Archive for the ‘பிளவு’ Category

இளம்பெண்கள் / பெண்கள் கற்பழிப்புகளுக்கு, பெண்களும் காரணம் என்று கருத்துத் தெர்விப்பவர்களையும் தண்டிக்கவேண்டும் – கருத்து சொன்ன சமூகசேவகியின் மீது ஊடகங்கள் பாய்ச்சல்!

ஜனவரி30, 2014

இளம்பெண்கள் / பெண்கள் கற்பழிப்புகளுக்கு, பெண்களும் காரணம் என்று கருத்துத் தெர்விப்பவர்களையும் தண்டிக்கவேண்டும் – கருத்து சொன்ன சமூகசேவகியின் மீது ஊடகங்கள் பாய்ச்சல்!

To deter rape punish those blame women for rape.

To deter rape punish those blame women for rape.

பாலியல்  பலாத்காரம்  நடைபெறுவதற்கு  பெண்களின்  ஆடைகளும்,   அவர்களின்  நடவடிக்கைகளும்  ஒரு  காரணம்: பாலியல் பலாத்காரம் நடைபெறுவதற்கு பெண்களின் ஆடைகளும், அவர்களின் நடவடிக்கைகளும் ஒரு காரணம் என மகாராஷ்டிர தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெண் பிரமுகர் ஆஷா மிர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்[1]. உடனே ஆங்கில ஊடகங்கள் இதனை பெரிது படுத்தி செய்திகளை வெளியிட்டன. தேசிய மகளிர் ஆணையமும் சளைக்காமல், அவரது பேச்சிற்கான காரணம் கேட்டுள்ளது[2]. இதற்கு முன்னர் கூட பலர் இவ்வாறு தமது கருத்தைக் கூறியுள்ளனர். ஆனால், நவீனகால ரீதியில், அவ்வாறு கருத்துத் தெரிவிப்பதே தவறு என்ற ரீதியில் அவர்கள் மீது, குறிப்பாக, ஊடகங்கள் பாய்ந்து வருகின்றன. இதனால், நமக்கேன் வம்பு என்று அவர்கள், தாங்கள் அவ்வாறு சொல்லவில்லை, ஊடகங்கள் மாற்றி எழுதி விட்டன, நாங்கள் என்றுமே பெண்களின் சுதந்திரத்திற்காகவே பேசி வருகிறோம், ஒரு வேளை நாங்கள் சொன்னது யாரையாவது பாதித்திருந்தால், பேசினதை வாபஸ் பெருகிறோம், ஏன் மன்னிப்பு கூட கேட்கிறோம், இதோடு ஆளைவிடுங்கள் என்று ஒதுங்கி விடுகிறார்கள்.

To deter rape punish those blame women for rape

To deter rape punish those blame women for rape

மருத்துவர் ஆஷாமிர்ஜியின் அலசல்: மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி உடனான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்றது. இன்று நாக்பூரில் கட்சியின் மகளிர் அணி தொண்டர்களிடையே பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஆஷா மிர்ஜி, நாட்டில் நடைபெறும் பாலியல் பாலத்காரங்கள் குறித்து தன்னுடைய கருத்தை தெரிவித்தார். ஆனால், அவர் பரபரப்பான கருத்துக்களை தெரிவித்தார் என்று ஊடகங்கள் ஊதித்தள்ளின. அப்போது பேசிய அவர், 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாகவும், கடந்த ஆண்டு மும்பையில் சக்தி மில்ஸ் வளாகத்தில் பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் 5 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாகவும் அவர் கேள்வி எழுப்பினார்.

Women commssion holds dress responsible for sex crimes

Women commssion holds dress responsible for sex crimes

நடைபெறுவதற்குபெண்கள்அணியும்ஆடைகளும், அவர்களின்நடவடிக்கைகளும், தேவையற்றஇடங்களுக்குசெல்வதும்ஒருகாரணம்[3]: டில்லி நிர்பயா வழக்கில், இரவு 11 மணிக்கு தனது நண்பருடன் அப்பெண் சினிமாவிற்கு போக வேண்டிய அவசியமா? 6 ஆண்கள் இருந்த பஸ்சில் தனியாக இந்த பெண் எதற்காக ஏற வேண்டும்? சக்தி மில்ஸ் பாலியல் பலாத்கார வழக்கை எடுத்துக் கொண்டால், அந்த பெண் பத்திரிக்கையாளர். எதற்காக மாலை 6 மணிக்கு மேல் ஆள் நடமாட்டம் இல்லாத ஒதுக்கு புறமான அந்த இடத்திற்கு செல்ல வேண்டும்?; என்று ஆஷா மிர்ஜி கேள்வி எழுப்பினார்[4]. மேலும், பாலியல் பலாத்காரங்கள் நடைபெறுவதற்கு பெண்கள் அணியும் ஆடைகளும், அவர்களின் நடவடிக்கைகளும், தேவையற்ற இடங்களுக்கு செல்வதும் ஒரு காரணம் என்று குற்றம் சாட்டினார். தேசியவாத காங்கிரஸ் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஆஷா மிர்ஜி, மகாராஷ்டிர மகளிர் ஆணைய உறுப்பினராகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் ஒரு பெண் மற்றும் குழந்தைநல மருத்துவர், இருபது வருடங்களாக சமூக சேவை செய்து வருபவர்[5]. அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மன்னிப்புக் கேட்ட பிறகும் தொடரும் பிரச்சார ரீதியிலான எதிர்ப்பு: பெண்களின் பாதுகாப்பும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் நாடு முழுவதும் பெரிதும் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில் ஆஷா இந்த கருத்தை கூறி உள்ளார். டில்லி பாலியல் பலாத்கார சம்பவத்திற்கு பின் பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களும், பெண்களின் பாதுகாப்பிற்கு சட்டத் திருத்தமும் கொண்டு வர வேண்டும் என்ற போராட்டங்களும் அதிகம் வெளி வர துவங்கி உள்ள நிலையில், இவரின் பேச்சு கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது[6].  இதைத் தொடர்ந்து இந்த பேச்சுக்கு எழுந்த கண்டனங்களை கண்ட பின்னர் அவர் மன்னிப்பு கேட்டுள்ளார். இருப்பினும் சில ஆங்கில ஊடகங்கள் விடாப்பிடியாக, அவரது கருத்து பேரதிர்ச்சியாக உள்ளது என்று தொடர்ந்து விவாதம், செய்தி முதலியவற்றை போட்டு வருகிறது[7]. குறிப்பாக “என்டிடிவி” இது ஜனவரியின் மிகப்பெரிய செய்தி என்று குறிப்பிட்டு ஆர்பாட்டம் செய்து வருகின்றது[8]. கற்பழிப்பிற்கு பெண்களை, பெண்களே காரணம் என்று குறிப்பிடுவது ஏன் என்று வாதத்தைத் தொடர்ந்து செய்து வருகிறது[9].

சுப்ரியாசுலே தனது கருத்தை சொன்னது: சுப்ரியா சுலே, ஆஷா பேசும் போது, பக்கத்திலேயே உட்கார்ந்து கொண்டிருந்ததால், இது குறித்து சுப்ரியா சுலேவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: “ஒருவர் பேசிக்கொண்டு இருக்கும்போது தடை செய்வது எனக்கு பழக்கமில்லை. சிறுவயதில் இருந்தே பெற்றோர் எனக்கு கற்றுக் கொடுத்த விஷயம் யாரையும் குறுக்கிட்டு தடை செய்யக்கூடாது என்பதுதான். ஆஷா எனது தாயாரின் வயதுக்கு ஒப்பானவர். தனக்கு சரியென்று மனதில் பட்டதை அவர் பேசியிருக்கிறார். அவர் பேசி முடித்த பின்னர் நான் இது குறித்து பேசினேன். இது அங்கிருந்த அனைத்து செய்தியாளர்களுக்கும் தெரியும். தேசியவாத காங்கிரஸ் கட்சி இருபாலரையும் சமமாக பார்க்கும் கட்சி. ஆணோ பெண்ணோ, சுதந்திரமாக எங்கு சென்றாலும், எந்த நேரத்துக்கு சென்றாலும் பாதுகாப்பு கிடைக்கவேண்டும். அதை உறுதியும் செய்ய வேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம். மிர்ஜே இந்த விஷயத்தில் மன்னிப்பு கேட்டுள்ளதால் இப்பிரச்னையை இதோடு விட்டுவிடுங்கள்”, இவ்வாறு அவர் கூறினார்[10].

முசபர்நகர் கற்பழிப்பை மறைத்த ஊடகங்கள்: பெண்கள் கற்பழிப்பிற்கு பெண்களே காரணம் என்று சொல்பவர்களை முதலில் தண்டியுங்கள் என்று சிலர் கிளம்பியுள்ளார்கள்[11]. உடையைக் கண்டிக்காதே, கற்பழிப்பவர்களைக் கண்டி, என்றெல்லாம் பேச ஆரம்பித்தி விட்டார்கள். தில்லி கற்பழிப்பிற்கு பிறகு தெருக்களில் ஆர்பாட்டம் நடந்தது. அதற்குப் பிறகு ஏகப்பட்ட கற்பழிப்புகள் நடந்தன, நடக்கின்றன, ஆனால், ஆர்பாட்டங்கள் அடங்கிவிட்டன. முசாபர்நகர் கலவரத்திற்கு காரணமே, கற்பழிப்பு என்றாலும், ஓட்டுவங்கி அரசியல் காரணத்திற்காக “மத கலவரம்” என்ற போர்வையில், அதனை திசைத் திருப்பியது. இப்பொழுதும்கூட, இதே “என்டிடிவி” முஸ்லிம்கள் கூடாரங்களில் தவிக்கிறார்கள் என்று பேட்டி காணுவதை திரும்ப-திரும்பக் காட்டிக் கொண்டு, கற்பழிப்பு உண்மையை மறைத்து வருகின்றது. ஆனால், அதே “என்டிடிவி” இப்பொழுது வீருகொண்டு எழுந்து பிரச்சினையை கிளப்பிவிட பார்க்கிறது.

வேதபிரகாஷ்

© 30-01-2014


[1] தினமலர், பலாத்காரம்நடப்பதற்குபெண்களும்ஒருகாரணம்: என்.சி.பி., பெண்தலைவர்கருத்து, ஜனவரி 30, 2014.

[10] தினகரன், மகளிர்கமிஷன்உறுப்பினர்பேச்சால்சர்ச்சை, பாலியல்பலாத்காரத்துக்குபெண்களேகாரணம், ஜனவரி 30, 2014.