Archive for the ‘சோதனைக் குழாய்’ Category

சோதனைக் குழாய்க் குழந்தை முதல் “வாடகைத் தாய்” வரை: தானம், வியாபாரம், கொள்ளை, பெண்மை சீரழிவு – சட்டங்களை மீறும் நிலைகள் – பெண்ணியவாதிகள் மற்றும் சித்தாந்தவாதிகளின் மௌனம்! (3)

திசெம்பர்17, 2022

சோதனைக் குழாய்க் குழந்தை முதல்வாடகைத் தாய்வரை: தானம், வியாபாரம், கொள்ளை, பெண்மை சீரழிவுசட்டங்களை மீறும் நிலைகள் – பெண்ணியவாதிகள் மற்றும் சித்தாந்தவாதிகளின் மௌனம்! (3)

மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தின்படி, கருமுட்டைகளை அதற்கான வங்கிகளில் இருந்து மட்டுமே பெறவேண்டும்: மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தின்படி, கருமுட்டைகளை அதற்கான வங்கிகளில் இருந்து மட்டுமே பெறவேண்டும். ஆனால் இதற்கான கருமுட்டை வங்கிகள் இன்னும் ஏற்படுத்தப்படவில்லை. 23 வயது முதல் 35 வயது வரையிலான பெண்களிடம் அவர்களின் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கருமுட்டைகளை எடுக்க வேண்டும். குழந்தையில்லாத தம்பதியருக்கு ஒருமுறைக்கு மேல் கருமுட்டைகளையோ அல்லது விந்தணுக்களையோ தானமாக வழங்கக்கூடாது என்று அந்த சட்டத்தில் நிர்பந்திக்கப்பட்டுள்ளது. இனப்பெருக்க தொழில்நுட்ப முறைப்படுத்துதல் சட்டத்தை மத்திய அரசு, 2021ஆம் ஆண்டு கொண்டு வந்தது[1].  இதில் உள்ள சட்டப்பிரிவுகளை எதிர்த்து காஞ்சீபுரம், சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த, கருமுட்டைகளை தானமாக பெற விரும்பும் 143 பெண்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்[2]. இதிலிருந்து, இதையே ஒரு தொழிலாக செய்ய பெண்கள் தயாராகி விட்டனர் என்று தெரிகிறது.

செயற்கை கருத்தரித்தல் மூலமாக குழந்தை பெற்றுக்கொள்ளும் உரிமையை பறிக்கும் செயல் என்பதால் இந்த சட்டப்பிரிவுகளை ரத்து செய்ய வேண்டும்: குழந்தையின்மை பிரச்சினை அதிகரித்துவரும் இக்காலகட்டத்தில் இது மருத்துவரீதியாக நடைமுறை சாத்தியமற்றது. ஐரோப்பிய நாடுகள் நடத்திய ஆய்வில், ஒரு பெண் தனது வாழ்நாளில் ஆறு முறை கருமுட்டைகளை தானமாக வழங்கலாம் என கண்டறியப்பட்டுள்ளது[3]. இந்தக் கட்டுப்பாடுகள் குழந்தையில்லாத தம்பதியினர், செயற்கை கருத்தரித்தல் மூலமாக குழந்தை பெற்றுக்கொள்ளும் உரிமையை பறிக்கும் செயல் என்பதால் இந்த சட்டப்பிரிவுகளை ரத்து செய்ய வேண்டும்[4], என்றளவுக்கு, மனுவில் கோரியுள்ளனர். அதாவது, அந்த அளவுக்கு சட்ட நுணுக்கள் அவர்களுகேத் தெரியுமா அல்லது அவர்களுக்கு அவ்வாறு ஆலோசனைக் கூறப்பட்டதா அல்லது, பின்னணியில் வியாபார ரீதியில் தொடர்ந்து செய்ய, சம்பந்தப் பட்டவர்கள் சட்ட ரீதியில் இருக்கும் தடுப்புகளை உடைக்க முயல்கின்றனரா என்று கவனிக்க வேண்டும்.

ஆய்வு அறிக்கை: மேலும், கருமுட்டை வங்கிகள் அமைக்கும்வரை கருமுட்டைகளை தானமாக பெற்று செயற்கை கருத்தரித்தல் நடைமுறையை தொடர அனுமதிக்க வேண்டும்[5]. அத்துடன் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விதிகளின்படி 6 முறை கருமுட்டைகளை தானமாக பெற அனுமதிக்க வேண்டும்[6]. இவ்வாறு அதில் கோரப்பட்டு இருந்தது[7]. இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர், ஒரு பெண் தனது வாழ்நாளில் 6 முறை கருமுட்டைகளை தானமாக வழங்கலாம் என்பதற்கான அறிவியல் பூர்வமான ஆய்வறிக்கை உள்ளதா என கேள்வி எழுப்பினர்[8]. அதற்கு மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல் எம்.புருஷோத்தமன், இதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்றார்[9]. இதையடுத்து அந்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜனவரி மாதத்துக்கு தள்ளி வைத்தனர்[10].

அமெரிக்கஐரோப்பிய சோதனைகளும், இந்திய பெண்மையின் சோதனையும்: ஐரோப்பிய நாடுகள் நடத்திய ஆய்வில், ஒரு பெண் தனது வாழ்நாளில் ஆறு முறை கருமுட்டைகளை தானமாக வழங்கலாம் என கண்டறியப்பட்டுள்ளது என்றால், இந்தியாவில் அத்தகைய ஆய்வுகளை நடத்தியுள்லனரா, யார் நடத்தியது என்று தெரியவில்லை. இனிமேல் ஒரு வேளை ஆராய்ச்சி செய்து அறிக்கை தயார் செய்வார்கள் போலிருக்கிறது. இனப்பெருக்க மருத்துவத்திற்கான அமெரிக்கன் சொசைட்டி (The American Society for Reproductive Medicine, ஏஎஸ்ஆர்எம்) ஒரு முட்டை நன்கொடையாளருக்கு அவரது வாழ்நாளில் ஆறு சுழற்சிகள் என்று தொழில்துறை வரம்பை அமைத்துள்ளது, அதற்கு உதவும் கிளினிக்கிற்கு அல்ல. அவள் ஆறு சுழற்சிகளை முடித்தவுடன், அவள் வேறொரு வசதியிலோ அல்லது மற்றொரு பெறுநருக்கோ நன்கொடை அளிக்க தகுதியுடையவள் ஆகமாட்டாள். முட்டை தானம் செய்பவர்களுக்கு இந்த வரம்புக்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. ஒன்று, நன்கொடையாளருக்கு ஏற்படும் உடல்நல அபாயம் மற்றொன்று கவனக்குறைவாக உள்ள உறவின்மை ஏற்படுதல். முக்கியமாக கருமுட்டை உருவாவதற்கு போடப்படும் ஹார்மோன் ஊசிகளால் கருப்பை வீக்கமடையும். இதை கருப்பை உயர் ரத்த வெளிப்பாடு என்று கூறுவார்கள். இந்த முறையினால் நன்கொடையாளர்களுக்கு வயிற்றுவலி, ரத்தப்போக்கு, மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்புள்ளது. அதிகப்பட்சமாக மரணம் நேரும் அபாயமும் உள்ளது. குறிப்பாக கருப்பையில் இருந்து முட்டை எடுக்கும் போது கவனமாக செயல்படவில்லை என்றால் கருப்பை கிழிந்து ரத்தப்போக்கு ஏற்படும்[11]. இவற்றையெல்லாம் தானம் செய்யும் பெண்களுக்கு தெரிவிக்க வேண்டும். ஆகவே, ஒன்றுக்கு மீறி செய்யும் தானம், உயிருக்கு ஆபத்தும் உண்டாக்கும்[12].

பெண்ணியவாதிகள் மற்றும் சித்தாந்தவாதிகளின் மௌனம்: கருமுட்டை தானம் என்பது ரத்த தானம் போன்றது அல்ல; உறுப்பு தானம் ரத்த தானத்தை விட மாறுபட்டது என்பதை அறிந்து கொள்ளலாம், ஆனால், அதையும் ரத்த தானம் போன்றவற்றுடன் ஒப்பிட முடியாது; அந்நிலையில் கருமுட்டை தானம் என்பது, பெண்மையினை, பெண்ணின் தாய்மையை, பெண்ணின் உடல் நலத்தை பாதிக்கக் கூடிய விவகாரம் ஆகும். இது பற்றி மேலே விவரிக்கப் பட்டது. ஈரோடு விவகாரத்தில் ஈடுபட்டுள்ள பெயர்கள் மறைக்கப் பட்டாலும், முஸ்லிம்கள் என்று தெரிகிறது. ஒரு குறிப்பிட்ட மதம் என்று பார்க்கவேண்டிய அவசியம் இல்லை என்றாலும், இணைப்பு (nexus), சம்பந்தம், அத்தகைய வேலையை வியாபாரமாக  செய்யும் முறை, மற்ற மாநிலங்களிலும் இருக்கும் தொடர்புகள் அதையும் கவனிக்கத் தூண்டுகிறது. இருப்பினும், வாடகை தாய் போல, இதற்கும் சட்டரீதியில் அனுமதி கொடுக்கப் பட்டுள்ளது. ஆனால், அதை பின்பற்றாமல், பெண்களை கருமுட்டை உருவாக்கும் எந்திரம் போல பாவிக்கப் பட்டு, சதாய்க்கப் படுகின்றனர். இதுவரை, பெண் உரிமை, பெண்ணியம் என்றெல்லாம் பேசும், கூவும், கூச்சலிடும் நாரிமணிகள், பெண்மணிகள் யாரும் இது பற்றி எதையும் கண்டுகொள்ளாமல் இருக்கும் நிலை தான் தெரிகிறது. இந்துத்துவம், திராவிடத்துவம், பெரியாரிஸம் என்றெல்லாம் பேசுபவர்களும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள்.

© வேதபிரகாஷ்

17-12-2022


[1] இ.டிவி.பாரத், ஒரு பெண் வாழ்நாளில் எத்தனை முறை கருமுட்டை தானம் செய்யலாம்? உயர்நீதிமன்றம் கேள்வி, டிசம்பர் 17, 4:35 am.

[2] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/chennai/oocyte-donors-file-restrain-petition-of-central-new-enactment-of-donation/tamil-nadu20221216193951262262039

[3] தினத்தந்தி, 6 முறை கருமுட்டை தானமாக வழங்கலாம் என்ற ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும், டிசம்பர் 17, 4:35 am.

[4] https://www.dailythanthi.com/News/State/have-to-submit-a-study-report-for-6-times-egg-donation-859479

[5] தமிழ்.ஒன்.இந்தியா, பெண்ணிடம் ஒரு முறைக்கு மேல் கருமுட்டைகளை எடுக்கலாமா? “ஆதாரத்தை காட்டுங்கள்சென்னை ஹைகோர்ட் உத்தரவு, By Jackson Singh, Updated: Friday, December 16, 2022, 19:38 [IST].

[6] https://tamil.oneindia.com/news/chennai/show-the-proof-will-retrieve-eggs-of-a-woman-be-taken-more-than-once-madras-hc-order-489903.html

[7] தமிழ்.இந்து, பெண்களின் வாழ்நாளில் 6 முறை கருமுட்டைகள் எடுக்கலாமா? – அறிவியல்பூர்வ ஆதாரம் கேட்ட சென்னை ஐகோர்ட், ஆர்.பாலசரவணக்குமார், Published : 16 Dec 2022 07:39 PM, Last Updated : 16 Dec 2022 07:39 PM

[8] https://www.hindutamil.in/news/tamilnadu/915304-what-is-the-scientific-evidence-that-women-can-ovulate-6-times-in-their-lifetime-high-court.html

[9] காமதேனு, ஆறு முறை கருமுட்டைகளை எடுக்க அனுமதி கோரும் மனு: ஆய்வறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு, Updated on :  16 Dec, 2022, 9:45 pm

[10] https://kamadenu.hindutamil.in/national/hc-orders-scientific-report-on-womans-ability-to-retrieve-eggs-more-than-once-in-her-lifetime

[11] தினகரன், விழிப்புணர்வு இல்லாததால் விபரீதங்கள் தொடரும் அவலம்; அப்பாவி ஏழை பெண்களின் உயிருக்கு உலை வைக்கும் கருமுட்டை தானம்: மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை, 2022-06-17@ 14:55:41.

[12]  https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=774773