Archive for the ‘நிகிதா’ Category

“ரத்தம் சொரிவதற்கு சந்தோஷமாக இருக்கிறேன்” – பதில் சொல்லாமல் ஓடிய நிகிதா ஆஜாத் – சபரிமலை, மாதவிலக்கு, தூய்மை – பெண்ணிய வீராங்கனைகளின் ரத்தப் போராட்டம் (3)

திசெம்பர்7, 2015

ரத்தம் சொரிவதற்கு சந்தோஷமாக இருக்கிறேன்” – பதில் சொல்லாமல் ஓடிய நிகிதா ஆஜாத் – சபரிமலை, மாதவிலக்கு, தூய்மை – பெண்ணிய வீராங்கனைகளின் ரத்தப் போராட்டம் (3)

Vedaprakash, Nikita Azad correspondence started on 24-11-2015

27-11-2015 அன்றைய என்னுடைய பதில்: அந்த இளம்பெண், என்னுடைய பெயரைக் குறிப்பிட்டு, முஸ்லிம்களின் பழக்க-வழக்கக்களையும் நாங்கள் மதிப்பதில்ல என்று குறிப்பிட்டதாலும், இதுதான் உங்களது பிரச்சாரத்தின் “நாகரிகம்” மற்றும் “பண்பாடா”, “உங்கள் தாயார்கள் உங்களுடைய பதிவுகளைப் பார்த்தால்” என்ன நினைப்பார்கள் என்று, நான் பதிவு செய்ததால், இப்பதிலை பதிவு செய்கிறேன்[1]:

 Vedaprakash, Nikita Azad correspondence started on 25-11-2015

  1. மதப்பிரச்சினை/சண்டைகளை உங்களது கிருத்துவ மற்றும் முஸ்லிம் நண்பர்கள் தான் செய்து வருகிறார்கள். அவர்கள் எப்படி ஒரு குறிப்பிட்ட மதத்தினை குறைக்கூறுகின்றனர், அதே நேரத்தில் மற்ற மதங்களின் நல்லதை எடுத்துக் காட்டுகிறார்கள் என்பதை அவர்களது பதிவுகளிலிருந்தே (உண்மையில் அவையெல்லாம் தவறு, பொய் மற்றும் கட்டுக்கதைகள்) அறிந்து கொள்ளலாம்[2].
  2. இப்பொழுதுதான், “பாலியல் ரீதியில் வேற்றுமைப் படுத்தும் எல்லா மதங்கள் மற்றும் சடங்குகள் எல்லாவற்றிற்கும் எதிர்க்கிறோம்”, என்ற வாதமே வந்துள்ளது. அதிலும், நான் பல இடங்களில் அவர்களது வாதங்களுக்கு எதிராக பதில் கொடுத்த பிறகு, என்னுடைய பெயரைக் குறிப்பிட்டு நீங்கள் இதனை ஆரம்பித்துள்ளீர்கள். அதனால் தான், நான் ஆரம்பத்திலேயே, “செக்யூலரிஸத்துடன் ரத்தத்தை சொரியுங்கள்” என்று குறிப்பிட்டேன்[3].
  3. அவதுறான, மோசமான, கீழ்த்தரமான வார்த்தைகள், படங்களுடன் பிரச்சாரம் செய்து வருவதால் தான், உங்களை நீங்களே நியாயப்படுத்திக் கொள்ள, “நேரிடையான விவாதம் புரிவது அவர்களது திட்டமல்ல என்று தெரிகிறது”, என்ற வாதம் வைக்கப்பட்டுள்ளது.
  4. நேரிடையான விவாதம் – உங்களுடைய பதிவுகளில் இல்லை, அதனை எடுத்துக் காட்டிய நிலையில், அத்தகைய பிரதிவாதமும் வெளிப்படுகிறது.Shyama Dasgupta - Happy to bleed photo
  5. பார்ப்பன அடிப்படைவாதிகள் நமது இயக்கத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்த இன்னொரு முறையைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள்[4] – என்னது இது? என்னை “பார்ப்பன அடிப்படைவாதி”, “மத-அடிப்படைவாதி” என்று அழைப்பதற்கு என்ன உரிமை உள்ளது?
    1. உம்முடைய திட்டம் என்ன?
    2. நான் எடுத்துக் காட்டியவற்றை முறைப்படி எதிர்கொள்ள முடியவில்லை, பதிலளிக்க முடியவில்லை என்றால், இயலாமை மற்றும் அந்த பொருளைப்பற்றிய உண்மை தெரியாது என்பதனை ஒப்புக்கொள்ளுங்கள்.
    3. இத்தகைய தாக்குதல்களில் ஈடுபடவேண்டாம்.
    4. உண்மையில், உமது தாக்குதல் போக்கிலிருந்தே, உமது நிலை வெளிப்பட்டுவிட்டது[5].
  6. நம் மீது ஆணாதிக்க வார்த்தைகளை உபயோகித்தும், “உங்கள் தாயார்கள் உங்களுடைய பதிவுகளைப் பார்த்தால்என்றும் ஆரம்பித்துள்ளார்கள்- ஆமாம், நான் இவ்வாறுபதிவு செய்தேன்.

எனக்கு வயது 65 ஆகிறது, அதனால், உங்களது பிரச்சாரப் போக்கைக் கவனித்து, மிக்க கவலையுடன் உங்களுக்கு மற்றும் உமது நண்பர்களுக்கு பதிலளிக்க ஆரம்பித்துள்ளேன்.

 

நிச்சயமாக நான் மாத விடாய் கொண்ட பெண்கள் வழிபாட்டு ஸ்தலங்களில் நுழைவதைப் பற்றிய உண்மைகளை எடுத்துக் காட்டுகிறேன் என்பதை கவனிக்கலாம்.

 

ஆனால், நீங்களோ சபரிமலை இயக்கத்திற்கு எதிராக மட்டும் பிரச்சாரம் செய்கிறீர்கள்.

 

மேலும், நிருபர்கள் அத்தகைய பெண்கள் உள்ளே நுழைந்தால், எப்படி தடுப்பீர்கள் என்று கேட்டதால் தான், அவர் அத்தகைய பதிலைக் கொடுத்தார்[6].

உமக்கு, ஒருவேளை ஜெயமாலா நடிகை கோவிலுக்குள் சென்ற வழக்குப் பற்றி தெரிந்திருக்கும்.

 

இன்றைக்கு இணைதளத்தை குழந்தைகள், சிறுவர்கள், சிறுமிகள் என்று பலரும் பார்க்கிறார்கள். அதனால், நிச்சயமாக படங்கள் அல்லது வேறு முறையில் (கருத்துகளை) வெளிப்படுத்தும் போது, நாகரிகம் மற்றும் பண்பாடு கடைப்பிடிக்கப்படவேண்டும்

  1. மற்ற விமர்சனங்கள் என்னைப் பற்றியதல்ல என்றாலும், நான் நியூட்டனது மூன்றாம் விதி எப்படி வேலை செய்யும் என்பதனை நினைவுபடுத்த விரும்புகிறேன். ஒரு உதாரணம் சொல்வதானால், “கடவுளே, என்னுடைய கால்களிடையே பார்க்காதே, சரியா” என்ற புகைப்படம்[7].Kandasamy pjhoto provoking Aniruddh Desai with reply
  2. அதே நேரத்தில் நமது ஆதரவாளர்களை அந்த கோவில் மற்றும் கோவில் அதிகாரிகரிகளுக்கு எதிராக எந்தவிதமான வார்த்தைகளையும் உபயோகப்படுத்த வேண்டாம் என்று வேண்டிக் கொள்கிறேன்” – இப்பொழுது தான், இவ்வாறு சொல்கிறிர்கள்! ஆனால், உங்களது முழுப்பிரச்சாரம், கோவில், கோவில் நிர்வாகத்தினர், பழக்க-வழக்கங்கள், சடங்குகள், நம்பிக்கைகள் முதலியவற்றிற்கு எதிராகத்தான் இருந்துள்ளன, இருக்கின்றன. ஆகையால், சட்டப்படி, யாதாவது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அச்சம் வந்துவிட்டது.
  3. ஓ, பிரச்சாரகர்களே, அமைதியாகவும், சாந்தமாகவும், பொறுமையாகவும் யோசியுங்கள். ஏனெனில், உங்களில், பெரும்பாலோர், பள்ளி-கல்லூரிகளில், நிறைய ஆசைகளுடன், எதிர்பார்ப்புகளுடன் மனங்களில் படித்து வருகிறீர்கள். ஆகையால், நிகிதா ஆஜாத் போன்றோர்களால் தூண்டிவிடப்பட்டு, சித்தாந்தரீதியில், இவ்வாறான பிரச்சாரங்களில் ஈடுபடுவதை விட, உங்களது படிப்புகளில் கவனத்தைச் செல்லுத்துங்கள்.
  4. பதிலாக சித்தாந்த ரீதியில், வாதங்களை உபயோகப்படுத்துங்கள். அது நமது பிரச்சாரத்தை மேன்படுத்தும்” – என்று இப்பொழுது பறைச்சாற்ற அரம்பித்து விட்டாகியது போலும். இப்பொழுது தான் உங்களது பிரச்சாரத்தில் தரமில்லை என்று உணர்ந்தீர்கள் போலும்! இன்றைக்கு வெள்ளிக் கிழமை, கடைசி நாளான இன்று உமக்கு ஞானோதயம் பிறந்துள்ளது.

நான் அன்னை தெய்வம் உங்களுக்கெல்லாம் எல்லாவிதமான செழுமை, சீமை மற்றும் சிறந்த எதிர்காலத்தை கொடுக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.

வேதபிரகாஷ்.

27-11-2015.

நிகிதா ஆஜாத் - நாத்திகவாதி, டி.எஸ்.ஓ. தலைவி, ரத்தம் சொரியும் இயக்கவாதி

இதற்கு நிகிதா ஆஜாதால் பதில் கொடுக்க முடியவில்லை, மாறாக, என்னை அந்த உரையாடலில் பங்குக் கொள்ள தடை செய்தது மட்டுமல்லாது, தளத்தைப் பார்க்க முடியாமல் செய்து விட்டார்கள். ஆகவே, இதுதான், என்னுடைய கடைசி பதிலாக இருக்கப்போகிறது[8].

எண்ணவுரிமை, கருத்துரிமை, பேச்சுரிமை, என்றெல்லாம் இவர்கள் பேசுகிறாற்கள், ஆனால், அது இவ்வாறுதான், செயல்படுகிறது. அடுத்தவர்களது எண்ணம், கருத்து, பேச்சு பற்றி அவர்களுக்கு பொறுமையில்லை, அவற்றிற்கு தடை விதிக்கிறார்கள்.

இத்தகைய போக்கை என்னவென்று சொல்வது?

இவ்விதமாகத்தான், அவர்கள் தங்களது சகிப்புத் த்ன்மையினை வெளிப்படுத்துகிறார்கள் போலும்?

அவர்களது பிரச்சாரத்தை டிசம்பர் 4 வரை நீட்டித்துள்ளது போல தெரிகிறது.

நிகிதா ஆஜாத் - நாத்திகவாதி, கம்யூனிஸ்ட், ரத்தம் சொரியும் இயக்கவாதி

வேதபிரகாஷ்.

30-11-2015.

அதற்குள், சென்னையில் வெள்ளம் வந்து என்னை முடக்கி விட்டது. ஆறுநாட்களில் சிறையில் இருந்தது போல தனியாக இருந்தேன். மின்சாரம், தொலைபேசி. இன்டெர்நெட் என்று எதுவும் இல்லை. இன்று தான், நண்பரின் உதவியால் ஓரளவிற்கு, வெளிவந்துள்ளேன்.

© வேதபிரகாஷ்.

07-12-2015.

[1] http://www.christiansanonymous.info/happy-to-bleed-campaign-nikita-azad-and-vedaprakash-four-days-correspondence/

[2]  இதையெல்லாம் பதிவு செய்யும் போதே, உலகளவில் ஐசிஸ், ஐசில், முதலிய தீவிரவாதம் பற்றி பேசப்படுகிறது, விவாதிக்கப்படுகிறது. ஆனால், இந்த பெண்கள் அவற்ரைப் பற்றி கண்டுகொள்ளாமல் இருப்பது வேடிக்கைதான்!

[3]  இது அக்குழுவில் உள்ள பெண்களை நன்றாகவே, பாதித்துள்ளது என்று தெரிகிறது. ரத்தம் மனிதர்களுக்கு, ஏன் பெண்களுக்கும் ஒன்று என்றிருக்கும் போது, தடையும் ஒரே மாதிரியாகத்தானே இருக்க வேண்டும். பிறகு, சபரிமலையைப் பிடித்துக் கொண்டிருப்பது, எதையோ திசைத்திருப்பும் போக்காக உள்ளது போலும்!

[4] அதாவது, எதையும் பொருட்படுத்தாமல், அடுத்தவர்களை வசைப்பாடுவது என்பதனை, இந்த இளம்பெண்ணிற்கு இந்த வயதிலேயே சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள் என்றால், அச்சித்தாந்தவாதிகள் பெரியவர்களை என்ன மதிக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

[5] பொதுவாக, இவர்கள் மற்றவர்களை “பாசிஸவாதிகள்” என்றும் குற்றஞ்சாட்டுவார்கள். ஆனால், உண்மையில் இவர்கள் தாம்“பாசிஸவாதிகளாக” இருக்கிறார்கள். ஏனெனில், இவர்கள், என்றுமே தாங்கள் சொல்வதைத்தான், அடுத்தவர்கள் ஏற்றுக் கொள்ல வேண்டும், அடுத்தவர்கள் சொல்வதைக் கேட்கக் கூடாது, என்ற எண்ணத்தை வளர்த்துக் கொண்டுள்ளனர்.

[6] நிருபர் கேட்ட துடுக்கான கேள்விக்கு, துடுக்காகவே பதில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதை வைத்துக் கொண்டு, இவ்வாறான, பிரச்சாரத்தில் ஈடுபட்டு, அற்ப விளம்பரத்தப் பெறவேண்டும் என்பது, இவர்களுக்குத்தான் தோன்றியுள்ளது.

[7] உண்மையில், இந்த புகைப்படத்தைக் கண்டித்து, சிலர் பதில் அளித்துள்ளனர். அது, புகைப்படத்தைப் போன்று வக்கிரமாகத்தான் இருந்துள்ளது.

[8] https://vedaprakash.wordpress.com/2015/11/30/happy-to-bleed-campaign-nikita-azad-and-vedaprakash-four-days-correspondence/

“ரத்தம் சொரிவதற்கு சந்தோஷமாக இருக்கிறேன்” – சபரிமலை, மாதவிலக்கு, தூய்மை – பெண்ணிய வீராங்கனைகளின் ரத்தப் போராட்டம் (2)

திசெம்பர்7, 2015

ரத்தம் சொரிவதற்கு சந்தோஷமாக இருக்கிறேன்” – சபரிமலை, மாதவிலக்கு, தூய்மை – பெண்ணிய வீராங்கனைகளின் ரத்தப் போராட்டம் (2)

Prayar -bashing on purity scanner“ரத்தப்போக்கிற்கு சந்தோஷமாக இருக்கிறேன்” அல்லது “ரத்தம் சொரிவதற்கு சந்தோஷமாக இருக்கிறேன்” [“Happy to Bleed”] என்று இளம்பெண்கள் ஏதோ பிரச்சினை ஆரம்பித்தபோது, சரி, ஏதோ, பெண்ணிய வீராங்கனைகள் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள் போலும் என்று நினைத்துக் கொண்டேன். ஆனால், பொறுமையாக அந்த தளத்தில் உள்ள உரையாடல்கள் முழுவதும் படித்த பிறகு, அது சித்தாந்த ரீதியில் தான் உள்ளது என்பதை அறிந்து கொண்டு, அங்கு பதில் அளித்தேன். நாத்திகர்கள், முஸ்லிம்கள், கிருத்துவர்கள் முதலியோர் இப்பிரச்சினையை வைத்துக் கொண்டு, ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக செயல்படுவது தெரிந்தது. ஆனால், அக்குழு நாத்திகம், கம்யூனிஸம், இந்திய எதிர்ப்பு[1], காலிஸ்தான் ஆதரவு[2], இந்து-எதிர்ப்பு[3] என்று பலநிலைகளில் செயல்படுவது புரிந்தது. நிகிதா ஆஜாத் என்ற இளம்பெண், சீக்கிய பென் ஆனதால், இவற்றையெல்லாம், ஒரு கலவையாக்கி, இப்பிரச்சினையில் லாபம் பெற முயல்வது தெரிகிறது. “யூத் கி ஆவாஜ்” (இளைஞர்களின் குரல்), “பேஸ் புக்” முதலியவற்றில் உள்ளவையும் அதே தோரணையில் உள்ளன[4]. ஜனநாயக வாலிபர் சங்கம் (DSO) போர்வையிலும் அச்சித்தாந்தங்கள் வெளிப்பட்டு பதிவாகியுள்ளன[5]. தமிழில், தீக்கதிரில், “ரத்தப்போக்கிற்கு சந்தோஷமாக இருக்கிறேன்” என்பது பற்றி, சிறு குறிப்பும், கீழ்கண்டவாறு வெளியாகியுள்ளது. டிசம்பர் 6, 2015 அன்று இடதுசாரி கூட்டங்கள் “பாபரி மஸ்ஜிதுக்கு” ஆதராவாக நடத்திய பேரணிக்கு ஆதரவான பதிவுகள் உள்ளன. இனி, தீக்கதிரில் என்ன உள்ளது என்பதனை பார்ப்போம்.

தீக்கதிர் - ரத்தம்இதே சுத்தமற்ற ரத்தத்தில் தான் நீங்கள் 10 மாதங்கள் அம்மாவின் கருவறையில் இருந்தீர்கள்[6]: தீக்கதிர், “பெண்களின் மாதவிடாய் பற்றி ஆண்கள் பொது இடத்தில் பேச மறுத்தாலும், மாதவிடாயை பெண்களை அடக்கும் ஒரு கருவியாகத்தான் இன்று வரை கையாண்டு வருகிறார்கள். சமீபத்தில் சபரிமலை ஐயப்பன் கோவில் தேவஸ்தான தலைவர் பிரயார் கோபாலகிருஷ்ணன், “கோவில்களுக்குள் வரும் பெண்களுக்கு மாதவிடாய் ஆகிறதா என்பதை சோதிக்கும் கருவி ஒன்றை கண்டுபிடிக்க வேண்டும். அதற்குபிறகு பெண்களை கோவில்களுக்குள் உள்ளே விடுவது பற்றி யோசிக்கலாம்என கருத்துத் தெரிவித்திருந்தார். இது பெண்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில், “https://www.facebook.com/events/757746744337128/என்ற அமைப்பு சமூக வலைத்தளத்தில் பெண்களை, “Happy to Bleed”, (ரத்தம் வருவதில் சந்தோஷம்) என்ற வாசகத்தை நாப்கின்கள், காகிதங்களில் எழுதி அதனை கையில் வைத்துக்கொண்டு புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் அனுப்புமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

Happy to bleed campaign - photo

Happy to bleed campaign – photo

அதில், “பெண்கள் மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது கோவில்களுக்குள் நுழைகிறார்களா என்பதைக் கண்டறிய ஒரு உபகரணத்தைக் கண்டறிய வேண்டும் என்கிறார்கள். அதனை கண்டறிவது முக்கியமா என்பதை விட பெண்கள் கோவில்களுக்குள் நுழைய வேண்டுமா என்பது பற்றித்தான் பிரயார் கோபாலகிருஷ்ணன் சிந்தித்திருக்கிறார். இதன் மூலம் பெண்கள் மீதுள்ள வெறுப்பை அவர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்எனக் கூறப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சாரத்தில் ஏராளமான பெண்கள் இணைந்துள்ளனர். ஆண்கள் சிலரும் இந்த பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். “எனக்கு கருப்பை இருக்கிறது. அதனால் மாதத்திற்கு ஒருமுறை அதிலிருந்து ரத்தம் வழியும். எனக்கு மாதவிடாய் ஏற்படும்போதும் நான் கோவிலுக்குள் நுழைந்து வழிபட்டால் கடவுளுக்கு ஒன்றும் கோபம் வராது. பிரயார் கோபால கிருஷ்ணன் அவர்களே, உங்களைப் போன்றுதான் பெண்கள் மாதவிடாய் நேரத்தில் சுத்தமற்றவர்கள் என பலரும் நினைக்கிறார்கள். இதே சுத்தமற்ற ரத்தத்தில்தான் நீங்கள் 10 மாதங்கள் உங்கள் அம்மாவின் கருவறையில் இருந்தீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்என சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு பெண்கள் விளாசியுள்ளனர்”, என்றுள்ளது[7].

Nikita Azad - second response to meநிகிதா ஆஜாதின் அறிக்கை: நான் அந்த வளைத்தளத்தில் என்னுடைய கருத்தைப் பதிவு செய்து, அவர்களது பாரபட்சம் மிக்க போக்கை எடுத்துக் காட்டினேன்[8]. ஆனால், நிகிதா ஆஜாத் என்ற அந்த இளம்பெண், கீழ்கண்டவாறு, ஒரு பதிவை செய்தார்:

“நண்பர்களே, இது ஒரு முக்கியமான அறிவிப்பு.”.

“நாம் பாலியல் ரீதியில் வேற்றுமைப் படுத்தும் எல்லா மதங்கள் மற்றும் சடங்குகள் எல்லாவற்றிற்கும் எதிர்க்கிறோம் என்று தெளிவுப்படுத்தியப் பிறகும், பலர் நமது பிரச்சாரத்திற்கு எதிராக மதப்பிரச்சினை/சண்டைகளை வைத்து பொறுப்பற்ற முறையில் கெட்டப்பயரை உண்டாக்க முயல்கிறார்கள். நாம் வெளிப்படையாக இஸ்லாத்தில் கடைப்பிடிக்கும் பெண்ணுறுப்பு அறுப்பு சடங்கு மற்றும் பெண்களை மசூதிகளில் ஆண்களுக்கு சமமாக தொழுகைப் புரிய அனுமதிப்பது போன்றவற்றை எதிர்க்கிறோம் என்று பதிவு செய்த பிறகும்[9], பார்ப்பன அடிப்படைவாதிகள் நமது இயக்கத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்த இன்னொரு முறையைத் தேர்ந்தெர்டுத்துள்ளார்கள்[10]. நாகரிகம், பண்பாடு போன்றவையற்ற முறையில் செயல்படுவதாக, நம் மீது ஆணாதிக்க வார்த்தைகளை உபயோகித்தும்[11], “உங்கள் தாயார்கள் உங்களுடைய பதிவுகளைப் பார்த்தால்” என்றும் ஆரம்பித்துள்ளார்கள். இதனால், நேரிடையான விவாதம் புரிவது அவர்களது திட்டமல்ல என்று தெரிகிறது[12]. இந்த மதவெறியர்கள் எல்லோரும் பெண்கள் தங்களுக்கு எது சரி என்று எந்த முறையிலும் தங்களது கருத்துகளை வெளியிடவும் ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள். அவர்கள் நமது எதிர்ப்புப் பிரச்சாரம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்றும் ஆணையிட முயல்கிறார்கள்”.

“அதுமட்டுமல்லாது, இந்த தனிநபர்கள் நமது இயக்கவாதிகளை விபச்சாரிகள் என்றும், நாமெல்லோரும் கூட்டாக கற்பழிப்பதற்குத்தான் லாயக்கு என்றும், அதனால், சமையலறைகளில் கிடப்பதற்குத்தான் லாயக்கு என்ற வரையில் சொல்கிறார்கள்”.

“ஆனால், நமது இயக்கத்திற்கு ஒரே நாள் எஞ்சியுள்ளது என்ற நிலையில், இவ்விதமான பொறுப்பற்ற விமர்சனத்தை ஒதுக்கித் தள்ளுகிறோம். இந்த சந்தேசத்தை / அறிவிப்பை பகிருங்கள். சமூக வளைத்தளத்தில் இப்பிரச்சாரத்தை செய்வதால், நாம் இத்தகைய மிரட்டல்களைப் பெற்றுள்ளோம். உண்மையிலேயே, தெருக்களில் இறங்கி பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தால், என்ன நடக்கும் என்பது தெரியவில்லை”.

“அதே நேரத்தில் நமது ஆதரவாளர்களை அந்த கோவில் மற்றும் கோவில் அதிகாரிகரிகளுக்கு எதிராக எந்தவிதமான வார்த்தைகளையும் உபயோகப்படுத்த வேண்டாம் என்று வேண்டிக் கொள்கிறேன். பதிலாக சித்தாந்த ரீதியில், வாதங்களை உபயோகப்படுத்துங்கள். அது நமது பிரச்சாரத்தை மேன்படுத்தும்”.

Happy to bleed photo© வேதபிரகாஷ்.

07-12-2015.


[1] http://www.youthkiawaaz.com/2015/11/gadari-mela-punjab/

[2] The Sikhs Continue To Be Oppressed, But Is Khalistan The Solution To Counter This?

http://www.youthkiawaaz.com/2015/11/punjab-politics-khalistan/

[3] http://www.youthkiawaaz.com/2015/11/sabrimala-temple-open-letter-statement/

[4] https://www.facebook.com/archangelniks

[5] AIDSO பதிலாக DSO என்று பெயரை வைத்துக் கொண்டுள்ளார்கள் போலும். இடதுசாரி சித்தாந்தத்தில் வேளைசெய்கிறது என்பது தெரிகிறது.

[6] தீக்கதிர், இதே சுத்தமற்ற ரத்தத்தில் தான் நீங்கள் 10 மாதங்கள் அம்மாவின் கருவறையில் இருந்தீர்கள், Nov 25, 2015.

[7] http://theekkathir.in/2015/11/25/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2/

[8] https://womanissues.wordpress.com/2015/11/24/mensuration-sabarimalai-purity-how-feminists-fight-with-blood/

[9]  இவர்கள் இந்த வயதிலேயே, இந்த அளவுக்கு பொய் சொல்ல தேர்ச்சிப் பெற்றுள்ளார்கள் என்பது வியப்பாகத்தான் உள்ளது.

[10]  இடதுசாரிகள் தங்களது போக்கை, மற்றவர்கள் மீது ஏற்றிச் சொல்லும் போக்கையும் இங்கு கவனிக்கலாம்.

[11]  இதெல்லாம், ஆணாதிக்க வார்த்தைகள் என்று இவர்கள் தாம் கண்டுபிடித்தார்கள் போலும்!

[12]  நான் நேரிடையாக வாதம் செய்தபோது, எத்ர்கொள்ள முடியாமல், அப்படியே நம்மீது திருப்பும் போக்கு, சிறுபிள்ளைத்தனமாக உள்ளது. என்ன செய்வது, இவர்கள் எல்லோருமே, நமது பேத்திகள் போன்றுதான் உள்ளார்கள். பொறுத்துத்தான் போக வேண்டியுள்ளது.