Archive for the ‘கலைமகள்’ Category

மூன்று மனைவிகளை ஏமாற்றி நான்காவது திருமணம் – கின்னஸ் சாதனைப் படைக்கப் போவதாக கணவன் சவால், மிரட்டல் – முதல் மனைவி புகார்!

ஓகஸ்ட்21, 2013

மூன்று மனைவிகளை ஏமாற்றி நான்காவது திருமணம் – கின்னஸ் சாதனைப் படைக்கப் போவதாக கணவன் சவால், மிரட்டல் – முதல் மனைவி புகார்!

Polygamy-chennai-fiest-wifw-complaint-2013சமயபேதம் இல்லாத  –  ஒழுக்கமில்லாத சமுதாய சீரழிவுகள்: கோயம்புத்தூரில் பிலிப் ஜோசப் என்றால், சென்னையில் ஒரு ஜெயசங்கர் அதேபோல, பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டது தெரிய வருகின்றது. இவ்வாறு “நான்கு திருமணம்” செய்திகள் வருவது அதிகமாகி வருகிறது. பொதுவாக முஸ்லிம்கள் “நான்கு திருமணம்” செய்து கொள்கிறார்கள், “நான்கு மனைவிகள்” வைத்துக் கொள்கிறார்கள் என்றெல்லாம் சொல்வதுண்டு, பேசுவது உண்டு. ஆனால், இப்பொழுது கிறிஸ்தவர்களும், இந்துக்களும் அம்முறையைப் பின்பற்றும் போது, மற்றவர்களைப் பற்றி பேசுவதற்கு தார்மீக உணர்வு கிடையாதே? முதலில் அடுத்தவர் மீது குறை சொல்பவர்கள் தாங்கள் ஒழுங்காக இருக்க வேண்டுமே?

Jeyasankar and Kalaimagal - the first wife who lodged complaint22  வயதோன மகனுடன்  43  வயதான பெண் வந்து கணவன் மீது புகார்: சேப்பாக்கம் சி.என்.கே சாலையை சேர்ந்தவர் கலைமகள் (43), எம்.ஏ படித்தப் பெண். இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கணவர் மீது பரபரப்பு புகார் அளித்தார்[1]. அந்த பெண் தனது 22 வயது மகனுடன் போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்திருந்தார். புகார் கொடுத்தப் பின்னர், பின்னர், வெளியே வந்த கலைமகள் கூறியதாவது[2]:

1990ல் கலைமளை திருமணம் செய்து கொண்டது: “நான் பெரம்பூரை சேர்ந்தவர். தந்தை போலீசாக பணியாற்றியவர். முதுகலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். கல்லூரியில் 2ம் ஆண்டு படித்தபோது பெற்றோர் எனக்கு திருமணம் செய்து வைத்தனர். கணவர் ஜெயசங்கர் (48). 1990 செப்டம்பர் 9ல் திருமணம் நடந்தது. என்ஜினீயரிங் படித்துள்ள ஒரு மகனும்,  9–வது வகுப்பு படிக்கும் ஒரு மகளும் உள்ளனர். கணவர் பல மோசடி வேலைகளில் ஈடுபட்டு வந்தார். இதெல்லாம் நமக்கு வேண்டாம் என்றேன். அவர் கேட்கவில்லை.

 Jeyasankar married thrice and going for fourth

1996ல் ரமணவல்லியை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டது: 1996ல் அவருக்கும் சேத்துப்பட்டை சேர்ந்த ரமண வள்ளி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் பெரியமேடு சார்பதிவாள்ளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டனர். அவரது பெயரில் ரேஷன் அட்டையும் உள்ளது. அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

 மேகலா தேவியை மூன்றாவதாகத் திருமணம் செய்து கொண்டது: தொடர்ந்து காரணீஸ்வரர் பகோடா தெரு, மயிலாப்பூரை சேர்ந்த மேகலா தேவி என்பவருடன் கணவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இப்பொழுது இங்குதான் நிரந்தரமாகத் தங்கியுள்ளார்..

 ஒரே கணவன் மூன்று மனைவிகளோடு மூன்று குடும்ப ரேஷன் கார்டுகளைப் பெற்றது: என்னோடு சேர்த்து, 3 மனைவிகளுக்கும் தனித்தனி ரேஷன் கார்டும் உள்ளது. இதுபற்றி எனது கணவரிடம் கேட்டபோது, உனக்கு நான் எந்த குறையும் வைக்கவில்லை. நான் எத்தனை மனைவிகளுடனும் வாழ்வேன், நீ அதுபற்றி எதுவும் கேட்க கூடாது என்கிறார். அடித்துத் துன்புறுத்தியுள்ளார்[3].

 நான்காவதாக ஒரு மைனர் பெண்ணை கல்யாணம் செய்யப் போவது: மேலும், 17 வயது பெண்ணை திருமணம் செய்யப்போவதாக கணவர் கூறி வருகிறார்இதுவரை 2000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறை பெண்களுடன் தவறான உறவு வைத்துள்ளேன்[4]. இன்னும் பல பெண்களை திருமணம் செய்வேன். தட்டிக்கேட்டால் உன்னை தீர்த்து கட்டிவிடுவேன்”, என்று மிரட்டுகிறார். இதுகுறித்து திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் மகளிர் காவல் நிலையங்களில் புகார் செய்தேன். நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, நான் கொடுத்த புகார் மீது போலீஸ் கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது குழந்தையை நான் காப்பாற்றுவேன். போலீஸ்காரர் மகளின் புகாருக்கே நடவடிக்கை இல்லை. இதனால் அவமானப்படுகிறேன்”, இவ்வாறு கலைமகள் வேதனையுடன் கூறினார்[5].

கின்னஸ் சாதனைப் படைக்கப் போவதாக கணவன் சவால்,  மிரட்டல்: ஜெயசங்கர் (43) பி.ஏ பட்டதாரி, இளைஞர்களுக்கு “பிட்னஸ் சர்டிபிடிகேட்” வாங்கித் தந்து, கமிஷன் பெற்று காலம் தள்ளிக் கொண்டிருக்கிறார். நிறைய கமிஷன் வந்ததால், பெண் பித்து பிடித்து, கல்யாணம் செய்து கொண்டே போகும் கணவன் புதிய சரித்திரம் படைக்க தயாராக இருக்கிறான் போலும். ஒரு நாளிதழ்,இதுவரை 2000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறை பெண்களுடன் தவறான உறவு வைத்துள்ளேன்[6]. இன்னும் பல பெண்களை திருமணம் செய்வேன். தட்டிக்கேட்டால் உன்னை தீர்த்து கட்டிவிடுவேன்என்று ஜெயசங்கர் மிரட்டினார் என்றுள்ளது. தினகரன் 2000 என்கிறது, தினத்தந்தி 1000 என்கிறது. தினமலர் எண்ணிக்கையைச் சொல்லவில்லை. ஊடகங்களுக்கு படு குஷி போலிருக்கிறது.

Three ration cards issued to him with three wivesமூன்று குடும்ப அட்டைகள் எப்படி”  என்பது சரி,  இரண்டாவதாக,  மூன்றவதாகப் பதிவு திருமணம் செய்தது எப்படி என்று தெரியவில்லையே?: “மூன்று குடும்ப அட்டைகள் எப்படி” என்று தினமலர் கேள்வி கேட்டு கட்டம் போட்டு காட்டியுள்ளது. “திருமணம் முடிந்து புதிய அட்டை கேட்டால், பல் ஆவணங்களை கேட்டு, இழுத்தடிக்கும் சம்பந்தப்பட்ட துறை, ஜெயசங்கருக்கு அட்டை கொடுத்தது எப்படி”, என்று கேட்டுள்ளது. “மூன்று குடும்ப அட்டைகள் எப்படி” என்பது சரி, இரண்டாவதாக, மூன்றவதாக பதிவு திருமணம் செய்தது எப்படி என்று தெரியவில்லையே?

  • ஒன்று முதல் மனைவி எதிர்க்கவில்லை
  • அல்லது ஜெயசங்கர் உண்மையினை மறைத்து திருமணம் செய்து கொண்டார் என்றாகிறது.
  • எதேபோல, மூன்றாம் திருமணம் செய்து கொண்டபோது, ஒன்று முதல் மனைவி மற்றும் இரண்டாவது மனைவி எதிர்க்கவில்லை
  • அல்லது ஜெயசங்கர் மறுபடியும் உண்மையினை மறைத்து திருமணம் செய்து கொண்டார் என்றாகிறது.
  • எல்லாமே – இரண்டு-மூன்று பதிவு திருமணம் என்றால், அத்தகைய பதிவுகள் எவ்வாறு செய்யப்படுகின்றன என்றும் கேள்வி கேட வேண்டுமே?

கமலஹாசன் காட்டிய முறையை தமிழர்கள் பின்பற்ற ஆரம்பித்து விட்டார்கள் போலும். தமிழச்சிகளும் ராதிகாவின் திருமுண முறையை, குஷ்புவின் அறிவுரையைப் பின்பற்றுகிறார்கள் போலும்!

© வேதபிரகாஷ்

21-08–2013


[1] தினகரன், போலீஸ்காரர் மகள் குமுறல் கணவரின் 3வது திருமணத்தை தடுக்க வேண்டும் ,பதிவு செய்த நேரம்: 2013-08-20 10:33:52,

[2] தினகரன், போலீஸ்காரர் மகள் குமுறல் கணவரின் 3வது திருமணத்தை தடுக்க வேண்டும், http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=59563

[3] தினமலர், செவ்வாய், 20-08-2013, பக்கம்.6, சென்னைப் பதிப்பு.

[4] இதற்கிடையில், இந்த புகார் மனு கொடுத்துள்ள கலைமகள், நிருபர்களிடம் கூறும்போது, எனது கணவர் 4–வதாக 17 வயது நிரம்பிய மேஜர் ஆகாத சிறுமியை திருமணம் செய்யப்போவதாக என்னிடம் சவால் விட்டுள்ளார். மேலும், 1,000 பெண்களை மணந்து, கின்னஸ் சாதனை செய்யப்போவதாகவும், எனது கணவர் சொல்கிறார். அவரது 4–வது திருமணத்தை நடக்கவிடாமல் தடுக்க வேண்டும் என போலீசாரை கேட்டுக்கொள்வதாக, அழுது கொண்டே தெரிவித்தார். http://www.dailythanthi.com/stop%20husband’s%204th%20marriage%3A%20%20Graduate%20female%20files%20complaint%20to%20Police%20Commissioner

[6] இதற்கிடையில், இந்த புகார் மனு கொடுத்துள்ள கலைமகள், நிருபர்களிடம் கூறும்போது, எனது கணவர் 4–வதாக 17 வயது நிரம்பிய மேஜர் ஆகாத சிறுமியை திருமணம் செய்யப்போவதாக என்னிடம் சவால் விட்டுள்ளார். மேலும், 1,000 பெண்களை மணந்து, கின்னஸ் சாதனை செய்யப்போவதாகவும், எனது கணவர் சொல்கிறார். அவரது 4–வது திருமணத்தை நடக்கவிடாமல் தடுக்க வேண்டும் என போலீசாரை கேட்டுக்கொள்வதாக, அழுது கொண்டே தெரிவித்தார். http://www.dailythanthi.com/stop%20husband’s%204th%20marriage%3A%20%20Graduate%20female%20files%20complaint%20to%20Police%20Commissioner