Posts Tagged ‘சோனியா’

குஷ்பு-நக்மா-விஜயதாரிணி சண்டைக்குப் பிறகு, ஹஸினா-ஜான்சி-கௌரி சண்டை ராகுலிடம் சென்றுள்ளது – காங்கிரசின் கவர்ச்சி அரசியல்! (2)

ஜூன்9, 2017

குஷ்புநக்மாவிஜயதாரிணி சண்டைக்குப் பிறகு, ஹஸினாஜான்சிகௌரி சண்டை ராகுலிடம் சென்றுள்ளதுகாங்கிரசின் கவர்ச்சி அரசியல்! (2)

Congress women wing leaders fight - 06-06-2017-3

ஜான்சி ராணி தன் தாலியைப் பிடித்து இழுத்ததால் தான் திருப்பித் தாக்கியதாகவும் கணவரை அழைத்ததாகவும் ஹசீனா தெரிவித்தார்: மகளிர் காங்கிரஸின் மாநிலத் தலைவர் ஜான்சி ராணி, ஹசீனா சையதின் கணவரை பிடித்துத் தள்ளும் காட்சிகளும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாயின[1]. ஹசீனா சையத், அவரது கணவர் ஒரு பக்கமாகவும் கவுரி கோபால், ஜான்சி ராணி ஆகியோர் மற்றொரு தரப்புமாகவும் மோதிக்கொண்டனர். இது குறித்து ஹசீனா சையதிடம் கேட்டபோது, “நடந்துவந்துகொண்டிருந்தபோது, திடீரென கவுரி கோபால் தன்னை பின் பக்கத்திலிருந்து தாக்கினார். நான் நிலைகுலைந்துபோனேன். பிறகு, மாநிலத் தலைவரின் அறைக்குச் சென்றேன். அங்கும் வந்து சேலையைப் பிடித்து இழுத்தார்” என்று தெரிவித்தார்[2]. பிறகு, ஜான்சி ராணி தன் தாலியைப் பிடித்து இழுத்ததால் தான் திருப்பித் தாக்கியதாகவும் கணவரை அழைத்ததாகவும் ஹசீனா தெரிவித்தார்[3]. ஒரு முஸ்லிம் பெண்மணி இவ்வாறு கூறியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. சமீபத்தில் ஒருபக்கம் தாலியே தேவையில்லை, தாலி அறுக்கும் திருவிழா என்றெல்லாம் நடக்கும் போது, இந்துக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் போது, இந்த மகளிர் எல்லாம் அதற்கு ஆதாரவாக குரல் எழுப்புவது கூட கிடையாது. அந்நிலைய்ல், இங்கு தாலி சென்டிமென்டை, இந்த முகம்திய பெண்மணி கொண்டு வருவது வியப்பாக இருக்கிறது. ‘திருநாவுக்கரசர் முன்பே என்னை அடித்தனர்!’ என்று கொதித்த, அவர் இது தொடர்பாக தான் அகில இந்திய மகளிர் காங்கிரஸ் கட்சித் தலைவரிடம் புகார் தெரிவித்திருப்பதாகவும் ஹசீனா கூறினார்[4].

Congress women wing leaders fight - 06-06-2017-4

திருநாவுக்கரசரிடம் பதவி குறித்து பெண்கள் புகார்: இதனால், கவுரி மீது அதிருப்தி அடைந்த ஹசீனா, கவுரியின் மாவட்ட தலைவர் பதவியை பறித்து, தன் ஆதரவாளர் கோமதியை நியமிக்க, பரிந்துரை செய்தார். டில்லி மேலிடமும், அதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தகவல் கவுரிக்கு தெரிய வந்ததும், மாநில மகளிர் காங்., தலைவர் ஜான்சிராணியிடம் முறையிட்டார். உடனே, அவர், கவுரிக்கு மாநில அளவில் பதவி வழங்கும்படி, மேலிடத்திற்கு பரிந்துரை செய்தார்.  இப்பின்னணியில், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரை, 04-06-2017 அன்று கவுரி சந்தித்து பேசினார். அப்போது, தன் பதவி பறிப்புக்கு, ஹசீனா தான் காரணம் என, புகார் கூறினார். தனக்கு, மாநில நிர்வாகி பதவி வேண்டாம் என்றும், ஏற்கனவே வகித்த மாவட்ட தலைவர் பதவி தான் வேண்டும் என்றும், திருநாவுக்கரசரிடம் கூறியுள்ளார். அப்போது, அருகில் இருந்த ஜான்சிராணி, ”இந்த பிரச்னையை, நீங்கள் தான் தீர்த்து வைக்க வேண்டும்,” என கேட்டுக் கொண்டார். அதற்கு திருநாவுக்கரசர், ”இப்பிரச்னையை, என்னிடம் கொண்டு வந்திருந்தால், இரு தரப்பினரையும் சமரசப்படுத்தி, தீர்வு கண்டிருக்க முடியும். தற்போது, மேலிடம் வரை போய் விட்டதால், டில்லி தான் முடிவு செய்ய வேண்டும்,” என, கூறி விட்டார்.

 Congress women wing leaders fight - 06-06-2017-8

மேலிடம் வரை போய் விட்டதால், டில்லி தான் முடிவு செய்ய வேண்டும்,” என்று திருநாவுக்கரசர் சொன்னதும் சண்டை ஆரம்பம்: அந்த நேரத்தில், சத்தியமூர்த்தி பவனுக்குள், ஹசீனா வந்தார். அவருக்கும், கவுரிக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில், இருவரும் கைகலப்பில் ஈடுபட்டனர். ஹசீனா வின் கணவர் சையது குறுக்கிட்டதும், கவுரியின் ஆதரவாளர்கள் களத்தில் குதித்தனர்; இருதரப்பினரும் கடுமையாக மோதிக் கொண்டனர். சண்டையை தடுக்க முடியாமல், திருநாவுக் கரசர் தவித்தார். சத்தம் கேட்டு, மற்ற நிர்வாகிகள் ஓடி வந்து, இருதரப்பினரையும் அமைதிப் படுத்தினர். அடிதடியில் காயமடைந்த கவுரி, ஹசீனா, ஜான்சிராணி ஆகிய மூவரும், நேராக டாக்டர்களிடம் சென்று, சிகிச்சை பெற்றனர். ”யார் மீது தவறு என்பதை விசாரணை செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,” என, திருநாவுக்கரசர் கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் பேசிய ராகுல், ‘உங்களுக்குள் பிரச்னை ஏற்பட்டால், பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள்; சண்டை போட வேண்டாம்; ஒற்றுமையாக இருக்க வேண்டும்’ என, அறிவுரை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதாவது, தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள், தில்லிக்குக் கட்டுப் பட்டு நடப்பவர்கள், ஒரு அதிகாரமும் இல்லை என்று தெரிகிறது. மேலும், பெண்கள் நேரிடையாக ராகுலிடம் புகார் கொடுப்பதும் சிந்திக்க்த்தக்கது.

Congress women wing leaders fight - 06-06-2017-6

காங்கிரஸ் பெண்கள் எப்படி, எவ்வாறு, ஏன் நேரிடையாக தொடர்பு கொள்ள முடிகிறது?: ஜான்சிராணி, ”இந்த பிரச்னையை, நீங்கள் தான் தீர்த்து வைக்க வேண்டும்,” என கேட்டுக் கொண்ட போது, திருநாவுக்கரசர், ”இப்பிரச்னையை, என்னிடம் கொண்டு வந்திருந்தால், இரு தரப்பினரையும் சமரசப்படுத்தி, தீர்வு கண்டிருக்க முடியும். தற்போது, மேலிடம் வரை போய் விட்டதால், டில்லி தான் முடிவு செய்ய வேண்டும்,” என்று கூறியது, காங்கிரஸில் பெண்களுக்கு ஏதோ விசேசமான சலுகை அளிக்கப் பட்டுள்ளது தெரிகிறது. அதாவது, தேவையென்றால், அவர்கள், நேரிடையாக ராகுலுடன் தொடர்பு கொள்ளலாம். அப்படியென்றால், ராகுல் அப்படி என்ன தமிழகத்து காங்கிரஸ் பெண்களிடம் நெருக்கத்தை வைத்துக் கொண்டுள்ளார். ஆண்-தலைவர்களுக்கு கொடுக்கப் படாத அத்தகைய  சலுகை அல்லது அதிகாரத்தை பெண்களுக்கு கொடுக்கப் பட்டுள்ளது ஏன்? அப்படியென்ன, இப்பெண்களால் தமிழகத்தில், காங்கிரஸின் அரசியல் செல்வாக்கு உயர்ந்து வருகிறதா அல்லது பெண்களை வைத்து அவ்வாறு சாதிக்கலாம் என்ற திட்டம் ராகுலிடம் உள்ளதா என்றெல்லாம் அலசவேண்டியுள்ளது.

Congress women wing leaders fight - 06-06-2017-7

 காங்கிரஸும், நடிகைகளும், அரசியலும்[5]: பொதுவாக மற்ற கட்சிளை விட, காங்கிரஸில் நடிகைகள் அதிகமாக உள்ளது தெரிய வருகிறது. மாநில அளவில் மற்றும் தேசிய அளவில் அவர்கள் பல வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ராகுல் காந்தி காலத்திலிருந்தே, சினிமா நடிகைகளுக்கு காங்கிரசில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. மூன் மூன் சென், ரேகா, ரம்யா, என்று வலம் வந்து கொண்டிருந்தார்கள். இது அவர் மகன் ராகுல் காந்தி காலத்திலும் பின்பற்றப்படுவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. தென்னகத்தில், ஜெயசுதா, தீபா என்று முன்னர் இருந்துள்ளனர். இப்பொழுது குஷ்பு, நக்மா என்று தமிழ்நாட்டில் உள்ளனர். கர்நாடகத்தில் ரம்யா எம்.பியாக இருந்தார். ரேகாவும்  எம்.பியாக இருந்துள்ளார். ராஜிவ் காலத்தில் இருந்த அந்த பாரம்பரியம் ராகுல் காந்தி காலத்திலும் தொடர்ந்து வருகிறது. பொதுவாக நடிகைகளுக்கு எம்.பி பதவி கொடுப்பது அல்லது தேர்தலில் சீட் கொடுப்பது, மற்றவர்களை பாதிப்பதாக உள்ளது. ஆண்டாண்டுகளாக விசுவாசமாக வேலை சேய்தவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுக்காமல், திடீரென்று நேற்று வந்த நடிகைக்கு வாய்ப்புக் கொடுக்கிறார்களே என்ற வருத்தம் இருக்கத்தான் செய்கிறது. மேலும் காங்கிரஸுக்கும் பாலியல் விவகாரங்களுக்கும் தொடர்புகள் இருக்கத்தான் செய்கிறது.

Congress women wing leaders fight - 06-06-2017-9

நடிகைகள்பென்களை வைத்து காங்கிரசின் கவர்ச்சி அரசியல் திட்டம்: சென்னை, சத்தியமூர்த்தி பவன் தலைமை அலுவலகத்தில் அக்டோபர் 2015ல்ந டந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை நக்மா, தமிழக காங்கிரசார் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டியதை  வலியுறுத்தி பேசினார். தமிழக காங்கிரசை வலுப்படுத்த வேண்டும் என்றால், குஷ்பு போன்ற பிரபல நடிகையர்  மற்றும் நடிகர்கள் கட்சியில் இணைய வேண்டும்‘ என, கட்சித் தலைவர்களிடம் கூறிய நக்மா, இதற்காக தான் முயற்சி எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து, நடிகர் சூர்யா அல்லது அவரது தம்பி கார்த்தி விரைவில் காங்கிரசில் இணையக்கூடும் என்ற பேச்சு, காங்கிரஸ் வட்டாரங்களில் கிளம்பியது. அப்படியென்றால், ராகுல் காந்தி இன்னும் என்னவெல்லாம் ஐடியா கொடுத்துள்ளார் என்று தெரியவில்லையே. இனி கவர்ச்சி அரசியலில், காங்கிரஸ் இறங்கிவிடும் போலிருக்கிறது. இதுதொடர்பாக, அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: “பிரபலங்கள் கட்சியில் இணைந்தால், கட்சியின் வலுகூடும் என கூறும் நக்மா, இதற்காக, தன் தங்கையும்[6], நடிகையுமான ஜோதிகாவின் கணவர் நடிகர் சூர்யாவை, காங்கிரஸ் பக்கம் இழுத்து வரும் முயற்சியில் இறங்கி உள்ளதாக தெரிகிறது. சில நாட்களுக்கு முன், ஜோதிகாவின் பிறந்த நாளுக்காக, அவரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க அவரது வீட்டுக்கு சென்றார் நக்மா. அப்போது, ‘காங்கிரசில் நடிகர் சூர்யா அல்லது அவரது தம்பி கார்த்தி இணையலாம்’ என்ற கருத்தை முன்வைத்து பேசியுள்ளார். இந்நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஏ.கே. அந்தோணியின் முன்னாள் உதவியாளர் மற்றும் நெருக்கமான செரியன் பிலிப், சமீபத்தில் கூறியுள்ளதும் நோக்கத் தக்கது: “சட்டையை கழட்டிவிட்டு  இளைஞர்கள்  போராட்டம்  நடத்துவது  புது விதமானதுகடந்த  காலங்களில்  தேர்தலில்  போட்டியிட  சீட்  பெறுவதற்காக

அந்த  பெண்கள்  புது விதமாக ரகசிய  போராட்டம் நடத்தினர்,” என்று பேஸ்புக்கில் கருத்து தெரிவித்து உள்ளார்[7]. ஆக தமிழக காங்கிரஸ் பெண்களும் இத்தகைய புது விதமான சண்டைகளை ஆரம்பித்துள்ளனர் போலும்!

 

© வேதபிரகாஷ்

09-06-2017

 

[1] பிபிசி.தமிழ், தமிழக காங்கிரஸ் மகளிர் அணியினர் மோதல், பதிவு செய்த நாள்: ஜூன் 07,2017.

[2] http://www.bbc.com/tamil/india-40193459

[3] விகடன், திருநாவுக்கரசர் முன்பே என்னை அடித்தனர்!’- கொதிக்கும் ஹசீனா சையத், Posted Date : 16:50 (07/06/2017); Last updated : 16:50 (07/06/2017).

[4] http://www.vikatan.com/news/tamilnadu/91612-haseena-syed-complaints-over-congress-party-fight.html

[5] https://evilsofcinema.wordpress.com/2015/10/17/congress-infight-due-to-actresses-dominating-affairs-in-tamilnadu/

[6] இருவர்களுக்கும் தந்தை ஒன்று ஆனால் தாய்கள் வேறு என்று குறிப்படத்தக்கது. நக்மா கிறிஸ்தவர் மற்றும் ஜோதிகா முஸ்லிமாக இருந்தார்கள். ஆக, செக்யூலரிஸ கவர்ச்சி அரசியலில் காங்கிரஸ் இறங்கிவிட்டது போலும். தினமலர், சினிமா நட்சத்திரங்களை இழுக்கும் பணியில்நக்மா: காங்கிரஸ் அசைமண்ட், அக்டோபர்.19, 1015:19:33.

[7] https://indiancommunism.wordpress.com/2015/10/20/women-stripped-naked-for-seat-in-congress/

சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும் போது, தூஷண பிரச்சாரம், அவதூறு சித்தரிப்புகள், கேவலமான விமர்சனங்கள் ஏன்? (ஆசாராம் பாபு பிரச்சினை தொடர்கிறது)

ஓகஸ்ட்31, 2013

சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும் போது, தூஷண பிரச்சாரம், அவதூறு சித்தரிப்புகள், கேவலமான விமர்சனங்கள் ஏன்? (ஆசாராம் பாபு பிரச்சினை தொடர்கிறது)

 

செய்தியாளர்களை சந்தித்த சாமியார் ஆசாராம்  கூறியதாவது: 29-08-2013 அன்று ஊடகக் காரர்களிடம் பேசும் போது[1], ஆசாரம் பாபுவும், “என் மீது வேண்டுமென்றே பழி சுமத்தப் படுகிறது. இத்தகைய பிரச்சாரங்கள் கடந்த நான்கரை ஆண்டுகளாக நடந்து வருகின்றன[2]. அஹமதாபாதில் இரண்டு குழந்தைகளை பலிகொடுத்தே என்று கூட பிரச்சாரம் செய்யப்பட்டது[3]. குறிப்பாக ஊடகங்களில் அத்தகைய பொய்-பிரசாரம் நடந்து வருகிறது. ஆனால், எதுவும் நடக்கவில்லை. இது அரசியல் சதியாகும். நான் குற்றவாளி என்று யாராவது நிரூபித்தால் ரூ.5 லட்சம் பரிசு கொடுப்பேன்[4]. இவ்விசயத்திலும், அவளது தந்தை என்னிடத்தில் தீட்சைப் பெற்றுள்ளார். அதனால், அவள் எனக்கு மகள் போலாவாள். பிறகு எப்படி பலாத்காரம் நடக்கும். அந்த சிறுமி யாரின் தூண்டுதலின் மீதாகத்தான் புகார் கொடுத்துள்ளாள்”, என்றும் அறிவித்துள்ளார்[5]. தொடர்ந்து, “என்னை கைது செய்து சிறைக்கு அனுப்பினால், நான் உண்ணாவிரதம் இருப்பேன். சிறை உணவை நான் தொட மாட்டேன். என்னை கொல்லும் சதித்திட்டத்தின் ஒரு அங்கமாக, சிறை உணவு இருக்கும் என, நான் கருதுகிறேன். எனக்கு எந்த கட்சியினரும் ஆதரவாக இல்லை. என்னை காப்பாற்ற யாரும்முயற்சிக்கவில்லை”, இவ்வாறு, சாமியார் ஆசாராம் கூறினார்.

 

குற்றச்சாட்டை மறுக்கும் காங்கிரஸ்: காங்கிரஸை மறைமுகமாக குற்றம் சாட்டியதால்[6], இதை, காங்கிரஸ் மறுத்துள்ளது. முகமது ஷகீல் ஆசாராம் இதற்காக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று சொல்லியுள்ளார். ரேணுகா சௌத்ரியோ, காங்கிரஸுக்கு என்ன வேறு வேலையில்லையா என்று பொரிந்து தள்ளியுள்ளார். இதற்கிடையே ஆசாராம் மீதான பாலியல் பலாத்கார வழக்கை சுப்ரீம் கோர்ட் மேற்பார்வையில், சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என, சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் சென்னையிலிருந்து செய்யப்பட்டு உள்ளது. உண்மையிலேயே, இந்த சென்னைக்காரருக்கு அதிக “உஷார்தனம்” இருக்கிறது போலும்! தமிழகத்திலேயே ஏகப்பட்ட பாலியல் சட்டமீறல்கள், அசிங்கங்கள், ஆபாசங்கள் செய்திகளாக, புகைப்படங்களுடன் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், அதையெல்லாம் விடுத்து, ராஜஸ்தானில் நடந்த விவகாரத்தில் மனு போட்டுள்ளார். பாராட்ட வேண்டிய விஷயம் தான். சேலையூரில் ஒரு பாதிரி தன்னை பலாத்காரம் செய்துள்ளார் என்றும் போலீஷ் கமிசனரிடம் இரண்டு நாட்கள் முன்னர் புகார் கொடுத்துள்ளார். அதையும் இவர் கவனித்தால் நல்லது!

 

பிஜேபியின் நிலைப்பாடு: பிஜேபி இனிமேல் அந்த சாமியாரை ஆதரித்து எதுவும் பேசவேண்டாம் என்று வலியுருத்தப்பட்டுள்ளது. முன்னர் உமா பாரதி மற்றும் பிரபாத் ஜா என்ற பிஜேபி தலைவர்கள் அவரை ஆதரித்துப் பேசியுள்ளனர்[7]. உமா பாரதி, “ஆசாராம் பாபு குற்றமற்றவர், அவர் சோனியா, ராகுல் முதலியோரை தொடர்ந்து விமர்சித்து வருவதால்தான், அவர் மீது இத்தகைய புகார் கொடுக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இது ஒரு அரசியல் சதியாகும்”, என்றும் டுவிட்டரில் தெரிவித்திருந்தார்[8]. “குருக்கள், சாமியார்கள் எல்லோரும் ஓழுக்கமாக இருக்க வேண்டும். ஏனெனில் அவர்களது நடத்தை சமூகத்தைப் பாதிக்கிறது”, என்று மோடி கூறியிருக்கிறார். குஜராத்தில் இந்த சாமியாருக்கு அதிக பக்தர்கள் என்பதால், காங்கிரஸ் மறைமுகமாக தொந்தரவு செய்யலாம் என்று தெரிகிறது. மத்தியபிரதேசத்தை ஏற்கெனவே மிரட்டி வருகிறது.

 

ஆசிரமத்தின் பெண் சமரசத்திற்கு வந்தார் – வரவில்லை: இதற்குள் ஆசிரமத்தைச் சேர்ந்த பூஜா பென் என்ற பெண் சீடை ஒருத்தி, சிறுமியின் தாயாரிடத்தில் வந்து, புகாரை வாபஸ் வாங்க்கிக் கொள்ள வேண்டிக் கொண்டதாக செய்திகள் வந்துள்ளன. ஆனால், ஆசிரமத்தை தொடர்பு கொண்டு விசாரித்தபோது, தமக்கு அவ்வாறு ஒன்றும் தெரியாது என்று சொல்லப்பட்டது[9]. அவர்களது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மகள் கூறியதாக, தந்தை கூறியது, “அவரது அறைக்குச் சென்றதும், அவர் சட்டையைக் கழட்டினார். தன்னைத் தொடச் சொன்னார். நான் மறுத்தேன். பிறகு அவர் என்னை தொட்டுப் பார்த்தார். அப்பொழுது சத்தம் போடாதே என்று மிரட்டினார்”, என்று அச்சிறுமி சொன்னதாக “இந்தியா டுடே” செய்தி வெளியிட்டுள்ளது[10]. இப்பொழுது பெற்றோர்கள், “வெளியே துப்பாக்கி ஏந்திய வீரர்கள் இருக்கிறார்கள், அவர்கள் உன்னை சுட்டுக் கொன்று விடுவார்கள்”, என்று மிரட்டியதாகக் கூறுகிறார்கள்[11].

 

போலீஸார்முரண் பாடாகக் கூறுவது: கற்பழிக்கவில்லை, அவ்வாறு முயற்சியும் செய்யவில்லை: தில்லி போலீஸார் தவறாக வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்று ஜோத்பூர் போலிஸ் கூறுகின்றது[12]. முன்பு, கிரிக்கெட் செக்ஸ்-சூதாட்டம் விசயத்தில் கூட தில்லி-மும்பை போலீஸார் இவ்வாறு முரண்பாடாக பேட்டிக்களை கொடுத்தன, ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. இப்பொழுது, ஆசாராம் பிரச்சினையிலிருந்து தப்பிப்பாரா என்று தெரியவில்லை[13]. இருப்பினும் ஊடகங்கள் “கற்பழிப்புப் புகார்” என்றுதான் தலைப்பிட்டு செய்திகளை அள்ளி வீசிக்கொண்டிருக்கின்றன. ஜோத்பூருக்கு வரவில்லை என்றால், நாங்கள் மத்தியபிரதேசத்திற்குச் ட்சென்று கைது செய்வோம், அங்கு சென்று விசாரணை செய்வோம் என்றெல்லாம் கூட போலீஸார் அறிக்கைகள் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். டுவிட்டரில் கூட போட்டதாக செய்திகள் வந்துள்ளன. இதெல்லாம், முன்பு தமிழக போலீஸார் கல்கி சாமியாரிடம் நடந்து கொண்டதை போலுள்ளது. அப்பொழுது கல்கி சாமியார் ஆந்திராவில் உள்ள ஆசிரமத்தில் உட்கார்ந்து கொண்டார். தமிழக போலீஸார் அங்கு சென்று கைது செய்வோம் என்று முனைந்தபோது, சந்திரபாபு நாயுடு தலையிட்டு தடுத்தார். அதாவது, எல்லைக்கள் சட்டக் கட்டுப்பாடுகளை மீறி அவ்வாறு செய்யும் பொழுது, சட்டங்களை மீறுவதாகிறது. ராஜஸ்தான் போலீஸார், அவ்வாறு செய்வதானால், அதற்கேற்ற முறையில் அனுமதி பெற்றுதான் செய்ய வேண்டியிருக்கும்.

 

இந்தியாடுடேவின் முரண்பட்ட செய்திகள்: “இந்தியா டுடே”வின் ஒரு செய்தியின் படி, மருத்துவ பரிசோதனை அவள் கற்பழிக்கப் பட்டாள் என்று காட்டவில்லை என்று ஒரு போலீஸ் அதிகாரி எடுத்துக் காட்டியுள்ளார், என்றுள்ளது. இன்னொரு செய்தியின் படி, அவள் கற்பழிக்கப் பட்டாள் என்றுள்ளது[14]. படிப்பவர்களுக்கு என்ன தெரிவிக்க வேண்டும் என்று அவர்களுக்குத் தெரியாமல் இல்லை. இருப்பினும், இப்படி குழப்பி வருவது ஏன் என்று தெரியவில்லை. “ஹெட்லைன்ஸ் டுடே” மற்றும் “இந்தியா டுடே” அளவிற்கு அதிகமாகவே, செய்திகளைத் தருகிறோம் என்பதைவிட, பிரச்சாரம் செய்கிறோம் என்பது போல வேலை செய்து கொண்டிருக்கின்றன. ஆசாராமின் வக்கீலைக் கூப்பிட்டு பேட்டி காண்பிக்கிறார்கள். அவர் கேட்கிறார், “வெறும் அபிடேவிட் (affidavit) மீது வைத்து தானே செய்திகளை போடுகிறீர்கள், குற்றச்சாட்டுகள் வைக்கப் படுகின்றன, ஆனால், இதுவரை எதையும் நிரூபிக்கப்படவில்லையே?”, என்று, ஆனால், ஊடக வல்லுனர்கள் திரும்ப-திரும்ப கேட்டதையே கேட்டுக் கொண்டிருந்தார்கள். அப்படியென்றால், தைரியமாக போலீசிடம் வந்து சரண்டர் ஆகவேண்டியதுதானா, ஏன் ஓடி ஒளிகிறார் என்று கேட்கின்றனர்.

 

ஹெட்லைன்ஸ் டுடே”  மற்றும்  “இந்தியா டுடே”  ஊடகங்களின்  பிரச்சாரம்: இந்தியாவில் எத்தனையோ புகார்கள் கொடுக்கப்படுகின்றன. உதாரணத்திற்கு சுப்பிரமணிய சுவாமி, முந்தைய மத்திய சட்ட அமைச்சர், சோனியாவின் மீது ஏகப்பட்ட புகார்கள் கொடுத்துள்ளார், வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன; ஆனால், எல்லாமே கிடப்பில் கிடக்கின்றன. யாரும் சோனியா ஏன் ஆஜராகவில்லை, போலீஸார் ஏன் அவரை கைது செய்யவில்லை என்று கேட்கவில்லை, கேட்பதில்லை. ஆனால், இந்த சாமியார் விசயத்தில் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று தான் வியப்பாக இருக்கிறது. “ஹெட்லைன்ஸ் டுடே” மற்றும் “இந்தியா டுடே” இப்பொழுதைய கிராபிக் வித்தையை, இந்திய சந்நியாசிகளை அவதுறாக சித்தரிக்கப் பயன்படுத்திக் கொண்டுள்ளது. அந்நிய ஊடககள் தாம், இந்திய-விரோதமாக அல்லது உந்திய சமூகத்தை கேவலப்படுத்த அவ்வாறு செய்கின்றன என்றால், இந்திய ஊடகங்களான இவையே அதிகமாக செய்துள்ளன. வழக்குகள் நடந்து கொண்டிருக்கும் போது, தீர்ப்புகள் வராத நிலையில், அவர்கள் எல்லோரும் குற்றவாளிகள், தண்டனையாளிகள் என்பது போல விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அதாவது, கொடுக்கப்போகும் தீர்ப்புகளையும் மிஞ்சி, இவர்களே, மிகப்பெரிய நீதிபதிகளாகி விட்டனர், தீர்ப்புகளையும் வழங்கி விட்டனர். ஆனால், மற்ற விவகாரங்களில் அவ்வாறு ஏன் செய்யவில்லை என்பது தான், சாதாரண இந்தியர்களுக்கு எழ்கின்ற சந்தேகம்.

 

ஆசாராம் பாபு மற்றும் ஆசிரமத்தின் அதிகாரிகளின் மீது சாட்டப் பட்டுள்ள குற்றங்கள்: ஆசாராம் பாபுவின் மீது இந்திய குற்றச்சட்டப் பிரிவுகள் 376, 342, 506 and 509 மற்றும் சிற்றுவர்-சிறுமிகளை பாலியல் குற்றங்களினின்று தடுப்பு சட்டத்தின் பிரிவுகள் 23 and 26ன் கீழ் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆசாராம் பாபுவின் மீது சம்மன் மற்றும் சிந்த்வாரா குருகுலத்தின் மானேஜர் (மத்தியப் பிரதேசம்) மற்றும் (சம்பவத்தின் போது ஜோத்பூரில் ஆகஸ்ட் 15 அன்று இருந்ததாகச் சொல்லப்படும்) ஹாஸ்டல் வார்டன், குருகுலத்தின் காப்பாளார் முதலிய ஆசிரமத்தின் அதிகாரிகளுக்கும் நோட்டீசுகள் அனுப்பப்பட்டுள்ளன[15]. எனவே சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கலாம், குற்றம் நிரூபிக்கப்பட்டால், தண்டனை கொடுக்கலாம். அவரே ஒப்புக் கொண்டபடி, தூக்கில் கூட போடலாம்!

 

© வேதபிரகாஷ்

31-08-2013


[4] சில ஊடகங்கள் ரூ.50 லட்சங்கள் என்று குறிப்பிடுகின்றன.

[7]  BJP has restrained its leaders from defending self-styled godman Asaram Bapu, accused in a case of sexual assault against a minor. BJP leaders including Uma Bharati and Prabhat Jha had earlier alleged there was a political conspiracy in the allegations against Asaram.

[15] Asaram Bapu has been booked under Sections 376, 342, 506 and 509 of the IPC, Section 8 of the Prevention of Children from Sexual Offences Act (POCSO) and Sections 23 and 26 of the Juvenile Justice Act. Besides the summons served on Asaram Bapu, notices have also been issued to the manager of Chhindwara gurukul in Madhya Pradesh, hostel warden and the main caretaker of Asaram, who was present at Manai ashram in Jodhpur with him on August 15, when the alleged sexual assault took place there.

http://www.dnaindia.com/india/1882129/report-asaram-bapu-case-narendra-modi-asks-saints-to-keep-good-conduct

சோனியாவும், ராகுலும் தான் காரணம் – மதமாற்றம் செய்பவர்களை ஆதரிக்கிறார்கள் – இது குற்றம் சாட்டப்ட்டுள்ளவரின் குற்றச்சாட்டு (ஆசாராம் பாபு பிரச்சினை தொடர்கிறது)

ஓகஸ்ட்31, 2013

சோனியாவும், ராகுலும் தான் காரணம் – மதமாற்றம் செய்பவர்களை ஆதரிக்கிறார்கள் – இது குற்றம் சாட்டப்ட்டுள்ளவரின் குற்றச்சாட்டு (ஆசாராம் பாபு பிரச்சினை தொடர்கிறது)

 

மேடம் மற்றும் அவரது மகன் தான் காரணம் என்று என்னிடம் சொல்கிறார்கள்: ஆசாராம் இந்தியில் சொன்னது, “’मुझे लोग बताते हैं कि मैडम के इशारे से और उनके सुपुत्र के इशारे से यह सब हो रहा है। उनको जो करना है करने दीजिए।'”, என்பதுதான். “மேடம் மற்றும் அவரது மகன் ஆணையின் மூலம் தான் இவையெல்லாம் நடந்து வருகின்றன என்று மக்கள் என்னிடம் சொல்கிறார்கள். அவர்கள் என்ன செய்கிறார்களோ செய்யட்டும்”, என்றுதான் பொருள் கொள்ள வேண்டும், இருப்பினும் ஆங்கில ஊடகங்கள் வேறுவிதமாக வெளியிட்டிருக்கிறார்கள். ஏற்கெனவே அரசியல், இவ்விசயத்தில் கலந்துவிட்டப் பிறகு, பெரிதாவதில் ஒன்றும் வியப்பில்லை. என் மீதான வழக்கு மற்றும் விசாரணைகளுக்கு, ஒரு குறிப்பிட்டக் கட்சியின் தலைவியும், அவரது மகனும் தான் காரணம் என்று சொல்கிறார்கள்”, என்று ஆசாராம் பாபு குறிப்பிட்டபோது[1], “அப்பொழுது நீங்கள் காங்கிரஸ் தலைவர் சோனியாவும், அவர் மகன் ராகுலும் தான் காரணம் என்கிறீர்களா?,’ ஏன்று ஓரு நிருபர் கேட்டதற்கு[2], “நான் அவ்வாறு சொல்லவில்லை, கேள்வி கேட்டதால், எனக்கு அவ்வாறு அறிவிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டேன். எந்த கட்சியின் ஆதரவு எனக்குக் கிடையாது”, என்றும் குறிப்பிட்டார்[3]. ஆனால், ஊடகங்கள் நேரிடையாகவும்[4], மறைமுகமாகவும் காங்கிரஸ் தலைவர் சோனியாவும், அவர் மகன் ராகுலும் தான் காரணம்,” என, சர்ச்சைக்குரிய ஆசாராம் சாமியார் (வயது72) தெரிவித்துள்ளார்[5] என்று செய்திகளை வெளியிட்டுள்ளன.

 

மதமாற்றத்தை சோனியா ஆதரிக்கிறார்என்றுசொன்னதால்பிரச்சினையா?: மதமாற்றத்தை சோனியா ஆதரிக்கிறார் என்ற ரீதியில் சொன்னதால், அதனை திசைத் திருப்ப ஊடகங்கள் பார்க்கின்றன என்று தெரிகிறது.  “நான்கரை ஆண்டுகளாக மதமாற்றம் நடந்து வருகிறது. அதனை இந்த அரசு ஆதரித்து வருகிறது”, என்றும் கூறியுள்ளார்[6]. இப்படி கிருத்துவ மிஷனரிகளின் மதமாற்றத்தைப் பற்றிக் குறிப்பிட்டவுடன், ஊடகங்கள், அவரது பழங்காலக் கதையை எடுத்து சொல்ல ஆரம்பித்துள்ளன. எப்படி சாராயம் விற்று வந்தவர், சாமியார் ஆனார் என்ற தகவல்களைக் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். இதிலிருந்து ஊடகங்கள் சோனியாவிற்கு ஆதரவாக செயல்படுகின்றன என்று தெரிகிறது. ஏற்கெனவே, மும்பை குண்டுவெடிப்பு விசயத்தில், ஒரு அமெரிக்கப் பாதிரி அமுக்கமாக அமெரிக்காவிற்கு அனுப்ப உதவி செய்யப்பட்டுள்ளது. ஓசூரில் சிக்கிக் கொண்ட இன்னொரு பெரிய பாதிரி, கைது செய்யப்பட்டாலும், விடுவிக்கப் பட்டு, நாடுகடத்தப் பட்டார். ஆனால், அந்த ஆள் தான் “பெரிய ஆள்” என்பதனைக் காட்டிக் கொள்ள சோனியாவிடம் சென்று ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டு அல்லது கொடுத்து ஜாலியாக பெண்டாட்டியுடன் சென்றுள்ளார். இத்தகைய காரியங்களால் தான், சாதாரண மக்களுக்கு சோனியாவின் மீது சந்தேகம் எழுகிறது. அதுமட்டுமல்லாது, சர்ச்சுகளே வெளிப்படையாக, “நம்ப தலைவி வந்து விட்டார், இனி இந்தியாவில் கிருஸ்துவின் ராஜ்யம் தான்”, என்று ஆர்பாட்டமாக ஜெபிக்கிறேன் என்று போஸ்டர் ஒட்டுகிறார்கள். கிறிஸ்தவ மிஷினரிகளுக்கு சலுகைகள் வழங்கப்படுகின்றன. இவற்றில் எந்தவித மாற்றமும் இல்லை. சொல்லப்போனால் கடந்த 10 ஆண்டுகளில் அதிகமாகவே இருந்துள்ளன. இங்கு ஆசாராம் பாபு, “வேலன்டைன் டே / காதலர்கள் தினம்” போன்ற மேனாட்டு, கிருத்துவ சார்புள்ள கொண்டாட்டங்களை எதிர்த்துப் பேசியுள்ளார் என்று குறிப்பிடத்தக்கது.

 

பிஜு ஜார்ஜ் ஜோசப் மிரட்டுகிறாரா?”: சம்பவம், ராஜஸ்தானின் ஜோத்பூர் நகரில் உள்ள சாமியாரின் ஆசிரமத்தில் நடந்தது என, தெரிவிக்கப்பட்டதால், அந்த வழக்கு, ஜோத்பூருக்கு மாற்றப்பட்டது. “30ம் தேதிக்குள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்’ என, சாமியாருக்கு, “சம்மன்’ அளிக்கப்பட்டு உள்ளது[7]. “ஜோத்பூர் போலீஸ் ஸ்டேஷனில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்; மீறினால், அவர் கைது செய்யப்படுவார்,” என, ஜோத்பூர் போலீஸ் கமிஷனர், பிஜு ஜார்ஜ் ஜோசப் தெரிவித்து உள்ளார். இதற்கிடையே, ஜோத்பூருக்கு வரவில்லை என்றால், போபாலுக்கு / இந்தூருக்கு வந்து விசாரணை செய்வோம் என்றும் ஜோத்பூர் போலீஸார் மிரட்டிப் பார்க்கின்றனர். ஆனால், தான் அங்கு வரமுடியாது என்று சொல்லிவிட்டார். அவரது மகனும் அதற்கு விளக்கம் கொடுத்து விட்டார். உடம்பு சரியாகவில்லை என்று காரணத்தைக் காட்டி, விமான பிரயாணம் செய்யமுடியாது என்று அவரது மகன் சொல்லிவிட்டார். ஆனால், “ஏராளமான ஆன்மிக நிகழ்ச்சிகள் இருப்பதால், செப்., 19ம் தேதி வரை என்னால் ஆஜராக முடியாது’ என, சாமியார் தெரிவித்து வருகிறார். இதுகுறித்து, ஜோத்பூர் போலீஸ் கமிஷனர், பிஜு ஜார்ஜ் ஜோசப்பிடம் கேட்ட போது, “30ம் தேதி வரை பார்ப்போம்; அவர் ஆஜராகவில்லை என்றால், 31ம் தேதி அவரை கைது செய்து, ஜோத்பூர் கொண்டு வருவோம்,” என்றார். ஜோசப்பின் முந்தைய பேச்சுகளைப் பற்றி இங்கே பார்க்கவும்[8].

 

நிதிஷ் குமார் கட்சியின் தலையீடு ஏன்?: இதற்கிடையே, இம்மாதம், 26ம் தேதி, லோக்சபாவில் நடைபெற்ற விவாதத்தின் போது, “சாமியார் ஆசாராம் பாபு மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, ஐக்கிய ஜனதா தளம் தலைவர், சரத் யாதவ் பேசியிருந்தார். அப்போது, சர்ச்சைக்குரிய சில வார்த்தைகளை அவர் பயன்படுத்தியிருந்தார். அந்த வார்த்தைகளை வாபஸ் பெற வேண்டும் எனக் கோரி, டில்லியில் உள்ள சரத் யாதவின் வீட்டுக்கு, சாமியாரின் உதவியாளர்கள் சிலர் நேற்று சென்றனர். அவர்களுடன் பேசிய சரத் யாதவ், பின், நிருபர்களிடம் கூறும்போது, “முதலில், சாமியாரை போலீசில் சரணடைய சொல்லி, அவரின் உதவியாளர்களை அனுப்பி வைத்துள்ளேன்,” என்றார். சரத் யாதவை, சாமியாரின் ஆதரவாளர்கள் சந்தித்த விவகாரத்தை, லோக்சபாவில் நேற்று திடீரென எழுப்பிய, ஐக்கிய ஜனதா தளம் கட்சி, எம்.பி.,க்கள் ரகளையில் ஈடுபட்டனர். இதுகுறித்து எதுவும் அறியாத, பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர், கமல்நாத் மற்றும் சபாநாயகர் மீரா குமார், சபையை அமைதியாக நடத்த ஒத்துழைக்குமாறு பல முறை வேண்டி கேட்டுக் கொண்டனர். நிச்சயமாக இப்பிரச்சினை அரசியலாக்கப் படுகிறது[9].

 

அந்நிய ஊடகங்களின் பிரச்சாரம்: எதிர்பார்த்தபடியே, அந்நிய ஊடகங்களுக்கு குஷியாகி விட்டது. ஆமாம், ஒரு இந்திய பிடோபைல் (Pedophile) கிடைத்து விட்டார்! இதுவரையிலும் கிருத்துவ பிடோபைல்கள் பற்றிதான் அதிகமான செய்திகள் வந்து கொண்டிருந்தன. அதிலும் அனைத்துலக ஓடி ஒளிந்த, ஓடி ஒளியும், இந்தியாவில் வந்து சொகுசாக வாழ்ந்து கொண்டிருக்கும் கிருத்துவ பிடோபைகளின் விவகாரங்கள் அதிகமாக இருந்தும், அவற்றை ஊடகங்கள் ஒன்றும் கண்டு கொள்ளவில்லை. 35 வருடங்களாக சென்னையில் சொகுசாக வாழ்ந்த வில் ஹியூம் என்ற ஆளைத்தான் பிடித்து சிறையில் அடைத்துள்ளனர். மற்ற ஆஸ்திரேலிய, இங்கிலாந்து வகையறாக்கள் எங்கள் நாடுகளிலியே நாங்கள் வழக்குகளை நடத்திக் கொள்கிறோம் என்று சாமர்த்தியமாக அழைத்துச் சென்று விட்டன. ஆனால், ஆசாராம் பாபுவின் மீது மந்திரம்-தந்திரம்-ஏவு-வித்தைகள் செய்கிறார், சூன்யம்-பில்லி வைக்கிறார் என்றெல்லாம் எழுதுகிறார்கள். இந்திய ரேபிஸ்ட் ஓடி ஒளிகிறார், இந்திய ரேபிஸ்ட்டை ஏன் இன்றும் கைது செய்யப்படவில்லை என்றெல்லாம் தலைப்பீடு செய்திகளை வெளியிட்டுள்ளார்கள். இவயெல்லாம் இந்திய ஊடகங்களிலிருந்து தான் எடுத்தாளப்பட்டுள்ளன. கருணா மதன் என்று “கல்ப்-நியூஸில்” அவ்வாறு எழுதப்பட்டுள்ளது[10]. நியூ யார்க் டைம்ஸில் (New York Times) ஒரு பிளாக் வெளியிடப்படுகிறது. உடனே அதனை காப்பி எடுத்து மற்ற பிளாக்குகளில் போட்டு பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டார்கள்[11]. ஏற்கெனவே அப்பட்டமாக இந்திய சாதுக்களுக்கு எதிராக தூஷணம் செய்யும் பிளாக்குகள் அதிகமாகவே உள்ளன[12]. மறைந்த சாய்பாபாவிலிருந்து சங்கராச்சாரியார் வரை குறிப்பிட்டு தூஷித்து வருகின்றன[13]. அவற்றை இங்கு சேர்க்கவில்லை.

 

சரத் யாதவ் போன்றோரின் திடீர் அக்கரையும்,  அரசியலும்: பீகார் கட்சிக்காரர்கள் ஏன் அடுத்த மாநிலப் பிரச்சினைகளில் தலையிடுகிறார்கள் என்று தெரியவில்லை. அத்தகைய விழிப்புணர்வு, அக்கரை முதலியவை இருந்தால், அத்தகைய சிறுமியர்-சிறுவர் பாலியல் பிரச்சினைகள், சட்டமீறல்கள், குற்றங்கள் முதலியவை இந்தியாவில் எங்கு ஏற்ப்பட்டிருந்தாலும், இதே மாதிரி ஆட்களை அனுப்பியிருக்க வேண்டும். ஆனால், சரத் யாதவிற்கு இப்பொழுதுதான், இந்த நல்லெண்னங்களோ, புத்திசாலித்தனமோ வந்துள்ளது. பிஜேபி கூட்டு உடைந்த பிறகு, இவர் கொஞ்சம் அதிகமாகத்தான் அலட்டிக் கொள்கிறார். காங்கிரஸுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என்ற நிலையில், இன்னொரு “லல்லு” மாதிரி நடந்து கொள்கிறார் போலும்! போலீஸார் கூட வேகமாக செயல்படுவது போல உள்ளது. ஊடகங்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். மற்ற செய்திகளை எல்லாம் மறக்க வைத்து விட்டார்கள். கரியப்பிய ஊழல் கோப்புகள் காணாதது கூட மறக்கடிக்க வைப்பார்கள் போலும்! டாலர் உயர்கிறது என்ற ஆபத்தையும் மறைத்து விட்டார்கள்.

 

© வேதபிரகாஷ்

31-08-2013


[1] “I don’t want to oppose any party but I’ve been told that all of this has been orchestrated by Madam and her son (Sonia Gandhi and Rahul Gandhi). So, I said, let them do whatever they are doing,” Asaram Bapu said.

[6] “I am not against any party but people tell me that it is at the instance of madam and her son that this is happening. For four-years-and-a-half those behind (religious) conversions are getting their support,” Asaram told reporters without naming Sonia or Congress vice president Rahul Gandhi.

[10] In 2007, a former member of the Asaram ashram, Raju Chandak, had claimed in an affidavit filed with the police that tantric (black magic) rituals were being performed in the ashrams of Asaram, and that he had personally been witness to Asaram Bapu sexually exploiting women. In 2008,   Praful Vaghela, the father of one of the children, believes that the children were killed as a consequence of a tantric ritual.

http://gulfnews.com/news/world/india/india-s-dubious-godmen-and-their-crimes-1.1223696

அஷ்ரம் பாபு ஆசிரமத்தில் போலீஸ் விசாரணை – சாமியார் மறுப்பு, பெண் பேய் பிடித்திருப்பதாக பெற்றோரிடத்தில் ஒப்படைப்பு, ஆதரவாளர்கள் எதிர்ப்பு!

ஓகஸ்ட்23, 2013

அஷ்ரம் பாபு ஆசிரமத்தில் போலீஸ் விசாரணை –  சாமியார் மறுப்பு, பெண் பேய் பிடித்திருப்பதாக பெற்றோரிடத்தில் ஒப்படைப்பு, ஆதரவாளர்கள் எதிர்ப்பு

Asharam babu issue- Two boys killed

பல மாநிலங்களில் புகார்: சாமியார் அஸ்ராம் பாபு மீது செக்ஸ் குற்றச்சாட்டு… போலீஸ் வழக்கு பதிவு[1], மைனர் பெண் மானபங்க புகார்- சாமியார் அசரம் பாபு மீது பாலியல் குற்ற வழக்கு பதிவு[2], என்று செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. குஜராத்தின் ஆமதாபாத் அருகே, ஆசிரமம் நடத்தி வரும் ஆசாராம் பாபு, லட்சக்கணக்கில் சீடர்கள் கொண்டவர். அஷ்ரம் பாபு வட இந்தியாவில் இருக்கும் பல மதகுருக்களில் ஒருவர்[3]. இருப்பினும் சமீபத்தில் இவர் பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்:

  1. நில அபகரிப்பு புகார்.
  2. கொலை செய்து விட்டதாக புகார்.
  3. பாலியல் பலாத்காரம்.

இப்படி பாலியல் பலாத்காரம், மர்மக் கொலைகள் போன்ற பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளவர். அசரம் பாபு மீது குஜராத் போலீசார் – அதாவது மோடி அரசாங்க போலீஸார் என்ற் சொல்வதில்லை – ஏற்கனவே கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர் மீது குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் நில அபகரிப்பு குற்றச்சாட்டும் உள்ளது. இப்படி பல மாவட்டங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதால், வழக்குகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால், ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ், காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ், பிஜேபி என்று ஆட்சியில் கட்சிகள் உள்ளதால், நிச்சயமாக அரசியல் நோக்கம் இதில் உள்ளது தெரிகிறது. முதலில் ராஜஸ்தான் அரசாங்கம் தாமதப்படுத்துகிறது என்று குற்றஞ்சாட்டினர்.

Asharam babu issue-IT photo

சாமியார்ஆசாராம்பாபுமீதுபாலியல்பலாத்காரபுகார்: சர்ச்சைக்குரிய ஆசாராம் பாபு, 72, சாமியார் மீது, இளம் பெண் ஒருவர், பாலியல் பலாத்கார வழக்கு தொடர்ந்துள்ளார்[4]. இவரின் ஆசிரமத்திற்கு, நாட்டின் பல பகுதிகளில் கிளைகள் உள்ளன. மத்திய டில்லியில் உள்ள, கமலா மார்க்கெட் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற, பெயர் குறிப்பிடப்படாத இளம்பெண் ஒருவர், சாமியார் ஆசாராம் பாபு, தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக, புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில், பலாத்கார சம்பவம், ராஜஸ்தானின் ஜோத்பூர் நகரில் உள்ள, ஆசாராம் ஆசிரமத்தில் நடந்ததாக அப்பெண் கூறியதால், வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரிக்குமாறு, ராஜஸ்தான் போலீசாரை கேட்டுக் கொண்டுள்ளனர். புகாரையும் அங்கு அனுப்பி விட்டனர்.

Asaram-bapu - quick police action

பள்ளியில் இருந்து ஆசிரமம் சென்றது ஏன்?: இந்த மாதம் – ஆகஸ்ட் 2013 – ஆரம்பத்தில், அப்பெண் படிக்கும் பள்ளியிலிருந்து, அவள் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், அவசரமாக ஆபரேஷன் செய்யவேண்டும் என்றும் மத்தியபிரதேசத்தில் உள்ள சிந்த்வாராவில் உள்ள குருகுலத்தில் இருந்து செய்தி வந்ததாகவும், உடனே பெற்றோர் அங்கு சென்று பார்த்தபோது, நன்றாக இருந்ததாகவும் போலீஸார் சொல்கின்றனர். சாமியார் சொல்லிகொடுத்த மந்திரம் ஜெபித்ததால், நலமடைந்ததாகவும், இருப்பினும் கெட்ட ஆவிகளளவளைப் பிடித்திருப்பதால் அவற்றை விரட்ட ஜோத்பூருக்குச் செல்லவேண்டும் என்றனர்.  இவ்வாறு என்று ஹாஸ்டலில் உள்ளவர்கள் சொன்னதாக போலீஸார் சொல்கின்றனர்[5] பிறகு, உத்தரப் பிரதேசம் ஷாஜகான்பூரை சேர்ந்த அவர், சாமியார் அசரம் பாபுவிடம் ஆசி பெறுவதற்காக,  தனது 15 வயது மகளுடன் 13-08-2013 அன்று ஜோத்பூர் சென்றுள்ளார். தனது மகளுக்கு பேய் பிடித்திருப்பதாக சொல்லி அவரிடம் சென்று முறையிட்டுள்ளார். 15-08-2013 அன்று அதற்கான சடங்குகளை செய்கிறேன் என்று ஆசாராம் பாபு சொல்லியிருந்தார். கிரியைகள் செய்யும் போது, நீங்கள் இருக்கவேண்டிய அவசியம் இல்லை என்று சொன்னாலும், அந்த பெண்ணின் குடும்பம் அங்கேயே தங்கி இருந்தது.

Asaram comments on Delhi rape

சடங்குகள் முடிந்து பெண்ணுடன் பெற்றோர் திரும்பிச் சென்றது, புகார் கொடுத்தது: 17-08-2-13 அன்று ஊருக்குத் திரும்பிய பிறகு, அப்பெண், அசரம் தன்னை பாபு மானபங்கம் செய்ததாக மைனர் பெண், தனது தந்தையிடம் கூறியுள்ளார். இது குறித்து மைனர் பெண் 22-08-2013 மாலை புகார் அளித்தார். இவ்வாறு ஏன் தாமதமாக கொடுக்க வேண்டும் என்று ஆசிரமம் தரப்பினர் கேட்கின்றனர். அசரம் பாபு மீது டெல்லியில் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஜோத்பூருக்கு மாற்றப்பட்டுள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். ஜோத்பூரிலும், அவர் மீது புகார் பதிவு செய்யப்பட்டது என்பது முன்னரே குறிப்பிடப்பட்டது. “ஜுரிடிக்ஸன்” – போலீஸ் கட்டுப்பாட்டில் வரும் இடம் – என்ற பிரச்சினை இதிலும் வரும் போலிருக்கிறது.

Asaram-bapu blames foreign media

போலீஸார் விசாரணை செய்தது: பிறகு போலீஸார், அசிரமத்திற்குச் சென்று அங்குள்ளவர்களிடம் விசாரித்துள்ளனர். ஆஸ்ரம் பாபுவைப் பொறுத்த வரையிலும், இதனை மறுத்துள்ளார்[6]. அவரது சீடர்களும் இது வேண்டுமென்றே, அவர் மீது அபவாதத்தை ஏற்படுத்த கொடுக்கப்பட்ட புகார் என்று கூறி ஆர்பாட்டம் செய்துள்ளனர். இந்த புகார் வேண்டுமென்றே கொடுக்கப்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளார்[7]. மேலும் குறிப்பிட்ட நாளன்று அவர் இங்கிருந்தாரா இல்லையா என்பதில், முரண்பட்ட பதில்கள் வந்துள்ளன[8]. பிஜு ஜார்ஜ் ஜோசப் என்ற போலீஸ் கமிஷனர் நேரில் சென்று விசாரித்துள்ளார்[9]. மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் குறிபிட்டார். இதற்குள் தில்லியில் உள்ள கமலா மார்க்கெட் போலீஸ் ஸ்டேஷன் எதிரில் சுமார் 500 ஆதரவாளர்கள், புகாரை வாபஸ் வாங்கவேண்டும் என்று ஆர்பாட்டம் செய்தனர்[10]. பிறகு அவர்கள் ஜந்தர்-மந்தர் நோக்கி சென்றனர்[11]. இவர்கள் இப்படி ஆர்பாட்டம் செய்வது வினோதமாக இருந்தது. புகார் ஜோத்பூருக்குச் சென்ற பிறகு, தில்லியில் எதற்கு ஆர்பாட்டம்?

சமீபத்தையசர்ச்சை: டெல்லி மாணவி பலாத்கார சம்பவம் பற்றி கருத்து தெரிவித்த அசரம் பாபு, ‘‘பலாத்காரம் செய்ய வந்தவர்களை சகோதரன் என அழைத்திருந்தால், மாணவி தப்பியிருக்கலாம்’’ என்றார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது  குறிப்பிடத்தக்கது. பிப்ரவரி 14ம் தேதியை, பெற்றோர்களை மதிக்கும் மத்ரி புத்ரி பூஜன் திவஸ் ஆக கொண்டாட வேண்டும் என உ.பி., அரசுக்கு சர்ச்சை சாமியார் ஆஷாராம் பாபு வேண்டுகோள் விடுத்துள்ளார்[12]. டில்லி பாலியல் பலாத்கார சம்பவத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணின் மீது குற்றம் சாட்டி சர்ச்சையை ஏற்படுத்தியவர் ஆஷாராம் பாபு. இந்நிலையில், நிருபர்களிடம் பேசிய ஆஷாராம், மேற்கத்திய கலாச்சாரத்தின் காரணமாக பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு பதிலாக, அந்த நாளை பெற்றோர்களை மதிக்கவும், அவர்களுக்கு சேவை செய்யும் தினமாக (மத்ரி புத்ரி பூஜன் திவஸ்) அறிவிக்க வேண்டும் என உ.பி., முதல்வர் அகிலேஷை கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த 2012ம் ஆண்டு முதல் பிப்ரவரி 14ம் தேதி மத்ரி புத்ரி பூஜன் திவஸ் ஆக கொண்டாடப்படும் என சட்டீஸ்கர் அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதெல்லாம் சரி, புகார் வரும்படி, நடந்து கொள்வது, சாமியாருக்கு அழகல்லவே?

© வேதபிரகாஷ்

23-08–2013


[5] The daughter of a transporter from Uttar Pradesh, the victim is presently pursuing her Class XII from Bapu’s Chhindwara gurukul in Madhya Pradesh. According to the police, earlier this month the school managers called up her parents claiming that she was critical and that she had to urgently undergo an operation. Aghast, the parents rushed to Chhindwara where they found their daughter in a healthy condition. The hostel officials told the parents that her health improved after their guru gave her a mantra to chant, but since she had been possessed by evil spirits, she could be cured only through a ritual by Asaram Bapu at his Jodhpur ashram.

http://www.thehindu.com/news/national/other-states/asaram-bapu-booked-for-sexual-assault/article5044911.ece

அனைவரும் விரும்பத்தக்க 100 சதவீதம் செக்ஸியான பெண் – திக்விஜய்சிங் வர்ணனை!

ஜூலை28, 2013

அனைவரும் விரும்பத்தக்க 100 சதவீதம் செக்ஸியான பெண் – திக்விஜய்சிங் வர்ணனை!

Rahul Gandhi meets potential Youth Congress candidates

सौ टका टंच माल – சௌ டகா டஞ்ச் மால்[1]: மத்திய பிரதேச மாநிலம் மாண்ட்கார் பாராளுமன்ற தொகுதியில் நடந்த விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங், அந்த தொகுதி எம்.பி.யான மீனாட்சி நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். மீனாட்சி நடராஜன் கடந்த தேர்தலில் பிஜேபியை வென்று எம்.பி ஆனார். ராகுலின் முக்கியமான குழுக்களில் உறுப்பினர்.Meenakshi Natarajan with Rahul.2 ராகுலுக்கு வேண்டியவர்[2]. விழாவில் பேசிய திக் விஜய்சிங் தனது பேச்சின் இடையே திடீர் என்று பெண் எம்.பி.யை வர்ணித்தார். முதலில் அவர் பேசுகையில், “இந்த தொகுதி எம்.பி.யான மீனாட்சி நடராஜன் கடினமான உழைப்பாளி, காந்தியவாதி, நேர்மையானவர், தொகுதி மக்களுக்காக இங்கும் அங்கும் ஓடி உழைப்பவர். ஆனால் நான் சமயத்துக்கு தக்க படி நடந்து கொள்ளும் அரசியல் வாதி”, எனக் கூறினார். இறுதியில் திடீர் என்று ‘‘அவர் அனைவரும் விரும்பத்தக்க 100 சதவீதம் செக்ஸியான பெண்’’ [सौ टका टंच माल[3] = sau taka tunch maal] என்று வர்ணித்தார்[4]. இதனால் விழாவில் பரபரப்பு ஏற்பட்டது[5]. ஊடகங்கள் இதனை பெரிது படுத்தியது எனலாம்.

Meenakshi Natarajan with Rahul.3

சலசலத்த செய்தி அடங்கிவிட்டது: திக்விஜய்சிங் எப்பொழுதுமே அடாவடித் தனமான பேசக்கூடியவர் தாம். பொதுவாக பிஜேபி, சங்கப் பரிவார் பற்றி வாய்க்கு வந்ததெல்லாம் பேசுவார். கேட்டால் எல்லாவற்றிற்கும் தன்னிடம் ஆதாரம் உள்ளது என்பார். இது போல் அடிக்கடி பேசி சர்ச்சையில் சிக்கிக் கொள்கிறார். ஆனால், காங்கிரஸ் கண்டு கொள்ளாது. தற்போது அவரது பேச்சுக்கு பாரதீய ஜனதா மற்றும் பெண்கள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அவர் மீது காங்கிரஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெண்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. திக்விஜய்சிங்குக்கு மனநலம் பாதிக்கப்பட்டு விட்டது. எனவே அவரை மனநல பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் என்று பாரதீய ஜனதா கூறியுள்ளது. திக்விஜய்சிங் எப்போதும் இப்படித்தான் பேசுவார். அவரை நாங்கள் பொருட்படுத்தவில்லை என்று பாரதீய ஜனதா செய்தி தொடர்பாளர் மீனாட்சி லெகி கூறினார். ரேணுகா சௌத்ரி என்ற, சோனியாவுடன் நடனம் ஆடிய அம்மையாரும், இதைப் பற்றியெல்லாம் ஒன்று நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்றார்.

Meenakshi Natarajan.3

எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு: ஹிந்தியில் வார்த்தைகளை பலவிதமாக உபயோகப் படுத்தலாம், புரிந்து கொள்ளலாம். நடைமுறையில், சினிமா தாக்கத்தால், பல வார்த்தைகள் இரண்டு பொருள்களுடன் பிரோகிக்கப்படும் நிலை வந்து விட்டது. சில நல்ல வார்த்தைகள் கூட உபயோகிக்க பயமாக இருக்கிறது. ஏனெனில், சாதாரணமான வார்த்தைகளுக்கு அசிங்கமான, ஆபாசமான அர்த்தத்தை ஏற்றிச் சொல்லப்பட்டு, பிரயோகப்படுத்தப் பட்டு வருவதால், அவ்வார்த்தையை உபயோகப்படுத்த தயக்கமாகவும் இருக்கிறது. இல்லை, பொது இடங்களில் வார்த்தையை உபயோகித்தால் தவறாக நினைத்துக் கொள்வார்களோ என்ற நிலையும் வந்து விட்டது. இருப்பினும், வள்ளுவர் சொல்வதை ஏற்றுக் கொள்வது நல்லது:

“எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பதறிவு”

Meenakshi Natarajan with Rahul.4

திக்விஜய் சிங் கொடுத்த விளக்கம்: இங்கு திக்விஜய் சிங் சொல்லியிருப்பதால் தான் விஷயம் விவகாரமாகி இருக்கிறது. கேட்டால் எல்லாவற்றிற்கும் தன்னிடம் ஆதாரம் உள்ளது என்று, யாதாவது சொல்லிவிடுவாரோ என்று ஊடகங்கள் எதிர்பார்க்கின்றன போலும். . இதற்கிடையே திக்விஜய் சிங் பெண் எம்.பி.யை அப்படி வர்ணிக்கவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார். பெண் எம்.பி.யை ‘‘சுத்த தங்கம்’’ என்று தான் சொன்னேன். ஆனால் டெலிவிஷன் செய்தியில் தவறான அர்த்தத்தில் சொல்லி விட்டார்கள் என்று விளக்கம் அளித்துள்ளார்.

Meenakshi Natarajan with Digvijay Singh

மீனாட்சி நடராஜன் எந்த எதிர்ப்பும் தெரிவிக்க வில்லை: திக்விஜய்சிங் பேச்சுக்கு மீனாட்சி நடராஜன் எந்த எதிர்ப்பும் தெரிவிக்க வில்லை. அவர் கூறும் போது, ‘‘திக்விஜய் சிங்கின் பேச்சை தவறான கண்ணோட்டத்தில் பார்க்க கூடாது. அவர் எனது பணியை வரவேற்று பாராட்டினார். ஆனால் கொடூர புத்தி கொண்டவர்கள் தான் அவரது பேச்சை திரித்து கூறுகிறார்கள். அந்த விழாவில் 15 ஆயிரம் பேர் கூடி இருந்தனர். அவர்கள் சரியான கண்ணோட்டத்தில் தான் பேச்சை கேட்டார்கள்’’ என்றார்[6].

Print

வேதபிரகாஷ்

© 28-07-2013


[1] மெட்ராஸ் பாசை அல்லது சினிமா பாசையில் “பிகரு”, “பார்ட்டி” என்பது போன்ற வார்த்தை.

[2] போர்ப்ஸ் பத்திரிக்கையின் படி, அவருடைய பின்னணியில் பலத்துடன் இருப்பவர்களில் இவரும் ஒருவர் ஆவர்.

[6] Natarajan said she wasn’t offended. “His statement has to be looked at in complete perspective. He has appreciated my work.” She told TOI the comments were being misinterpreted by mischievous elements. “It’s the work of an evil mind. There were about 15,000 people at the meeting who took it in the right spirit.”

http://timesofindia.indiatimes.com/india/Digvijaya-calls-Meenakshi-Natarajan-sau-tunch-maal-rapped-for-sexist-remark/articleshow/21380305.cms?