Archive for the ‘பெண்களின் மார்புடை’ Category

திராவிடத் தாய், கன்னித் தாய், தமிழ்த்தாய், சொந்தத்தாய் முதல் வாடகைத் தாய் வரை! தாய்மை வளர்கிறதா, தேய்கிறதா, தூஷிக்கப் படுகிறதா? (1)

ஏப்ரல்23, 2022

திராவிடத் தாய், கன்னித் தாய், தமிழ்த்தாய், சொந்தத்தாய் முதல் வாடகைத் தாய் வரை! தாய்மை வளர்கிறதா, தேய்கிறதா, தூஷிக்கப் படுகிறதா? (1)

தாய்மை நீர்த்து, ஆபாசமான நிலை: முதலில் 1970களில் தாய்மை போற்றப் பட்டது, 1980களில் கவர்ச்சிப் படுத்தப் பட்டது; 1990களில் நீர்க்கப் பட்டது; 2000களில் மறுக்க-மறக்க-மறைக்கப் பட்டது; 2010களில் தூஷிக்கப் பட்டது, இப்பொழுது 2020களில் விற்கப் படுகிறது. சினிமாக்களில், வசனங்களில், கதைகளில் தாய்மை கேள்விக்குறியானது. மொழி வெறியாகி, வியாபாரமாகியபோது, தாய்மையும் அவ்வாறே விற்பனைக்குத் தயாரானது. திருமண பந்தங்கள் உடைந்து, சேர்ந்து கூட வாழலாம் இல்லையென்றால் பிரிந்து விடலாம் போன்ற விவகாரங்கள் நீதிமன்றங்களினால் தூய்மைப் படுத்தப் படுத்தப் பட்டன. விபச்சாரம் தொழிலாக ஏற்ற்ய்க் கொள்ளப் பட்ட பிறகு, இதெல்லாம் சகஜமாகி விட்டது. நடிகைகள், குடும்பப் பெண்களுக்கு அறிவுரை கூற ஆரம்பித்தனர். கற்பு என்றெல்லாம் இருக்க வேண்டிய அவசியம்ம் இல்லை என்று புது இலக்கணம் வகுத்தனர்.

கவர்ச்சி அரசியல், வாடகைத் தாய்: திமுக ஆட்சிக்கு வந்தவுடன், மக்களுக்கு வேண்டிய இருக்கின்ற, திட்டங்களை ஒழுங்காக செயல்படுத்த முடியாமல் இருக்கிறது. “திராவிடத்துவம்” என்ற கொள்கையினை வைத்துக் கொண்டு, பிரிவினை அரசியல், மத்திய அரசுடன் தகராறு, இனவெறி, மொழி துவேசம் போன்ற தேவையற்ற உணர்ச்சிகளைத் தூண்டும், கலவரக் கொள்கைகளில் கவனத்தைச் செல்லுத்தி வருகிறது. முக்கியமாக உணவு, வீடு, குடிநீர், உடை போன்ற அடிப்படை, அத்தியாவசியமான விசயங்களை விடுத்து, கவர்ச்சி அரசியலில் ஈடுபட்டு, விளம்பாங்கள் மூலம், அறிக்கைகள் விட்டு, ஆணைகளைப் பிறப்பித்து, பிரச்சார ஆட்சி செய்து வருகிறது, அந்நிலையில், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் அரசு பெண் ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு 270 நாள்களுக்கு விடுப்பு வழங்கப்படும் என்று சமூக நலத்துறை அமைச்சா் கீதா ஜீவன் அறிவித்தார்.

சட்டப்பேரவையில் வியாழக்கிழமை (22-04-2022) சமூக நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் கீதா ஜீவன் வெளியிட்ட அறிவிப்புகள்[1]: புரட்சித் தலைவா் எம்ஜிஆா் சத்துணவுத் திட்டத்தின் கீழ் 43,190 சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் 29,002 மையங்களுக்கு வைப்பறையுடன் கூடிய சமையலறைகள் உள்ளன. 2021-22-ஆம் ஆண்டில் ரூ.69 கோடி செலவினத்தில் 1,291 வைப்பறையுடன் கூடிய சமையலறைகள் கட்டுவதற்கு ஆணைகள் வெளியிடப்பட்டு, கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் தொடா்ச்சியாக 2,100 பள்ளி சத்துணவு மையங்களுக்கு ரூ.113 கோடி மதிப்பீட்டில் வைப்பறையுடன் கூடிய சமையலறைகள் ஊரக வளா்ச்சித் துறையின் மூலம் நடப்பு நிதியாண்டில் கட்டப்படும்.

தமிழகத்தில் தற்போது 75 லட்சமாக உள்ள மூத்த குடிமக்களின் எண்ணிக்கை 2031-ஆம் ஆண்டு 1.42 கோடியாக உயரும் என்று எதிர்நோக்கப்படுவதால் பெருகி வரும் மூத்தக் குடிமக்களின் நலன், பாதுகாப்பு, சுகாதாரம், ஊட்டச்சத்து போன்ற சேவைகளை வழங்குவதற்கும் அவா்களுக்காகச் செயல்படுத்தும் திட்டங்களை சிறப்பாக நிர்வகிக்கும் பொருட்டு சமூக நல இயக்ககத்தில் தனி அலகு ஒன்று உருவாக்கப்படும். சமூக நலன், சமூக பாதுகாப்பு மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம் ஆகியவற்றின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களை ஒருங்கிணைத்து கண்காணிப்பதற்காக தலைமைச் செயலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் திட்ட மேலாண்மை அலகு ஒன்று ஏற்படுத்தப்படும்.

பாலியல் குற்றங்கள்[2]: காஞ்சிபுரம் மாவட்டம் துண்டல்கழனி கிராமத்தில் 4 ஹெக்டோ் நிலப்பரப்பில் அமைக்கப்பட இருக்கும் மூத்த குடிமக்களுக்கான ஒருங்கிணைந்த வளாகம் அமைப்பதற்கான வடிவமைப்பு செலவின மதிப்பீடுகளுடன் உகந்த கருத்து வடிவமைப்பினை உருவாக்கும் பொருட்டு விரிவான சாத்தியக்கூறாய்வு ரூ.1 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். சமூகத்தில் நிலவும் பாலின பாகுபாடு பொருளாதார பின்னடைவு காரணமாக குழந்தைகள் விற்பனை, குழந்தை திருமணங்கள், குடும்பத்தில் கடன் சுமை காரணமாக தம்பதியினா் தற்கொலை, குழந்தைகளையும் சோ்த்து கொலை செய்தல், வரதட்சிணை கொலைகள், பாலின ரீதியில் குழந்தைகளும் பெண்களும் வன்கொடுமைக்கு ஆளாவது, இணையதள குற்றங்கள் போன்ற குற்றங்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இத்தகைய குற்றங்களை தவிர்ப்பதற்கு குடும்பங்களுக்கு மனநல ஆலோசனை, வன்முறையால் பாதிக்கப்பட்டவருக்கு தேவையான மருத்துவ வசதி, ஆற்றுப்படுத்துவதற்கான ஆலோசனைகள், சட்டரீதியான பாதுகாப்பு மற்றும் நிவாரணம் பெற்றும் தருதல் ஆகியவற்றை ஓரிடத்தில் வழங்குவதற்காக மதுரை, கோயம்புத்தூா், திருச்சி, சேலம், திருநெல்வேலி, திருப்பூா், தூத்துக்குடி, ஆவடி, ஓசூா், திண்டுக்கல் ஆகிய 10 மாநகராட்சிகளில் ஒரு சேவை மையத்துக்கு ரூ.1.10 கோடி வீதம் 10 ஒருங்கிணைந்த சேவை மையங்கள் ரூ.11 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

குழந்தை பெற்றல், சலுகைகள்[3]: பாலின வரவு, செலவு திட்டம்: 2022-23-ஆம் நிதியாண்டு முதல் பாலின நிதி நிலை அறிக்கையை உறுதிப்படுத்துவதற்காகவும், பாலினம் சார்ந்த கொள்கைகளை உருவாக்கி அதன் செயல்பாடுகள் மற்றும் திட்டங்களில் முன்னுரிமை அளிப்பதற்காகவும் அனைத்துத் துறைகளிலும் பாலின வரவு செலவு திட்டம் உருவாக்கப்படும். மகப்பேறு மருத்துவமனைகள் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி திட்ட மையங்களில் குழந்தைகளின் முதல் 1,000 நாள்கள் குறித்த விழிப்புணா்வு ரூ.1.74 கோடி செலவினத்தில் ஏற்படுத்தப்படும். செங்கல்பட்டு மாவட்டத்தில் குழந்தைகளுக்கான பாதுகாப்பு இல்லத்துக்கான புதிய கட்டடம் ரூ.16 கோடியில் கட்டப்படும். வாடகைத் தாய் மூலம் குழந்தைகள் பெறுவது தற்போது அதிகரித்து வருகிறது. அவ்வாறு குழந்தைகள் பெறும் அரசுப் பெண் பணியாளா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு பச்சிளம் குழந்தைகளை மிகுந்த கவனத்துடன் பராமரிப்பதுடன் அவா்களின் உடனடி தேவைகளை நிறைவேற்றுவதற்காக 270 நாள்கள் குழந்தை பராமரிப்பு விடுப்பு வழங்கப்படும் என்றார்[4].

தாய்மை படும் பாடு: திராவிட பாரம்பரியங்களில் சட்டசபைகளே தாய்மையினை, பெண்மையினை, பேச்சுகளினால், செய்கைகளினால் கேவலப் படுத்தப் பட்டன. நாடாவை அவிழ்த்துப் பார்த்தல், என்ற பெண்மணிக்கும் எனக்கும் பிறந்த மகள், அடியேய் போன்ற ஏக வசனங்கள், கைப் பிடித்து இழுத்தல், சேலைக் கிழிப்பு, …..என்று பல அரங்கேறியுள்ளன. 1970களிலிருந்து நடந்ததை இப்பொழுது மக்கள் மறந்திருக்கலாம், பிறகு பிறந்தவர்கள் அறியாமல் இருக்கலாம், அறிந்தாலும், நம்பி பெரிதாக எடுத்துக் கொண்டு தங்களது தலைவர்களை மறு ஆய்வு செய்ய மாட்டார்கள், மாறாக பெண்மை போற்றும் காவலர் என்று விருதுகளும் கொடுப்பார்கள், கண்ணகிக்கு சிலை வைப்பார்கள், மாலைகள் போடுவார்கள், கால்களிலும் விழுவார்கள். இப்படித்தான், திராவிடத்தில், திராவிட சித்தாந்தத்தில், திராவிட தத்துவங்களில் தாய்மை உழன்றுக் கொண்டிருக்கிறது.

© வேதபிரகாஷ்

23-04-2022


[1]  தினமணி, வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் அரசு பெண் ஊழியா்களுக்கு 270 நாள்கள் விடுப்பு: அமைச்சா் கீதா ஜீவன், By DIN  |   Published On : 22nd April 2022 02:22 AM  |   Last Updated : 22nd April 2022 02:22 AM

[2]https://www.dinamani.com/tamilnadu/2022/apr/22/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-270-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-3831404.html

[3] நியூஸ்.18.தமிழ், வாடகைத் தாய் மூலம் குழந்தை.. பெண் ஊழியா்களுக்கு 270 நாள்கள் விடுப்பு: அரசு அறிவிப்பு, By WebDesk WebDesk Fri, 22 Apr 2022.

[4] https://newstm.in/amp/tamilnadu/Child-by-surrogate-mother-270-days-leave-for-female-employe/cid7217147.htm

ஆபாச வீடியோவா, கொக்கோக காணொலியா, வார்த்தையில் நீலப் படம் எடுக்கத் தயாராகும் பெண்ணியப் புரட்சியா? பெண்ணியம் மற்றும் உரிமைகள் சமூக சீரழிவுக்கு துணையாகாது! (2)

ஜனவரி16, 2021

ஆபாச வீடியோவா, கொக்கோக காணொலியா, வார்த்தையில் நீலப் படம் எடுக்கத் தயாராகும் பெண்ணியப் புரட்சியா? பெண்ணியம் மற்றும் உரிமைகள் சமூக சீரழிவுக்கு துணையாகாது! (2)

ரூ 1500/- வாங்கிக் கொண்டு கொக்கோக பேச்சுப் பேசிய பெண் கொடுத்த புகார்: இந்த நிலையில்தான், சம்பந்தப்பட்ட அந்தப் பெண் சாஸ்திரி நகர் காவல்நிலையத்தில் ஒரு பகீர் புகாரினைக் கொடுத்தார். 1500 ரூபாய் கொடுத்து தன்னை அப்படி பேசச் சொன்னதாகவும்… கமென்ட் செக்‌ஷனை ஆஃப் செய்துவிட வேண்டும் என்ற நிபந்தனையோடு தான் பேசியதாகவும் கூறியிருந்த அந்தப் பெண்…, “என்னிடம் சொன்னபடி அவர்கள் கமென்ட் செக்ஷனை ஆஃப் செய்யவில்லை. ஆகையால், நான் கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளேன். நான் பேசிய பல விஷயங்களை கட் செய்துவிட்டு ஆபாசமான வார்த்தைகளை மட்டுமே வெளியிட்டுள்ளனர். என்னைப் போல நிறைய பெண்களிடம் இப்படிச் செய்துள்ளனர்,” எனப் புகார் தெரிவித்தார். ஆனால், பேசும் போது, அவற்றிற்கு எல்லாம், அர்த்தம் தெரியாமல் பேசினால் என்று சொல்ல முடியாது. அழுத்தம் கொடுத்துப் பேசுதல், நக்கலாக சிரித்துக் கொண்டே பதில் அளிப்பது, முகத்தை ஏதோ வெட்கம் வந்து திருப்பிக் கொள்வது போல நடிப்பது முதலியன, அப்பட்டமாக செய்தவை என்று உறுதியாகின்றன. கற்பழிப்பு காட்சியில், உண்மையாக கற்பழித்தால், பெண் என்ன செய்வாள் போன்றது தான், இத்தகைய முறையற்ற வீடியோக்கள். அப்பெண் பேசியதாக, ஒரு வீடியோவில், அப்பெண் தான் செய்ததை நியாயப் படுத்தும் வகையில் தான் பேசியிருப்பது திகைப்பாக இருக்கிறது. புகாரின் அடிப்படையில் சாஸ்திரிநகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

பெண் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுத்தது: போலீசார் தொடர்ந்து விசாரணை செய்ததில் சென்னை டாக்ஸ் என்ற யூடியூப் சேனல் இதுபோன்று 200-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் வெளியிட்டு 7 கோடி பேர் பார்த்திருப்பதாக தெரிவித்துள்ளனர். அதாவது, அத்தனை பேர், இத்தகைய கேவலமான வீடியோவைப் பார்க்கின்றனர் என்றால், அவர்களது, வக்கிர மனநிலையினையும் எடுத்துக் காட்டுகிறது, இது தொடர்பாக விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார். கூடுதல் கமிஷனர் தினகரன், இணை கமிஷனர் ஏ.ஜி.பாபு, துணை கமிஷனர் விக்ரமன், உதவி கமிஷனர் கவுதமன் ஆகியோர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் பலவேசம், சப்-இன்ஸ்பெக்டர் முருகன், ஏட்டு சண்முகசுந்தரம் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் பெசன்ட்நகர் கடற்கரை பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

 மூன்று பேர் கைது, சிறையில் அடைப்பு: `சென்னை டாக்ஸ்’ யூடியூப் சேனலின் உரிமையாளர் தினேஷ் மற்றும் தொகுப்பாளர் ஆசான் பாட்சா, ஒளிப்பதிவாளர் அஜய் பாபு ஆகிய மூவர் மீது, பெண் வன்கொடுமைச் சட்டம் மற்றும் பெண்களை மானபங்கப்படுத்துதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் [ Sections 354(b), 294(b), 509, 506(ii) of IPC and Section 4 of Tamil Nadu Prohibition of Women Harassment Act] வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.  இத்துடன் செய்திகள் நின்று விடும். பிறகு, என்னவாயிற்று என்று ஊடங்கங்கள் விவரங்களைக் கொடுப்பதில்லை. வாசகர்கர்களும், ஏதோ டிவி-சீரியல், சினிமா, பட்டி மன்றம் பார்த்தது போன்று, மறந்து விடுவார்கள். இதே போன்று, இன்னொரு செய்து வந்தால், ரசித்து அதனை பார்ப்பார்கள். 

போலீஸாரின் நடவடிக்கை, யூடியூப் முடக்கப் பட்டது: அவர்களிடமிருந்து எல்லா உபகரணங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட மொபைல்களை போலீசார் ஆய்வு செய்த போது, அதில் இணையத்தில் பதியப்படாத நூற்றுக்கணக்கான வீடியோக்கள் இருப்பது தெரியவந்துள்ளது[1]. இவர்கள் தனியாக பீச்ச்சில் அமர்ந்திருக்கும் பெண்களிடம் ஆபாச கேள்விகள் கேட்டு அதை மொபைலில் பத்திரபடுத்தி வைத்திருப்பதும் தெரியவந்துள்ளது[2]. இதனை வைத்து பெண்களுக்கு இவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையில் இறங்கியுள்ளனர். இதுபோன்று பெண்களிடம் ஆபாசமாக பேட்டி எடுத்து வீடியோக்கள் வெளியிட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் எச்சரித்துள்ளனர்[3]. இதுபோன்ற செயல்களில் யாராவது ஈடுபட்டால், அது பற்றி 8754401111 என்ற செல்போன் எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என்றும் அவர் அறிவித்துள்ளார்[4]. இதையடுத்து அந்த சேனலை முடக்க வேண்டும் என்று சென்னை நகர துணை ஆணையர் யுடியூப் நிறுவனத்துக்கு கோரிக்கை வைத்தார்[5]. அதைவைத்து இப்போது சென்னை டாக்ஸ் என்ற சேனல் முடக்கப்பட்டுள்ளதாக யுடியுப் நிர்வாகம் அறிவித்துள்ளது[6].

கமல ஹாசன் யோசித்துப் பார்க்க வேண்டியது: “மன்மதன் அம்பு,னென்ற படதத்தில், இதைவிட கேவலமாக, கொக்கோமாக, ஒரு பாடல் எழுதி, சேர்த்திருப்பதை நினைவு கொள்ள வேண்டும். தனிமனித ஒழுக்கம் தேவையில்லை, கற்பு தேவையில்லை, பெண்கள் வெறும் காம-இச்சைக்கு உபயோகப்படும் சதைப் பிண்டங்கள், காசு கொடுத்தால், படுக்க வரவேண்டும், ……………………வேண்டும்………………ஆணைத் திருப்தி படுத்த வேண்டும்………இத்தகைய எண்ணங்கள் தாம் அப்பாட்டில் வெளிப்பட்டன. இதற்கு நாத்திகம் தேவையில்லை. அம்மாளுக்குப் பிறந்து, அம்மாளை மறந்து அல்லது துறந்து, மகள்களை அந்நிலைக்கு போகும்போது, மனைவியை நடத்திய நிலை, மகள்களுக்கு வந்தால், அப்பொழுதும், நாத்திகத்தில் பிதற்றலாம், இல்லை, அவர்களையும் “சேர்ந்து வாழும்” நிலைக்குப் பரிந்துரைக்கலாம். அப்பொழுது அக்காள் மூதேவி கூட வரமாட்டாள், அந்நிலையில் சக்காளத்தி வந்தால், அரோகராதான். ஒன்பது நாள் இல்லை, நாற்பது நாள் உண்ணா நோன்பு இருந்து கஞ்சி குடித்தால் கூட, பருப்பு வேகாது. இப்படி பதினொன்று ஆண்டுகளுக்கு முன்னர் குறிப்பிட்டிருந்தேன்[7]. இப்பொழுது, 2021 தேர்தலுக்காக, ஏதோ ஒழுக்கமான ஆள் போன்று பிரச்சாரம் செய்து வருவது தமாஷாக இருக்கிறது.

மின்னணு சாதனங்களின் வளர்ச்சி, இத்தகைய சீரழுகளை அதிகமாக்குகிறது: இன்றைக்கு காசுக்கு என்ன வேண்டுமானாலும் செய்யத் துணிந்து விட்ட மனிதர்களைத் தான், பலரை, பல நேரங்களில், தொழில்களில், வேலைகளில் ஈடுபட்டிருப்பதைப் பார்க் நேரிடுகிறது. பல சமயங்களில், “துஷ்டரைக் கண்டால் தூர விலகு,” போன்ற கொள்கையில், பலர் கண்டுகொள்ளாமல் சென்று விடுகின்றனர். 1960-70களில் எப்படி “சரோஜா தேவி“ புத்தகங்கள் எப்படி காம வக்கிர மனங்களுக்குத் தீனி போட்டதோ, அது போல, 2000களில் “புளு பிலிம்” போன்றவை அத்தகைய கள்ளத்தனங்களுக்கு உதவின. வீடியோ கேசட், சிடி-டிவிடி-பென் டிரைவ் என்று வந்து விட்டப் பிறகு, அவற்றின் மூலம் விற்றல்-வாங்கல் பறிமாற்றங்கள் நடந்து கொண்டிருந்தன. டெஸ்க்-டாப் என்று ஆரம்பித்து, லாப்-டாப் என்று மாறிய போதும், அவ்வாறே, மனங்களை உடல்களை பாதித்தன. இப்பொழுது, செல்போன், கைபேசி, என்று பலவித வசதிகளுடன் வரும் நிலையில், இவையெல்லாம், யார் வேண்டுமானாலும், பார்க்கலாம், சுவைக்கலாம் என்ற நிலை வந்து விட்டது.

இன்டெர்நெட் மாயவலை கோடிகள் புரளும் வியாமாரமாகிய நிலை: இன்டர்நெட், வலைதளம், சர்வர், மாயவலை, மின்னாக்கம் செய்யப் பட்ட விவரங்கள்-தகவல்கள் சேமிப்பு, பரப்பு என்றெல்லாம் வியாபாரம் தொழிற்நுட்ப ரீதிகளில் விரிந்த போது, சம்பந்தப் பட்டவர்களுக்கு கோடிகளில் வருவாய் வர ஆரம்பித்தது. அவை, தொடர்ந்து நுகரும் நிலைகளில், நிரந்த வருமானமாகி, பெருக ஆரம்பித்தது.  இடங்களை விற்கும் ரியல் எஸ்டேட் தொழில் போல, இன்டெர்நெட்-மாயவலை இடம் விற்பனை, டொமைன் பெயருக்கு காசு என்றெல்லாம் தொழில்கள் விஸ்தாரமாகியது. செல்போன் மூலம், தனிநபர், தனியாக, தன்னிச்சைக்கேற்றவாறு, நல்லதோ-கெட்டதோ, எந்த விசயங்களையும் தேடலாம், அணுகலாம், பெறலாம் என்ற போது, அத்தகைய மனிதர்களும் அதிகமாக ஆரம்பித்தனர்.

© வேதபிரகாஷ்

15-01-2021


[1] நியூஸ்.18.தமிழ், கைதான யூடியூப் சேனல் நபர்களின் செல்பேசியில், வெளியிடப்படாத ஏராளமான பெண்களின் வீடியோக்கள் கண்டுபிடிப்பு, NEWS18 TAMIL, LAST UPDATED: JANUARY 12, 2021, 1:21 PM IST.

[2] https://tamil.news18.com/news/tamil-nadu/youtube-channel-caught-more-women-videos-in-mobile-vjr-393051.html

[3] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ்,பெண்ணிடம் ஆபாச பேட்டி.. யூடியூப் சேனலுக்கு சென்னை மாநகர போலீஸ் ஆப்பு.., Ezhilarasan Babu, Chennai, First Published Jan 15, 2021, 10:57 AM IST

[4] https://tamil.asianetnews.com/politics/porn-interview-with-a-girl-chennai-metropolitan-police-wedge-for-youtube-channel–qmyn5b

[5] தமிழ்.வெப்துனியா, சென்னை டாக்ஸ் சேனல் முடக்கம்! யுடியூப் அறிவிப்பு!, Last Updated: வெள்ளி, 15 ஜனவரி 2021 (11:24 IST).

[6] https://tamil.webdunia.com/article/regional-tamil-news/chennai-talks-youtube-channel-blocked-121011500023_1.html

[7]  வேதபிரகாஷ், வார்த்தையில் நீலப்படம் எடுத்து, மனத்தில் கலவிக்கொண்டு, உருப்புகளை வதைத்து, உடலைவாட்டும் உத்தமர்கள்!, நவம்பர் 19, 2010.

வார்த்தையில் நீலப்படம் எடுத்து, மனத்தில் கலவிக்கொண்டு, உருப்புகளை வதைத்து, உடலைவாட்டும் உத்தமர்கள்!

“கேரளா லுங்கி கார்ல்ஸ்”, மற்றும் “டிரஸ் கோட்” : உடைக்கட்டுப்பாடு – வேண்டுமா, வேண்டாமா வாத-விவாதங்கள்!

ஜூன்8, 2016

கேரளா லுங்கி கார்ல்ஸ்”, மற்றும் டிரஸ் கோட்” : உடைக்கட்டுப்பாடு – வேண்டுமா, வேண்டாமா வாத-விவாதங்கள்!

female fan group from USA posed in Lungis -maheash

தங்களது தாய், சகோதரி, மனைவி, மகள் முதலியோர் எப்படி ஆடை அணிய வேண்டும், அணியக் கூடாது என்று பரிந்துரை முயற்சிகளில் ஈடுபடவில்லை: பிரபல நடிகைகள் முதல், பெண்ணியவாதிகள் வரை அப்படித்தான் நடந்து கொண்டனர். சிலர் கடவுளர்களே அப்படித்தானே உடையுத்திக் கொண்டுள்ளதாக சித்தரிக்கப் பட்டுள்ளன, நிர்வாணமாகக் கூட சிலைகள், விக்கிரங்கள் உள்ளனவே, அவற்றிற்கெல்லாம் உடை கட்டுப்பாடு ஒன்றுமில்லையா என்பது போன்ற கேள்விகள் எழுப்பி எழுதித்தள்ளினர். நல்லவேளை அவர்கள் தங்களது தாய், சகோதரி, மனைவி, மகள் முதலியோர் எப்படி ஆடை அணிய வேண்டும், அணியக் கூடாது என்று பரிந்துரை முயற்சிகளில் ஈடுபடவில்லை. ஒருவேளை அவர்களும் இதெல்லாம் எங்களது உரிமை என்று பேன்ட், லெக்கிங்ஸ், ஸ்லீவ்லெஸ், டி – ஷர்ட், மினி ஸ்கர்ட் மற்றும் டாப்ஸ் போன்ற உடைகளுடன் தெருவில் இறங்கியிருந்தால் என்ன செய்திருப்பார்கள் என்று தெரியவில்லை. முற்றும் துறந்த நடிகைகள் போன்றோ, முனி-ரிஷிக்கள் போன்றோ, சாதாரண மக்கள் இல்லை. நடிகையர், நாகரிக பெண்மணியர் குற்ப்பிட்ட இடங்களில் அவ்வாறு அரைகுறை ஆடைகள் அணிந்து உலா வரலாம், மற்ற இடங்களில் வந்தால் என்னாகும் என்பது அவர்களுக்கே தெரிந்தது தான். நடிகையர்கள் வாழ்க்கையை சாதாரண பெண்ணோடு ஒப்பிட முடியாது. இருப்பினும், இவர்கள் எல்லோரும் போதிக்க வந்து விடுவதே வேடிக்கையாக இருக்கிறது.

Kim Kardashian shows off her bump in a clinging black dress as she leaves lunch at La Scala in Beverly Hills

நட்சத்திர ஹோட்டல்கள், கிளப்புகளில் பின்பற்றப்படும்டிரஸ் கோட்: இந்திய ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் இந்த “டிரஸ் கோட்” பற்றி எழுதப்படாத விதிமுறைகள் தாம் பின்ப்பற்றப்படுகின்றன[1]. இதெல்லாம் ஹோட்டலுக்கு ஹோடல், ரெஸ்டேரென்டுக்கு ரெஸ்டாரென்ட், சாப்பிடும் இடம், உணவு முதலியவற்றிற்கு ஏற்றபடி மாறும் என்று கூறியும் “இதுதான் ஏற்புடைய உடை” என்று குறிப்பிட்டு சொல்லாமல் தப்பித்துக் கொள்கிறார்கள். பொதுவாக நவீன, மேற்கத்தைய உடைகளை அணிந்து கொண்டு வந்தால் ஒன்றும் கேட்பதில்லை. கோட்-சூட் போட்டுக் கொண்டு வரும் “பிசனஸ் கிளாஸ்” வகையும் உண்டு, அரைகுறை ஆடைகளுடன் வரும் நவநாகரிக வகைகளும் உண்டு[2]. பெண்கள் உடல் பாகங்கள், மார்பங்கள் தெரியும் படி எல்லாம் ஆடை அணிந்து கொண்டு வருகிறார்கள். அத்தகைய முறைகேடுகளை மேனாட்டு ஊடகங்களே எடுத்துக் காட்டியுள்ளன. அதாவது, அங்கேயே அத்தகைய கட்டுப்பாட்டு சிந்தனை இருக்கும் போது, இந்தியாவில் வேறு மாதிரி சிந்திப்பது சரியா-தவறா என்று அவர்களே புரிந்து கொள்ளலாம். ஆனால், வேடிக்கையென்னவென்றால், வேட்டிக் கட்டிக் கொண்டு சென்றாலோ, ஷூ போடாமல் சென்றாலோ உள்ளே அனுமதி கிடையாது.

female lawyers

நீதி மன்றங்களில் உடை கட்டுப்பாடு: உச்சநீதி மன்றம், உயர்நீதி மன்ற, மாஜிஸ்ட்ரேட் கோர்ட், டிரைபூனல் போன்ற நீதிமன்றங்களுக்கு நீதிபதிகள், வழக்கறிஞர்கள் கருப்பு கௌன் அணிந்து கொண்டு செல்கிறார்கள், வருகிறார்கள். ஆண் வழக்கறிஞர்கள்[3] மற்றும் பெண் வழக்கறிஞர்கள்[4] இப்படித்தான் உடையணிந்து வர வேண்டும் என்று “பார் கவுன்சில்” விதிமுறைகளில் சொல்லப்பட்டுள்ளன[5]. ஆங்கிலேயர் காலம் வரை நீதிபதி தலையில் கூட விக் எல்லாம் வைத்திருந்தால், பிறகு விட்டு விட்டார்கள். ஏன் வேறு நிறத்தில் இருக்கக் கூடாது அல்லது அது இல்லாமல் ஏன் நீதிமன்றத்தில் நுழையக் கூடாது என்று யாரும் கேட்பதில்லை.  ஆங்கிலேயர் காலத்தில் ஆரம்பித்த இந்த உடைமுறையை மாற்ற வேண்டும் என்று அவ்வப்போது, வழக்கறிஞர்களே கேட்டுப் பார்த்தாலும்[6], இதுவரை ஒன்றும் நடக்கவில்லை. 1685ல் இங்கிலாந்து அரசன் சார்லஸ் II இறந்தபோது, துக்கம் அனுஷ்டிக்க இத்தகைய உடை உபயோகித்ததாகவும், அதனையே வழக்கறிஞர்கள் பின்பற்றுவதாகவும் கூறப்படுகிறது[7]. எது எப்படியாகிலும் கருப்பு துக்கத்துடன் சம்பந்தப்பட்டது என்பது தெரிந்த விசயம்.

Kim Kardashian going to 5 star hotel for lunch

ஆபாசப்படங்கள், விளம்பரங்களின் நிலை என்ன? பெண்களின் மீது ஏன் அதிகமான குற்றங்கள் நடக்கின்றன என்று, அரசு வெளியிட்டிருந்த அறிக்கையின்[8] மீதான கட்டுரையை நான் ஏற்கெனெவே பதிவு செய்துள்ளேன்[9]. பெண்களை வைத்துக் கொண்டு சினிமா, கொச்சையான விளம்பரங்கள், ஆபாசப் படங்கள், புளூ பிளிம்கள் / ஊதா சினிமாக்கள், நடனங்கள், விபச்சாரம்,  என பல நிகழ்ச்சிகள், செயல்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இவையெல்லாம் கூடாது, பெண்களை கேவலப்படுத்துவது, அசிங்கப்படுத்துவது, செக்ஸ்-பொருள்களாக மதிக்கிறது என்றால், அவற்றை ஏன் பெரிய கம்பெனிகளே ஊக்குவிக்கிறது? கோடிக்கணக்கில் பணத்தை செலவிட்டு, பதிலுக்கு பொருட்களை விற்று பணத்தை அள்ளுகிறது? அதில் பெண்களின் பங்கு இல்லாமல், ஒன்றும் நடக்காது. அத்தகைய விஷயங்களில் பெண்கள் ஈடுபடுகிறர்கள் எனும்போது, அதற்கு என்ன காரணம் என்று பெண்கள் கூற வேண்டும். ஆண்கள் தாம் காரணம் என்று கூறி தப்பித்துக் கொள்ள முடியாது. இல்லை வறுமை என்று பொருளாதார காரணத்தைச் சொல்ல முடியாது, ஏனென்றால், இன்று பணத்திற்காக மட்டுமல்லாது புகழிற்காக பணக்காரப் பெண்களே அத்தகைய விஷயங்களில் ஈடுபடுகிறார்கள். சும்மா இருக்கும் எந்த ஆணும் எந்த பெண்ணிடமும் சென்று செக்ஸ் வைத்துக் கொள் என்று கூறிக் கொண்டு செல்ல மாட்டான். பெண்ணும் அப்படியே ஒப்புக் கொள்ள மாட்டாள். ஆகவே மனோதத்துவ ரீதியில் ஆராய்ந்தால், அதன்படி விளக்கம் கொடுக்க வேண்டும், தீர்வு காண வேண்டும். குற்றவியல் என்று பார்க்கும் போது, மனோதத்துவ ரீதியில் எல்லா காரணங்களும் எடுத்துக் கொள்ளப் படும். பிறகு தான், முக்கியமான காரணம் எது என்று ஆராயப் படும். காலக்கட்டங்களில், குறிப்பிட்ட காரணி தான் காரணம் என்றால், அதனை அவர்கள் எடுத்துக் காட்டுவார்கள். அத்தகைய நிதர்சனத்தை, யதார்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். குற்றங்கள் ஏற்படாத முறையில் ஆடை அணிவது எப்படி என்பதனை பெண்கள் தான் வரையறுக்க வேண்டும். அவர்களே கூறிவிட்டால் பிரச்சினை இருக்காது.

actress-shriya-sivaji-function-09_720_southdreamz

முலைகளை / மார்பகங்களை, இடுப்பை, பெண்குறியைக் காட்டக் கூடாது என்று யாராவது சட்டத்தையா கொண்டு வர முடியும்?[10]: சமூகத்தில் ஏற்கெனவே ஏற்புடைது என்பதை வைத்துதான் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. ஒருசிலர், நூறு-ஆயிரம் பேர் மற்றவர்களை விட மாறுபடுகின்றனர் என்பதற்காக இருக்கின்ற சட்ட-திட்டங்களை மாற்றி, அதுதான் எல்லோருக்கும் பொறுந்து என்று திணிக்க முடியாது. “நாகரிகம்” என்றால் என்ன, “நாகரிகமாக உடை அணிவது என்றல் என்ன”  என்றெல்லாம் சொல்லிக் கொடுக்கவா வேண்டும்? இல்லை, முலைகளை / மார்பகங்களை, இடுப்பை, பெண்குறியைக் காட்டக் கூடாது என்று யாராவது சட்டத்தையா கொண்டு வர முடியும்? அப்படியும் எடுத்து வந்தால், எந்த அளவிற்கு காட்டலாம், காட்டக் கூடாது எனெல்லாம் வரையறுத்துக் கொண்டிருக்க முடியுமா? பிறகு, அதற்கும் நியாயம் கற்பித்து பேச ஆரம்பித்து விடுவார்கள். “நிர்வாணம்” என்றால் என்ன என்று பேசவந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. இன்று பொதுவாக, ஷாப்பிங் மால், பார்லர், நட்சத்திர ஹோட்டல்கள், ஏன் கல்லூரிகள்-பள்ளிகள் முதலிய இடங்களில் பெண்கள் எப்படி ஆடையுடுத்திக் கொண்டு வருகிறார்கள் என்பது தெரிந்த விசயமே.

© வேதபிரகாஷ்

08-06-2016

[1] DNA India, Fitting into a 5 star, Saadia Dhailey, Sat. 1 June 2013, 11.00 am IST.

[2] http://www.dnaindia.com/lifestyle/report-fitting-into-a-5-star-1842279

[3] Advocates appearing in the Supreme Court, high court, subordinate courts, tribunals or authorities must wear the dress prescribed, which must be sober and dignified. Male advocates must wear a black buttoned-up coat, chapkan, achkan or a black sherwani, and white bands with advocate’s gown or a black open-breasted coat, white shirt, white collar, stiff or soft, and white bands with advocate’s gown. In either case long trousers (white, black striped or grey) or dhoti must be worn.

http://www.lawyersclubindia.com/forum/DRESS-CODE-FOR-AN-ADVOCATE-1271.asp

[4] Women advocates must wear black and full or half sleeve jackets or blouses, a white collar, stiff or soft, with white bands with advocate’s gown. They may wear saris or long skirts (white, or black or any mellow or subdued colour without any print or design) or flare, or Punjabi dress (churidar kurta or salwar kurta, with or without dupatta), white or black.

http://www.lawyersclubindia.com/forum/DRESS-CODE-FOR-AN-ADVOCATE-1271.asp

[5] http://www.barcouncilofindia.org/about/professional-standards/rules-on-professional-standards/

[6]Black clothes absorb more heat causing immense inconvenience to advocates in the state, the petitioner said. The present dress code blindly follows the British colonial heritage, despite six decades of independence. The difficulties during the rainy season are equally tough. Even in Britain, the dress is not accepted in all courts, since 2008. http://www.newindianexpress.com/nation/article1494022.ece

[7] England when robes adopted in 1685 were the symbolic of mourning for King Charles II.

[8] http://ncrb.nic.in/; http://ncrb.nic.in/; http://ncrb.nic.in/CII2010/cii-2010/Table%20Contents.htm;

http://ncrb.nic.in/CII2010/cii-2010/table6.htm

[9] வேதபிரகாஷ், குழந்தைகள் / சிறுவர்சிறுமியர் இளம்பெண்கள் முதலியோர்கள் மீதான குற்றங்கள் – 2010: புள்ளி விவரங்கள், விளக்கம், விவாதம்,http://atrocitiesonindians.wordpress.com/2011/10/31/crimes-against-children-girls-women-2010/

[10] https://liberalizationprivatizationglobalization.wordpress.com/2012/01/06/dress-code-crime-women-rape-correlation/

குளித்ததை படமெடுத்து, மிரட்டி கற்பழித்த குரூரக் கும்பல்: தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்!

ஜூலை24, 2012

குளித்ததை படமெடுத்து, மிரட்டி கற்பழித்த குரூரக் கும்பல்: தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்!

திருவண்ணாமலையில் தீய காரியங்கள் நடப்பது: திருவண்ணாமலை என்றால் கோவில், தெய்வம், ஆன்மீகம், ஶ்ரீ ரமணர், ஶ்ரீ ராம் சூரத் குமார் என்றேல்லாம் நினைவுக்கு வரும் ஆனால், இப்பொழுதே, நாளுக்கு நாள் கொலை, கற்பழிப்பு, என கெட்ட காரியங்கள் நடந்து வருகின்றன. இதெல்லாம், மக்களின் வக்கிர புத்தியைகத் தான் காட்டுகிறது. மண்ணின் மீது குற்றமில்லை, ஆனால், அம்மண்ணில் வாழ்ந்து கொண்டு, அந்நீரைக் குடித்துக் கொண்டு, அந்நிய காமக்குரோத வக்கிரங்களில் மூழ்கி, சீரழிந்தவர்கள், மற்றவர்களையும் சீரழிக்கும் போக்கு காணப்படுகிறது.

தாயிற்குப் பிறாவத மிருகங்களின் செயல்: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே 22 வயதான இளம் பெண் குளிப்பதை ஒரு கும்பல் ரகசியமாக படம் பிடித்து வைத்துக் கொண்டு அதைக் காட்டி பலமுறை அவருடன் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளது[1]. ஒரு கட்டத்தில் இந்தக் கும்பலின் வெறிச்செயல் அதிகரிக்கவே அப்பெண் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பு அவர் எழுதி வைத்த கடிதத்தில் யாரெல்லாம் தன்னை நாசப்படுத்தினார்கள் என்பதையும் விரிவாக எழுதி வைத்திருந்ததால் அதன் உதவியோடு 3 பேரை கைது செய்துள்ளனர் போலீஸார்[2].

மோக நோய், புற்று நோயானது: செங்கம் அருகே உள்ளது மண்மலை கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்த 22 வயது ஆனந்தி பாலிடெக்னிக்கில் படித்து வந்தார். கடந்த 23ம் தேதி இவர் தனது வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். சாவதற்கு முன்பு ஒரு கடிதத்தை அவர் எழுதி வைத்திருந்தார். அதைக் கைப்பற்றிய போலீஸார் அதைப் படித்துப் பார்த்தனர். அதில் ஆனந்தி அதிர்ச்சிகரமான தகவலைத் தெரிவித்திருந்தார். “நான் குளிக்கும்போது செல்போனில் வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு என்னை இதே ஊரில் உள்ள வினோத்குமார், ஜெகன் உள்பட சிலர் என்னை மிரட்டினர். என்னை தங்கள் இச்சைக்கு பயன்படுத்திக்கொண்டனர். தினமும்
ஒவ்வொருவராக வந்து என்னை பயன்படுத்திக்கொண்டனர். நாங்கள் சொல்லும்போதெல்லாம், எங்களுடன் வரவேண்டும். இல்லையேல் குளியல் வீடியோவை இன்டெர்நெட்டில் வெளியிடுவோம் என்று மிரட்டினார்கள். இதற்கு பயந்து அவர்கள் சொன்னதையெல்லாம் செய்தேன். ஆனால் தற்போது அதிகமாக தொந்தரவு செய்து வேறு சிலரையும் அழைத்து வந்து, அவர்களுடனும் இருக்குமாறு கட்டாயப்படுத்தினார்கள். இதனால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறேன். என் சாவுக்கு இந்த 3 பேரும்தான் காரணம். அவர்களுக்கு தண்டனை கிடைக்காவிட்டால் என் ஆத்மா சாந்தி அடையாது[3]”, என்று விரிவாக எழுதி வைத்திருந்தார். இதையடுத்து விசாரணையில் குதித்த போலீஸார் 3 பேரைக் கைது செய்துள்ளனர். மற்றவர்களையும் பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

படமெடுத்த மாமம் மகனும், கூட்டிக் கெடுத்த மாணவர்களும்: மாணவர் எழில் மாணவி பிரியாவின் மாமா மகன். இதனால் அவர் அடிக்கடி மாணவி வீட்டுக்கு சென்று உள்ளார். அப்போதுதான் குளிப்பதை ரகசியமாக செல்போனில் படம் பிடித்து உள்ளார்[4]. இவர் நாச்சிப்பட்டில் உள்ள ஓம்சத்தி பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்[5]. அதே ஊரை சேர்ந்த என்ஜினீயரிங் மாணவர் வினோத், பாலிடெக்னிக் மாணவர்கள் ஜெகன், எழில் ஆகிய 3 பேரும் மாணவி பிரியா குளியல் அறையில் குளிப்பதை ரகசியமாக செல்போனில் படம் பிடித்தனர்[6]. அந்த படத்தை மாணவியிடம் 3 பேரும் காட்டி கிண்டல் செய்தனர். இதனால் மாணவி கடும் அதிர்ச்சி அடைந்தார். செல்போனில் இருந்த படத்தை அழிக்கும்படி மன்றாடினார்[7]. ஆனால் 3 மாணவர்களும் மறுத்துவிட்டனர். இதுபற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டினார்கள்[8]. இதனால் அவமானம் அடைந்த மாணவி வீட்டில் யாரும் இல்லாதபோது சமையல் அறையில் மின் விசிறியில் தூக்குபோட்டு தொங்கினார். சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார். இதைப்பார்த்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்து கதறி துடித்தனர். செங்கம் போலீசார் மாணவி உடலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

யார் அந்த மற்றவர்கள்?: மற்ற மிருகங்களையும் பிடித்து தண்டிக்க வேண்டும். தமிழகத்தில், தமிழச்சியின் கற்பு என்றெல்லாம் பெருமை பேசப் படுகிறது. கண்ணகி சிலை வைத்துக் கொண்டும், தமிழ் வியாபாரம் செய்துள்ளனர். ஆனால், கற்பில் நம்பிக்கையில்லாத குஷ்புதான், அந்த கட்சியில் ஐக்கியம் ஆகியுள்ளார். இப்பொழுது, இதைப் பற்றியெல்லாம், பேசவாரா அல்லது போராடுவாரா? தெரியவில்லை. ஒருவேளை, ஆதாயம் உண்டு என்றால் ஆரம்பித்து விடுவார். அந்த மற்றவர்களைக் கண்டு பிடிப்பாரா என்று பார்ப்போம்!

  • தமிழச்சிகள் தான் இப்படி பதபதக்கக் கற்பழித்து சாககடிக்கப் படுகிறார்கள் என்றால், இந்த தமிழர்களுக்கு எங்கு புத்தி போயிற்று?
  • திராவிட பாரம்பரியம், இப்படித்தான் பெண்களை நடத்தச் சொல்கிறதா?
  • திராவிட கலாச்சாரம் இப்படித்தான் பெண்களை கற்பழிக்கச் சொல்கிறதா?
  • திராவிட நாகரிகம் இப்படித்தான் நீதி புகட்டியுள்ளதா?
  • திரவிடத்துவம் இப்படித்தன் பெண்மையை மதிக்கிறதா?

 

 


[1] இது பத்திரிக்கையாளரின் வக்கிரத்தைக் காட்டுகிறது. இளம்பெண் அந்த அளவில் கொடுமைப் படுத்தப் பட்டாள். மிரட்டி மானபங்கம் செய்யப் பட்டாள் என்றேழுதாமல், இப்படி எழுதுவது என்னவோ?

[6] செல்போனின் கெடுதல்கள், சீரழிவுகள் இவ்வாறு கூட வேலை செய்கின்றன. மாணவர்களுக்கு செல்போன்கள் வாங்கிக் கொடுப்பதால் நேரும் விளைவுகள் இவை என்றும் எண்ண வேண்டியுள்ளது.

[7] நடந்ததை பெரியவர்களிடம் சொல்லாமல் இருந்ததே, இப்பெண்ணின் உயிருக்கு உலை வைத்தது மாதிரி ஆகிவிட்டது.

[8] இவையெல்லாம் சீரழிந்த மாணவப் பருவம், வக்கிரமடைந்த மனங்கள் முதலியவற்றைக் காட்டுகின்றது. இதற்கெல்லாம் காரணம், மேனாட்டு கலாச்சாரத் தாக்குதல், சீரழிவுகள். பப், கேளிக்கை விடுதிகள் முதலியவற்றை எதிர்த்தால் அவர்களை கேலி செயவது, பழங்காலப் பஞ்சாங்கம் என்பது, ஊடகங்களும் அதற்கு ஒத்து ஊதுவது முதலியவற்றையும் இங்கு கவனித்தில் கொள்ள வேண்டும்.

பெண்களின் மார்புடை சர்ச்சை!

திசெம்பர்18, 2009

பெண்களின் மார்புடை சர்ச்சை!

ஜாக்கெட்‘: அரசின் கட்டுப்பாடுஆசிரியைகள் கடும் அதிருப்தி

வியாழக்கிழமை, டிசம்பர் 17, 2009, 11:04[IST]

http://www.deccanchronicle.com/chennai/dress-code-teachers-tn-871

பெற்றோர்களிடமிருந்து புகார்கள்: நாகரீகமான முறையில் ஜாக்கெட் அணிய வேண்டும் என்று தமிழக அரசு[1] உத்தரவிட்டிருப்பது குறித்து ஆசிரியைகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். பள்ளிக்கூட ஆசிரியர்கள், ஆசிரியைகள் உடை அணிவது குறித்து அரசு ஏற்கனவே சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது ஆசிரியைகள் கண்டிப்பாக புடவையில்தான் வர வேண்டும். ஆசிரியர்கள் டீ சர்ட் போன்றவற்றை அணிந்து வரக் கூடாது. நாகரீகமான முறையில் உடையணிய வேண்டும் என இந்த கட்டுப்பாடு கூறுகிறது. இருப்பினும் சில பள்ளிக்கூட ஆசிரியைகள் குறிப்பாக தனியார் பள்ளி ஆசிரியைகள் விதம் விதமான டிசைன்களில் ஜாக்கெட் அணிந்து வருவதாக பெற்றோர்கள் தரப்பில் அரசுக்கு தொடர்ந்தது பெற்றோர்களிடமிருந்து புகார்கள் போய்க் கொண்டிருந்ததால், உடைக் கட்டுப்பாட்டை நினைவுபடுத்தி சமீபத்தில் பள்ளிக் கல்வித்துறை அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிக்கூடங்களுக்கு சுற்றறிக்கை விடுத்திருந்தது.

ஜாக்கெட்டுகளின் அசிங்கமான-ஆபாசமான அமைப்பு: நாகரிகம் மாறுகிறது, ஆனால் அடிப்படை மனித உணர்வுகள் மாறவில்லை. அவையும் மாறுகின்றன என்றால் மேனாட்டு கோளாறுகள் மூலம்தான். காமத்திற்கும்-காதலுக்கும், நாகரிகத்திற்கும்-ஒழுக்கத்த்ற்கும் இலக்கணம் கேட்டு வாதிப்பதில் கற்போ, பெண்களின் ஐங்குணங்களையோப் போற்றிக் காக்க முடியாது[2]. முன்னும் பின்னும் வேண்டுமென்றே வடிவமைப்பு என்ற “போர்வையில்” உடலை அதிகமாக வெளிக்காட்டவேண்டும், அதிலும் குறிப்பாக கவன ஈர்ப்பு செய்யவேண்டும் என்ற முறையில் அவை இருக்கின்றன (vulgar design cuts of Blouse ). இதில் ஜன்னல் வகைமாடல் (Window type designer blouses) மிகவும் பிரசித்தம், இதை .டிஸைனர் பளவுஸ் என்றும் கூறுகிறார்கள். குஷ்பு இதைதான் அணிந்து பிரபலமாக்கி வருகிறார். அதற்காக அவர் பணமும் பெறுகிறார். ஆண்கள் டி-சர்ட்டுகள், வெளிர்க்கப்பட்ட உடலை ஒட்டிய இருக்கமான ஜீன்ஸ் (bleached and skin-tight jeans) முதலியவை அணிந்து வரக்கூடாது.

நாகரிகமான முறையில் உடை அணிதல்! இதற்கு ஆசிரியைகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஒரு அரசு ஆசிரியை கூறுகையில், “எங்களது ஆசிரியப் பணி குறித்து அரசு தீவிரமாக கண்காணிப்பதையும், அதுதொடர்பான நடவடிக்கைகளையும் நாங்கள் முழு மனதோடு வரவேற்கிறோம். அதை விடுத்து, நாங்கள் எப்படி ஜாக்கெட் போட வேண்டும் என்று அரசு கூறுவது நல்ல டேஸ்ட்டில் இருப்பதாக தெரியவில்லை. பள்ளிக்கு வரும்போது சேலைதான் அணிய வேண்டும் என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து படித்த நாள் முதலே இதை நாங்கள் பழக்கப்படுத்திக் கொண்டு விடுகிறோம். ஆனால் நாகரீகமான முறையில் என்ற வார்த்தையை அரசு பயன்படுத்துவது எங்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இப்போது நாங்கள் அநாகரீகமான முறையில் வருவது போல மக்களுக்கு தோற்றத்தை ஏற்படுத்துகிறது அரசின் சர்க்குலர்”. நிச்சயமாக, மக்கள் ஆசிரியர்களிடமிருந்து ஆரோக்யமான கட்டுப்பாடை, பின்பற்ற வேண்டிய ஒழுங்கை, ஏற்றுக் கொள்ளப்பட்ட நாகரிகத்தை எதிர்பார்க்கிறார்கள்.

நல்ல டேஸ்ட் / கெட்ட டேஸ்ட் / கேட்ட டேஸ்ட்: இத்தகைய விளக்கங்கள், இலக்கணங்கள், மரபுகள், விவாதங்கள் தேவையா? பிரச்சினையே “விருப்பத்திலானால்” வந்த வினைதானே? மார்பாடைகளுக்கும் பிரச்சினையை உருவாக்கியதால் தானே, இத்தகைய கட்டுப்பாடு வந்திருக்கிறது. நிச்சயமாக ஒரு பெண்ணிற்கு தன் உடல் மீது அவளுக்குத் தான் முழு உரிமை! அவள் என்னவேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், அவள் சமூகத்தில், அத்லிம் அறிந்து-தெரிந்திருக்கும் சமூகத்தில் இருக்கும்போது, நான் வேறுவிதமாக இருப்பேன் எனும்போது தான் வருகிறது விவகாரம்.

நடிகைகள் செய்வதை எல்லாம் ஆரிசியைகள் செய்வதை எந்த பெற்றொர்களும் விரும்ப மாட்டார்கள்: ஆசிரியைகளின் பெற்றோர்களோ, கணவன்மார்களோ, அவர்களது பிள்ளைகளே விரும்ப மட்டார்கள். எப்படி பெண்கள் வேலை செய்யும் இடங்களுக்கு வரும் முன்னர், வர்ம் போது, வந்த பின்னர், தமது கைப் பைகளிலிருந்து நடமாடும் அலங்காரப் பொருட்கள் வைத்துக் கொண்டு அலங்காரப் படுத்த்க் கொண்டு உள்ளே நுழைகிறர்கள் என்பது அறிந்ததே. அதுபொலத் தான் ஆடை அலங்காரமும். ஏதாவது “ஃபங்ஸன்” / விழாக்களுக்கு செல்கிறர்கள் என்றால் தனியாக அத்ற்கு ஆடைகளையே எடுத்து வந்து விடுவார்கள். வீட்டில் திட்டுவார்கள், ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்று அங்லிருந்து அணிந்து சென்று, பிறகு மறுபடியும் மாற்றி வீட்டிற்கு செல்வார்கள்! இத்தகைய “ஆடை மாற்றங்கள்” / போலித்தனங்கள் பெண்களுக்குத் தேவையில்லையே!

கண்களை உறுத்தும் விதமான ஜாக்கெட்: குறிப்பிட்ட ஆசிரியைகள் கண்களை உறுத்தும் விதமான ஜாக்கெட் அணிந்து வருவதாக புகார்கள் வந்தால் சம்பந்தப்பட்ட ஆசிரியைகள் மீது தாராளமாக நடவடிக்கை எடுக்கலாம். அதை விடுத்து ஒட்டு மொத்த ஆசிரியைகளுக்கும் நாகரீகமான முறையில் ஜாக்கெட் அணியுங்கள் என்று சொல்வது எங்களை அவமானப்படுத்துவது போல உள்ளது என்றார். ஆனால் உடைக் கட்டுப்பாட்டு உத்தரவு புதிதாக பிறப்பிக்கப்பட்டதல்ல. நீண்ட காலத்திற்கு முன்பே இது அமலுக்கு வந்து விட்டது என்று பள்ளிக் கல்வித்துறை கூறுகிறது. “கண்ணை உருத்தும் விதமான ஜாக்கெட்” என்று குறிப்பிடும்போதே ஆசிரியைகள் வெட்கப் படவேண்டும், ஆத்திரமோ, கோபமோ படக்கூடாது. இங்கு கூட “கண்ணை உருத்தும் விதமான ஜாக்கெட்” எனும்போது “கண்ணை உருத்தாத / உருத்தாமலிருக்கும் விதமான ஜாக்கெட்” எது என்றெல்லாம் கேள்வி கேட்பார்களா, ஆராச்ச்சி செய்வார்களா?

“உன்னழகைக் கண்டுகொண்டால் பெண்களுக்கே ஆசை வரும்” சமாச்சாரம் அல்ல: இன்று பெண்ணுரிமை என்று அதற்கும் உரிமைகள் கேட்டு கொடி பிடிக்கிறார்கள் பெண்கள், பெண்ணூர்மை சங்கங்கள் முதலியன! சரி, அப்பெண்களே தமது மகள்களை அவ்வாறு அனுப்புவார்களா? ஆகவே உண்மை என்னவென்று அனைவருக்கும் தெரியும். ட்க்ஹெரிந்தும், தெரியாத மாதிரி நடிப்பது, விதண்டாவாதம் செய்வது முதலியனத் தான் பொறுப்பற்ற செயல்கள். அவர்கள் அசிங்கமான-ஆபாசமான ஜாக்கெட் அணியும் ஆசிரியைகளைவிட மோசமானவர்கள் என்றுதான் சொல்லவேண்டும்.
ஆய்வு மற்றும் பயிற்சி இயக்குநரக ஊழியர்களுக்கு சீருடை: ஆசிரியக் கல்வி ஆய்வு மற்றும் பயிற்சி இயக்குநரக ஊழியர்களுக்கு சீருடையே உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை கூறுகிறது. பல பள்ளிகளில் ஆசிரிய-ஆசிரியைகளுக்கும் சீருடைகள் பரிந்துரைக்கப் பட்டுள்ளன. மேலும் இந்த இயக்குநரகத்தில் உதவிப் பேராசிரியர்களாகப் பணியாற்றும் பெண்களைத் தனித்துக் காட்டுவதற்காக அவர்களுக்கென்று தனி சீருடையும் கடந்த 70களில் அமல்படுத்தப்பட்டதாக பள்ளிக் கல்வித்துறை கூறுகிறது. அங்கும் அவ்வாதைகள் எவ்வாறு இருக்கவேண்டும் என்று உள்ளது.
பெண்ணுக்கு எது சவுகரியமோ அதை அணிய அவர் அனுமதிக்கப்பட வேண்டும்: அரசு நாகரீகம் என்ற வார்த்தையை எந்த அர்த்தத்தில் சொல்ல வருகிறது, அதுகுறித்து விளக்க வேண்டும் என் மகளிர் உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை எழுப்பியு்ளனர். இதுகுறித்து அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில பொருளாளர் ஜான்சிராணி கூறுகையில், ஒரு பெண்ணுக்கு எது சவுகரியமோ அதை அணிய அவர் அனுமதிக்கப்பட வேண்டும். அவரால் எந்த உடையை வாங்க முடியுமோ அதைத்தான் வாங்கி அவர் அணிய முடியும். தனது கலாச்சாரம், பாரம்பரியத்தை அறியாத பெண் யாரும் இருக்க முடியாது. எது நாகரீகமான உடை என்பது பெண்களுக்கு தெரியாதா? என்கிறார் அவர். சௌகரியம் என்று வேற்விதமாக வந்தால் என்னாவது, அதைத்தான் யயசிக்க வேண்டியுள்ளது.

தனது கலாச்சாரம், பாரம்பரியத்தை அறியாத பெண் யாரும் இருக்க முடியாது.: உண்மை, ஆனால் விதண்டாவாதிகள் உடனே எது தனது கலாச்சாரம், யாருடைய கலாச்சாரம், எது பாரம்பரியம், யாருடைய பாரம்பரியம், என்றெல்லாம் வாதிடுவார்கள். மற்றவர்களுடன் ஒப்பிடுவார்கள். சங்க காலத்தில் பெண்கள் மார்பு கச்சை அணிந்தார்கள், கேரளாவில் சில பெண்கள் ஜாக்கெட்டே போடவில்லை, கோவில் சிலைகளே நிர்வாணமாகத் தானே உள்ளன என்ற வாத்ங்கள் எல்லாம் வரும். ஆனால், உண்மை என்னவென்றால் ஒரு மனிதன் – ஆணோ, பெண்ணோ – தனது தாய், மனைவி, சகோதரி, மகள் இவர்களை அத்தகைய நிலைக்குட்படித்துவார்களா? அதேப் போல தனது தந்தை, கணவன், சகோதரன், மகன் இவர்களை எந்த பெண்ணும் புதிய க்லாச்சாரம் / மேனாட்டு இலக்கண வர்க்க விதிகள் / பாலியல் சுதந்திரங்கள் என்ற நோக்கில் அனுமதிப்பார்களா அல்லது  கட்டுப்பாட்டுடன் இருக்கவேண்டும் என்று விரும்புவார்களா?

ஆசிரியைகளைப் பற்றி வரும் செய்திகள்: ஊடகங்களில் ஆசிரியைகளைப் பற்றி வரும் செய்திகள் நாகரிகமாகவா உள்ளன? இதோ உதாரணத்திற்கு சில – இவை ஆசிரியைகள் ஆடை, அலங்காரம், அழகு காட்டுதல், காதல், கள்ளக் காதல் முதலியவற்றை சம்பந்தப்பட்டது:

  • ஆசிரியை கொலையில் துப்பு துலங்கியது : கணவர், கள்ளக்காதலி மீது போலீஸ் சந்தேகம்http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=7592
  • பள்ளி சுவர் ஏறி குதித்து காதலை சொன்ன மாணவன் ஆகஸ்ட் 30,2008,00:00  IST http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=4374
  • கள்ளத்தொடர்பு ஆசிரியை மீது நடவடிக்கை : ஐகோர்ட் கிளை உத்தரவு மே 06,2009,00:00  IST http://www.dinamalar.com/court_detail.asp?news_id=3030
  • பள்ளி மாணவி படுகொலை : ‘கல்நெஞ்ச’ ஆசிரியர் கைது நவம்பர் 09,2008,00:00  ISTதரணிசெல்வனுக்கும், அவர் வேலை பார்த்த பள்ளியில் பணியாற்றும் பெண் ஆசிரியருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. தரணிசெல்வனின் மனைவி ராதிகாவை பள்ளி நிர்வாகத்தினர் அழைத்து, கள்ளத்தொடர்பு குறித்து தெரிவித்து கண்டித்துள்ளனர் http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=6115
  • கள்ளக்காதலால் ஆசிரியை குத்திக்கொலை : செஞ்சி அருகே கணவன் போலீசில் சரண் நவம்பர் 04,2008,00:00  IST http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=5972

இவையெல்லாம் தமிழக சினிமாக்களில் தமிழ் பேசி வரும் தமிழச்சி நடிகைகளின் விவகாரங்கள் அல்ல. தமிழச்சி ஆசிரியைகளின் அலங்கோலங்கள் தாம். சமூகத்தில் அக்கரைக் கொண்டவர்கள், பெண்ணுரிமை, தனிப்பட்ட நபரின் சுதந்திரம் என்றெல்லாம் நியயப் படுத்துவார்களா? பாடம் சொல்லிக் கொடுக்குக் ஆசிரியைகள் இவ்வாறு இருந்தால், அவர்களிடம் படிக்கும் மாணவர்கள் என்னாவார்கள்?

பெண்களிடம்தான் உலகமே இருக்கிறது: இது ஏதோ சித்தாந்தம் அல்ல. அதனால்தான் எல்லா பிரச்சினைகள், விவாதங்கள், சர்ச்சைகள் சம்பாந்தப்பட்ட விவகாரங்கள் எல்லாமே பெண்களுடன் சம்பந்தப் பட்டுள்ளது. ஒரு ஆண்-பெண் சேரும் நிலை, சேர்ந்திருக்கும் அமைப்பு, குடும்பம், சமூகம், குமுக்கம், குழு, என்று எப்படி சொன்னாலும், மனிதர்கள் நாய், பன்றிகள் போன்று தமது நாகரிகம், கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியங்களை மாற்றிக் கொள்ளமுடியாது. விதண்டாவாதங்கள் அல்லது தெரிந்தே தெரியாத மாதிரி செய்யும் வாதங்களினால் எந்த பலனும் இல்லை. ஆகவே இன்றைய சூழ்நிலைகளில் பெண்களே அறிந்து செயல்படவேண்டியுள்ளது,

வேதபிரகாஷ்

18-12-2009 ©


[1] மற்ற விஷயங்களில் – அரசு விழாக்களில் பெண்கள் எப்படி ஆடை அணிந்து வரவேண்டும்………..இத்யாதி………….இவ்வாறு ஆணைகள் பிறப்பிக்காமல் இருப்பதுதான் ஆச்சரியம்!

[2] அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, கற்பு பெண்களின் ஐங்குணங்கள் என்பர். இவையெல்லாம் பெண்களுக்கு இப்பொழுது வேண்டுமா, வேண்க்டாமா என்றெல்லாம் ஆராய்ச்சி செய்யவேண்டுமானால் குஷ்பு, நமிதா, ஸ்ரேயா, மல்லிகா, ஸ்னேஹா முதலிய தமிழச்சிகளிடம் சென்று தான் விவரங்களை சேகரித்து வரவேண்டும்.