Archive for the ‘நளாயினி’ Category

தமிழச்சிகளின் வீரம் மெய்சிலிர்க்க வைக்கிறது – விதவையுடன் இருந்த, கிராம நிர்வாக அதிகாரியை, வீட்டுக்குள் வைத்து, மனைவி பூட்டு போட்ட மனைவி!

ஜூன்12, 2013

தமிழச்சிகளின் வீரம் மெய்சிலிர்க்க வைக்கிறது – விதவையுடன் இருந்த, கிராம நிர்வாக அதிகாரியை, வீட்டுக்குள் வைத்து, மனைவி பூட்டு போட்ட மனைவி!

மாட்டிக் கொண்ட கிராம நிர்வாக அதிகாரி

தமிழக ஊடக விற்ப்பன்னர்களின் ரசனையே அலாதியானதுதான். வருத்தப்பட்டு, வெட்கிக் குனிகின்ற விஷயங்களை பெருமையாக இப்படி தலைப்பிட்டு செய்திகளாக வெளியிட்டிருக்கிறார்கள்:

ஏதோ சத்தியவிரதை, நளாயினி தனது கணவனை மீட்டது போல என்றிருந்தால், அப்பெயர்களையும் கொடுக்காமல், மக்களுக்கு தகுந்த பாடம் புகட்டாமல், உல்லாசம், கள்ளக்காதலி, பூட்டு போட்டார், மானத்தை வாங்கினார் என்றெல்லாம் விவரித்துள்ளனர்.

விதவையோ யாரோ

கிராம நிர்வாக அதிகாரியின் சட்டமீறல் விவகாரம்: விதவையுடன் இருந்த, கிராம நிர்வாக அதிகாரியை, வீட்டுக்குள் வைத்து, மனைவி பூட்டு போட்டதால், “பரபரப்பு” ஏற்பட்டது. இப்பொழுதெல்லாம் இந்த “பரபரப்பு” வழக்கமாக ஊடகங்களில் வந்து கொண்டிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம், மருதன்வாழ்வு கிராம வி.ஏ.ஓ., முத்து, 35. இவர், தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர். நெல்லை அடுத்த, பாளை  கே.டி.சி.நகரில் வாடகை வீட்டில், மனைவி மாலா, இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

மாட்டி விட்டவள் மனைவியோ

விதவையை மதிக்கத் தெரியாத தமிழனா?: தூத்துக்குடி, பிரையன்ட் நகரைச் சேர்ந்தவர் சத்யா, 25. இவர் கணவர் நாகராஜன், ஆறு மாதங்களுக்கு முன், உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தார். அவரது, இறப்பு சான்றிதழ் மற்றும் விதவை உதவித் தொகை போன்ற சான்றிதழ்கள் பெறச் சென்றபோது, வி.ஏ.ஓ., முத்துவிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சத்யாவிற்கு, ஒரு ஆண் குழந்தை உள்ளது. வி.ஏ.ஓ., முத்து, சத்யாவிற்கு, பாரதி நகரில், வாடகைக்கு வீடு எடுத்து, தங்க வைத்தார்; அடிக்கடி அங்கு சென்று சந்தித்து வந்துள்ளார். ஆனால், “கள்ளக் காதலி வீடு” என்று வர்ணிக்கின்றன இரண்டு ஊடகங்கள்! எந்த வீடானாலும், விதவையை மதிக்கத்தெரியாத தமிழனா? “சின்னவீடு” என்ற கேவலமான சொற்றொடரை உயர்த்திவிட்ட பெருமை இக்கால 21ம் நூற்றாண்டு தமிழனுக்குத்தான் சேரும்.

கணவன் மனைவி பிரச்சினை

கணவனின் நடவடிக்கையில் சந்தேகம் என்றால் மற்ற விஷயங்களையும் கண்டித்திருக்க வேண்டும்: கணவனின் நடவடிக்கைகளில், மனைவி மாலாவிற்கு, சந்தேகம் ஏற்பட்டது. ஒருநாள், சத்யாவின் வீட்டிற்கு, மகனையும் அழைத்துச் சென்றார் முத்து. அப்பா சென்றிருந்த இடத்தையும், அங்கு இனிப்பு தந்ததையும், சிறுவன் தாயிடம் கூறினான்.இதில் ஆத்திரமடைந்த மாலா, கணவனை, கையும் களவுமாக பிடிக்கத் திட்டமிட்டார். அவருக்கு வீடு தெரியாது என்பதால் 4 வயது மகனை உடன் அழைத்துச் சென்றார். அவன் சத்யாவின் வீட்டை அடையாளம் காட்டினான். கணவனின் நடவடிக்கையில் சந்தேகம் என்றால் மற்ற விஷயங்களையும் கண்டித்திருக்க வேண்டும்[1].

VAO widow wife tangle June 2013

வி..., உல்லாசம் பூட்டு போட்டார் மனைவி: நேற்று காலை (திங்கட் கிழமை), பணிக்கு செல்வதாக கூறி, முத்து புறப்பட்டார். நேராக, சத்யா வீட்டிற்கு சென்றார். இதை அறிந்த மாலா, கையில் இரண்டு பூட்டுக்களோடு, அங்கு சென்றார். வீட்டுக்குள், கணவர் முத்து, சத்யாவுடன் இருப்பதை உறுதிபடுத்திக் கொண்டார். ஜன்னல் வழியாக பார்த்தபோது உள்ளே தனது கணவர் முத்து இருப்பதை தெரிந்து கொண்டார். வீட்டின், முன்னும் பின்னும், கதவுகளுக்கு பூட்டு போட்டார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், அங்கு கூடினர். வீட்டுக்குள் இருந்த முத்து, போலீசுக்கு தகவல் தெரிவித்து, மீட்கும்படி வேண்டினார்[2]. போலீசார், அங்கு வந்தனர். சத்யாவுடன் பேசி, பூட்டுக்களை திறந்தனர். பின், மூவரையும், காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இது தொடர்பாக, வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை[3].

எனது கணவரை மயக்கி விட்டார்[4]: இதுகுறித்து மாலா கூறுகையில், ‘எனது கணவர் நல்லவர், சத்யா எனது கணவரை மயக்கி விட்டார். 3 மாதங்களாக அவர்களுக்குள் தொடர்பு இருந்தது. நான் எவ்வளவோ சொல்லியும் எனது கணவர் கேட்கவில்லை. எனக்கு தெரியாமல் அவரது வீட்டுக்கு வந்து தங்கியுள்ளார். அவருக்கு உதவி செய்வதாக கூறி, அவரது வலையில் விழுந்து விட்டார். என்னை தவிக்க விட்டுவிட்டு, சத்யாவுடன் சேர்ந்து வாழ விரும்புகிறார். நான் இதற்கு சம்மதிக்க மாட்டேன்‘ என்றார். சத்யா கூறுகையில், ‘எனக்கு கணவர் இல்லாததால் விஏஓ என்ற முறையில் அவர் உதவி செய்து வந்தார். எனது மகனை படிக்க வைப்பதற்காக, இங்கு வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளேன். இனி பெற்றோர் வீட்டுக்கு சென்று விடுவேன்‘ என்றார். தனக்குத் துரோகமிழைத்த கிராம அதிகாரியை அவரது மனைவி சிறைவைத்த சம்பவம் நெல்லைப் பகுதியில் பரபரப்பாகப் பேசப்படுகிறது[5].

திருநங்கையினரை உயர்த்தி பிடிக்கும் இவர்களுக்கு பெண்களை மதிக்க தெரியவில்லை: சமூதாயத்தில் பெண்மை பலவிதங்களில் ஊடகங்களில் இழிவு படுத்தப்படுகின்றது. குறிப்பாக தமிழ் சினிமாக்களில் விதவை, நர்ஸ், போலீஸ், கூலிவேலை செஊட்ய்ம் பெண்கள், குறிப்பாக சித்தாள் / பெரியாள் என்று கட்டட வேலையில் உள்ளோர் போன்ற பெண்பாத்திரங்கள் கொச்சையாகவும், கேவலமாகவும், ஆபாசமாகவும் சித்தரிக்கப் பட்டுள்ளன, படுகின்றன[6]. ஆனால், அத்தகைய சித்தரிப்புகளில் ஈடுபட்டவர்கள் தாம் பெண்ணியத்தைத் தூக்கிப் பிடிக்கும் வீரர்கள் போல நடித்து வருகிறார்கள். இவர்கள் எல்லோரும் யார் கூப்பிட்டாலும் கூட வந்து / போய் விடுவார்கள் என்பது போல பிரச்சாரம் செய்திருக்கிறார்கள்.

வகை-வகையான ஊழல்கள் நிறைந்த சமூகம்: ஊழல் இப்பொழுது எல்லாவற்றிலும் புறையோடிக்கொண்டு இருக்கிறது. ஊழலுக்கே ஊழல் செய்ய்ம் திறமையினையும் திராவிட சித்தாந்திகள், அரசியல்வாதிகளான சித்தாந்திகள், முதலாளிகளான அரசியல்வாதிகள், தொழிலதிபர்களான முதலாளிகள், வியாபாரிகளான முதலாளிகள் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். மனத்தில் உள்ள ஊழல் அடக்கமுடியாத அளவிற்கு பொங்கிப் பீரிட்டுக் கொண்டுதான் இருக்கிறது. இடைக்காலத்தில் சித்தாந்திகள் மலம் என்று குறிப்பிட்டார்கள். இப்பொழுது அப்பெயருக்கு ஏற்றாற்போல அல்லது அதனையும் மிஞ்சும் அளவிற்கு, நாற ஆரம்பித்துள்ளது. அந்த அளவிற்கு தமிழகத்தில் எல்லாவிதமான ஊழல்களையும் ஒழிக்க வேண்டும், அப்பொழுது தான் மக்கள் உருப்படுவார்கள்.

வேதபிரகாஷ்

© 12-06-2013


[1] சாதி சான்றிதழ், இறப்பு சான்றிதழ், பிறப்பு சான்றிதழ், வருவாய் சான்றிதழ், பெயர் மாற்றம் சான்றிதழ், வாரிசு சான்றிதழ், உதவித்தொகை சான்றிதழ், என்று எதற்குத்தான் இவர்கள் லஞ்சம் வாங்காமல் கொடுக்கிறார்கள்? அதிலும் 10-20 தடவை அலைக்கழித்துதானே கொடுக்கிறார்கள்.

[3] இதன் ரகசியத்தை எல்லாம் தெரிந்த ஊடகத்தினரும் கண்டு கொள்ளமல் செய்திகளை மட்டும் போட்டு இருக்கின்றனர்.

[4] தினகரன், நெல்லையில்கள்ளக்காதலிவீட்டில்வி..சிறைபிடிப்பு : கதவைபூட்டிஅம்பலப்படுத்தியமனைவி,  http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=52201

[6] இதற்கு நகைச்சுவை நடிகர்கள் என்று ஒரு கூட்டம் வேறு உள்ளது. டிவிசெனல்களும் இந்த அருவருப்பை, விவஸ்தை இல்லாமல், சில நேரங்களில் சிறுவர்களையும் வைத்து செய்து வருகிறார்கள். இவர்களுக்கு “கலைமாமணி” விருதுகள் வேறு கொடுக்கப்பட்டுள்ளன, படுகின்றன.