Archive for the ‘கரடிபுத்தூர்’ Category

ராங்காலில் அறிமுகம் ஆகி, பேஸ்புக்கில் நட்பாகி, வாட்ஸ்-அப்பில் காமமாகி, வக்கிர புத்தியாளன், பணம் பறித்து, கடைசியாக படுக்க வா என்ற கூப்பிட்ட அயோக்கியன்!

ஜூலை2, 2016

ராங்காலில் அறிமுகம் ஆகி, பேஸ்புக்கில் நட்பாகி, வாட்ஸ்அப்பில் காமமாகி, வக்கிர புத்தியாளன், பணம் பறித்து, கடைசியாக படுக்க வா என்ற கூப்பிட்ட அயோக்கியன்!

மதியழகன் கைது

ராங் கால் நம்பர் மூலம் ஏற்பட்ட நட்பு: விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி விளாந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் வின்சென்ட்ராஜ் (வயது 55). மும்பையில் பில்டிங் சூப்பர்வைசராக வேலைப் பார்த்து வருகிறார். இவரது மகள் சுமதி (21) / லின்சி என்கிறது தினகரன்[1], (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இப்படி பெயர்களை லின்சி, சுமதி என்று மாற்றிப் போடுவதால், செய்திகளைப் படிப்பவர்கள் எப்படி நினைத்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பது தெரியவில்லை. சின்னசேலத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் எம்.இ. படித்து வருகிறார். கள்ளக்குறிச்சி அருகே உள்ள கரடிபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் மதியழகன் (23). பி.இ. படித்துள்ளார். சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலைப்பார்த்து வருகிறார். மதியழகனும்-சுமதியும் பேஸ்புக் மூலம் நண்பரானார்கள். ராங் கால் நம்பர் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது என்கிறது தினகரன்[2] . இப்படியெல்லாம் கூட நட்பு வரும் போலிருக்கிறது.

Youth threatens to post porn in FB Malaimalar - Madhiyazaganநட்பு, செல்பியில் சென்று, பிறகு சண்டையில் முடிந்தது: பின்னர் செல்போனில் இருவரும் அடிக்கடி பேசி வந்தனர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சுமதிக்கு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது இருவரும் வெளியில் சந்தித்துக் கொண்டனர்[3]. அந்த அளவுக்கு – “வெளியில் வந்து சந்தித்துக் கொள்ளும்” அளவிற்கு நட்பு எப்படி வளர்ந்தது என்று தெரியவில்லை. வெளியில் சந்தித்து கொள்ளும் அளவுக்கு என்ன அவசியம் என்றும் புரியவில்லை. அப்போது மதியழகனுடன் சுமதி செல்பி போட்டோ எடுத்துக் கொண்டார். இதுவும் தேவையா என்றே கேட்கத் தோன்றுகிறது. தொடர்ந்து அவர்கள் நண்பர்களாகவே பழகி வந்தனர். இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில் கடந்த மாதம் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு, கல்லூரி மாணவி மதியழகனுடன் பேசுவதை தவிர்த்து விட்டாராம்[4]. ஏன் தகராறு ஏற்பட்டது என்று சொல்லாவிட்டாலும், மதியழகன் தவறான கண்ணோட்டத்துடனேயே சுமதியிடம் பழகி வந்தார், என்று இன்னொரு இடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Facebook useless loveசெல்பியை வெளியிடக் கூடாது என்றால் பணம் கொடு என்று கேட்டது: இந்த நிலையில் என்னுடன் நீ எடுத்துக் கொண்ட படத்தை வாட்ஸ்அப்பில் வெளியிடுவேன் என்று சுமதியை மதியழகன் திடீரென்று மிரட்டினார். 50 ஆயிரம் ரூபாய் தந்தால் படத்தை வெளியிட மாட்டேன் என்று கூறினார். இதனால் சுமதி பயந்துபோய் மதியழகனுக்கு 40 ஆயிரம் ரூபாய் கொடுத்தார்[5].  ரூ. 40,000/- பணம் கொடுக்கும் அளவுக்கு அவளிடம் எப்படி பணம் இருந்தது என்று தெரியவில்லை. எவ்வாறு, எப்படி அதை கொடுத்தாள் என்றும் தெரியவில்லை. மேலும் பணம் கொடுக்கும் அளவில்ளாதில் விவகாரம் என்ன உள்ளது? முதலில் எல்பி எடுக்க அனுமதி கொடுத்த பிறகு, பிறகு பயப்பட வேண்டிய அவசியம் என்ன? றொம்ப சோஸியலாக பழகுகின்றனர் என்றால், அப்படியே விட்டுவிடலாமே?

Facebook harassment of girls, womenமார்பிங் செய்து வாட்ஸ்அப்பில் வெளியிடுவேன் என்று மிரட்டியது: இரண்டு நாட்கள் கழித்து சுமதியிடம் மதியழகன் செல்போனில் பேசினார். என்னுடன் இரண்டு நாட்கள் உல்லாசமாக இரு, இல்லாவிட்டால் உன் போட்டோக்களை ஆபாசமாக சித்தரித்து வாட்ஸ்அப்பில் வெளியிடுவேன் என்று கூறி மீண்டும் மிரட்டினார்[6]. இதிலிருந்து அவனதி வக்கிரபுத்தி வெளிப்படுகிறது. பேஸ்புக்கில் காதல்-காமம் என்பதற்கு வித்தியாசம் இல்லாமல் இப்படிபட்ட கயவர்கள் இருக்கிறார்கள் என்று தெரிகிறது. முதலில் ஏதேதோ கெஞ்சிப் பார்த்திருப்பார் போலும், ஆனால், மதியழகன் மசியவில்லை போலும். இதனால் சுமதி அதிர்ச்சி அடைந்து தனது தந்தையிடம் இந்த சம்பவத்தை செல்போனில் கூறி கதறி அழுதார்[7].

whatsup-facebook - crimesதந்தைக்கும், மதியழகனுக்கும் சண்டை ஏற்பட்டது: அவர் மும்பையில் இருந்து உடனடியாக கள்ளக்குறிச்சிக்கு வந்தார். வின்சென்ட்ராஜும், அவரது மனைவி அன்னை மேரியும் கள்ளக்குறிச்சியில் வைத்து மதியழகனை சந்தித்தனர். அப்போது ஏன் என் மகளை இவ்வாறு மிரட்டுகிறாய்? என்று வின்சென்ட்ராஜ் மதியழகனை கேட்டு கண்டித்தார். அதற்கு மதியழகன், உங்களது மகளை இரண்டு நாட்கள் என்னுடன் தங்க சொல்லுங்கள். அதன் பிறகு நான் எந்த படங்களையும் வாட்ஸ்அப்பில் வெளியிட மாட்டேன் என்றார். இந்த அளவுக்கு அவன் பேசுகிறான் என்றால், அது அவனது வக்கிர மனது, வன்மம் முதலிய கெட்ட குணங்களைத் தான் காட்டுகிறது. உடனே ஆவேசமடைந்த வின்சென்ட்ராஜ், மதியழகனை தாக்க முயன்றார். மதியழகன் கோபம் அடைந்து வின்சென்ட்ராஜை கீழே தள்ளிவிட்டார். மேலும் நான் சொல்வதை நிறைவேற்றாவிட்டால் உங்கள் மகள் படத்தை ஆபாசமாக சித்தரித்து வாட்ஸ்அப்பில் வெளியிடுவேன். உங்கள் குடும்பத்தையே கொலை செய்துவிடுவேன் என்று எச்சரித்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்[8].

மதியழகன் கைது-Facebookபோலீஸிடம் புகார்: நிலைகுலைந்து போன, வின்சென்ட் ராஜ், முதலில் செய்வதறியாது திகைத்தார். பிறகு, மனைவி-மகளோடு கூடி பேசி, தீர்மானித்து, இது குறித்து கள்ளக்குறிச்சி போலீசில் வின்சென்ட்ராஜ் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதையடுத்து மதியழகனை போலீசார் கைது செய்தனர். மதியழகன் மேலும் ஒரு பெண்ணையும் இதேபோல் மிரட்டி இருப்பது தெரிய வந்தது. வக்கிரம் கொண்டவன் அப்படித்தான் இருப்பான் என்பது தெரிகிறது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது[9].

இணைதள நட்பு ஆபத்தானது, படிக்கும்வேலைக்குப் போகும் பெண்களுக்கு தேவையில்லாதது: பேஸ்புக் (Facebook), வாட்ஸ்அப் (Whatsup) முதலிய சமூக வலைதளங்களில், பள்ளி-கல்லூரி, இளம் பெண்கள் முதலியோர், மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். காதல்-காமம் இவற்றிற்கிடையில் வேறுபாடு, வித்தியாசம், பாகுபாடு முதலியவற்றை அறியாத, புரியாத, தெளிவாக இல்லாத யுவதிகள், இத்தகைய வட்டங்களில் இணைய வெண்டிய அவசியமே இல்லை. எப்பொழுது, ஒருவன் “இன்-பாக்ஸில்” (Inbox), “சேட்டிங்” (chatting) என்று வந்து, “நீ சிங்கிளா, செக்ஸில் ஆர்வம் உண்டா”…………….., என்றெல்லாம் கேள்வி கேட்க ஆரம்பிக்கின்றானோ அப்பொழுதே அவனை வெட்டிவிட வேண்டும், அதாவது “அன்-பிரென்ட் / ப்ளாக்” செய்யவேண்டும். அத்தகைய பையன்கள், மாணவர்கள், ஆண்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நீக்கிவிட வேண்டும். வெவ்வேறு ஐடிகளில், பெயர்களில் வந்து தொந்தரவு செய்தாலும், தயங்காமல்  உடனடியாக அகற்றப்பட வேண்டும்.

கூடா நட்பு, அநாவசியமான வெட்டிக்கு வைத்திருக்கும் நட்பு, போலி நட்பு, பேஸ்புக்நட்பு என்றுள்ளவை அடையாளம் காணப்படவேண்டும்: இணைதள நட்பே இவ்வாறான அபாயகரமான நிலையில் இருக்கும் போது, அத்தகைய நபர்களை, நிஜவாழ்க்கையில் நம்பவே முடியாது. மேலும் படிக்கும் போது, வேலைக்குப் போகும்போது, உள்ள வீட்டு மற்றும் அலுவலக கடமைகள் நிறையவே உள்ளன. அவற்றை விடுத்து, இத்தகைய வேலைகளில் ஈடுபட வேண்டிய அவசியமே இல்லை. பெண் கொஞ்சம் இடம் கொடுத்தாலும், அத்தகைய ஆண்-நண்பர்கள், முருங்க மரத்தில் வேதாளம் ஏறிய முறையில் தான் நடந்து கொள்வார்கள். ஆகவே, அத்தகைய கூடா நட்பு, அநாவசியமான வெட்டிக்கு வைத்திருக்கும் நட்பு, போலி நட்பு, பேஸ்புக்-நட்பு என்று எப்படியிருந்தாலும் தேவையில்லை. இவ்விசயங்களில் எல்லாம் “இரண்டு கைகள் தட்டாமல் ஒலி வராது” என்பது போல, பெண் இடம் கொடுப்பதில்தான் இவ்வாறான செயல்களைச் செய்ய, வக்கிர புத்தி படைத்த ஆண்கள் இறங்குகிறார்கள். ஆகவே, பெண்களும் தமது பங்கை எந்தவிதத்திலும், இக்காரியங்களுக்கு அறிந்தோ-அறியாமலோ, நேரிடையாகவோ-மறைமுகமாகவோ அளித்து விடக்கூடாது.

© வேதபிரகாஷ்

02-07-2016

 

[1] தினகரன், பேஸ்புக்கில் மகளின் ஆபாச பதிவு தட்டிக்கேட்ட தந்தைக்கு கொலை மிரட்டல்: வாலிபர் அதிரடி கைது, Date: 2016-06-28 10:03:05

[2] http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=589779&cat=504

[3] மாலைமலர், வாட்ஸ்அப்பில் ஆபாசபடம் வெளியிடப்போவதாக மாணவிக்கு மிரட்டல்: என்ஜினீயர் கைது, பதிவு: ஜூன் 27, 2016 13:30; மாற்றம்: ஜூன் 27, 2016 14:47

[4] குமரிமுரசு, கல்லூரி மாணவி குறித்து பேஸ்புக்கில் ஆபாச பதிவு வாலிபர் அதிரடி கைது, 6/27/2016 2:57:53 PM.

[5] http://cinema.maalaimalar.com/News/District/2016/06/27133018/1021721/Engineer-arrested-for-girl-threatened-to-release-obscene.vpf

[6] குமரி.எக்ஸ்பிரஸ், வாட்ஸ்அப்பில் ஆபாசபடம் வெளியிடப் போவதாக மாணவிக்கு மிரட்டல்: என்ஜினீயர் கைது, பதிவு: ஜூன் 27, 2016

[7]http://kumariexpress.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5/

[8] http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=94763

[9] http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=589779&cat=504