Posts Tagged ‘அனிதா’

தெரிந்த அனிதாவும், தெரியாத அனிதாக்களும்: திராவிட சித்தாந்திகள் எவ்வாறு பிரச்சினைகளை அணுகுகின்றனர், எதிர்க்கின்றனர் மற்றும் மறுக்கின்றனர்! (2)

செப்ரெம்பர்12, 2017

தெரிந்த அனிதாவும், தெரியாத அனிதாக்களும்: திராவிட சித்தாந்திகள் எவ்வாறு பிரச்சினைகளை அணுகுகின்றனர், எதிர்க்கின்றனர் மற்றும் மறுக்கின்றனர்! (2)

Girl raped- Arni doctor-Dinakaran

மருத்துவரும் தனது தொழில் தர்மத்தை மீறி கற்பழித்தது: இந்த நிலையில், ஆரணி அரசு ஆஸ்பத்திரியில் மயக்க மருந்து நிபுணராக இருக்கும் டாக்டர் ஜெயபிரகாஷ் மற்றும் வார்டு உதவியாளர் பாண்டியன் ஆகிய 2 பேரும், சுரேஷ் மூலம் சித்ராவின் வீட்டிற்கு வந்து மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தனர்[1]. ஆசை இணங்க மறுத்த மாணவிக்கு, போதை மருந்து ஊசி மூலம் செலுத்தப்பட்டு கற்பழித்துள்ளனர். இதைத் தொடர்ந்து தான், அந்த கொடூர கும்பலிடம் இருந்து மாணவி தப்பித்து மீண்டும் கோயம்பேட்டில் உள்ள தனது வீட்டிற்கு சென்றது தெரியவந்தது. இதுகுறித்து, மாணவியின் தாய், சென்னை கமி‌ஷனர் அலுவலகத்தில் 07-09-2017 அன்று புகார் அளித்தார். புகாரின் பேரில், கோயம்பேட்டு போலீசார், நள்ளிரவு ஆரணிக்கு வந்து, டாக்டர் ஜெயபிரகாஷ் மற்றும் உதவியாளர் பாண்டியனை கைது செய்து சென்னைக்கு அழைத்துச் சென்றனர்[2].  மருத்துவ படிப்பிற்கு சீட் கிடைக்கவில்லை என்ற பிரச்சினையில் ஆர்பாட்டம் நடத்துகிறார்கள், ஆனால், மனிதத்தன்மையே இல்லாமல், ஒரு மாணவியை, இவ்வாறு சீரழித்த செய்தி, அதே நேரத்தில் வந்தாலும், உருத்தவில்லை.

Girl raped- Arni doctor-Tamil Hindu

மருத்துவமனையில் சோதனை, விசாரணை: இதற்கிடையில், மாவட்ட மருத்துவ சுகாதார பணிகள் இணை இயக்குநர் நவநீதம் 08-09-2017 அன்று ஆரணி அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு பணிபுரியும் டாக்டர்கள், நர்ஸ் உள்ளிட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டார்[3]. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அவர்கள் மீது குற்றம் உறுதிப்படுத்தப்பட்டால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்[4]. போலீஸ் வருவதையறிந்து மாணவியை விபசாரத்தில் ஈடுபடுத்திய அவரது உறவினர் சித்ரா மற்றும் சுரேஷ் ஆகிய 2 பேரும் தலைமறைவாகிவிட்டனர்[5]. அவர்களை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். அவர்கள் பிடிபட்டால், சென்னை மாணவியை போலவே, வேறு யாராவது சிறுமிகள் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனரா? என்கிற அதிர்ச்சிகரமான தகவல் வெளிவரக்கூடும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது[6].

Arni doctor arrested for raping Koyambedu girl-09-09-2017

தமிழகத்தில் ஊழலை ஒழிப்பேன் ஆர்பாட்டம், இல்லையே ஏன்?: போராட்டம் இப்படி பிரச்சினைகளை அலசி பார்க்கும் போது, உள்ளே இருப்பது ஊழல் தான் என்று தெரியவரும். 1960களிலிருந்து, தமிழகத்தைப் பொறுத்த வரையிலும், ஊழல் என்பது சாதாரணமான விசயமாகி விட்டது. சென்னை கார்பரேஷன், தாலுகா ஆபீஸ், என்று எலா துறைகளிலும், செய்ய வேண்டிய வேலைக்கே காசு கொடுத்தால் தான் வேலை நடக்கும் என்ற நிலை உள்ளது. அரிசி ஊழல், கோதுமை ஊழல் என்றதெல்லாம் கருணாநிதி ஆட்சியில் நாறியது, நீதிமன்றங்களிலும் தீர்ப்புகள் வந்தன. சர்க்காரியா கமிஷன், திமுக ஊழலை விஞ்ஞான ரீதியில், பக்குவமாக செய்ய வல்லது என்று எடுத்துக் காட்டியது. மற்ற எல்லாவற்றிற்கும் கொடி பிடித்து, பதாகை ஏந்தி, சாலை மறியல் செய்து ஆர்பாட்டம், போராட்டம் செய்யும் கூட்டங்கள் ஊழல் என்று வரும்போது அமைதியாக இருக்கின்றன. இப்பொழுது கூட, அதிமுக ஊழல் என்று பேசுவதோடு சரி. ஆனால், தமிழகத்தில் ஊழலை ஒழிப்பேன் என்று எவனும் போராட்டம் நடத்த மாட்டேன் என்கிறானே ஏன்? கருணாநிதியில் கோதுமை ஊழல் பயமுருத்துகிறதா? விஞ்ஞான முறையில் ஊழல் செய்த வித்தகர்கள் “டாக்டர்” என்ற பெயரில் அலைகிறார்கள். ஆனால், எம்.பி.பி.எஸ்-டாக்டர் மட்டும் ஓசியில் வருமா?

three-medical-students-commit-suicide

ஊழல் பணத்தை முதலீடு செய்தாலும், லாபத்தை எதிர்பார்ப்பார்களே?: கல்வித்துறையில் அரசியல்வாதிகள், பாவகாரியங்களில் சம்பாதித்தப் பணத்தை முதலீடு செய்து நுழைந்த போதிலேயே அதன் தரம் குறைந்து விட்டது. கல்வியை வியாபாரமாக்கி, ஊழலாக்கி, சூதாட்டமாக்கி பணம் கொழிக்கும் களமாக மாற்றியப்பிறகு அதன் தன்மையே கெட்டு சீரழிந்து விட்டது. அரசியல்வாதிகள் மட்டுமல்லாது, கள்ளப்பணம் / கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள், கடத்தல்காரர்கள், கிரிமினல்கள் என்று எல்லோருமே முதலீடு செய்து, ஒவ்வொரு கல்லூரிக்கு, நிகர்நிலை பல்கலைக்கழகத்திற்கு சொந்தக்காரர், தலைவர், சேர்மேன் என்றாகி விட்டனர். 70 வருடங்களாக சென்னையில் வாழ்ந்து கொண்டிருக்கும் பலருக்கு இவர்களின் பின்னணி, யோக்கியதை எல்லாமே தெரிந்திருக்கிறது. மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் கொடுப்பதிலேயே ஊழல் ஆரம்பிக்கிறது. 2010ல் கேதன் தேசாய் கைது செய்யப்பட்டபோதே பல விவரங்கள் வெளிவந்தன[7]. இந்திய மருத்துவக் கவுன்சிலின் தலைவராக கேதன் தேசாய் பதவிக்காலத்தில், 40க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் 2,000 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியது[8].

mbbs-medical-college-money-spinning-industry

பணம் இருந்தால் டாக்டராகலாம்: 80-90% மார்க்குகள் வாங்கினால் மருத்துவக் கல்லூரியில், ஏன் இஞ்சினியரிங் கல்லுரியில் கூட சீட் கிடைக்காது. அதாவது 4-7 மற்றும் 40-70 லட்சங்கள் முறையே கொடுக்காமல் கிடைக்காது. ஆனால், படிக்கக் கூடிய மாணவர்கள், மருத்துவராக வேண்டும் என்று ஆர்வம், சேவை செய்ய வேண்டும் என்ற கொள்கைக் கொண்டவர்களுக்கு சீட் கிடையாது. ஒருவேளை 99% வாங்கி சேர்ந்தால் கற்பழித்து கொலை கூட செய்யப்படலாம். அப்படி ஒரு திரைப்படத்தையே எடுத்து விட்டார்கள்[9]. ஆகவே, பணமுள்ளவர்கள் லட்சங்கள் கொடுத்து டாக்டராகி மக்களைக் கொடுமைப் படுத்துதுவர். ஈவு-இரக்கமில்லாமல் பணத்தை உறிஞ்சுவர். பிணங்களையும் வைத்துக் கொண்டு வியாபாரம் செய்வர். இப்படித்தான் மருத்துவர்கள் / டாக்டர்கள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். பணம் இருப்பதனால், கோடிகளைக் கொட்டி மருத்துவமனைகளை திறந்து வைக்கிறார்கள். அதில் மற்ற மருத்துவம் படித்தவர்களை வஏலைக்கு அமர்த்திக் கொண்டு வியாபாரம் செய்து வருகின்றனர். மருத்துவர்கள் மருத்துவ வேலை செய்யாமல், வியாபார ரீதியில் என்ன செய்ய வேண்டும், சட்டப்படி எப்படி தப்பித்துக் கொள்ள வேண்டும் என்று பாடம் சொல்லிக் கொடுக்கப்பட்டபிறகு வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள். இவர்களிடம் மருத்துவன் என்ன கிடைக்கும்?

mbbs-in-tamilnadu-rate-fixed-in-colleges

குழப்ப அரசியலில் உழப்பப் பார்க்கும் சந்தர்ப்பவாதிகள்: ஜெயலலிதா இறந்த பிறகு, அதிமுகவில் பிரிவுகள் ஏற்பட்டு, ஆட்சி, அதிகாரம், பணம்…முதலியவற்றிற்காக, சசிகலா மற்றவர் போட்டி போடும் நிலையில், திமுக தனது பண பலத்தினால், குழப்பத்தை உண்டாக்க முயன்று வருகிறது. டி.டி.வி.தினகரனுடன் கூட்டு சேர்ந்து, ஆட்சி அமைக்கவும் ஆசை இருக்கிறது. அதே நேரத்தில், நான்கு ஆண்டு ஆட்சியை யாரும் விட்டுத் தரவும் முடியாத நிலையுள்ளது. ஆக, ஆட்சியைக் களைத்தால், செலவு எல்லோருக்கும் தான். அந்நிலையில் எல்லோருமே ஒழுங்கு மாதிரி, கிடைக்கும் எல்லாவற்றையும் பிரச்சினையாக்கி, குளிர்காய பார்க்கின்றனர். அனிதாக்கள் இறந்து கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால், உண்மையாக யாரும் அத்தகையவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இல்லை. சீட்டை விற்று, லட்சங்களை, கோடிகளை அள்ள வேண்டும் என்ற பேராசை தான் உள்ளது. இப்பொழுது சினிமா நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் முதலியோர் எல்லாம், இப்பிரச்சினைகளில் நுழைந்து, குழப்பத்தை அதிகரித்து வருகிறார்கள். கருப்புப் பணத்தின் பிறப்பிடங்களில் முக்கியமாக இருப்பதும் தெரிந்த விசயமே. திராவிட அரசியலைப் பொறுத்த வரையில், அரசியல்-சினிமா சேர்ந்திருந்தாலும், இப்பொழுதையவர் திடீரென்று தங்களது ஆர்வத்தைக் காட்டி வருவதால், மக்கள் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

© வேதபிரகாஷ்

11-09-2017

mbbs-medical-courses-fees-rate-fixed-in-colleges

[1] மின்முரசு, மயக்க ஊசிபோட்டு சிறுமியை சீரழித்த ஆரணி அரசு டாக்டர், உதவியாளர் அதிரடி கைது!, செப்டம்பர்.9, 2017.

[2]https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/108155/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%8A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88/

[2] http://www.dinamalar.com/news_detail.asp?id=1851244

[3] தினகரன், ஆரணியில் மயக்க ஊசி போட்டு கொடுமை சென்னை சிறுமி பலாத்காரம் அரசு டாக்டர், உதவியாளர் கைது, 2017-09-10@ 00:13:38

[4]  http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=334338

 

[5] தினமலர், சிறுமியை சீரழித்த காமுகர்கள் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு, பதிவு செய்த நாள். செப்டம்பர்.8, 2017. 22.44.

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1851244

[7] https://academicdegradation.wordpress.com/2010/04/24/%E0%AE%B0%E0%AF%82-2-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%95/

தினமலர்,  கேதன் தேசாய் மீது ரூ.2,000 கோடி ஊழல் புகார், ஏப்ரல் 25,2010,00:00  IST.

[8] http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=7320

[9] அதில் ஒரு பிராமணப் பெண் அதிகமான மதிப்பெண்கள் எடுத்து மருத்துவ படிப்பில் சேர்ந்ததாகவும், மறுத்ததால் கற்பழித்துக் கொலை செய்யப்படுவதாகவும் காண்பிக்கப் படுகிறது.

தெரிந்த அனிதாவும், தெரியாத அனிதாக்களும்: திராவிட சித்தாந்திகள் எவ்வாறு பிரச்சினைகளை அணுகுகின்றனர், எதிர்க்கின்றனர் மற்றும் மறுக்கின்றனர்! (1)

செப்ரெம்பர்11, 2017

தெரிந்த அனிதாவும், தெரியாத அனிதாக்களும்: திராவிட சித்தாந்திகள் எவ்வாறு பிரச்சினைகளை அணுகுகின்றனர், எதிர்க்கின்றனர் மற்றும் மறுக்கின்றனர்! (1)

Anita suicide - NEET protest- politicized

தமிழகம்  பெண்மையைப் போற்றுகிறதா, இல்லையா?: தமிழகத்தில் பெண்மை பலவழிகளில் சீரழிக்கப் பட்டு வருகின்றது. திராவிடத்துவ கோணத்தில் பார்க்கும் போது, 1960களிலிலிருந்து, ஆட்சியாளர்களுள் பெரும்பாலோர், பலதார திருமணம், மணமுறிவு, சேர்ந்து வாழ்தல் போன்ற நிலைகளில் இருந்து வந்துள்ளதால், அதைப் பற்றி அலசுவதே தர்மசங்கடமான நிலை ஏற்படுகிறது. மேலும் உள்ள, மற்றா விவகாரங்களை அலவும் முடியாத நிலை உள்ளது. பெண்ணியப் போராளிகள், சமூகப் போராளிகள், சாமானியர்கள் போன்றோர் எல்லாம், தீடீரென்று தோன்றி, சில குறிப்பிட்ட விசயங்களுக்கு ஆர்பாட்டம் செய்து மறைந்து விடுகின்றனர். தற்கொலை என்றால் கூட, ஏதோ ஒருவிதத்தில் பாரபட்சத்துடன் தான் அணுகி செய்தியாக்குகின்றனர் அல்லது மறந்து விடுகின்றனர். அனிதா தற்கொலை என்பதற்கு எல்லோரும் குதித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அதே நேரத்தில் நடந்துள்ள மற்ற தற்கொலைகள் பற்றி  கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். சென்னையைச் சேர்ந்த மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டு, பலருக்கு இரையாக்கப்பட்ட செய்தி, ஏதோ சாதாரணமாக பாவிக்கப் பட்டு, அமைதியாக கவனிக்கின்றனர் அல்லது மறைக்க முயல்கின்றனர். கடந்த ஒரு வாரமாக 01-09-2017 அன்று தற்கொலை செய்து கொண்ட அனிதா பிரச்சினை விவாதத்தில் உள்ளது[1]. பட்டியல் இனத்தை சேர்ந்த பெண் என்பதால், அதில் பொதுவாக மத்திய-மாநில அரசுகளைக் குற்றஞ்சாட்டி பேச்சுகள்இருக்கின்றன[2]. பிரச்சினை படிப்பை விட்டு, அரசியலாக்கப்பட்டு, சித்தாந்த குழப்பங்களில் சேர்த்துள்ளனர்[3]. அதே நேரத்தில், மற்ற தற்கொலைகளை கண்டுகொள்ளவில்லை.

Anita suicide - NEET protest- politicized-actors too

மருத்துவப் படிப்பு, பொது நுழைவு தேர்வு, ஊழல் அற்ற தீர்வுகள்: தமிழகத்தைப் பொறுத்த வரையில், தனியார் மயமாக்கப் பட்டப் பிறகு, மருத்துவம், பொறியியல் படிப்புகள் லட்சங்களுக்கு விற்கப்படுகின்றன என்பது தெரிந்த விசயமாக இருக்கிறது. மருத்துவம், பொறியியல் கல்லூரிகள், மருத்துவ மனைகள் எல்லாமே வியாபார ரீதியில் நடத்தப் பட்டு வருவதால், அரசியல்வாதிகள், அவர்களது பினாமிகள், மற்றவர் தங்களது கருப்புப் பணத்தைக் கொட்டி, வெள்ளையாக்கும் தளமாக மாற்றிக் கொண்டு விட்டனர். அதனால், பணக்காரர்களைப் பொறுத்த வரையில், சீட் வாங்குவதில் எந்த பிரச்சினையும் இல்லை. நல்ல மதிப்பெண் இருந்தாலும், கட்டணம் கட்ட வழியில்லை என்று சேராத மாணவ-மாணவியரும் இருக்கத்தான் செய்கின்றனர். அந்நிலையில் மத்தியதர-ஏழைமாணவ-மாணவியருக்கு, இது கனவாகவே மாறிவிட்டது. மருத்துவப் படிப்பிற்கு நுழைவு தேர்வு வைப்பது அல்லது 10+2 மதிப்பெண் வைத்து, தேர்வு செய்வது என்ற நிலை தமிழகத்தில் இருந்து வந்துள்ளது. அந்நிலையில், நீட் வந்தபோது, தங்களது வியாபாரம் பாதிப்பதால், பிரச்சினையை ஏற்படுத்துகின்றனர். மருத்துவ கண்காட்சி என்று நடத்தும் போது, அவர்கள் எப்படி மாணவ-மாணவியருக்கு வலைவீசுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். அந்நிலையில் தான், தங்கள் சீட்டுகளை விற்கமுடியாதே என்று சம்பந்தப் பட்டவர்கள், நீட் வருவதை எதிர்க்கின்றனர், பிரச்சினையைஉக் குழப்புகின்றனர். இனி அதே நேரத்தில், எவ்வாறு ஒரு மாணவி சீரழிக்கப்பட்டாள் என்பதை பார்ப்போம். அதில் ஒரு மருத்துவரும் உள்ளார் என்பது, கேவலம்.

Girl raped by many - 09_09_2017_013_007

காணாமல் போன மாணவி, சீரழிந்து திரும்பி வந்த பரிதாபம்: சென்னை கோயம்பேடு பகுதியை சேர்ந்த 14 / 16 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இவருடைய தாய், சென்னை மாநகராட்சியில் துப்புரவு வேலை செய்கிறார் என்கிறது மாலைமலர். வங்கியில் துப்புரவு பணியாளராக உள்ளார், என்கிறது தினகரன். இதெல்லாம் ஊடகங்களுக்கே கைவந்த கலை. இவர்களுக்கு 2 மகள்கள். ராணியின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இந்த நிலையில், கடந்த ஒரு மாதம் முன்பு (ஆகஸ்ட் 2017) அந்த மாணவி, வீட்டில் இருந்து திடீரென மாயமானார்[4]. அவரது தாய் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். மாணவியை கண்டு பிடிக்க முடியவில்லை. இதையடுத்து, கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிந்து மாணவியை தேடி வந்தனர்[5]. இந்த நிலையில், மாயமான மாணவி ஓரிரு நாட்களுக்கு முன்பு வீடு திரும்பினார். குடும்பத்துக்கு தெரிந்த நபர் ஒருவர் /  சித்ராவின் சகோதரர் குமார்  மீட்டு, சிறுமியை கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டிற்கு அழைத்து வந்து ராணியிடம் ஒப்படைத்துள்ளார். சுரேஷ், சிறுமியை பலாத்காரம் ெசய்துள்ளார். மேலும் அவரை பல இடங்களுக்கு அழைத்து சென்று சுரேஷ் தனது நண்பர்களுடன் நெருக்கமாக இருக்க வைத்துள்ளார்[6]. அதேபோல், ஆரணி அரசு மருத்துவமனை டாக்டர் ஜெயபிரகாசம் என்பவரும், சிறுமிக்கு மயக்க ஊசி போட்டு பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இதுகுறித்து வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் இந்த சம்பவத்துக்கு மருத்துவ உதவியாளர் பாண்டியன் உதவியாக இருந்ததாகவும் சிறுமி கூறினார்[7].

Arni doctor arrested and investigated

மருத்துவ பரிசோதனையில் மாணவி சீரழிக்கப்பட்டது தெரிய வந்தது: மாணவியின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது. வயிறு வலியால் துடி துடித்தார். தாய், அவரை ஆஸ்பத்திரிக்கு கூட்டி சென்றார்[8]. மருத்துவ பரிசோதனையில், மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. தாய் அதிர்ந்து போனார்[9]. விசாரணையில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பையூர் எம்.ஜி.ஆர். நகரில் மாணவியின் தாய்க்கு உறவினரான சித்ரா என்கிற பெண் வசித்து வருகிறார். மாயமான போது, ஆரணியில் உள்ள உறவினர் சித்ராவுக்கு மாணவி போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அவர், வேறு எங்கும் செல்ல வேண்டாம். ஆரணி வா… ஜவுளிக்கடையில் வேலை வாங்கி தருகிறேன். என் வீட்டிலேயே தங்கி வேலை செய் என்று ஆசை வார்த்தை கூறி அழைத்தார். இதை நம்பி, மாணவியும் ஆரணிக்கு சென்றார். மாணவியை, சித்ரா தனது வீட்டில் தங்க வைத்தார். சித்ராவிற்கும், ஆரணி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்படும் உடல்களை, வாடகைக்கு தனியார் வாகனம் மூலம் கொண்டு சென்று உறவினர்களிடம் ஒப்படைக்கும் வேலை செய்யும் சுரேஷூக்கும் தொடர்புள்ளது. சித்ரா, சுரேஷ் உதவியுடன், மாணவியை கட்டாயப்படுத்தி விபசாரத்தில் தள்ளினார். மாணவியை வெளியே தப்பித்து செல்ல விடாமல் வீட்டிலேயே அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்து வந்தனர்.

© வேதபிரகாஷ்

11-09-2017

Arni doctor arrested and investigated-NEET

[1] http://www.business-standard.com/article/current-affairs/tamil-nadu-topper-anita-who-fought-against-neet-commits-suicide-117090100836_1.html

[2] http://indiatoday.intoday.in/story/anitha-suicide-neet-tamil-nadu-pa-ranjith-ariyalur/1/1039442.html

[3] http://www.firstpost.com/india/tamil-nadu-dalith-girl-anitha-who-spearheaded-fight-against-neet-in-supreme-court-commits-suicide-3998591.html

[4] மாலைமலர், சென்னை மாணவி கற்பழிப்பு: ஆரணி அரசு ஆஸ்பத்திரி டாக்டர்உதவியாளர் கைது, பதிவு: செப்டம்பர் 09, 2017 10:24.

[5]  http://www.maalaimalar.com/News/TopNews/2017/09/09102458/1107087/Chennai-student-molested-arani-government-hospital.vpf

[6] ஜெய-டிவி-செய்திகள், மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக்கூறி ஆரணி அரசு மருத்துவமனை மருத்துவர் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட 2 பேரை சென்னை காவல்துறையினர் கைது செய்தனர், Sep 9 2017 8:54PM

[7] http://www.jayanewslive.com/tamilnadu/tamilnadu_74269.html

[8] தமிழ்.முரசு, ஆரணியில் மயக்க ஊசி போட்டு சிறுமி பலாத்காரம் அரசு டாக்டர் கைது: மருத்துவ உதவியாளர் சிக்கினார், 09090-2017. 3.54.29 PM.

[9] http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=109682