Archive for the ‘நிரியானம்’ Category

கன்னியாஸ்திரி கற்பழிப்பு புகார் எதிரொலி: ராஜரத்தினம் வெளியே, செபஸ்டியன் உள்ளே – தொடரும் மர்மங்கள்!

ஒக்ரோபர்15, 2010

கன்னியாஸ்திரி கற்பழிப்பு புகார் எதிரொலி: ராஜரத்தினம் வெளியே, செபஸ்டியன் உள்ளே – தொடரும் மர்மங்கள்!

ஒரு ஜெஸுவைட் சாமி வெளியே, மற்றொன்று உள்ளே: திருச்சி தூய வளனார் கல்லூரி முதல்வர் ராஜரத்தினம் மீது கன்னியாஸ்திரி கொடுத்த புகாரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருவதைத் தொடர்ந்து, அக்கல்லூரி முதல்வராக (பொறுப்பு) செபஸ்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி தூய வளனார் கல்லூரியின் முதல்வராக ராஜரத்தினம் பணிபுரிந்து வந்தார். அவர் மீது, அரியலூர் ஆண்டிமடத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி, கோட்டை மகளிர் போலீசில் கற்பழிப்பு புகார் அளித்தார். இப்புகாரை போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், ராஜரத்தினத்திற்கு பதிலாக செபஸ்டியனை முதல்வராக கல்லூரி நிர்வாகம் நியமித்துள்ளது[1]. தமிழக ஜெஸ்யூட் கல்லூரிகளின் தலைவர் தேவதாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “போலீஸ் வழக்கு விசாரணையை தொடர்ந்து, தன்னை ஒரு மாதம் முதல்வர் பணியிலிருந்து விடுவிக்குமாறு கடிதம் எழுதியுள்ளார். இதைத் தொடர்ந்து, ராஜரத்தினத்திற்கு பதிலாக நேற்று முதல் செபஸ்டியன், தூய வளனார் கல்லூரியின் முதல்வராக (பொறுப்பு) நியமிக்கப்படுகிறார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது[2].

கன்னியாஸ்திரிக்கு மருத்துவ பரிசோதனை[3]: கற்பழிப்பு புகார் கூறிய கன்னியாஸ்திரி ப்ளாரன்ஸ் மேரிக்கு, அரசு மருத்துவமனையில் நேற்று, மருத்துவப் பரிசோதனை நடந்தது. கல்லூரி முதல்வரை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த 11 பேர் கைது செய்யப்பட்டனர். திருச்சி தூய வளனார் கல்லூரி முதல்வர் ராஜரத்தினம் மீது, ப்ளாரன்ஸ் மேரி (28) என்ற கன்னியாஸ்திரி, கோட்டை மகளிர் போலீசில் கற்பழிப்பு புகார் அளித்தார். அதன்படி, கல்லூரி முதல்வர் ராஜரத்தினம் மற்றும் அவருடன் சேர்ந்து மிரட்டல் விடுத்த தேவதாஸ், சேவியர் பிரான்சிஸ், சேவியர் ஆகிய மூன்று பாதிரியார்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கன்னியாஸ்திரி ப்ளாரன்ஸ் மேரியை, நேற்று முன்தினம் மாலை திருச்சி ஜே. எம்., 1 நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். கன்னியாஸ்திரிக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய, நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி, நேற்று காலை 10 மணிக்கு ப்ளாரன்ஸ் மேரி, அவரது அக்கா மேரி, கோட்டை பெண் போலீசார் இருவர், கி.ஆ.பெ.விஸ்வநாதம் மருத்துவக் கல்லூரி வந்தனர்[4]. அங்கு, அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடந்தது. “மருத்துவப் பரிசோதனையின் முடிவு, இன்று மாலை போலீசாரிடம் வழங்கப்படும்’ என, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ப்ளாரன்ஸ் மேரி கன்னித்தன்மை இழந்துள்ளார், உடலுறவு கொண்டதற்கான தடயம் உள்ளது. கருக்கலைப்பு செய்தாரா என்பதை தற்போதைய சூழ்நிலையில் கண்டுபிடிக்க இயலாது: இப்படி மருத்துவர் சொல்வதும் ஆச்சரிமாக உள்ளது. முதலில் ராஜரத்தினத்தை பரிசோதித்து, அவரது அணுக்கள் / டி.என்.ஏ மூலம், உடலுறவு கொண்டதை நிரூபிக்கலாம். கருக்கலைப்பு செய்தாரா இல்லையா என்பதை பிறகு பார்த்து கொள்ளலாம். ஆனால், இதுவரை ராஜரத்தினம் பரிசோதனைக்குட்படாதது சந்தேகத்திற்குரியதாகவே உள்ளது. அவர் காணாமல் மறைந்திருக்கிறார் என்று வேறு சொல்லப்படுகிறது[5]. மேலும், “தென்னூரில் உள்ள கே.எம்.சி.மருத்துவமனையில் கர்ப்பத்தை கலைக்க வைத்தார்” என்று ப்ளாரன்ஸ் மேரியே குறியுள்ளபோது, அங்கு சென்று விசாரணை செய்து உண்மையை அறியலாம்[6]. இதையெல்லாம், நாம் ஒன்றும் போலீஸுக்குச் சொல்லித் தரவேண்டிய அவசியம் இல்லை. ஹைதராபாத் பிரின்ச்பால், ஊட்டி பிரின்ஸ்பால் / தாளாளர் என்று எல்லோருமே இதே வழியைத்தான் பின்பற்றியுள்ளனர்.

ப்ளாரன்ஸ் மேரி, மற்றும் அவரது அக்கா நிருபர்களுடன் பேசுவதை ஏன் போலீஸார் தடுக்கின்றனர்? ப்ளாரன்ஸ் மேரியின் அக்கா, வளாகத்தின் உள்ளே நிருபர்களிடம் எப்படி நடந்தது என்பது குறித்து, கண்ணீருடன் விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த, பாதுகாப்புக்கு வந்திருந்த கோட்டை மகளிர் போலீசார், அவரை மிரட்டி நிருபர்களிடம் பேச விடாமல் தடுத்ததோடு, ப்ளாரன்ஸ் மேரியும் நிருபர்களிடம் பேச முடியாதவாறு அழைத்துச் சென்றனர்[7]. முன்பு ஒரிஸா கன்னியாஸ்திரி விஷயத்தில், அந்த கன்னியை பேச வைத்து உலகமெல்லாம் டிவிக்களில் ஒலிபரப்பு செய்தனர். இப்பொழுது, இந்த கன்னியாஸ்திரியைத் தடுக்கும் மர்மம் என்ன? ஒருவேளை பிஜேபி ஆதரவு கட்சி இங்கு ஆளவில்லை என்பதாலா? இல்லை, கருணாநிதி ஆட்சியில், அத்தகைய பிரச்சினை வந்து விட்டது என்பதாலா, அல்லது வீரமணிக்கு வேண்டிய கிருத்துவ சாமியார் மாட்டிக் கொண்டதாலா?

ப்ளாரன்ஸ் மேரியும் இசைக் கல்லூரியிலிருந்து நீக்கம்[8]: இந்நிலையில், திருச்சி தூய வளனார் கல்லூரி முதல்வர் மீது கற்பழிப்பு புகார் கூறிய ப்ளாரன்ஸ் மேரி, இசைக் கல்லூரியிலிருந்து நீக்கப்பட்ட தகவல் வெளியானது. இச்சூழ்நிலையில், தூய வளனார் கல்லூரி முதல்வர் ராஜரத்தினத்தைக் கண்டித்தும், உடனடியாக அவரை கைது செய்ய வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. ம.க.இ.க., அமைப்பைச் சேர்ந்த மூன்று பெண்கள் உள்ளிட்ட 11 பேர், கல்லூரி முக்கிய வாசலில், நேற்று காலை ஆர்ப்பாட்டம் செய்து, திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, கோட்டை போலீசார் அவர்களை கைது செய்தனர். திருச்சியில் கற்பழிப்பு புகாரில் சிக்கிய தூய வளனார் கல்லூரி முதல்வர் ராஜரத்தினம் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை, வரும் 18ம் தேதிக்கு மதுரை ஐகோர்ட் கிளை தள்ளிவைத்தது.

மருத்துவ பரிசோதனையில் டாக்டர் புதிய தகவல்: “திருச்சி தூய வளனார் கல்லூரி முதல்வர் மீது புகார் கூறிய கன்னியாஸ்திரிக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவர் கருக்கலைப்பு செய்தாரா என்பதை கண்டறிய முடியவில்லை’ என, டாக்டர் அறிக்கை அளித்துள்ளார்[9]. புகார் அளித்த ப்ளாரன்ஸ் மேரிக்கு, மாவட்ட அரசு மருத்துவமனையில் நேற்று மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. டாக்டர் பாக்யவதி மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டார். பரிசோதனை முடிவு நேற்று மாலையே போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. பரிசோதனை முடிவில், “ப்ளாரன்ஸ் மேரி கன்னித்தன்மை இழந்துள்ளார், உடலுறவு கொண்டதற்கான தடயம் உள்ளது. கருக்கலைப்பு செய்தாரா என்பதை தற்போதைய சூழ்நிலையில் கண்டுபிடிக்க இயலாது‘ என்று கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போலீசாரிடம் அளிக்கப்பட்டுள்ள மருத்துவப் பரிசோதனை அறிக்கை விரைவில் வழக்கு நடைபெறும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது[10]. பாதிரியார் ராஜரத்தினம் தன்னை கற்பழித்து, கருக்கலைப்பு செய்ய வைத்தார் என்பதே கன்னியாஸ்திரி ப்ளாரன்ஸ் மேரியின் புகார். ஆனால், நேற்று அவருக்கு நடந்த பரிசோதனையில் கருக்கலைப்பு பற்றி தற்போதைய சூழ்நிலையில் கண்டுபிடிக்க இயலாது என்று மருத்துவப் பரிசோதனை அறிக்கையில் கூறியிருப்பது, வழக்கின் நம்பத்தன்மையை சந்தேகப்படும் சூழலை உருவாகியுள்ளது என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வீரமணிக்கு வேண்டிய கலைக்காவேரி, பாதிரி முதலிய சமாச்சாரங்கள்[11]: கலைக்காவேரி கிருத்துவ சாமியார் திராவிட கழக வீரமணிக்கு மிகவும் வேண்டப்பட்டவர். சுக-துக்கம், பிறப்பு-இறப்பு என்று எல்லாவற்றிலும் பங்கு கொள்ளும் அளவிற்கு நெருக்கமானவர். அவரது மனைவி மோஹனாவும் மிகவும் வேண்டப்பட்டவர். வீரமணி நொந்து போய்  எழுதியது[12], “திருச்சியில் கலைக் காவேரி என்ற அருமையான ஒரு நுண்கலைக் கல்லூரி யின் நிறுவனரும், தலை சிறந்த மனிதநேயரும், பண் பாட்டின், பாசத்தின் ஊற்று மான அருள்திரு ஜார்ஜ் அடி களார் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி பேரிடியாக என்னையும், எங்கள் குடும் பத்தினரையும், இயக்கத் தினரையும், திருச்சி பெரியார் கல்வி நிறுவனத்தவர்களையும் தாக்கியது. திடீரென வந்த அந்தச் செய்தியிலிருந்துஇப்பெரும் இழப்பிலிருந்து எப்படி மீளுவதோ அறியோம்.” இந்த கல்லுரியில் படிக்கும் / படித்த மாணவிதான் ப்ளாரன்ஸ் மேரி!

பெண் இயக்க அமைப்புகள் வழக்கம் போல மௌனம் காக்கின்றன: வழக்கம் போல பெண்கள் இயக்கங்கள், பெண்கள் உரிமை இயக்கங்கள், பெண்கள் மனித உரிமை இயக்கங்கள், ……………..என்றெல்லாம் வாய் கிழிய பேசும் கத்தும், சுவரொட்டிகள் ஒட்டும் கூட்டங்கள் அமைதியாக இருக்கின்றன. சன் டிவி, தினகரன், நக்கீரன்……………..எல்லாம் இருக்கின்ற இடமே தெரியவில்லை! இதெல்லாம் ஆச்சரியமாக, மர்மமாகவே உள்ளன. இதே நித்யானந்தா என்றால் வரிந்து கொண்டு வந்திருப்பர். ஒரு நாளைக்கு 50 / 100 தடவை திரும்ப-திரும்ப காட்டியிருப்பர். ஏன் ராஜரத்தினம் இடத்தில் கேட்டு அந்த வீடியோவை சன் செனல்களில் “நவராத்திரிக்கு” விஷேழமாகக் காட்டிக் கொண்டிருக்கலாமே? லெனின் குருப்பிடம் சொன்னால், உடனே சிடிக்கள் போட்டு எடுத்துக் கொண்டு வந்திருப்பாரே?


[1] தினமலர், கன்னியாஸ்திரி கற்பழிப்பு புகார் எதிரொலி : கல்லூரி முதல்வராக செபஸ்டியன் நியமனம், அக்டோபர் 14, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=105920

[2] வேதபிரகாஷ், பாதிரியார் மயக்க மருந்து கொடுத்து கற்பழிப்பு, இரண்டுமுறை கர்ப்பம், கருகலைப்பு, போனில் ஆபாச படமெடுப்பு!, https://womanissues.wordpress.com/2010/10/14/பாதிரியார்-மயக்க-மருந்து/

[3] வேதபிரகாஷ், பாதிரியார் மயக்க மருந்து கொடுத்து கற்பழிப்பு, கருகலைப்பு, போனில் ஆபாச படமெடுப்பு!, http://christianityindia.wordpress.com/2010/10/13/பாதிரியார்-மயக்க-மருந்து/

[4]தினமலர், கன்னியாஸ்திரிக்கு மருத்துவ பரிசோதனை,  அக்டோபர் 13,2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=105413

[5] ஆனால் கோர்ட்டில் மட்டும், பிணை விடுதலைக்கு ஆவணங்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. அப்பொழுது, ஏன் போலீஸார் சென்று பிடிக்கக் கூடாது? எல்லாம் ரூபியா சையதுக்கு பிரியாணி கொடுத்த கதைதான்!

[6] ஒருவேளை அந்த மருத்துவமனையும் கிருத்துவர்களது என்று அத்தாட்சிக்களை மறைத்து விட்டால், கர்த்தரே வந்தாலும் ஒன்று செய்ய முடியாது.

[7] போலீஸாரின் அடக்குமுறை இதில் உள்ளதா, அப்படி இருந்தால் யார் அவ்வாறு ஆட்டிப் படைப்பது என்பதனையும் நோக்கவேண்டும். கருணாநிதியே அதற்கு பொறுப்பாக இருப்பதால், அரசியல் தலையீடு இருப்பதைத்தான் காட்டுகிறது. முன்புகூட ஒரு திமுக கவுன்சிலர் நிர்வாண படமெடுப்பு, கற்பழிப்பு வழக்குகளில், அவரது ஆணையைப் பெற்றப் பிறகுதான் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வந்துள்ளன.

[8] இதுவும் ராஜரத்தினத்திற்கு உதவுவதாகவே உள்ளது. ஒன்று ப்ளாரன்ஸ் மேரியின் சம்பந்தப்படுள்ள ஆவணங்கள் / அத்தாட்சிகள் அழிக்கப்படும், இரண்டு, அவளை மறைமுகமாக மிரட்டவும் உபயோகப்படும்.

[9] இவ்வாறு கூறுவதே, பரிசோதனை முழுமையாக செய்யப்படவில்லை மற்று மருத்துவர்கள் பாரபட்சமாக செயல்படுகின்றனர் என்பது நன்றாகவே தெரிகின்றது.

[10] அலஹாபாத் தீர்ப்பு விஷயத்தில் அகழ்வாய்வு அறிக்கை வெளிப்படையாக மக்களுக்கு தெரியும் வகையில் வெளியிடப்படவேண்டும் என்று மெத்தப் படித்தவர்கள் எல்லாம் கையெழுத்துப் போட்டு கடிதம் கொடுத்துள்ளனர். ஆனால்,, இதைப் பற்றி அந்த நியாவான்களுக்கு ஒன்றும் புரியவில்லையா?

[11] வேதபிரகாஷ், பெரியாருடைய ஆவி, தினகரன் ஆவி, ஜார்ஜின் ஆவி……….., http://dravidianatheism2.wordpress.com/2010/01/01/பெரியாருடைய-ஆவி-தினகரன்/

[12] விடுதலை தேதி, 20-102008: அருள்திரு ஜார்ஜ் அடிகளாருக்கு எமது வீர வணக்கம்: வீரமணி சொன்னது!; http://files.periyar.org.in/viduthalai/20081021/news03.html

http://files.periyar.org.in/viduthalai/20081021/thalai.html

நிர்வாணமான பெண்கள், தயங்கிய போலீஸார், தப்பிவிட்ட விபச்சாரிகள்!

மே14, 2010

நிர்வாணமான பெண்கள், தயங்கிய போலீஸார், தப்பிவிட்ட விபச்சாரிகள்!

உடம்பு விற்று விபச்சாரத் தொழில் நடப்பதாக போலீஸாருக்கு செய்தி வருகிறது.

அதுவும் அவ்வாறான பலான தொழிலில் ஈடுபடுத்திய பெண்கள் மொட்டுவிட்டு, விரியத் துடித்துக் கொண்டிருக்கும் வயதுள்ள “டீ-ஏஜ்” பெண்களாம்!

காப்பாற்றி, அவர்களை மீட்கலாம், என்று போலீஸார் சென்றபோது, அலமாரிகள், கப்போர்டுகள் என்ற இடங்களில் எல்லாம் ஒளிந்த் கொண்டு வெளிவராமல் சதாய்த்தனராம்.

வலுக்கட்டாயமாக, வெளியே இழுத்தபோது, அப்பெண்கள் தங்களுடைய உடைகளை எல்லாம் அவித்துப் போட்டுவிட்டனராம்.

அதுமட்டுமல்லாது, நிர்வாணமாக நின்று கொண்டு, “எங்கே, இப்பொழுது, என்னை பிடி பார்ப்போம்”, என்று கிண்டல் வேறு செய்தனராம்.

என்ன செய்வது என்று மலைத்து, தயங்கி நின்றபோது, அவர்கள் தப்பித்து ஓடியே விட்டனராம்!

இந்திய பெண்களின் வீரம் அலாதியாகத்தான் உள்ளது.

குஷ்பு, சுதா, புவனேஸ்வரி……………………முதலியோர் இவர்களின் பிச்சை வாங்கவேண்டும்.

நித்யானந்தா கைது,ஜெயில் கதவு திறந்தாச்சு: காற்றாக வருவது என்ன – II

ஏப்ரல்23, 2010

நித்யானந்தா கைது,ஜெயில் கதவு திறந்தாச்சு: காற்றாக வருவது என்ன – II

இனி மறுபடியும் நித்யானந்தா வந்து விட்டதால், ஊடகங்கள் இனி எல்லா கதவுகளையும் திறந்தே வைக்கும். 100ற்க்கும் மேலாக வெயில் அடித்தாலும் கவலையில்லை, இனிமேல் தினம் தினம் சூடான செய்திகள் தாம்!

போதாக் குறைக்கு தாந்திரிக முறையிலான செக்ஸ் என்றெல்லாம் கிளம்பி விட்டார்கள்.

நிச்சயமாக, இந்தியா இடைக் காலத்திற்குச் செல்கிறது.

ஆமாம், முகமதியர்கள் / முகலாயர்கள், துருக்கியர்கள் எப்படி காம வேட்டையில் ஈடுபட்டு, இந்தியப் பெண்களை கற்பழித்து செக்ஸ் அனுபவித்தார்களோ, இந்திய பண்டிதர்களை வலுக்கட்டாயமாக அத்தகைய நூல்களை எழுத வைத்தார்களோ, அதன்படியே செக்ஸ் அனுபவித்து குரூரங்களில் ஈடுபட்டார்களோ…………………..அவ்விவகாரங்கள் எல்லாம் வெளிப்படும்!

நித்யானந்தாவிடம் நடந்த விசாரணையில் புது தகவல்கள்
ஏப்ரல் 24,2010,00:00  IST

http://www.dinamalar.com/General_detail.asp?news_id=24389

பெங்களூரு:கர்நாடகா சி.ஐ.டி., போலீசாரின் வசமுள்ள சாமியார் நித்யானந்தாவிடம் நேற்று ரகசியமாக விசாரணை செய்யப்பட்டது. விசாரணையின் போது, அவரிடமிருந்து புதுப் புது தகவல்களைக் கேட்ட சி.ஐ.டி., போலீசார், அதிர்ந்தனர். நேற்று அவரை பிடதி ஆசிரமத்திற்கு அழைத்து வந்த போலீசார், அவர் எதிரிலேயே சோதனையிட்டு, முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளனர். அது குறித்த விவரங்களை வெளியிட முடியாது என்று மறுத்து விட்டனர்.இமாச்சல பிரதேசத்திலிருந்து பெங்களூரு வந்த நித்யானந்தாவையும், அவரது சீடர் நித்ய பக்தானந்தாவையும், நேற்று முன்தினம் இரவு 9.20 மணியளவில், ராம்நகருக்கு அழைத்து வந்தனர். ராம்நகர் அரசு மருத்துவமனையில், மருத்துவ பரிசோதனை செய்வதற்காக நித்யானந்தா அனுமதிக்கப்பட்டார். இரவு 10.25 வரை அவருக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது.

பின், நீதிபதி புஷ்பாவதி வீட் டிற்கு, இருவரும் காரில் அழைத்து செல்லப்பட்டனர். ராம்நகர் மாவட்ட செஷன்ஸ் கோர்ட் நீதிபதி புஷ்பாவதி வீட்டில் சாமியாரும், அவரது சீடரும், இரவு 10.35 மணிக்கு ஆஜர்படுத்தப்பட்டனர்.பின், வெளியே வந்த அரசு வழக்கறிஞர் வாரப் கூறுகையில், ”நித்யானந்தாவையும், அவரது சீடர் பக்தானந்தாவையும் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என, போலீஸ் தரப்பில் கேட்டுக் கொண்டனர். நாளை மறுதினம் வரை இருவரையும் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க, நீதிபதி அனுமதி அளித்துள்ளார். நித்யானந்தாவுக்கு ஜாமீன் வழங்கக் கோரி, யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. நித்யானந்தாவை, போலீசார் துன்புறுத்தியதாக தகவல்கள் வெளியானது. ஆனால், தன்னை போலீசார் துன்புறுத்தவில்லை என்றும், நல்லபடியாக கவனிப்பதாகவும் நீதிபதி முன்னிலையில் நித்யானந்தா கூறினார்,” என்றார்.நீதிபதி வீட்டிலிருந்து நித்யானந்தாவை போலீசார் வெளியே அழைத்து வந்த போது, யாரோ ஒரு நபர், சாமியாரை தகாத வார்த்தையால் திட்டியவாறு அடிக்க முயற்சித்தார். உடனடியாக அருகிலிருந்த போலீசார், அந்த மர்ம நபரை இழுத்துச் சென்றனர். பின், அந்த நபரை போலீஸ் வேனில் ஏற்றி, போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

பின், சாமியாரையும், அவரது சீடரையும், போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.பெங்களூரு பேலஸ் ரோட்டிலுள்ள சி.ஐ.டி., போலீஸ் அலுவலகத்தில், நித்யானந்தாவிடம் நேற்று காலையிலிருந்து அதிகாரிகள் குழு விசாரணையை துவக்கினர்.விசாரணை நடத்துவதற்காக பெரிய கேள்வி பட்டியலையே தயாரித்து வைத்திருந்தனர். கேள்வி கேட்கக் கேட்க, நித்யானந்தா புதுப் புது தகவலை கூறியதால், போலீசார் அதிர்ந்தனர்.நேற்று பிடதி ஆசிரமத்திற்கு சாமியாரை அழைத்துச் சென்ற போலீசார், அவர் முன்னிலையிலேயே அங்கு சோதனை மேற்கொண்டனர். முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றிய போலீசார், அது குறித்த விவரங்களைத் தெரிவிக்க மறுத்து விட்டனர்.நித்யானந்தா, தன் மீதான வழக்கு களை வாபஸ் பெற வேண்டும் என்று கோரி, கர்நாடகா ஐகோர்ட் டில் தாக்கல் செய்திருந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

கர்நாடக கோர்ட்டில் சாமியார் நித்யானந்தா ஆஜர்
ஏப்ரல் 23,2010,00:00  IST
Front page news and headlines today

பெங்களூரு : இமாச்சலபிரதேசத்தில் கைது செய்யப்பட்ட செக்ஸ் சாமியார் நித்யானந்தா நேற்றிரவு பெங்களூரு அழைத்து வரப்பட்டார். அங்கிருந்து ராம் நகர் நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். நடிகை ரஞ்சிதாவுடன், சாமியார் நித்யானந்தா உல்லாசமாக இருந்த காட்சிகள் வெளியானது. சாமியார் மீது லெனின் என்பவர், சென்னை போலீசில் புகார் கொடுத்தார். இதை வைத்து, சாமியார் நித்யானந்தா மீது மத உணர்வுகளை புண்படுத்துதல், மோசடி, கற்பழிப்பு, கொலை மிரட்டல், சதி செய்தல் உள்ளிட்ட ஆறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப் பட்டது. பின்னர் இந்த வழக்குகள் கர்நாடகாவுக்கு மாற்றப்பட்டது.

இமாச்சல பிரதேச மாநிலம் சோலன் மாவட்டம் அர்கி என்ற இடத்தில் நித்யானந்தாவும், அவருடன் இருந்த சிலரும் கர்நாடகா போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தங்கியிருந்த வீட்டில், லேப்-டாப், கம்ப்யூட்டர்கள், வீடியோ கேமராக்கள், மூன்று லட்சம் ரூபாய் ரொக்கப் பணம், ஏழாயிரம் அமெரிக்க டாலர், டிராவலர் செக்குகள், வெளிநாட்டு கரன்சிகள், சிம் கார்டுகள், மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர், சாமியார் நித்யானந்தாவும், அவருடன் இருந்தவர்களும் சிம்லா சிறையில் அடைக்கப்பட்டனர். நேற்று, அர்கி நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன்னிலையில், நித்யானந்தா உள்ளிட்டோர் ஆஜர்படுத்த பட்டனர். முறைப்படி வாரன்ட் பெற்று, பெங்களூருவுக்கு அழைத்து வர ஏற்பாடு செய்தனர். நித்யானந்தாவை வேன் மூலம் சண்டிகாருக்கு கொண்டு வந்து, பின்னர் விமானம் மூலம் மும்பைக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்து பெங்களூருவுக்கு இரவு 7 மணிக்கு கொண்டுவந்தனர்.

பெங்களூரு தேவனஹள்ளி சர்வதேச விமான நிலையத்தில், போலீசார் குவிக்கப்பட்டனர். இரவு 7 மணியளவில் சாமியாருடன் விமானம் பெங்களூரு வந்தது. போலீஸ் காரில், நித்யானந்தாவை பாதுகாப்பாக ஏற்றி, ராம் நகருக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப் பட்டார். விமான நிலையத்தில் இருந்து சாமியாரை வெளியே அழைத்து வந்தபோது, கன்னட அமைப்புகளைச் சேர்ந்த சிலர் கேலி, கிண்டல் செய்தனர். ஒரு கட்டத்தில் சாமியாரைத் தாக்கவும் சிலர் முற்பட்டனர். நித்யானந்தாவை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க, இன்று கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்ய உள்ளனர். அவரை விசாரிக்கும் போது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

நித்யானந்தாவை தாக்க முயற்சி: பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் சாமியார் நித்யானந்தாவை கன்னட அமைப்பினர் கேலியும், கிண்டலும் செய்து தாக்க முயற்சித்தனர். ஆனால், பலத்த போலீஸ் பாதுகாப்பிற்கிடையில் சாமியார் அழைத்து செல்லப்பட்டார். சாமியார் நித்யானந்தா, மும்பையிலிருந்து விமானம் மூலம் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு, நேற்றிரவு 7 மணியளவில் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார். விமான நிலையத்திலிருந்து போலீஸ் வாகனம் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு வருவதற்குள், பெரும் நெரிசல் ஏற்பட்டது. போலீஸாரின் பலத்த கெடுபிடிக்கிடையே சாமியார் நித்யானந்தா காருக்கு அழைத்து வரப்பட்டார். பத்திரிகையாளர்களும் அதிகளவில் குழுமியிருந்தனர். சாமியார் நித்யானந்தா விமான நிலைய வாசல் பகுதிக்கு வரும் போது, அங்கு நின்றிருந்த கன்னட அமைப்பினர், அவரை பார்த்து கேலியும், கிண்டலும் செய்தனர். சிலர், அவரை தாக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. போலீஸாரின் கெடுபிடிக்கு இடையே, சாமியார் சிரித்தவாரே போலீஸ் காரில் ஏறினார்.

நித்யானந்தா பிடிவாரன்ட் நிறுத்தி வைப்பு
ஏப்ரல் 23,2010,00:00  IST

Court news detail

வழக்கை மாற்றிவிட்டு நாடகம் ஆடும் சட்டங்கள்: நித்யானந்தா வக்கீல்கள், ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் அளித்த உறுதிமொழியை ஏற்று, அவரது பிடிவாரன்ட் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூர்  வக்கீல் செல்வமணி, கடந்த மாதம் 11ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில், காவி உடை அணிந்து தவறுகள் செய்த சாமியார் நித்யானந்தா மீது, 295ஏ சட்டப் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வழக்கு தொடர்ந்தார். வழக்கு மறுநாள் விசாரணைக்கு வந்தது. நீதிபதி குணசேகர் விசாரித்தார். மனுவில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டிற்கு ஆரம்பக் கட்ட முகாந்திரம் இருப்பதாக ஏற்றுக் கொண்டு, சாமியார் நித்யானந்தா, ஏப்., 2ம் தேதி கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்பும்படி உத்தரவிட்டார். அன்று புனித வெள்ளியையொட்டி கோர்ட் விடுமுறை. எனவே, ஏப்., 19ல் நித்யானந்தா கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். ஆனால், 19ம் தேதி நித்யானந்தா ஆஜராகவில்லை. இதைத் தொடர்ந்து நித்யானந்தாவுக்கு நீதிபதி பிடிவாரன்ட் பிறப்பித்தார். அவரை கண்டுபிடித்து மே மாதம் 20ம் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படி கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டம் போலீஸ் எஸ்.பி.,க்கு நீதிபதி குணசேகரன் உத்தரவு பிறப்பித்தார். இமாச்சலப் பிரதேசத்தில் தங்கியிருந்த நித்யானந்தாவை பெங்களூரு போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்நிலையில், நித்யானந்தாவின் வக்கீல்கள் இருவர், ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் நேற்று ஆஜராயினர். நித்யானந்தாவை வரும் ஜூன்  20ம் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்துவதாக உறுதியளித்தனர். அதை ஏற்று நீதிபதி குணசேகரன் வழக்கை ஜூன் 20ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

டில்லி இமாம் முன்பு இம்மாதிரி கைது செய்யப்படவில்லையே ஏன்? சட்டம் இந்தியாவில் சரியாக நிறைவேற்றப் படுவதில்லை, என்பதற்கு நித்யானந்தா விவகாரம் மூலம் வெளிப்படுகிறது. நித்யானந்தா தண்டிக்கப்பட வேண்டியதுதான், ஆனால், ஏன் அதே சட்டம் மற்றவர்கள் விஷயத்தில் அமைதியாக செயல் படுகிறது இல்லை செயல்படாமலேயே இருந்து விடுகிறது என்ற கேல்விகள் தான் செக்யூலரிஸ நாட்டில் எழுகின்றன. அதிலும் குற்றமீறல்களைச் செய்தவர்கள் முஸ்லீம்கள், கிருத்துவர்கள் என்றதும் ஒன்று அமுக்கி வாசிக்கப் படுகிறது, இல்லை ஊடகங்களில் செய்திகளே வராது (குறிப்பாக தமிழில் வராது), குற்றப் பத்திரிக்கைத் தாக்குதல் செய்யப்பட்ட பிறகும் கைதும் செய்யப் பட மாட்டார்கள்.

சங்கராச்சாரி கைது: டில்லி இமாம் விவகாரத்தில் இப்படித் தான் முன்பு மூன்றிற்கும் மேலான உயர்நீதி மன்றங்களினின்று கைது வாரண்ட் பிறப்பிக்கப் பட்டிருந்தது.  “பாரத மாதா ஒரு தெவிடியா”, “நீதிபதிகளின் கை-கால்களை உடைக்க வேண்டும்”, “………………..”, என்றெல்லாம் பேசியதர்காக அவ்வாறான வாரண்ட்டுகள் பிரப்பிக்கப்பட்டன. ஆனால், சாகும் வரை அந்த ஆள் கைது செய்யப் படவில்லை. ஆனால், அந்த இடைக் காலத்தில் இரண்டு சங்கராச்சாரியார்கள் அதே மாதிரியான, ஆனால் மிகவ்ய்ம் நாகரிகமான முறையில், இந்துக்கள் உரிமைகள் காக்கப் படுவதில்லை………….என்று பேசியதர்காக, கைது செய்யப் பட்டிருக்கிறார்கள்.

ஆகவே, நிச்சயமாக, குற்றங்களில் கூட மதரீதியிலாக நீதி மன்றக்கள், காவல் துறை, ஊடகங்கள் முதலியன, பாரபட்ச்சத்துடன் உள்ளன, குறிப்பாக இந்துக்களுக்கு எதிராகச் செயல்படுகின்றன என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

நிர்வாணதேசத்தில் கோமணம் கட்டியவன் தான் நான்!

திசெம்பர்5, 2009

நிர்வாணதேசத்தில் கோமணம் கட்டியவன் தான் நான்!

தமிழச்சிக் கலக்குகிறாள் அங்கே, தமிழச்சி கலங்குகிறாள் இங்கே

தமிழனும் கலங்குகிறான், தமிழன் பதறுகிறான் இப்பாரதத்தில்.

நாகரிகத்தின் அநாகரிகமா, அப்பண்பாட்டுச் செருக்கின் சீரழிவா

நிர்வாணம் அகோரமா, விகாரமா, அசிங்கமா, ஆபாசமா? [1]

புத்தரை வெல்லும் நிர்வாணமா ஜைனத்தை வெல்லும் நிர்வாணமா

இல்லை, கிரேக்க-ரோமானிய நிர்வாணத்தையும் வெல்லும் அவமானமா

நிர்வாணத்திலும் சமதர்மம் பார்க்கும் அம்மணமான பெண்மையே

உன்னை மூட முடியாதலால் மூடுகிறேன் எனது கண்களை. [2]

பத்மா லட்சுமி, அம்மா தாயே, தெய்வமே பயமாக இருக்கிறது!

பத்மஸ்ரீக்கள், கலைமாமணிகள் நோக்க நோகடிக்கவே

சுபாஷினி அலி, பார்வதி கான், என்று கேள்விப்பட்டிருக்கிறோம்

சல்மான் ருஸ்டியின் பத்தினி நீ, கண்ணகியையும் வென்றுவிடாய். [3]

தமிழன் பாடினான் ஓரக்கண்ணால் பார்த்தாலே “பிள்ளத்தாச்சி”

தமிழச்சி நீயோ கண்களைக் கட்டுகிறாய், நீயும் ஒரு “பிள்ளத்தாச்சி”

அச்சம், நாணம், மடம், கற்பு, பயிர்ப்பு என்ற ஐங்குணங்கள்

அச்சம்கொண்டு நாணிமடத்துடன் கற்பைவிட்டு பயிர்ப்போடு பெயர்ந்தன. [4]

பத்மஸ்ரீக்களின் கலக்கல்களின்று மீள்வதற்குள், நீ மீறிவிட்டாய்.

“தமிழச்சி”களின் “முலைகள்” கவிதைக் கொடுமைகள் தீருவதற்குள்

தமிழச்சி நீ குனிந்து விட்டாய், நாங்கள் தலை குனிந்துவிட்டோம்.

கைகால்களை சேர்த்து குவித்துவிட்டாய், நாங்களும் கூனிக்குருகிவிட்டோம். [5]

கற்பாம், மானமாம், கண்ணகியாம், சீதையாம் பாடப்பட்டது அன்று

அதெல்லாம் பார்க்கமுடியாது என்ற குஷ்புவிற்கு காட்டுகிறாய் நீ இன்று

மனம் மாறினால் மணம் மாறுகிறது, மணம் மாறினால் மனம் மாறுகிறது.

இருமனம்-திருமணம், பலமனம்-பலமணம் குஷ்பு மாறுகிறது, நாறுகிறது. [6]

அம்மணத்தில் எம்மணம் பொதுமையானதென ஆயும் கம்யூனிஸ தந்தைல்லை

நிர்வாணத்தில் பகுத்தறிவோடு புகுந்து பார்க்க பெரியாரின் சகோதரனுமில்லை

அம்மணியின் அந்தரங்கங்களைப் பேச நான் மோஹனரங்க புருஷனுமில்லை

இம்மாநிலத்தில் பிறந்து வளர்ந்து தமிழ் கற்றுக்கொண்ட அந்நியன் நான். [7]

பெண்ணின் உடல் என்பது யாருக்குச் சொந்தம் என்பதிலில்லைப் பிரச்சினை

அவ்வுடலின் நிர்வாணம் யாருக்குச் சொந்தம் என்பதில்தான் சர்ச்சை

ஒழுங்கு-ஒழுங்கீனம் என்று நிர்வாணத்தின் சாரம்-ஆசாரம் கண்டு

பகுத்தறிவோடு தரச்சான்றிதழ் கொடுக்கும் பன்னாட்டு நிருவனங்களுமில்லை [8]

நங்காசாதுக்களுடன் நங்கைசென்றால் தடுப்பது பாரதமில்லை இந்தியா

நங்கைகளையும் மறுத்து, நிர்வாணங்களை அரங்கேற்றுவது இவ்விந்தியா

ஜைன நங்காக்களையும் மறுப்பதும் பெரியாரியம் பேசி கல்லடிப்பதும் தமிழகம்

பாரதத்திற்கு சமாளிக்கவேண்டிய நிலையில்லை, நாரிகளுக்குத்தான் உள்ளது. [9]

காமத்தைக்காதலாக்கி இச்சைகளைக்கொச்சைப்படுத்தி நடத்துவது புனிதப்போர்!

நிர்வாணத்தை நிருவானமாக்கி சித்தாந்தம் பேசி மயக்குவது உலகத்துவப்போர்.

பாற்சமன்பாடுசெய்ய பால்சமத்துவம் பேசும் பால்கார சண்டைகள் வேண்டாம்

பாற்கடலைக்கடைந்தால் மகனெப்படி பிறப்பானென்ற பகுத்தறிவும் வேண்டாம். [10]

நிர்வாணத்தில் நிர்மலமில்லாவிடில் மலமிகும் அம்மணவாழ்க்கையில்

அம்மணத்தை படமிட்டு சமத்துவம் பேசினால் தாயும் வேசியாகுவாள்

நிருவானத்தில் பொதுவுடமை கொண்டால், கொண்டவள் பங்கு போடப்படுவாள்

இப்பெண்மை நிர்வாணத்தில் வேண்டாம் எனக்கு சமத்துவம், சகோதரத்துவம் [11]

அம்மனை அம்மத்தை மறைத்தது தொழில்நுட்பமாவென ஆயும் தகுதியில்லை

நிர்வாணம் அடையத்துடிக்கும் புத்தனாகி போதிமரத்திடியில் தங்க நேரமில்லை

நிரியானம் அடைய வடக்கிருக்க நிருவாண தீட்சையும் பெறவில்லை

நிருவானம் பார்க்க அருகனுமில்லை, அந்த அருகதையும் எனக்கில்லை.[12]

பாசநேசமுள்ள மகளின் தந்தை நான் அன்பு-பண்புடைய அக்காளின் தம்பி நான்

ஆசாபாசமுள்ள கொண்ட தங்கையின் அண்ணன் நான்; பாரததேசத்தவன் நான்

மனைவியின் நிர்வாணம் எனக்குத்தானெண்ணும் பொறாமைக் கணவன் நான்

அவை தவறென்றால் நிர்வாணதேசத்தில் கோமணம் கட்டியவன் தான் நான்! [13]

வேதபிரகாஷ்

05-12-2009