Posts Tagged ‘பெண்டாளுதல்’

பெண்களுக்கு எல்லா உரிமைகளும் இருக்கின்றன: 5 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி 6-வதாக ஒருவருடன் வாழ்ந்த போது சிக்கினார்!

மே14, 2023

பெண்களுக்கு எல்லா உரிமைகளும் இருக்கின்றன: 5 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி 6-வதாக ஒருவருடன் வாழ்ந்த போது சிக்கினார்!

மேல்மலையனூரில் பரபரப்பு: 5 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி6-வதாக ஒருவருடன் வாழ்ந்த போது சிக்கினார்: ஆண்களாவது, பெண்களாவது, ஏதாவது ஒரு வெறி, பித்து, பைத்தியம் என்று விடித்து விட்டால், பணம் சம்பாதிப்பது, ஜாலியாக வாழ்வது, எந்த கொள்கைஉம் வேண்டாம் என்று தீர்மானித்து விட்டால் எல்லோரும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறார்கள். இப்பொழுதெல்லாம் எல்லாவிதமான குற்றங்களிலும் பெண்கள் சமமாக மட்டுமல்லாது, ஆண்களையும் மிஞ்சுயுள்ளார்கள், கொலை-கொள்ளைகளில் நம்பவே முடியாத நிலையில் உச்சத்தைத் தொடுள்ளார்கள். இனி ஆண்களுக்கே சொல்லிக் கொடுப்பார்கள் போலிருக்கிறது. எனவே, இந்நிலையில், மேல்மலையனூரில் 5 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து நகை, பணத்தை சுருட்டிக்கொண்டு ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த கல்யாண ராணியை போலீசார் கைது செய்தனர்[1] என்ற செய்தி ஒன்றும் யாரையும் ஆச்சரியப் படுத்தி விடவில்லை. அவர் 6-வதாக ஒருவருடன் சேர்ந்து வாழ்ந்த போது போலீசில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது[2] என்று தினத்தந்தி கூறினாலும், அதற்கே இது அலுத்துப் போன விசயம் தான். ஏனெனில், 70 ஆண்டுகளாக இது இத்தகைய சேய்திகளை வெளியிடுவதில் வல்லது.

டிசம்பர் 2022ல் திருமணம்: விழுப்புரம் மேல்மலையனூர், இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது[3]:- முகநூல் மூலம் அறிமுகம் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே உள்ள சிறுதலைப்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் பூண்டியான்[4]. இவருடைய மகன் மணிகண்டன் (வயது 29). விவசாயி. இவருக்கு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ராஜமாணிக்கம் மகள் மகாலட்சுமி முகநூல் மூலம் அறிமுகமானார்[5]. ஆக, முகநூல் இங்கும் விலையாடியிருப்பது தெரிகிறது. போன், இணைதளம் இன்றைக்கு பெரும்பாலான குற்றங்களுக்கு காரணமாக இருக்கிறது. கோடிக் கணக்கான மக்களை ஏதோ ஒரு வழியில் கட்டுக்குள் வைத்திருக்கிறது. தொடக்கத்தில் இருவரும் நட்பாக பழகி வந்தனர். பின்னர், ஒருவருக்கொருவர் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டு பேச தொடங்கினர்[6].  அப்போது, மகாலட்சுமி, சுடிதார் அணிந்து, தோளில் ஒரு பேக் மாட்டியபடி போஸ் கொடுத்து எடுத்த புகைப்படத்தை மணிகண்டனுக்கு அனுப்பி உள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்ததும், அவரது அழகில் மணிகண்டன் மயங்கினார்[7].  காதலாக மலர்ந்தது கூடவே இவர்களது நட்பு மேலும் இணக்கமாக தொடர தொடங்கியது[8]. இவ்வாறாக நேரில் முகம்பாராமல் முகநூல் மூலமாக பேசிய இவர்களுக்குள் காதலும் மலர்ந்தது. இதையடுத்து காதலை அடுத்தகட்டத்துக்கு எடுத்து செல்ல மணிகண்டன் முடிவு செய்தார்[9]. அவர், மகாலட்சுமியிடம் திருமணம் செய்து கொள்ளலாம் என்கிற முடிவை தெரிவித்தார்[10]. இதற்கு காதலியும் பச்சைக்கொடி காட்டினார். அப்போது, திருமணத்தின் போது தனது தரப்பில் யாரும் வரப்போவதில்லை, தான் மட்டும் தனது வீட்டை விட்டு வருவதாக மகாலட்சுமி தெரிவித்துள்ளார்[11]. கோவிலில் வைத்து திருமணம் இதையடுத்து, கடந்த ஆண்டு 2022 நவம்பர் மாதம் 18-ந்தேதி, இவர்களது திருமணம் மேல்மலையனூர் அருகே அவலூர்பேட்டையில் உள்ள ஒரு கோவிலில் நடைபெற்றது[12]. ஆனால், பத்திரிக்கை அடிக்காமல் இருந்திருப்பார்களா, போட்டோ, வீடியோ எடுக்காமலா இருந்திருப்பார்கள்?

பிள்ளை வீட்டார் மட்டும் கலந்து கொண்ட கல்யாணம்: இதில் மணிகண்டன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மட்டுமே பங்கேற்றனர். மகாலட்சுமி தரப்பில் யாரும் பங்கேற்கவில்லை. அப்பொழுது எப்படி, ஏன், எதற்காக விசாரிக்காமல் கல்யாணத்திர்கு ஒப்புக் கொண்டார்கள் என்பதும் வியக்காக இருக்கிறது. திருமணத்தின் போது, மணிகண்டன் வீட்டில் இருந்து மகாலட்சுமிக்கு 8 பவுனில் நகை போட்டுள்ளனர். இதுவே “ரிவர்சில்” இருக்கிறது எனலாம். சொத்து பிரச்சினை மனதுக்கு பிடித்த காதலியை கரம்பற்றிவிட்டோம் என்கிற மனமகிழ்வில் மணிகண்டன், தனது ஆசை காதல் மனைவியுடன் இல்லற வாழ்வுக்கு அடியெடுத்து வைத்தார். அவரது மகிழ்ச்சி நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை. ஏனெனில், தனது வீட்டில் சொத்து பிரச்சினை உள்ளதாக எனக்கு போன் வந்தது. எனவே நான் ஊருக்கு சென்று அந்த பிரச்சினையை தீர்வு கண்டுவிட்டு, வந்துவிடுகிறேன் என்று மணிகண்டனிடம் மகாலட்சுமி தெரிவித்துள்ளார். காதல் மனைவியின் பேச்சை உண்மை என்று நம்பிய அவரும், ஊருக்கு சென்றுவிட்டு விரைவில் திரும்பி வந்துவிடு என்று வழியும் அனுப்பி வைத்தார்.

வீட்டில் இருந்த ஒரு லட்சம் பணம் மாயம்: அதன்படி திருமணமான 26-வது நாள், அதாவது, கடந்த ஆண்டு 2022 டிசம்பர் மாதம் 14-ந்தேதி மகாலட்சுமி, மேட்டுப்பாளையத்துக்கு செல்வதாக கூறி சென்றார். சொந்த ஊருக்கு சென்ற காதல் மனைவி எப்போது திரும்பி வருவார் என்கிற ஏக்கங்களுடன் மணிகண்டனும் இங்கு காத்திருந்தார். மனைவிக்கு போன் செய்து பார்த்தார். ஆனால் போனை எடுக்கவில்லை. இந்நிலையில் வீட்டில் இருந்த ரூ.1 லட்சம் ரொக்கத்தையும் காணவில்லை. இதன் பின்னர் தான் மணிகண்டன் குடும்பத்தினருக்கு மகாலட்சுமி மீது சந்தேகம் வலுத்தது. ரூ.1 லட்சத்தை திருடிக்கொண்டு, திருமணத்தின் போது அணிவித்த 8 பவுன் நகையுடன் மகாலட்சுமி தலைமறைவாகி விட்டாரா? என்று மணிகண்டனுக்கு சந்தேகம் வந்தது. காதல் மனைவியின் மிரட்டல் இதையடுத்து, அவருக்கு போன் செய்தார். அப்போது போனை எடுத்து பேசிய மகாலட்சுமி, சரியான பதிலை அளிக்கவில்லை. நகை, பணம் குறித்து கேட்ட போது தனக்கு அடிக்கடி போன் செய்தால் கொலை செய்து விடுவேன் என்று போனில் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

மிரட்டிய மனைவியின் மீது கணவன் புகார் கொடுத்தது: காதலித்து திருமணம் செய்த மனைவியின் இந்த மிரட்டலை சற்றும் எதிர்பாராத மணிகண்டன் அதிர்ந்து போய், என்ன செய்வது என்று தெரியாமல் நிலைகுலைந்து போய்விட்டார். போலீசில் புகார் பின்னர், இதுகுறித்து அவரது குடும்பத்தினர் வளத்தி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். மகாலட்சுமியின் புகைப்படம், முகநூல் பக்க பதிவுகள், அவரது செல்போன் எண் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார் இறங்கினர். அதில், அவர் சேலம் பகுதியில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் சேலத்துக்கு விரைந்து சென்று, மகலாட்சுமியை மடக்கி பிடித்து வளத்தி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

6ம் கணவருடன் வாழ்ந்து வருவது: விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. அதன் விவரம் வருமாறு:- 5-வதாக சிக்கிய மணிகண்டன் மகாலட்சுமி ஏற்கனவே 4 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். 5-வதாக அவர் விரித்த வலையில் சிக்கியவர் தான் மணிகண்டன். ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து அவர்கள் வீடுகளில் இருந்து கிடைக்கும் நகை, பணத்தை சுருட்டிக்கொண்டு தலைமறைவாகி விடுவதை மகாலட்சுமி ஒரு தொழிலாகவே பார்த்து வந்துள்ளார். அபகரித்து செல்லும் நகை, பணத்தை கொண்டு ஆடம்பரமாக செலவு செய்து, மனதுக்கு பிடித்த வாழ்வை வாழ்ந்து வந்துள்ளார். கையில் உள்ள பணம் செலவானவுடன், மீண்டு்ம் தனது கல்யாண லீலைகளை அரகேற்றி வந்துள்ளார். 3 குழந்தைகளின் தாய் மணிகண்டனை தனது வலையில் சிக்க வைத்து, நகை பணத்துடன் மாயமான அவர், தற்போது சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா குமாரபாளையம் கிராமத்தை சேர்ந்த சின்ராஜ் என்பவரை 6-வதாக திருமணம் செய்து கொண்டு அவருடன் குடும்பம் நடத்தி வந்ததும், விசாரணையில் தெரியவந்தது.

மகாலட்சுமிக்கு 17 மற்றும் 15 வயதில் 2 மகன்களும், 14 வயதில் ஒரு மகளும் உள்ளனர். 5-ம் வகுப்பு வரைக்கும் படித்துள்ள மகாலட்சுமியின் வயது 32 ஆகும். வயதை மறைத்து, தன்னை விட 2 வயது சிறியவரான மணிகண்டனை அவர் திருமணம் செய்துள்ளார். இதுமட்டுமின்றி மகாலட்சுமிக்கு 17 மற்றும் 15 வயதில் 2 மகன்களும், 14 வயதில் ஒரு மகளும் உள்ளனர். ஆனால் அவர்கள் எங்கு உள்ளனர், யாருடைய பராமரிப்பில் உள்ளார்கள் என்பது குறித்து மகாலட்சுமி போலீசில் தெளிவாக தெரிவிக்கவில்லை. கல்யாண ராணி கைது தொடர்ந்து, மகாலட்சுமியை கைது செய்த போலீசார், அவரால் ஏமாற்றப்பட்டவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மேல்மலையனூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்று வழக்கம் போல ஊடகம் ஊளையிட்டுள்ளது. ஆனால், எந்ஹ தமிழச்சியும், தமிழச்சியின் கற்பு, மானம், முதலியவற்றைப் பற்றி கவலைப் படவில்லை. டிவி-பட்டிமன்ற விவதங்களும் நடத்தப் படுவதில்லை.

© வேதபிரகாஷ்

14-05-2023


[1] தினத்தந்தி, மேல்மலையனூரில் பரபரப்பு:5 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி6-வதாக ஒருவருடன் வாழ்ந்த போது சிக்கினார், தினத்தந்தி மே 14, 12:15 am (Updated: மே 14, 12:16 am).

[2] https://www.dailythanthi.com/News/State/kalyana-rani-who-cheated-and-married-5-men-963809

[3] மாலைமலர், 6 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி , By மாலை மலர், 14 மே 2023 7:29 AM.

[4] https://www.maalaimalar.com/news/district/kalyana-rani-cheated-and-married-6-men-608748

[5] தமிழ்.ஒன்.இந்தியா, 6 ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய கல்யாண ராணி கைது.. போலீஸாரே அதிர்ந்த பகீர் பின்னணி!, By Vishnupriya R Updated: Sunday, May 14, 2023, 10:06 [IST].

[6] https://tamil.oneindia.com/news/villupuram/coimbatore-mahalakshmi-arrested-by-cheating-6-men-511735.html

[7] தினகரன், சமூக வலைதளம் மூலம் அனாதை என கூறி 5 திருமணம் செய்து பணம், நகை கொள்ளையடித்த கல்யாண ராணி: சேலம் அருகே 6வது கணவனுடன் வசித்தபோது சிக்கினார், May 14, 2023, 12:16 am

[8] https://www.dinakaran.com/married_5_people_robbed_money_jewels_husband_salem/

[9] லோகல்.செய்தி, 5 ஆண்களுடன் திருமணம்சிக்கிய கல்யாண ராணி, By Mohan Ramachandran, May 14, 2023, 09:05 IST.

[10] https://tamil.getlokalapp.com/tamilnadu-news/marriage-with-5-men-trapped-wedding-queen-10167086

[11] தமிழ்.ஸ்பார்க், மீண்டும் ஒரு திருமண மோசடி..!! 6 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய கல்யாண ராணி..!!, Sat, 13 May 2023 18:43:11 IST Author by Priya

[12] https://www.tamilspark.com/tamilnadu/the-police-have-arrested-a-young-woman-who-was-involved

கல்லூரி மாணவி, பாலியல் பலாத்காரம் செய்த அக்காள் புருஷன், கொலையில் முடிந்த நிலை – அடைக்கலத்திற்கு வந்த பெண்ணின் சோகக் கதை.

பிப்ரவரி3, 2014

கல்லூரி மாணவி, பாலியல் பலாத்காரம் செய்த அக்காள் புருஷன், கொலையில் முடிந்த நிலை – அடைக்கலத்திற்கு வந்த பெண்ணின் சோகக் கதை.

 

மாத்யூ பினுராஜ் கொலை செய்யப் பட்ட காமுகன்

மாத்யூ பினுராஜ் கொலை செய்யப் பட்ட காமுகன்

சப்இன்ஸ்பெக்டரின் மகன் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டது: கற்பழிக்க முயன்ற, அக்காவின் கணவரை, கழுத்தை அறுத்து கல்லூரி மாணவி, கொலை செய்த சம்பவம், மாதவரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்று வழக்கம் போல ஊடகங்கள் செய்தியைக் கொடுத்துள்ளது. மாதவரம் பால்பண்ணை, டெலிபோன் காலனி, 1வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர், சோபன்ராஜ். ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர். இவருடைய மகன் மேத்யூ பினுராஜ், 32 [Mathew Binuraj]. அண்ணா நகரில், ரியல் எஸ்டேட் தொழிலும், பழைய கார்களை வாங்கி, விற்கும் தொழிலும் செய்து வந்தார். அவரது மனைவி, ஹேமா, 26, மாதவரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் / கார்புரேசன் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலைபார்த்து வருகிறார்[1]. கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு, ஒன்பது ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. எட்டு வயதில் மெர்லின் ஜோசப் [Merlin Joseph] ஒரு மகன் உள்ளான்[2].

 

மாத்யூ பினுராஜ் கொலை செய்யப் பட்ட காமுகன் மாதவரம்

மாத்யூ பினுராஜ் கொலை செய்யப் பட்ட காமுகன் மாதவரம்

அனாதையான பெண்களின் நிலை: போலீஸ் விசாரணையில் கைதான கல்லூரி மாணவி குறித்து உருக்கமான தகவல்கள் கிடைத்து உள்ளன[3]. அது வருமாறு:- ஹரிபிரியாவின் தந்தை கோபால். தாயார் பாக்கியலட்சுமி. உடன் பிறந்தவர்கள் ஹேமா, சுகன்யா. ஹரிபிரியா கடைசி மகள். முதல் 2 மகள்களுக்கு திருமணம் நடந்த நிலையில் தாயார் பாக்கியலட்சுமி கடந்த 1997-ல் இறந்து விட்டார். 2006-ல் தந்தை கோபாலும் இறந்து விட்டார். இதனால் ஹரிபிரியா அனாதை ஆனார். மூத்த மகளான ஹேமா, தனது தங்கை ஹரிபிரியாவை தனது வீட்டிலேயே தங்க வைத்து கடந்த 7 வருடங்களாக மகள்போல் பாவித்து வளர்த்து வந்தார். தனது வீட்டுக்கு வந்த நாள் முதல் மைத்துனி ஹரிபிரியா மீது மேத்யூக்கு தவறான மோகம் ஏற்பட்டது. கடந்த 4 ஆண்டுகளாக அவருக்கு பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்து வந்தார். அதாவது, ஏழ்மை மற்றும் அடுத்தவர் தயவில் அண்டிக் கிடக்கவேண்டிய நிலையைத்தான் காமக்கயவர்கள் உபயோகித்துக் கொள்ளப் பார்க்கிறர்கள் என்று தெரிகிறது. மேலும், ஒரு பக்கம் சோபன் ராஜ், மாத்யூ பினுராஜ் என்றிருக்கிறது, இன்னொரு பக்கம் கோபால், பாக்கியலட்சுமி, ஹேமா, ஹரிபிரியா என்றெல்லாம் உள்ளது. ஹேமா- மாத்யூ பினுராஜ் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர் என்றும் உள்ளது. பிறகு, இப்படி தொடர்ந்து 7 ஆண்டுகளாக தொந்தரவு செய்து வரும் நிலை, ஹரிபிரியா பொறுத்து வந்த நிலை முதலியவை வேறு காரணங்கள் உள்ளனவா என்றும் நினைக்கத் தோன்றுகிறது. சோபன்ராஜின் நிலை இதில் சூன்யமாக இருப்பதும் சந்தேகமாக இருக்கிறது.

 

மாத்யூ பினுராஜ் கொலைசெய்யப்பட்ட காமுகன்

மாத்யூ பினுராஜ் கொலைசெய்யப்பட்ட காமுகன்

கணவன்மனைவிதகராறு – உள்நோக்கம் கொண்ட கணவன்: இதுபற்றி ஹரிபிரியா தனது அக்காவிடம் கூறி அழுதார். அவர் கணவரை கண்டித்தார். இதனால் ஹேமாவுக்கும், மேத்யூவுக்கும் தகராறு ஏற்பட்டது. தன்னால் தனது அக்காவின் வாழ்க்கை பாதிக்கக்கூடாது என்று கருதிய ஹரிபிரியா, தான் விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று படிப்பதாக அக்காவிடம் கூறினார். ஆனால் அதற்கு ஹேமா மறுத்து விட்டார். இதை அறிந்த மேத்யூ, “நீ விடுதி சென்று படித்தால் உனது அக்காவை நான் விவாகரத்து செய்து விடுவேன். கொலையும் செய்து விடுவேன்” என்று ஹரிபிரியாவை மிரட்டியதாக தெரிகிறது. இதனால் பயந்து போன அவர், அக்காள் கணவரின் பாலியல் தொந்தரவுகளை தாங்கிக்கொண்டு வீட்டில் தங்கி கல்லூரி சென்று வந்தார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் சரியாக படிக்க முடியாமலும் தவித்து வந்து உள்ளார். மாத்யூ பினுராஜ் திட்டமிட்டே, செய்து வந்தது தெரிகிறது, மனைவியை இவ்வாறு பிளாக்மெயில் செய்து, அவளை அடையலாம் என்று காத்துக் கிடந்ததும் தெரிகிறது.

தடுத்த தாயார், மனைவி – ஆனால் பலமுறைமுயற்சி செய்த காமக்கொடூரன்[4]: ஹேமாவின், தாயார், லில்லி மற்றும் தங்கை சுபா, 23, (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆகியோரும், பினுராஜின் வீட்டில் உடன் தங்கி இருந்தனர். சுபா, பெரம்பூரில் உள்ள தனியார் கல்லூரியில், பி.காம்., இறுதியாண்டு படித்து வருகிறார். தன் வீட்டில் தங்கி இருக்கும் சுபாவை, தன் வலையில் வீழ்த்த, பினுராஜ் பலமுறை முயன்று உள்ளார்[5].  மேத்யூ, சுபாவிவிற்கு கடந்த 7ஆண்டுகளாக அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது[6]. தடுத்தும் பலனில்லை, இந்த நிலையில், 01-02-2014 அன்று, நள்ளிரவு 2:00 மணிக்கு, மது போதையில், வீடு திரும்பிய பினுராஜ், சுபாவை அடையும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது, அவரது மனைவி மற்றும் மாமியார் ஆகியோர், அவரது வெறிச்செயலை தடுத்தனர். ஆனால், அவர்களை அடித்து, வீட்டிற்கு வெளியில் தள்ளி, கதவை உள்பக்கம் தாழிட்டார். போதையின் உச்சத்தில் தனது மனைவி ஹேமாவின் வாயில் வலுக்கட்டாயமாக மதுவை  ஊற்றி மயக்கமடைய செய்துள்ளார்[7]. அதன்பின், சமையலறையில் பதுங்கி இருந்த சுபாவை கற்பழிக்க முயன்றார்[8].

 

கற்பழிக்கமுயன்றஅக்காகணவரைகழுத்தறுத்துகொன்றகல்லூரிமாணவி[9]: அக்கா கணவரிடம் இருந்து, தன்னை காப்பாற்றி கொள்ள துணிந்த சுபா, அந்த அறையில் இருந்த பெரிய கத்தியால், பினுராஜின் தலையில் பலமாக அடித்தார். அதில், பினுராஜ் மயங்கி விழுந்தார். ஆத்திரம் தணியாத சுபா, பினுராஜின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். தகவல் அறிந்த, மாதவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பினுராஜின் உடலை மீட்டனர். கொலை தொடர்பாக, சுபாவை கைது செய்தனர். கற்பழிக்க முயன்ற அக்கா கணவரை, கொழுந்தியாள் கொன்ற சம்பவம், மாதவரம் பால்பண்ணை பகுதியில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் இந்திய தண்டனை சட்டம் 302–வது சட்டப்பிரிவின் கீழ்  சுபா / ஹரிப்ரியா / ரேகா[10] மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் விசாரணை நடத்திய போலீஸார் ஹரிப்பிரியாவிடம் எழுதி வாங்கிக்கொண்டு மனிதாபிமான அடிப்படையில் விடுவித்தனர்.

 

தற்காப்பிற்காக நடந்த கொலை: இது குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் இந்திய தண்டனை சட்டம் 100–வது பிரிவின் கீழ் ஆறு விதமான தற்காப்பு சம்பவங்களில் எதிராளியிடம் இருந்து தற்காத்துக் கொள்ள, பாதிக்கப்படும் நபர் ஆயுதத்தை எடுத்தால் தப்பில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பலாத்கார முயற்சியின் போது, பெண் ஒருவர் தன்னை தற்காத்துக்கொள்ள, என்ன வேண்டுமானாலும், செய்யலாம் என்பதே அதன் அர்த்தமாகும். எனவே 02-02-2014 அன்று காலை வரையிலும் மாணவி ஹரிப்ரியாவை நாங்கள் சிறைக்கு அனுப்பவில்லை. தற்போது அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தாலும், சாதாரண சட்டப்பிரிவின் கீழ் அதனை மாற்றலாமா? என்பது பற்றியும் ஆலோசித்து வருகிறோம் என்றார்[11]. போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் மேற்பார்வையில் வடசென்னை இணை கமிஷனர் ஸ்ரீதர், மாதவரம் துணை கமிஷனர் விமலா, உதவி கமிஷனர் சங்கரலிங்கம், இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தொடர்ந்து ஆலோசித்து வருகிறார்கள்[12]. அருகில் உள்ளவர்கள் மாத்யூ எப்பொழுதும் குடித்து வருவது வழக்கம் மற்றும் நண்பர்களும் அவ்வாறே கலாட்டா செய்து வருகின்றனர் என்று அறிவித்தனர்.

 

ஆதரவு கூறும் மற்றவர்கள்: கல்வியில் ஆர்வம் சந்தர்ப்பவசத்தால் கொலை வழக்கில் சிக்கிய சுபா, கல்வியில் ஆர்வமுள்ள மாணவி. தேர்வுகளில், அவர் 88 சதவீதம் மதிப்பெண்களை பெற்றுள்ளார். தன் அக்கா கணவரின் தொல்லை குறித்து, தனது கல்லூரி தோழிகளிடம் கூறி, பலமுறை அழுதிருக்கிறார். அப்போது அவர்கள், படிப்பை முடித்து, நல்ல வேலையில் சேர்ந்து விட்டால், சுயமாக வாழலாம் என்று அவருக்கு ஆறுதல் கூறியுள்ளனர். அதே போன்று மாணவி சுபாவிற்கு ஆதரவாக, மாதவரம் சுற்றுவட்டாரப் பகுதி அனைத்திந்திய மாதர் சங்கத்தினரும் குரல் கொடுத்துள்ளனர்[13]. என்னதான் இருந்தாலும், தாய்-தந்தையர் இல்லாத நிலையில் இளம்பெண்கள் இவ்வாறு அவதிபடும் நிலையில் தான் இருக்கிறார்கள் என்பது வருத்தப்பட வேண்டிய விசயமாக இருக்கிறது. ஒருபக்கம் அடைக்கலம் தருகிறோம் என்பது, மறுபக்கம் காமத்துடன் நடக்க முயல்வது என்பது குறிப்பிட்ட ஆண்களின் வேலையாக இருக்கிறது. இவர்கள் மாறாவிட்டால், மாற்ரத்தான் வேண்டியுள்ளது.

 

வேதபிரகாஷ்

© 03-02-2014

 

 


[3] தினத்தந்தி, பலாத்காரம்செய்யமுயன்றதால்ஆத்திரம்அக்காள்கணவரைகழுத்தைஅறுத்துகொன்றகல்லூரிமாணவிகைது, பிப்ரவரி 1, 2014.

[6] தினமணி, பலாத்காரமுயற்சியில்அக்காள்கணவர்கொலை: கைதானகல்லூரிமாணவியைவிடுவித்தபோலீஸார், பிப்ரவரி 1, 2014

[9] தினமலர், கற்பழிக்கமுயன்றஅக்காகணவரைகழுத்தறுத்துகொன்றகல்லூரிமாணவி, பிப்ரவரி 1, 2014

[11] தினமணி, பலாத்காரமுயற்சியில்அக்காள்கணவர்கொலை: கைதானகல்லூரிமாணவியைவிடுவித்தபோலீஸார், பிப்ரவரி 1, 2014