Posts Tagged ‘கமிஷன்’

தமிழகத்தில் திருமணப் பதிவு சட்டம் கட்டாயமாக்கப்பட்ட நிலை, போலி திருமணங்கள் அதிகமாக நடப்பது, பின்னணி என்ன? அவை பதிவான திருமணங்களா – இல்லையா? (2)

செப்ரெம்பர்29, 2022

தமிழகத்தில் திருமணப்பதிவு சட்டம் கட்டாயமாக்கப்பட்ட நிலை, போலி திருமணங்கள் அதிகமாக நடப்பது, பின்னணி என்ன? அவை பதிவான திருமணங்களா – இல்லையா? (2)

ஒரு ஆண் பல திருமணங்கள் செய்தது: சென்னையில் பெண் மருத்துவ அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவண்ணாமலையைச் சேர்ந்த வித்யூத் என்ற சக்கரவர்த்தியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்[1]. பெண் கொடுத்த புகாரில், திருமண தகவல் இணையதளம் மூலமாக அறிமுகமாகி பழகியதாகவும், வாஷிங்டனில் மருத்துவராக இருப்பதாகக் கூறி மோசடி செய்ததாக, திருவண்ணாமலையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்யப் போவதாகவும் அதற்காக பண உதவி வேண்டும் எனக் கேட்டு சுமார் 7 கோடி ரூபாய் அளவிற்கு பணத்தை ஏமாற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது[2]. பாதிக்கப்பட்ட பெண்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றையும் தொடர்ந்திருந்தனர்[3]. உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் தனிப்படை அமைத்து சக்கரவர்த்தியை போலீசார் தேடி வந்தநிலையில், லால்குடியில் வைத்து கைது செய்தனர்[4]. தமிழகம் முழுவதும் 9-க்கும் மேற்பட்ட பெண்களை திருமண தகவல் இணையதளம் மூலமாக ஏமாற்றி சுமார் 9 கோடி ரூபாய் அளவில் மோசடி செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது. மேலும்  திருமணமாகாத மருத்துவம், பொறியியல் பட்டதாரி பெண்களையும் பணக்கார விதவை பெண்களையும் குறிவைத்து பண மோசடி செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

கோடீஸ்வரர் போல நடித்து 9 பெண்களை ஏமாற்றிய நபர் கைது: கோவையில் 9 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து, அவர்களிடமிருந்து பண மோசடி செய்த பலே நபர் கைது செய்யப்பட்டார்[5]. இவருக்கு உடந்தையாக இருந்த திருமண தகவல் மையத்தை சேர்ந்த இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்[6]. திருமண தகவல் மையம் உதவியோடு நடைபெற்ற இந்த மோசடி கோவை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதிய நடைமுறைகளையும் பயன்படுத்தி இவ்வாறு ஏமாற்று வேலைகள் நடப்பது இதனால் அம்பலமாகியுள்ளது. கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்தவர் புருஷோத்தமன். தன்னை தொழிலதிபர் என கூறி ஒருவருக்கு தெரியாமல் மற்றொருவர் என சுமார் 9 பெண்களை மணந்து அவர்களிடம் இருந்து பணம் பறித்து பிறகு எஸ்கேப் ஆகியுள்ளார்.  கோவையில் உள்ள திருமண தகவல் மையத்தில்தான் இவர் தனது பெயரை பதிவு செய்திருந்தார். அதன் வழியாகவே பெண் தேடி வந்துள்ளார். இதேபோலத்தான், கோவை பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த வசதி வாய்ப்புள்ள ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார் புருஷோத்தமன். பல தொழில்கள் இருப்பதாக ஏமாற்றியதன் விளைவாக அந்த பெண்ணை அவரது பெற்றோர் இவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். ஆனால் திருமணமாகி சில மாதங்களில், தொழிலில் நஷ்டம் என்று கூறி 3 கோடி ருபாயை மாமனார் வீட்டிலிருந்து பெற்ற புருஷோத்தமன் பிறகு தலைமறைவாகிவிட்டாராம்.

ஓரு பெண் பல திருமணங்கள் செய்தது  கோர்ட்டுக்குச் சென்ற மோசடி திருமண வழக்கு: ஹைகோர்ட்டை நாடிய பெண் பாதிக்கப்பட்ட அந்த பெண், புருஷோத்தமன் மீதும் திருமண தகவல் மையத்தை சேர்ந்த இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் கோவை போத்தனூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த ஹைகோர்ட் உத்தரவிட்டது. சிக்கினர் புருஷோத்தமன் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. திருமண தகவல் மையம் மீது கூட்டுசதி வழக்கு பதிவு செய்யப்பட்டது. மொத்தம் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கோவை, ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு வழக்கு மாற்றப்பட்ட நிலையில், புருஷோத்தமன் மற்றும் திருமண தகவல் மையத்தை சேர்ந்த கணவன் மற்றும் மனைவி ஆகிய மூவரையும் போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.

ஆறு திருமணங்கள் செய்து வைத்த திருமண புரோகர்[7]: ஏற்கெனவே கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சௌமியா என்கிற சபரி, மூன்று ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்துவிட்டு, நான்காவதாக ஓர் ஆட்டோ டிரைவரைத் திருமணம் செய்ய முயன்றபோது கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரால் கைதுசெய்யப்பட்டார். அந்தப் பரபர சம்பவத்தின் சூடு தணிவதற்குள், அதே பாணியில் பலரைத் திருமணம் செய்து, அவர்களிடம் பணம் பறித்த சந்தியா என்ற பெண் ஒருவர் கைதுசெய்யப் பட்டிருக்கிறார்[8]. சந்தியா தனபாலை கல்யாணம் செய்து கொண்டார்[9]. திருமணத்தை முடித்துவிட்டு சந்தியாவுடன் வந்தவர்கள், பெண் புரோக்கர் பாலமுருகன் ஆகியோர் திருமண கமிஷன் தொகையாக ரூ.1,50,000-ஐ வாங்கிக்கொண்டு சென்றுவிட்டனர்[10].  ஆனால், முதல் இரவிலேயே அப்பெண் மாயமாகி விட்டாள். இன்னொரு திருமணத்திற்கு தயாரானாள், விசயம் அறிந்த, அந்த நபர் மூலமாக திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவிக்க வைத்து, மதுரையைச் சேர்ந்த பெண் புரோக்கர் தனலட்சுமியிடம் (45) பேசி, மணமகனின் போட்டோவை புரோக்கரிடம் கொடுத்திருக்கின்றனர்[11]. அதற்கு மணமகளுக்கு மாப்பிள்ளையைப் பிடித்திருக்கிறது எனப் பேசி, போன் மூலமே முடிவு செய்திருக்கிறார் அந்தப் பெண் புரோக்கர். விசாரணையில், மதுரையைச் சேர்ந்த இவர்கள் இதுவரை சந்தியாவுக்கு ஆறு திருமணம் செய்துவைத்திருக்கின்றனர்[12].

போலி கல்யாணமா, புதுவித விபச்சாரமா, செக்ஸ் ரீதியிலான கொள்ளையா?: கைதான சந்தியா போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது[13]:- எனக்கு 5 வயதில் ஒரு மகளும், 4 வயதில் ஒரு மகனும் உள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த திருமண புரோக்கர் பாலமுருகன்தான் என்னை அடித்து மிரட்டி திருமணம் செய்து வைக்க அழைத்து வந்தார்[14]. 6-க்கும் மேற்பட்ட திருமணம் செய்துள்ளேன். திருமணம் முடிந்ததும் என்னை அங்கிருந்து தப்பித்து வருமாறு கூறி காரில் அழைத்து வந்துவிடுவார்[15]. பின்னர் கொண்டு வந்த பொருட்களை பிடுங்கி கொண்டு சிறிய‌ தொகையை மட்டும் தருவார். பின்னர் அதையும் மிரட்டி வாங்கி கொள்வார்[16]. அவரது கூட்டாளிகளான ரோஷினி, மாரிமுத்து ஆகியோர் என்னை நிர்வாணப்படுத்தி போட்டோ, ஆபாச வீடியோக்களை எடுத்து வைத்து கொண்டு மோசடி திருமணங்களுக்கு சம்மதிக்காவிட்டால், அவற்றை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என மிரட்டினர்[17]. அதனால்தான் நான் இந்த மோசடி திருமணங்களுக்கு சம்மதித்தேன். என்னை போல, மேலும் 4 பெண்கள் இவர்களிடம் சிக்கி உள்ளனர். மோசடி திருமணத்தில் எவ்வளவு பணம் கிடைத்தாலும் அந்த பணம் முழுவதையும், அவர்களே எடுத்து கொள்வார்கள். எங்களுக்கு கொஞ்சம் பணம் மட்டுமே தருவார்கள்.

ஏமாற்ற, கொள்ளையடிக்க பின்பற்றப் பட்டு வரும் செயல்முறை: மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் ஏதாவது ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தருவார்கள். என்னுடைய அக்காள், மாமாவாக ரோஷினி, மாரிமுத்து 2 பேரும் நடிப்பார்கள். ஒரு கல்யாணம் பேசி முடிப்பதற்கு முன்பே அக்காள், மாமாவாக நடிக்க, என்னுடைய வீட்டிற்கு வந்துவிடுவார்கள். பெண் பார்க்க திருமண ஆசையில் வரும் இளைஞர்களிடம் நான் நெருங்கி பழக வேண்டும். அப்படி பேசும்போது செல்போன், பட்டுசேலை, பணம், நகை என ஆசையாக கேட்டு, சாமர்த்தியமாக அவர்களிடம் வாங்கி கொள்ள வேண்டும். திருமணம் முடிந்ததும், இந்த வீட்டை காலி செய்து விட வேண்டும். முதல் இரவு முடிந்ததுமே தப்பி செல்வதற்கான வாய்ப்பு கிடைத்தால், கிளம்பி விட வேண்டும். ஒருவேளை மாப்பிள்ளையை அறையில் விட்டுவிட்டு அங்கிருந்து கிளம்ப முடியாத சூழல் ஏற்பட்டால், பாலில் தூக்க மாத்திரை கொடுத்து விட்டு, பொருட்களை வாரி சுருட்டிக்கொண்டு கிளம்ப வேண்டும். இதுவரை ஏமாந்த மாப்பிள்ளை வீட்டார் அவமானங்களுக்கு பயந்து பெரும்பாலும் புகார் கொடுக்கவில்லை. இதை புரோக்கர்கள் சாதகமாக பயன்படுத்தி கொண்டனர். நாமக்கல், கரூர், திருப்பூர், காங்கேயம் பகுதிகளில் நாங்கள் திருமண மோசடிகளை செய்துள்ளோம். இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

இப்பிரச்சினைகளில், விவகாரங்களில், வழக்குகளில் எழும் விசயங்கள்:

  1. தமிழகத்தில் திருமணப்பதிவு சட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது 2009ஆம் வருடம் நவம்பர் மாதம் 24ஆம் தேதி கொண்டு வரப்பட் டது.
  • திராவிடத்துவ அரசு இந்து திருமண சட்டம் இருந்தாலும், இந்த சட்டம் உருவாக்கப் பட்டு, தமிழக இந்துக்களைக் கட்டுக்குள் கொண்டு வந்தது.
  • சார்பதிவாளர்களை திருமணப் பதிவாளர்களாகவும் நியமிக்கப்பட்டு, திமணம் ஆன தம்பதியர் அங்கு செல்ல வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது.
  • ஆனால், இந்துத்துவவாதிகள் வழக்கம் போல, ஈவேரா, பெரியார், அண்ணா, தம்பி என்று அவர்களது தாம்பத்தியத்தைப் பற்றி ஆராய்ச்சியை ஆரம்பித்துள்ளனர்!
  • திராவிடத்துவத்தில், சுயமரியாதை திருமணத்தில் அதெல்லாம் சகஜமாக இருந்தது. பிறகு, அது சட்டப் படி செல்லாது என்றாகியது!
  • அப்பொழுது தான், இந்து திருமண சட்டததில் அந்த சுயமரியாதை திருமண ஐக்கியம் ஆகி, சட்டப் படி மரியாதைப் பெற்றது.
  • அதுவரை, ஈவேரா பாடை, பெரியாரிச பாசை, ராசாவின் பாஷையாகத் தான் இருந்தது. எந்த மனுவும், சோழனும் கண்டுகொள்ளவில்லை.
  • இப்பொழுது, தாலுகா ஆபிசுக்குச் சென்றவுடன், ஆன்-லைன் பதிவு இருந்தாலும், ஆப்-லைனில் தரகர்களின் கொண்டாட்டம் உள்ளது!
  • வழக்கறிஞர்கள் இன்றைக்கு, திருமணப் பதிவில் இறங்கி நன்றாக சம்பாதிக்க ஆரம்பித்துள்ளனர். அவர்களைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை.
  1. தினமும், குறிப்பிட்டப் பகுதிகளில் திருமணங்கள் நடக்கின்றன, என்பதனை வைத்துக் கொண்டு, அது வியாபாரமயமாக்கப் பட்டு விட்டது.

 © வேதபிரகாஷ்

29-09-2022


[1] NEWS18, திருமண தகவல் இணையதளம் மூலம் பல பெண்களை ஏமாற்றிய மோசடி மன்னன் கைது!, LAST UPDATED : JUNE 22, 2019, 10:45 IST

[2] https://tamil.news18.com/news/tamil-nadu/man-arrested-for-defrauding-women-through-marriage-information-website-in-chennai-vaij-171055.html

[3] தமிழ்.இந்து, பெண் மருத்துவரிடம் ரூ.7 கோடி மோசடி செய்தவர் கைது, செய்திப்பிரிவு, Published : 22 Jun 2019 07:52 AM; Last Updated : 22 Jun 2019 07:52 AM

[4] https://www.hindutamil.in/news/tamilnadu/172084-7.html

[5] தமிழ்.ஒன்.இந்தியா, திருமண தகவல் மையம் உடந்தை.. கோடீஸ்வரர் போல நடித்து 9 பெண்களை திருமணம் செய்த கோவை நபர் கைது!, By Veera Kumar Updated: Monday, January 8, 2018, 14:22 [IST]

[6] https://tamil.oneindia.com/news/tamilnadu/man-arrested-coimbatore-cheating-9-women-getting-money-from/articlecontent-pf287243-307803.html

[7] பாலிமர் செய்தி, 7வதாக திருமணம் செய்யவிருந்த மோசடி, பெண், தரகர் உள்ளிட்ட 4 பேருடன் கைது, செப்டம்பர் 23, 2022, 01:57:33 PM.

[8] https://www.polimernews.com/dnews/188110

[9] விகடன், 6-வது திருமணம் ஓவர்… 7-வது திருமணத்துக்கு ரெடி!- சந்தியா போலீஸில் சிக்கியது எப்படி?, துரை.வேம்பையன், Published:24 Sep 2022 10 AM; Updated: 24 Sep 2022 10 AM

[10] https://www.vikatan.com/news/tamilnadu/police-arrested-a-woman-who-defrauded-6-men-in-the-name-of-marriage-and-getting-ready-for-7th-marriage

[11] தினத்தந்தி, திருமணம் செய்து பண மோசடியில் ஈடுபட்ட மனைவி, உறவினர்கள் மீது நடவடிக்கை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தொழிலாளி மனு, ஏப்ரல் 21, 2:25 am (Updated: ஏப்ரல் 21, 2:25 am).

[12] https://www.dailythanthi.com/News/Districts/2021/04/21022506/panam.vpf

[13] தினத்தந்தி, மோசடி திருமணங்களுக்கு சம்மதிக்காவிட்டால் எனது ஆபாச வீடியோக்களை வெளியிடுவேன் என மிரட்டினர் கைதானகல்யாண ராணிபரபரப்பு வாக்குமூலம், Sep 27, 12:15 am (Updated: Sep 27, 12:16 am)

[14] https://www.dailythanthi.com/News/State/raani-801720

[15] தினமலர், 8வது திருமணத்துக்கு தயாரானகல்யாண அழகிசந்தியா, Added : செப் 25, 2022  04:05

https://www.dinamalar.com/news_detail.asp?id=3130710

[16] காமதேனு, 6 பேருடன் கல்யாணம்; இரவோடு இரவாக நகையுடன் எஸ்கேப்: 7-வது நபரை திருமணம் செய்ய முயன்ற மனைவியை பிடித்த கணவர், Updated on : 23 Sep, 2022, 10:19 am

[17] https://kamadenu.hindutamil.in/national/the-young-woman-who-cheated-and-married-six-men-and-her-immediate-family-were-arrested

சித்தர் பெயரில் மோசடி, கற்பழிப்பு, விபச்சாரம்: கலாச்சாரத்தின் சீரழிவு ஆபத்தான நிலையில் பரவுகிறது!

ஓகஸ்ட்19, 2013

சித்தர் பெயரில் மோசடி, கற்பழிப்பு, விபச்சாரம்: கலாச்சாரத்தின் சீரழிவு ஆபத்தான நிலையில் பரவுகிறது!

Deceit-siddha-rapist

சித்தர்உட்பட 7 பேர்கைது: இப்படி ஊடகங்கள் செய்திகளைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும் சித்தர்கள் எல்லாவற்றையும் கடந்தவர்கள். இதனால்தான் போலும், இப்பொழுது, போதை ஊசி போட்டு சிறுமியை கற்பழித்ததாக கூறப்பட்ட புகார் தொடர்பாக சித்தர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்[1].  மேலும், தலைமறைவான புரோக்கர் உட்பட சிலரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை வியாசர்பாடி பி.வி காலனியை சேர்ந்தவர் சிறுமலர் (வயது 35) இவரது மகள் அமலா  (பெயர் மாற்றப்பட்டுள்ளது) (வயது 14). இவர் ஆந்திரா மாநிலத்தில் உள்ள திருப்பதி கோவில் வளாகத்தில் சந்தேகபடும்படியாக சுற்றித்திரிந்துள்ளார். சிறுமியிடம் போலீசார் விசாரித்த போது, அவர் மாங்காய் வியாபாரம் செய்து வருவதும், விபசாரத்தில் ஈடுபடுத்தி கொடுமை செய்ததால் தப்பித்து ஓடி வந்ததது தெரிய வந்தது. இதைதொடர்ந்து சிறுமியை ஆந்திர போலீசார் தமிழக போலீஸ் டிஜிபி ராமனுஜத்திடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக ராமானுஜம் உத்தரவின் பேரில் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தினர். இது குறித்து சிறுமியிடம் நடந்த   முதற்கட்ட விசாரணையில் வியாசர்பாடி பிவி காலனியை சேர்ந்த அறவழிசித்தர் (வயது 48) என்பவர் சிறுமிக்கு போதை மருந்து கொடுத்து பல முறை கற்பழித்ததும், இதற்கு அவரது தாயார் சிறுமலர் உடந்தையாக இருந்தார் என்பதும் தெரியவந்தது.

Deceit-siddha-rapist.4

இரவுபூஜைசெய்தால்எல்லாம்சரியாகிவிடும்என்று கற்பழித்த அறவழிசித்தர்: அபர்ணாவுடன் தனது காம பசியை தீர்த்து அலுத்து போன அறவழி சித்தர் பின்னர் அந்த அப்பாவி சிறுமியை விபசார கும்பலிடம் விற்பனை செய்து விட்டார்[2]. மேலும்,  சித்தருடைய நண்பர்களான குமார், செல்வம் உள்ளிட்ட 6 பேர் கொட்டிவாக்கம் கடற்கரையில் வைத்து தன்னை கற்பழித்ததாகவும் சிறுமி பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்[3].   பெரம்பூரைச் சேர்ந்தவர் அந்த சிறுமியின் தந்தை பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார். தாயார் சசிகலாவுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு பெரம்பூரில் உள்ள ஒரு ஆசிரமத்திற்கு மகளை அழைத்துச் சென்றார் சசிகலா. அங்கு “அறவழி சித்தர்” என்ற குறி சொல்லும் சாமியாரிடம் அறிமுகப்படுத்தினார். அந்த சாமியாருக்கு வயது 48 ஆகிறது. அந்த சாமியார், சசிகலாவிடம் இரவு பூஜை செய்தால் எல்லாம் சரியாகி விடும் என்று கூறியுள்ளார். இதையடுத்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நள்ளிரவில் பூஜைக்கு ஏற்பாடு செய்தார் அந்த சாமியார். அன்று இரவு பூஜைக்குப் பதில் சிறுமியை தனது காம இச்சைக்குப் பயன்படுத்தி கற்பழித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த சிறுமி, தனது தாயாரிடம் வந்து கதறியுள்ளார்.

Deceit-siddha-rapist

சாமியார்எதுசெய்தாலும்அதுநல்லதுக்குத்தான்: அதற்கு அந்தத் தாயார், சாமியார் எது செய்தாலும் அது நல்லதுக்குத்தான் என்று கூறி சமாதானப்படுத்தியுள்ளார் மகளை. சிறுமியின் தாயாரே இதைக் கண்டுகொள்ளாமல் விட்டதால் சாமியார் பலமுறை சிறுமியை வரவழைத்து வெறியாட்டம் போட்டுள்ளார்[4]. ஊடகங்களும் தாயே ஒப்புக்கொண்டு மகளை கற்பழிக்க விடுத்தாள் என்பது போல செய்திகளைத் தந்துள்ளன. ஏழ்மை உறவுகளை கெடுத்துவிடும், பந்தங்களை அறுத்துவிடும், பாசங்களைக் போக்கிவிடும் என்று அவர்கள் அறியாதவர் போலும். ஆங்கிலத்தில் “சென்சேஷனல் ஜேர்னலிஸம்” என்பார்களே, அவ்விதத்தில், மகிழ்சியோடு, ரோமாஞ்சனத்துடன் செய்திகளை அள்ளிக் கொட்டியுள்ளார்கள்.

Deceit-siddha-rapist.3

சித்தரின்ஆசிரமத்தில்ஆபாசசி.டி.க்கள்: அறவழி சித்தரின் 2 அறைகள் கொண்ட ஆசிரமத்தில் போலீசார் சோதனையிட்ட போது ஆபாச சி.டி.க்கள் சிக்கியது. விபசாரகும்பலை சேர்ந்த குமார், செல்வம் மற்றும் மேலும் 2 பெண்களை போலீசார் தேடி வருகிறார்கள். இவர்கள் சிறுமி அபர்ணாவிடம் உல்லாசம் அனுபவிக்க விபசார புரோக்கர் செல்வத்துக்கு ரூ.10 ஆயிரம் கொடுத்து உள்ளனர். மீட்கப்பட்ட சிறுமி அபர்ணா தற்போது குழந்தைகள் நல கமிட்டி பராமரிப்பில் காப்பகத்தில் உள்ளார். அவர் உடல் முழுவதும் போதை ஊசி போடப்பட்ட தழும்புகள் உள்ளது. அவர் கூறும் போது,  “விபசார கும்பலிடம் என்னை போல் மேலும் 2 சிறுமிகள் சிக்கி உள்ளனர். ஒருத்தி தி.நகரை சேர்ந்தவள் என்றும், இன்னொருத்தி மூலக்கடையை சேர்ந்தவள்” என்றும் கூறினார். 7-ம் வகுப்பு வரை படித்துள்ள அவர் தொடர்ந்து படிக்க விரும்புவதாகவும் தெரிவித்தாள். அவரது விருப்பத்தை நிறைவேற்ற குழந்தைகள் நல கமிட்டி திட்டமிட்டுள்ளது. கைதான அறவழி சித்தர் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர். சித்தரிடம் ஏமாந்த பெண்கள் பற்றியும் விசாரணை நடக்கிறது.

Deported-phedophiles-in-India

மீதுபாலியல்கொடுமை, பெண்வன்கொடுமைஉட்பட  ஐந்துபிரிவுகளின்கீழ்போலீசார்வழக்குபதிவு: இந்த சம்பவம் தொடர்பாக அறவழி சித்தர் மற்றும் சிறுமியின் தாயார் சிறுமலரை 17-08-2013 அன்று போலீசார் கைது செய்து சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ளவர்களை சிபிசிஐடி போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா சீனிவாசன்  தலைமையில் போலீசார் 17-08-2013 இரவு முழுவதும் தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டனர். இதில், 18-08-2013 மாலை  கொட்டிவாக்கம் கடற்கரையில் வைத்து சிறுமியை கற்பழித்தவர்களான பி.வி காலனியை சேர்ந்த ராஜேஷ் குமார், அதே பகுதியை சேர்ந்த பப்லு, புதுப்பேட்டையை சேர்ந்த கணேஷ், திருவான்மியூரை சேர்ந்த சதிஷ், நியூ ஆவடி சாலையை சேர்ந்த பப்லு,  ஆகியோரை போலீசார் மடக்கி பிடித்து  5 பேரையும் கைது செய்தனர்[5]. இவர்கள்  ஐந்து பேர் மீது பாலியல் கொடுமை, பெண் வன்கொடுமை உட்பட  ஐந்து பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சிலரை தேடி வருவதாக சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

IT_Act_does_not_cover_Chold_porn


[1] மாலைச்சுடர், சித்தர்உட்பட 7 பேர்கைது, Monday, 19 August, 2013   03:02 PM

ஸ்டாலின், சுய-உதவி குழு, பெண்கள் படும்பாடு!

மே21, 2010

ஸ்டாலின், சுய-உதவி குழு, பெண்கள் படும்பாடு!

பெண்கள் சுய உதவிகுழு என்று பலர் கிளம்பி விட்டனர். உண்மை சில மகளிர்/பெண்குழுக்கள் நன்றாக செயல்பட்டாலும், திமுகவினரின் அதிகமான ஆதிக்கத்தினால், ஊழல் பெருக ஆரம்பித்தது.

  • பணத்தைப் பெறுவதற்காகவே பல நூற்றுக்கணக்கான பெண்கள் சுய உதவி குழுக்கள் முளைத்தன,
  • இவ்வளவு பணம் கொடுத்தால், இவ்வளவு கமிஷன் கொடுக்கவேண்டும் என்ற ரீதியில் செயல்பட்டனர்.
  • உள்ளூர் வட்டச் செயலாளர், மேயர், எம்.எல்.ஏ…………முதலியோர் சொல்லியே பல குழுக்கள் ஆரம்பிக்கப் பட்டன.
  • உள்ளூர் வட்டச் செயலாளர், மேயர், எம்.எல்.ஏ………………….என்று அக்குழுக்கள் செயல்பட்டு கொள்ளை அடித்தன, இன்னும் அடிக்கின்றன.
  • அரசியல் ரீதியில், இது ஒரு விளம்பர சேவையாக இருக்கிறது, ஏனெனில் பணம் கொடுப்பது வங்கிகள், புகழைப் பெறுவது, அரசியல்வாதிகள்.
சுயஉதவி குழுவினரிடம் மோசடி “வசூல்’ பெண்கள் இருவர் சிக்கினர்

கோவை : மகளிர் சுயஉதவி குழுவினருக்கு, கடன் பெற்று தருவதாகக்கூறி, பல ஆயிரம் வசூலித்த பெண்கள் இருவர் பிடிபட்டனர்.  மகளிர் சுயஉதவி குழுவினருக்கு, அந்தந்த பகுதியை சேர்ந்த அரசுடமையாக்கப்பட்ட வங்கிகள், சுழல் நிதி வழங்குகின்றன. இந்த நிலையில் ஒருசில தனியார் நிறுவனங்களும், கிராம பகுதியிலுள்ள சுயஉதவி குழுவினரை சந்தித்து, எவ்வித நிபந்தனையும் விதிக்காமல், கடன் கொடுத்து, வாரந்தோறும் கடன் தொகையை வட்டியோடு வசூலித்து வருகின்றன.

சில தன்னார்வ நிறுவனங்களும், தனி நபர்களும் வங்கிக்கடன் பெற்று தருவதாகக்கூறி, கடன் தொகைக்கேற்ப கமிஷன் வசூலித்து ஏமாற்றுகின்றனர். ஒத்தக்கால் மண்டபம், ஈச்சனாரி, கவுண்டம் பாளையம், பொள்ளாச்சி, நரசிம்மநாயக்கன் பாளையம், செல்வபுரம் பகுதிகளில் இக்கும்பலை சேர்ந்தவர்கள், சுயஉதவி குழுவினரை சந்தித்து, கடன் பெற்று தருவதாக கூறி வசூலில் இறங்கினர். அவர்களை பொதுமக்கள் முற்றுகையிட்டு, போலீசில் ஒப்படைத்தனர்.

நேற்று ரத்தினபுரியை சேர்ந்த மகளிர் சுயஉதவி குழுவினர், காட்டூர் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு, “கடன் பெற்று தருவதாகக்கூறி, எங்களிடம் ஆயிரக்கணக்கில் வசூலித்து ஏமாற்றியவர்களை, கைது செய்ய வேண்டும். அவர்களிடமிருந்து பணத்தை மீட்டுத் தர வேண்டும்’ என வலியுறுத்தினர். இது தொடர்பாக, ரத்தினபுரியை சேர்ந்த இந்திராணி, சாந்தி ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதன் பிறகே, போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்ட பெண்கள் கலைந்து சென்றனர்.

சுயஉதவி குழு உறுப்பினர் பெயரில் ரூ. 2 லட்சம் கடன் மோசடி: சேவா சங்க தலைவி கைது செப்டம்பர் 25,2009,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=13028

விருதுநகர்: மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பெயரில், பாங்கில், இரண்டு லட்ச ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்த, சேவா சங்க தலைவி கைது செய்யப்பட்டார். மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த உறுப்பினர்களை, சமீப காலமாக, தலைவர்களாக இருப்பவர்கள் ஏமாற்றி பண மோசடி செய்வது அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம், மகளிர் சங்க தலைவவிகளாக இருப்பவர்கள் மட்டுமே, வங்கியுடன் தொடர்பு வைத்திருக்கின்றனர். சங்க கணக்கு வழக்குகள் அனைத்தும், தலைவிகள் கைவசம் மட்டுமே உள்ளது. மேலும், உறுப்பினர்களாக இருப்பவர்கள் அனைவரும் கல்வி அறிவு பெற்றவர்களில்லை. பாங்குகள் கடன் மட்டுமே வழங்குகின்றன. கடன் தொகையை சம்பந்தப்பட்ட நபர்கள் வந்தால் மட்டுமே வழங்க வேண்டும். கடன் தொகைக்கான தீர்மானம் போடும் போது தலைவர், செயலர், பொருளாளர் கையெழுத்திட வேண்டும். பாங்கில் இவர்கள் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. மகளிர் சுய உதவிக்குழுக்களின் தீர்மானம் போட்டு கொடுத்தால் மட்டும் போதுமானது. இதனால், ஆள் மாறாட்டம் செய்து மற்றவர்கள் கடன்தொகையை பெற்று விடுகின்றனர். பெரும்பான்மையான மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கடன் வாங்காமலே கடனாளி ஆகின்றனர். விருதுநகர், திருச்சுழி பள்ளிவாசல் அருகே வசிப்பவர் தனசேகரன். இவர் மனைவி பாக்கியலட்சுமி சேவா சங்க தலைவராக உள்ளார். ஆணைக்குளம் மகளிர் சுய உதவிக்குழு, அன்னை ரோஜா மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களிடம், கடன் வாங்கி தருவதாக, திருச்சுழி ஸ்டேட் வங்கிக்கு அழைத்து சென்றார். இவர்களது பெயரில், இரண்டு லட்ச ரூபாய் வரை கடன் பெற்று, உறுப்பினர்களுக்கு வழங்காமல் மோசடி செய்தார். இதுகுறித்து, ஆணைக்குளத்தை சேர்ந்த முத்துமாணிக்கம் மனைவி பேச்சியம்மாள் மற்றும் ஒன்பது பேர், போலீசில் புகார் செய்தனர். விருதுநகர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், பாக்கியலட்சுமியை கைது செய்து விசாரிக்கின்றனர்.