Posts Tagged ‘வழக்கறிஞர்’

தகாத உறவால் பெண்-வழக்கறிஞர் கொலை – சமூக பிரஞையுடன் ஊடகங்கள் செய்திகளை வெளியிட வேண்டும் – கணவன் – மனைவிகளும் தாம்பத்தியத்தைப் போற்றி வளர்க்க வேண்டும்!

நவம்பர்6, 2016

தகாத உறவால் பெண்-வழக்கறிஞர் கொலை – சமூக பிரஞையுடன் ஊடகங்கள் செய்திகளை வெளியிட வேண்டும் – கணவன் – மனைவிகளும் தாம்பத்தியத்தைப் போற்றி வளர்க்க வேண்டும்!

honour-womanhood-position-of-women-hindu

தகாத உறவின் அலங்கோலம், அசிங்கம், வக்கிரம்: இதுகுறித்து கார்த்திகேயன் அளித்த பரபரப்பு வாக்குமூலம்[1]: “மசாஜ் பார்லரில் வைத்துதான் லட்சுமி எனக்கு பழக்கமானார். அதிக வயது வித்தியாசம் என்றபோதிலும் அவரது அழகில் மயங்கி காதலை சொன்னேன். அவரும் 30 வருடங்களுக்கும் மேலாக கணவனை பிரிந்து வாழ்ந்ததால், காதலை ஏற்றுக்கொண்டார். எங்களது காதல் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான், தனது மகனை பெங்களூர் அனுப்பி வைத்தார். எனக்கும் நல்ல நிறுவனத்தில் தனது பழக்கத்தை பயன்படுத்தி வேலை வாங்கி கொடுத்தார். தினமும் அவரோடு உல்லாசமாக இருப்பது வழக்கம். கணவனை பிரிந்து இருந்த ஏக்கம் முழுவதையும் நானே மொத்தமாக தீர்த்து வைக்க வேண்டியதாயிற்று[2]. உடல் களைத்தாலும் அவர் விடுவதில்லை[3]. நான் ஒரு செக்ஸ் அடிமை போல நடத்தப்பட்டேன். இதனால் வெறுப்பாகிப்போய், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். 8 மாத குழந்தை எங்களுக்கு உள்ளது. லட்சுமியுடனான உறவை நான் கட் செய்ததும், அவரால் விரக தாபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. என்னை உறவுக்கு அழைத்து தொல்லை செய்தார். சம்பவத்தன்றும், என்னை அழைத்து மீண்டும் மீண்டும் உறவு கொள்ள கட்டாயப்படுத்தினார். ஆபீசில் வேலை இருப்பதாக மனைவியிடம் கூறிவிட்டு இங்கேயே இருக்குமாறும், அப்படி செய்யாவிட்டால், கள்ளக்காதல் ஆதாரங்களை வெளியிட்டு அவமானப்படுத்திவிடுவேன் என்றும் லட்சுமி மிரட்டினார். கோபமடைந்த நான் அதை வெளிக்காட்டாமல் மீண்டும் அவரோடு உறவு கொண்டேன். அப்போது நைசாக கத்தியால் அவரை சரமாரியாக குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டேன். அக்கம்பக்கத்தினர் என்னை அவரது மகன் போன்ற நபர் என நினைத்திருந்தனர். ஆனால், வாட்டர் கேன் போட வரும் நபர்கள் சிலருக்கு எங்கள் மீது சந்தேகம் இருந்தது. இப்படித்தான் சிக்கிக்கொண்டேன்,” இவ்வாறு அவர் தெரிவித்தார்[4].

honour-womanhood-position-of-women

கார்த்திக்கின் வாக்குமூலம் சமூக சீரழிவைக் காட்டுகிறது: கார்த்திக்கின் வாக்குமூலம் கணவன்-மனைவி உறவைக் கொச்சைப் படுத்தும் தன்மை, கணவன் மனைவியை ஏமாற்றுவது, மனைவி கணவனை ஏமாற்றுவது, குடும்பநெறிகளை காப்பதை விடுத்தல், முதலிய சீரழிவுகளைக் காட்டுகிறது.

1.   மசாஜ் பார்லரில் வைத்துதான் லட்சுமி எனக்கு பழக்கமானார்.

 

மசாஜ் பார்லரில் இவர்கள் ஏன் செல்ல வேண்டும், அங்கு, இவர்களுக்கு என்ன பழக்கம் என்பது விளக்கப்படவில்லை.
2.   அதிக வயது வித்தியாசம் என்றபோதிலும் அவரது அழகில் மயங்கி காதலை சொன்னேன். இதில் கார்த்திக்கின் சபலம் தான் மிஞ்சியுள்ளது. தன்னைவிட 23 வயது அதிகமான பெண்ணிடம் எப்படி காதல் வரும்?
3.   அவரும் 30 வருடங்களுக்கும் மேலாக கணவனை பிரிந்து வாழ்ந்ததால், காதலை ஏற்றுக்கொண்டார். இப்படி இவர் சொல்வதே வேடிக்கையாக இருக்கிறது. இவர் காதலிக்கிறேன் என்பதும், அவர் காதலை ஏற்றுக் கொண்டார் என்பது, இதைவிட வேறு விசயம் உள்ளது என்றாகிறது.
4.   எங்களது காதல் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான், தனது மகனை பெங்களூர் அனுப்பி வைத்தார் படித்த அந்த பையன் என்ன முட்டாளா அல்லது தாய் அவ்வாறு சொல்வதை கேட்டு சென்று விட்டானா?
5.   எனக்கும் நல்ல நிறுவனத்தில் தனது பழக்கத்தை பயன்படுத்தி வேலை வாங்கி கொடுத்தார் வேலை வாங்கிக் கொடுத்தார் என்றால், வேலையில்லாமல், எப்படி மசாஜ் பார்லர் போகலாம், காதலிக்கலாம்?? இதெல்லாம் மர்மமாக இருக்கின்றனவே?
6.   தினமும் அவரோடு உல்லாசமாக இருப்பது வழக்கம். கணவனை பிரிந்து இருந்த ஏக்கம் முழுவதையும் நானே மொத்தமாக தீர்த்து வைக்க வேண்டியதாயிற்று[5]. இப்படி சொல்வது இவரது அயோக்கியத் தனத்தை மறைத்து, அப்பெண்ணின் மீது முழுவதுமாக பழிபோடுவதாக உள்ளது.
7.   உடல் களைத்தாலும் அவர் விடுவதில்லை[6]. நான் ஒரு செக்ஸ் அடிமை போல நடத்தப்பட்டேன். காத்ல் என்று ஆரம்பித்து, உறவு கொள்ள ஆரம்பித்ததே இவன் தானே? பிறகு என்ன இந்த பழம் புளிக்கிறது என்ற கதை?
8.   இதனால் வெறுப்பாகிப்போய், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். 8 மாத குழந்தை எங்களுக்கு உள்ளது. உண்மையில் உடலுறவு பிரச்சினை என்றால், திருமணம் செய்து கொண்டு தான் தவிர்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
9.   லட்சுமியுடனான உறவை நான் கட் செய்ததும், அவரால் விரக தாபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. என்னை உறவுக்கு அழைத்து தொல்லை செய்தார். ஒன்றரை வரிடத்திற்கும் மேலாக, இரண்டு பெண்களுடன் உறவு வைத்திருக்கும், இவனது பேச்சு நம்புவதாக இல்லை, இயற்கையாகவும் இல்லை.
10.  சம்பவத்தன்றும், என்னை அழைத்து மீண்டும் மீண்டும் உறவு கொள்ள கட்டாயப்படுத்தினார். ஆபீசில் வேலை இருப்பதாக மனைவியிடம் கூறிவிட்டு இங்கேயே இருக்குமாறும், அப்படி செய்யாவிட்டால், கள்ளக்காதல் ஆதாரங்களை வெளியிட்டு அவமானப்படுத்திவிடுவேன் என்றும் லட்சுமி மிரட்டினார். கோபமடைந்த நான் அதை வெளிக்காட்டாமல் மீண்டும் அவரோடு உறவு கொண்டேன். இதெல்லாம் பரஸ்பர உறவுகள் எல்லைகளை மீறிய விவகாரங்களே. சுற்றியுள்ளவர்களுக்கு, மற்றவர்களுக்குத் தெரிந்து விட்டது என்ற நிலையிலும், வீட்டிலேயே அடைப்பட்டுக் கிடக்கும் நிலையிலும், ஒரு பெண்ணை அளவுக்கு அதிகமாக உசுப்பேற்றி விட்டது, மற்றொரு பெண்ணுடன் ஒன்றரை வருடம் வாழ்ந்து வருவது, லக்ஷ்மிசுதா தன்னை ஏமாற்றுகிறான் என்று தான் கொள்வாள்.

honour-womanhood-tamil-book-wrappers

படித்த பெண்-வழக்கறிஞறின் பொறுப்பற்ற, தகாத உறவு: 1985-86ல் கணவனுடன் பிரிவு ஏற்பட்டது என்றால், ஒழுங்காக இருந்த படித்த வழக்கறிஞர் தீடீரென்று மசாஜ் பார்லருக்குச் செல்வது, ஆண்களுடன் தொடர்பு வைத்துக் கொள்வது, தன்னை விட 23 வயதான ஆணுடன் திருமணம் செய்து கொள்ளாமல் உடலுறை வைத்துக் கொள்வது முதலியவை மிகக் கேவலமான செயல்கள். சட்டம் தெரிந்த பெண் அவ்வாறு செய்தது, மிக அசிங்கமானதும் கூட. ஆகையால், அவரது பங்கை, தவறிய நிலையை, ஒழுக்கமற்ற செயல்களை மறுக்க முடியாது. என்னத்தான் பெண் மாட்டிக் கொள்வாள் என்ற உணர்வில்லாமல், உறுதியாக இருந்திருக்க வேண்டும். அவ்வாறில்லாததால், அவரும் தனது முடிவுக்கு உடந்தையாகிறார்.

honour-womanhood-tamilnadu-cm-and-governor-wishing

கணவன்மனைவி தாம்பத்திய உறவுகளை மேம்படுத்துவது, போற்றுவது வளர்ப்பது எப்படி?: கணவன் – மனைவி தாம்பத்திய உறவுகள் பிரிவது, கெடுவது, சீரழிவது முதலியவற்றை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. “கள்ளக்காதல் கசந்ததால் கொலை செய்தேன்…..செக்ஸ் அடிமை போல நடத்தினார்.. கோபத்தில் குத்தி கொன்றேன்..

58 வயது பெண் வக்கீல் கொலையில் 35 வயது கள்ளக்காதலன்”, என்றெல்லாம் ஊடகங்கள் கொச்சைப்படுத்தி, தலைப்பீட்டு செய்திகளை வெளியிட்டுள்ளன. ஆனால், –

  1. கணவன் – மனைவி உறவை மேம்படுத்தி வாழ்க்கை சிறக்க என்ன வழி,
  2. விவாக ரத்து, தனித்து வாழ்தல் போன்றவற்றைத் தடுப்பது எப்படி?
  3. பெற்றோர், உற்றோர், மற்றும் அவ்வுரவுகளை சரிசெய்வது எப்படி?
  4. சமூகத்தில்சாதிகமாகி வரும் அச்சீரழிவை தடுப்பது எப்படி,
  5. தகாத காமத்தைத் தடுக்க என்ன வழி? பெண்களுக்கு மாற்று வழி என்ன?
  6. தாம்பத்தியத்தைப் போற்றுவது எப்படி,
  7. மகன் அல்லது மகள் முதலியோருடன் வாழ்வது, பெற்றோருடன் வாழ்வது போன்றவற்றை விலக்காமல் இருப்பது எப்படி?
  8. அவர்கள் பெற்றோரின் மீது அக்கரைக் கொண்டிருப்பது எப்படி?
  9. கூட்டுக் குடும்பத்தை, பந்தத்தை வளர்ப்பது எப்படி?
  10. இதற்கு தியானம், யோகா, உபன்யாடங்கள்-சொற்பொழிகள் கேட்டல், போன்றவை உதவுமா?

என்பனவற்றைப் பற்றி அக்கரைக் கொண்டதாகத் தெரியவில்லை. ஊடகங்கள் வெறும் பொழுதுபோக்கு, உணர்ச்சிகளைத் தூண்டுதல், போன்ற நோக்கத்தை விட்டு, சமூக அக்கறையுடன் செய்திகளை வெளியிட வேண்டும்.

© வேதபிரகாஷ்

06-11-2016

when-irreligion-is-prominent-in-the-familythe-women-of-the-family-become-corrupt-and-from-the-degradation-of-womanhood-comes-unwanted-progeny

[1] தமிழ்.ஒன்.இந்தியா,செக்ஸ் அடிமை போல நடத்தினார்.. கோபத்தில் குத்தி கொன்றேன்.. பெண் வக்கீல் கள்ளக்காதலன் பரபர வாக்குமூலம், By: Veera Kumar, Published: Saturday, November 5, 2016, 10:15 [IST].

[2] தமிழ்.வெப்துனியா, கள்ளக்காதல் கசந்ததால் கொலை செய்தேன் – பெண் வழக்கறிஞர் கொலையில் அதிர்ச்சி, வெள்ளி, 4 நவம்பர் 2016 (16:12 IST).

[3] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/why-i-was-murder-murderer-confessions-in-the-female-lawyer-murder-case-116110400032_1.html

[4] http://tamil.oneindia.com/news/tamilnadu/insurance-company-staff-who-killed-woman-lawyer-gives-the-reason-266439.html

[5] தமிழ்.வெப்துனியா, கள்ளக்காதல் கசந்ததால் கொலை செய்தேன் – பெண் வழக்கறிஞர் கொலையில் அதிர்ச்சி, வெள்ளி, 4 நவம்பர் 2016 (16:12 IST).

[6] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/why-i-was-murder-murderer-confessions-in-the-female-lawyer-murder-case-116110400032_1.html

 

தகாத உறவால் கொலையுண்ட மெத்தப் படித்த பெண் வழக்கறிஞரும், பொறுப்பற்று தன்னை விட 23 வயது அதிகமான பெண்ணுடன் உறவுவைத்து கொலைசெய்த பாதகனும்!

நவம்பர்6, 2016

தகாத உறவால் கொலையுண்ட மெத்தப் படித்த பெண் வழக்கறிஞரும், பொறுப்பற்று தன்னை விட 23 வயது அதிகமான பெண்ணுடன் உறவுவைத்து கொலைசெய்த பாதகனும்!

lakhsmi-sudha-advocate-murder-02-11-2016

மகன் தனியாக குடித்தனம் நடத்தும் நிலையில், கணவனைப் பிரிந்து, வாழ்ந்த மனைவி: மேற்கு மாம்பலம் குமரன் நகரில் வசித்து வந்த லட்சுமி சுதா (58) உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்தார்[1]. கடந்த 30 ஆண்டுகளாக கணவர் பிரகாகரனைப் பிரிந்து தனியே வசித்து வந்தார்.  கணவன்-மனைவி உறவுமுறை தோல்வி என்று தெரிகிறது. வழக்கறிஞர் என்பதால் எல்லாம் முறைப்படி செய்திருப்பார். லட்சுமிசுதாவின் மகன் திருமணம் ஆகி பெங்களூரில் வேலை செய்து வருகிறார்.  வேலை மற்றும் திருமணம் ஆனால், மகன் இவ்வாறு தனியாகச் செல்வதும் இயல்பாகி விட்டது. இதனால் மேற்கு மாம்பலத்தில் லட்சுமிசுதா மட்டும் தனியாக இருந்தார். கடந்த ஐந்து ஆண்டுகளாக வேலை செய்யாமல் வீட்டிலேயே வசித்து வருகிறார். இவர் வசித்து வந்த வீட்டின் கீழ் தளத்தில் அவரது சித்தப்பா சுந்தரம் குடியிருந்தார்[2]. இவரது தங்கை வித்யா அருளின் வீடு குமரன் நகரில் உள்ளது. இங்கிருந்துதான் லட்சுமி சுதாவுக்கு அடிக்கடி உணவு கொடுத்தனுப்பப்பட்டு வந்தது[3]. வேலைக்காரி விமலா வீட்டை சுத்தம் செய்து விட்டு செல்வது வழக்கம்[4]. வசதி இருந்ததால், இவர் இப்படி வாழ்ந்தார், இல்லையென்றால், அதற்கும் வழியில்லாமல் போயிருக்கும்.

lakhsmi-sudha-advocate-murder-news7tamil-02-11-2016

தங்கை தொடர்பு கொண்டபோது பதில் இல்லாததால், நேரில் வந்து பார்த்த போது கொலௌண்ட நிலையில் கிடந்த அக்காள்: விமலா திங்கட்கிழமை 31-10-2016 அன்று வந்து வேலை செய்து விட்டுச் சென்றாள். மறுபடியும் 02-11-2016 உதன்கிழமை அன்று வேலைக்கு வந்த போது, கதவு சாத்தப்பட்டிருந்தது. இதனால், விமலா வித்யாவுக்கு அறிவித்தாள். லட்சுமி சுதாவை அவரது தங்கை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. நேற்று காலை போன் செய்தபோதும் லட்சுமி சுதா போனை எடுக்க வில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது தங்கை, நேற்று மாலையில் லட்சுமி சுதாவின் வீட்டுக்கு நேரில் வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டப்படாமல் லேசாக சாத்தப்பட்டு இருந்தது. கதவை திறந்து உள்ளே சென்றபோது, ஹாலில் ரத்த வெள்ளத்தில் லட்சுமி சுதா இறந்து கிடந்தார். அவரது உடலில் 13 இடங்களில் கத்திக் குத்து இருந்தது. தங்கையின் அலறல் சத்தத்தை கேட்டு அருகே இருந்தவர்கள் கூடினர், என்று தமிழ்.இந்து விவரித்துள்ளது[5]. லட்சுமி சுதாவின் வீட்டில் பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்துள்ளன. கொள்ளைக் காக இந்த கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காக கொலை செய்யப்பட்டாரா என்பதை விசா ரிக்க 3 தனிப்படைகள் அமைக் கப்பட்டுள்ளன.

 lakhsmi-sudha-advocate-murder-house-02-11-2016

மற்ற நாளிதழ்கள் இதே கதையை வேறுவிதமாகக் கூறுவது: இந்நிலையில் 02-11-2016 அன்று காலை அவரது உறவினர், லட்சுமி சுதாவை காண வீட்டிற்கு வந்தபோது துர்நாற்றம் வீசியதால், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்து இருக்கிறார்[6]. 2 நாட்களுக்கு முன்னரே அவர் கொலை செய்ய பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். லட்சுமிசுதாவுக்கு நன்கு அறிமுகமான தெரிந்த நபரே அவரை கொலை செய்திருக்க வேண்டும் என்றும் போலீசார் கருதினர். இதுதொடர்பாக அக்கம் பக்கத்தில் விசாரித்தனர். லட்சுமிசுதாவின் வீட்டிற்கு தண்ணீர் கேன் சப்ளை செய்யும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. 2 நாட்களுக்கு முன்பு லட்சுமி சுதாவை பார்ப்பதற்காக பெண் ஒருவர் வந்து சென்றதும் தெரியவந்தது. அவரிடமும் போலீசார் விசாரித்தனர். அப்போது கடந்த 31-ந்தேதி லட்சுமிசுதாவுடன் வாலிபர் ஒருவர் வீட்டில் அமர்ந்து நீண்ட நேரமாக பேசியது தெரிய வந்தது. அவர் யார் என்பது பற்றி போலீசார் விசாரித்தனர்[7]. அப்போது அவரது பெயர் கார்த்திக் (35) என்பது தெரிய வந்தது. அவர்தான் கொலையாளி யாக இருக்க வேண்டும் என்கிற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது[8]. இதில் துப்பு துலங்கியது. கடந்த 31-ந்தேதி அன்று லட்சுமிசுதாவின் வீட்டிற்கு வந்து சென்ற கார்த்திக் அவரை கொலை செய்து விட்டு தப்பி சென்றது தெரிய வந்தது. இது தொடர்பாக குமரன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.  இந்நிலையில், வழக்கறிஞர் லட்சுமியின் காதலன் என கூறப்படும், கார்த்திக் நொளம்பூரில் அவர் மனைவி, குழந்தையு டன் வசித்து வந்தார்.  தேடி சென்ற போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்[9].

lakhsmi-sudha-murder-02-11-2016

இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 23 வயது வித்தியாசம் பிறந்த தகாத காதல்: போலீஸ் விசாரணையில் வக்கீல் லட்சுமிசுதாவிற்கும் வாலிபர் கார்த்திக்குக்கும் கள்ளக்காதல் இருந்தது தெரியவந்தது[10]. தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் ஒன்றில் கார்த்திக் பணி புரிந்து வந்தார். அதே நிறுவனத்தில் லட்சுமிசுதா சட்ட ஆலோசகராக இருந்தார். அப்போதுதான் இருவரும் நெருங்கி பழகி உள்ளனர். 23 வயது வித்தியாசம் என்பதையும் மறந்து இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர்.  இந்த நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் கார்த்திக்கு திருமணம் நடைபெற்றது. தற்போது ஒரு குழந்தையும் உள்ளது. திருமணத்திற்கு பின்னர் கார்த்திக் வக்கீல் லட்சுமி சுதாவை சந்திப்பதை தவிர்த்து வந்துள்ளார். அவருடன் அதிகமாக பழகுவதையும் நிறுத்தி உள்ளார்.  இதனால் ஆத்திரம் அடைந்த லட்சுமி சுதா அடிக்கடி கார்த்திக்குடன் சண்டை போட்டுள்ளார்.
mambalam-woman-advocate-murder-05_11_2016_016_009
31-10-2016 அன்று நடந்த சண்டை கொலையில் முடிந்தது: இந்த தகராறு இருவருக்கும் இடையே  சமீப காலமாக முற்றியது. கடந்த 31-ந்தேதி அன்று இதுதொடர்பாக பேசுவதற்காகவே கார்த்திக் லட்சுமிசுதா வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது இருவருக்குமிடையே இது தொடர்பாக கடும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. திருமணத்திற்கு பின்னர் நீ விலகி செல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று லட்சுமிசுதா கூறி இருக்கிறார்[11]. இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறே கொலையில் முடிந்துள்ளது[12].  லட்சுமிசுதாவின் செயலால் ஆத்திரம் அடைந்த கார்த்திக் அவரை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்து விட்டு தப்பி சென்றார். அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் துப்பு துலக்கி கார்த்திக்கை கைது செய்தனர். இதுதொடர்பாக கார்த்திக் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித் துள்ளார். அதில் திருமண மான பின்னரும் லட்சுமி சுதா எப்போதும் போல பழகுமாறு கூறினார். ஆனால் என்னால் முடிய வில்லை. இதுதொடர்பாக எங்களுக்குள் ஏற்பட்ட தகராறே கொலையில் முடிந்தது என்றும் கார்த்திக் கூறியுள்ளார்.

 

© வேதபிரகாஷ்

06-11-2016

mambalam-woman-advocate-murder-05_11_2016_016_009-2

[1] தினகரன், சென்னை மேற்கு மாம்பலத்தில் பெண் வழக்கறிஞர் வெட்டிக் கொலை, Date: 2016-11-02 19:44:08

[2] Indian Express, Home-alone lawyer found dead at Mambalam, By Express News Service  |   Published: 03rd November 2016 04:23 AM  | Last Updated: 03rd November 2016 04:23 AM .

[3] தமிழ்.இந்து, சென்னை மேற்கு மாம்பலத்தில் தனியாக வசித்த பெண் வழக்கறிஞர் படுகொலை, Published: November 3, 2016 10:00 ISTUpdated: November 3, 2016 10:00 IST

[4] http://www.newindianexpress.com/cities/chennai/2016/nov/03/home-alone-lawyer-found-dead-at-mambalam-1534451.html

[5]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/article9298878.ece

[6] நியூஸ்7.தமிழ், மேற்கு மாம்பலம் பெண் வழக்கறிஞர் கொலை வழக்கில் அவரது காதலன் கைது!, November 04, 2016.

[7] http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=256100

[8] தமிழ்.ஒன்.இந்தியா, சென்னையில் பயங்கரம்.. வீட்டில் தனியாக இருந்த பெண் வக்கீல் வெட்டிக் கொலை, By: Karthikeyan, Updated: Wednesday, November 2, 2016, 21:14 [IST]

[9] http://ns7.tv/ta/lover-arrested-female-advocate-murder-case.html

[10] http://tamil.oneindia.com/news/tamilnadu/lawyor-murdered-chennai-266244.html

[11] தினத்தந்தி, 58 வயது பெண் வக்கீல் கொலையில் 35 வயது கள்ளக்காதலன் கைது, பதிவு செய்த நாள்: வெள்ளி, நவம்பர் 04,2016, 3:10 PM IST; மாற்றம் செய்த நாள்: வெள்ளி, நவம்பர் 04,2016, 3:10 PM IST.

[12] http://www.dailythanthi.com/News/State/2016/11/04151002/58year-old-women-Lawyer-murder–Arrested-35year-old.vpf

வயதான தாத்தா போன்ற நீதிபதி செக்ஸ் சில்மிஷம் செய்தார் என்று இளம் பெண் வக்கீல் புகார்!

நவம்பர்13, 2013

வயதான தாத்தா போன்ற நீதிபதி செக்ஸ் சில்மிஷம் செய்தார் என்று இளம் பெண் வக்கீல் புகார்!

intern_harassment-blog-snapshotபடிக்கும் சிறுமியர், இளம் பெண்கள், முதலியோர் பாலியல் ரீதியில் தொந்தரவுக்கு உட்படுத்தப்படுவது, பாதிக்கப்படுவது, இல்லை கற்பழிக்கப்படுவது வரை செல்வது ஏன் என்று ஆராயவேண்டியுள்ளது, ஆனால், உண்மை சொன்னால் கோபம் வருகிறது[1] அல்லது சொன்னவர்கள் மேலேயே பாய்கின்ற போக்கும் காணப்படுகின்றது[2]. டெல்லியில் சி.பி.ஐ.யின் பொன் விழா மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்சித் சின்கா சூதாட்டம், கற்பழிப்பு, லாட்டரி மற்றும் கேளிக்கைகள் பற்றி பேசுகையில், “நீங்கள் பாலியல் பலாத்காரத்தை தடுத்து நிறுத்தாவிட்டால் அதனை நீங்கள் விரும்பி வரவேற்பதாக அர்த்தம்” என்றார்[3]. பெண்ணிய குழுகிகளிடமிருந்து எதிர்ப்பு வந்ததால், தான் பேசியதை தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்று விளக்கமும் அளித்தார். இந்நிலையில், சட்டம் படிக்கும் மாணவி ஒருவர், செயற்முறை பயிற்சிக்காக, ஒரு முதிர்ந்த, மிகவும் பிரசித்தி பெற்ற, ஓய்வடைந்த உச்சநீதி மன்ற நீதிபதியிடம் சென்றபோது, அவர் சில்மிஷத்தில் இறங்கினாராம். ஸ்டெல்லா ஜோன்ஸ் என்ற மாணவி, இணைதளத்தில் தனது அந்த கசப்பான அனுபவத்தை கீழ்கண்டவாறு பதிவு செய்துள்ளார்[4].

In Delhi at that time (24 December 2012, Christmas Eve[5]), interning during the winter vacations of my final year in University, I dodged police barricades and fatigue to go to the assistance of a highly reputed, recently retired Supreme Court judge whom I was working under during my penultimate semester. For my supposed diligence, I was rewarded with sexual assault (not physically injurious, but nevertheless violating) from a man old enough to be my grandfather. I won’t go into the gory details, but suffice it to say that long after I’d left the room, the memory remained, in fact, still remains, with me[6].

பெண் வழக்குரைஞருக்கு உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பாலியல் தொந்தரவு அளித்ததாக எழுந்துள்ள புகார் குறித்து விசாரிக்க, மூன்று நீதிபதிகள் அடங்கிய தனிக் குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. பெண் வழக்குரைஞர் ஒருவர், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஒருவரால் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டார் என்று வெளியான செய்தி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவில் உள்ள தேசிய நீதி அறிவியல் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பில் பட்டம் பெற்ற மாணவி ஒருவர், அண்மையில் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தன்னை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக இணையதளத்தில் குறிப்பிட்டிருந்தார். கடந்த டிசம்பர் மாதம் 2012 தில்லியில் பயிற்சியில் இருந்தபோது ஹோட்டல் அறையில் தனக்கு அந்த நீதிபதி பாலியல் தொந்தரவு அளித்ததாகவும், தனது தாத்தா வயதிலான அவரின் செயல்பாட்டால் தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்[7].

இதுகுறித்து பிரபல ஆங்கில நாளிதழ்[8] ஒன்று செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இதை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.சதாசிவத்தின் கவனத்துக்கு வழக்குரைஞர் எம்.எல்.சர்மா எடுத்துச் சென்றார். இந்த விவகாரத்தை பத்திரிகையில் வெளியான செய்தியின் அடிப்படையில் தானாக முன்வந்து உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்[9]. பெண் வழக்குரைஞர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது குறித்து தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான அமர்வு முன் அட்டார்னி ஜெனரல் ஜி.இ.வாஹன்வதியும் செவ்வாய்க்கிழமை முறையிட்டார். பத்திரிகையில் வெளியாகிய செய்தியை வாசித்துக் காட்டினார். மேலும், இதை நீதிமன்றம் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பணிபுரியும் இடங்களில் பெண்களை பாலியல் துன்புறுத்தலில் இருந்து பாதுகாக்க விசாகா வழக்கில் உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே வகுத்தளித்துள்ள விதிமுறைகளை இந்த நீதிமன்றம் கவனத்தில் கொள்வது அவசியம் என்றும் வாஹன்வதி சுட்டிக்காட்டினார்[10].

இதையடுத்து, தலைமை நீதிபதி பி.சதாசிவம் கூறியதாவது: “அரசுத் தலைமை வழக்குரைஞராக இந்த விவகாரத்தில் நீங்கள் (வாஹன்வதி) எடுக்கும் முயற்சி பாராட்டுக்குரியது. இதை நாங்களும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. பெண் வழக்குரைஞரை உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பாலியல் ரீதியாக துன்புறுத்தினாரா, இல்லையா என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால், இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதில் இந்த நீதிமன்றம் அக்கறையுடன் உள்ளது. இதில் நடவடிக்கை எடுப்பதில் தாமதிக்க விரும்பவில்லை. பெண் வழக்குரைஞர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணி அளவில் எங்களிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து எனது தலைமையிலான அமர்வில் இடம் பெற்றுள்ள மற்ற இரு நீதிபதிகளிடமும் மதிய உணவு இடைவெளியின் போது ஆலோசித்தேன். அதுகுறித்து விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.எம்.லோத்தா, ஹெ.எல். தத்து, ரஞ்சனா பிரகாஷ் ஆகியோர் அடங்கிய தனிக் குழுவை நியமித்துள்ளேன்[11]. இந்தக் குழுவானது புகார் குறித்து முழுமையாக விசாரிக்கும். செவ்வாய்க்கிழமை மாலையே விசாரணையைத் தொடங்கும். உண்மையைக் கண்டறிந்து அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்”, என்றார் அவர்[12].

படிக்கும் சிறுமியர், இளம் பெண்கள், முதலியோர் பாலியல் ரீதியில் தொந்தரவுக்குட்படுத்தப்படுவது, பாதிக்கப்படுவது, இல்லை கற்பழிக்கப்படுவது வரை செல்வது நெருக்கத்தினால் தான். மேலும் இக்காலத்தில், இந்தியாவில் செக்ஸ் பற்றி வெளிப்படையாக பேசும் பழக்கம் உருவாகி விட்டது. சினிமாக்களில் மட்டுமல்லாது, டிவியிலேயே, செக்ஸ் காட்சிகள், திரைப்படங்கள் முதலின அதிகமாகவே காட்டுகிறார்கள். இதனால், காண்பதை தொடவேண்டும் என்ற வக்கிரமான எண்ணம் ஆண்களின் மனங்களில் ஏற்படுகின்றது, வளர்கின்றது, சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருன்றது. இதற்கு பெண்கள் காரணமாக இருக்கிறார்கள் என்பதை பெண்கள் ஏற்றுக் கொள்ளாமல் எதிர்ப்பது மிகவும் மோசமான நிலையை உருவாக்கியுள்ளது. இதைப் பற்றி ஏகப்பட்ட செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. படித்த, நாகரிக பெண்களைப் போல மற்ற கோடிக்கணக்கான பெண்களை ஒப்பிட முடியாது. இப்பொழுது படித்த பெண்களுக்கே இத்தகைய பாலியல் கொடுமைகள் நேரிடும் போது, மற்றவர்களின் நிலை என்னாவது என்பதை அறியலாம்.

மேலும் சினிமா நடிக-நடிகைருக்குத் தேவையில்லாத பட்டங்களும் கொடுக்கப் படுகின்றன. அத்தகைய கூத்துகள் கல்லூரிகளில், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் நடந்தேறுகின்றன[13]. இதனால், அப்பட்டங்களின் மதிப்பே குறைந்து விடுகிறது. பல்கலைக்கழகத்தின் பெரிய பொறுப்பில் இருப்பவர்கள், அத்தகைய நெருக்கத்தின் மயக்கத்தினால் பாலியிலலில் ஈடுபட்டு மாட்டிக் கொள்ளும் நிலையும் ஏற்படுகின்றது[14]. படிப்பு சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்களே காமுகர்களாக, கொலைகாரர்களாக ம்ழாறும் நிலையும் வந்துவிட்டது[15]. எம்.பில், பி.எச்டி படிக்கும் மாணவிகளிடம் கெய்டுகள் மற்றவர்கள், அம்மாதிரியான பாலியல் தொந்தரவுகள் செய்து வருகின்றார்கள். அவற்றில் பெரும்பாலும் 99% வெளியே வருவதில்லை. ஒன்று வெளியே சொன்னால் படிப்பு முடிக்க முடியாது, பிறகு சொல்லமுடியாது, ஏனெனில் அது மானப்பிரச்சினையாகி விடும்.


[12] தினமணி, பெண் வழக்குரைஞருக்கு பாலியல் தொந்தரவு: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியை விசாரிக்க தனிக் குழு அமைப்பு, First Published : 13 November 2013 05:54 AM IST

[13] Vedaprakash, சினிமாகாரர்கள், நிகர்நிலைபல்கலைக்கழகங்கள், “டாக்டரேட்கொடுப்பதுஇத்யாதி!,

http://academicdegradation.wordpress.com/2010/02/01/doctorates-conferred-on-actresses-actors/

[15] வேதபிரகாஷ், 18 பெண்களைகற்பழித்துகொலைசெய்தஆசிரியர்! -`சயனைட்கொடுத்துகொன்றபயங்கரம்! http://academicdegradation.wordpress.com/2009/10/22/18-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/