Archive for the ‘மீறல்’ Category

வினுபிரியா தற்கொலை: பேஸ் புக் – வாட்ஸ்-அப் குற்றங்கள் பெருகி வருவதும், இளம்பெண்கள் பலிகடா ஆகும் நிலையும் – தடுக்க ஒழுக்கம், கட்டுப்பாடு எங்கிருந்து துவக்க வேண்டும்?

ஜூன்29, 2016

வினுபிரியா தற்கொலை: பேஸ் புக் – வாட்ஸ்-அப் குற்றங்கள் பெருகி வருவதும், இளம்பெண்கள் பலிகடா ஆகும் நிலையும் – தடுக்க ஒழுக்கம், கட்டுப்பாடு எங்கிருந்து துவக்க வேண்டும்?

Vinupriya photos - lamenting parents-Dinakaran

மைதிலி வினுபிரியா ஐடியில் மெஸேஜ் அனுப்பியது யார்?: இதற்கிடையே நாமக்கல்லில் கல்லூரியில் படித்த போது வினுபிரியாவும், அதே கல்லூரியில் படித்த மைதிலியும் தோழியாகி உள்ளனர். இதில் மைதிலி அதே கல்லூரியில் படித்த ஒரு வாலிபரை காதலித்ததாகவும், அந்த வாலிபர் ஒரு தலையாக வினுபிரியாவை காதலித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மைதிலி தன் காதலரை தன் வசப்படுத்த வினுபிரியாவுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் மைதிலி வினுபிரியா என்ற பெயரில் பேஸ்புக் ஐ.டி.யை போலியாக உருவாக்கி வினுபிரியாவின் ஆபாச படங்களை வெளியிட்டிருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் தற்போது சென்னையில் பணிபுரிந்து வரும் மைதிலியை போலீசார் சேலத்திற்கு விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளனர். அவரிடம் விசாரித்தால் இந்த வழக்கில் முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்பதால் தற்போது இதில் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. படிக்கும் இடத்தில், படிப்பைத் தவிர இந்த மாணவிகள் இவ்வாறு ஈடுபடுவதால் தான் பிரச்சினை ஏற்படுகிறது. அதேபோல, அந்த மாணவர்களையும் கட்டுப்படுத்தி வைக்க வேண்டும்.

Vindupriya parents cryபோலீசாரின் மெத்தன போக்கு: இதற்கிடையே முன்கூட்டியே அந்த பேஸ்-புக் ஐ.டி.யை போலீசார் முடக்கியிருந்தால் தன் மகள் இறந்திருக்க மாட்டாள் என்றும், வினுபிரியாவின் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்தால் தான் அவரது உடலை வாங்குவோம், இல்லையென்றால் அவரது உடலை வாங்க மாட்டோம் என்று அண்ணாதுரை மற்றும் அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்[1]. இதனால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில பதட்டமான சூழல் நிலவுவதால் அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர்[2]. அவரது உடல் சேலம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்கப்போவதில்லை என வினுப்பிரியாவின் உறவினர்கள் இரண்டாவவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்[3]. இந்நிலையில், மருத்துவமனையிலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பேரணியாகச் சென்ற உறவினர்கள், மாவட்ட ஆட்சியர் சம்பத்திடம், குற்றவாளியை விரைந்து கைது செய்யக் கோரி மனு அளித்தனர். காவல்துறை துணைத் தலைவர் அலுவலகத்திற்குச் செல்லுமாறு மாவட்ட ஆட்சியர் பரிந்துரைத்தார். பின்னர், வெளியே வந்த பெற்றோர், அதிகாரிகள் தங்களை அலைக்கழிப்பதாக புகார் தெரிவித்தனர். காவல்துறை துணைத்தலைவர் அலுவலகத்திற்குச் செல்லாமல், அரசு மருத்துவமனைக்குச் சென்ற உறவினர்கள் அங்கு தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்[4]. வினுப்பிரியா தற்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளி மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் சம்பத் தெரிவித்துள்ளார்[5]. இதனிடையே போலீஸார் வருத்தம் தெரிவித்ததை அடுத்து வினுப்பிரியாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தங்கள் போராட்டத்தை விலக்கி கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன[6]. சேலம் எஸ்.பி., அளித்த உறுதிமொழியை தொர்ந்து, வினுபிரியாவின் உடலை பெற்றுக் கொள்ள, பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். பிரேத பரிசோதனைக்கு பின், நேற்று மாலை, அவரது உடல் ஒப்படைக்கப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன், மோட்டூரில், உடல் தகனம் செய்யப்பட்டது[7].

Salem SP Amit Kumar Singh apologises to the family of the deceased - NIE photoஇன்டர்நெட் புராட்டகால் நெட்வொர்க் முகவரியில் (.பி.எண்) சோதனை: ஆசிரியை வினுப்பிரியாவின் பேஸ்புக் படத்தை எடுத்து மார்பிங் செய்து ஆபாசமாக வெளியிட்ட ஆசாமி, எந்த இன்டர்நெட் புராட்டகால் நெட்வொர்க் முகவரியில் (ஐ.பி.எண்) இருந்து அனுப்பி இருக்கிறான் என்பதை சம்பந்தப்பட்ட நெட்வொர்க் நிறுவனத்திடம் பேசி அலசி ஆராயும் பணியை தொடங்கினர்[8]. அவர்களின் தேடுதல் வேட்டைக்கு பலனாக வினுப்பிரியா புகைப்படத்தை மார்பிங் செய்யப்பட்டதாக சொல்லப்படும் முகவரி (ஐ.பி. எண்) ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதனுள் புகுந்து சைபர்கிரைம் போலீசார் பார்க்கையில், அதில் ஒரே ஐ.பி. எண்ணைபோல 100-க்கும் மேற்பட்ட எண்கள் இருப்பதை குற்றவாளியை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது[9]. அதுமட்டுமல்லாது, புகைப்படத்தை மார்ஃபிங் செய்து பரவவிட்ட நபருக்கு எப்படி தற்கொலை செய்து கொண்ட வினுப்பிரியாவின் மாமா மற்றும் தந்தையின் செல்போன் எண் தெரிந்தது என்றும், தொடர்புக்கு என்று தந்தை அண்ணாதுரையின் செல்போன் எண்ணை எப்படி பதிவு செய்தான்? என்பதும் சந்தேகத்திற்கிடமாகியது. இதுதொடர்பாக போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தினர்[10].

Parents refused to take the body - Vinupriyaமார்பிங் செய்த சுரேஷ் கைது (29-06-2016): இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கல்பாரைப்பட்டியை சேர்ந்த சுரேஷ் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். அவர் அளித்த தகவலின் பேரில் இளம்பிள்ளை பகுதியை சேர்ந்த தனுஷ் என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இருவரை பிடித்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். சுரேஷ் தறி நெய்யும் தொழிற்சாலையில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த இரண்டு வருடத்திற்கு முன் வினுப்பிரியாவை சுரேஷ் ஒரு தலையாக காதலித்ததாக கூறப்படுகிறது[11]. இதை வினுப்பிரியா ஏற்கவில்லை. இருப்பினும் வினுப்பிரியா பெற்றோரிடம் சென்று பெண் கேட்டார். ஆனால் பெண் கொடுக்க மறுத்து விட்டனர். அதே நேரத்தில் முகமது சித்திக் என்பவனும் வந்து பெண் கேட்டான், அவர் வேறு மதம் என்பதால் பெண் கொடுக்க அண்ணாதுரை மறுத்தார் என்று முன்னர் செய்திகள் வந்தன. அப்படியென்றால், இந்த விவகாரங்கள் பெற்றோர்களுக்குத் தெரியும் என்றாகிறது. இருப்பினும், இக்கால பையன்கள் இம்மாதிரி, தாங்களே, ஒருதலைபட்சமாக முடிவெடுத்துக் கொண்டு, மற்றவர்களையும், தங்களது விருப்பங்களுக்கு ஒப்புக் கொள்ளவேண்டும், இல்லையென்றால், தான் என்னவேண்டுமானாலும் செய்வேன் என்ற குரூர-வக்கிர புத்தியுடன் செயல்படுவது தான் அதிர்ச்சியாக இருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ் தனது நண்பர் தனுஷ் உதவியுடன் வினுப்பிரியா உடலை மார்பிங் செய்து வெளியிட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன[12].

Vinupriyas பரென்ட்ச் அப்பெஅல் டொ தெ சொல்லெச்டொர்பிடிபட்டவர்கள் எத்தனை பேர், எல்லோரும் மார்பிங் செய்தனரா?: மேலும் அவர் அளித்த தகவலின் பேரில் இளம்பிள்ளை பகுதியை சேர்ந்த தனசேகரன் என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்[13]. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது[14]. சுரேஷ் அளித்த தகவலின் பேரில் மேலும் இருவரை பிடித்து விசாரிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர் என்கிறாது தினகரன்[15]. இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய சங்ககிரி டிஎஸ்பி கந்தசாமி, ஒருதலைக் காதலால் வினுப்பிரியா படத்தை ஆபாசமாக சித்தரித்து சுரேஷ் வெளியிட்டுள்ளார். வினுப்பிரியா தற்கொலை வழக்கில் சுரேஷை தவிர வேறு யாருக்கும் தொடர்பில்லை. கைதான சுரேஷிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்தார் என்கிறது விகடன்[16], ஆனால் தனசேகர் பற்றி ஒன்றும் குறிப்பிடவில்லை[17]. எனவே, இவ்விசயத்திலும் முரண்பட்ட செய்திகள் விசித்திரமாக இருக்கின்றன, உண்மையில் மார்பிங் செய்தது யார், அல்லது அவனுக்கு உதவி செய்தது யார், இதில் ஈடுபட்டது, ஒருவரா, ஒருவருக்கு மேல் உள்ளனரா என்ற கேள்விகள் எழுகின்றன.

 

© வேதபிரகாஷ்

29-06-2016

[1] மாலைமலர், பேஸ்புக்கில் ஆபாச படம் வெளியானதால் ஆசிரியை தற்கொலை: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம், பதிவு: ஜூன் 28, 2016 10:43

[2] http://www.maalaimalar.com/News/District/2016/06/28104306/1021908/salem-teacher-suicide-case-relatives-struggle.vpf

[3] நியூஸ்7.டிவி, மார்ஃபிங் காரணமாக தற்கொலை செய்துகொண்ட வினுப்பிரியாவின் உடலை வாங்க மறுப்பு, June 28, 2016

[4] http://ns7.tv/ta/parents-refused-take-vinupriyas-body.html

[5] தினபூமி, வினுப்பிரியா தற்கொலை: விரைவில் குற்றவாளி கைது செய்யப்படுவார் சேலம் கலெக்டர் உறுதி, June 28, 2016

[6] http://www.thinaboomi.com/2016/06/28/57532.html

[7] http://www.dinamalar.com/news_detail.asp?id=1553212

[8] தினத்தந்தி, வினுப்பிரியா தற்கொலை வழக்கில் இளைஞர் கைது; செல்போன், சிம்கார்டை பறிமுதல் செய்து விசாரணை, பதிவு செய்த நாள்: புதன், ஜூன் 29,2016, 10:31 AM IST; மாற்றம் செய்த நாள்: புதன், ஜூன் 29,2016, 10:31 AM IST.

[9] http://www.dailythanthi.com/News/India/2016/06/29103132/Morphed-Facebook-images-drive-woman-to-suicide-youth.vpf

[10] http://tamil.oneindia.com/news/tamilnadu/one-arrest-salem-vinupiriya-suicide-case-257036.html

[11] விகடன், ஒருதலைக்காதலன் செய்த விபரீதமா? வினுப்பிரியா வழக்கில் திருப்பம், Posted Date : 11:32 (29/06/2016)

[12] தினமலர், வினுப்பிரியா படத்தை மார்பிங் செய்து வெளியிட்டவர் கைது, ஜூன்.29, 2016:13:41.

[13] தமிழ்.ஒன்.இந்தியா, வினுப்பிரியா தற்கொலை: ஒருவரை கைது செய்தது சேலம் போலீஸ், By: Mayura Akilan, Published: Wednesday, June 29, 2016, 10:34 [IST]

[14] http://www.dinamalar.com/news_detail.asp?id=1553571

[15] http://www.dinakaran.com/latest_detail.asp?Nid=227665

[16] http://www.vikatan.com/news/tamilnadu/65654-new-twist-in-vinu-priya-suicide-case.art

[17] விகடன், ஒருதலைக்காதலன் செய்த விபரீதமா? வினுப்பிரியா வழக்கில் திருப்பம், Posted Date : 11:32 (29/06/2016)

“ரேப்-ஜிஹாத்” – மீரட் முதல் திருச்சி வரை – இதுதான் முஸ்லிம் ஸ்டைல் – இந்து பெண்களுக்கு எச்சரிக்கை (2)

ஓகஸ்ட்7, 2014

“ரேப்-ஜிஹாத்” – மீரட் முதல் திருச்சி வரை – இதுதான் முஸ்லிம் ஸ்டைல் – இந்து பெண்களுக்கு எச்சரிக்கை (2)

 

Meerut-gangrape-victim brought to magistrate Aug.2014

Meerut-gangrape-victim brought to magistrate Aug.2014

முசாபர் நகருக்கு கடத்தி சென்று கற்பழிக்கப்பட்டார்: ஹிந்தி மற்றும் ஆங்கிலம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியை பதரஸாவைச் சேர்ந்த சர்வா பள்ளியில் வேலை செய்து வருகின்றாள். உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் அருகே உள்ள கார்கவ்டா பகுதியில் பெண் ஆசிரியர் ஒருவர் மதராசாவிற்கு கடத்தி வரப்பட்டு கற்பழிக்கப்பட்டது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[1]. பள்ளியில் ஆசிரியராக உள்ள அப்பெண் கடந்த ஜூலை 23ந் தேதி தனது வீட்டிற்கு திரும்பும் வழியில், கும்பல் ஒன்று தன்னை கடத்தியதாக கூறினார். முதலில் ஹப்பூரில் உள்ள மதராசாவிற்கு தன்னை கடத்தி சென்று கற்பழித்தவர்கள் பின்னர் முசாபர் நகருக்கு கடத்தி சென்றதாக தெரிவித்தார். அங்கு பலர் தன்னை கற்பழித்தாகவும் அப்பெண் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்[2]. மேலும் மதமாற்றம் செய்யுமாறு தன்னை மிரட்டியதாகவும் அப்பெண் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்[3]. போலீசில் புகார் பதிவு செய்யப்பட்டதையடுத்து பஞ்சாயத்து தலைவர், பெண் ஒருவர் உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இதில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

Meerut-gangrape-girl-Ajtak photo

Meerut-gangrape-girl-Ajtak photo

இஸ்லாமிய மதகுரு, இரு பெண்கள் இக்காரியங்களில் ஈடுபட்டுள்ளனர்: இன்னொரு நாளிதழின் படி, 20 வயது இளம்பெண் கிராம தலைவர் நவாப் கான் மற்றும் சிலரால் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதன்படியே, அவரது பெயரும் மாற்றப்பட்டு முசாபர் நகரில் வைக்கப்பட்டுள்ளார். இளம்பெண் அங்கிருந்து தப்பி ஒடிவந்துள்ளார். அவர் பேசுகையில் தனக்கு நடந்த கொடுமையை விவரித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இளம்பெண் கொடுத்த புகாரின்படி நவாப் கான் மற்றும் இரண்டு பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர். இரண்டு பெண்கள் மதமாற்றம் செய்ய உதவியாக இருந்துள்ளனர் என்று கூறப்படுகிறது[4]. போலீசார் பாலியல் பலாத்காரம் மற்றும் மத உணர்வுகளை காயப்படுத்துதல் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.  தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அப்பெண் போலீசில் புகார் கொடுத்தார். அப்பெண் போலீசாருக்கு கொடுத்த வாக்குமூலத்தை யூ டியூய் மூலம் 10000க்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனனர்[5].

 

உபி கற்பழிப்பு - செக்யூலரிசத்தைக் கடந்தது

உபி கற்பழிப்பு – செக்யூலரிசத்தைக் கடந்தது

புகார் கொடுத்தபோது போலீஸார் பதிவு செய்யவில்லை: முன்பே குறிப்பிடப்பட்டபடி, இளம்பெண் கடந்த ஜூலை 23ம் தேதி கடத்தப்பட்டுள்ளார். அப்போது பெண்ணின் பெற்றோர், பெண் கடத்தப்பட்டது தொடர்பாக புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று 04-08-2014 அன்று போலீஸ் நிலையம் முன்பு போராட்டம் நடத்தினர்[6]. தனது மகளை சிலர் கடத்திச் சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தியதோடு, கட்டாய மத மாற்றமும் செய்ததாக உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் போலீஸாரிடம் ஒருவர் புகார் அளித்துள்ளார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கர்கோதா, அத்ராடா பகுதிகளில் இரு மதத்தினரிடையே திங்கள்கிழமை 04-08-2014 மோதல் ஏற்பட்டது[7]. இரு தரப்பினரும் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதனால் மீரட் மாவட்டத்தில் பதற்றம் நிலவுகிறது. போராட்டம் நடத்திய அவர்கள் போலீஸ் அதிகாரியை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பான மருத்துவ அறிக்கைக்கு போலீசார் காத்திருப்பதாக கூறப்படுகிறது. இவ்விவகாரம் தொடர்பாக தகவல் அறிந்த பாரதீய ஜனதா கட்சியினர் – உபி தலைவர் லக்ஷ்மிகாந்த வாஜ்பேயி மற்றும் சோம்தேவ் அப்பகுதிக்கு சென்றனர்[8]. கட்சியின் எம்.பி. அகர்வால் இப்பிரச்சனை பாராளுமன்றத்தில் எழுப்பப்படும் என்று கூறினார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள சமாஜ்வாடி அரசு இது மதக்கலவரத்தை தூண்டிவிடும் முயற்சி என்று குற்றம் சாட்டியுள்ளது. “குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சில அரசியல் கட்சிகள் இதற்கு மதவாத சாயத்தை பூச முயற்சி செய்தன. ஆனால் அது வெற்றியடையவில்லை.” என்று சமாஜ்வாடி கட்சியின் தலைவர் நரேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து அங்கு பதற்றம் நீடிக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன[9].

meerut-islamic-gang-rape-exposed

meerut-islamic-gang-rape-exposed

 

கிராமத் தலைவர் நவாப் கான், மதகுரு சலாவுல்லா மனைவியுடன் சேந்து கொண்டு இக்காரியத்தை செய்தது: இது குறித்து மீரட் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எம்.எஸ்.பேக் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை (04-08-2014) கூறியதாவது: “கர்கோதா பகுதியைச் சேர்ந்த ஒருவர், தனது 20 வயது மகளை, கர்கோதா கிராமத் தலைவர் நவாப் கான், மதகுரு சலாவுல்லா மற்றும் மூவர் சேர்ந்து கடந்த 23ஆம் தேதியன்று கடத்திச் சென்று ஒரு மதரஸாவில் அடைத்துவைத்து பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக ஞாயிற்றுக்கிழமை இரவு புகார் அளித்துள்ளார். மேலும், தனது மகளை அவர்கள் மிரட்டி மதமாற்றம் செய்வதற்கான ஆவணங்களில் கையெழுத்து வாங்கியதாகவும் அந்தப் புகாரில் கூறியுள்ளார். கடத்தியவர்களின் பிடியில் இருந்து ஜூலை 30ஆம் தேதி தப்பித்துவந்த அந்தப் பெண், தனக்கு நிகழ்ந்த துயரத்தை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். பெற்றோர் செய்த புகாரை பிறகு தான் போலீஸார் பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணிடம் நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது உறுதியாகியுள்ளது. உடலில் காயங்களும் கண்டறியப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கத் தவறிய கர்கோதா காவல் அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீரட் மாவட்டத்தில் அசம்பாவிதங்கள் எதுவும் நிகழாமல் இருக்கக் கூடுதலாகப் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். நிலைமை கட்டுக்குள் உள்ளது”, என்று பேக் கூறினார்[10].

 

பாகிஸ்தான் முறை இங்கும் முஸ்லிம்களால் பின்பற்றப்படுகிறது

பாகிஸ்தான் முறை இங்கும் முஸ்லிம்களால் பின்பற்றப்படுகிறது

மதகுரு  சலாவுல்லாவும் அவரது மனைவியும் கைது: திங்கள்கிழமை இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கர்கோதா, அத்ராடா பகுதிகளில் இரு மதத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதனால் மீரட் மாவட்டத்தில் பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில், மீரட் மாவட்ட ஆட்சியர் பங்கஜ் யாதவ் கூறியதாவது: மதகுரு சலாவுல்லாவும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர்[11]. இன்னொரு நாளிதழின் படி, கைது செய்யப்பட்டவர்கள் கீழ் வருமாறு:

  1. மொஹம்மது நவாப் [Mohd Nawab, who is the Sarawa pradhan,
  2. சமர் ஜஹான் [Samar Jahan] – சலாவுல்லாவின் மனைவி.
  3. நிஷாத் [daughter Nishaat] – சமர் ஜஹானின் மகள்.

நான்காவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சலாவுல்லா [The fourth accused, Salalullah, is absconding] காணப்பவில்லை[12]. சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படும் ஹாபூட் பகுதியில் கோட்டாட்சியர் நீதி விசாரணை நடத்துவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு வாரத்துக்குள் விசாரித்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பங்கஜ் யாதவ் கூறினார். இதனிடையே, பாலியல் துன்புறுத்தல் மற்றும் மதமாற்றம் செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து மீரட் ஆட்சியர் அலுவலகத்துக்கு முன்பாக உத்தரப் பிரதேச மாநில பாஜகவின் வணிகர்கள் பிரிவுத் தலைவர் வினீத் அகர்வால் சாரதா தலைமையில் அந்தக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது செய்தியாளரிடம் சாரதா பேசுகையில், இந்தச் சம்பவம் தொடர்பாக ஆளும் சமாஜவாதி கட்சி அரசும், போலீஸாரும் நடவடிக்கை எடுக்காமல் தயங்குகின்றனர். இதில் உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்யத் தவறினார்கள் என்றால் மாநிலம் தழுவிய கடையடைப்பில் வணிகர்கள் ஈடுபடுவார்கள் என அரசை எச்சரிக்கிறேன் என்றார். இந்தப் பிரச்னையில் காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்று பாஜக எம்.பி. ராஜேஷ் குமார் அகர்வாலும் கூறியுள்ளார்.

 

மரண தண்டனையா- முல்லா கூறுவது என்ன

மரண தண்டனையா- முல்லா கூறுவது என்ன

மதமாற்றத்திற்கு கூட்டுக் கற்பழிப்பு செய்யப்படுகிறது: “மதமாற்றத்திற்கு கூட்டுக் கற்பழிப்பு செய்யப்படுகிறது என்ற புதிய விசயம் இப்பொழுது கற்பழிப்பு விவகாரத்தில் வெளிவந்துள்ளது. அதாவது பயத்திற்காக பெண் மதம் மாறவும் ஒப்புக்கொள்கிறாள். இவ்விவகரங்களை அரசு அசாதாரணமாக எடுத்துக்கொள்ளவேண்டும்”, என்று மம்தா சர்மா என்ற தேசிய மகளின் ஆணையத்தின் தலைவர் கூறியுள்ளார்[13]. கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முல்லாயம் சிங் யாதவ் இப்பொழுது கூறியுள்ளார்[14]. 05-08-2014 அன்று மேலும் இரண்டு பேர் கைது செய்யப் பட்டுள்ளதாக போலீஸார் அறிவித்துள்ளனர். ஆனால், பெயர்களை வெளியிட மறுத்துள்ளார்கள்[15]. சமஜ்வாடி கட்சி தலைவர் நரேஷ் அகர்வால் [Samajwadi Party (SP) leader Naresh Agarwal] பாதிக்கப்பட்ட பெண்ணே நீதிமன்றத்தில் மதமாற்றத்திற்கான விண்ணப்பங்களைக் கொடுத்துள்ளாள் என்று அறிவித்ததும் வியப்பாக உள்ளது[16]. ஆனால், இல்லை அவள் கொடுக்கவில்லை, கொடுக்கப்பட்ட ஆவணங்கள் போலியானாவை, யாரோ அதில் கையெழுத்திட்டுள்ளனர் என்ற செய்தியும் வந்துள்ளது[17]. தான் தப்பித்து வந்துள்ள மதரஸாவில் தன்னைப்போல ஒரு டஜன் பெண்களை அடைத்து வைத்துள்ளார்கள் என்று அப்பெண் கூறியுளள்ளாள். அதுமட்டுமல்லாது உள்ளூர் ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்யப் பட்டு “பெலிப்பினோ டியூப் / கருத்தறிக்கும் குழாய்கள்” வெளியே எடுக்கப்பட்டன என்றும் கூறினாள். இதனால் இனி அவள் கருத்தறிக்க முடியாது[18].

 

இந்து பெண்கள் மதமாற்றம் - ஒரு திட்டமே

இந்து பெண்கள் மதமாற்றம் – ஒரு திட்டமே

கற்பழிப்பு விவகாரத்தில் மருத்துவப் பரிசோதனை உண்மையினை வெளிப்படுத்தும்: பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணிடம் நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது உறுதியாகியுள்ளது. உடலில் காயங்களும் கண்டறியப்பட்டுள்ளது என்று முன்னர் தெரிவிக்கப் பட்டது. இப்பொழுது ஆளும் கட்சியின் தலைவர்கள், மற்றவர்கள் வேறுவிதமாகப் பேசி வருகின்றனர். தொடர்ந்து அகிலேஷ் யாதவ் மீது குற்றச்சாட்டுகள் அடுக்கப் பட்டு வருவதாலும், அவரது ஆட்சியில் சட்டம்-ஒழுங்குநிலை சரியில்லை என்று கூறப்படுவதாலும் ஆளுங்கட்சியினர் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அவ்வாறு பொய் பிரச்சாரம் செய்கின்றனர் என்பதை அறியலாம். பெண்ணை பரிசோதனை செய்தது பொய்யா இல்லை மறுபடியும் பரிசோதனை செய்து மெய்ப்பிக்க வேண்டுமா என்று தெரியவில்லை. இந்நிலையில் பிஜேபி, இவ்வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பியுள்ளது.

 

© வேதபிரகாஷ்

06-08-2014

[1] மாலைமலர், .பி. மதராசாவில் ஆசிரியை கற்பழிப்பு விவகாரம்: பெண் உட்பட 3 பேர் கைது, பதிவு செய்த நாள் : செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 05, 9:36 PM IST

[2] http://www.maalaimalar.com/2014/08/05213655/Meerut-molested-horror-in-Madr.html

[3] http://aajtak.intoday.in/story/meerut-gangrape-victim-speaks-about-the-incident-1-774623.html

[4] http://www.dailythanthi.com/News/India/2014/08/05154112/Meerut-Tense-After-Woman-Alleges-Gang-rape-Forced.vpf

[5] http://tamilnewsbbc.com/2014/08/05/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1.html

[6] தினத்தந்தி, மீரட்டில் இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மதமாற்றம்; பதற்றம் நீடிப்பு, மாற்றம் செய்த நாள்: செவ்வாய், ஆகஸ்ட் 05,2014, 3:41 PM IST; பதிவு செய்த நாள் செவ்வாய், ஆகஸ்ட் 05,2014, 3:41 PM IST

[7]http://www.dinamani.com/india/2014/08/05/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0/article2364811.ece

[8] http://news.oneindia.in/india/meerut-gangrape-up-bjp-chief-to-meet-victim-s-family-1496385.html

[9] http://www.dailythanthi.com/News/India/2014/08/05154112/Meerut-Tense-After-Woman-Alleges-Gang-rape-Forced.vpf

[10] http://www.dnaindia.com/india/report-tensions-rise-in-meerut-over-alleged-gang-rape-forced-religious-conversion-of-woman-2007878

[11] http://www.aninews.in/newsdetail2/story178317/meerut-teacher-039-s-gang-rape-case-police-arrests-three.html

[12] http://timesofindia.indiatimes.com/City/Meerut/Meerut-rape-forced-conversion-survivor-records-statement-in-court/articleshow/39724205.cms

[13] National Commission for Women (NCW) chairperson Mamta Sharma said on Tuesday “It has come up as a new thing now, that gang rape takes place for religion conversion. So that out of fear the girl agrees to convert. The government should take up thesematters very seriously.”

http://www.dnaindia.com/india/report-uttar-pradesh-government-should-take-meerut-gang-rape-incident-seriously-mamta-sharma-2008233

[14] http://zeenews.india.com/hindi/news/india/meerut-gang-rape-strict-action-will-be-taken-against-accused-assures-mulayam/229962

[15] http://www.firstpost.com/india/meerut-gang-rape-two-arrested-situation-still-tense-1651677.html

[16] Commenting on the Meerut gang-rape case, Samajwadi Party (SP) leader Naresh Agarwal today said the victim herself gave an application in court to change her religion, but now she is levelling allegations.

http://zeenews.india.com/news/uttar-pradesh/meerut-gang-rape-victim-herself-gave-application-to-convert_952890.html

[17] http://zeenews.india.com/news/uttar-pradesh/meerut-rape-affidavit-not-signed-by-woman-says-police_953010.html

[18]  ………………she had escaped from the madrassa where she had been kept along with close to a dozen others “like her”. She had also said she had been gang raped and herfallopian tubes removed in a surgery done at a local hospital to ensure she couldn’t conceive in future. She also alleged that she had been forcibly converted to Islam.

http://timesofindia.indiatimes.com/City/Meerut/Meerut-rape-forced-conversion-survivor-records-statement-in-court/articleshow/39724205.cms

மூன்று மனைவிகளை ஏமாற்றி நான்காவது திருமணம் – கின்னஸ் சாதனைப் படைக்கப் போவதாக கணவன் சவால், மிரட்டல் – முதல் மனைவி புகார்!

ஓகஸ்ட்21, 2013

மூன்று மனைவிகளை ஏமாற்றி நான்காவது திருமணம் – கின்னஸ் சாதனைப் படைக்கப் போவதாக கணவன் சவால், மிரட்டல் – முதல் மனைவி புகார்!

Polygamy-chennai-fiest-wifw-complaint-2013சமயபேதம் இல்லாத  –  ஒழுக்கமில்லாத சமுதாய சீரழிவுகள்: கோயம்புத்தூரில் பிலிப் ஜோசப் என்றால், சென்னையில் ஒரு ஜெயசங்கர் அதேபோல, பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டது தெரிய வருகின்றது. இவ்வாறு “நான்கு திருமணம்” செய்திகள் வருவது அதிகமாகி வருகிறது. பொதுவாக முஸ்லிம்கள் “நான்கு திருமணம்” செய்து கொள்கிறார்கள், “நான்கு மனைவிகள்” வைத்துக் கொள்கிறார்கள் என்றெல்லாம் சொல்வதுண்டு, பேசுவது உண்டு. ஆனால், இப்பொழுது கிறிஸ்தவர்களும், இந்துக்களும் அம்முறையைப் பின்பற்றும் போது, மற்றவர்களைப் பற்றி பேசுவதற்கு தார்மீக உணர்வு கிடையாதே? முதலில் அடுத்தவர் மீது குறை சொல்பவர்கள் தாங்கள் ஒழுங்காக இருக்க வேண்டுமே?

Jeyasankar and Kalaimagal - the first wife who lodged complaint22  வயதோன மகனுடன்  43  வயதான பெண் வந்து கணவன் மீது புகார்: சேப்பாக்கம் சி.என்.கே சாலையை சேர்ந்தவர் கலைமகள் (43), எம்.ஏ படித்தப் பெண். இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கணவர் மீது பரபரப்பு புகார் அளித்தார்[1]. அந்த பெண் தனது 22 வயது மகனுடன் போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்திருந்தார். புகார் கொடுத்தப் பின்னர், பின்னர், வெளியே வந்த கலைமகள் கூறியதாவது[2]:

1990ல் கலைமளை திருமணம் செய்து கொண்டது: “நான் பெரம்பூரை சேர்ந்தவர். தந்தை போலீசாக பணியாற்றியவர். முதுகலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். கல்லூரியில் 2ம் ஆண்டு படித்தபோது பெற்றோர் எனக்கு திருமணம் செய்து வைத்தனர். கணவர் ஜெயசங்கர் (48). 1990 செப்டம்பர் 9ல் திருமணம் நடந்தது. என்ஜினீயரிங் படித்துள்ள ஒரு மகனும்,  9–வது வகுப்பு படிக்கும் ஒரு மகளும் உள்ளனர். கணவர் பல மோசடி வேலைகளில் ஈடுபட்டு வந்தார். இதெல்லாம் நமக்கு வேண்டாம் என்றேன். அவர் கேட்கவில்லை.

 Jeyasankar married thrice and going for fourth

1996ல் ரமணவல்லியை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டது: 1996ல் அவருக்கும் சேத்துப்பட்டை சேர்ந்த ரமண வள்ளி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் பெரியமேடு சார்பதிவாள்ளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டனர். அவரது பெயரில் ரேஷன் அட்டையும் உள்ளது. அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

 மேகலா தேவியை மூன்றாவதாகத் திருமணம் செய்து கொண்டது: தொடர்ந்து காரணீஸ்வரர் பகோடா தெரு, மயிலாப்பூரை சேர்ந்த மேகலா தேவி என்பவருடன் கணவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இப்பொழுது இங்குதான் நிரந்தரமாகத் தங்கியுள்ளார்..

 ஒரே கணவன் மூன்று மனைவிகளோடு மூன்று குடும்ப ரேஷன் கார்டுகளைப் பெற்றது: என்னோடு சேர்த்து, 3 மனைவிகளுக்கும் தனித்தனி ரேஷன் கார்டும் உள்ளது. இதுபற்றி எனது கணவரிடம் கேட்டபோது, உனக்கு நான் எந்த குறையும் வைக்கவில்லை. நான் எத்தனை மனைவிகளுடனும் வாழ்வேன், நீ அதுபற்றி எதுவும் கேட்க கூடாது என்கிறார். அடித்துத் துன்புறுத்தியுள்ளார்[3].

 நான்காவதாக ஒரு மைனர் பெண்ணை கல்யாணம் செய்யப் போவது: மேலும், 17 வயது பெண்ணை திருமணம் செய்யப்போவதாக கணவர் கூறி வருகிறார்இதுவரை 2000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறை பெண்களுடன் தவறான உறவு வைத்துள்ளேன்[4]. இன்னும் பல பெண்களை திருமணம் செய்வேன். தட்டிக்கேட்டால் உன்னை தீர்த்து கட்டிவிடுவேன்”, என்று மிரட்டுகிறார். இதுகுறித்து திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் மகளிர் காவல் நிலையங்களில் புகார் செய்தேன். நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, நான் கொடுத்த புகார் மீது போலீஸ் கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது குழந்தையை நான் காப்பாற்றுவேன். போலீஸ்காரர் மகளின் புகாருக்கே நடவடிக்கை இல்லை. இதனால் அவமானப்படுகிறேன்”, இவ்வாறு கலைமகள் வேதனையுடன் கூறினார்[5].

கின்னஸ் சாதனைப் படைக்கப் போவதாக கணவன் சவால்,  மிரட்டல்: ஜெயசங்கர் (43) பி.ஏ பட்டதாரி, இளைஞர்களுக்கு “பிட்னஸ் சர்டிபிடிகேட்” வாங்கித் தந்து, கமிஷன் பெற்று காலம் தள்ளிக் கொண்டிருக்கிறார். நிறைய கமிஷன் வந்ததால், பெண் பித்து பிடித்து, கல்யாணம் செய்து கொண்டே போகும் கணவன் புதிய சரித்திரம் படைக்க தயாராக இருக்கிறான் போலும். ஒரு நாளிதழ்,இதுவரை 2000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறை பெண்களுடன் தவறான உறவு வைத்துள்ளேன்[6]. இன்னும் பல பெண்களை திருமணம் செய்வேன். தட்டிக்கேட்டால் உன்னை தீர்த்து கட்டிவிடுவேன்என்று ஜெயசங்கர் மிரட்டினார் என்றுள்ளது. தினகரன் 2000 என்கிறது, தினத்தந்தி 1000 என்கிறது. தினமலர் எண்ணிக்கையைச் சொல்லவில்லை. ஊடகங்களுக்கு படு குஷி போலிருக்கிறது.

Three ration cards issued to him with three wivesமூன்று குடும்ப அட்டைகள் எப்படி”  என்பது சரி,  இரண்டாவதாக,  மூன்றவதாகப் பதிவு திருமணம் செய்தது எப்படி என்று தெரியவில்லையே?: “மூன்று குடும்ப அட்டைகள் எப்படி” என்று தினமலர் கேள்வி கேட்டு கட்டம் போட்டு காட்டியுள்ளது. “திருமணம் முடிந்து புதிய அட்டை கேட்டால், பல் ஆவணங்களை கேட்டு, இழுத்தடிக்கும் சம்பந்தப்பட்ட துறை, ஜெயசங்கருக்கு அட்டை கொடுத்தது எப்படி”, என்று கேட்டுள்ளது. “மூன்று குடும்ப அட்டைகள் எப்படி” என்பது சரி, இரண்டாவதாக, மூன்றவதாக பதிவு திருமணம் செய்தது எப்படி என்று தெரியவில்லையே?

  • ஒன்று முதல் மனைவி எதிர்க்கவில்லை
  • அல்லது ஜெயசங்கர் உண்மையினை மறைத்து திருமணம் செய்து கொண்டார் என்றாகிறது.
  • எதேபோல, மூன்றாம் திருமணம் செய்து கொண்டபோது, ஒன்று முதல் மனைவி மற்றும் இரண்டாவது மனைவி எதிர்க்கவில்லை
  • அல்லது ஜெயசங்கர் மறுபடியும் உண்மையினை மறைத்து திருமணம் செய்து கொண்டார் என்றாகிறது.
  • எல்லாமே – இரண்டு-மூன்று பதிவு திருமணம் என்றால், அத்தகைய பதிவுகள் எவ்வாறு செய்யப்படுகின்றன என்றும் கேள்வி கேட வேண்டுமே?

கமலஹாசன் காட்டிய முறையை தமிழர்கள் பின்பற்ற ஆரம்பித்து விட்டார்கள் போலும். தமிழச்சிகளும் ராதிகாவின் திருமுண முறையை, குஷ்புவின் அறிவுரையைப் பின்பற்றுகிறார்கள் போலும்!

© வேதபிரகாஷ்

21-08–2013


[1] தினகரன், போலீஸ்காரர் மகள் குமுறல் கணவரின் 3வது திருமணத்தை தடுக்க வேண்டும் ,பதிவு செய்த நேரம்: 2013-08-20 10:33:52,

[2] தினகரன், போலீஸ்காரர் மகள் குமுறல் கணவரின் 3வது திருமணத்தை தடுக்க வேண்டும், http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=59563

[3] தினமலர், செவ்வாய், 20-08-2013, பக்கம்.6, சென்னைப் பதிப்பு.

[4] இதற்கிடையில், இந்த புகார் மனு கொடுத்துள்ள கலைமகள், நிருபர்களிடம் கூறும்போது, எனது கணவர் 4–வதாக 17 வயது நிரம்பிய மேஜர் ஆகாத சிறுமியை திருமணம் செய்யப்போவதாக என்னிடம் சவால் விட்டுள்ளார். மேலும், 1,000 பெண்களை மணந்து, கின்னஸ் சாதனை செய்யப்போவதாகவும், எனது கணவர் சொல்கிறார். அவரது 4–வது திருமணத்தை நடக்கவிடாமல் தடுக்க வேண்டும் என போலீசாரை கேட்டுக்கொள்வதாக, அழுது கொண்டே தெரிவித்தார். http://www.dailythanthi.com/stop%20husband’s%204th%20marriage%3A%20%20Graduate%20female%20files%20complaint%20to%20Police%20Commissioner

[6] இதற்கிடையில், இந்த புகார் மனு கொடுத்துள்ள கலைமகள், நிருபர்களிடம் கூறும்போது, எனது கணவர் 4–வதாக 17 வயது நிரம்பிய மேஜர் ஆகாத சிறுமியை திருமணம் செய்யப்போவதாக என்னிடம் சவால் விட்டுள்ளார். மேலும், 1,000 பெண்களை மணந்து, கின்னஸ் சாதனை செய்யப்போவதாகவும், எனது கணவர் சொல்கிறார். அவரது 4–வது திருமணத்தை நடக்கவிடாமல் தடுக்க வேண்டும் என போலீசாரை கேட்டுக்கொள்வதாக, அழுது கொண்டே தெரிவித்தார். http://www.dailythanthi.com/stop%20husband’s%204th%20marriage%3A%20%20Graduate%20female%20files%20complaint%20to%20Police%20Commissioner