபிறகு, உள்ள உறவுகளும், இவ்வாறு பாதிக்கப்படுவது, சமூகத்தில் பெரும் பாதிப்பு ஏற்படுத்தும்.

Degrading youth, values and moralityகணவரை கொன்று விட்டு எனது நகைகளை கொள்ளையர்கள் பறித்து சென்றனர் என்ற புகார்:  சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்தவர் துரைசாமி செட்டியார் மகன், சீனிவாசன் (27) ஒரு மருந்துக்கடையில் வேலை செய்து வந்தார். இவருக்கும், கடலூர் மாவட்டம் பண்ருட்டி கொக்குபாளையம் தட்டாஞ்சாவடியை சேர்ந்த சந்திரசேகர் செட்டியார் மகள் கல்பனாவுக்கும் கடந்த ஓராண்டுக்கு முன் 31-05-2012 அன்று திருமணம் நடந்தது. திருமண நாளை 31-05-2013 கொண்டாட தம்பதியினர் பண்ருட்டி வந்தனர்.  கடந்த மே 1ம் தேதி கடலூர் சில்வர் பீச்சுக்கு சென்று விட்டு பைக்கில் திருவந்திபுரம், பாலூர் வழியாக பண்ருட்டிக்கு திரும்பினர். ராசாப்பாளையம் என்ற இடத்தில் சிலர் இடைமறித்து சீனிவாசனை கத்தியால் குத்தி கொன்றனர். கணவரை கொன்று விட்டு எனது நகைகளை கொள்ளையர்கள் பறித்து சென்றனர் என கல்பனா போலீசில் புகார் செய்திருந்தார்.

கல்பனா  – கள்ளக் காதலுக்கு இடையூறால் கணவனை தீர்த்துக் கட்டினேன்: இந்நிலையில் பண்ருட்டி விஏஓ சரவணன் முன்னிலையில் கல்பனா நேற்று சரணடைந்தார். கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்து கட்டினேன் என்று மனைவி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்[6]. போலீசில் அவர் அளித்த வாக்குமூலம்: “நான் விழுப்புரம் கல்லூரியில் படித்தபோது புதுவையில் உள்ள தினேஷின் சகோதரர் வீட்டுக்கு அடிக்கடி செல்வேன். அப்போது அவருடன் தனிமையில் இருப்பேன். நான், தினேஷ்பாபு, அவரது மனைவி வித்யா ஆகியோர் நண்பர்கள். அவருடன் இருந்த கள்ளக்காதலால் திருமணத்தை தள்ளி போட்டேன். குடும்ப சூழ்நிலை காரணமாக எனக்கும், உறவினர் மகனான சீனிவாசனுக்கும் திருமணம் நடந்தது. திருமணம் ஆனதிலிருந்து எனது கணவருடன் மோதல் ஏற்பட்டது. நாங்கள் சென்னையில் குடியேறினோம். கணவர் வேலை காரணமாக வெளியே செல்லும் போது, தினேஷ்பாபுவை சென்னை வரச்சொல்லி உல்லாசமாக இருப்பேன். அடிக்கடி செல்போனில் பேசுவதால் கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவரை கொல்ல திட்டமிட்டேன்.
கள்ளக்காதலுடன் சேர்ந்து போட்ட கொலை திட்டம்: தினேஷ்பாபுவிடம் இது குறித்து கூறி, எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை என்றேன். கணவரை கொலை செய்ய திட்டமும் தீட்டினோம்.  கடந்த ஆறுமாதங்களாக முயன்று வருகிறோம்[7]. அவரை தீர்த்து கட்டும் முயற்சி ஒருமுறை தோல்வியடைந்ததால் நெய்வேலி ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு வரும்போது கொலை செய்யலாம் என மற்றொரு திட்டமும் வைத்திருந்தேன். அதற்கேற்ப திருமண நாளை பண்ருட்டியில் கொண்டாடலாம் என கூறி அழைத்து வந்தேன். கடந்த 31ம் தேதி திருவந்திபுரம் கோயிலுக்கு செல்லும் போது கொலை செய்ய முயற்சி செய்தோம், ஆனால் முடியவில்லை. மறுநாள் நானும், சீனிவாசனும் கடலூர் சில்வர் பீச் சென்று விட்டு திருவந்திபுரம், பாலூர் சாலை வழியாக வீட்டுக்கு திரும்பினோம். அப்போது தினேஷ்பாபு, முரளி ஆகியோர் பைக்கில் வந்தனர். திட்டமிட்டப்படி சீனிவாசனை இடைமறித்து முரளியும், தினேஷ்பாபுவும் கத்தியால் சரமாரியாக குத்தி கொன்றனர். கொலையை மறைப்பதற்காக போலீசில் பொய் புகார் அளித்தேன் என கூறினேன்.”

கொலை செய்ய டார்ச்சர்கல்பனாவின் கள்ளக்காதலன் தினேஷ்பாபு அளித்தவாக்கு மூலம்: தினேஷ் பாபு கொடுத்துள்ள வாக்கு மூலத்தில் அவர் கூறியிருப்பதாவது[8]: “நான் குறிஞ்சிப்பாடி கல்லூரியில் பி.காம். படித்துக் கொண்டிருந்தேன். அப்போது அதே கல்லூரியில் பி.சி.ஏ. படித்து கொண்டிருந்த வித்யாவுடன் காதல் ஏற்பட்டது. கல்பனா வித்யாவின் தோழியாவார். ஒருதடவை வித்யா கல்பனாவுடன் எங்கள் வீட்டு அருகே உள்ள திருவதிகை கோவிலுக்கு வந்தார். அப்போது இன்னொரு தோழியும் அவருடன் வந்திருந்தார். நானும் திருவதிகை கோவிலுக்கு சென்றேன். அப்போதுதான் முதன் முதலாக கல்பனாவை நான் சந்தித்தேன். அவர்கள் 3 பேரையும் எங்கள் வீட்டுக்கு அழைத்து சென்றேன். அங்கு சிறிது நேரம் பேசிக்கொண்டிருந் தோம். நான் கல்பனாவின் செல்போன் எண்ணை கேட்டு வாங்கினேன். அவரும் என் போன் எண்ணை வாங்கி கொண்டார். அதன்பிறகு இருவரும் அடிக்கடி போனில் பேசிக் கொண்டோம். இந்த பழக்கம் நாளடைவில் எங்களுக்குள் காதலை ஏற்படுத்தியது. தனிமையில் சந்தித்து பேசினோம்.

வித்யாவை திருமணம் செய்து கொள்ள பரிந்துரைத்த கல்பனா: “அப்போது கல்பனா விழுப்புரம் கல்லூரியில் எம்.சி.ஏ. படித்தார். இதன் புராஜெக்ட் ஒர்க்குக்காக அவர் பாண்டிச்சேரி சென்றார். என்னையும் அவர் அங்கு வருமாறு அழைத்தார். அங்கு சென்றோம். அதன் பிறகு லாட்ஜில் 2 பேரும் தங்கினோம். உல்லாசமாக இருந்தோம். இதற்கு பிறகு அடிக்கடி நாங்கள் தனிமையில் சந்தித்து மகிழ்ச்சியுடன் இருந்தோம். கல்பனாவை நான் திருமணம் செய்து கொள்ள விரும்பினேன். ஆனால் இருவரும் வேறு ஜாதி என்பதால் திருமணத்துக்கு எங்கள் வீட்டில் ஒத்துக் கொள்ள மாட்டார்கள் என்று கல்பனா கூறினார். அதே நேரத்தில் வித்யாவை திருமணம் செய்து கொள்ளும்படி என்னை வற்புறுத்தினார். வித்யாவை திருமணம் செய்து கொண்டாலும் நாம் இருவரும் எப்போதும் போல் சந்தோசமாக இருக்கலாம் என்று கல்பனா கூறினார்.

வக்கிர செக்ஸில் கூட்டு என்பது தான் வெளிப்படுகிறது: “எனவே நான் வித்யாவை திருமணம் செய்து கொண்டேன். அதன் பிறகும் எங்களுடைய உறவு நீடித்து வந்தது. என்னை அடிக்கடி சந்திப்பதில் கல்பனா மிகவும் ஆர்வமாக இருந்தார். நான்தான் வேறு பெண்ணை திருமணம் செய்து விட்டேனே இதன் பிறகும் நீ என்னுடன் உறவு வைத்து கொள்ள அதிக ஆசைப்படுகிறாயே ஏன்? என்று கேட்டேன். அதற்கு அவர் “பஸ்ட் லவ் இஸ் பெஸ்ட் லவ்” உன்னை ஒருபோதும் மறக்க முடியாது என்று கூறினார். எங்களுக்குள் கள்ள தொடர்பு இருக்கும் விஷயம் எப்படியோ கல்பனா வீட்டுக்கு தெரிந்து விட்டது.

சீனிவாசனை திருமணம் செய்து கொள், ஆனால், செக்ஸ் வைத்துக் கொள்ளாதே: “எனவே கல்பனாவுக்கு அவசரமாக திருமணம் செய்து வைக்க முயற்சித்தனர். உறவினர் சீனிவாசனை அவருக்கு மாப்பிள்ளை பார்த்து பேசி முடித்தனர். இது பற்றி என்னிடம் கல்பனா தகவல் கூறினார். அதற்கு அவரிடம் நீ சீனிவாசனை திருமணம் செய்துகொள். ஆனால் செக்ஸ் உறவு மட்டும் வைத்துக் கொள்ளாதே, ஏதாவது காரணம் காட்டி மறுத்து விடு நாம் தொடர்ந்து சந்தோசமாக இருப்போம். கொஞ்சநாள் கழித்து அவரை விவாகரத்து செய்து விட்டு வந்துவிடு என்று கூறினேன். இதை கல்பனா ஏற்றுக் கொண்டார்.

சென்னையிலேயே லாட்ஜில் சந்தோஷமாக இருப்போம்: “அதன்பிறகு அவருக்கு திருமணம் நடந்தது. கல்பனா ஏற்கனவே ஒரு விபத்தில் காயம் அடைந்திருந்தார். அதை காரணம் காட்டி அவர் தனது கண வருடன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளவில்லை. ஆனால் திருமணமான பிறகும் எப்படியாவது என்னை சந்தித்துவந்தார். அப்போது சந்தோசமாக இருந்தோம். சீனிவாசன் காலை வேலைக்கு சென்றால் இரவுதான் வீடு திரும்புவார். அந்த நேரத்தில் என்னை சென்னைக்கு வரும்படி கல்பனா அழைப்பார். நானும் அங்கு செல்வேன். இருவரும் லாட்ஜில் தங்குவோம்.

சீனிவாசனை கொலை செய்ய திட்டம்: “இது தொடர்ந்து நீடித்து வந்தது. எங்களுக்குள் கள்ள தொடர்பு இருப்பது சீனிவாசனுக்கும் தெரிந்துவிட்டது. எனவே கல்பனாவுக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்தார். இதனால் சீனிவாசனை தீர்த்து கட்டினால்தான் நிம்மதியாக இருக்க முடியும் என்று கல்பனா நினைத்தார். இதுபற்றி என்னிடம் கூறினார். ஆனால் நான் அதற்கு மறுப்பு தெரிவித்தேன். கொலை செய்தால் பெரிய பிரச்சினையாகிவிடும் என்று கூறினேன். ஆனால் கல்பனா தொடர்ந்து வற்புறுத்தி கொண்டே இருந்தார். யாரையாவது கூலி படையை ஏற்பாடு செய்து கொன்று விடு, நான் எனது நகைகள் மற்றும் பணத்தை தருகிறேன். அதை கூலிப்படையிடம் கொடு என்று கூறினார். கடந்த 31-ந் தேதி பண்ருட்டி வருவோம். அப்போது தீர்த்து கட்டிவிடு என்று சொன்னார். எனவே நான் கூலிபடையை ஏற்பாடு செய்ய முயற்சித் தேன். ஆனால் யாரும் கிடைக்கவில்லை. எனது நண்பர்கள் 4 பேரை லாட்ஜுக்கு அழைத்து சென்று இந்த திட்டம் குறித்து கூறினேன்.

“கல்பனா அழகில் நான் மயங்கினேன். வசதியான குடும்பத்தை சேர்ந்த கல்பனாவிடம் பணத்தை கறக்கலாம் என திட்டமிட்டிருந்தேன். ஆனால் எனது மனது ஒப்புக்கொள்ளவில்லை, அடிக்கடி கல்பனா என்னிடம் செல்போனில் பேசி எனது கணவைரை கொன்றுவிடுங்கள் என டார்ச்சர் செய்தார். பண்ருட்டி இந்திரா காந்தி சாலையில் உள்ள போட்டோகிராபரும் எனது நண்பருமான முரளி (27)யிடம் கொலை திட்டம் பற்றி கூறினேன். கடனில் சிக்கி தவித்த முரளியும் அதற்கு ஒப்புக்கொண்டார். இதனையடுத்து தனியார் லாட்ஜில் சீனிவாசனை கொல்ல திட்டமிட்டோம். அதன்படி கொலை செய்தோம். இந்நிலையில் சென்னையில் உள்ள எனது நண்பரிடம் போலீசார் விசாரித்ததால் நான் நீதிமன்றத்தில் சரணடைந்தேன்” என்றார்.
விசாரணையில் முரளி கூறியதாவது[9], சந்திரசேகர் செட்டியார் மகள் கல்பனா விழுப்புரம் கல்லூரியில் படிக்கும்போதே திணேஷ்பாபுவுடன் காதல் கொண்டிருந்தார். இருவரும் இருவேறு பிரிவுகளை சேர்ந்ததால், அவர்களது வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தால் தனிமையில் இவர்கள் சந்தித்து வந்தனர்.  இதையடுத்து கல்பனாவை அவரது தந்தை சீனிவாசனுக்கு திருமணம் முடித்து வைத்தார். இதேபோல் பத்மநாதன் தனது மகனுக்கு வித்யா என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தார். திருமணம் முடிந்தாலும் கல்பனாவுக்கும், திணேஷ்பாபுவுக்கும் தொடர்பு நீடித்தது.
எஸ்பி ராதிகா உத்தரவின்பேரில், 3 தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். கொலை நடந்த அன்று நகை பறிக்கப்பட்டதாக கல்பனா கூறியிருந்தாலும், அவரது ஒரு சில நகைகள் கொள்ளை போகவில்லை. இதனால் கல்பனா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.  இந்நிலையில், பண்ருட்டி மேலப்பாளையத்தை சேர்ந்த  அதிமுக பிரமுகர் பத்மநாபன் மகன் தினேஷ்பாபு (27) சென்னை எழும்பூர் கோர்ட்டில் கடந்த 6ம் தேதி சரணடைந்தார். அவரை பண்ருட்டி போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். அதில் தினேஷ்பாபு நண்பரான பண்ருட்டியை சேர்ந்த போட்டோகிராபர் முரளி (27)யும் சிக்கினார்[10]. இந்த கொலை வழக்கு தொடர்பாக கடந்த 6 ம் தேதி தினேஷ்பாபு என்பவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார் மேற்படி, அவர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து தினேஷ், முரளியிடம் இருந்து நகை, கொலைக்கு பயன்படுத்திய கத்தி, பைக் கைப்பற்றப்பட்டது. இந்த கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக கல்பனா, இரண்டாவது குற்றவாளியாக தினேஷ்பாபு, மூன்றாவது குற்றவாளியாக முரளி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்[11]. கைதான மூன்று பேரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்[12].>
மாநகராட்சிஊழியர்கொலை: 4 பேர்கைது[13]காரணம்கள்ளக்காதல்: திருப்பரங்குன்றம்: மாநகராட்சி பிளம்பர் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை நடந்துள்ளது தெரியவந்துள்ளது.அவனியாபுரம் கணக்குப்பிள்ளை தெருவை சேர்ந்தவர் முருகன், 28. இவர், மாநகராட்சி பிளம்பர். நேற்று மதியம் 12.30 மணிக்கு பிரசன்னா காலனியில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அங்கு வந்த மூன்று பேர், முருகன் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்து, தப்பினர். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக, ஆனந்த், சதீஷ்குமார் வேல்முருகன் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஆனந்த் மனைவி பாண்டிசெல்விக்கும், முருகனுக்கும் கள்ளக்காதல் இருந்துள்ளது. இதற்காக முருகன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது[14].

மத்தூர் அருகே கள்ளக்காதல் தகராறில் 

மாலை மலர்-11 ஜூன், 2013

மத்தூர் அருகே கள்ளக்காதல் தகராறில் லாரி டிரைவர் கொலை  கள்ளக்காதல்தகராறில் இந்த கொலை நடந்து இருக்கலாம் என்று 

கள்ளக்காதல் விவகாரத்தில்பா.ம.க 

தினமலர்-3 ஜூன், 2013

கள்ளக்காதல் விவகாரத்தில்பா.ம.  க., பிரமுகர், கள்ளத் தொடர்பு காரணமாக, அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது, போலீஸ் 

மாநகராட்சி ஊழியர் கொலை: 4 பேர் கைது

தினமலர்-11 மணிநேரங்களுக்கு முன்பு

திருப்பரங்குன்றம்: மாநகராட்சி பிளம்பர் பட்டப்பகலில் கொலை  விசாரணையில்,கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை நடந்துள்ளது 

கள்ளக்காதல், கள்ளத்தொடர்பு கொலை 

Oneindia Tamil-வழங்கியது Siva Chandran-27 மே, 2013

மதுரை: மதுரையில் அதிகரித்து வரும் கலாச்சார சீரழிவுக் கொலைகள் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கோவில் 

கள்ளக்காதலுக்கு இடையூறால் 

தினகரன்-5 மணிநேரங்களுக்கு முன்பு

கொலை நடந்த அன்று நகை பறிக்கப்பட்டதாக கல்பனா  கல்பனாவின்கள்ளக்காதலன் தினேஷ்பாபு அளித்த வாக்குமூலம்: “கல்பனா 

காங்கயம் அருகே ரியல் எஸ்டேட் 

மாலை மலர்-14 ஜூன், 2013

 புரோக்கர் கொலை: மனைவியின் கள்ளக்காதலன் உள்பட 2 பேர்  அவரது மனைவியே கள்ளக்காதலனை வைத்து கொலை செய்தது 

க.காதலுக்கு இடையூறாக இருந்த 

http://www.tamilmurasu.org/-14 ஜூன், 2013

இதுதொடர்பாக நாடகமாடிய மனைவி, அவரது கள்ளக்காதலன், நண்பர்கள் என 4 நிலையில், துண்டால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளனர்.

பைனான்சியர் கொலை வழக்கில் 

http://www.tamilmurasu.org/-14 ஜூன், 2013

பைனான்சியர் கொலை வழக்கில் போலீஸ் தேடிய வாலிபர் தூக்கு  கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், கள்ளக்காதலன்

ஈரானில் கல்லால் அடித்து 

தினமலர்-30 மே, 2013

ஈரானில் கல்லால் அடித்து கொல்லப்படும் கள்ளக்காதல் தண்டனை  கள்ளக்காதல்,கொலை, போதை கடத்தல், கற்பழிப்பு போன்ற 

தொழிலாளி வெட்டிக் கொலை:கரூர் 

தினமலர்-7 ஜூன், 2013

தொழிலாளி வெட்டிக் கொலை:கரூர் அருகே மூன்று பேர் கைது  சேர்ந்த பஷிர்முகமது ,37, என்பவருக்கும் கள்ளக்காதல் இருப்பது 


[14] தினமலர், பதிவு செய்த நாள் : ஜூன் 16,2013,19:30 IST; மாற்றம் செய்த நாள் : ஜூன் 16,2013,19:33 IST