Posts Tagged ‘அரசியல்’

புவனேஸ்வரி கைது, தினமலர் செய்தி, நடிகர்-நடிகையர் பேச்சு, பத்திரிக்கையாளர்கள் வழக்கு தொடுத்தல், பத்திரிக்கையாளர் கைது, ஆனால், நடிகர்-நடிகையர் தப்பித்து வருகின்றனர்!

மே25, 2017

புவனேஸ்வரி கைது, தினமலர் செய்தி, நடிகர்நடிகையர் பேச்சு, பத்திரிக்கையாளர்கள் வழக்கு தொடுத்தல், பத்திரிக்கையாளர் கைது, ஆனால், நடிகர்நடிகையர் தப்பித்து வருகின்றனர்!

Bhuwaneswari arrested 2009

விபசார வழக்கில் நடிகை புவனேஸ்வரி கைது (அக்டோபர் 2009): சென்னையில் கடந்த 2009-ம் அக்டோபர்.2 அன்று ஆண்டு விபசார வழக்கில் நடிகை புவனேஸ்வரி கைது செய்யப்பட்டார்[1]. அப்பொழுது தன்னை மற்றும் கைது செய்து, சிறையில் அடைத்து என்று நடவடிக்கைகள் எடுத்த போது, மற்ற நடிகைகளின் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது போல பேசினார். சில நடிகைகளின் பெயர்களையும் குறிப்பிட்டார். விபசார வழக்கில் பிடிபட்ட நடிகை புவனேஸ்வரி, திரையுலகில் விபசாரத்தில் ஈடுபட்டுள்ள மொத்த நடிகைகள் மற்றும் அவர்களுக்கு துணையாக உள்ள முக்கியமான புரோக்கர்களின் பெயர் உள்ளிட்ட ஒட்டுமொத்தப் பட்டியலையும் போலீஸாரிடம் தூக்கிக் கொடுத்து விட்டாராம். போலீஸாரும் இந்தப் பட்டியலிலிருந்து சிலரை தேர்வு செய்து வளைத்துப் பிடிக்க திட்டம் போட்டுள்ளனராம். இது தெரிந்தது முதல் சம்பந்தப்பட்ட நடிகைகள் பெரும் பீதியில் உள்ளனராம். கொஞ்ச நாளைககு அடக்கம் ஒடுக்கமாக இருக்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளனராம்.

Dinamalar-Bhuvaneswari04_10_2009

போலீசாரிடம் லிஸ்ட் கொடுத்தார் என்ற செய்தி: தன்னைக் கைது செய்த போலீசாரிடம், விபச்சாரத்தில் ஈடுபடும் மொத்த நடிகைகளின் பட்டியலும் என்னிடம் உள்ளது. மணிக்கு 2 லட்சம் வாங்கும் டாப் நடிகைகள் பட்டியலைக்கூட வைத்துள்ளேன். அவர்களிடம் போகும் கஸ்டமர்களைக் கூட எனக்குத் தெரியும். அவர்களையெல்லாம் உங்களால் கைது செய்ய முடியுமா? என்று கடுப்பாகக் கேட்டுள்ளார். உடனே போலீசாரும் அந்த லிஸ்டைத் தரச்சொல்ல, ‘தான் சொன்னது சும்மா இல்லை… நிஜம்தான்’ எனும் வகையில் உடனே பட்டியலைக் கொடுத்து விட்டாராம் புவனேஸ்வரி. வெறுமனே பெயரை மட்டும் கொடுக்காமல், எந்தெந்த நடிகை எங்கெங்கு விபச்சாரத்தில் ஈடுபடுகிறார். என்னென்ன ரேட் என்பது உள்பட துல்லியமான ‘டேட்டா பேஸை’யே கொடுத்து முன்னணி நடிகைகளின் ‘பொருளாதார பேஸில்’ கை வைத்து விட்டார் புவனேஸ்வரி. அதில் விபசாரத்தில் ஈடுபடும் 25 முன்னணி நடிகைகள் ஒவ்வொருவருக்கும் என்னென்ன ‘ரேட்’ என்பதையும், எங்கெங்கு வாடிக்கையாளர்களை சந்திக்கிறார்கள் என்ற விவரங்களையும் கொடுத்துள்ளார். ஒரு மணி நேரத்துக்கு ரூ.2 லட்சம் வாங்கும் நடிகைகள், ரூ.1 லட்சம் வாங்கும் நடிகைகள், ரூ.50 ஆயிரம், ரூ.25 ஆயிரம் என்று ‘ரேட்’ வாரியாக பட்டியலை கொடுத்துள்ளார். அவரது பட்டியல்படி, பிரபல நடிகைகள் சிலரது குறைந்தபட்ச ரேட் ரூ.25000 (ஒரு மணி நேரத்துக்கு). இந்தக் கணக்கில்தான் அவர்கள் நகைக்கடை திறப்பு விழா, ஜவுளிக்கடைத் திறப்பு விழா போன்றவற்றுக்கு ரேட் நிர்ணயிப்பார்களாம். இந்தப் பட்டியலில் உள்ள நடிகைகளில் முதல்கட்டமாக 4 பேரை குறிவைத்துள்ளது போலீஸ். இவர்கள் அழகிகளை வைத்து விபசார தொழில் செய்யும் முக்கிய நடிகைகள். ஆனால் இவர்கள் அனைவரும் ரூ.25 ஆயிரம் ‘ரேட்’டில் உள்ளவர்கள். நடிகைகளை பிடிப்பதற்கு தரவேண்டிய பணத்தை போலீசார்தான் தயார் செய்ய வேண்டும். ரூ.25 ஆயிரம் அளவில்தான் தயார் செய்ய முடியும் என்பதால் முதல்கட்டமாக இந்த நடிகைகளை குறி வைத்துள்ளனர்.

Bhuvaneswari statement -- 2009 - Dinamalar

இதுதொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர் ராதாரவி, முதல்அமைச்சர் கருணாநிதிக்கு அனுப்பிய கடிதம் (2009): “கடந்த 1-ந் தேதி அன்று நடிகை புவனேஸ்வரியை காவல்துறையினர் விபசார வழக்கில் கைது செய்துள்ளனர். அவர் போலீசாரிடம் தெரிவித்ததாக, தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகள் பற்றிய அவதூறு செய்திகள்   வெளிவந்ததைக் கண்டு நாங்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தோம். இந்த செய்திகளால் சம்பந்தப்பட்ட நடிகைகளும், அவர்களின் குடும்பத்தினரும், ஒட்டுமொத்த தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களும் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம். கலை உலகின் மூத்தவரும், தமிழ் திரையுலகினர் மீதும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மீதும் என்றும் மரியாதை வைத்திருக்கும் தாங்கள் முதல்வராக இருக்கும்போது இப்படி ஒரு செய்தியை ஊடகங்கள் வெளியிடுவது எங்களுக்கு மிகவும் வருத்தமாக உள்ளது.

What the actors spoke - 2009 photo

கருணாநிதி தலையிட வேண்டும்!: “எனவே, இதுகுறித்து தாங்கள் தகுந்த நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்று தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் அனைவர் சார்பாக உங்களை அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் அனுமதியுடன் தமிழக காவல்துறை தலைவரிடமும் சென்னை போலீஸ் கமிஷனருக்கு தகுந்த நடவடிக்கை எடுப்பதற்காக இந்த மனுவின் நகலை அளிக்கிறோம்”, என்று கேட்டுக் கொண்டுள்ளனர். இவ்விசயம் முதலமைச்சர் வரை போக வேண்டிய அவசியம், அவசரம், முக்கியத்துவம் இருந்ததா? எத்தையோ பிரச்சினைகள் இருக்கும் போது, அவற்றையெல்லாம் விட்டு விட்டு, கருணாநிதி, இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பார்? நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் ஊரில் இல்லாததால் அவர் வந்தவுடன் இந்த விவகாரம் குறித்து நடிகர் சங்கம் ஆலோசனை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வந்தன. இதில் அரசியல், பெருந்தலைவர்கள், அதிகாரிகள் முதலியோர் சம்பந்தப்பட்டிருப்பது, கொடுக்கப் படும் விளம்பரமும், செய்திக் கட்டுப்பாடுகளும் நன்றாகவே எடுத்துக் காட்டுகின்றன.

complain_bhuwa

இப்பொழுது 2017ல் அடக்கி வாசிக்கு ஊடகங்கள்: இதனால், பெருத்த பிரச்சினை ஆகியது. இது குறித்தும், மற்ற நடிகைகள் குறித்தும் ஒரு பத்திரிகையில் 3.9.2009 தினத்தந்தி] / அக்டோபர் 3-ஆம் தேதி  [தினமணி] அன்று செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. தினமலரில் அச்செய்தி வெளியானது[2]. இதற்கு சினிமா நடிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக 07-10-2009ல் நடத்தப்பட்ட சென்னை தென்னிந்திய திரைப்பட சங்க கூட்டத்தில் நடிகர்கள் –

1.        சரத்குமார்,

2.       சத்யராஜ்,

3.       சூர்யா,

4.       விஜயகுமார்,

5.        விவேக்,

6.       அருண்விஜய் மற்றும்

7.        இயக்குனர் சேரன்,

8.       நடிகை ஸ்ரீபிரியா

ஆகியோர் பத்திரிகையாளர்களை மிக தரக்குறைவாகவும், அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்த செய்தியும் சம்பந்தப்பட்ட பத்திரிகையில் வெளியிடப்பட்டு இருந்தது.

விபசாரம் பற்றி நடிகையர்நடிகர்கள் ஏன் கோபமடைகின்றனர்?[3]: நடிகையர் மற்றும் நடிகர்களின் பேச்சுகளை, கீழ்கண்ட தளங்களில் வெளியிடப்பட்டன[4]: அவர்களின் பேச்சோடு, அவர்களது கண்கள், கை-கால்கள், மற்றும் முகபாவங்களை உன்னிப்பாகக் கவனித்தேன். வாய்-அசைவுகள், வார்த்தை பிரயோகங்கள், உச்சரிப்புகள், வயற்றிலிருந்து ஆக்ரோஷமாக வரும் விதம், உண்மையிலேயே எனக்கு ஆச்சரியம்தான்.

  1. ரஜினிகாந்த் பேசியவிதம், அவரைப் பற்றிய மதிப்பே மாறிவிட்டது. ஆன்மீகம் என்றதெல்லாம் போலி என்று நன்றாகத் தெரிந்து விட்டது. மக்களை ஏமாற்றுவதில் இவருக்கும், கருணாநிதிக்கும் எந்த வேறுபாடும் இல்லை.

ரஜினிகாந்த்: தமிழச்சிகள்……கற்பு……………….நிச்சயமாக அவர்கள் விபசாரிகள்தாம்………வயற்றுப் பிழைப்பிற்காக நடத்துகிறார்கள்…………. அவர்கள் போட்டோவை போடவேண்டாம்.

  1. சூர்யா: ……………………..பின்னால் ஓடுதல்……………ஈனப்பிறவி…………
  2. விவேக்: ………………..சொறிநாய்…………………….வொங்கம்மா……………….படம் போட்டு ஒட்டுவேன்………..
  3. ஸ்ரீபிரியா: பாஸ்டர்ட். ஆங்கிலத்தில் கெட்ட வார்த்தையில் பேசியதோடு, “ஈனப்பிறவிகள்’
  4. சத்யராஜ்: …………..ஸ்ரீபிரியா சொன்னதை தமிழில் மொழிபெயர்த்து சொல்லி அதனை நாம் எல்லோரும் ஆமோதிக்கவேண்டும்……………….உள் காயம் தெரியாமல் அவர்களை அடிக்க வேண்டும்’.
  5. அருண் விஜய், “பத்திரிகை அலுவலகத்தில் புகுந்து அடித்து நொறுக்கி, எழுதியவரை அடித்து இழுத்து வந்து இவுங்க (மஞ்சுளா) காலில் விழ வைப்பேன்’ என்று கூறியுள்ளார்.
  6. நடிகர் சரத்குமார், “என்னைப் பற்றி எழுதியபோது, அந்தப் பத்திரிக்கை ஆபீசை 200 பேரோட போய் “அட்டாக்’ பண்ணினேன்’ என்று பேசியுள்ளார்.
  7. நடிகர் சேரன் பேசுகையில், “ராஸ்கல்ஸ், உன் வீட்டுப்பிள்ளை ஓடிப்போகும் போது தெரியும்டா வலி’ என்று கூறியுள்ளார்.

ஆச்சரியம்தான், 90% நிர்வாணமாக நடிக்கும்போது, ஐந்தில் நான்கை என்றோ மறந்த போது, பாக்கி ஒன்றைப் பற்றிக் கேள்வி எழும்போது, வருகிறது, கோபம், ஆக்ரோஷம், கொதிப்பு, வெறி……………..எல்லாம். முலைகளைக் காட்டிக் கொண்டு, குலுக்கிக் கொண்டு ஆபாசநடனங்கள், கேவலமான இரட்டை-பொருள் கொண்ட வேசித்தன வசனங்கள், பரத்தைத்தனத்தை வெளிகாட்டும் பாலல்கள் இனற்றையெல்லாம் நாடு முழுவதும் சுவர்களில், தியேட்டர்களில், தொலைகாட்சிகளில், …………….வெளிவரும்போது, பெருமையாகவா உள்ளனா?[5].

 

© வேதபிரகாஷ்

25-05-2017

actors_permission

[1] தினமலர், நடிகர்கள் டிவாரன்ட், மே.24, 2017. 03.33 pm

[2] http://cinema.dinamalar.com/tamil-news/59530/cinema/Kollywood/Warrent-against-8-actors-including-Suriya-and-Sarathkumar.htm

[3] http://www.indiaglitz.com/channels/tamil/gallery/events/19677.html

[4] http://indiainteracts.in/movies/tamil/gallery_new/events/1/nadigar_sangam_dinamalar.html

[5]https://womanissues.wordpress.com/2009/10/14/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/

திராவிடத் திருநாட்டில் பேய்களும், பேயோட்டுபவர்களும் அதிகமாகி வருவது ஏன்? – பகுத்தறிவு, பெரியாரிஸம் குறைகின்றனவா, அதிகமாகின்றனவா?

நவம்பர்22, 2016

திராவிடத் திருநாட்டில் பேய்களும், பேயோட்டுபவர்களும் அதிகமாகி வருவது ஏன்? பகுத்தறிவு, பெரியாரிஸம் குறைகின்றனவா, அதிகமாகின்றனவா?

breastfeed-fatwa-for-women

இஸ்லாமும், முலைப்பால் கொடுத்தலும்: இஸ்லாத்தைப் பொறுத்த வரையில், பல விசயங்களுக்கு, பல நாடுகளில், பல முல்லா / காஜிக்கள் பலவிதமான பத்வாக்கள் / மத ஆணைகள் கொடுத்திருக்கிறார்கள். இதனால், பழக்க-வழக்கங்களைப் பின்பற்றுவதில், வேறுபாடுகள் காணப்படுகின்றன. அரேபிய நாடுகளில், ஒரு முல்லா / அல் ஹஸார் பல்கலைக்கழகத்தின் ஹதீஸ் துறையின் தலைவர் ஆண் வேலையாட்களுக்கு, பெண் வேலையாட்கள் முலைப்பால் ஊட்ட வேண்டும், அப்படி செய்தால், அவர்கள் நன்றாக வேலை செய்வார்கள், உறவுமுறை நன்றாக இருக்கும் என்றெல்லாம் விளக்கம் கொடுத்து, பத்வா போட்டார். இவ்விசயத்தில் கூட, குழந்தை பிறந்தததும், தாயே தொழுகை கூறி, முலைப்பால் ஊட்டலாம் என்றுள்ளது. ஆனால், அப்பெண்ணின் கணவன் அதனை தவறாகப் புரிந்து கொண்டு, இவ்வாறு நடந்து கொண்டதால் சர்ச்சை உண்டாகியுள்ளது.

women-met-magician-alone

குறி கேட்க சென்றவர்களிடம் பூஜை செய்ய வேண்டும் என்று சொன்ன மந்திரவாதி: தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகேயுள்ள வாழவல்லானைச் சேர்ந்தவர் திருமால். இவரது மனைவி தனலட்சுமி (42). தனலட்சுமி தனது 2 மகன்களின் வேலை தொடர்பாக முத்துகிருஷ்ணாபுரம் கருப்பசாமி கோயில் பூசாரியான மந்திரவாதி சோமசுந்தரத்திடம் குறி கேட்க சென்றுள்ளார். இக்காலத்தில் பி.இ / பி.டெக் படித்தவர்களுக்கே வேலை கிடைக்காத நிலையுள்ளது. நன்றாக படித்து, தேரியவர்கள், துறைப்பற்றிய விவரங்கள் அறிந்தவர்களுக்கு வேலை கிடைத்து விடுகிறது. ஆனால், மற்றவர்கள் பரிதாபகரமாக உள்ளது. இந்நிலையில், குறி கேட்க சென்ற போது, தொடர்ந்து பூஜை செய்ய வேண்டும் என அவர் கூறியுள்ளார். இதனால், தனலட்சுமி கணவரிடம் திருச்செந்தூர் கோயிலுக்கு சாமி கும்பிட செல்வதாக கூறி விட்டு அடிக்கடி அவரை தனலட்சுமி சந்தித்துள்ளார். மேலும், மந்திரவாதி சோமசுந்தரம் பூஜை செய்ய தேவைப்படுவதாகக் கூறி தனலட்சுமியிடம் இருந்து தாலி செயின் உள்ளிட்ட நகைகள், பணத்தை உள்ளிட்டவற்றை வாங்கியுள்ளார்.

women-met-magician-alone-got-murderedகொடுத்த நகைகளைத் திருப்பிக் கேட்டதால் கொலை செய்த மந்திரவாதி: தொடர்ந்து தன்னிடம் நகை, பொருட்களை பிடுங்குவதை அறிந்துகொண்ட தனலட்சுமி கொடுத்தவற்றை திரும்ப கேட்டுள்ளார். இதனையடுத்து 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பணம், நகையை கேட்டு தனலட்சுமி தகராறு செய்யவே அவரை, கோயிலுக்கு வரவழைத்து கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றுள்ளார். அவரது கொலை முயற்சியில் இருந்து அவர் தப்பி தோட்டத்துக்குள் ஓடயுள்ளார். அப்போது, தைக்காவூரைச் சேர்ந்த மற்றொரு மந்திரவாதி அருள்குமாருடன் சேர்ந்து தலையில் உருட்டுக் கட்டையால் அடித்துக் கொன்று தோட்டத்தில் புதைத்துள்ளனர். தனது மனைவி மாயமானதை அடுத்து அவரது கணவர் திருமால் கொடுத்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். 2 வருடமாக காவல் துறையினருக்கு தண்ணீர் காட்டிவந்த சோமசுந்தரம் 17-10-2016 அன்று இரவு சிக்கினார். அவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

tiruchenthur-murder-by-two-exorcists-october-2016

சர்ப்பதோஷம் போக்க பூஜை என்று நாடகமாடி, நகை பறிக்க முயன்ற மந்திரவாதி[1]: சென்னை தாம்பரத்தை அடுத்த பழைய பெருங்களத்தூர், சிவசண்முகம் தெருவை சேர்ந்தவர் சிவநேசன். இவரது மனைவி காளீஸ்வரி (வயது 33). இவர்களது குடும்பத்தில் பல பிரச்சினைகள் இருந்து வருகின்றன. இவ்விசயம் அக்கம்-பக்கத்தாருக்கும் தெரிந்திருக்கிறது. அந்நிலையில், இவர்களது குடும்பத்தில் கடுமையான சர்ப்பதோஷம் இருப்பதாகவும், அதற்கு பரிகார பூஜை செய்தால் சரியாகிவிடும் எனவும் 19-10-2016 அன்று காலை அவரது வீட்டிற்கு மந்திரவாதி போல் உடை அணிந்து வந்த 2 வாலிபர்கள் கூறினர். இதை நம்பிய காளீஸ்வரி அவர்களை வீட்டுக்குள் அழைத்து சென்றார். அவர்கள் 2 பேரும் பூஜை செய்வது போல் நடித்தனர். பின்னர் காளீஸ்வரி அணிந்திருந்த தங்க நகைகளை கழற்றி, ஒரு துணியில் வைத்து கட்டி பூஜை அறையில் வைக்கும்படி தெரிவித்தனர். அவரும் நகைகளை கழற்றி வைத்தார். இதற்கிடையே காளீஸ்வரி நகைகள் வைத்திருந்த துணியை பிரித்து பார்த்தபோது, அதில் வைக்கப்பட்டிருந்த நகைகள் காணாமல் போனது தெரியவந்தது.

periyar-spirit-does-not-come

நகைகள் காணாத போனதால், மந்திரவாதிகளைப் பிடுத்து போலீசிடம் ஒப்படைத்தது:  இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டு அக்கம்பக்கத்தினரை அழைத்தார். இந்த நிலையில், அந்த வாலிபர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் பிடித்து தர்ம அடி கொடுத்து பீர்க்கன்காரணை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்[2]. போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் இருவரும் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ் (19), செல்வகுமார் (19) என்பதும், சென்னை நகரின் பல்வேறு இடங்களில் தோஷம் கழிப்பதாக கூறி நகைகளை கொள்ளையடித்து வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து பீர்க்கன்காரனை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்கள் 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இங்கும், சர்ப்பதோசம் இருக்கிறது என்றால் எப்படி பெண்கள் நம்பலாம், உடனே தெரியாதவர்களிடம் நகைகள் கொடுத்து, பூஜைக்கு ஒப்புக் கொள்ளலாம் என்பதெல்லாம் ஆச்சரியமாகத்தான் உள்ளது. இப்படியாக, திராவிட நல்திருநாட்டில், பேயோட்டுபவர்கள், பகுத்தறிவுவாதிகளை ஏமாற்றியுள்ளதும் விசித்திரமாக இருக்கிறது.

dravidian-devil-sorcery-exorcism

திராவிட நல்திருநாட்டில் பேய்களும், பேயோட்டுபவர்களும் அதிகமாகி வருவதும் வேடிக்கையாக இருக்கிறது: பகுத்தறிவு பெரியாரிஸத்தில் ஆத்மா இல்லை, என்று பெரியார் காலத்திலிருந்து ஒப்புக் கொள்ளப்பட்ட சித்தாந்தமாக இருந்து வருகிறது. மனிதனுக்கு உயிர் உள்ளது, இறக்கிறான் என்பதெல்லாம் ஒப்புக் கொள்கிறார்கள், ஆனால், மறுபிறப்பு முதலியவற்றில் நம்பிக்கை இல்லை. இருப்பினும், வருடா வருடம், பெரியார், மணியம்மை சமாதிகளுக்குச் சென்று மாலைபோட்டு, மலர் தூவி, விளக்கு வைத்து,……..மரியாதை செல்லுத்தி விட்டு வருகிறார்கள். ஆனால், பேய்-பிசாசு உண்டு என்று ஊடகங்கள் வழியாக பிரச்சாரம் செய்பவர்களை அவர்கள் கண்டுகொள்வதில்லை. இன்னும் சொல்லப் போனால், அவ்வூடகங்களுக்கு சொந்தக்காரர்களாக, பெரும்பாலும் அவர்கள் இருக்கிறார்கள். ஏலும், சமீபத்தில் டிவி-சீரியல்கள் முதல் திரைப்படங்கள் வரை, பேய்-பிசாசு படங்கள் சமீபத்தில் தான் அதிகமாக இருக்கின்றன. அதன் பாதிப்பில் தான் பெண்கள், மேற்குறிப்பிட்டபடி  காரியங்களில் அறிந்தோ அறியாமலோ ஈடுபட்டு, பிரசினைகளில் சிக்கியுள்ளார்கள். அதனால், திராவிட நல்திருநாட்டில் பேய்களும், பேயோட்டுபவர்களும் அதிகமாகி வருவதும் வேடிக்கையாக இருக்கிறது.

 

© வேதபிரகாஷ்

22-11-2016

periyar-atm-spirit-negative

[1] தினத்தந்தி, பெருங்களத்தூரில் மந்திரவாதி போல நடித்து நகை திருட முயற்சி 2 வாலிபர்கள் , பதிவு செய்த நாள்: புதன், அக்டோபர் 19,2016, 12:43 AM IST; மாற்றம் செய்த நாள்: புதன், அக்டோபர் 19,2016, 4:45 AM IST.

[2]http://www.dailythanthi.com/News/Districts/Chennai/2016/10/19004312/Pretending-to-be-a-magician2-men-arrested-for-trying.vpf

 

பகுத்தறிவு பெரியாரிஸத்தில் ஆத்மா இல்லை, ஆனால், பேய்-பிசாசு உண்டு: திராவிட நல்திருநாட்டி

நவம்பர்22, 2016

பகுத்தறிவு பெரியாரிஸத்தில் ஆத்மா இல்லை, ஆனால், பேய்பிசாசு உண்டுதிராவிட நல்திருநாட்டில் பேய்களும், பேயோட்டுபவர்களும்!

puzhal-excorcist-magician-dm-22-11-2016

திராவிட சித்தாந்திகளும், செக்யூலரிஸ பேய்களும்: சமீபத்தில் நடந்துள்ள “மந்திரவாதிகள்” சம்பந்தப்பட்ட விவகாரங்கள் திடுக்கிட வைப்பதாகவும், கவலையாகவும் இருக்கின்றன. 60 ஆண்டுகளாக நாத்திகம் போதித்து, கடவுள் நம்பிக்கையை சீரழித்து, பெரியார்-அறிஞர்-கலைஞர்-பேராசியர் போன்றோர் “திராவிடர்களை” பகுத்தறிவோடு “முட்டாள்கள்” ஆக்கியிருக்கின்றனர். ஆனால், அதே நேரத்தில் “பேய் கதைகள்” எழுதி, “பேய் சினிமாக்கள்” எடுத்து, மற்றொரு “ஞானத்தையும்” வளர்த்துள்ளனர். இது “விட்டலாச்சார்யா” பாணியை விடுத்து, பெரியாரிஸ-ஹாரி பாட்டர் முறையில் சென்றாதால், பகுத்தறிவு-நம்பிக்கையாளர்கள், மாற்று வழிகளில் பின்பற்ற ஆரம்பித்து விட்டனர் போலும். ஆமாம், “ஆத்மா” இல்லையென்று சொல்லி “பேய்-பிசாசுகளில்” நம்பிக்கை வந்து விட்டது. “அம்மனோ சாமியோ, அத்தையோ மாமியோ கம்பனூர் நீலியோ கல்யாண தேவியோ..?” பாணியில் சினிமாவில் பேயோட்டியது 1960களில். இன்றோ, “எக்ஸார்ஸிட்”, “ஓமன்” ரேஞ்சுகளை மீறி விட்டார்கள். பேய் என்றாலே பாதிரி-சிலுவைகள் தான் வரவேண்டும். பேய்களும் மாறிவிட்டன, அதாவது, மதம் மாற்றப்பட்டு விட்டன. செக்யூலரிஸ இந்தியாவில், இனி பேய்களுக்குக் கூட மதம் பார்க்க வேண்டும் போலிருக்கிறது. இனி சில நிகழ்ச்சிகளைப் பார்ப்போம்-அலசுவோம்.

puzhal-magician-exorcist-22-11-2016

பேய் விரட்டுவதாக இளம் பெண்ணுக்குசூடு! பாலியல் தொல்லை: மந்திரவாதி ஓட்டம்[1]: பேய் விரட்டுவதாக கூறி, பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த பெண்ணின் உடலில் சூடு போட்ட, போலி மந்திரவாதி உட்பட இருவரை, போலீசார் தேடுகின்றனர். பாவம், பேயெல்லாம் கிடைக்கிறது, பார்க்கிறார்கள், பேசுகிறார்கள் ஆனால், பேயோட்டுகிறவர்களை தேட வேண்டியிருக்கிறது. சென்னை, புழல் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார், 36; தொழிலாளி. இவரது மனைவி, ராஜேஸ்வரி, 30. இவர்களுக்கு, இரு மகன்கள் உள்ளனர். ராஜேஸ்வரி, மன அழுத்தம் காரணமாக, கடந்த சில வாரங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். ஆனால், மருத்துவரிடம் செல்ல வேண்டு என்று தெரியவில்லை போலும். தன் மனைவிக்கு பேய் பிடித்திருக்கிறது என நினைத்த விஜயகுமார், அதே பகுதியைச் சேர்ந்த, மந்திரவாதி சந்திரன் என்பவனின் உதவியை நாடியுள்ளார். அதற்கு அவர், ’50 ஆயிரம் ரூபாய் செலவாகும். 48 நாட்களில் உன் மனைவி குணமாகிவிடுவார்’ என, நம்பிக்கை அளித்திருக்கிறான். அதற்கு முன்பணமாக, 5,000 ரூபாயும் பெற்றுள்ளான்.

puzhal-magician-exorcist-22-11-2016-dm-cutting

மந்திராவாதி மனைவியை உள்ளே அழைத்துச் சென்றானாம், கணவன் வெளியே நின்றானாம்: 20-11-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று, விஜயகுமார், தன் மனைவியை, சந்திரன் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். ‘ராஜேஸ்வரியை பிடித்துள்ள பேயை விரட்ட, சிறப்பு பூஜை செய்ய போகிறேன்’ எனக் கூறி, அப்பெண்ணை அழைத்துக்கொண்டு, சந்திரன் உள்ளே சென்றுள்ளார். அவனது உதவியாளன் நவீன், வீட்டிற்குள் இருந்தான். விஜயகுமார், வீட்டின் வெளியே நின்றிருந்தார். என்னடா இது, இப்படி செய்கிறார்களே என்று யோசித்திருக்க வேண்டாமோ? இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, போலி மந்திரவாதி சந்திரனும், நவீனும், அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்று உள்ளனர். அதற்கு, ராஜேஸ்வரி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த இருவரும், ராஜேஸ்வரியின் உடலில் சூடு போட்டுள்ளனர்[2]. அலறி துடித்த அவர், வெளியில் ஓடி வந்து, கணவனிடம், மந்திரவாதியின் அட்டகாசம் பற்றி கூறியிருக்கிறார்.

puzhal-magician-22-11-2016

பேயோட்ட வந்தவன் ஓடிவிட போலீஸார் தேடுகிறார்களாம்: பேயோட்டுகிறேன் என்று பாலியல் தொல்லை கொடுத்ததை அறிந்து, அதிர்ச்சி அடைந்த விஜய குமார் மற்றும் அக்கம்பக்கத்தில் இருந்தோர், அவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால், விசயம் அறிந்த, போலி மந்திரவாதியும், அவனது உதவியாளனும் தப்பி ஓடிவிட்டனர். அருத்தம் அடைந்த விஜய குமார் போலீஸாரிடம் புகார் கொடுத்தார். இது குறித்து, புழல் போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆக, பேயை மந்திரவாதி விட்டு ஓடிவிட, போலீஸார் அவனை தேடுவது, நல்ல தமாஷுதான்! இனி திராவிடத்தின் கேரளதேசத்தில் நடந்ததைப் பார்ப்போம்[3]. “தமிநாடு-கேரளா திராவிடப் பண்பாட்டு உறவுகள்” என்று திராவிடத்துவவாதிகள் இன்றும் எழுதி வருகிறார்கள்[4]. கேரளாவில் மந்திரம்-சூனியம்-பேயோட்டுதல்-ஆரூடம்-பிரசன்னம் முதலியவற்றை பார்ப்பதில், செய்வதில் நிறைய பேர் இருப்பதாகத் தெரிகிறது. குறிப்பாக, முஸ்லிம்கள் இவற்றில் ஈடுபட்டுள்ளதும் வியப்பான விசயம் தான்.

kerala-man-allegedly-stopped-wife-from-breastfeeding-baby-until-prayers

மந்திரவாதி சொன்னதால், பிறந்த குழந்தைக்கு பால் கொடுக்க தடுத்த கணவன்தப்பாமல் கேட்ட மனைவி[5]: கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள முக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அபுபக்கர் (28). இவரது மனைவி ஹப்சத் (21). கர்ப்பிணியான ஹப்சத்தை பிரசவத்திற்காக முக்கத்தில் உள்ள இ.எம்.எஸ் மருத்துவமனையில் அனுமதித்தனர். 04-11-2016 காலை அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு உடனடியாக தாய்ப்பால் கொடுக்கும் படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், இஸ்லாமிய மத குருவின் அறிவுரைப்படி, மசூதியிலிருந்து 5 முறை தொழுகைக்கான அழைப்புச் சத்தம் கேட்காதவரை குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கக் கூடாது என்று மனைவியிடம் அபுபக்கர் கூறியுள்ளார்[6]. அதை ஏற்று, பெற்ற குழந்தைக்கு தாயும் பால் கொடுக்க மறுத்துவிட்டார். மருத்துவர்கள் எவ்வளவோ எடுத்துக் கூறியும் தாய்ப்பால் கொடுக்க அபுபக்கர் எதிர்ப்பு தெரிவித்ததுடன் குழந்தைக்கு ஏதாவது ஆனால் கூட தான் பொறுப்பேற்பதாக உறுதியளித்து, தனது மனைவி மற்றும் குழந்தையை மருத்துவமனையிலிருந்து கட்டாய டிஸ்சார்ஜ் பெற்று அழைத்துச் சென்றுவிட்டார்[7].

female-workers-breast-feed-male-workers-for-good-workவிசாரணையில், தம்மை தலாக் செய்துவிடுவதாக கணவர் மிரட்டியதாலேயே குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க மறுத்ததாக தெரிவித்த மனைவி: இருப்பினும் மருத்துவமனை பிரச்சினை வரக்கூடாது என்று போலீஸாரிடம் புகார் கொடுத்தது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரை அடுத்து, உரிய விசாரணை நடத்த கோழிக்கோடு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த், தாமரச்சேரி டிஎஸ்பிக்கு உத்தரவிட்டார்.  இதையடுத்து பிறந்த குழந்தையின் உரிமையான தாய்ப்பாலை கொடுக்க மறுத்ததாக தாய் ஹப்சத், தந்தை அபுபக்கர் மீது சிறார் நீதிச்சட்டப்படி வழக்குப்பதிவு செய்தனர் போலீஸார்[8]. இந்நிலையில், குழந்தையின் தந்தை அபுபக்கரிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில், அப்பகுதியை சேர்ந்த ஐதூருஸ் என்ற மந்திரவாதி கூறியதால்தான், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கவிடாமல் தடுத்ததாக தெரிவித்துள்ளார்[9]. இதையடுத்து முக்கம் போலீஸார் அபுபக்கர் மற்றும் மந்திரவாதி ஐதூருஸை கைது செய்தனர்[10]. முன்னதாக, இந்த விவகாரத்தில் குழந்தையின் தாயிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், தம்மை தலாக் செய்‌துவிடுவதாக கணவர் மிரட்டியதாலேயே குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க மறுத்ததாக தெரிவித்துள்ளார்.

© வேதபிரகாஷ்

22-11-2016

islamic-breast-feed-fatwa-and-practice

[1] தினமலர், பேய் விரட்டுவதாக இளம் பெண்ணுக்குசூடு! பாலியல் தொல்லை: மந்திரவாதி ஓட்டம்!, பதிவு செய்த நாள். நவம்பர்.21, 2016. 21.26.

[2] http://www.dinamalar.com/news_detail.asp?id=1653780

[3]  அ. கருணானந்தம், தமிழ்நாடுகேரளா திராவிடப் பண்பாட்டு உறவுகள், விடுதலை ஞாயிறு மலர், பக்கம்.2, 19-11-2016.

[4] http://viduthalai.in/page2.html

[5] தினகரன், குழந்தைக்கு தாய்ப்பாலை தடுத்த தந்தை, மந்திரவாதி கைது, Date: 2016-11-06@ 01:09:59.

[6] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=256848

[7] தினமணி, பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க தடுத்த தந்தை மீது வழக்கு!, By DIN  |   Published on : 06th November 2016 10:09 AM.

[8] http://www.dinamani.com/latest-news/2016/nov/06/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-2593625.html

[9] தமிழ்.வெப்துனியா, பூஜை செய்வதாக கூறி பெண்ணை ஏமாற்றி கொலை செய்த மந்திரவாதி, Last Modified: செவ்வாய், 25 அக்டோபர் 2016 (14:22 IST).

[10] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/sorcerer-cheating-and-murder-of-woman-116102500026_1.html

 

அனைவரும் விரும்பத்தக்க 100 சதவீதம் செக்ஸியான பெண் – திக்விஜய்சிங் வர்ணனை!

ஜூலை28, 2013

அனைவரும் விரும்பத்தக்க 100 சதவீதம் செக்ஸியான பெண் – திக்விஜய்சிங் வர்ணனை!

Rahul Gandhi meets potential Youth Congress candidates

सौ टका टंच माल – சௌ டகா டஞ்ச் மால்[1]: மத்திய பிரதேச மாநிலம் மாண்ட்கார் பாராளுமன்ற தொகுதியில் நடந்த விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங், அந்த தொகுதி எம்.பி.யான மீனாட்சி நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். மீனாட்சி நடராஜன் கடந்த தேர்தலில் பிஜேபியை வென்று எம்.பி ஆனார். ராகுலின் முக்கியமான குழுக்களில் உறுப்பினர்.Meenakshi Natarajan with Rahul.2 ராகுலுக்கு வேண்டியவர்[2]. விழாவில் பேசிய திக் விஜய்சிங் தனது பேச்சின் இடையே திடீர் என்று பெண் எம்.பி.யை வர்ணித்தார். முதலில் அவர் பேசுகையில், “இந்த தொகுதி எம்.பி.யான மீனாட்சி நடராஜன் கடினமான உழைப்பாளி, காந்தியவாதி, நேர்மையானவர், தொகுதி மக்களுக்காக இங்கும் அங்கும் ஓடி உழைப்பவர். ஆனால் நான் சமயத்துக்கு தக்க படி நடந்து கொள்ளும் அரசியல் வாதி”, எனக் கூறினார். இறுதியில் திடீர் என்று ‘‘அவர் அனைவரும் விரும்பத்தக்க 100 சதவீதம் செக்ஸியான பெண்’’ [सौ टका टंच माल[3] = sau taka tunch maal] என்று வர்ணித்தார்[4]. இதனால் விழாவில் பரபரப்பு ஏற்பட்டது[5]. ஊடகங்கள் இதனை பெரிது படுத்தியது எனலாம்.

Meenakshi Natarajan with Rahul.3

சலசலத்த செய்தி அடங்கிவிட்டது: திக்விஜய்சிங் எப்பொழுதுமே அடாவடித் தனமான பேசக்கூடியவர் தாம். பொதுவாக பிஜேபி, சங்கப் பரிவார் பற்றி வாய்க்கு வந்ததெல்லாம் பேசுவார். கேட்டால் எல்லாவற்றிற்கும் தன்னிடம் ஆதாரம் உள்ளது என்பார். இது போல் அடிக்கடி பேசி சர்ச்சையில் சிக்கிக் கொள்கிறார். ஆனால், காங்கிரஸ் கண்டு கொள்ளாது. தற்போது அவரது பேச்சுக்கு பாரதீய ஜனதா மற்றும் பெண்கள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அவர் மீது காங்கிரஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெண்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. திக்விஜய்சிங்குக்கு மனநலம் பாதிக்கப்பட்டு விட்டது. எனவே அவரை மனநல பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் என்று பாரதீய ஜனதா கூறியுள்ளது. திக்விஜய்சிங் எப்போதும் இப்படித்தான் பேசுவார். அவரை நாங்கள் பொருட்படுத்தவில்லை என்று பாரதீய ஜனதா செய்தி தொடர்பாளர் மீனாட்சி லெகி கூறினார். ரேணுகா சௌத்ரி என்ற, சோனியாவுடன் நடனம் ஆடிய அம்மையாரும், இதைப் பற்றியெல்லாம் ஒன்று நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்றார்.

Meenakshi Natarajan.3

எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு: ஹிந்தியில் வார்த்தைகளை பலவிதமாக உபயோகப் படுத்தலாம், புரிந்து கொள்ளலாம். நடைமுறையில், சினிமா தாக்கத்தால், பல வார்த்தைகள் இரண்டு பொருள்களுடன் பிரோகிக்கப்படும் நிலை வந்து விட்டது. சில நல்ல வார்த்தைகள் கூட உபயோகிக்க பயமாக இருக்கிறது. ஏனெனில், சாதாரணமான வார்த்தைகளுக்கு அசிங்கமான, ஆபாசமான அர்த்தத்தை ஏற்றிச் சொல்லப்பட்டு, பிரயோகப்படுத்தப் பட்டு வருவதால், அவ்வார்த்தையை உபயோகப்படுத்த தயக்கமாகவும் இருக்கிறது. இல்லை, பொது இடங்களில் வார்த்தையை உபயோகித்தால் தவறாக நினைத்துக் கொள்வார்களோ என்ற நிலையும் வந்து விட்டது. இருப்பினும், வள்ளுவர் சொல்வதை ஏற்றுக் கொள்வது நல்லது:

“எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பதறிவு”

Meenakshi Natarajan with Rahul.4

திக்விஜய் சிங் கொடுத்த விளக்கம்: இங்கு திக்விஜய் சிங் சொல்லியிருப்பதால் தான் விஷயம் விவகாரமாகி இருக்கிறது. கேட்டால் எல்லாவற்றிற்கும் தன்னிடம் ஆதாரம் உள்ளது என்று, யாதாவது சொல்லிவிடுவாரோ என்று ஊடகங்கள் எதிர்பார்க்கின்றன போலும். . இதற்கிடையே திக்விஜய் சிங் பெண் எம்.பி.யை அப்படி வர்ணிக்கவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார். பெண் எம்.பி.யை ‘‘சுத்த தங்கம்’’ என்று தான் சொன்னேன். ஆனால் டெலிவிஷன் செய்தியில் தவறான அர்த்தத்தில் சொல்லி விட்டார்கள் என்று விளக்கம் அளித்துள்ளார்.

Meenakshi Natarajan with Digvijay Singh

மீனாட்சி நடராஜன் எந்த எதிர்ப்பும் தெரிவிக்க வில்லை: திக்விஜய்சிங் பேச்சுக்கு மீனாட்சி நடராஜன் எந்த எதிர்ப்பும் தெரிவிக்க வில்லை. அவர் கூறும் போது, ‘‘திக்விஜய் சிங்கின் பேச்சை தவறான கண்ணோட்டத்தில் பார்க்க கூடாது. அவர் எனது பணியை வரவேற்று பாராட்டினார். ஆனால் கொடூர புத்தி கொண்டவர்கள் தான் அவரது பேச்சை திரித்து கூறுகிறார்கள். அந்த விழாவில் 15 ஆயிரம் பேர் கூடி இருந்தனர். அவர்கள் சரியான கண்ணோட்டத்தில் தான் பேச்சை கேட்டார்கள்’’ என்றார்[6].

Print

வேதபிரகாஷ்

© 28-07-2013


[1] மெட்ராஸ் பாசை அல்லது சினிமா பாசையில் “பிகரு”, “பார்ட்டி” என்பது போன்ற வார்த்தை.

[2] போர்ப்ஸ் பத்திரிக்கையின் படி, அவருடைய பின்னணியில் பலத்துடன் இருப்பவர்களில் இவரும் ஒருவர் ஆவர்.

[6] Natarajan said she wasn’t offended. “His statement has to be looked at in complete perspective. He has appreciated my work.” She told TOI the comments were being misinterpreted by mischievous elements. “It’s the work of an evil mind. There were about 15,000 people at the meeting who took it in the right spirit.”

http://timesofindia.indiatimes.com/india/Digvijaya-calls-Meenakshi-Natarajan-sau-tunch-maal-rapped-for-sexist-remark/articleshow/21380305.cms?

திவ்யாவின் மறுப்பு, இளவரசன் இறப்பு – காதல் தோல்வியா, கலப்புமண முறிவா, திராவிடத்தின் குழப்பமா?

ஜூலை5, 2013

திவ்யாவின் மறுப்பு, இளவரசன் இறப்பு – காதல் தோல்வியா, கலப்புமண முறிவா, திராவிடத்தின் குழப்பமா?

கலப்புத் திருமணம், சுயமரியாதை திருமணங்கள் தோல்வியடைந்தது ஏன்?: திராவிட இயக்கத்தின் தாக்கத்தில் 1930கள் தொடங்கி 1960கள் வரை கலப்புத் திருமணம், சுயமரியாதை திருமணங்கள் செய்வது ஊக்குவிக்கப்பட்டாலும் ஜாதியம் தமிழகத்தில் மறையவில்லை[1], ஜாதிகள் பெருகிக் கொண்டே வருகின்றன. தாலிக்கட்டியத் திருமணங்கள் முறிந்தபோது, திராவிடத்துவ சித்தாந்திகள் திருமண முறிவு விழா நடத்தி, பெண்களை தாலிகளைக் கழட்டி, கட்டிய ஆண்களின் கைகளில் கொடுக்க வைத்து திருமணத்தை “திரு”வெடுத்து, அவமானத்தை உண்டாக்கினர். இத்தகைய “தாலி கழட்டும்”, “கழட்டிக் கொடுக்கும்”, “முறிவு” சட்டப்படி “விவாக ரத்து” ஆனதா அல்லது தனியாக பிறகு அவ்வாறு சட்டப்பட்டி[2] “விவாக ரத்து” பெற்றுக் கொண்டார்களா? அப்பொழுது “சுயமரியாதை” பார்க்கப்பட்டதா அல்லது தாலி போல கழட்டி வைக்க்க்கப் பட்டதா என்று அவர்கள் தாம் சுயவிளக்கம் கொடுக்க வேண்டும். அவர்கள் மறுபடியும் மறுமணம் செய்து கொண்டனரா, அப்படி செய்து கொண்டால் அதே ஜாதியில் செய்து கொண்டனரா, இரண்டாம் முறை திருமணம் செய்து கொண்ட ஆண்களின் நிலை, இரண்டாவது முறையாக இன்னொரு ஆணுக்கு வாழ்க்கைப் பட்ட பெண்களின் நிலைப் பற்றியும் ஒன்றும் பேசப்படவில்லை, விவாதிக்கப்படவில்லை.

  • பிற்பட்ட ஜாதியினர், மிகவும் பிற்பட்ட ஜாதியினர், என்று நீண்டு,
  • தாழ்த்தப்பட்டவர், மிகவும் தாழ்த்தப்பட்டவர்,
  • ஒடுக்கப்பட்டவர், மிகவும் ஒடுக்கப்பட்டவர்,
  • ஒதுக்கப்பட்டவர், மிகவும் ஒதுக்கப்பட்டவர்,
  • சமூகத்தின் விளிம்பில் தள்ளப்பட்டவர், சமூகத்தின் விளிம்பில் மிகவும் அதிகமாக தள்ளப்பட்டவர்,
  • நொறுக்கப்பட்டவர், மிகவும் நொறுக்கப்பட்டவர்,

என்றெல்லாம் விளக்கங்கள், விவரணங்கள், வர்ணனைகள் நீண்டன. எஸ்.சிக்களுக்குண்டான இடவொதுக்கீட்டில், உள்-ஓதுக்கீடு செய்கிறோம் என்று 3.5%த்தை ஜாதியேயில்லை என்று பறைச்சாற்றிக் கொள்ளும் முஸ்லிம்களுக்கும் கொடுக்கப்பட்டது[3]. கிருத்துவர்களும் ஜாதியில்லை என்று சொல்லிக் கொண்டுதான், ஜாதி ரீதியில் இடவொதுக்கீடு கேட்கின்றனர்[4]. ஆக “தலித் என்ற போவையில் இப்படி “உயர்ந்த” மதங்களும் போட்டிப் போடுவது வியப்பானது தான்!

காதல், ஜாதி மற்றும் அரசியல்: 2014 தேர்தல் வருகின்ற நேரத்தில், இதனை அரசியல் ஆக்க கட்சிகள் தயாராக இருப்பதை அரசியல் ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக் காட்டுகின்றனர்[5]. 2011ல் அதிமுக வென்ற பிறகு அல்லது திமுக கூட்டணி தோற்றப் பிறகு, பாமக திமுக கூட்டணியிலிருந்து விலகிச் சென்றது. ஆகையால் ஜாதிய ஓட்டு எதிர்பார்க்கும் அதிகாரத்தை விரும்பும் கட்சிகள் இதன் தயவை எதிர்பார்க்கும் நிலையுள்ளது என்று கருதப்படுகிறது[6]. எல்லா அரசியல் கட்சிகளும் இப்பிரச்சினையில் நுழைந்துள்ளனர்[7]. தங்களது அரசியல் இறப்பைத் தவிர்த்து உயிர்வாழ சிலக்கட்சிகள் இந்த இறப்பைப் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறது. வியப்பாக ஆங்கில ஊடகங்களும் இதைப்பற்றி அதிகமாகவே அலசியுள்ளன. 05-07-2013 அன்று இரவில் “ஹெட்லைன்ஸ் டுடே” செனலில் இதைபற்றிய விவாதமும் நடந்தது. கீழ்கண்டவர்கள் விவாதத்தில் பங்கு கொண்டனர்:

  1. டாக்டர் செந்தில், பாமக.
  2. டி. எஸ். சுதிர், “ஹெட்லைன்ஸ் டுடே”, ஆசிரியர்
  3. பேராசியர் சுரிந்தர் சிங் ஜோத்கா, சமூக அறிவியல், ஜே.என்.யு

எப்படி பாமக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் இதனை அரசியலாக்கின என்ற விவரங்கள் அலசப்பட்டன. காதலிப்பது, ஓடிப்போவது முதலியன நடந்து கொண்டே இருந்தாலும், ஜாதிகள் மறையாமல் தான் இருக்கின்றன என்று பேராசியர் சுரிந்தர் சிங் ஜோத்கா, சமூக அறிவியல், ஜே.என்.யு எடுத்துக் காட்டினார். அதனால் எந்த சித்தாந்தம் தோற்றது என்று அவர் விளக்கவில்லை.

துரதிருஷ்டமான இறப்பு: திவ்யா திரும்ப வருவதற்கு மறுத்ததால்[8], தற்கொலை செய்து கொண்ட இளவரசனின் உடல் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், பிரேத பரிசோதனை நடந்தது. காதல் கலப்பு திருமணம் செய்து கொண்ட இளவரசன், 04-07-2013 அன்று ரயில் முன் பாய்ந்து, தற்கொலை செய்து கொண்டார். இவரை மர்ம நபர்கள் கொலை செய்திருப்பதாக, அவரது உறவினர்கள் தொடர்ந்து கூறி வந்தனர். இந்நிலையில் திவ்யா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது[9]. காலை, 7 மணிக்கு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனையில் இளவரசனின் உடல் பிரேத பரிசோதனை செய்ய ஏற்பாடு நடந்தது. இதையொட்டி, கோவை ஐ.ஜி., டேவிட்சன் ஆசிர்வாதம் தலைமையில், மருத்துவமனை வளாகத்திலும், இரு நுழைவு வாயில் பகுதியிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இளவரசனின் உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பிரேத பரிசோதனைக்கு சில நிபந்தனைகளை முன் வைத்தனர். சேலம், கோவை உள்ளிட்ட மருத்துவமனைகளில் இளவரசனின் உடல் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றனர். இதை போலீஸார் மற்றும் மருத்துவத்துறையினர் ஏற்க மறுத்ததோடு, சட்ட ரீதியான முறையில் பிரேத பரிசோதனை செய்ய ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என கேட்டு கொண்டனர். தங்கள் கோரிக்கை ஏற்கும் வரை, பிரேத பரிசோதனை செய்ய அனுமதிக்க மாட்டோம் என, இளவரசன் உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

விடுதலை சிறுத்தைகளின் தலையீடு: இது தொடர்பாக போலீஸ் மற்றும் பொது மக்களிடம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில பொது செயலாளர் சிந்தனைசெல்வன் பேச்சு வார்த்தை நடத்தினார். காலை, 9.30 மணிக்கு விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த இரண்டு நிர்வாகிகள் மற்றும் ஒரு வக்கீல் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடு நடந்த நிலையில், திடீரென மீண்டும் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள், தாங்கள் கூறும் இரண்டு டாக்டர்கள் முன்னிலையில் மட்டுமே பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என, வலிறுத்தினர். மீண்டும் பிரேத பரிசோதனை நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தங்கள் கோரிக்கை குறித்து போலீஸாரிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். காலை, 11 மணிக்கு கோவை ஐ.ஜி., டேவிட்சன் ஆசிர்வாதம், அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து, பிரேத பரிசோதனை நடவடிக்கை குறித்து, டி.ஐ.ஜி., சஞ்சய்குமாரிடம் ஆலோனை நடத்தினார். பின்னர் இளவரசனின் உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளிடம், ஐ.ஜி., டேவிட்சன் ஆசிர்வாதம், இளவரசன் உடல் பிரேத பரிசோதனை செய்து முடிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

இறப்பை அரசியலாக்கும் விடுதலை சிறுத்தை கட்சி: “எங்களுக்கு கொடுத்த வாக்குறுதியை மீறி விட்டீர்கள், பேச்சை வார்த்தை நடக்கும் போது, எப்படி பிரேத பரிசோதனை செய்தீர்கள்’ என விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். “இளவரசன் கொலையில், ரயிலில் அடிபட்டால், இன்ஜின் டிரைவர் ஏன் புகார் தெரிவிக்கவில்லை. வி.ஏ.ஓ., மூலம் புகார் தெரிவிக்க வேண்டிய அவசியம் என்ன? மாவட்டம் முழுவதும், 144 தடை உத்தரவை விலக்கி கொள்ள வேண்டும். இளவரசன் இரங்கல் கூட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவன் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும். நாங்கள் கூறும் இரு டாக்டர்கள் முன்னிலையில், மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். அப்போது தான் இளவரசன் உடலை எடுத்து செல்வோம்’ என, கூறி இளவரசன் உடலை வாங்க உறவினர்கள் மறுத்தனர். காலை, 7 மணி முதல், 11 மணி வரை, நான்கு மணி நேரம் இளவரசன் உடல் பிரேத பரிசோதனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. நேற்று மதியம், 1 மணிக்கு மேலும் இளவரசன் உடலை வாங்க மறுத்ததால், அரசு மருத்துவமனை முன் பெரும் பதட்டமும், பரபரப்பும் இருந்தது.

புதிய தமிழக கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி இளவரசனின் மரணம் குறித்து சி.பி..  விசாரணை நடத்த வேண்டும் என்கிறார்: இளவரசன் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று விடுதலைக்கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்[10]. புதுச்சேரியில் செய்தியானர்களிடம் பேசிய அவர் இளவரசனின் மரணத்தில் மர்மம் உள்ளதாக தெரிவித்துள்ளார். திவ்யா, அவரது தாயார் தேன்மொழி மற்றும் இளவரசனின் குடும்பத்திற்கு மிரட்டல்கள் வருவதாக கூறிய திருமாவளவன் அவர்களுக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழக கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி இளவரசனின் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். கௌரவ கொலைகளை தடுக்க தனிச்சட்டம் கொண்டுவர வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். இதனிடையே இளவரசனின் மரணம் குறித்து நீதிமன்றம் விசாரணை நடத்த கோரி கும்பகோணத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தை கட்சிகள் 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அவர்களை போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோவில் பதிவு: தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், இளவரசனின் உடலை டாக்டர்கள் தண்டர் ஷிப், சதீஸ்குமார், பிரவின்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையில் சென்னை ஐகோர்ட்டில் திவ்யாவுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், திவ்யாவை கோர்ட்டுக்கு அழைத்து வரமுடியுமா? இது சாத்தியமா என்று கேட்டனர். பாதுகாப்பு பிரச்னை ஏற்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து வரும் திங்கட்கிழமைக்கு வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர், இது வரை திவ்யா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும்[11], மேலும் திவ்யா மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளாரா, அவருக்கு கவுன்சிலிங் எதுவும் நடத்த வேண்டுமா என்றும் திங்கட்கிழமை கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். கணவரை இழந்த மனைவி, காதலன்-தந்தை இருவரையும் இழந்த மகள் ஏன்ன்றிருக்கும் இருவரின் நிலை பரிதாபகரமானது ஆகும்.

கௌரவ கொலைகளை தடுக்க தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும்: தமிழக கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கௌரவ கொலைகளை தடுக்க தனிச்சட்டம் கொண்டுவர வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளது வியப்பாக உள்ளது. “கௌரவ கொலை” என்பது உயர்ந்த சாதி பெண், தாழ்ந்த ஜாதி ஆணை காதலித்தால், ஓடிப்போனால், ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டால், அப்பெண்ணின் உறவினர்கள் தங்களது  குலகௌரவத்தைக் காத்துக் கொள்ள  அப்பெண்ணைக் கொன்று விடுவர்[12]. ஆனால், அம்மாதிரி தமிழகத்தில் நடப்பதாக தெரியவில்லை. மாறாக காதலிக்கும் ஆண் அவதிக்குள்ளாகிறான். இந்த விஷயத்தில் அவ்வாறு தான் நடந்துள்ளது. சங்கத்தமிழ் நாகரிகத்தின், கலாச்சாரத்தின் படி காதலன் மடலேறி இறந்தானா, அல்லது கோழையாக தற்கொலை செய்து கொண்டானா என்றெல்லாம் விவாதிப்பது சரியாக இருக்காது.

வேதபிரகாஷ்

© 05-07-2013


[2] சுயமரியாதை திருமணங்கள் சட்டப்படி செல்லாது என்ற நிலை வந்தபோது, இந்து திருமணச் சட்டத்தில் திருத்தம் செய்து கொண்டு, பகுத்தறிவுவாதிகள் “இந்துக்களாகி” மரியாதையைப் பெற்றனர். அதேப்போல, விவாக ரத்துப் பெற்று, விடுதலை அடைந்தனர் போலும்.

[3] இதே நேரத்தில் தான் தமிழகம் முழுவதும் தமுமுக முஸ்லிம்களின் இடவொதிக்கீட்டை 3.5%லிருந்து உயர்ந்தப்பட வேண்டும் என்று போஸ்டர்கள் ஒட்டியுள்ளது. இது “காக்காய் உட்கார பனம்பழம் விழுந்த கதையா” அல்லது தீர்மானமாக ஏற்பட்டுள்ள சேர்வினையா என்று தெரியவில்லை.

[4] கிருத்துவர்கள், முஸ்லிம்கள் தங்களை தலித்-கிருத்துவர்கள், தலித்-முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொண்டு ஏமாற்ரி வருவது, அம்பேத்கரையே ஏமாற்றுவதற்கு ஒப்பாகும். அதைவிட கேவலம் என்னவென்றால் அவர்களது கடவுளர்களையும் ஏமாற்றி வருவதுதான்.

[5] The reason for the tension in the area stems from politics. The PMK is quite a mercurial party, it was with the DMK-led coalition in the state until walking out from the tie-up after the AIADMK swept elections in 2011. With the 2014 Lok Sabha polls ahead, the party will be back in sought-after category. Therefore, the upper Hand may rest with the Vanniyars. Read more at: http://indiatoday.intoday.in/story/love-and-caste-in-the-time-of-coalitions-in-tamil-nadu/1/287045.html

[7]  CPI(M) Party’s state unit secretary G Ramakrishnan said the girl’s decision to part ways with her husband should be seen as having been taken based on the “casteist/social compulsions” and that the death had posed many questions. MDMK leader Vaiko also expressed shock over Ilavarasan’s death and said that his wife Divya’s decision to end her relationship with him was prompted by the strains caused between two communities following their marriage. He demanded a judicial probe into the death and steps to protect the girl. BJP state unit president Pon.Radhakrishnan said that government should convene a meeting of heads of various communities to ensure social harmony and sought a probe into Ilavarasan’s death.

http://www.indianexpress.com/news/parties-express-grief-and-demand-probe-into-dalit-boys-death/1138084/

[12] இது வடவிந்தியாவில் அதிகமாக நடந்து வருகின்றன. ஹரியானா போன்ற மாநிலங்களில் அரசியல் தலைவர்களே இதனை ஆதரித்து வெளிப்படையாக கருத்துக்களைச் சொல்லியுள்ளனர். ஓட்டுவங்கி அரசியலுக்காக காங்கிரஸும் இதனை ஆதரித்து வருகிறது.