Posts Tagged ‘மறுமகள்’

குழந்தைக் கொலையில் வாஷிங்மிஷினைப் பெண்கள் தேர்ந்தெடுத்ததும், யாசர் அராபத் பெண்ணைக் கொன்றமுறைக்கும் தொடர்பு என்ன?

மார்ச்5, 2013

குழந்தைக்   கொலையில்  வாஷிங்மிஷினைப்  பெண்கள்  தேர்ந்தெடுத்ததும்,   யாசர்அராபத்  பெண்னைக்  கொன்றமுறைக்கும்   தொடர்பு  என்ன?

 

இந்தியாவில்  ஸ்டவ்  வெடிப்பதற்கும்,  அமெரிக்காவில்  துப்பாக்கி  வெடிப்பதற்கும்  எந்த வித்தியாசமும் இல்லை: 25 ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு அமெரிக்க சமூக சேவகி சென்னைக்கு வந்திருந்தபோது, பெண்கள் கொடுமைப் படுத்தப் படுவதில் அமெரிக்காவை விட இந்தியா எவ்வளவோ மேல் என்று சொன்னபோது, அங்கிருந்த கையில்லாமல் ஜாக்கேட் அணிந்த பல மாதரசிகளுக்குப் பொத்துக் கொண்டு வந்து, நீங்கள் எப்படி அவ்வாறு சொல்லலாம், இங்கு எங்களுக்கு எந்த உரிமைகளும் இல்லை என்று பெண்களின் மீது நடக்கும் குற்றங்களைப் பட்டியல் போட்டு காண்பித்தார். பொறுமையாக கேட்டப் பிறகு, அந்த அமெரிக்க சமூக சேவகி சொன்னார், “இங்கு ஸ்டவ் வெடிப்பதற்கும், அங்கு துப்பாக்கி வெடிப்பதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை, ஆனால், அங்கு அதிக அளவில் துப்பாக்கிகள் வெடித்துள்ளன”, என்றதும் வாயைப் பொத்திக் கொண்டு, விஷயத்தை மாற்றிக் கொண்டனர்.

நாகரிகம் மாறும் போது மறைக்கும் இடங்கள் மாறுகின்றன: இந்திய நாகரிகம் சீரழிந்து, கணவன் – மனைவி உறவு முறைகளில் பிறழ்சிகள் ஏற்படும்போது, பாதிக்கப்படுவது, அவர்களில் குழந்தைகளே. அச்சிரழிவு இங்கும் ஆரம்பித்து விட்டது. குழந்தைக்  கொலையில் வாஷிங் மிஷினைப் பெண்கள் தேர்ந்தெடுப்பதன் அவசியம் இதுதான். யாசர் அராபத் கொன்ற முறையும் அதே மனப்பாங்குதான். குற்றம் புரிவது, குற்றத்தை மறைப்பது, மறைப்பதற்கு கையாளும் குரூரவழிகள் எல்லாமே உருவாகும் விதம் தான் மாறுபடுகிறது. விளைவுகள் ஒன்றகத்தான் இருக்கின்றன.

யாசர் அராபத் பெண்னைக் கொன்ற முறை: யாசர் அராபத் என்பவன் கோயம்புத்தூர் சரோஜாவைக் கொன்ற முறையை ஊடகங்கள் விளக்கியுள்ளதால், அந்த குரூரத்தை மறுபடியும் வர்ணிக்கத் தேவையில். ஒரு கசாப்புக் கடைக்காரனை விட, அந்த குரூரக் கொலையாளி-பயங்கரவாதி கசாபை விட, அத்தகைய மனப்பாங்கை வளர்த்துள்ளான் என்றால், அதற்கு காரணம் என்ன என்பதனை சமூகவியல், மனோதத்துவம், இந்தியவியல், குற்றவியல் முதலிய துறை வல்லுனர்கள் ஆராய வேண்டும். அந்த மூலத்தைக் கண்டு பிடித்து வேரோடு அழிக்க வேண்டும். அப்பொழுதுதான், சமூகம் உறுப்படும்.

© வேதபிரகாஷ்

05-03-2013

வாஷிங் மிஷினில் குழந்தை கொலை போலீசில் மனநோயாளி தாய் சரண்!

செப்ரெம்பர்24, 2010

வாஷிங்மிஷினில் குழந்தை கொலை போலீசில் மனநோயாளி தாய் சரண்[1]; சேர்த்தலா (கேரளா): வாஷிங் மிஷினில் தன் எட்டு மாத ஆண் குழந்தையை போட்டு கொலை செய்த தாய், போலீசில் சரணடைந்தார்[2]. அவர் ஏற்கெனவே மனோதத்துவ மருத்துவரிடன் சிகிச்சைப் பெற்று வருகிறார்[3]. இது இக்காலக் கட்டத்தில் பெண்கள் எந்த அளவிற்கு, குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தவர், பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிகிறது. இப்படி சராசரி குடும்பங்களில், இவ்வாறானப் பிர்ச்சினைகள் உள்ளன. ஒன்று, கணவன் வேலைக்குச் சென்றவுடன், மாமியார்-மறுமகள் சண்டை ஆரம்பித்து விடும், இல்லை, தனியாக இருக்கும் மனைவி, ஏதாவது செய்து விடுவாள். குறிப்பாக, அவள் வெறும் சமைப்பது, குழந்தைகளை பார்த்துக் கொள்வது, என்றிருக்கும் போது, வேறு வேலை இல்லை எனும்போது, பிரச்சினைகளில், மன அழுத்தங்களில் சிக்கிக் கொள்கிறாள்.

ஜான் மார்க்கோஸின் மனைவி சுமா: கேரள மாநிலம் ஆலப்புழா அருகே சேர்த்தலா தெற்கு பகுதியில் ஆர்த்தங்கல்லைச் சேர்ந்தவர் ஜான் மார்க்கோஸ் (46); எர்ணாகுளத்தில் தனியார் ஓட்டலில் பணியாற்றுகிறார்; இவரது மனைவி சுமா (40). இவர்களது மகள் மிலன் மரியா(10), ஐந்தாம் வகுப்பு படிக்கிறாள். ஷாரோன் என்ற எட்டு மாத ஆண் குழந்தை உள்ளது. இப்படி அழகான குடும்பம் தான், ஆனால், ஏன் பிரச்சினை வர வேண்டும்?

குழந்தை அழுததால் கொலை செய்த தாய்: நேற்று முன்தினம் பிற்பகல் 3.30 மணிக்கு, வாஷிங் மிஷினில் நீரை நிரப்பிய சுமா, அதில் குழந்தையை அமுக்கி, வாஷிங் மிஷினை மூடினார். சிறிது நேரம் கழித்து மூடியை திறந்த அவர், குழந்தை இறந்து விட்டதை உறுதி செய்தார். குழந்தை அழுது கொண்டிருந்ததாம், முதலில் சமாதம் செய்து பார்த்தாராம். அழுகை நிறுத்தாதலால், கோபமடைந்த அவர், இம்முடிவிற்கு வந்துள்ளார்[4]. ஆக, இது புதிதாக வந்த பிரச்சினையில்லை. மனத்தில், ஏதோ அந்த அளவிற்கு, அக்குழந்தை மீது வெறுப்பை வளர்த்திருக்கிறார். மேலும், முதல் குழந்தை பெண், இரண்டாவது ஆண் என்று இருக்கும் போது, ஆன் குழந்தையைக் கொல்லத்துணிந்துள்ளதால், கணவன்-மனைவி பிரச்சினையும் உள்ளது தெரிகிறது.

போலீஸுக்குத் தானே சென்று தான் கொலை செத்து விட்டதாகக் கூறியது; பிறகு, அங்கிருந்து பஸ் மூலம் ஆலப்புழா சென்று, அங்கிருந்து ஆட்டோவில் சென்ற அவர், தான் ஒரு குற்றம் செய்து விட்டதாகவும் யாரிடம் புகார் செய்ய வேண்டும் என, கேட்டதை தொடர்ந்து, ஆலப்புழா எஸ்.பி அலுவலக மகளிர் பிரிவு[5] போலீஸ் நிலையத்திற்கு ஆட்டோ டிரைவர் அழைத்துச் சென்றார். அங்கு அவர் தான் தனது குழந்தையைக் கொன்றுவிட்டதாகக் கூறினார். இது தனது குற்ற உணர்வை வெளிப்படுத்துவதாகவும் உள்ளது. அதாவது, அந்த அளவிற்கு மனநிலை பாதிக்கப் பட்டுள்ளார் எனத்தெரிகிறது.

பிறகு விசாரணை செய்த போலீஸார்; அதிர்ச்சி அடைந்த போலீஸார் வீட்டுக்கு விரைந்து சென்றனர்.அப்போது வீடு பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து கதவை உடைத்துக் கொண்டு போலீஸார் உள்ளே நுழைந்து வாஷிங் மெஷினைப் பார்த்தபோது குழந்தையின் உடல் மிதந்து கொண்டிருந்தது. இதையடுத்து உடலை போலீஸார் மீட்டனர். அப்பெண்ணையும் கைது செய்தனர்[6]. வியாழக்க்கிழமையன்று மாஜீஸ்ட்ரேட்டின் முன்பு அழைத்துச் செல்லப்பட்டு முறைப்படி விசாரணை நடத்தப் படும்[7]. சுமாவின் கணவர் ஜான். அவர் வேலைக்காக சென்று இருந்தார். அதேபோல மூத்த மகள் தனது தாத்தா வீட்டுக்குச் சென்றிருந்தார். இந்த நிலையில்தான் சுமா இப்படி ஒரு விபரீதத்தை செய்துள்ளார்.சுமாவிடம் விசாரணை நடத்திய போலீசார், அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்று, வாஷிங் மிஷினில் இறந்து கிடந்த குழந்தையின் சடலத்தை கைப்பற்றினர். பக்கத்து வீடுகளில் இருப்பவர்கள், அவள் எப்பொழுதும் வீட்டில் கதவுகளை சாத்திக் கொண்டு தனியாக இருப்பாள் என்றும், இதையடுத்து ஏற்கனவே தற்கொலை செய்து கொள்ள கை நரம்புகளை அறுத்துக் கொண்டதும் விசாரணையில் தெரிந்தது[8].

மூன்று வருடங்கள் கழித்து, சென்னையில் ஒரு பெண், சந்தாகத்தின் பேரில் தன்னுடைய குழந்தையைக் கொன்று, வாஷின்மெஷினில் மறைத்து வைத்தது காலத்தின் கோலமதான்!


[1] வாஷிங் மிஷினில் குழந்தை கொலை போலீசில் மனநோயாளி தாய் சரண், செப்டம்பர் 24, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=91525

[2] http://www.emirates247.com/news/world/infant-drowns-in-washing-machine-in-kerala-2010-09-23-1.294375

[3] http://www.indianexpress.com/news/Briefly-Nation/686792

[4] http://www.dailythanthi.com/article.asp?NewsID=596180&disdate=9/24/2010

[5] http://www.dinakaran.com/crimedetail.aspx?id=16162&id1=11

[6] http://thatstamil.oneindia.in/news/2010/09/23/kerala-child-murder-woman.html

[7] http://news.oneindia.in/2010/09/23/metally-ill-mum-drowns-baby-in-washing-machine.html

[8] http://www.ndtv.com/article/cities/mother-drowns-baby-in-washing-machine-in-kerala-54174