Archive for the ‘தாந்திரிகக் கலவி’ Category

ரஞ்சிதாவின் கிரக்கம் தொடர்கிறது……………

ஜூலை1, 2010

ரஞ்சிதா பற்றி நித்யானந்தா

பதிவு செய்த நாள் 6/28/2010 12:27:21 AM

http://www.dinakaran.com/highdetail.aspx?id=9177&id1=13

ரஞ்சிதாவையும், நித்யாபந்தாவையும் யார் விட்டாலும், சன் குடும்பமும், நக்கீரன் குடும்பமும் விட்டு வைக்க மாட்டார்கள் போலிருக்கிறது.

நக்கீரன் கோபால் நித்தமும் “நித்து” பைத்தியம் பிடித்துக் கொண்டு அலைகிறார் என்று தெரிகிறது.

செம்மொழி மாநாட்டில் கூட, நித்து, நித்து என்று நித்து புராணம் பாடி, பிறகு ரஞ்சிதா என்று ஜொல்லு விட ஆரம்பித்து விட்டார்!

Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update

// பெங்களூர் : பல கேள்விகளுக்கு பதில் அளித்த நித்யானந்தா நடிகை ரஞ்சிதா பற்றி மட்டும் வாய் திறக்க மறுத்துவிட்டார்.


இது தொடர்பாக செய்தி ஏஜென்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி:
சமீபத்தில் நடந்த சம்பவங்களால் ஆன்மீக ரீதியில் எனக்கு எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஏனென்றால், உண்மை எப்போதும் ஒரே மாதிரிதான் இருக்கும். சமூக ரீதியாக பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.


யு டியூப்பில் என்னை குருவாக பார்த்தனர். இப்போது, செக்ஸ் ஊழலாக பார்க்கின்றனர். பெண்களை செக்ஸ் ரீதியாக நான் துஷ்பிரயோகம் செய்ததாக பத்திரிகைகள் கூறுகின்றன. எனது ஆசிரமத்தில் 8 வயது முதல் 80 வயது வரையிலான பெண்கள் இருக்கின்றனர். என் மீது செக்ஸ் புகார் கொடுக்கும்படி சி.ஐ.டி. போலீசார் தொடர்ந்து அழைப்பு விடுத்த போதும், ஒரு பெண் கூட என் மீது புகார் கொடுக்கவில்லை. என்னை தரிசிக்கவும், ஆசி பெறவும் ஆசிரமத்துக்கு தினமும் 300 பெண்கள் வந்து செல்கின்றனர்.


மூன்று மாதங்களுக்குப் பிறகு எனது பக்தர்களும், பொதுமக்களும் உண்மையை அறிய தொடங்கி உள்ளனர். அவர்களின் எல்லா கேள்விகளுக்கும் தானாகவே பதில் கிடைக்கும். என்னை பற்றி நானே சொல்லிக் கொள்ளத் தேவையில்லை. உண்மை அதனுடைய உண்மையான பலத்தின் மூலம் வெளியே வரும். என் மீது புகார்கள் சொல்லப்பட்டதும் சிலர் விலகினர். என்னிடம் உண்மை இருப்பது தெரிந்தவர்கள் இன்னும் பலமாக நின்றார்கள். சிலர் அதிர்ச்சி அடைந்தனர். புரளிகள் தெளிவாகத் தொடங்கியதும் அவர்கள் என்னிடம் திரும்பி வருகிறார்கள்.


அமைதியை நோக்கி செல்வோம். எல்லாரும் அமைதியாக வாழ்வதற்கான இடத்தை நோக்கி செல்வோம். வாழ்வோம்; வாழ வழி விடுவோம். சிறையில் இருப்பது உடல் ரீதியாக கடினமாக இருக்கலாம். ஆனால், மனதளவில் எப்போதும் சுதந்திரமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தேன். ஆன்மீக வழிக்காட்டுதல் தேடி வரும் என்னுடைய பக்தர்கள், ஆசிரமவாசிகள் பற்றி அதிகம் கவலைப்படுகிறேன். வாய்மையே வெல்லும். இவ்வாறு நித்யானந்தா கூறினார்.
எனினும், ரஞ்சிதா பற்றி கேட்கப்பட்ட எந்த கேள்விகளுக்கும் பதில் அளிப்பதை நித்யானந்தா தவிர்த்துவிட்டார்.

நக்கீரனின் ரஞ்சிதா மோகம்

நக்கீரனின் ரஞ்சிதா மோகம்

புத்தகத்தில் தெரியும்

நடிகை ரஞ்சிதா சென்னை வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர் தனது தலை முடியை பாப் கட்டிங் செய்திருப்பதாகவும் ஜீன்ஸ், டிசர்ட்டில் மாடல் போல வலம் வருவதாகவும் கூறப்படுகிறது.
ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
நித்யானந்தா சம்பந்தமாக கடந்த 6 மாதங்களில் என்னை பாதித்த விஷயங்கள், அவற்றை நான் எதிர்கொண்டவற்றை விவரித்து புத்தகம் எழுதுகிறேன். இந்தப் புத்தகம் தனிப்பட்ட பிரச்னையில் சிக்கி தவிப்பவர்களுக்கு உதவும். இதை வெளியிட சில பதிப்பகங்களிடம் பேசி வருகிறேன். இது தவிர நாவல் ஒன்றையும் எழுதி வருகிறேன். இப்போது தத்துவ புத்தகங்களை படித்து வருகிறேன். கடந்த கால சம்பவங்கள் பற்றி பேச விரும்பவில்லை.  நான் நிறைய காயப்பட்டு விட்டேன். அதைவிட்டு விட்டு புது வாழ்க்கையை நோக்கி செல்ல விரும்புகிறேன். மீண்டும் சகஜ நிலைக்கு வர இன்னும் சிறிது காலம் ஆகும். சினிமாவில் நடிப்பது பற்றியும் இன்னும் முடிவு செய்யவில்லை. இவ்வாறு ரஞ்சிதா கூறியுள்ளார்.
ரஞ்சிதாவின் அம்மாவிடம் கேட்டபோது, ‘ரஞ்சிதா இங்கு வரவே இல்லை. பேட்டி எப்படி வந்தது என தெரியாது‘ என்றார்.

ரஞ்சிதாவுக்காக வீதியில் இறங்கிப் போராடுவோம்! – கிளம்பி விட்டனர் வீராங்கனைகள்!

மே12, 2010
ரஞ்சிதாவுக்காக வீதியில் இறங்கிப் போராடுவோம்! – பெண் வழக்கறிஞர்
புதன்கிழமை, மே 12, 2010, 12:23[IST]
http://thatstamil.oneindia.in/news/2010/05/12/woman-activist-protest-ranjitha.html
கம்யூனிஸவாதிகளைப் பொறுத்த வரைக்கும் நடக்கமுடியாதவற்றையெல்லாம், நடப்பதுபோல பிரமிப்பை ஏற்படுத்துவார்கள், அறிக்கை விடுவார்கள்!

உதாரணத்திற்கு, கம்யூனிசத்திலேயே சமத்துவம் கிடையாது. ஏசியில் ஜாலியாக தூங்கும் காம்ரேடுகள், பிளாட்ஃபாரத்தில் தூங்கும் காம்ரேடுகள் என்றுதான் உள்ளார்கள்!

இதே நிலை மற்ற எல்லாவிஷயங்களிலும் உள்ளன. இருப்பினும், ஏதோ எல்லோரும் சமம் என்பது பொல வாய்சவடால் விடூக்கொண்டிருப்பார்கள்!

சுதா ராமலிங்கம் வீராவேசம்:  சுதா என்ற கம்யூனிஸ சித்தாந்திக்கு இப்படி கோபம் வருகிறது, “நடிகை ரஞ்சிதாவை போலீசார் அசிங்கப்படுத்துகிறார்கள். அவர் பாதிக்கப்பட்ட பெண். பக்குவமாகக் கையாள வேண்டும்“, என்ன இதெல்லாம், இப்படியொரு அக்கரை? அது மட்டுமா, “இல்லையேல் பெண்களைத் திரட்டி போராட்டம் நடத்துவேன் “, என்று பெண் வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் அறிவித்துள்ளார். இவரின் பெயர் கம்யூனிஸ்ட் தலைவர் வரதராஜன் சாவிலும் அடிபட்டது. இவர் இப்பொழுது திடீரென்று, ரஞ்சிதாவிற்காக கிலம்பி விட்டது ஆச்சரியமாக உள்ளது.

Sudha Ramalingam

Sudha Ramalingam

சுதா போலீஸாரை மிரட்டினாரா? சுதா ராமலிங்கம் மகளிர் அமைப்புகளில் தீவிரமாக உள்ளவர். நடிகை ரஞ்சிதா இவரது பாதுகாப்பில் சென்னையில் பதுங்கி இருப்பதாகக் கூறப்பட்டது. இதனால் போலீசார் சுதா ராமலிங்கத்திடம் விசாரணை நடத்தியதாகவும், இதில் ஆத்திரமடைந்த அவர் போலீசாரை மிரட்டியதாகவும் புகார் எழுந்துள்ளது. இதுபற்றி சுதா ராமலிங்கத்திடம் கேட்டபோது, “நடிகை ரஞ்சிதா பற்றி போலீசார் என்னிடம் எந்த விசாரணையும் நடத்தவில்லை. என்னிடம் தொடர்பு கொண்டு பேசவும் இல்லை. ஆனால் ரஞ்சிதா மீது எனக்கு அனுதாபம் உள்ளது. அவரைப் பொறுத்தவரை பாதிக்கப்பட்ட பெண்ணாக இருக்கிறார். அவரை மேலும் அசிங்கப்படுத்தக் கூடாது என்பதே என் விருப்பம்.

ரஞ்சிதாவிற்காக பரிதாபப் படும் சுதா: ரஞ்சிதா தப்பி ஓடப் பார்க்கிறார் என்று செய்திகள் வந்துள்ளன. அவர் தப்பி ஓட முயற்சிக்கவில்லை. பாதிக்கப்பட்டு இருக்கிறார். அவரை முறைப்படி கையாள வேண்டும். அநாவசியமான கருத்துக்களைப் பரப்பக்கூடாது. ரஞ்சிதா குற்றம் செய்தாரா? இல்லையா? என்பதை நீதிமன்றம்தான் நிரூபிக்க வேண்டும். என்னைப் பொருத்தவரை அவர் குற்றம் எதுவும் செய்யவில்லை. ரஞ்சிதா பற்றி அவதூறுகள் வெளி வருகின்றன. நடிகை என்றால் எது வேண்டுமானாலும் பேசலாம் என்பது சரியல்ல. ரஞ்சிதா விஷயத்தில் பெண் உரிமை அமைப்புகளை திரட்டி போராட்டம் நடத்தத்திட்டமிட்டுள்ளோம். பெண்களை போதைப் பொருளாக பயன்படுத்துவதை எதிர்த்து இப் போராட்டம் நடைபெறும் என்றார்.

ரஞ்சிதா குறித்து நடிகர்களிடம் போலீஸ் விசாரணை!

புதன்கிழமை, மே 12, 2010, 10:07[IST]

http://thatstamil.oneindia.in/news/2010/05/12/ranjitha-nithyananda-sex-scandal-enquiry-advocate.html

இழுத்தடிக்கும் ரஞ்சிதா, தேடியலையும் போலீஸ்: விசாரணைக்கு வராமல் இழுத்தடிக்கும் ரஞ்சிதா இருப்பிடம் குறித்து தமிழ், தெலுங்கு நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் கர்நாடக போலீசார் விசாரித்து வருகின்றனர். இன்னொரு பக்கம், உடனே விசாரணை க்கு வரவேண்டும். இல்லையேல் கடும் நடிவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து, மூன்றாவது நோட்டீஸையும் ரஞ்சிதாவுக்கு அனுப்பியுள்ளது கர்நாடக போலீஸ். இந்த பலமுனை நெருக்கடி காரணமாக அடுத்த இரு தினங்களில் பெங்களூருக்கு ரஞ்சிதா வருவார் என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். செக்ஸ் மோசடி. ஆன்மீக மோசடி, நில மோசடி, பொதுமக்கள் பணத்தை கையாண்டதில் முறைகேடு, செக்ஸ் ஒப்பந்தம் போட்டு பெண்களுடன் உறவு என பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு, 8 நாள் போலீஸ் விசாரணைக்குப் பின் ராம் நகர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் நித்யானந்தா.இவருடன் செக்ஸ் காட்சிகளுடன் தோன்றிய நடிகை ரஞ்சிதாவிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து, ரஞ்சிதாவுக்கு தொடர்ந்து சம்மன் அனுப்பி வருகின்றனர். ஆனால் ரஞ்சிதாவோ இதோ அதோ என்று இழுத்தடித்து வருகிறார்.பெங்களூர் சிஐடி அலுவலகத்துக்கு நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்குமாறு ஏற்கனவே 2 தடவை நடிகை ரஞ்சிதாவுக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். இதையடுத்து, விசாரணைக்கு வருமாறு ரஞ்சிதாவுக்கு கர்நாடக சி.ஐ.டி. போலீசார் மூன்றாவது நோட்டீஸை நேற்று அனுப்பினர்.இதையடுத்து, இன்னும் இரு நாட்களில் நடிகை ரஞ்சிதா பெங்களூர்  வந்து சி.ஐ.டி. போலீசார் முன்பு ஆஜர் ஆவார் என்று ரஞ்சிதாவின் வழக்கறிஞர் தெரிவித்ததாக கர்நாடக போலீஸார் கூறினர்.

நடிகர்கள், இயக்குநர்களிடம் விசாரணை: இதற்கிடையே, ரஞ்சிதாவின் வாக்குறுதியை இனி நம்ப முடியாது என முடிவு செய்த கர்நாக போலீஸ் அவர் மறைந்திருக்கும் இடத்தை தீவிரமாகத் தேடத் துவங்கிவிட்டனர். ரஞ்சிதா கிடைத்துவிட்டால், நித்யானந்தாவுக்கு எதிராக பல முக்கிய தகவல்களைப் பெற முடியும் என்பதில் போலீசார் உறுதியாக உள்ளனர்.எனவே ரஞ்சிதாவுக்கு நெருக்கமான நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரஞ்சிதா எங்கே பதுங்கி இருக்கிறார் என்று அவர்களிடம் கேட்டு வருகின்றனர்.இதையெல்லாம் அறிந்த ரஞ்சிதா, இன்னும் ஒரிரு நாளில் ரஞ்சிதா போலீசில் ஆஜராகி சாட்சியம் அளிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம்.

நித்யானந்தாவின் சிறைக்காவல் நீடிப்பு: இந் நிலையில் நித்யானந்தாவின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து ராம்நகர் நீதிமன்றத்தில் நித்யானந்தாவிற்கு எதிராக கூடுதல் ஆவனங்கள் தாக்கல் செய்த சிஐடி போலீசார், நித்யானந்தாவின் சிறைக் காவலை நீட்டிக்க வலியுறுத்தினர்.இந்த வேண்டுகோளை ஏற்ற ராம்நகர் நீதிமன்றம், வரும் 26ம் தேதி வரை நித்யானந்தாவை சிறையில் வைக்க உத்தரவிட்டது.

நித்யானந்தா கைது,ஜெயில் கதவு திறந்தாச்சு: காற்றாக வருவது என்ன – II

ஏப்ரல்23, 2010

நித்யானந்தா கைது,ஜெயில் கதவு திறந்தாச்சு: காற்றாக வருவது என்ன – II

இனி மறுபடியும் நித்யானந்தா வந்து விட்டதால், ஊடகங்கள் இனி எல்லா கதவுகளையும் திறந்தே வைக்கும். 100ற்க்கும் மேலாக வெயில் அடித்தாலும் கவலையில்லை, இனிமேல் தினம் தினம் சூடான செய்திகள் தாம்!

போதாக் குறைக்கு தாந்திரிக முறையிலான செக்ஸ் என்றெல்லாம் கிளம்பி விட்டார்கள்.

நிச்சயமாக, இந்தியா இடைக் காலத்திற்குச் செல்கிறது.

ஆமாம், முகமதியர்கள் / முகலாயர்கள், துருக்கியர்கள் எப்படி காம வேட்டையில் ஈடுபட்டு, இந்தியப் பெண்களை கற்பழித்து செக்ஸ் அனுபவித்தார்களோ, இந்திய பண்டிதர்களை வலுக்கட்டாயமாக அத்தகைய நூல்களை எழுத வைத்தார்களோ, அதன்படியே செக்ஸ் அனுபவித்து குரூரங்களில் ஈடுபட்டார்களோ…………………..அவ்விவகாரங்கள் எல்லாம் வெளிப்படும்!

நித்யானந்தாவிடம் நடந்த விசாரணையில் புது தகவல்கள்
ஏப்ரல் 24,2010,00:00  IST

http://www.dinamalar.com/General_detail.asp?news_id=24389

பெங்களூரு:கர்நாடகா சி.ஐ.டி., போலீசாரின் வசமுள்ள சாமியார் நித்யானந்தாவிடம் நேற்று ரகசியமாக விசாரணை செய்யப்பட்டது. விசாரணையின் போது, அவரிடமிருந்து புதுப் புது தகவல்களைக் கேட்ட சி.ஐ.டி., போலீசார், அதிர்ந்தனர். நேற்று அவரை பிடதி ஆசிரமத்திற்கு அழைத்து வந்த போலீசார், அவர் எதிரிலேயே சோதனையிட்டு, முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளனர். அது குறித்த விவரங்களை வெளியிட முடியாது என்று மறுத்து விட்டனர்.இமாச்சல பிரதேசத்திலிருந்து பெங்களூரு வந்த நித்யானந்தாவையும், அவரது சீடர் நித்ய பக்தானந்தாவையும், நேற்று முன்தினம் இரவு 9.20 மணியளவில், ராம்நகருக்கு அழைத்து வந்தனர். ராம்நகர் அரசு மருத்துவமனையில், மருத்துவ பரிசோதனை செய்வதற்காக நித்யானந்தா அனுமதிக்கப்பட்டார். இரவு 10.25 வரை அவருக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது.

பின், நீதிபதி புஷ்பாவதி வீட் டிற்கு, இருவரும் காரில் அழைத்து செல்லப்பட்டனர். ராம்நகர் மாவட்ட செஷன்ஸ் கோர்ட் நீதிபதி புஷ்பாவதி வீட்டில் சாமியாரும், அவரது சீடரும், இரவு 10.35 மணிக்கு ஆஜர்படுத்தப்பட்டனர்.பின், வெளியே வந்த அரசு வழக்கறிஞர் வாரப் கூறுகையில், ”நித்யானந்தாவையும், அவரது சீடர் பக்தானந்தாவையும் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என, போலீஸ் தரப்பில் கேட்டுக் கொண்டனர். நாளை மறுதினம் வரை இருவரையும் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க, நீதிபதி அனுமதி அளித்துள்ளார். நித்யானந்தாவுக்கு ஜாமீன் வழங்கக் கோரி, யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. நித்யானந்தாவை, போலீசார் துன்புறுத்தியதாக தகவல்கள் வெளியானது. ஆனால், தன்னை போலீசார் துன்புறுத்தவில்லை என்றும், நல்லபடியாக கவனிப்பதாகவும் நீதிபதி முன்னிலையில் நித்யானந்தா கூறினார்,” என்றார்.நீதிபதி வீட்டிலிருந்து நித்யானந்தாவை போலீசார் வெளியே அழைத்து வந்த போது, யாரோ ஒரு நபர், சாமியாரை தகாத வார்த்தையால் திட்டியவாறு அடிக்க முயற்சித்தார். உடனடியாக அருகிலிருந்த போலீசார், அந்த மர்ம நபரை இழுத்துச் சென்றனர். பின், அந்த நபரை போலீஸ் வேனில் ஏற்றி, போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

பின், சாமியாரையும், அவரது சீடரையும், போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.பெங்களூரு பேலஸ் ரோட்டிலுள்ள சி.ஐ.டி., போலீஸ் அலுவலகத்தில், நித்யானந்தாவிடம் நேற்று காலையிலிருந்து அதிகாரிகள் குழு விசாரணையை துவக்கினர்.விசாரணை நடத்துவதற்காக பெரிய கேள்வி பட்டியலையே தயாரித்து வைத்திருந்தனர். கேள்வி கேட்கக் கேட்க, நித்யானந்தா புதுப் புது தகவலை கூறியதால், போலீசார் அதிர்ந்தனர்.நேற்று பிடதி ஆசிரமத்திற்கு சாமியாரை அழைத்துச் சென்ற போலீசார், அவர் முன்னிலையிலேயே அங்கு சோதனை மேற்கொண்டனர். முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றிய போலீசார், அது குறித்த விவரங்களைத் தெரிவிக்க மறுத்து விட்டனர்.நித்யானந்தா, தன் மீதான வழக்கு களை வாபஸ் பெற வேண்டும் என்று கோரி, கர்நாடகா ஐகோர்ட் டில் தாக்கல் செய்திருந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

கர்நாடக கோர்ட்டில் சாமியார் நித்யானந்தா ஆஜர்
ஏப்ரல் 23,2010,00:00  IST
Front page news and headlines today

பெங்களூரு : இமாச்சலபிரதேசத்தில் கைது செய்யப்பட்ட செக்ஸ் சாமியார் நித்யானந்தா நேற்றிரவு பெங்களூரு அழைத்து வரப்பட்டார். அங்கிருந்து ராம் நகர் நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். நடிகை ரஞ்சிதாவுடன், சாமியார் நித்யானந்தா உல்லாசமாக இருந்த காட்சிகள் வெளியானது. சாமியார் மீது லெனின் என்பவர், சென்னை போலீசில் புகார் கொடுத்தார். இதை வைத்து, சாமியார் நித்யானந்தா மீது மத உணர்வுகளை புண்படுத்துதல், மோசடி, கற்பழிப்பு, கொலை மிரட்டல், சதி செய்தல் உள்ளிட்ட ஆறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப் பட்டது. பின்னர் இந்த வழக்குகள் கர்நாடகாவுக்கு மாற்றப்பட்டது.

இமாச்சல பிரதேச மாநிலம் சோலன் மாவட்டம் அர்கி என்ற இடத்தில் நித்யானந்தாவும், அவருடன் இருந்த சிலரும் கர்நாடகா போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தங்கியிருந்த வீட்டில், லேப்-டாப், கம்ப்யூட்டர்கள், வீடியோ கேமராக்கள், மூன்று லட்சம் ரூபாய் ரொக்கப் பணம், ஏழாயிரம் அமெரிக்க டாலர், டிராவலர் செக்குகள், வெளிநாட்டு கரன்சிகள், சிம் கார்டுகள், மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர், சாமியார் நித்யானந்தாவும், அவருடன் இருந்தவர்களும் சிம்லா சிறையில் அடைக்கப்பட்டனர். நேற்று, அர்கி நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன்னிலையில், நித்யானந்தா உள்ளிட்டோர் ஆஜர்படுத்த பட்டனர். முறைப்படி வாரன்ட் பெற்று, பெங்களூருவுக்கு அழைத்து வர ஏற்பாடு செய்தனர். நித்யானந்தாவை வேன் மூலம் சண்டிகாருக்கு கொண்டு வந்து, பின்னர் விமானம் மூலம் மும்பைக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்து பெங்களூருவுக்கு இரவு 7 மணிக்கு கொண்டுவந்தனர்.

பெங்களூரு தேவனஹள்ளி சர்வதேச விமான நிலையத்தில், போலீசார் குவிக்கப்பட்டனர். இரவு 7 மணியளவில் சாமியாருடன் விமானம் பெங்களூரு வந்தது. போலீஸ் காரில், நித்யானந்தாவை பாதுகாப்பாக ஏற்றி, ராம் நகருக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப் பட்டார். விமான நிலையத்தில் இருந்து சாமியாரை வெளியே அழைத்து வந்தபோது, கன்னட அமைப்புகளைச் சேர்ந்த சிலர் கேலி, கிண்டல் செய்தனர். ஒரு கட்டத்தில் சாமியாரைத் தாக்கவும் சிலர் முற்பட்டனர். நித்யானந்தாவை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க, இன்று கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்ய உள்ளனர். அவரை விசாரிக்கும் போது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

நித்யானந்தாவை தாக்க முயற்சி: பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் சாமியார் நித்யானந்தாவை கன்னட அமைப்பினர் கேலியும், கிண்டலும் செய்து தாக்க முயற்சித்தனர். ஆனால், பலத்த போலீஸ் பாதுகாப்பிற்கிடையில் சாமியார் அழைத்து செல்லப்பட்டார். சாமியார் நித்யானந்தா, மும்பையிலிருந்து விமானம் மூலம் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு, நேற்றிரவு 7 மணியளவில் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார். விமான நிலையத்திலிருந்து போலீஸ் வாகனம் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு வருவதற்குள், பெரும் நெரிசல் ஏற்பட்டது. போலீஸாரின் பலத்த கெடுபிடிக்கிடையே சாமியார் நித்யானந்தா காருக்கு அழைத்து வரப்பட்டார். பத்திரிகையாளர்களும் அதிகளவில் குழுமியிருந்தனர். சாமியார் நித்யானந்தா விமான நிலைய வாசல் பகுதிக்கு வரும் போது, அங்கு நின்றிருந்த கன்னட அமைப்பினர், அவரை பார்த்து கேலியும், கிண்டலும் செய்தனர். சிலர், அவரை தாக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. போலீஸாரின் கெடுபிடிக்கு இடையே, சாமியார் சிரித்தவாரே போலீஸ் காரில் ஏறினார்.

நித்யானந்தா பிடிவாரன்ட் நிறுத்தி வைப்பு
ஏப்ரல் 23,2010,00:00  IST

Court news detail

வழக்கை மாற்றிவிட்டு நாடகம் ஆடும் சட்டங்கள்: நித்யானந்தா வக்கீல்கள், ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் அளித்த உறுதிமொழியை ஏற்று, அவரது பிடிவாரன்ட் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூர்  வக்கீல் செல்வமணி, கடந்த மாதம் 11ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில், காவி உடை அணிந்து தவறுகள் செய்த சாமியார் நித்யானந்தா மீது, 295ஏ சட்டப் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வழக்கு தொடர்ந்தார். வழக்கு மறுநாள் விசாரணைக்கு வந்தது. நீதிபதி குணசேகர் விசாரித்தார். மனுவில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டிற்கு ஆரம்பக் கட்ட முகாந்திரம் இருப்பதாக ஏற்றுக் கொண்டு, சாமியார் நித்யானந்தா, ஏப்., 2ம் தேதி கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்பும்படி உத்தரவிட்டார். அன்று புனித வெள்ளியையொட்டி கோர்ட் விடுமுறை. எனவே, ஏப்., 19ல் நித்யானந்தா கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். ஆனால், 19ம் தேதி நித்யானந்தா ஆஜராகவில்லை. இதைத் தொடர்ந்து நித்யானந்தாவுக்கு நீதிபதி பிடிவாரன்ட் பிறப்பித்தார். அவரை கண்டுபிடித்து மே மாதம் 20ம் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படி கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டம் போலீஸ் எஸ்.பி.,க்கு நீதிபதி குணசேகரன் உத்தரவு பிறப்பித்தார். இமாச்சலப் பிரதேசத்தில் தங்கியிருந்த நித்யானந்தாவை பெங்களூரு போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்நிலையில், நித்யானந்தாவின் வக்கீல்கள் இருவர், ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் நேற்று ஆஜராயினர். நித்யானந்தாவை வரும் ஜூன்  20ம் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்துவதாக உறுதியளித்தனர். அதை ஏற்று நீதிபதி குணசேகரன் வழக்கை ஜூன் 20ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

டில்லி இமாம் முன்பு இம்மாதிரி கைது செய்யப்படவில்லையே ஏன்? சட்டம் இந்தியாவில் சரியாக நிறைவேற்றப் படுவதில்லை, என்பதற்கு நித்யானந்தா விவகாரம் மூலம் வெளிப்படுகிறது. நித்யானந்தா தண்டிக்கப்பட வேண்டியதுதான், ஆனால், ஏன் அதே சட்டம் மற்றவர்கள் விஷயத்தில் அமைதியாக செயல் படுகிறது இல்லை செயல்படாமலேயே இருந்து விடுகிறது என்ற கேல்விகள் தான் செக்யூலரிஸ நாட்டில் எழுகின்றன. அதிலும் குற்றமீறல்களைச் செய்தவர்கள் முஸ்லீம்கள், கிருத்துவர்கள் என்றதும் ஒன்று அமுக்கி வாசிக்கப் படுகிறது, இல்லை ஊடகங்களில் செய்திகளே வராது (குறிப்பாக தமிழில் வராது), குற்றப் பத்திரிக்கைத் தாக்குதல் செய்யப்பட்ட பிறகும் கைதும் செய்யப் பட மாட்டார்கள்.

சங்கராச்சாரி கைது: டில்லி இமாம் விவகாரத்தில் இப்படித் தான் முன்பு மூன்றிற்கும் மேலான உயர்நீதி மன்றங்களினின்று கைது வாரண்ட் பிறப்பிக்கப் பட்டிருந்தது.  “பாரத மாதா ஒரு தெவிடியா”, “நீதிபதிகளின் கை-கால்களை உடைக்க வேண்டும்”, “………………..”, என்றெல்லாம் பேசியதர்காக அவ்வாறான வாரண்ட்டுகள் பிரப்பிக்கப்பட்டன. ஆனால், சாகும் வரை அந்த ஆள் கைது செய்யப் படவில்லை. ஆனால், அந்த இடைக் காலத்தில் இரண்டு சங்கராச்சாரியார்கள் அதே மாதிரியான, ஆனால் மிகவ்ய்ம் நாகரிகமான முறையில், இந்துக்கள் உரிமைகள் காக்கப் படுவதில்லை………….என்று பேசியதர்காக, கைது செய்யப் பட்டிருக்கிறார்கள்.

ஆகவே, நிச்சயமாக, குற்றங்களில் கூட மதரீதியிலாக நீதி மன்றக்கள், காவல் துறை, ஊடகங்கள் முதலியன, பாரபட்ச்சத்துடன் உள்ளன, குறிப்பாக இந்துக்களுக்கு எதிராகச் செயல்படுகின்றன என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.