Posts Tagged ‘துபாய்’

சுனந்தா புஸ்கர் இயற்கையான இறப்பு தற்கொலையாகி, தற்கொலை கொலையான மர்மங்கள், புதிர்கள், பதில் சொல்லப்படாத கேள்விகள்! (2)

ஜனவரி15, 2015

சுனந்தா புஸ்கர் இயற்கையான இறப்பு தற்கொலையாகி, தற்கொலை கொலையான மர்மங்கள், புதிர்கள், பதில் சொல்லப்படாத கேள்விகள்! (2)

Sunanda Sasi

Sunanda Sasi

2014லேயே விஷத்தினால் இறந்திருப்பார் என்று சொல்லப்பட்டது: மாஜி மத்திய அமைச்சர் சசிதரூர் மனைவி சுனந்தா புஷ்கர், விஷம் காரணமாகதான் மரணம் அடைந்தார் என எய்ம்ஸ் டாக்டர்கள் குழு போலீசிடம் புதிய அறிக்கையை அளித்துள்ளது[1]. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை யில் மூன்று டாக்டர்கள் கொண்ட குழு சுனந்தாவின் உடலை பிரேத பரிசோதனை செய்தது. இந்த பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது[2]. புதிய அறிக்கை, 3 பேர் கொண்ட டாக்டர் குழுவால் தயார் செய்யப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை நடத்திய மூன்று டாக்டர்கள் அடங்கிய உறுப்பினர் குழு புதிய அறிக்கை, மத்திய தடய அறிவியல் ஆய்வக (சிஎப்எஸ்எல்) கண்டுபிடிப்புகள் அடிப்படையில் தயார் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த புதிய அறிக்கையில், இறந்து போன சுனந்தா புஷ்கரின் உடலில் சிறுநீரகம், கல்லீரல், இதயம் சீராக இயங்கியதாகவும் அவரது மரணம் விஷம் காரணமாகவே ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது[3]. இந்த புதிய அறிக்கை ஒன்பது நாட்களுக்கு முன்பு போலீசிடம் சமர்ப்பிக்கப்பட்டது[4].

Sasi, Sunanda and sons through Tilothama

Sasi, Sunanda and sons through Tilothama

மர்மமுடிச்சுகளில் சிக்கியுள்ள கொலை வழக்கு: சுனந்தா புஷ்கர் கொலை வழக்கில் மேலும் மேலும் பல மர்மங்கள் அதிகரித்து வருகின்றன. முரண்பாடான கருத்துக்கள், பல விதமான மருத்துவ அறிக்கைகள், பல்வேறு அறிக்கைகள் இந்த வழக்கை மேலும் மேலும் குழப்பமாக்கி வருகின்றன. ஆனால், இவற்றையெல்லாம் ஊடகங்கள் தாம் செய்து வருகின்றன என்பது குறிப்பிடத் தக்கது. இந்த வழக்கு தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள பல்வேறு வாக்குமூலங்கள் முரண்பாடாக உள்ளன. டெல்லி போலீஸாருக்கு மிகப் பெரிய சவாலாக மாறியுள்ளது சுனந்தா கொலை வழக்கு விசாரணை[5].  மேலும், சசி காங்கிரஸ் எம்பி மற்றும் அரசியல்செல்வாக்கு முதலியவை உள்ளவர் என்பதாலும், சுப்ரமணியம் சுவாமி இவ்வழக்கில் கருத்துகளை அடிக்கடி பல விசயங்களை தெரிவித்து வருவதாலும், பரபரப்பு அதிகமாகவே ஏற்பட்டுள்ளன. ஊடகங்களும், சுப்ரமணியம் சுவாமியை பிஜேபிக்காரர் என்று குறிப்பிட்டு பிரச்சினை செய்து வருகின்றன. அதாவது காங்கிரஸ்-பிஜேபி பிர்ச்சினையாக்க முயன்று வருகின்றன.

Sasi-Sunanda-third-marriage-with-each other

Sasi-Sunanda-third-marriage-with-each other

வேலைக்காரர் நரேன் கூறிய விசயங்கள்: சசி தரூர், சுனந்தா இடையிலான உறவு குறித்துத்தான் முக்கிய பார்வை விழுந்துள்ளது. அவர்களுக்கு இடையிலான உறவின் தன்மை குறித்து பல கருத்துக்கள் கிளம்பியுள்ளன. சசி தரூர் வீட்டு வேலைக்காரர் நரேனிடம் டெல்லி போலீஸார் விசாரணை நடத்தியபோது கேத்தி என்ற பெயரை அவர் கூறியுள்ளார். சசி தரூர், சுனந்தா இடையே சண்டை மூள்வதற்கு இவர்தான் காரணம் என்றும் நரேன் கூறியுள்ளார். அவர்களது கருத்தின்படி கணவர் மனைவிக்கு இடையே மோதல் இருந்துத போல தெரியவில்லை என்று கூறியுள்ளனர். கேரள காங்கிரஸ் தலைவர்கள் சிலர் சுனந்தாவின் மரணத்திற்குப் பின்னர் கருத்து தெரிவிக்கையில், இருவருக்கும் இடையே பெரிய சண்டை நடந்ததாக கூறியிருந்தனர். அதேசமயம் சில காங்கிரஸ் தலைவர்கள், கணவன் மனைவிக்கு இடையே சுமூகமான உறவு இருந்ததாக கூறியுள்ளனர்.

 

Tilothama - first wife of Sasi

Tilothama – first wife of Sasi

கேத்தி, சுனில் சாப்: நரேனிடம் போலீஸார் நடத்திய விசாரணையின்போது இந்த இரு பெயர்கள் குறித்தும் தெரிய வந்தன. சுனந்தா, சசி இடையே சண்டை மூள கேத்திதான் காரணம் என்பது நரேனின் வாக்குமூலமாகும். கேத்திக்காக துபாயில் ஒருமுறை சசி – சுனந்தா சண்டை போட்டதாக நரேன் கூறியுள்ளார். அதேபோல பல இடங்களில் கேத்தி தொடர்பாக இருவருக்கும் இடையே சண்டை மூண்டதாக அவர் கூறியுள்ளார். சுனில் சாப் என்பது சுனில் தாக்கரு என்று தெரிய வந்துள்ளது. இவர் சசி, சுனந்தா குடும்ப நண்பராம். அவரிடமும் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால் அவர் சுனந்தா எப்படி இறந்தார் என்பது குறித்து தனக்கு தெரியவில்லை என்று கூறி விட்டாராம்.

 

Christa Giles, Tharoor’s second wife

Christa Giles, Tharoor’s second wife

தரூரிடம் விரைவில் விசாரணை: இதற்கிடையே, சசி தரூர் டெல்லி வரும்போது அவரிடம் விசாரணை நடத்த டெல்லி போலீஸார் முடிவு செய்துள்ளனர். அப்போது நரேன் வாக்குமூலத்தை வைத்து அவரிடம் கேள்வி கேட்கப் போகின்றனராம். மேலும் கேத்தி குறித்தும் சசியிடம் கேட்கப்படவுள்ளது. டெல்லி போலீஸாருக்கு முழு ஒத்துழைப்பு தருவேன் என்று ஏற்கனவே சசி கூறியுள்ளார். சில நாட்களாக கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்த காங்., – எம்.பி., சசி தரூர், நேற்று டில்லி சென்றார். இதனால், சுனந்தா கொலை வழக்கு குறித்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தக் கூடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதுகுறித்து, டில்லி போலீஸ் கமிஷனர் பி.எஸ்.பஸ்ஸியிடம் பத்திரிகையாளர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். பத்திரிகையாளர்களிடம் கமிஷனர் பஸ்ஸி கூறியதாவது[6]: “சுனந்தா கொலை வழக்கு தொடர்பான விசாரணை முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரிடமும் விசாரணை நடத்தப்படும். ஊகங்களின் அடிப்படையில் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாது. சிறப்பு விசாரணைக் குழுவினர், நேர்மையான முறையிலும், வெளிப்படையாகவும் விசாரணை நடத்தி வருவதால், இதில், யாருக்கும் சந்தேகம் ஏற்பட வாய்ப்பில்லை. விசாரணையின் முடிவில் அனைத்து உண்மைகளும் வெளிவரும். சசி தரூர் டில்லி வந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. வழக்கு தொடர்பாக தேவை இருந்தால், ஓரிரு நாட்களில் அவரிடம் விசாரணை நடத்தப்படும்”, இவ்வாறு அவர் கூறினார்[7].

mehr-tarar-with another boyfriendகேரள கிம்ஸ் மருத்துவமனை அறிக்கை: திருவனந்தபுரத்தில் உள்ள கிம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள், சுனந்தாவுக்கு அவரது மரணத்திற்கு 2 நாட்களுக்கு முன்பு முழங்கால் வலிக்கான சிகிச்சையைக் கொடுத்துள்ளனர். மேலும் கிம்ஸ் மருத்துவமனையில் சுனந்தாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக கிம்ஸ் மருத்தவமனையிடம் அறிக்கை பெறப்படவுள்ளது. சுனந்தாவுக்கு உயிராபத்து ஏற்படுத்தக் கூடிய எந்த நோயும் உடலில் இல்லை என்று ஏற்கனவே கிம்ஸ் டாக்டர்கள் கூறியுள்ளனர். மேலும் அவருக்கு சீரியஸான பிரச்சினை இல்லை என்றும் கூறியுள்ளனர். அப்படி இருந்திருந்தால் நாங்கள் அவரை டிஸ்சார்ஜ் செய்திருக்கவே மாட்டோமே என்றும் அவர்கள் கூறியுள்ளனர். மேலும் மன அழுத்தம் தொடர்பாக தாங்கள் எந்த மருந்தையும் அவருக்குப் பரிந்துரைக்கவில்லை என்றும் கிம்ஸ் டாக்டர்கள் கூறியுள்ளனர்[8].

mehr-tarar-with her ex-husband

mehr-tarar-with her ex-husband

இந்தியா டுடே எழுப்பியுள்ள ஒன்பது கேள்விகள்[9]: ஊடகங்களில் வந்துள்ள விசயங்களைத் தொகுத்து, ஆராய்ச்சி செய்து, இந்தியா டுடே / எட்லைன்ஸ் டுடே கீழ்கண்ட ஒன்பது கேள்விகளை எழுப்பியுள்ளது. இதில் சுப்ரமணியம் சுவாமியின் உபயம் அதிகமாகவே காணப்படுகிறது:

  1. சுனந்தா புஸ்கரின் இடது கையில் ஒரு காயம் ஏற்பட்டுள்ளது. இது யாரோ கடித்ததால் உண்டானது. ஆகவே, அவரது கையினை அவ்வாறு கடித்தது யார்?
  1. இறப்பிற்கு முன்னால், யாருடன் சுனந்தா கைகலப்பில் (அடித்துக் கொண்டது முதலியன) ஈடுபட்டார்?
  1. இஞ்செக்‌ஷன் வைத்துக் கொள்ள வேண்டிய அல்லது அது அங்கிருக்க வேண்டிய அவசியம் என்ன?
  1. வலது மணிக்கட்டையில் ஏற்பட்ட வீக்கம் கேரள மருத்துவமனையில் ஏற்பட்டதா அல்லது சிகிச்சைப் பெற்றாரா?
  1. உண்மையில் சசி மற்றும் சுனந்தா இவர்களுக்குள் இருந்த வேறுபாடு, பிரச்சினை என்ன?
  1. விஷம் அடங்கிய மருந்துகள், அவர் வசம் இருந்தனவா, அல்லது அவர் எவ்வாறு அவற்றைப் பெற்றிருக்க முடியும்? எப்படி வாங்கினார், யார் வாங்கிக் கொடுத்தது?
  1. மெஹர் தரார் – சசி தரூர் ரோமாஞ்சன உரையாடல்களில் என்ன உள்ளன?
  1. சுனந்தாவின் நண்பர் குறிப்பிட்ட, தனுடன் சம்பந்தப்பட்ட அந்த ஐ.பி.எல் தொடர்பு என்ன?
  1. நாராயண் சிங் வெளியிட்டுள்ள புதிய நபர்கள் யார், அவர்களின் சம்பந்தம் என்ன?

© வேதபிரகாஷ்

15-01-2015

[1] http://www.dinamalar.com/news_detail.asp?id=1088515

[2]http://tamil.thehindu.com/india/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D/article5590060.ece

[3] தி இந்து, சுனந்தா புஷ்கர் மரணம் இயற்கையானது அல்ல: பிரேத பரிசோதனைக்கு பிறகும் தொடர்கிறது மர்மம், Published: January 18, 2014 15:13 ISTUpdated: January 19, 2014 11:25 IST

[4] தினமலர், விஷம் காரணமாக சுனந்தா புஷ்கர் மரணம்:டாக்டர்கள் புதிய அறிக்கை, அக்டோபர்.10, 2014, 00:47.

[5] தமிழ்-ஒன்-இந்தியா, புஷ்கர் கொலை வழக்குஅவிழ அவிழ மிரட்டும் முடிச்சுகள், Posted by: Vijayalakshmi Published: Monday, January 12, 2015, 12:58 [IST],
Read more at: http://tamil.oneindia.com/news/india/sunanda-murdered-more-mystery-names-crop-up-218825.html

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1159902

[7] தினமலர், சுனந்தா கொலை வழக்கு விசாரணை விறுவிறு: சசி தரூரிடம் விசாரிக்க டில்லி போலீஸ் முடிவு, 13ஜனவரி.2015, 02:04, பதிவு செய்த நாள் ஜன 13,2015 01:32

[8] http://tamil.oneindia.com/news/india/sunanda-murdered-more-mystery-names-crop-up-218825.html

[9] http://indiatoday.intoday.in/story/sunanda-pushkar-murder-shashi-tharoor-interrogation-delhi-police/1/412820.html

சுனந்தா புஸ்கர் இயற்கையான இறப்பு தற்கொலையாகி, தற்கொலை கொலையான மர்மங்கள், புதிர்கள், பதில் சொல்லப்படாத கேள்விகள்! (1)

ஜனவரி15, 2015

சுனந்தா புஸ்கர் இயற்கையான இறப்பு தற்கொலையாகி, தற்கொலை கொலையான மர்மங்கள், புதிர்கள், பதில் சொல்லப்படாத கேள்விகள்! (1)

Tarar-sasi-sunanda twitting break of love

Tarar-sasi-sunanda twitting break of love

சுனந்தா, காஷ்மீர் தீவிரவாதம், காங்கிரஸ், பாகிஸ்தான் பிரச்சினைகள்[1]: சுனந்தா புஸ்கர், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர். இஸ்லாமிய தீவிரவாதிகளின் குரூர கொலைகள், குண்டுவெடிப்புகள், கற்பழிப்புகள் முதலிய கொடுமைகளுக்குப் பயந்து இடம்பெயர்ந்த இந்துக்குடும்பங்களில் ஒருவர். 1990ல் இஸ்லாமிய தீவிரவாதிகளின் பயங்கரமான தாக்குதல்கள், அச்சுருத்தல்கள் ககாரணமாகத்தான் இந்துக்கள் / பண்டிட்டுகள் பெரும்பாலாக தங்களது சொத்துக்கள் அனைத்தையும் விட்டுவிட்டு வெளியேற நேர்ந்தது. அதுமட்டுமல்லாத, அச்சொத்துக்களின் மீதும் சொந்தம் கொண்டாடக் கூடாது என்ற ரீதியில், எந்த காஷ்மீர பெண்ணாவது காஷ்மீர் மாநிலம் அல்லாத ஆணை மணந்து கொண்டால், அவளது சொத்துரிமை பரிபோய்விடும் என்ற ரீதியில் சட்டத்தை எடுத்து வந்தார் உமர் அப்துல்லா. அப்பொழுதும், சுனந்தா புஷ்கர், உமரை கிண்டலடித்து டுவிட்டரில் கருத்தைத் தெரிவித்திருந்தார். அதனால்தான், இந்த மெஹர் தரார், உமரைப் பேட்டி கண்டபோது, “எதற்காக எங்களது முதல்மந்திரி ஒரு பாகிஸ்தானிய பெண் பத்திரிக்கையாளருடன் பேசியிருக்க வேண்டும் என்று தெரியவில்லை. முதலில் பாகிஸ்தான் ராணுவத்தை அனுப்பியது. இப்பொழுது இந்த பெண் பத்திரிக்கையாளரை அனுப்புகிறது”, என்று டுவிட்டரில் கேட்டுவிட்டு, “அவள் என்னுடன் சண்டை போட ஆரம்பித்துள்ளார்”, என்று சுனந்தா எடுத்துக் காட்டியுள்ளார்.

Why paki-woman eye on Indians

Why paki-woman eye on Indians

இயற்கையான இறப்பு தற்கொலையாகி, தற்கொலை கொலையான மர்மங்கள்: டெல்லியில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலான லீலாவில் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் (வயது 52) லீலா பேலஸ் ஹோட்டல், அறை எண் 345ல் மர்மமான முறையில் 17-01-2014 வெள்ளிக்கிழமை இரவு இறந்து கிடந்தார்[2]. முதலில் தெற்கு மாவட்ட தில்லி பிரிவு போலீசாரிடமிருந்து, கிரைம் பிராஞ்ச் போலீசாரிடம் “சுனந்தாவின் மர்மமான இறப்பு” பற்றி விசாரிக்கும் வழக்கு 23-01-2014 அன்று ஒப்படைக்கப் பட்டது. ஆனால் இரண்டே நாட்களில் மறுபடியும் 25-01-204 அன்று, கிரைம் பிராஞ்ச் போலீசாரிடமிருந்து, தெற்கு மாவட்ட தில்லி பிரிவு போலீசாருக்குத் திரும்பி அனுப்பப்பட்டுள்ளது. 21-01-2014 அன்று சப்-டிவிசனல் மாஜிஸ்ட்ரேட், இது கொலையா அல்லது தற்கொலையா என்று விசாரிக்கும் படி, தில்லி போலீசாருக்கு உத்தரவிட்டார்[3]. ஆனால், ஒரு வருடம் முடியும் நிலையில் ஜனவர்.6, 2015 அன்று தில்லி போலீஸார் சுனந்தா புஸ்கர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று இந்திய குற்றவியல் சட்டம் பிரிவு 302ன் [Section 302 of IPC] கீழ் வழக்குப் பதிவு செய்தது. அதாவது இயற்கையான இறப்பு தற்கொலையாகி, தற்கொலை இப்பொழுது கொலையாகி விட்டது.

unandas tweet to Omar Abdullah

unandas tweet to Omar Abdullah

சுனந்தா கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது: ஜனவர்.6, 2015 அன்று தில்லி போலீஸார் சுனந்தா புஸ்கர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று இந்திய குற்றவியல் சட்டம் பிரிவு 302ன் [Section 302 of IPC] கீழ் வழக்குப் பதிவு செய்தது. இவ்வழக்கை விசாரிக்க ஒரு சிறப்பு போலீஸ் புலனாய்வுக் குழுவும் அமைக்கப்பட்டது. வழக்கம் போல சுப்ரமணியம் சுவாமியின் பேட்டியில், அவர் சசி தரூருக்கு கொலையாளி யார் என்று தெரியும், அதனால் அவர் முன்வந்து உண்மையினை கூறவேண்டும் என்று பரபரப்பாகக் கூறினார்[4]. சசி தரூர் சார்பாக வக்கீல் ராஜசேகரன் மற்றும் சுப்ரமணியம் சுவாமி இதைப்பற்றி காரசாரமாக ஒரு ஆங்கில டிவி-செனலில் விவாதித்துக் கொண்டிருக்கும் போது, வக்கீல் ராஜசேகரன் பல கேள்விகளுக்கு பதில் சோல்லாமல், முகத்தை இருக்கமாக வைத்துக் கொண்டிருந்தது வியப்பாக இருந்தது. சுப்ரமணியம் சுவாமியும் சில கேள்விகளுக்கு மழுப்பலாகத்தான் பதில் சொல்லிக் கொண்டிருந்தார், இருப்பினும் அவர் எழுப்பிய கேள்விகளுக்கு மற்றவர்கள் பதில் சொல்லாமல் இருக்கிறார்கள். மேலும் ஊடகங்கள், இவ்விசயத்தில் ஒன்று விசாரணை செய்யாமல், இவரை வைத்தே காலந்தள்ளும் போக்கும் விசித்திரமாக உள்ளது.

shashi_tharoortwitter0220141501(1)மருத்துவர்கள் குறிப்பிட்ட வகையில் அறிக்கைக் கொடுக்க வற்புருத்தப்பட்டனரா?: எஸ். சுதிர் குப்தா [Dr Sudhir Gupta] என்ற மருத்துவர், சுனந்தா புஸ்கர் இயற்கையாக இறந்தார், அதாவது மருந்து உட்கொண்டதால் நச்சுத்தன்மை ஏற்பட்டு அதனால் இறந்திருப்பார் அல்லது தற்கொலையாகக் கூட இருக்கலாம் என்று அறிக்கைக் கொடுக்கும்படி, தன்னை வற்புறுத்துவதாக அமைச்சகம் மற்றும் ஊழல் தடுப்பு கமிஷனுக்கு கடிதம் எழுதியுள்ளார்[5]. அவர் ரசயாயன புலானாய்வுக் குழுவின் தலைவராக இருந்தபோது, உயரதிகாரிகள் அவ்வாறு அழுத்தம் கொடுத்ததாக புகார் கூறினார். சசி தரூர் மற்றும் குலாம் நபி ஆஜாத் முதலியோரின் ஆதிக்க-அழுத்தத்தினால், தான் முன்னர் இந்த உண்மையினை கூறமுடியால் தான் தடுக்கப்பட்டதாக என்றார்[6]. அதற்கு ஆதாரமாக, எய்ம்ஸ் இயக்குனர் மற்றும் சசி தரூர் இடையே பரிமாறிக்கொண்ட இ-மெயில் உரையாடல்களை ஆதாரமாக சமர்ப்பித்துள்ளார். ஆனால், இவற்றையெல்லாம், தமது மீது “காப்பி அடித்தார் மற்றும் நடத்தை சரியில்லை” என்று இவர் மீது குற்றஞ்சாட்டப் பட்ட நிலையில் கூறுகிறார் என்றும் எடுத்துக் காட்டப்படுகிறது.  எப்படியாகிலும், மருத்துவர்கள் குறிப்பிட்ட வகையில் அறிக்கைக் கொடுக்க வற்புருத்தப்பட்டனரா, அதில் அரசியல் தலையீடு இருந்ததா என்ற கேள்விக்கு நேரிடையான பதில் இல்லாமல் இருக்கிறது.

The twitter affairs breaking marriage sasi-tarar-sunanda

The twitter affairs breaking marriage sasi-tarar-sunanda

போலோனியம் என்கின்ற கதிர்வீச்சு அரிய கனிம நச்சினார் இறந்தாரா?: அகில இந்திய மருத்துவ விஞ்ஞான நிறுவனத்தின் [ All India Institute of Medical Sciences (AIIMS) ] ரசாயன-தடயவியல் மருத்துவம் மற்றும் நஞ்சுவியல் துறையைச்சேர்ந்த [Department of Forensic Medicine and Toxicology] மருத்துவர் ஒருவர், “அசிடாமினோபென் (பாரசிடமால் வகை) மாத்திரைகளை ஆல்கஹாலுடன் சேர்ந்து உட்கொண்டதால் இறப்பு ஏற்பட்டிருக்கிறது”, என்று கூறியிருக்கிறார்[7]. இதனை மேலும் ஊதி, பெரிதாக்கி, பிரம்மாண்டமாக்கி போலோனியம் என்ற அரிய கனிமத்தினாலும் இறப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று ஆங்கில டிவி-ஊடகங்கள் ஊதித்தள்ளின[8]. சுப்ரமணியம் சுவாமி சொன்னதாகவும் கூறின[9]. யாசர் அராபத் கூட அப்படிதான் இறந்தார் என்று கூட்டிச் சொல்லின. யார் கண்டு பிடித்தார் என்றெல்லாம் விகிபீடியா போன்று தகவல்களையும் கூட்டிச் சொல்லின. ஆனால், இதற்கெல்லாம் ஆதாரம் இல்லையெனினும், கொலையாளி யார் என்ற மர்மம் நீடிக்கிறது[10]. மேலும் போலோனியம் அந்த அளவிற்கு எளிதில் கிடைக்கும் பொருள் அல்ல என்றும் சுட்டிக் காட்டப்பட்டது[11]. வயிற்றின் உள்-உறுப்புகளை முழுமையாக ஆராய இந்தியாவில் தகுந்த ரசாயன சோதனைக்கூடங்கள் இல்லையென்பதால், அவற்றை மேனாடுகளில் உள்ள சோதனைக் கூடங்களுக்கு [அமெரிக்கா அல்லது இங்கிலாந்து] அனுப்பி ஆராய்வதற்கு பொலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். உண்மையில் இதுவும் ஒரு வருடத்திற்கு முன்பு அலசப்பட்ட விசயம் தான்!

Meher Tarar the Paki-journalist or lover of Sasi

Meher Tarar the Paki-journalist or lover of Sasi

மருந்துகளின் கலவை விஷமாகி இருக்கக் கூடும்: முதலில் அவர் அளவிற்கு அதிகமாக மருந்துகளை உட்கொண்டதால் தான் இறப்பு ஏற்பட்டது என்று ஊடகங்களில் செய்திகள் வந்தன. இதனால், சசி தரூருக்கு “கிளீன் சிட்” கொடுத்தாகி விட்டன என்றும் கூறின. இருப்பினும் அல்பிராக்ஸ் [Alprax, an anti-depressant] மட்டும் இறப்பை ஏற்படுத்தாது என்று மனோதத்துவ நிபுணர்கள் கருத்தை வெளியிட்டுள்ளனர்[12]. இந்த மாத்திரைகளை அதிகமாக உட்கொண்டால், தூக்கம் தான் உண்டாகும், இறப்பு ஏற்படாது என்று எடுத்துக் காட்டியுள்ளனர். அப்படியன்றால், அதனுடன் மற்ற மருந்துகள் சேரும் போது விஷமாகும் என்றால், அவை யாவை என்ற கேள்வி எழுந்துள்ளது[13]. மேலும் அவ்வாறு உண்டாகும் கலவை இறப்பை ஏற்படுத்தும் என்று அறிந்து அவருக்குப் பரிந்துரைத்தது யார் என்ற கேள்வியும் எழுகின்றது. அல்பிராக்ஸ் [Alprax, an anti-depressant] என்ற மனநிலையைக் கட்டுப்படுத்தும் மருந்தைத் தவிர, எக்ஸிடிரின் [Excedrin, prescribed commonly for migraine conditions] என்ற மைக்ரைன் பிரச்சினைகளுக்கு உபயோகப் படுத்தப் படும் மருந்தின் எச்சமும் காணப்பட்டது. இவற்றைத் தவிர ஒரு மூன்றாவது மருந்தின் எச்சம் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. அது என்ன என்று தெரியாததால், பரிசோதனைக்குட்படுத்தப் பட்டுள்ளது[14].

mehr-tarar-photo-epathram

mehr-tarar-photo-epathram

சசி தரூர், மெஹர் தராருடன் மூன்று இரவுகள் துபாய் ஓட்டலில் தங்கியிருந்தாரா?:  மெஹர் தரார் மற்றும் சசி தரூர் இடையே உள்ள உறவினால், சுனந்தா அதிகமாகவே பதிக்கப் பட்டிருக்கிறார் என்று ஜனவரி.10, 2015 அன்று நளினி சிங் என்ற பத்திரிக்கையாளர் வெளிப்படையாகவே கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்[15]. ஏனெனில், துபாயில் அவர்கள் மூன்று இரவுகளை ஒரு ஓட்டலில் கழித்துள்ளதாக விவரங்கள் கூறுகின்றன[16]. சுனந்தா இறப்பதற்கு முன்னர் தனக்கு போன் செய்து அதைக் குறிப்பிட்டு அழுததாக கூறினார். இருவரும் ரோமாஞ்சன உரையாடல்களில் ஈடுபட்டுள்ளது தனக்கு வருத்தமாகவும், பயமாகவும் இருக்கிறது, ஏனெனில் தன்னை ஒருவேளை விவாகரத்து செய்து விடுவாரோ என்று கூட அச்சம் ஏற்படுகிறது என்றெல்லாம் கூறியுள்ளார். சசி தராருடன் மூன்று இரவுகள் துபாய் ஓட்டலில் ஜூன் 2013ல் தங்கியுள்ளதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் சுனந்தா தன்னிடம் கூறியதாக, நளினி சிங் குறிப்பிட்டுள்ளார். பிளாக்பெர்ரி போனிலிருந்து முக்கியமான பிபிஎம் குறும்-செய்திகளை [BBM messages] மீட்க தன்னிடம் உதவி கேட்டதாகவும் தெரிவித்தார். இதற்கு தரார் ஒரு தொலைகாட்சி செனலில் பதில் அளிக்கும் போது, “இப்பொழுது நான் எதையும் சொல்ல விரும்பவில்லை. பொலீஸார் என்னிடம் வந்து விசாரணை செய்வதற்கு தயாராக இருக்கிறேன். இந்த புலனாய்வில் ஒத்துழைக்க நான் தயாராக உள்ளேன்……. ”, அந்த மூன்று இரவுகளைப் பற்றி கேட்டபோது, “ஆமாம், விழா நடந்தபோது நான் அந்த ஓட்டலில் இருந்தேன் மற்றும் பலர் அங்கிருந்தனர்”, என்றார்[17]. ஊடகங்கள் உடனே துபாய்க்குச் சென்று, அந்த ஓட்டலில் ஏன் ஆராய்ச்சி செய்யவிலை என்பது புதிராக உள்ளது.

"லவ்-ஜிஹாத்" உருவமா, இஸ்லாமிய சதியா - அல்லாவுக்குத்தான் தெரியும்!

“லவ்-ஜிஹாத்” உருவமா, இஸ்லாமிய சதியா – அல்லாவுக்குத்தான் தெரியும்!

மெஹர் தரார் .எஸ். ஏஜென்டா?: சுப்ரமணியம் சுவாமி தனது டுவிட்டரில், மெஹர் தரார் ஐ.எஸ்.ஐ ஏஜென்ட் என்று குறிப்பிட்டிருந்தார். ஊடகங்கள், உடனே அதை செய்தியாகப் போட்டு கலாட்டா செய்ய ஆரம்பித்தன. மற்ற விசயங்களுக்கு அந்தந்த அயல்நாடுகளுக்கே சென்று, ஏதோ நேரில் பார்த்து, செய்திகளை சொல்வது போல டிவி-செனல்களில் காட்டி ஆர்பாட்டம் செய்யும், இந்த ஊடங்கள், துபாய்க்குச் சென்று அந்த ஓட்டலில் யாரிடமும் பேட்டி கண்டதாக காண்பிக்கவில்லை. தங்களுக்கு புலனாய்வு-பத்திரிகா சாமர்த்தியத்தைக் காட்டிக் கொள்ளவில்லை. இதைப் பற்றி கேட்டபோது[18], “என்னை ஒரு ஐ.எஸ்.ஐ ஏஜென்ட் என்று குறிப்பிடுவது என் உயிருக்கு ஆபத்தை உண்டாக்குவதாகும். அந்நிலை இந்தியா மற்றும் பாகிஸ்தான் இருநாடுகளிலும் ஏற்படும்”, என்று புலம்பினார்[19]. “ஐ.எஸ்.ஐ ஏஜென்ட்” என்றால், கொலை செய்து விடுவார்கள் என்ற தத்துவம் என்ன என்பது புரியவில்லை. என்டிடிவி பேட்டியிலும், “என் முகத்தைப் பார்த்தால், உங்களுக்கு நான் ஒரு ஐ.எஸ்.ஐ ஏஜென்ட் மாதிரியாகவா தெரிகிறது?” என்று பர்கா தத்திடம் கூறினார்.

© வேதபிரகாஷ்

15-01-2015

[1] இவ்விவரங்களை ஏற்கெனவே, “சுனந்தா புஷ்கர்-சசிதரூர் – பலதார திருமணம், சாவில் முடிந்தது ஏன் – இஸ்லாமிய தீவிரவாதிகளல் துரத்தியடிக்கப் பட்ட ஒரு இந்து பெண்ணின் சோகமான கதை”, என்ற தலைப்பில் பதிவு செய்துள்ளேன்.

[2] மாலைமலர், சசிதரூர் மனைவி சுனந்தா மரணம்: ஓட்டல் ஊழியர்களிடம் விசாரணை தீவிரம், பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, ஜனவரி 18, 3:36 AM IST

[3] On Tuesday, a sub-divisional magistrate had directed Delhi Police to investigate the murder or suicide angle in the case. In a report to the police, SDM, who has recorded the statements of Sunanda’s brother, son, Tharoor and his staff, had said that no family member suspected any foul play in the death. The autopsy report had mentioned more than a dozen injury marks on Sunanda’s body besides a “deep teeth bite” on the edge of her left palm. The SDM in his report had concluded that Sunanda died if poisoning.

http://indiatoday.intoday.in/story/sunanda-pushkar-death-case-transferred-back-to-south-district-police/1/339833.html

[4] http://www.firstpost.com/politics/sunanda-pushkar-murdered-tharoor-knows-swamy-1601761.html

[5] http://timesofindia.indiatimes.com/india/Was-asked-to-give-false-report-in-Sunanda-Pushkar-death-case-AIIMS-doctor-says/articleshow/37593259.cms?imageid=29009426#slide10

[6] http://zeenews.india.com/news/nation/sunanda-pushkar-death-case-aiims-doctor-accuses-tharoor-azad-of-influencing-report_944312.html

[7] In a fresh twist to the Sunanda Pushkar death case, a doctor associated with the Department of Forensic Medicine and Toxicology of All India Institute of Medical Sciences (AIIMS) has claimed that the “intake of acetaminophen (a paracetamol) with alcohol” resulted in the death of Sunanda, wife of Congress MP and former Union minister Shashi Tharoor.

[8] http://www.oneindia.com/feature/sunanda-murder-investigating-presence-of-polonium-210-is-no-easy-job-1613579.html

[9] http://www.asianage.com/india/sunanda-pushkar-poisoned-polonium-790

[10] http://www.firstpost.com/india/not-polonium-sunanda-pushkar-report-politically-motivated-says-aiims-doctor-2033675.html

[11] Economic times, Sunanda Pushkar case: Polonium found in nuclear-reactors; difficult to get, very lethal, TNN Jan 7, 2015, 11.32AM IST.

http://articles.economictimes.indiatimes.com/2015-01-07/news/57791745_1_polonium-poisoning-sunanda-pushkar-nuclear-reactors

[12] http://www.dnaindia.com/india/report-alprax-alone-couldn-t-have-killed-sunanda-pushkar-1954415

[13] http://articles.timesofindia.indiatimes.com/2014-01-21/india/46409784_1_sunanda-pushkar-mortem-post-mortem

[14] The autopsy report of Sunanda Pushkar indicates that a poisonous reaction from a drug cocktail may have caused her death, police sources said on Wednesday. Apart from Alprax, an anti-depressant, traces of another medicine prescribed commonly for migraine conditions (Excedrin) have been found in her body, sources said, hinting at the possibility of a third medicine without naming it.

http://timesofindia.indiatimes.com/city/delhi/Drug-cocktail-killed-Sunanda/articleshow/29225518.cms

[15] IBNlive, Sunanda was upset about relations between Tharoor, Mehr Tarar: Journalist Nalini Singh to SDM, Jan 11, 2015 at 10:46pm IST

http://ibnlive.in.com/news/sunanda-was-upset-about-relations-between-tharoor-mehr-tarar-journalist-nalini-singh-to-sdm/522425-37.html

[16] Tharoor spent three nights in Dubai with Tarar.

http://zeenews.india.com/news/india/sunanda-pushkar-case-did-shashi-tharoor-spend-3-nights-with-mehr-tarar-in-dubai_1528563.html

[17] In her statement to the SDM on January 20, 2014, exclusively accessed by CNN-IBN, Singh said she received a call from Sunanda, who was her friend, a night before her death. “Sunanda was distraught that Tharoor and Tarar were exchanging romantic messages,” Singh said. Sunanda told Singh that she had proof of Tharoor and Tarar having spent three nights in Dubai in June 2013. She also confided to Singh that she had “taken over the crimes of Singh told the SDM in her statement that Sunanda wanted her help in retrieving important BBM messages that Tharoor had deleted from his Blackberry mobile phone. Sunanda also mentioned that Tharoor had a previous romantic liaison with some other woman as well. Responding to this revelation Tarar said, “I don’t want to make any comment. I am waiting for the police to call me. I am ready to cooperate with police in investigation.” On spending three nights with Tharoor in Dubai, the Pakistani journalist said, “I was there at a function and many people were there.”

IBNlive, Sunanda was upset about relations between Tharoor, Mehr Tarar: Journalist Nalini Singh to SDM, Jan 11, 2015 at 10:46pm IST.

[18] Hehr Tarar responded that Dubbing me an ISI agent has put my life in danger both in India, Pakistan, says Mehr Tarar.

[19] http://www.indiatvnews.com/news/india/latest-news-dubbing-isi-agent-life-danger-mehr-tarar-32561.html

சுனந்தா புஷ்கர்-சசிதரூர் – பலதார திருமணம், சாவில் முடிந்தது ஏன் – இஸ்லாமிய தீவிரவாதிகளல் துரத்தியடிக்கப் பட்ட ஒரு இந்து பெண்ணின் சோகமான கதை (2)

ஜனவரி18, 2014

சுனந்தா புஷ்கர்-சசிதரூர் – பலதார திருமணம், சாவில் முடிந்தது ஏன் – இஸ்லாமிய தீவிரவாதிகளல் துரத்தியடிக்கப் பட்ட ஒரு இந்து பெண்ணின் சோகமான கதை (2)

 

Sasi-Sunanda-third-marriage-with-each other

Sasi-Sunanda-third-marriage-with-each other

பணக்காரக் குடும்பத்தில் பிறந்த சுனந்தா புஷ்கரின் முதல் திருமணம்  1988-89: ஜனவரி 1 1962 ம் தேதி பொமை என்ற இடத்தில் காஷ்மீரில் பிறந்த சுனந்தா புஷ்கர், ராணுவம் மற்றும் நிலசுவாந்தார்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர். லெப்டினென்ட் கர்னல் புஷ்கர் நாத தாஸ் என்பவரின் மகள். 1983ல் அவர் ஓய்வு பெற்றார். இவரது இரண்டு சகோதர்களில் ஒருவர் வங்கியிலும், மற்றொருவர் ராணுவத்திலும் வேலைசெய்கிறார்கள். 1986-88 ஆண்டுகளில் ஶ்ரீநகரில் உள்ள அரசு கல்லுரியில் படித்தார். அப்பொழுது சஞ்சய் ரைனா என்பரை மணந்து கொண்டார். இருப்பினும் 1989ல் விவாகரத்தில் அவர்களது உறவு முடிந்தது.

 

Sasi, Sunanda and sons through Tilothama

Sasi, Sunanda and sons through Tilothama

சுஜித் மேனனுடன்  1991ல் நடந்த இரண்டாவது திருமணம்: சுனந்தாவிற்கு ஏற்கெனவே சுஜித் மேனன் என்பவருடன் நட்பிருந்தது. வியாபாரத்தில் நாட்டக் கொண்ட சுனந்தாவை துபாய்க்கு அழைத்துச் சென்றது சஞ்சய் ரைனா இல்லை, சுஜித் மேனன் தான். முதலில் நண்பராகவே மதித்து வந்த சுனந்தா, காதல் வயப்பட்டு அவரை திருமணம் செய்து கொள்ள தீர்மானித்தார். ஆனால், சுஜித் மேனனோ அவரிடத்தில் இருக்கும் பணம் தனது வியாபார ஆசைகளுக்கு உதவும் என்ற கனவுடன் இருந்தார். துபாய்க்குச் சென்ற அவர், அங்கு சுஜித் மேனன் என்பவரை 1991ல் மணந்து கொண்டார்.

Sunanda Sasi

பொமை, காஷ்மீரத்தில் நடந்த தீவிரவாதத்தில் அவரது வீட்டிற்கு தீவைத்தது,  குடும்பம் வெளியேறியது: 1990ல் பொமையில் நடந்த கலவரத்தில், அங்கிருந்து இந்துக்கள் பெருமளவில் பாதிக்கப் பட்டார்கள். பரமுல்லா மாவட்டத்தில் பிப்ரவரி 21 2009ல் நடந்த ராஷ்ட்ரீய ரைபில்ஸ் மற்றும் தீவிரவாதிகளுக்கு இடையே நடந்த துப்பாக்கி சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்[1]. ராணுவத்தினருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப் பட்டது. பொமை-சோப்புர் வீதிகளில் ஆர்பாட்டக்காரர்கள் தெருக்களில் ஊரடங்கு உத்தரவையும் மீறி ரகளை செய்தனர்[2]. இதை சாக்காக வைத்துக் கொண்டு, இந்துக்களில் வீடுகள் தாக்கப்பட்டன. ராணுவ வீரர்களுக்கு எதிராக வழக்கும் பதிவு செய்யப்பட்டது[3]. ஆனால், இந்துக்கள் தாக்கப்படுவது நிறுத்தப்படவில்லை. வீடுகளுக்கும் நெருப்பு வைக்கப் பட்டது. இதனால் இந்துக்கள் பலர் வீடுகளை விட்டு வெளியேற நேர்ந்தது. இதெல்லாம் 2009ல் நடந்தாலும், 1990லும் அவ்வாறான நிகழ்ச்சிகள் நடந்தன. இதனால், சுனந்தா குடும்பத்தினர் பொமையை விட்டு வெளியேறினர்.

shashi_tharoortwitter0220141501(1)

துபாயில் தனது திறமையால் வளர்ச்சியடைந்த வியாபாரம்: இதற்குள், நவம்பர் 1991ல் சுஜித் மேனன் – சுனந்தா புஷ்கர் தம்பதிகளுக்கு சிவ் என்ற மகன் பிறந்தான். “எக்ஸ்பிரஷன்ஸ்’ ஏன்ற கம்பெனியைத் துவக்கி துபாயில் வெற்றிகரமாக நிகழ்ச்சிகள் ஏற்பாடு மற்றும் பேஷன் ஷோக்கள் நடத்தியதில் பணம் சம்பாதித்தார். பொருட்கள் அறிமுகம், பலவித நிகழ்ச்சிகள் ஏற்பாடு, பேஷன் ஷோக்கள் முதலியவற்றை ஹேமந்த திரிவேதி, ரேஹா பிள்ளை, விக்ரம் பட்னிஸ், ஐஸ்வர்யா ராய் போன்றோருடன் நடத்தினார். மம்மூட்டியை வைத்து நடத்திய ஷோவில் பெருத்த நஷ்டம் ஏற்பட்டது. இதனால், சுஜித் மேனனுக்கு நிதிநெருக்கடி ஏற்பட்டது. போதாகுறைக்கு 1997ல் தில்லியில் நடந்த ஒரு விபத்தில் சுஜித் மேனன் இறந்தார். இதனால், இவருக்கு மிரட்டல் தொலைபேசிகள் வர ஆரம்பித்தனர். தனது கணவனின் கடனை இவர் தீர்க்க வேண்டியதாயிற்று. அவரது பெற்றோர் மற்றும் சகோதரர் உதவி செய்தனர்.

 

Tilothama - first wife of Sasi

Tilothama – first wife of Sasi

சசிதரூரின் முதல் மனைவி திலோத்தமா முகர்ஜி: சசி முதலில் இவரை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் கனிஷ்க் மற்றும் இஷான் என்ற இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. 2007ல் சசி தரூர் தொடர்பு ஏற்பட்டது. நியூயார்க் பல்கலைக்கழகத்தில் திலோத்தமா ஒரு பேராசியராக வேலை செய்து வந்தார். இதனால் கொல்கொத்தா மற்றும் நியூயார்க் நகரங்களில் பிரபலமாக இருந்தார். இதனால், சசிக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டது. இதைப் பற்றி ஒரு பேட்டியிலும் வெளிப்படையாக தெரிவித்தார். இதனால், இவர்கள் உறவு விவாகரத்தில் முடிந்தது.

 

Christa Giles, Tharoor’s second wife

Christa Giles, Tharoor’s second wife

சசிதரூரின் இரண்டாவது மனைவி கிரிஸ்டா கையில்ஸ் 2007[4]: கிரிஸ்டா கைல்ஸ் என்ற இரண்டாவது மனைவியுடன் துபாய்க்கு வந்தார். ஐக்கிய நாடுகள் சபையில் வேலைசெய்து கொண்டிருக்கும் போது, இவருக்கும் கிரிஸ்டா கைல்ஸ் தொடர்பு ஏற்பட்டது. பிறகு 2007ல் திருமணம் செய்து கொண்டனர்[5]. ஏற்கெனவே திலோத்தமா முகர்ஜியை [Tilottama Mukherjee] திருமணம் செய்து கொண்டிருந்தார் என்று குறிப்பிடப் பட்டது. கிரிஸ்டாவுடன் தாம்பத்யம் இருக்கும் போதே, சசி சுனந்தாவுடன் நெருக்கமாக இருந்த செய்திகள் வெளியாகினனுதய்பூரில் இருவரும் தங்கியிருந்தபோது, கிரிஸ்டா கைல்ஸ்-சசிதரூர் பிளவு நிரந்தரமானது. தில்லி மற்றும் துபாயில், சுனந்தா சசி தரூரை சந்திக்க ஏற்பாடுகள் செய்து வந்தார். இதனால், தரூருக்கு பாதிப்பு ஏற்பட்டது[6].

 

Christa Giles, Tharoor’s second wife

Christa Giles, Tharoor’s second wife

மூன்றவது மனைவியாக சுனந்தா புஷ்கர்  2010: இருப்பினும் 2010ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதே ஆண்டில் சசி தரூர் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆனார். அப்பொழுது தான், சுனந்தா ரூ 70 கோடிகளை ஐபிஎல் வியாபாரத்தில் முதலீடு செய்தார். ஆனால், ரூ 70 கோடிகளுக்கான பங்குகளை ரூ 1530 கோடிகளுக்கு விற்றுவிட்டார். இதனால், சசி தரூர் தனது பதவி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தார் என்ற பேச்சு எழுந்தது, இதனால் பதவியும் பறிபோனது. இருப்பினும் மனிதவள மேம்பாட்டுத் துறை பிறகு அளிக்கப்பட்டது.

 

Tarar-sasi-sunanda twitting break of love

Tarar-sasi-sunanda twitting break of love

சுனந்தாவின் வியாபாரத் திறமை: பணக்கார குடும்பத்தில் பிறந்து, வியாபார நுணுக்கங்களை அறிந்திருந்ததால், பெண்ணாக இருந்தாலும், வெற்றிகரமாக வியாபாரத்தை செய்து வந்தார். ஆனால், ஆண்கள் அவரை ஏமாற்றி வந்துள்ளனர் என்று தெரிகிறது. கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோதே, காதலித்து திருமணம் செய்து கொண்ட முதல் கணவருடன் வேறுபாடு ஏற்பட்டதால் விவாக ரத்து ஏற்பட்டது. பிறகு இரண்டாவது கணவரோ, ஏகப்பட்ட கடனை வைத்து விட்டு விபத்தில் இறந்து போனார், அதிலிருந்து மீளவும் இவர் படாத பாடு பட்டார். அப்பொழுது சிவ் குழந்தையாக, சிறுவனாக இருந்தான். அந்த சோதனையிலிருந்து மீண்டு வரும் நிலையில் தான் சசி தரூர் தொடர்பு ஏற்பட்டது. திருமணம் ஆகியும், சசிதரூர் மூலம் பிரச்சினைகள் வந்து கொண்டே இருந்தன. கேப்ரியிலா டெமிட்ரியாடிஸ் [Gabriella Demetriades] விசயத்தில் லலித் மோடி விசா கொடுக்க வேண்டாம் என்று வலியிருத்தியும் சசிதரூர் அந்த அழகிக்கு விசா கொடுத்தார்[7]. சுனந்தாவின் விவகாரத்தையும் லலித் மோடிதான் வெளிப்படுத்தினார்[8].

With Lalit Modi

கடைசியாக மெஹர் தரார்Mehr Tarar)[9]: தரூரின் பெண் பித்தம் இப்பொழுது மெஹர் தராரின் பின்னால் சென்றதால், அதன் விளைவு சுனந்தாவின் மர்மமான இறப்பில் முடிந்துள்ளது. சுனந்தா புஷ்கர் தனது கணவர் சசி தரூரை பாகிஸ்தானை சேர்ந்த பெண் பத்திரிக்கையாளரான மெர் தரார் பின் தொடர்வதாக தனது டுவிட்டர் வலை தளத்தில் வெளிப்படையாக குற்றம் சாட்டியிருந்தார். அவர், மெர் என்ற பெண், தரூர் மற்றும் எனது கம்ப்யூட்டரில் ஊடுருவி (ஹேக்கிங் செய்து) உள்ளார்.  “மெர் தொடர்ந்து எனது கணவரை பின் தொடர்கிறார்அந்த பெண் ஒரு .எஸ்.. உளவாளிஎங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லைபாகிஸ்தான் .எஸ்.. உளவாளியான ஹேக்கர் எங்களை தொடர்கிறார்”, என குறிப்பிட்டு இருந்தார். அவர் மெர் தரார் பெயரிட்டு எழுதியுள்ள மற்றொரு டுவிட்டர் செய்தியில், “ஒரு பெண் துணிச்சலுடன் இந்தியர் ஒருவர் மீது காதலுடன் இருக்கிறார்தயவு செய்து சசி, என்னை விலகி போக செய்து விடாதீர்நான் கெஞ்சி கேட்கிறேன்சசி உங்களை நான் காதலிக்கிறேன்”, என தெரிவித்து உள்ளார். அதன் பின் மற்றொரு டுவிட்டர் செய்தியில், டுவிட்டரில் பின் தொடர்பவர்களை கவருவதற்காக அவர் (தரார்) செய்வதென்றால் இது மிக கேவலமான ஒன்று.  அவரை குறித்து பாகிஸ்தானியர்கள் என்ன நினைக்கிறார்கள் என கேட்கிறேன்.

Why paki-woman eye on Indians

Why paki-woman eye on Indians

ஒரு நாளைக்கு 20 முறை கால் செய்வது என்பது அவரை (தரூர்) பின் தொடர்வது தானே”, என்று குறிப்பிட்டு உள்ளார். அவர் வெளியிட்டு உள்ள இன்னொரு டுவிட்டர் செய்தியில், “சசி தரூரும், நானும் மிக மகிழ்ச்சியாக உள்ளோம்இது அவரது (தரார்) தகவலுக்காகஇதனை அறிந்து அவர் (தரார்) வருத்தப்படுவார்தற்போது நான் நோய்வாய்ப்பட்டு உள்ளேன் என கருதுகிறேன்எனவே அதற்கு சிகிச்சை பெற செல்ல இருக்கிறேன்”, என்று கூறியுள்ளார்.

 

The twitter affairs breaking marriage sasi-tarar-sunanda

The twitter affairs breaking marriage sasi-tarar-sunanda

 

டுவிட்டரில் மெர்தரார்[10]: சுனந்தாவின் டுவிட்டர் செய்திக்கு பதிலளித்து தரார் எழுதியுள்ள டுவிட்டர் செய்தியில், “என்னால் நம்ப முடியவில்லைஒரு பெண்ணின் துணிச்சல்ஒரு பெண் தனது கணவரை மற்றொரு பெண்ணுடன் தொடர்புபடுத்துவது என்பது எப்பொழுதும் மிக மோசமான நோயாகும்அவர் செய்த திருமணத்திற்கு உரிய மரியாதை இது இல்லை”, என தெரிவித்துள்ளார். தரார் வெளியிட்ட மற்றொரு டுவிட்டர் செய்தியில், “அந்த பெண்ணின் அறிவு அவரது ஆங்கில அறிவு மற்றும் ஸ்பெல்லிங்கை (எழுத்து) காட்டிலும் மிக பலவீனமாக உள்ளதுஉங்களது அறிவை மேம்படுத்தி கொள்ளுங்கள்”, என கூறியுள்ளார். மற்றொரு டுவிட்டர் செய்தியில் தரார், “நான் செய்த ஒரே காரியம் அவரது குற்றச்சாட்டுக்கு பதிலளிக்காமல் தொடர்ந்து மவுனமாக இருந்தது தான்ஆனால், அதன் பின், ஒரு பெண் (சுனந்தா) என்னை .எஸ்.. உளவாளி என தேசிய சேனல் ஒன்றில் கூறுவதை நான் கேட்டேன்”, என குறிப்பிட்டு உள்ளார். எது எப்படியாகிலும், சுனந்தா இறப்பின் பின்னால் எது என்பது விளக்கப்பட வேண்டியுள்ளது.

 

unandas tweet to Omar Abdullah

unandas tweet to Omar Abdullah

 

வேதபிரகாஷ்

© 16-01-2014


[2] However, sources said thousands of people took to streets at Bomie-Sopore and staged a massive demonstration on Sunday morning demanding punishment for security personnel, who allegedly fired at the youths on Saturday evening killing two of them. The protesters carrying the body of one of the deceased also demanded withdrawal of troops from the area. http://articles.timesofindia.indiatimes.com/2009-02-22/india/28001056_1_sopore-town-mohammad-amin-tantray-enquiry

[5] At the UN, which is a formal, hierarchy-driven set-up, Tharoor had not kicked off so many controversies. But even there his personal life came in for some tongue-wagging, as he got into a relationship with Christa Giles, a Canadian citizen working at the UN, and later married her. When appointed head of the public affairs division in the UN headquarters in New York, he moved his girlfriend to the office next to him. But as a rule he has been above board.

http://www.dnaindia.com/sport/report-shashi-tharoor-a-man-in-love-with-himself-1372620

[6] It was a whirlwind affair and to Tharoor’s credit, he outed Sunanda almost immediately, especially in Delhi, as the official consort of the MoS, external affairs. Their eagerness to be accepted in the power capital was evident with their presence at every social do and event. Sure, it’s hard to make friends when you are living between two cities, but as a hostess sniffs, “Sunanda invites people she meets on a plane for an intimate dinner with the minister. It may be first class but this is not Dubai, this is Delhi, where pedigree counts, not wannabe.” http://www.outlookindia.com/article.aspx?265098

[8]E-mails between Modi and the Minister’s office in January show that the model’s visa was due to expire in February 2010 and Modi wanted Tharoor’s office to ensure that her request for the visa’s renewal be turned down. The Ministry didn’t oblige — and Demetriades did get a visa. When asked why he wanted her visa blocked, Modi declined to comment.

http://archive.indianexpress.com/news/modi-told-tharoors-office-to-deny-visa-to-this-model/606183/