Posts Tagged ‘தமாகோன்’

சென்னையில் பாடி மஸாஜ் மறுபடியும் விபச்சாரமாக உருவெடுக்கிறது!

திசெம்பர்3, 2010

சென்னையில் பாடி மஸாஜ் மறுபடியும் விபச்சாரமாக உருவெடுக்கிறது.

மேற்கத்தைய கலாச்சாரம் எப்படி இந்தியர்களை அழிக்கும் என்பதற்கு இன்னுமொரு உதாரணம். என்னத்தான் கற்பு, பெண்ணியம் என்றெல்லாம் பேசினாலும், ஒழுக்கம் கெட்டப் பிறகு, இதைப் பற்றி சொல்வது, செவிடன் காதில் ஊதிய சங்காகத்தான் முடிகிறது. எங்கு நாம் தவறு செய்கிறோம் என்று அறிந்த பிறகு, அந்த தவறை செய்யாமல் இருப்பது, பார்த்துக் கொள்வதுதான் நல்லது. அத்தவறை மாற்றிச் செய்தாலோ, மறைத்து செய்தாலோ, விளைவு மாறாது. மாறாக, இப்பொழுது நிலையில், அது அதிகமாக பாதிப்பை ஏற்படுத்தலாம்.  முன்பு பெண்கள் குடித்து ஆடி கும்மாளம் போட்டதை கண்டித்தற்கு, நவீன ஒழுக்கக்காரர்கள் அதை பலமாக எதிர்த்துக் கண்டித்தனர். பெண்களுக்கு எல்லா உரிமைகளும் இருக்கிறது, அவர்கள் குடிக்கலாம் ஆடலாம், தனக்குப் பிடித்ததை செய்யலாம்…………..யாரும் கேட்க முடியாது, தடுக்கக் கூடாது, என்றெல்லாம் வாதம் புரிந்தனர். ஆனால், வாதிட்டவர்கள் தங்களது மனைவிகளை, மகள்களை, சகோதரிகளை அவ்வாறு அனுப்பி வைக்கவில்லை என்பதுதான் உண்மை.

சென்னையில் பாடி மஸாஜ் மறுபடியும் விபச்சாரமாக உருவெடுக்கிறது. ஓட்டகளில் இது இப்பொழுது, பல்வேறு பெயர்களில் நாகரிகமாக நடந்து வருகிறது[1]. பணம் உள்ளவர்கள் எதை வேண்டுமானாலும் வாங்கலாம், அனுபவுக்கலாம் என்ற முறையில்  வளர்த்துவிட்ட நவீனக் காமக்கலைதான், பாடி மஸாஜ். 1979-1980களில் இது சென்னையில் அத்தகைய மோசமான நிலைக்குச் சென்றபோது, தடை செய்யப்பட்டது. அப்பொழுது வீட்டுக்கு வீடு மசாஜ் சென்டர், மசாஜ் பார்லர் என்ற பெயரில் ஆரம்பித்து பிறகு விபச்சாரமாக மாறியது. அப்பொழுதே, சபலமுள்ள பள்ளி-கல்லூரி மாணவர்கள் அங்கு சென்று வந்தபோது, பிரச்சினை பெரியதாகி தடை செய்யப்பட்டது. குறிப்பாக, அரசியல்வாதிகள் சிலர் அதில் சம்பந்தப்பட்டதால், விஷயம் அப்படியே அமுக்கப் பட்டது.

பாடி மஸாஜ் பல ரூபங்களில்: இப்பொழுது, பப்புகள் பெயரில், ஸ்பா, ஹெல்த் கிளப், அரோமா தெராபி, அக்யூபிரஸ்ஸர் சென்டர், ஆயுர்வேதிக் சென்டர், என்று பல உருவங்களில் செயல்பட்டு வருகின்றன. குறைந்த சம்பளம் கொடுப்பது, மறைமுகமாக தொல்லைக் கொடுப்பது, பாஸ்போர்ட்டைப் பிடுங்கி வைத்துக் கொள்வது, கஸ்டமர்களை அளவிற்கு அதிகமாக தொல்லைக் கொடுக்க செய்வது, அவ்வாறு செய்தாலும் பொறுத்துப் போக சொல்வது, அவ்வாறு செய்யும் காட்சிகளை படமெடுத்து வைத்துக் கொண்டு மிரட்டுவது, முதலியன அவர்களுடைய வழக்கமான வேலைகள். இதே முறைகள் தாம் இப்பொழுதும் பின்பற்றியது தெரிகிறது. ஆக, வருடங்கள் மாறினாலும், குற்றவாளிகளின் புத்தி மாறவில்லை என்பது தெரிகிறது. மேலும், சில பெண்களுக்கும் இந்த வியாதி பிடித்துக் கொண்டது. ஆமாம், ஆண்கள் பெண்களுக்கு பாடி மஸாஜ் செய்கிறேன் என்று கிளம்பி விபரீததில் முடிந்து விட்டது[2]. இப்பொழுது வெளிவந்துள்ளது வெறும் துளிதான், இன்னும் பெரிதாக இருக்கிறது.

மசாஜ் கிளப்பில் வேலை என்று கூறி அழைத்து வந்து விபச்சாரத்தில் தளளப்பார்க்கிறார்: மசாஜ் கிளப்பில் வேலை என்று கூறி அழைத்து வந்து விபச்சாரத்தில் தளளப்பார்க்கிறார் என பிரபல நடிகையின் கணவர் ரவீந்திரா மீது தாய்லாந்து நாட்டு அழகிகள் 15 பேர் கண்ணீர் மல்க புகார் கொடுத்தனர்[3]. போலீஸ் சமரச ஏற்பாட்டின்பேரில், இரண்டுமாத சம்பளம் கொடுத்து அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார் நடிகையின் கணவர். தாய்லாந்து நாட்டை சேர்ந்த அழகிகள் பஜோன், அருண்சிஜா, திம்னா, போஸ்ரி, தமாகோன், சுரையா ஆகியோர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு கண்ணீருடன் வந்திருந்தனர்.  அவர்களுடன், வக்கீல்களும், மகளிர் அமைப்பை சேர்ந்த கல்யாணசுந்தரி, விஜயமேரி, சுமதி தட்சிணாமூர்த்தி ஆகியோரும் வந்திருந்தனர். தாய்லாந்து அழகிகள் 6 பேரும் புகார் மனு ஒன்றை போலீஸ் கமிஷனரிடம் கொடுத்தனர்[4].  அதில், மசாஜ் கிளப்பில் வேலை தருவதாக அழைத்து வந்துவிட்டு, விபசாரத்தில் ஈடுபடுத்த முயற்சிக்கிறார்கள் என்று நடிகை ஒருவரின் கணவர் மீது கடுமையான குற்றச்சாட்டை கூறியுள்ளனர்[5].

மசாஜ் செய்யும் கலையை கற்றுள்ளோம்.”தாய்லாந்து நாட்டிலிருந்து எங்களை போல 15 இளம் பெண்கள் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு தமிழகத்துக்கு வந்தோம். பிரபல நடிகை ஒருவரின் கணவரும்[6], அவரது நண்பர்கள் 2 பேரும், எங்களை அழைத்து வந்தார்கள். மசாஜ் கிளப்களில் வேலை தருவதாகவும், மாதம் ரூ.25 ஆயிரம் சம்பளம் தருவதாகவும் எங்களிடத்தில் ஒப்பந்தம் போட்டார்கள்[7]. ஒரு வருடம் வேலை பார்க்க வேண்டும் என்றும், தங்கும் இடம் இலவசமாக தருவோம் என்றும், ஆனால் நாங்கள் விருப்பப்பட்ட உணவை சமைத்து சாப்பிட்டுக் கொள்ளலாம் என்றும் ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்தது. நாங்கள் அனைவரும் மசாஜ் செய்யும் கலையை கற்றுள்ளோம். எனவே, மசாஜ் மட்டும்தான் செய்வோம் என்றும், வேறு தவறான வழியில் எங்களை ஈடுபடுத்தக் கூடாது என்றும் சொல்லித்தான் வேலைக்கு வந்தோம். ஆனால் 2 மாதங்கள் மட்டும் ஒப்பந்தப்படி மாதம் ரூ.25 ஆயிரம் சம்பளம் கொடுத்தார்கள். சென்னையில் தியாகராயநகர்[8], வடபழனியில் உள்ள ஒரு ஓட்டல் ஆகிய இடங்களில் மசாஜ் கிளப்களில் நாங்கள் 6 பேரும் வேலை பார்க்கிறோம். மீதி உள்ள 9 பெண்களும் மதுரை, திருப்பூர், பெங்களூர் ஆகிய இடங்களில் மசாஜ் கிளப்களில் பணிபுரிகிறார்கள்.

மறைமுகமாக விபச்சாரத்தில் தள்ளுவது: கடந்த 8 மாதமாக எங்களுக்கு பேசியபடி மாதம் ரூ.25 ஆயிரம் சம்பளம் தராமல், ரூ.15 ஆயிரம் மட்டுமே தருகிறார்கள். மாதம் ரூ.25 ஆயிரம் சம்பளம் தரவேண்டுமென்றால் வாடிக்கையாளர்களுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள்[9]. வாடிக்கையாளர்களை நிர்வாணமாக படுக்க வைத்து மசாஜ் செய்யச் சொல்லுகிறார்கள். எங்களையும் ஆபாசமாக உடை அணியச் சொல்லுகிறார்கள். ஒப்பந்தத்தை மீறி எங்களுக்கு செக்ஸ் தொல்லை கொடுக்கிறார்கள்[10]

அதே மிரட்டல்கள், அதே கொடுமைகள் செக்ஸ் தொழிலாளியாக இருக்க எங்களுக்கு விருப்பம் இல்லை. இதனால் எங்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்பி விடுங்கள் என்று எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தோம். எங்களது பாஸ்போர்ட்டையும், விசாவையும் பறித்து வைத்துக்கொண்டனர். சொந்த நாடான தாய்லாந்துக்கு அனுப்ப வேண்டுமென்றால் ஒவ்வொருவரும் தலா ரூ.2 லட்சம் தரவேண்டும் என்று கேட்கிறார்கள். அவ்வாறு பணம் கொடுக்காவிட்டால் ஊருக்கு திரும்பி போக முடியாது என்றும், செக்ஸ் தொழில் செய்து எங்களுக்கும் சம்பாதித்து கொடுங்கள், நீங்களும் சம்பாதித்து கொள்ளுங்கள் என்றும் அறிவுரை சொல்லுகிறார்கள். இல்லாவிட்டால் எங்களை கொலை செய்து, பிணத்தை கடலில் வீசிவிடுவோம் என்று பயமுறுத்துகிறார்கள். எங்களை கொத்தடிமை போல் ஒரு அறையில் அடைத்து வைத்திருந்தனர். அந்த அறை முழுவதும் கரப்பான் பூச்சிகளை விட்டு எங்களை சித்ரவதை செய்தனர். அவர்களுடைய கொடுமைகள் தாங்காமல் நாங்கள் தப்பி வந்து இந்த புகார் மனுவை கொடுத்துள்ளோம். சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து எங்களை சொந்த நாட்டுக்கு நல்லபடியாக திருப்பி அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். எங்களைபோல் சித்ரவதையில் தவிக்கும் மேலும் 9 பெண்களையும் மீட்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்…” என்று அந்த மனுவில் கோரியிருந்தனர். இந்த புகார் மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி அசோக்நகர் உதவி கமிஷனர் பரந்தாமனுக்கு, கூடுதல் கமிஷனர் ஷகில் அக்தர் உத்தரவிட்டார்.

மறுப்பு, மறைப்பு சமரசம்…: உடனடியாக சம்பந்தப்பட்ட நடிகையின் கணவர் ரவீந்திரா விசாரிக்கப்பட்டார். அவர், தாய்லாந்து அழகிகளை விபசாரத்தில் தள்ள முயற்சிக்கவில்லை என்று மறுப்பு தெரிவித்தார். புகார் கூறப்பட்டவர்கள் பெயர் ரவீந்திரா, இமானுவேல், ரமேஷ் என்று தெரியவந்ததாகவும், அவர்களில் ரவீந்திரா நடிகை யுவராணியின் கணவர் என்றும் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்[11]. ஒப்பந்தப்படி இன்னும் இரண்டு மாதங்கள் வேலை பார்க்க வேண்டியிருந்தாலும், வேலை பார்க்காமலேயே அவர்களுக்கு இரண்டு மாத சம்பளத்தையும் கொடுத்து, அனைவரையும் விமானத்தில் தாய்லாந்து நாட்டிற்கு பத்திரமாக திருப்பி அனுப்பி வைப்பதாகவும், புகார் கூறப்பட்டவர்கள் உறுதியளித்துள்ளனர். இதற்கு அந்த தாய்லாந்துப் பெண்களும் ஒப்புக் கொண்டதால் விவகாரம் சுமூகமாக முடித்து வைக்கப்பட்டதாக போலீஸ் அறிவித்தது.

வேதபிரகாஷ்

© 03-12-2010


[7] The women alleged that ‘3R Group”, a T Nagar-based company, recruited them as ‘Thai massage therapists’ after promising to pay each of them a salary of $500 per month. A. Ravindran, husband of actor Yuvarani and his associates Immanuel and Ramesh, reportedly own the company.

http://www.deccanchronicle.com/chennai/actress%E2%80%99-husband-pimp-thai-women-598

[8] According to the complaint, the women were employed by a partnership firm which runs a spa on BN Road in T Nagar as massage therapists. Read more: Thai masseurs in Chennai spa allege sexual harassment – The Times of India http://timesofindia.indiatimes.com/city/chennai/Thai-masseurs-in-Chennai-spa-allege-sexual-harassment/articleshow/7032215.cms#ixzz172nYyNXn